லேபிள்கள்

ஞாயிறு, 29 நவம்பர், 2026

சோளக்கதிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா .?

மக்காச்சோளம் என்று அழைக்கப்படும் சோளம் தமிழகத்தில் கிராமங்களில் பயிரிடப்பட்டு தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது..சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் கனமழை காலத்தில் கையில் பணம் இருந்தாலும் அரிசி கிடைக்காது..அப்போதைய மக்களின் உணவுப்பொருள் சோளம்தான்.ஒரு ரூபாய் கொடுத்தால் 20 கதிர்கள் கொடுப்பார்கள்..ஒரு கிலோ அரிசி 75 பைசா..மரவ்ள்ளிக்கிழங்கு 5 கிலோ ஒரு ரூபாய்..அந்தக்காலம் இனி திரும்ப போவதில்லை..இந்த சோளத்தை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்.

பசிமட்டும்தானே தீரும் என நினைத்து விடாதீர்கள்..நோயை போக்கும் ஆற்றலும் சோளத்திற்கு உண்டு..மூல வியாதி,வயிற்றுப்போக்கு,வயிற்று பொறுமல் உள்ளவர்கள் சோளத்தை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிட்டு வந்தால் மேற்கு கண்ட பிரச்சனைகள் தீரும்.சோளத்தில் தாயாமின் மற்றும் நியாசின் சத்துக்கள் அடங்கி உள்ளன. இந்த தயாமின் சத்து நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும்..நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள்,மன நோய் உள்ளவர்கள் சோளத்தை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிட்டு வந்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்..இதில் உள்ள நியாசின் சத்து பெல்லாக்ரா என்ற நோயை கட்டுப்படுத்தும்..பெல்லாக்ரா என்பது வயிற்றுப்போக்கு,மறதி நோய்,தோல் நோய் ஆகியவை ஒரே நேரத்தில் வருவதாகும்..

சோளத்தில்மக்னீசியம்,பாஸ்பரஸ்,இரும்பு,செம்பு,மாங்கனிசு,பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் அடங்கி உள்ளன..இதனால் இரத்த சோகை உள்ளவர்கள்,இதய நோய் உள்ளவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்..இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து இதயத்தை நன்றாக இயங்க வைக்கும்..இரத்த சோகை நோய் தீரும்..மெலிந்த தேகம் கொண்டவர்கள் சோளத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமனாகும்..உடல் பருமன் உடையவர்கள் கொஞ்சமாக சாப்பிடலாம்..

சர்க்கரை வியாதி உடையவர்கள் குறைவாக சாப்பிட்டால் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்..ஆனால் அதிகமாக சாப்பிடக்கூடாது..முகத்தில் பருக்கள்,வடுக்கள்,எண்ணெய் வழிதல் பிரச்சனை உள்ளவர்கள் சோள மாவை தண்ணீர் அல்லது பாலில் குழைத்து முகத்தில் பூசி ஒரு மணி நேரம் கழித்து கழுகி வர சரியாகி விடும்..ஆனால் பிரச்சனை சரியாகும் வரை செய்ய வேண்டும்..சமையலில் சோள எண்ணெய்யை பயன்படுத்துவது நல்லது..நல்ல சுவையும் உடல் ஆரோக்கியமும் கொடுக்கும்..புற்று நோயை தடுக்கும் ஆற்றல் சோளத்திற்கு உண்டு..புற்று நோயின் அறிகுறி உள்ளவர்கள் அல்லது அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சோளத்தை சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்..எங்கும் எளிதாக கிடைக்கும் சோளம்..மக்களின் அதிக பயன்பாட்டால் விலை சற்று அதிகமாகி உள்ளது..

இதில் மரபணு மாற்றப்பட்ட Sweet Corn என்னும் வகையும் சந்தையில் எளிதாக கிடைக்கிறது..சினிமா தியேட்டர்,ஷாப்பிங் மால்கள்,பேக்கரிகள், சாலையோர கடைகள்,கடற்கரை எங்கு பார்த்தாலும் சோளப்பொரி என்னும் பாப்கார்ன் விற்கப்படுகிறது..அதனையும் வாங்கி சாப்பிடலாம்..இருந்தாலும் புத்தம்புதிய சோளத்தை வாங்கி சமையலிலும் பயன்படுத்தலாம் அல்லது வேகவைத்தும் சாப்பிடலாம்..உடல் நலத்தில் அக்கரை காட்டும் அனைத்து அன்பர்களும் வாரத்தில் ஒரு நாளாவது சோளத்தை சாப்பிடுங்கள்..குழந்தைகளுக்கும் சாப்பிடக் கொடுங்கள்.



--

கருத்துகள் இல்லை:

சோளக்கதிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா .?

மக்காச்சோளம் என்று அழைக்கப்படும் சோளம் தமிழகத்தில் கிராமங்களில் பயிரிடப்பட்டு தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது..சுமார் 30 ஆண்...

Popular Posts