லேபிள்கள்

சனி, 3 மே, 2025

சிறுநீரகத்தை பாதிக்கும் பழக்கங்கள்.

உடலின் 'கழிவுத் தொழிற்சாலை' என்று அழைக்கப்படும் சிறுநீரகங்கள் நம் வயிற்றின் பின்பக்கம் கீழ் முதுகுப் பகுதியில் முதுகுத்தண்டின் இருபுறமும் அவரை விதை வடிவத்தில் அமைந்துள்ளன.

ஒவ்வொன்றிலும் பத்து லட்சம் நெப்ரான்கள் உள்ளன. நெப்ரான்கள் என்பவை ரத்தத்திலிருந்து கழிவுகளைப் பிரித்து சிறுநீர் மூலம் வெளியேற்றுகின்ற நுண்ணிய முடிச்சுகள். வீட்டுக்குக் கழிவறை எப்படி முக்கியமோ அதுமாதிரி நம் உடலுக்குச் சிறுநீரகம் முக்கியம்.

இதயத்திலிருந்து வெளியாகும் ரத்தத்தில் 25 சதவீதம் வரை சிறுநீரகம் பெறுகிறது. அதிலிருந்து உடலுக்குத் தேவையான குளுக்கோஸ், அமினோ அமிலம், வைட்டமின்கள், ஹார்மோன்கள் போன்றவற்றைத் தேக்கிவைத்துக்கொண்டு தேவையற்ற யூரியா, குளோரைடு போன்ற கழிவுப்பொருள்களைப் பிரித்தெடுத்து வெளியேற்றும் முக்கியமான பணியைச் சிறுநீரகம் செய்கிறது.

உங்கள் சிறுநீரகங்களுக்கு பெருமளவில் பாதிக்கும் 8 பொதுவான பழக்கங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது:

1. அதிகப்படியான வலி நிவாரணிகள்: வலி நிவாரணிகள் அதாவது ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (NSAID) வலியைக் குறைக்க உதவுகின்றன. ஆனால் அது உங்கள் சிறுநீரகங்களையும் சேதப்படுத்தும். அதனால் நீங்கள் வலி நிவாரணிகளை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

2. கூடுதல் உப்பை எடுத்துக்கொள்வது: உப்பு அல்லது சோடியம் அதிகம் உள்ள உணவுகள் இரத்த அழுத்த அளவை அதிகரிப்பது மட்டுமல்லாமல் உங்கள் சிறுநீரகத்தையும் பாதிக்கும். அதற்கு பதிலாக நீங்கள் உங்கள் உணவின் சுவையை அதிகரிக்கும் மற்ற மசாலாப் பொருட்களை சேர்க்கலாம்.

3. பதப்படுத்தப்பட்ட உணவுகள்: பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சோடியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. உங்களுக்கு சிறுநீரக பிரச்சினைகள் இருந்தால் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.

4. போதுமான தண்ணீர் குடிக்காதது: தண்ணீர் அதிகம் குடிப்பது உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இது சிறுநீரக கற்கள் உருவாவதையும் தடுக்கிறது. சிறுநீரக நோய்களிலிருந்து தப்பிக்க 3-4 லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

5. தூக்கமின்மை: தூக்கம் உங்கள் உடலை புத்துயிர் பெற உதவுகிறது. உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு தூக்கம் முக்கியம். 24 நேரம் வேலை செய்யும் சிறுநீரகத்தின் பணிச்சுமையை ஒருங்கிணைக்க சரியான அளவிலான தூக்கம் பெரிதும் உதவுகிறது

6. கூடுதல் ஸ்பூன் சர்க்கரை: உணவில் அதிக சர்க்கரை நீரிழிவு, உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும், இது உங்கள் சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கும்.

7. புகைபிடிப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்: புகைப்பிடிப்பவர்கள் சிறுநீரில் புரதம் இருக்கலாம். இது சிறுநீரக பாதிக்கப்பட்டதன் அறிகுறியாகும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்

8. ஆல்கஹால்: அதிகப்படியான குடிப்பழக்கம் நாள்பட்ட சிறுநீரக நோய்களுக்கும் வழிவகுக்கும் என்பதால் ஆல்கஹாலிலிருந்து, அதாவது மது அருந்துவதிலிருந்து விலகி இருங்கள்.



--

கருத்துகள் இல்லை:

சிறுநீரகத்தை பாதிக்கும் பழக்கங்கள்.

உடலின் ' கழிவுத் தொழிற்சாலை ' என்று அழைக்கப்படும் சிறுநீரகங்கள் நம் வயிற்றின் பின்பக்கம் கீழ் முதுகுப் பகுதியில் முதுகுத்தண்டி...

Popular Posts