லேபிள்கள்

திங்கள், 23 ஜூன், 2025

எலுமிச்சை மீது வாகனம் ஏற்றுவது ஏன்? அதன் பின்னர் உள்ள அறிவியல் என்ன?

அதேபோன்று நாம் ஏதாவது ஒரு வண்டி எடுத்தால் அதன் டயர் கீழ் எலுமிச்சை பழத்தை வைத்து ஏற்றுவது வழக்கமான ஒன்று. ஆனால் அவ்வாறு ஏன் செய்கிறார்கள் என்று நமக்கு தெரியாத ஒன்றாகும். எலுமிச்சை பழத்தில் பல நற்குணங்கள் இருக்கிறது.

குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் கைகளில் எலுமிச்சைபழத்தை வைத்து கொண்டால் கையுறைகள் போட்டுக் கொண்டதற்கு இணையானது என்று கூறப்படுகிறது. மேலும் அது இயற்கை hand sanitizer ஆக விளங்குகிறது. ஏனென்றால் எலுமிச்சை பழத்தில் அவ்வளவு நன்மைகள் இருக்கிறது. அந்தக் காலத்தில் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி உண்டு. இந்த மாடு மற்றும் குதிரை கல், மண், சேறு மேல் எல்லாம் நடந்து செல்கிறது.

அவ்வாறு நடக்கும்போது மாடு மற்றும் குதிரை கால் பாதத்தின் நடுவில் புண் ஏற்படும். அந்த புண் மேல் சேறு, சகதிகள் படும்போது புழு பூச்சிகள் அரிக்கும். அவ்வாறு மாடு, குதிரை காலில் பூச்சிகள் அரித்தால் வண்டி ஓடாது. இதனால் வண்டி நன்றாக ஓடவேண்டும் என்பதற்காக மாடு மற்றும் குதிரையை இந்த எலுமிச்சை பழத்தின் மேல் மிதிக்க வைப்பார்கள். அப்போது இந்த பழத்தில் உள்ள சிட்ரிக் அந்தப் புண்ணில் உள்ள பாக்டீரியாவை கொன்று விடும். நம் பெரியவர்கள் பொதுவாக வண்டியை எலுமிச்சை பழத்தின் மீது ஏற்று என்று கூறினார்கள். நாமும் அதே போன்று இன்று வரைக்கும் அவ்வாறு செய்து வருகிறோம்.



--

கருத்துகள் இல்லை:

ரூபாய் நோட்டுகளில்சாய்வான கோடுகள் எதற்காக என்று தெரியுமா?

பழைய மற்றும் புதிய நோட்டுகளில் Window Threat அப்படி என்கிற ஒரு லைட் அடிக்கிற மாதிரியான ஒரு கோட...

Popular Posts