லேபிள்கள்

திங்கள், 9 ஜனவரி, 2023

சிறுநீரக செயலிழப்பு எதனால் ஏற்படுகிறது தெரியுமா...?

 

ஒருவரின் ரத்தத்தில் எவ்வளவு கிரியாட்டினின் உள்ளது என்பதைப் பொருத்து அவருடைய சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மருத்துவர்கள் மதிப்பீடு செய்கின்றனர்

கிரியாட்டினின் உடலில் இருந்து வெளியேற்றப்படாவிட்டால் அதை சிறுநீரக செயலிழப்பு என்று சொல்கிறார்கள்

உடலில் கிரியாட்டினின் இருப்பது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். நம்முடைய உடல் ஆரோக்கியமாக இயக்க புரதச்சத்து மிகவும் அத்தியாவசியமானது. அளவுக்கு அதிகமான புரதச்சத்து கிரியாட்டினின் அளவை அதிகரிக்கச் செய்துவிடும். எனவே, இறைச்சி, சில வகையான பால் பொருட்களைத் தவிர்ப்பது  கிரியாட்டினின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும்.

நார்ச்சத்து மிக்க உணவுகள் செரிமானத்துக்கு உதவியாக இருக்கக் கூடியவை. தொடர்ந்து நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்து வருவது கிரியாட்டினின் அளவைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு, பயிறு வகைகளில் நார்ச்சத்து நிறைவாக உள்ளது.

போதுமான அளவு தண்ணீர் அருந்துவதும் கூட கிரியாட்டினின் அளவை அதிகரிக்கச் செய்துவிடும். நீரிழப்பு, குறைவான அளவில் தண்ணீர் அருந்துவது உடலில்  கிரியாட்டினின் அளவை அதிகரித்துவிடும். இதை வெளியேற்ற முடியாமல் சிறுநீரகங்கள் திணறும்

சிகரெட் பழக்கம், மது பழக்கம் போன்றவை கிரியாட்டினின் அளவை அதிகரித்துவிடும்.

உப்பு அளவைக் குறைப்பது கிரியாட்டினின் அளவைக் கட்டுப்படுத்த உதவும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், அப்பளம், ஊறுகாய் போன்றவற்றில் உப்பு அதிக அளவில்  உள்ளன. குறிப்பாக உப்பில் உள்ள சோடியம் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்திவிடும்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/do-you-know-what-causes-kidney-failure-121032000065_1.html


--

கருத்துகள் இல்லை:

லேப்டாப் டிஸ்ப்ளே, கீபோர்ட் சுத்தம் செய்வது எப்படி?

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் மிக அதிக நேரத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும் பொருள்களில் ஒன்று , மடிக்கணினி மற்றும் கணினி. ஆனா...

Popular Posts