வெயிலுக்கே உண்டான சில பாதக அம்சங்கள் எப்போதும் இருக்கும்.
அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் எடுத்து தான் தீர வேண்டும்.
வெயில் காலங்களில் கண்டிப்பாக நாம் செய்யவே கூடாதவை என சிலவும், செய்தே தீர வேண்டியவை என சிலவும் உள்ளன. அதைப் பற்றி பார்ப்போமா?
செய்ய வேண்டியவை:
வெயில் காலங்களில் உணவுப் பொருட்கள் சீக்கிரம் கெட்டு விடும். அதனால் பெரும்பாலும் கடையில் வாங்கும் உணவு வகைகளை தவிர்த்து விட்டு, வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிட்டால் உணவினால் உண்டாகக்கூடிய உடல் உபாதைகளை தவிர்க்கலாம்.
மேலும் அதிக நீர்ச்சத்துடைய பழங்களையும், காய்கறிகளையும் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தண்ணீர் அருந்த மறக்காதீர்கள். எங்கே செல்வதாக இருந்தாலும் கையோடு வாட்டர் பாட்டில் எடுத்துச் செல்ல மறக்காதீர்கள்.
வெயில் காலமென்றால் ஒரு நாளில் இரண்டு வேளை குளிக்க வேண்டும். உடலை சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது, சத்தான உணவை தேர்ந்தெடுத்து உண்பதற்கு சமம்.
வெயில் காலத்தில் கூடுமான வரை வெளிர் நிறங்களில் உள்ள தளர்வான காட்டன் மற்றும் லினன் ஆடைகளைப் பயன்படுத்துங்கள்.
ஏனெனில், அடர் நிறங்கள் சூரியக் கதிர்களை அப்படியே உள்வாங்கி சூட்டைக் கிளப்பும். வெளிர் நிறங்களே சூரிய வெப்பத்தை உள்வாங்காமல் பிரதிபலிக்கும். எனவே வெயிலுக்கு வெளிர் நிறங்களே ஏற்றவை.
செய்யக்கூடாதவை:
வெயிலில் தாகமெடுக்கிறதே என்று, மறந்தும் அசுத்தமான குடிநீரை குடித்து விடாதீர்கள்.
அதேபோல சாலையோரங்களில் சுகாதாரமற்று சமைக்கப்படும் உணவுகளையும் வாங்கி சாப்பிடக்கூடாது.
மதிய வெயிலில் வெளியே செல்ல வேண்டியதாக இருந்தால் குடை பயன்படுத்துங்கள். வெயிலின் தாக்கம் அதிகமுள்ள மதிய நேரங்களில், நேரடியாக வெப்பம் உச்சந்தலையில் இறங்கும்படியாக வெளியே செல்லக்கூடாது.
இனிப்பான குளிர்பானங்கள் தாகத்தை அதிகரிக்கக்கூடியவை. எனவே அவற்றைத் தவிர்த்து விட்டு பதிலாக அடிக்கடி தண்ணீர் குடிக்கலாம்.
அதே போல சத்தான சாலட்டுகளை அதிகம் எடுத்துக் கொண்டு ஃபாஸ்ட் ஃபுட் வகைகளை ஓரம் கட்ட வேண்டும்.
வெயில் காலங்களில் ஃபுட் பாய்ஸனிங் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் அதிகம், எனவே வீடுகளில் எஞ்சிய உணவுகளை, மறுநாள் உண்ணும் பழக்கத்தை விடுங்கள்.
--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக