லேபிள்கள்

வியாழன், 9 பிப்ரவரி, 2023

டீ பேக்குகளை பயன்படுத்தி சில எளிய அழகு குறிப்புகள்...!!



டீ பேக்குகளின் மிகவும் பொதுவான அழகு பயன்பாடுகளில் ஒன்று, கண்களின் வீக்கத்தை குறைப்பதாகும்.

டீயில் உள்ள காஃபின் இரத்த நாளங்களை சுருக்க உதவுகிறது. அதனால் இது வீக்கத்தைக் குறைக்கிறது. இதற்கு பிளாக் டீ அல்லது க்ரீன் டீ என எந்த டீ பேக்கை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

பிளாக் சர்கிள்ஸ் எனப்படும் கண்களை சுற்றி கானப்படும் கரு வளையத்தை அகற்றவும் பிளாக் டீ அல்லது க்ரீன் டீ பேக்கை பயன்படுத்தலாம். இதனால் கண்  பகுதியைச் சுற்றியுள்ள இரத்த நாளங்களை சுருங்க உதவுகிறது.

க்ரீன் டீ தயார் செய்த பிறகு அந்த டீ பேக்கை குப்பைத் தொட்டியில் வீசாமல் அந்த டீ பையைத் திறந்து நாம் பயன்படுத்தும் ஃபேஸ் பேக்கில் அதன் டீ இலைகளைப் பயன்படுத்தலாம். கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கிறது. இது இறந்த தோல் செல்களை புதுப்பிக்க உதவுகிறது.

கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால் முடி வளர்ச்சிக்கு இவற்றை பயன்படுத்தலாம். கொதிக்கும் நீரில் ஒரு சில கிரீன் டீ பைகளைச் போட வேண்டும்.  பின்னர் அந்த டீயை ஆற வைத்து குளிர்ந்தவுடன், ஈரமான கூந்தலில் தடவ வேண்டும். பின்னர் 10 முதல் 15 நிமிடங்களுக்கு பிறகு நீரில் கூந்தலை அலச  வேண்டும்.

வெண்படல அல்லது கண் தொற்று இருப்பவர்கள், சம்பந்தப்பட்ட அந்த பகுதியில் குளிர்ந்த தேநீர் பைகளை கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம். இது வீக்கத்தையும், பாதிப்பையும் குறைக்கவும் உதவும்

https://tamil.webdunia.com/article/health-related-to-beauty/some-simple-beauty-tips-for-using-tea-bags-121062900094_1.html

--

கருத்துகள் இல்லை:

தரமான செங்கல்லைகண்டறிவது எப்படி? செங்கல் கட்டுமானத்தில் என்னசெய்யலாம்? என்ன செய்யக் கூடாது?

இன்று ஹாலோபிளாக் , கான்கிரீட் கல் , ஏஏசி கல் , போன்ற பல தரப்பட்ட கற்கள் வந்து விட்டாலும் , நம...

Popular Posts