லேபிள்கள்

வியாழன், 11 நவம்பர், 2010

நகைச்சுவை கதம்பம்

"அப்பா...நான் படிக்கப் போகலை," :?

"ஏன்டா?"

"கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்னு சார் சொல்றார். அப்புறம் நான் எதுக்குப் படிக்கணும்...?"

"ஆ...!" 
----------------------------------------------------------------------------------------------

தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்!

அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா?

----------------------------------------------------------------------------------------------

கணவன்: ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு! குடிக்க வெந்நீர் கொடு!
மனைவி: ஏங்க இப்படி பயப்படுறீங்க? மூளைக் காய்ச்சல்தான் பரவுது! அது எப்பிடி உங்களுக்கு வரும்? 

-----------------------------------------------------------------------------------------------

டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது! என்ன செய்ய?
----------------------------------------------------------------------------------------------

டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு!
என்னிடம் சுத்தமா இல்ல!
பரவாயில்லை! கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்!
------------------------------------------------------------------------------------------------
இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா?
கிடைக்காது! கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்! 
---------------------------------------------------------------------------------------------------
சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க?
பையன்: பி.எ.
சர்தார்: அடப்பாவி! படிச்சதே ரெண்டு எழுத்து! அதையும் தலை கீழா படிச்சிருக்கே!
--------------------------------------------------------------------------------------------------
என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!
பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய் 
-------------------------------------------------------------------------------------------------
என்ன பிளேன் ரொம்ப நேரமா வானத்துலயே வட்டமடிச்சுட்டுருக்கு. ஏதாவது பிரச்சினையா?

அதெல்லாம் இல்ல. பைலட்டை தேடி கீழே கடன் கொடுத்தவங்க வட்டமடிச்சுட்டுருக்காஙக அதான்.
--------------------------------------------------------------------------------------------------
வர்சினி : நானும் பாத்துக்கிட்டு வரேன் திருச்சிலேர்ந்து மெட்ராஸ் வர்றீங்க எதுக்கு ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் இறங்கி டிக்கெட் வாங்கறீங்க, மொத்தமா வாங்கிற வேண்டியதுதானே

துர்கா : டாக்டர் என்னை லாங் ஜர்னி கூடாதுன்னு சொல்லியிருக்கார்.
?!?! 
-------------------------------------------------------------------------------------------------
மனைவி : சீக்கிரம் வண்டிய மறுபடியும் வீட்டுக்கு ஓட்டுங்க, ஸ்டவ்வை அணைக்காம வந்துட்டேன், வீடு எரிஞ்சுற போகுது....

கணவன் : கவலையே படாத, நான் அதுக்காகத்தான் குழாய மூடாம வந்துருக்கேன்.

மனைவி : ?!
----------------------------------------------------------------------------------------------------
டெய்லி போலிஸ் ஸ்டேஷன்ல வந்து 2 வேளையும் கையெழுத்து போட்டு போகணும் தெரியுதா?

கையெழுத்து போட்டுட்டு நான் வழக்கம்போல திருடப் போலாங்களா? 
----------------------------------------------------------------------------------------------------
கவிஞனும் காதலியும்

கவிஞன்:அன்பே............
காதலி :ம்ம்ம்........

கவி: என்னக்குள் எதோ ஒரு மற்றம்
காத:அது ஏமாற்றத்தின் எச்சரிக்கை

கவி: நீ என் இதயத்தை என்ன செய்தாய்
காத:அது பெரிய தங்க கட்டி செட்டு கடைல அடகு வச்சிருக்கேன்
கவி:என்னால் இரவெல்லாம் தூங்க முடியவில்லை
கத:பகல் எல்லாம் வேலை வெட்டி இல்லாமல் நல்ல தூங்கினால் இப்படி தான்

கவி:சோறு இருக்கு சாப்பிட வில்லை,தலையணை இருக்கு உறங்க வில்லை
காத: சோப்பு இருக்கு அனால் குளிக்கவில்லை, இதையும் சொல்லுடா கப்பு தாங்களை

கவி:உன்னை பார்த்துக்கொண்டே இருக்கணும் போல இருக்கு
காத:அதான் டெய்லி நமீதா போஸ்டரை வாய பொலன்திடு பாக்குறியே

கவி:அன்பே உலகில் உன்னைவிட எனக்கு யாரும் முக்கியம் இல்லை
காத:எனக்கும் உன்னை விட்டால் வேற இலுச்ச வயன் கிடைக்க மாட்டான்

கவி:வா நாம் அறத்துப்பால் பொருட்பால் மறந்து காமத்துப்பால் ரசிப்போம்
காத:செருப்பால அடிப்பேன்

கவி:அது என்ன புது பால் இந்த செருப்பால்
காத:ஆண்பாலுக்கு பென்பாலின் அன்பு பரிசு செருப்பால்!
----------------------------------------------------------------------------------------------------
வந்தவர்: ஏங்க அந்தப் பொடியனை வேலைய விட்டு எடுத்துட்டீங்க?

ஹோட்டல் முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க "டிபன் ரெடியா?"ன்னு கேட்டா "நேத்தே ரெடி"ங்கறான்!
----------------------------------------------------------------------------------------------------
'ரேடியோ போட்டால்தான் என் குழந்தை தூங்கும்''

''டி.வி. போட்டாதான் என் குழந்தை தூங்கும்''

''முதுகுலே ரெண்டு போட்டால்தான் என் குழந்தை தூங்கும்.''
----------------------------------------------------------------

முடி கொட்டினால் கவலை வேண்டாம்

 வெந்தயத்தை ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஊற வைத்து முளைக்கட்டியவுடன் காய வைத்து பொடி செய்து தினமும் கால் தேக்கரண்டி அளவு எடுத்து மோரில் கலந்து அருந்தி வந்தால் முடி கொட்டுவதை நிறுத்தி வளரச் செய்யலாம்.
2.                    மருதாணி முடிக்கு மிக நல்ல வளப்பைத் தரும். சோறு வடித்த கஞ்சி கலந்து தேய்த்துக் குளித்தால் முடி பளப்பளப்பாகவும்உறுதியாகவும் இருக்கும்.
3.                    சோற்றுக் கற்றாழையின் சோற்றுப் பகுதியை தேய்த்து குளிப்பதும் நல்ல குளுமையைத் தரும். இவை பொடுகை நீக்க நல்ல மருந்து.
4.                    இரவில் இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை ஊற வைத்து காலையில் அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்தால் கண்ணுக்கு குளிர்ச்சியைத் தரும்.
5.                    கிஸ்மிஸ் பழம் தினமும் 4 என்ற அளவில் சாப்பிட்டு வந்தால் முடியின் செழுமைக்கு மிக நல்லது.
6.                    கறிவேப்பிலை அரைத்து தேய்த்து குளித்து வந்தால் நாளடைவில் நரைமுடி மாற ஆரம்பிக்கும்.
7.                    கரிசலாங்கண்ணி வழுக்கைத் தலையைக் கூட முடி வளரச் செய்யும் ஆற்றல் கொண்டது. மேலும் கரிசலாங்கண்ணியை அரைத்து வழுக்கை தலையில் தேய்த்து வந்தால் ஓரிரு மாதங்களில் முடி முளைக்க ஆரம்பிக்கும்.
8.                    வாரம் ஒரு முறையாவது சீயக்காய் தேய்த்து குளியுங்கள். முடி கண்டிப்பாக வளரும்

ஒரு முஸ்லிமிற்கு மற்றொரு முஸ்லிம் மீது ஆறு உரிமைகள் உள்ளன.


ஒரு முஸ்லிமிற்கு மற்றொரு முஸ்லிம் மீது ஆறு உரிமைகள் உள்ளன.

 
1.      நீஅவனைச் சந்திக்கும்போது ஸலாம் சொல்வது.
2.      அவன் உன்னை விருந்திற்கு அழைத்தால் அதற்கு பதிலளிப்பது (ஏற்றுக் கொள்வது)
3.      அவன் உன்னிடம் அறிவுரை கேட்டால் சரியான அறிவுரை கூறுவது
4.      அவன் தும்மி ''அல்ஹம்துலில்லாஹ்'' என்றுகூறினால்அதற்கு(யர்ஹமுக்கல்லாஹ்என்று) பதிலளிப்பது.
5.      அவன்நோய்வாய்ப்பட்டால்அவனை நலம் விசாரிப்பது.
6.      அவன்மரணித்து விட்டால் அவனைப் பின் தொடர்ந்து (அடக்கம் செய்யச்) செல்வது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

வாழ்க்கைத்தரத்தில்) உங்களுக்குக் கீழிருப்போரை நீங்கள் பாருங்கள். உங்களுக்கு மேலிருப்போரை பார்க்காதீர்கள். ஏனெனில்அல்லாஹ் உங்கள் மீது புரிந்துள்ள அருட்கொடைகளை நீங்கள் சாதாரணமாகக் கருதாமலிருக்க அதுவே சரியானதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
நல்லவை மற்றும் பாவத்தைப் பற்றி நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு, ''நற்குணமேநற்செலும் நன்மையுமாகும். எது உன் உள்ளத்தில் நெருடலை ஏற்படுத்துமோ எதை மக்கள் அறிந்து கொள்வதை நீ விரும்ப மாட்டாயோ அதுவே பாவமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
நீங்கள்மூன்றுபேர் (ஒன்றாக) இருக்கும் போது மக்களுடன் கலந்து விடும் வரை மூன்றாமவரை விட்டுவிட்டு இருவர் மட்டும் ரகசியமாக எதையும் பேச வேண்டாம். ஏனெனில் அது அவருக்கு வருத்தத்தை(கவலையை) ஏற்படுத்தும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
ஒரு மனிதர் அமர்ந்திருக்கும் இடத்தில் நீங்கள் அமர்வதற்காக அவரை அந்த இடத்தை விட்டு எழுப்பாதீர்கள். மாறாகசிறிது இடம் விட்டு விசாலமாக்கிக் கொள்ளுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உங்களுடன் எவரேனும் உணவு உண்டால் கை விரல்களைச் சுவைக்காத அல்லது சுவைக்கச் செய்யாதவரை தனது கையைக் கழுவ வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
சிறியவர்பெரியவருக்கும்நடந்துசெல்பவர் அமர்ந்திருப்பவருக்கும்,குறைந்தஎண்ணிக்கையிலுள்ளவர்கள் அதிகமான எண்ணிக்கையிலுள்ளவர்களுக்கும் ஸலாம் சொல்லட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முஸ்லிமுடைய மற்றோர்அறிவிப்பில் ''சவாரியில்செல்பவர் நடந்து செல்பவருக்கு (ஸலாம் சொல்லட்டும்)'' என்று உள்ளது.

(
ஒருகூட்டத்தார் மற்றொரு கூட்டத்தாரைக் கடந்து செல்லும் போது) கூட்டத்தார் அனைவரின் சார்பாகவும் அவர்களில் ஒருவர் சலாம் சொல்வதும் மற்றொரு கூட்டத்தாரின் சார்பாக அவர்களில் ஒருவர் பதில் சொல்வதும் போதுமானதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
நீங்கள்கிறிஸ்தவர்களையும், åதர்களையும்சந்தித்தால் (முதலில்)நீங்கள் ஸலாம் சொல்லாதீர்கள். மேலும்குறுகிய பாதையில் அவர்களைச் செல்லச் செய்யுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
உங்களில் ஒருவர் தும்மினால் அவர் அல்ஹம்துலில்லாஹ் (அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்)'' என்று கூறட்டும். அவருடைய சகோதரர் அவருக்காக ''யர்ஹமுகல்லாஹ் (அல்லாஹ் உன்மீது கிருபை செய்யட்டும்)'' என்று கூறட்டும். தும்மியவர் அதைக் கேட்டு, ''யஹ்தீகுமுல்லாஹு வயுஸ்லிஹ் பாலகும்...... (அல்லாஹ் உமக்கு நேர்வழியைத் தந்து உமது நிலையை சீராக்கட்டும்) என்று கூறட்டும்''என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உங்களில் எவரும் நின்று கொண்டு குடிக்க வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உங்களில் ஒருவர் காலணியை அணிந்தால் தமது வலக் காலில் முதலில் அணியட்டும்.'' பின்னர் அதைக் கழற்றும் போது இடக் காலிலிருந்து முதலில் கழற்றட்டும். மேலும் அணியும் போது வலக் காலை முதலில் நுழைந்துஅதைக் கழற்றும் போது இடக்காலிலிருந்து முதலில் கழற்றட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உங்களில் ஒரு காலில் மட்டும் செருப்பணிந்து நடக்க வேண்டாம். இரு கால்களிலுமே அணிந்து கொள்ளட்டும். அல்லது இரண்டையும் கழற்றி விடட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
பெருமையடித்தவனாக தன்னுடைய ஆடையை பூமியில் பரவவிட்டு நடப்பவனை அல்லாஹ (மறுமையில்) ஏறெடுத்துப் பார்க்க மாட்டான்''என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள்.
நீங்கள் புசிக்கும்போது வலக்கரத்தால் புசியுங்கள். பருகும் போது வலக் கரத்தால் பருகுங்கள். ஏனெனில்நிச்சயமாக ஷைத்தான் தனது இடக் கரத்தால் புசிக்கிறான். மேலும் தனது இடக் கரத்தால் குடிக்கின்றான்''என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
வீண்விரயம்மற்றும் பெருமையின்றி புசிபருகு! உடுத்து!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஞாயிறு, 7 நவம்பர், 2010

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள்

 “இறைமறையில் அறிவியல் அற்புதங்கள்” என்ற தொடரின் மூலம், பல ஆண்டுகள் ஆய்வு செய்து, பல நூறு அறிவியல்அறிஞர்களின் கடுமையான உழைப்பிற்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை 15 நூற்றாண்டுகளுக்கு முன்பு, அறிவியல் வாடையைக்கூட அறிந்திராத மக்களுக்கு முன்பு மிக எளிமையாக இறைவன் குர்ஆனில் கூறியிருக்கும்அறிவியல் அதிசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முன்வந்திருக்கிறேன்.
இறைவன் கூறியிருக்கும் விதம் அறிவியல் அறியாத மக்களும், அறிவியலின் உச்சானியில் இருக்கும் மக்களும் மிக எளிமையாக புரிந்து கொள்ளும் அமைப்பில் இருப்பது அதன் அதிசயங்களில் பேரதிசயமாகும். எந்த காலத்தில் வாழ்ந்த மக்களும் அவர்கள் புரிந்து கொண்ட அறிவியல்உண்மைகளுக்கு எதிராக குர்ஆனின் வசனங்கள் ஒரு போதும் இருந்ததில்லை, இனிமேலும் அவ்வாறு இருக்கப்போவதுமில்லை.
வெவ்வேறு காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை அந்தந்த காலத்தில் வாழ்ந்த அறிவியல் அறிஞர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் குர்ஆன் வசனங்கள் அமைந்திருப்பது அதன் தனிச்சிறப்பாகும்.
ஒரு காலத்தில் கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் தவறு என நிரூபணம் செய்யப்படும் போது, குர்ஆன் சொன்ன கருத்து தவறு என்று ஆகாது, மாறாக அவர்கள் திருகுர்ஆனை விளங்கிக் கொண்ட விதம், குர்ஆனின் வசனத்திற்கு அவர்கள் கொடுத்த பொருள்தான் தவறு என்றாகும்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மையின் படியே இறைவசனம் பொருள் தருகிறது என்று ஒவ்வொரு காலத்து மக்களையும் நம்ப வைப்பதும், எல்லா காலத்து அறிவியல் அறிஞர்கள் கூறும் கருத்துடன் நூற்றுக்கு நூறு பொருந்தி வருகிறது என்று சொல்ல வைப்பதும் அதன் அழியாத அற்புதங்களில் உள்ளதாகும். இந்த அற்புதம் குர்ஆனுக்கு மட்டுமே சொந்தமானதாகும்.
வேத நூற்களில் அறிவியல் ஆராய்ச்சி செய்ய தூண்டும் ஒரே வேதம் குர்ஆன் மட்டும் தான் என ஆணித்தரமாக என்னால் சொல்லமுடியும். மற்ற வேதங்கள் அவ்வாறு தூண்டவில்லை என்பதைவிட அறிவியல் உண்மைக்கு எதிராக நிற்கிறது, அறிவியல் பேசுபவர்களை குழப்பவாதிகள், மாபெரும் குற்றவாளிகள் என முத்திரை குத்தி மரண தண்டனை விதிக்கப்பட்ட வரலாறுகளைத்தான் நம்மால் படிக்க முடிகிறது.
மற்ற வேதங்கள் இறைவனால் அருளப்பட்ட நிலையிலிருந்து மாறி, பல மாற்றங்களுக்கு உட்படுத்தப் பட்டுவிட்டதால், பல அறிவியல் உண்மைகளுக்கு எதிராக இயற்கையாகவே அவைகள் அமைந்துவிட்டன. மத குருமார்களின் ஆதிக்கம் வலுவாக இருந்த போது, அறிவியல் பேசுவோர்கள் சமூக விரோதிகளாக, இறைக்குற்றம் செய்து விட்டவர்களாககருதப்பட்டு, சிறையிலடைத்து சித்திரவதை செய்யப்பட்டு வந்தார்கள், தங்களது கருத்துகளிலிருந்து பின் வாங்கியவர்களுக்கு உயிர்பிச்சை அளிக்கப்பட்டது, தான் கண்டுபிடித்த அறிவியல் உண்மையிலிருந்து பின்வாங்கதவர்கள் மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப் பட்டார்கள். இந்த கொடுமை மதத்தின் பெயரால், வேதத்தின் பெயரால் அரங்கேற்றம் செய்யப்பட்டது என்பதுதான் அதிலும் கொடுமையாக இருந்தது.
இந்தக் கொடூரம் வேதங்களின் பெயரால், அரங்கேற்றம் செய்யப்பட்டு கொண்டிருந்த காரணத்தால் பல அறிவியல் விஞ்ஞானிகள், “இறைவன் இல்லை”, “வேதம் பிற்போக்கான கருத்துடையது” என்ற முடிவுக்கு வர வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார்கள்.
ஆனால் எந்த வேத நூலுக்கும் இல்லாத ஒரு தனி சிறப்பு இந்த குர்ஆனுக்கு இருப்பதால்தான், மேலும் அறிவியல் உலகைப் படைத்த அல்லாஹ்வால் அருளப்பட்ட வேதமாகவும் இருப்பதால்தான் இன்று அறிவியல் உலகிற்குகூட அதனால் சவால் விட்டு, நிமிர்ந்து நிற்க முடிகிறது. குர்ஆனை போல இலக்கிய சுவையும், கருத்தாழமும், அறிவியல் உண்மைகளை எளிமையாக எடுத்து வைக்கும் அதன் சிறப்பு பொருந்திய ஒரு வசனத்தையாவது இந்த உலக மக்களால் கொண்டு வர முடியுமா? என அது எடுத்து வைக்கும் சவாலை 15 நூற்றாண்டுகளாக யாராலும் எதிர்கொள்ள முடியவில்லையே, இனிமேலும் அதனை எதிர்கொள்ள முடியாது என்பது இரண்டு கருத்துக்கு இடமில்லாத உண்மையாகும்.
வானவியல், புவியியல் என எத்தனை இயல்கள் இருக்கின்றனவோ அத்தனை இயல்களையும் ஆராய்ச்சி செய்து அல்லாஹ்வின் அற்புத ஆற்றலை புரிந்து கொள்ள தூண்டுகிற ஒரே வேதம் குர்ஆன் மட்டுமே.
இந்த தொடரை உங்கள் முன் வைப்பதில் பெருமிதம் அடைகிறேன். நான் ஒரு மருத்துவன் என்ற முறையில் இன்றைய நவீன மருத்துவ அறிவியல்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றுள்ளேன். இந்த அறிவியல் உண்மைகளை 15 நூற்றாண்டுகளுக்கு முன்பே குர்ஆன் மூலம் இந்த உலகிற்கு மிக எளிமையான முறையில் உணர்த்தப்பட்டு விட்டது என்பதை விளக்குவதே எனது நோக்கம்.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலம், ஒவ்வொரு துறை குறித்தும் தெளிவான, தீர்க்கமான தகவல்களை தந்து கொண்டிருக்கும் அறிவியல் நுட்பம் நிறைந்த காலம். மதத்தின் பெயரால் மூட நம்பிக்கைகளை வளர்ப்பது கடினம், எந்த தகவலையும் அறிவியல் தகவலோடு ஒப்பீடு செய்து பார்த்து ஏற்றுக் கொள்ளும் காலம் இது. மருத்துவ துறையில் இன்று புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட உண்மைகள் குர்ஆனில் எந்தந்த வசனங்களில் இடம் பெற்றுள்ளது என்று வாசகர்களுக்கு இனம் காட்டுவதே எனது முக்கிய நோக்கம். அதன் மூலம் குர்ஆன் இறைவேதம் என்பதை எளிதாக புரிந்து கொள்ள மிக வசதியாக இருக்கும்.
அல்லாஹ் எனது நல்ல நோக்கத்திற்கு வெற்றியை தருவானாக. எனக்கு இப்படி ஒரு சேவை செய்வதற்கு வாய்பளித்த இறைவனுக்கு நன்றி கூறி, எனது இந்த சேவையினை அங்கீகரித்து கொள்ள பிரார்த்தனையும் செய்து கொள்கிறேன்.
கருயியல்
கருயியல் என்பது மனிதன் கருவுற்று அவன் எவ்வாறு தாயின் வயிற்றில் வளர்ச்சி அடைந்து, முழு மனித வடிவம் பெற்று பிறக்கிறான் என்ற தகவலை ஆய்வு செய்யும் ஒரு துறையாகும். ஒரு பெண் கருவுற்ற நாள் முதல், அவளது வயிற்றில் குழந்தை எந்தந்த நிலையில் எவ்வாறு வளர்ச்சி அடைகிறது என்பது பற்றிய அறிவு சிறிய அளவுகூட இல்லாத காலகட்டத்தில் குர்ஆனில் மிக தெளிவாக, அதே நேரத்தில் மிக எளிமையாக கருவளர்ச்சியின் எல்லா விவரங்களையும் கூறப்பட்டிருப்பது அறிவியல் அறிஞர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.
இறைபணிக்காக இணைந்து நிற்கும் எனதருமை இஸ்லாமிய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
பதினான்கு நூண்றாண்டுகளுக்கு முன் எல்லாம் வல்ல இறைவனால் நமது நபிக்கு ஜிப்பரயீல்(அலை) மூலமாக அருளப்பட்ட இத்தன்னிகரற்ற மாமறையில் தெரிவித்துள்ள வாழ்க்கை நெறிகளும், அறிவியல் உண்மைகளும் இறைச்சட்டங்களும் இனி எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் காலத்துக்கேற்ப பொருந்தி நிறைந்து நிற்பவை என்பது சத்தியம்.
இவ்வரிய திருமறை வருடம் ஒரு முறையும், நமது நபி(ஸல்) அவர்களின் இறுதியாண்டு வாழ்க்கையில் இரு முறையும் ஜிப்பரயீல்(அலை) அவர்களின் மூலம் சரிபார்க்கப்பட்டும், ஆயிரமாயிரம் சத்திய சஹாபாக்களால் மனனம் செய்யப்பட்டும், பிரதிகள் எடுக்கப்பட்டும் இன்றுவரை ஒரு எழுத்துக்கூட மாற்றம் செய்யப்படாமல் இறையருளால் பாதுகாக்கப்பட்டு, இத்திருமறை “இறைவசனமே” என உலகிற்கு தெளிவாக்கி கொண்டிருக்கிறது.
அறிஞர்களும், விஞ்ஞானிகளும், பல்துறை வல்லுனர்களும் நம் திருமறையில் புதைந்துகிடக்கும், காலத்துக்கேற்ப பொருந்தி நிற்கும், உண்மைகளை கண்டு வியந்து நிற்கின்ற வேளையில், ஒரு சில அறிவிலிகள், 1400 ஆண்டுகள் பழமைவாய்ந்த, ஒரு படிப்பறிவில்லாத நபரின் வாக்குகள் இந்த நூற்றாண்டுக்கு ஏற்றதல்ல என வீராப்பு பேசி எதிர்த்து சேறு பூச விழைகின்றனர்.
அன்பு சகோதரர்களே!, இவ்வெதிர்ப்புக்கள் நமக்கு புதிதல்ல. இஸ்லாம் என்கின்ற வாழ்க்கைநெறி இப்பூலோகத்தில் வேரூன்றி உயர்ந்து நிற்க அது கொடுத்த விலையான தியாகங்களும், உயிர்களும் உலகில் தோன்றிய எந்த ஒரு மதத்திற்கும் ஏற்பட்டதல்ல. இந்த உலகம், நமக்கு உரியதான அடுத்த நிரந்தர உலகத்திற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ளும் ஒரு பயிற்சி களமே, (நபி மொழி) என்ற சிந்தனையுடன் இச்சத்திய நெறிகளை வேரூன்ற தம் இன்னுயிரையும், உடமைகளையும் நீத்த ஆயிரமாயிரம் நபித்தோழர்களையும், இஸ்லாமிய உடன் பிறப்புகளையும் மனதில் நினைத்து இறைவனிடம் அவர்கள் நிரந்தர வாழ்க்கைக்கு இறைஞ்சி நமது இறைப்பணியை இனிதே தொடர்வோம்.
இச்சிறிய முன்னுரையோடு, இதழ்கள்தோறும் இறைமறையில் புதைந்து கிடக்கும் அறிவியல் உண்மைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஆலோசனைகளும் கருத்துகளும் கேள்விகளும் வரவேற்கப்படுகின்றன.
இந்த வரிசையில், மனிதன் எவ்வாறு உருவாக்கப்படுகிறான் என்பதை, இறைமறை விளக்குவதை பார்ப்போம்.
நிச்சயமாக (முதல்) மனிதனைக் களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர் (அதற்கென உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாமே அவனை இந்திரியத்துளியாக ஆக்கினோம். பின்னர் அதை அலக் என்ற நிலைக்கு மாற்றினோம். பின்னர் ‘அலக்’ என்பதை சதைத்துண்டாக ஆக்கினோம். சதைதுண்டை எலும்பாக ஆக்கி, எலும்புக்கு மாமிசத்தை அணிவித்தோம். பின்னர் வேறு படைப்பாக (முழு மனிதனாக) உருவாக்கினோம். ஆகவே படைப்பாளர்களில் அழகானவனான அல்லாஹ் உயர்ந்தவனாக ஆகிவிட்டான். அல் குர்ஆன் 23:12-14
சகோதரர்களே! மனித கருவளர்ச்சியியலை இவ்வளவு துல்லியமாக வெவ்வேறு நிலைகளில் அதன் உருமாற்றம், கால அளவு, குணாதிசயங்களை படைப்பாளனால் மட்டுமே தெளிவாக்க இயலும்.
நான் கருவளர்ச்சியியலில் ஆழமாக செல்லாமல் இவ்வசனத்தின் சிறப்பை மட்டும் தெளிவாக்குகிறேன். “அந்த இந்திரியத்துளியை கர்பப்பையில் ஒரு பாதுகாப்பான நிலையில் வைத்தோம்” அதாவது, கர்பப்பையின் அமைப்பு, அதன் தசைத்தன்மை, சிறப்பு இரத்த ஓட்ட அமைப்பு அதன் திசுவுடைய குணங்கள் எல்லாம் அதற்கே (குழந்தை வளர்ச்சிக்கே) உரித்தானவை. இச்சிறப்பு அமைப்பு இது போன்ற வேறு எந்த உறுப்புகளுக்கும் இல்லை. செயற்கை முறையில் கருத்தரித்தல் செய்தாலும் அதை (கருவை) பின்னர் இக் கருப்பையில்தான் வைத்து வளர்க்க முடியும். மேலும் “பாதுகாப்பான நிலையில்” வைத்தோம் என்கிறான். அதாவது இக்கருவை கர்ப்பபையின் “உடம்பு” என்ற பகுதி அல்லாது வேறு எந்த பகுதியில் வைத்தாலும் (கருவை) கரு முழு வளர்ச்சி அடைவதில்லை. (Abort) அபார்ட் ஆகிவிடும். எனவேதான் இறைவன் “பாதுகாப்பான இடத்தில்” (உடம்பு பகுதியில்) வைத்ததாக கூறுகிறான்.
இந்த வசனங்களை உன்னிப்பாக கவனிக்கும் போது இறைவன் கர்ப்பப்பையை பொதுவாக குறிப்பிடும் போது “ரஹ்ம்” என்று தான் இறைமறையில் பல இடங்களில் குறிப்பிடுகிறான்.
அடுத்து விந்து துளியை “அலக்” என்ற நிலைக்கு மாற்றினோம் என்று வருகிறது.
அலக்” என்ற அரபி வார்த்தைக்கு
1. அட்டை,
2. தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருள்,
3. இரத்தக்கட்டி என்ற பொருள்கள் உண்டு.
அட்டையையும், “கரு”வையும் ஒப்பிட்டு பார்க்கும் போது சில ஒற்றுமைகள் உண்டு.
1. இந்த இரண்டின் ஒருமித்த தோற்றம்.
2. அட்டை மற்றவர்களின் இரத்ததைத் உணவாகக் கொள்கிறது. கருவும் தாயின் இரத்ததைத்தான் உணவாக்குகிறது.
அடுத்து தொங்கிக்கொண்டிருக்கும் பொருள் என்பது தாயின் கர்ப்பப்பையில் ஒட்டிக் கொண்டிருக்கம் குழந்தை கருக்கு மிக்க பொருத்தமான பொருள்தானே!.
இரத்தக்கட்டி என்ற பொருளும் மிகச்சரியானதே. எவ்வாறு எனில் “கரு” உருவான முதல் மூன்று வாரங்களும் இரத்தக்கட்டி போன்றுதான் இருக்கும். (இரத்த ஓட்டம் இருக்காது. சுப்ஹானல்லாஹ்! இறைவன் அந்த “அலக்” என்ற வார்த்தையில் கருவின் இயல்புகள், குணங்கள், வளர்ச்சிநிலை போன்றவற்றை வியக்கும் படி தெரிவித்துள்ளான்.

புனித கஃபா தொடர்பான அடையாளச் சின்னங்கள்

புனித கஃபா ஆலயம் பற்றியும், அதனோடு தொடர்பான அடையாளச் சின்னங்கள் பற்றியும் இங்கு நோக்கவிருக்கின்றோம்.
கஃபாவின் அமைவிடம்: சவூதி மக்கா நகரில் அமைந்திருக்கின்ற புனிதகஃபா ஆலயம் பூமியின் மையப்பகுதியில் அமைந்திருக்கின்றது. இதை எகிப்து நாட்டைச் சேர்ந்த புவியியல் ஆய்வாளர் ஒருவரும் உறுதி செய்துள்ளார். இது பற்றி அறிஞர் ஜாகிர் நாயக் என்பவரும் தனது உரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
கஃபாவின் மறுபெயர்கள்:
இது மனிதர்கள் அல்லாஹ்வைத் தூயமையாக வணங்கி, வழிபட பூமியில் நிறுவப்பட்ட முதலாவது ஆலயமாகும். இதன் சிறப்பைப் பிரதிபலிப்பதற்காக அது பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது.
- அல்லாஹ்வின் வீடு, (நபிமொழிகள்),
- அல்பைத்துல் அதீக், (அல்ஹஜ்:29, 33), பழமையான வீடு, புராதன வீடு.
- அல்பைத், (அல்பகரா: 125, 127, 158), (ஆலுஇம்ரான்:97), (அல்அன்ஃபால்:35, அல்ஹஜ்:26), (குரைஷ்:3). குறிப்பாக அந்த இல்லம்.
- அல்பைத்துல் ஹராம் (அல்மாயிதா, 97) சங்கையான இல்லம்.
- அல்மஸ்ஜிதுல் ஹராம், (அல்பகரா: 144,149,150, 196), அல்மாயிதா:2, அல்அன்ஃபால்: 34, அத்தௌபா:7, 19,28), (அல்இஸ்ரா:1, 7), அல்ஹஜ்: 25, அல்ஃபத்ஹ்:25, 27).
- அல்கஃபா,(அல்மாயிதா: 95, 97). நாட்சதுரமானது
- குறிப்பு: கஃபதுல்லாஹ் என்ற சொல் நாம் பாவித்தாலும் அதை எந்த கலைக்களஞ்சியத்திலும் காணமுடியவில்லை.
கஃபா என்பதன் பொருள்: 
சதுரவடிவிலான பெட்டி, கட்டம் போன்ற பொருள் உண்டு. கஃபாசதுரவடிவம் கொண்ட அமைப்பில் இருப்பதாலும் இந்தப் பெயர் வந்திருக்கின்றது.
கஃபாவைக் கட்டியவர்: 
நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டினார்கள். கட்டுமாணிப்பணிக்கு துணையாக அவர்களின் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களையும் எடுத்துக் கொண்டார்கள். அன்னை ஹாஜர் (ரழி) அவர்கள் தனது மகனோடு தன்னந்தனியே கஃபா பள்ளத்தாக்கில் வசித்து வந்த போது வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தனது இறக்கையினால் நிலத்தில் அடித்தார்கள். உடனே ஜம்ஜம் நீரூற்று உருவானது. அந்த நேரத்தில் ஹாஜர் அம்மாவிடம்: ‘இதோ இந்த இடத்தில் அல்லாஹ்வின் வீடு உள்ளது. அதை இந்தச் சிறுவனும், அவனது தந்தையுமாக கட்டுவார்கள்’ என்று ஜிப்ரீல்(அலை) அவர்கள் கூறியதாக புகாரியில் இடம் பெறும் செய்தியைப் பார்க்கின்றோம்.
அந்த முன்னறிவிப்பு இஸ்மாயீல் (அலை) அவர்கள் இளம்பருவத்தை அடைந்த போது நடந்தேறியது. அவர்களை அவர்களின் தந்தை இப்ராஹீம் (அலை) அவர்கள் சந்தித்து ‘ மகனே அல்லாஹ் எனக்கு ஒரு கட்டளை பிறப்பித்துள்ளான், அதற்கு நீ துணை நிற்பாயா? எனக் கேட்டார்கள், அதற்கு அவர்கள் ஆம். (நிச்சயமாக) என்றார். உடனே அவர்கள், குறித்த அந்த இடத்தை சுட்டிக்காட்டி, அல்லாஹ் இந்த இடத்தில் அவனது வீட்டை அமைக்கும்படி கட்டளையிட்டுள்ளான் என்று கூறினார்கள். வெள்ளப் பெருக்கு காரணமாக அதன் வலது, மற்றும் இடது பக்கங்கள் தேய்ந்து, தூர்ந்து குட்டிச்சுவர் போல் அது காட்சி தந்தது. அந்த இடத்தில்தான் அல்லாஹ்வின் ஆலயத்தை இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது மகனி உதவியுடன் கட்டி முடித்துப் பிரார்த்தனையும் செய்தார்கள். (புகாரி).
இந்த இடத்தில்தான் அல்லாஹ்வின் வீடு உள்ளது என்று வானவர் கூறியதையும், பின்னர் இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது மகனிடம் கூறியதையும் பார்த்தால் அந்த இடத்தில் அல்லாஹ்வின் ஆலயம் அடையாளப்படுத்தப்பட்டு இருந்திருக்கின்றது என்பதை அறியலாம். ஆனால் அது வணங்கப்பட்டதற்கான எந்த ஆதாரம் நாம் தேடிப்பார்த்தவரை கிடைக்கவில்லை, அதைக்கட்டி முடித்த பின்பே வணக்கவழிபாடுகள் தொடங்கின என்பதை குர்ஆன் வசனங்கள் மூலமும், நபிமொழிகள் மூலம் அறியலாம். (அல்லாஹ்வே மிக அறிந்தவன்).
கஃபாவின் பராமரிப்பு
கஃபாவை ஆரம்ப காலத்தில் குஸாஆ என்ற குரைஷியக் கோத்திரத்தில் ஒரு பிரவினர் நிர்வகித்து வந்தனர், இவர்களின் காலத்தில்தான் சிலைகள் இல்லாத தூய்மையான புனித அந்த இல்லத்தில் சிலைவைக்கப்பட்டு, அதன் நோக்கம் மாசுபடுத்தப்பட்டது. அந்தப்பாவத்தை முதல் முதலில் அம்று பின் லுஹை அல்குஸாயி என்பவனே அதனுள் அரங்கேற்றினான். அதனால் நபி (ஸல்) அவர்கள் அம்றுபின் லுஹைல் அல்குஸாயை நரகத்தில் அவனது குடல்களை இழுத்துக் கொண்டு வேதனை செய்யப்படுவதைக் கண்டேன், அவனே கஃபாவில் முதல்முதலில் சிலை வணக்கத்தை உண்டாக்கியவன் எனக் கூறினார்கள். (புகாரி).
இவர்களின் பின்பு குரைஷியரிடம் அதன் நிர்வாகம் கைமாறியது. அதிலும் இறையற் கோட்டபாட்டில் இணைவைத்தலும், பல சமூகக் கொடுமைகளும் அரங்கேறவே செய்தன. உயர் சாதி குரைஷியர் அவர்களின் குலத்தில் இல்லாத, தாழ்த்தப்பட்ட மக்களை? புனித கஃபாவில் ஆடையின்றி நிர்வாணமாக தவாஃப் செய்ய விட்டனர், எல்லோரும் அரஃபாவில் தங்கி இருக்க, இவர்களோ முஸ்தலிபாவில் தங்குவர், இப்படி பல நடைமுறைகள். இவர்களின் ஆட்சியில்தான் கஃபாவினுள் 360 சிலைகள் வைக்கப்பட்டன. அவற்றை அல்லாஹ்வின் தூதர் ஹிஜ்ரி 8வது வருடம் மக்கா வெற்றியின் போது ‘ சத்தியம் வந்தது, அசத்தியம் ஒழிந்தது, அசத்தியம் ஒழிந்தே தீரும் என்ற திருமறைவசனத்தைக் கூறியவர்களாக உடைத்தெறிந்தார்கள். (பார்க்க : புகாரி, முஸ்லிம்).
கஃபாவை தகர்க்க எடுத்து முயற்சி சுக்குநூறாகியது
அபீஸீனிய மன்னனின் ஆட்சியில் ஏமன் நாட்டின் பிரதிநிதியாக செயல்பட்டு வந்த ஆப்ரஹா என்பவன் கி.பி. 571-ல் பிரமாண்டமான யானைப் படை ஒன்றைத் தயார் செய்து கஃபாவை இடிப்பதற்காக அனுப்பிவைத்தான், அதை அழிப்பதற்காக அபாபீல் என்ற பறவைகளின் சொண்டுகிளில் சூடேற்றப்பட்ட கற்களை கவ்விக்கொண்டு வரச் செய்து, அந்தப்படையை மெண்டு துப்பிய வைக்கோலைப்போல் அல்லாஹ் ஆக்கினான் என்பதை அல்ஃபீல் அத்தியாயம் தெளிவு படுத்துகின்றது.
அபாபீல் பறகைள் சுமந்து வந்தது அணுவைத்தான் என்று விளக்க முற்படுவது அறியாமையின் உச்சமாகும்.
கஃபா குரைஷியரால் புணர் நிர்மானம் செய்யப்படுதல்
குரைஷியரின் நிர்வாகத்தின் கீழ் இயங்கிய கஃபா வரலாற்றுச் சிறப்புமிக்கதோர் புணர் நிர்மானத்திற்கு உட்படுத்தப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம்: உனக்குத் தெரியுமா? உனது சமூகத்தவர்கள் (குரைஷியர்) கஃபாவைக் கட்டிய போது பொருளாதார நெருக்கடியால் இப்ராஹீம் (அலை) அவர்களின் அடித்தளைத்தைச் சுருக்கிவிட்டனர், உனது சமுதாயவத்தவர் புதிதாக இஸ்லாத்தில் இணைந்த மக்களாக இல்லை என்றால் அதை இடித்துவிட்டு, நான் அதை இப்ராஹீம் (அலை) அவர்களின் சரியான அடித்தளத்தின் மீது கட்டி, ஆறுமுளம் அதிகப்படுத்தி, ஹிஜ்ரையும் கஃபாவினுள் ஆக்கி, அதற்கு கிழக்கு மற்றும், மேற்கு வாசல்களையும் வைத்திருப்பேன் எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).
இற்த ஹதீஸ் கஃபா சாதாரண ஒரு உயரத்தில் இருந்து வந்துள்ளதையும், இப்ராஹீம் நபியின் அடித்தளம் சுருக்கப்பட்டு கட்டப்பட்டதற்கு பொருளாதாரத நெருக்கடி காரணம் என்பதையும் மறைமுகமாக விளக்குகின்றது. அப்படியானால் அந்தப் பகுதி என்ன என்பது பற்றி அறிய முற்பட்டால் மக்கள் ‘ஹிஜ்ரு இஸ்மாயீல் என்றழைக்கும் ‘ஹிஜ்ர்’ என்ற அந்த வளைவு மூலை என்பது ஹதீஸ்களில் குறிப்பிடப்படுகின்றது. அது பற்றிய செய்தி பின்னர் தரப்படும்.
அப்துல்லாஹ்பின் சுபைர் (ரழி) அவர்கள் புணர் நிர்மானம்
ஹிஜ்ரி 60- முதல் 72- வரையுள்ள காலம் வரை இப்னு சுபைர் (ரழி) அவர்கள்மக்காவின் ஆட்சியாரளராக இருந்தார்கள். ஹிஜ்ரி: 64ல் சிரியாவில் இருந்து வந்த யஸீத் பின் முஆவியாவின் படை அப்துல்லாஹ்பின் சுபைர் (ரழி) அவர்களுடன் புனித கஃபாவில் எறிகணைகளைக் கொண்டு போர்தொடுத்தது. அதனால் புனித கஃபா தீப்பிடித்தது. அதன் கட்டடம் ஆட்டம் கொடுத்தது, அதன் கற்கள் உதிரத்தொடங்கியது. அதனால் நபி (ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா ரழி அவர்களிடம் கூறிய ஹதீஸின் அடிப்படையிலும், மக்காவாசிகளின் ஆலோசனையையும் பெற்று கஃபாவைப் புணர் நிர்மானம் செய்தார்கள். ஹிஜ்ர் பகுதியில் கூடுதலாக ஆறுமுளம் அதிகரித்ததோடு, அதற்கு கிழக்கு, மற்றும் மேற்கு வாசல்களையும் வைத்தார்கள். அதன் வாசல்களை நிலத்தோடு படும்படியாகவே செய்தார்கள். அப்போது அதன் நீளம் மொத்தம் பதினெட்டு முளமாக இருந்தது என்ற செய்தியினை முஸ்லிமில் பார்க்கின்றோம்.
உமைய்யா ஆட்சியாளரான அப்துல் மலிக் பின் மர்வான் என்பவர் ஆட்சிக்கு வந்தார். அவர் ஒரு நாள் கஃபாவைத் தவாஃப் செய்து கொண்டிருந்த போது, உம்முல் முஃமினீன் பேரில் பொய்யுரைத்து காஃபாவையும் இடித்து இவ்வாறு செய்த இப்னு சுபைர் அவர்களை அல்லாஹ் நாசமாக்குவானாக எனத்திட்டினார். அதைகேட்டுக் கொண்டிருந்த ஹாரிஸ் என்பவர் அமீருல் முஃமினீன் அவர்களே! அவர்களை நீங்கள் திட்ட வேண்டாம், அன்னை ஆயிஷா அவர்கள் கூற நானும்தான் செவியுற்றுள்ளேன் என்றார். அப்படியா எனக்கு அந்தச் செய்தி தெரிந்திருப்பின் நான் உடைக்காமல் அவரின் புணர் நிர்மான அமைப்பில் விட்டிருப்பேனே என அப்துல்மலிக் வருத்தப்பட்டார். (பத்ஹுல் பாரி- பாடம்: மக்காவின் சிறப்பும், அதன் புணர் நிர்மானமும் ).
ஹஜ்ஜாஜ் பின் யூஸுப் என்பவனின் நச்சரிப்பினால் இதன் மேற்கு வாசல் மூடப்பட்டது, ஹிஜ்ரில் இணைக்கப்பட்டதும் இப்போதுள்ள போன்று திறக்கப்பட்டது, இந்தப் புணர் நிர்மானத்தை சீர்குலத்ததில் அப்துல் மலிக்கை விட அவரின் கவர்னர் ஹஜ்ஜாஜ் என்ற கொடியவனுக்கே அதிக பங்குண்டு எனக் கூறமுடியும். (பார்க்க: முஸ்லிம்).
ஹிஜ்ர்: 
தடை, தடுக்கப்பட்டது என்ற பொருளில் ஆளப்படும் இந்தப்பகுதி கஃபாவின் இடது மூலையில் அரவைட்டம் போல இடம் பெறுகின்றது. ஒருவர் தவாஃப் செய்கின்றபோதும், பர்ள் தொழுகின்ற போதும் அதற்குள் பரள் தொழுவதும், தவாஃப் செய்வதும் கூடாது என்ற அர்த்தத்தில் இந்தப் பெயர் வரலாயிற்று.
சிலர் அங்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் அடக்கப்பட்டதாகக் கதை அளந்து அதற்கு ஹிஜ்ர் இஸ்மாயீல் என்பர். அதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த ஹிஜ்ரின் பெரும் பகுதி கஃபாவைச் சார்ந்த பகுதியாகும். அது குரைஷியரின் புணர் நிர்மாணத்தின் போதே இவ்வாறு விடப்பட்டது என்ற உண்மையினஷனை முன்னர் எடுத்தெழுதியுள்ளோம். அதற்காக அதைத் தொடுவது பரகத், அருள் என்றெல்லாம் எண்ணக் கூடாது.
அல்ஹஜருல் அஸ்வத்: (கறுப்புக்கல்)
கஃபாவின் கிழக்கு மூலையில் (முனையில்)இருக்கின்ற கல்லாகும். இது கருப்பு நிரமான கல் என்று அழைக்கப்பட்டாலும், உண்மையில் அது வெண்ணிறமாகே சுவனத்தில் இருந்து வந்திருக்கின்றது. ‘ஹஜருல் அஸ்வத்’ ஆலங்கட்டியை விட வெண்ணிறமாகவே சுவனத்தில் இருந்து வந்திறங்கியது, அதை ஆதமின் பிள்ளைகளின் தவறுகள் கருப்பாக்கி விட்டன என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
இதை ஒருவர் நேரடியாகத் தொட்டு முத்தமிடலாம், அல்லது கையால் தொட்டு கையை முத்தமிடலாம், அல்லது ஒருகைத்தடியால் தொட்டு அந்தத்தடியை முத்தமிடலாம் இவ்வாறு செய்வதற்கு நபிமொழியில் ஆதராத்தைக்காணலாம். இதனால், நன்மை தீமை எதுவும் ஏற்படுவதில்லை, அல்லாஹ்வின் தூதர் செய்தார்கள், அதனால் நாமும் செய்கின்றோம் என்ற உணர்வே மிகைக்க வேண்டும்.
வெள்ளி நிறத்தில் இப்போது ஏன் தெரிகின்றது
அப்துல்லாஹ்பின் சுபைர் (ரழி) அவர்கள் மக்காவை ஆட்சி செய்த போது கஃபாவில் தீப்பிடித்தது. அதனால் அந்தக்கல்லில் சில மாற்றம் தெரிந்தது. அதற்காக அந்த நபித்தோழர் அவர்கள் அதைச் சுற்றி வெள்ளிநிரத்தால் வடிவமைத்தார்கள். இவர்களே இவ்வாறு முதலாவது செய்தவர்கள் என அல்அஸ்ரகி என்ற வரலாற்றாசியர் குறிப்பிடுகின்றார்கள். பின்பு அப்பாஸிய கலீபாவான ஹாரூன் அர்ரஷீத் (ரஹ்) அவர்கள் ஹஜருல் அஜஸ்வத் இருக்கும் இடத்தை துப்பரவு செய்து, அதைச் சுற்றித் துளைத்து டயமன் உலேகத்தை அதன் மேலும், கீழுமாகப் பொருத்தினார்கள். அத்தோடு வெள்ளியை அதற்குள் உருக்கிவிட்டார்கள் என்ற செய்திiயை (அல்மவ்ஸுஅத்துல் அரபிய்யத்துல் ஆலமிய்யா) என்ற நூலில் பார்க்க முடிகின்றது.
ருக்னுல் யமானி: 
கஃபாவின் வலது மூலையில் ஹஜருல் அஸ்வதிற்கு நேர் மூலையில் இருக்கின்ற இடத்தை ருக்னுல் யமானி (வலது மூலை) என்று கூறப்படும். தவாஃப் செய்கின்ற ஒருவர் அதை தொடுவது மாத்திரம் நபிவழியாகும்.
கஃபாவின் வாசல்: 
ஆரம்ப காலங்களில் கஃபாவின் வாசல் வழியாக மக்கள் சர்வசாதராணமாக சென்றுவரமுடியுமாக இருந்தது. குரைஷியர் தமது வசதிக்காக, தாம் விரும்பும் வர்க்கத்தினரை மாத்திரம் அதனுள் நுழைய அனுமதிப்பதற்காக அதை பூமியில் இருந்து உயர்த்தி அதற்கு ஒரு வாசல் வைத்தனர், அதைத் தொடர்ந்து வந்த இப்னு ஸுபைர் (ரழி) அவர்களின் புணர் நிர்மானத்தின் போது, தரையில் இருந்து இரு வாசல்கள் வைக்கப்பட்டன, பின்னர் வந்த உமையா ஆட்சயிளாரால் மேற்குவாசல் மூடப்பட்டது. மக்கள் நெருக்கடியைக் கவனத்தில் கொண்டு அதன் தற்போதைய வாசலும் தொடர்ந்தும் மூடப்பட்டவாறே இருக்கும்.
வருடந்தோரும் நடைபெறும் சவூதியின் சர்வதேச குர்ஆன் மணனப்போட்டியில் கலந்து கொள்ளும் காரிக்கள், ஹாபிள்கள், விஷேட விருந்தினர்கள், சர்வதேசமட்டத்தில் பேசப்படும் அறிஞர்கள் போன்றோரர் கலந்து கொள்ளும் முக்கிய நிகழ்வுகளின் மாத்திரம் அது திறக்கப்படும். தற்போதைய கதவு பூமியில் இருந்து இரண்டு மீற்றர் உயரத்தில் இருக்கின்றது. அதன் கதவு சுத்தமான தங்கத்தினால் தயாரிக்கப்பட்டதாகும். படிகள் மூலமே அதற்கு ஏறிச் செல்லாம். அந்தப்படிகளும் கூட வெள்ளியினால் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.
கஃபாவின் உட்புறம்

கஃபாவின் உட்புறம் பெறுமதிமிக்க மார்பிள்களால் விரிக்கப்பட்டிருக்கின்றது. அதன் நடுவில் பலமான மூன்று மரத்தாலான தூண்கள் போடப்பட்டுள்ளன. இது அவ்வப்போது சில சீர்த்திருங்களுக்கு உட்படுவதுண்டு. அதன் உட்பகுதியின் முகட்டில் பண்டையக்கால விளக்குகள் தொங்கவிடப்பட்டிருக்கின்றன.
ஷாதர்வான். ஹிஜ்ர் நீங்கலாக கஃபாவின் சுவரைச் சுற்றி (மதாஃப்) தவாஃப் செய்யும் இடம் மூன்றுதிசைகளாலும் சூழப்பட்டிருக்கும் மென்யான கட்டுமானமாகும். அது அடிப்படையில் இப்ராஹீம் (அலை) அவர்களின் அடித்தளத்தோடு ஒட்டியதாகும்.
அல்ஹத்தீம் (அல்லது) அல்ஹுதைம்
ஹஜருல் அஸ்வதிற்கும், கஃபாவின் வாசலுக்கும் இடையிலுள்ள பகுதிக்கு இந்தப் பெயர் கூறப்படுகின்றது. ஹஜருல் அஸ்வத் முதல், ஹிஜ்ர் வரையும் உள்ள பகுதிக்கும் இந்தப் பெயர் கொண்டு அழைக்கப்படுவதுண்டு. இதற்கு நெருக்கடிக்குள்ளாக்கப்படுவது, பாராமுகமாக விடப்படுவது என்ற பொருள் உண்டு. இது கஃபாவிற்கு வெளிப்புறமாகத் தெரியும் ஒரு பகுதியாகும்.
கஃபாவின் புணர் நிர்மானத்தின் போது அதை உயர்த்திக் கட்டாமல் விட்டதற்காகவும் (பாராமுகமாகவிடப்பட்டது என்ற பொருளில்) இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும், ஜாஹிலிய்யா காலத்தில் தவாஃப் செய்வோர் தமது ஆடைகளைக்களைந்து இந்த இடத்தில் கொண்டு வந்து போடுவார்கள், அவை பல நாட்கள் கவினிப்பாரற்றுக் கிடக்கும். அதனால் அதன் மற்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
முல்தஸ(ஜ)ம்
கஃபாவின் வாசலுக்கும், ஹஜருல் அஜ்வதிற்கும் இடையில் உள்ள குறித்த ஒரு சிறு பகுதிக்கு இந்தப் பெயர் சொல்லப்படுகின்றது. அரபியில் இறுக்கமாக பற்றிக் கொள்ளுதல் என்ற பொருள் தரும் அந்த இடமாது பிராத்திப்பவர்கள் பிரார்த்திக்கின்ற போது அதைப் இறுக்கிப் பற்றிக் கொண்டு பிரார்த்திப்பதால் அந்தப் பெயர் வந்ததாகக் கூறப்படுகின்றது.
மதீனா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், சமகால ஹதீஸ் துறை ஆய்வாளருமான அஷ்ஷைக்: அப்துல் முஹ்ஸினுல் அப்பாத் என்ற அறிஞர் இதில் பிராரத்திப்பது பற்றி வந்திருக்கும் இரண்டு ஹதீஸ்களையும் சுட்டிக்காட்டி அவ்விரண்டும் பலவீனமான செய்தியாகும் என அபூதாவூத் கிரந்தத்தின் விளக்கவுரையில் குறிப்பிடுகின்றார்கள்.
மீஸாப்
தண்ணீர் வடிந்தோடும் பீலிக்கு அரபியில் மீஸாப் என்று கூறப்படும். கஃபா ஆரம்பத்தில் முகடின்றிக் காணப்பட்டது. குரைஷியரின் கட்டுமானப்பணியின் போதே அதற்கு முகடு போடப்பட்டு, அந்தப்பீலியும் வைக்கப்பட்டது. ஹிஜ்ர் வழியாக மழைத் தண்ணீர் ஓடும்படியாக அது வைக்கப்பட்டிருந்தது. அப்துல்லாஹ்பின் சுபைர் (ரழி) அவர்கள் புணர் நிர்மானம் செய்த போது குரைஷியர் வைத்த பீலிக்கான வழியையே வைத்திருந்தார்கள். அதன் நீளம் நான்கு முளம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அது உள்ளும், புறமும் தங்கத்தினால் ஆனதாகும்.
மகாமு இப்ராஹீம்
இப்ராஹீம் அலை) அவர்கள் புனித கஃபாவைக் கட்டிய போது ஒரு தூரத்தை அடைகின்றார்கள். அப்போது தனது மகன் ஒரு கல்லைக் கொண்டு கொடுக்கின்றார். அவர்கள் அதன் மீது நின்றவாறு தனது கட்டுமானப்பணியை முடித்தார்கள். அதனால் இதற்கு மகாமு இப்ராஹீம் -இப்ராஹீம் நின்ற இடம்- என்ற பொருள் வந்தது.
பீ.ஜே. என்பவர் இதற்கு மாற்றமாக இப்ராஹீம் நபியின் வீட்டைத்தான் அது குறிக்கும் என்று எழுதியுள்ளார். அது முற்றிலும் முரண்பட்ட விளக்கமாகும். ஏனெனில் அல்லாஹ் அங்கு மகாமு இப்ராஹீம் என்ற அத்தாட்சியை அத்தாட்சிகளில் ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளான். அதன் அர்த்தம்தான் என்ன ! புகாரியில் வருகின்ற அறிவிப்பின்படி
இஸ்மாயீல் (அலை) அவர்கள் கல்லைக் கொண்டுவர, இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டுவார்கள், கட்டிடம் உயர்ந்ததும், இந்தக்கல்லைக் அவர் (இஸ்மாயீல்) கொண்டு வந்து, அவரு(இப்ராஹீ)க்காக வைத்தார், அவர்கள் அதன் மீது நின்றவர்களாக கட்டுவார்கள், இஸ்மாயில் கல்லைப் பரிமாறுவார்.(புகாரி-3366) .
அதில் جاء بهذا الحجر- فقام عليه இந்தக்கல்லை அவர் கொண்டு வந்தார், இப்ராஹீம் (அலை) அவர்கள் அதன் மீதேறி நிற்பார்கள். என தெளிவாக இடம் பெற்றுள்ளதை ஆதாரமாகக் கொண்டே ‘ மகாமு இப்ராஹீம்’ என்பது, ‘இப்ராஹீம் (அலை) அவர்கள் நின்ற இடம் என்ற சரியான பொருளில் அழைக்கப்பட்டது. அந்தக்கல் தவாஃப் செய்வோருக்கு இடைஞ்சலாக இருப்பதைக் கவனத்தில் கொண்டு உமர் (ரழி) அவர்கள் இப்போதிருக்கும் இடத்தில் நகர்த்தி வைத்தார்கள் என்பது சிறு பிள்ளைக்கும் தெரிந்த வரலாறாகும்.
ஜம்ஜம் நீரூற்று
இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது மனைவி ஹாஜர் (ரழி) அவர்களையும், அவர்களின் முதலாவது மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களையும் அல்லாஹ்வின் உத்திவரின் பேரில் புனித கஃபாவின் பள்ளத்தாக்கில் ஒரு மரத்தடியில் விட்டுவிட்டுப் பிரிந்தார்கள். அவர்களிடம் இருந்த தண்ணீpர் முடிந்த போது பக்கமாக உள்ளஸஃபா, மர்வா என்ற இரு சிறுமலைகளுக்கும் இடையில் தண்ணீர் தேடி ஓடினார்கள். மலை மீதேறி வழிப்பயணிகள் யாரிடமாவது தண்ணீர் உதவி வேண்டுவது அவர்களின் நோக்கமாக இருந்தது. இறுதியாக அல்லாஹ் வானவர் ஜிப்ரீல் அவர்களை அனுப்பி அவர்களின் இறக்கையினால் நிலத்தில் அடித்து தண்ணீர் பீறிட்டுப்பாயச் செய்தான். இதுவே உண்மையான வரலாறு. இஸ்மாயீல் நபியின் காலின் பாதம் பட்டதனால் ஜம்ஜம் நீரூற்று வந்தாகக் கூறுவது கற்பனைக் கதையாகும். இந்த அதிசயக் கிணற்றில் இருந்து லெட்சோபக்கணக்கான லீட்டர்கள் நாளாந்தம் அள்ளப்படுகின்றன. அதில் எவ்வித குறைவும் ஏற்பட்டதில்லை. அல்லாஹு அக்பர்.
கஃ.பாவின் ஆடை:
ஆரம்ப காலம் கஃபாவின் மீது முதல் ஆடை போடப்பட்டு வந்திருக்கின்றது என்பது வரலாறு. அதன் தொடரில் தற்போதைய சவூதியின் ஆட்சியில் அது பாரிய விஸ்தரிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
சவூதி மன்னர்களில் ஒருவரான அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் இரு ஹரம் தொடர்பான விவகாரங்களில் கூடுதல் அக்கறை காட்டினார்கள். ஹி. 1346-ல் முஹர்ரம் மாதத்தின் ஆரம்பத்தில் புனித கஃபாவின் ஆடை தயாரிப்பிற்காக ஒரு இடத்தை நிறுவும்படி பணித்தார்கள். அதற்கமைவாக தனியான நெசவு உற்பத்தி நிலையம் ஒன்று அவர்களின் ஆட்சியில் திறக்கப்பட்டது. சவூதி அரசின் முதலாவது ஆடை உம்முல் குராவில் உற்பத்தி செய்யப்பட்டது. இவ்வாறு ஹி. 1357 வரை நடைமுறையில் இருந்து வந்தது.
இதில் சிறந்த தொழில் நுட்பம் பேணப்பட வேண்டும் என்றதற்காக பைஸல் பின் அப்தில் அஸீஸ் என்ற மன்னர் ஹி.1382ல் கஃபாவின் ஆடைக்கென மற்றொரு புதிய தனியான தொழிற்சாலை ஒன்றை நிறுவும் படி கொடுத்த பணிப்புரைக்கு அமைவாக ஹி. 1397ல் உலகில் அதி நவீன கருவிகளைக் கொண்ட கஃபா ஆடை உற்பத்தி நிலையம் திறக்கப்பட்டது. இதன் தொழில் நுட்பத்திறண் மக்கள் மனதைக் கொள்ளை கொள்ளக் கூடியதாகும். கஃபாவின் ஆடை வருடத்திற்கு ஒரு முறை மாற்றப்படுகின்றது.
கஃபா தொடர்பான இன்னும் பல வரலாற்று நிகழ்வுகளும், சின்னங்களும் உள்ளன. விரிவை அஞ்சி தவிர்த்துள்ளோம். இவ்வாறு பல சிறப்புகளையும், வராற்றுச்சின்னங்களையும் உள்ளடஙக்கப் பெற்றதுதான் இந்தப் புனித பள்ளிவாசல். அங்கு சென்று ஹஜ், உம்ரா செய்யும் பாக்கியம் பெற அல்லாஹ் அனைவருக்கும் நற்பாக்கியம் தருவானாக!

உயில் எழுதுவதற்கு முன்பு மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.

குடும்பத்திற்கு உணவளித்து வந்த முக்கிய நபர் அல்லது பாதுகாவலர் இறந்த பிறகு குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்படும் சண்டை சொத்து சம்பந்தமானதா...

Popular Posts