லேபிள்கள்

திங்கள், 23 நவம்பர், 2020

பிரா - அறிய வேண்டிய உண்மைகள்


பெண்களின் எடுப்பான அழகுக்கு மேலும் மெருகூட்டுவது பிரா. இன்றைய இளம் பெண்களின் ரசனைக்கு ஏற்பவும், புதிதாய் திருமணம் ஆன ஆண்களின் ரசனைக்கு ஏற்பவும் பலவேறு டிசைன்கள், அளவுகளில் இப்போது பிராக்கள் விற்பனைக்கு வருகின்றன. சிறிய மார்பகத்தை எடுப்பாக காண்பிப்பது, தளர்ந்த மார்பகத்தை தாங்கி நிறுத்துவது, முன்னழகை இன்னும் கவர்ச்சிக்கரமாக காட்டுவது... என்று இன்றைய பிராவின் சேவை இளம்பெண்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது.

திருமணம் ஆகாத இன்றைய இளம் பெண்கள், தாங்கள் அணியும் பிரா சரியான சைஸ் கொண்டதுதானா? என்பதை பெற்றத் தாயிடம் கேட்கவே வெட்கப்படும் சூழ்நிலைதான் உள்ளது. ஆனால், திருமணம் ஆகிவிட்டால், கணவனின் ரசனைக்கு ஏற்ப மாறிவிடுகிறார்கள். மேலும், இன்றைய பெண்களில் பலர் சரியான சைஸ் பிராவை அணிவதில்லை. ஏதோ குத்துமதிப்பாக வாங்கி அணிந்து கொள்கிறார்கள். உள்ளே அணிவதை யார் பார்க்கப் போகிறார்கள் என்ற அவர்களது எண்ணம்தான் இதற்கு காரணம். இப்படி, தப்பு தப்பாக பிராவை அணிந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் தெரிந்து கொள்ள மறந்து விடுகிறர்கள்.

அதனால், என்னென்ன பிராக்கள் இன்றைய மார்க்கெட்டில் உள்ளன? எப்படி சரியான பிராவை தேர்வு செய்து அணிவது? சரியான அளவு தெரியாமல் அணிவது என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்?



- இதுபோன்ற கேள்விகளுக்கான விடையை இங்கே காண்போம்.

முதலில் என்னென்ன பிராக்கள் இப்போது மார்க்கெட்டில் வலம் வருகின்றன என்று பார்த்து விடுவோம்...

டி-சர்ட் பிரா
இன்றைய இளம்பெண்களில் பலர் டி-சர்ட், துப்பட்டா இல்லாத டாப்ஸ் ஆகியவற்றையே அணிந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள். வழக்கமாக அணியும் பிராவை அணிந்து கொண்டு டி-சர்ட் போட்டுக்கொண்டால், என்ன டிசைன் பிரா அணிந்து இருக்கிறோம், முதல் கொக்கியில் பிராவை மாட்டி இருக்கிறோமா அல்லது இரண்டாவது கொக்கியிலா? - இதுபோன்ற புள்ளிவிவரங்கள் பார்ப்பவர் கண்களுக்கு தெரிந்துவிடும். இந்த பிரச்சினையை போக்க வந்ததுதான் டி&சர்ட் பிரா. கப்பில் தையல் இல்லாமல் காணப்படும் இந்த பிராவை அணிந்துகொண்டால் நல்ல லுக் கிடைக்கும்.

டீன்-ஏஜ் பிரா
டீன் ஏஜின் (13 முதல் 19 வயது வரை) ஆரம்பத்தில்தான் மார்பகங்களின் வளர்ச்சி ஆரம்பமாகிறது. அந்தநேரத்தில், சரியான பிராவை தேர்வு செய்து அணிய வேண்டும். அந்த சரியான பிராதான் இது. எந்தவொரு பிட்டிங்கும், கப் ஷேப்பும் இல்லாமல் இருக்கும் இந்த பிராவை டீன்-ஏஜ் வயது பெண்கள் அணிந்து வந்தால் மார்பகங்களை இறுக்காமல் இருக்கும். பிரா அணிவது அவசியம் என்ற எண்ணமும் அவர்களிடம் உருவாக உதவும்.

புல் போர்ட் பிரா
வழக்கமாக எல்லாப் பெண்களும் அணியும் பிரா இதுதான். இந்த வகை பிரா வாங்கும் போது, பிராவின் கப் சைசானது மார்பகத்தை முழுவதுமாக மறைத்து, தாங்கிப் பிடிக்கிறதா என்று மட்டும் பார்த்துக் கொண்டால் போதுமானது.

நாவல்டி பிரா
திருமணத்தன்று பெண்கள் அணிவதற்கு உகந்த பிரா இது. பேப்ரிக், லெதர், லேஸ், சாட்டின் என்று பலவித மெட்டீரியல்களில் கிடைக்கும் இந்த பிராவை அணிந்தால் மென்மையான உணர்வை அனுபவிக்கலாம்.

ஸ்போர்ட்ஸ் பிரா
விளையாடும் போது அணிந்து கொள்ள ஏற்ற பிரா இது. இந்த வகை பிராவில் வழக்கமான பிராக்களில் தோள்பட்டையில் காணப்படும் ஸ்ட்ராப் இருக்காது. விளையாடும் போது உறுத்தலான உணர்வும் ஏற்படாது.

மெட்டர்னிட்டி பிரா
கருவுற்ற பெண்களுக்கான பிரத்யேக பிரா இது. கர்ப்பக் காலத்தில் ஒரு பெண்ணின் மார்பக அளவு அதிகரித்துக் கொண்டே வரும். அதற்கு ஏற்ற வகையில் இந்த பிராவும் விரிந்து கொடுக்கும்.

நர்சிங் பிரா
கைக்குழந்தை உள்ள பெண்களுக்கான பிரா இது. இதில், கப்பின் இணைப்பை மட்டும் உயர்த்தி விட்டு, குழந்தைக்குப் பால் கொடுத்து விடலாம்.

கன்வர்டபுள் பிரா
பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு என்றே உருவாக்கப்பட்டது இது. தோள்களை மறைக்காத மேற்கத்திய நவீன ரக ஆடைகளை அணிந்து கொள்ளும் போது இதை அணிந்து கொள்ளலாம்.

இப்படி பல வகைகள் பிராக்களில் உண்டு.

அடுத்ததாக, சிறிய மார்பகத்தை பெரிதாக்க, பெரிய மார்பகத்தை சிறிய மார்பகமாகக் காட்ட, தளர்ந்த மார்பகத்தை நார்மலாக்க உதவும் பிராக்கள்...

மினி மைஸர்
இவ்ளோ பெரியதாக இருக்கே... என்று தங்களது மார்பகத்தைப் பார்த்து வருந்தும் பெண்களுக்கு உதவும் பிரா இது. இது, மார்பகத்தை சற்று அழுத்தி அளவை சிறியது போன்று காட்டும். அவ்வளவுதான்.

பேடட் பிரா
அடுத்த பெண்களின் பெரிய மார்பகத்தைப் பார்த்து ஏங்கும் சின்ன மார்பகப் பெண்களின் ஏக்கத்தை தணிக்க உதவும் பிரா இது. சிறிய மார்பகத்தால் தாழ்வுமனப்பான்மைக்கு ஆளான ஒல்லி பெண்கள் இந்த பிராவை அணிந்து கொண்டால், தராளமாக நிமிர்ந்து நடக்கலாம். எங்களுக்கும் பெருசுதான்... என்று சொல்லாமல் சொல்லி வாலிபர்களை கிரங்க வைக்கலாம். உங்களது பிரா சைஸ் 30 என்றால், 32 சைஸ் பேடட் பிரா வாங்கி அணிய வேண்டும்.

புஷ் அப் பிரா
சில பெண்கள் பார்ப்பதற்கு கொழுக்மொழுக் என்று இருப்பார்கள். இவர்களது மார்பகமும் பெரியதாகவே இருக்கும். இப்படிப்பட்ட மார்பகம் கொண்டவர்களுக்கு சீக்கிரமே மார்பகம் தளர்ந்து போய்விடும். அவ்வாறு தளர்ந்து போன மார்பகத்தை நார்மலாக்க உதவுவது இந்த பிரா. இந்த பிராவின் அடிப் பாகத்தில் உள்ள ஜெல் நிரப்பப்பட்ட பேக், தளர்ந்த மார்பகங்களை சற்று நிமிர்த்த உதவுகிறது.

அண்டர் ஒயர் பிரா
இதுவும், புஷ் அப் பிராவைப் போன்று, தளர்ந்த மார்பகங்களுக்கு உதவுவதுதான். ஆனால், இதில் ஜெல் பேக் கிடையாது. இந்த வகை பிராவின் அடிப் பகுதியில் இருக்கும் ஒயர், தளர்ந்து போன மார்பகத்திற்கு கூடுதல் சப்போர்ட் கொடுக்கும். அவ்வளவே.

கியூட் வெட்டிங் பிரா
மேல்நாட்டு கிறிஸ்தவ திருமணங்களில் மணப்பெண், மார்பகத்திற்கு மேலே தோள் பகுதி முழுவதும் தெரியுமாறு விசேஷ ஆடை அணிந்திருப்பாள். அவ்வாறு ஆடை அணியும்போது இந்த வகை பிரா அணிவதுதான் பாதுகாப்பானது. இந்த பிரா பெரிய ஸ்ட்ராப்களுடன் இடுப்பு வரை நீண்டும் ஸ்லிப் போல இருக்கும். இந்தப் பிராவை அணிந்துகொண்டு க்ளோஸ் நெக் சுடிதாரோ, சல்வாரோ அணிந்து கொண்டால், அவ்வளவு அழகாக இருக்கும். தோற்றமும் கவர்ச்சியாகத் தெரியும்.

மெசக்டமி பிரா
கேன்சர் காணமாக மார்பகங்களை பறிகொடுத்த பெண்களுக்கான பிரத்யேக பிரா இது. இதில், கப்களுக்குள் சிலிகான் ஜெல் பேக்குகள் இருக்கும். இதை அணிந்து கொண்டால், மார்பகம் இல்லை என்ற உணர்வே தெரியாது. அசல் மார்பகம் போன்ற தோற்றத்தையும், உணர்வையும் தரக்கூடியது இந்த பிராவின் தனிச்சிறப்பு. இந்த வகை பிராக்களை, ஆர்டர் செய்தால் மாத்திரமே வாங்க முடியும். விலை அதிகமாகவே இருக்கும்.

இனி, பிரா தொடர்பான சில சந்தேகங்களும், அதற்கான பதில்களும்...
கேள்வி:
 அணிந்து வருவது தவறான பிரா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

பதில்:
 உங்கள் உடலில் பிராவின் ஸ்ட்ராப் பதிந்த இடங்கள் சிவந்து போய் காணப்பட்டால் நீங்கள் அணிந்திருக்கும் பிரா இறுக்கமானது, அதாவது தவறான சைஸ் என்பதை தெரிந்து கொள்ளலாம். முதுகு பக்கம் உள்ள ஸ்ட்ராப் ஒரே இடத்தில் இருக்காமல் மேலே ஏறிக்கொண்டு வந்தாலும் நீங்கள் சரியான பிராவை அணியவில்லை என்று அர்த்தம். மார்பகத்தின் அளவைவிட, பிராவின் கப் சைஸ் சிறிதாக இருந்தால் மார்பகம் ஒன்றின் மேல் ஒன்று இருப்பது போல் இரண்டாகத் தோன்றும். அதனால், இதுவும் தவறான சைஸ் பிராதான்.

கேள்வி:
 மார்பகங்களின் கீழே கறுப்பாக உள்ளது. ஏன் இப்படி ஏற்படுகிறது?

பதில்:
 தவறான சைஸ் பிராவை அணிந்தால் இந்த பிரச்சினை வரும். அணியும் பிராவின் சைஸை மாற்றுவதுதான் இதற்கு சரியான தீர்வு.

கேள்வி:
 கொழுக்மொழுக் என்று உள்ள பெண்கள் (36 சைஸ் உள்ளவர்கள்) எலாஸ்டி' ஸ்ட்ராப் வைத்த பிரா அணியலாமா?

பதில்:
 நிச்சயம் அணியக் கூடாது. உங்களது மார்பகம் இன்னும் தளர்வடையவே இது வழி வகுக்கும்.
கேள்வி: முதுகுவலி வர பிராவும் காரணமாக இருக்கலாமா?

பதில்:
 கண்டிப்பாக. தோள் பட்டை வலி, முதுகு வலி வந்தால், உங்கள் பிரா சைஸ் சரியானதுதானா என்பதை உறுதி செய்யுங்கள். சரியில்லை என்றால், சரியானதை தேர்வு செய்யுங்கள். இல்லையென்றால், டாக்டரிடம் செல்லுங்கள்.

கேள்வி:
 கறுப்பு ஆடைக்கு ஒயிட் பிரா அணியலாமா?

பதில்:
 இது தவறான அணுகுமுறை. கறுப்பு ஆடைக்கு ஒயிட் பிராவும், வெள்ளை நிற ஆடைக்கு கறுப்பு நிற பிராவும் அணிந்தால், அந்த பிரா பளிச்சென்று பிறருக்கு தெரியும். அதனால், பிளாக், ஒயிட் பிராக்களுடன் ஸ்கின் கலர் பிராவையும் வாங்கி வைத்து, அணியும் ஆடைக்கு ஏற்ப மாற்றி மாற்றி அணிந்து அழகு பாருங்கள். புதிதாய் திருமணம் ஆனவர்களுக்கு என்றே கவர்ச்சியான விதவிதமான கலர்களில் பிராக்கள் கிடைக்கின்றன. அவர்கள் அதை அணிந்து என்ஜாய் பண்ணலாம். இளம்பெண்கள் விரும்பினால், இந்த வகை பலர் பிராக்களை அணிந்து அழக பார்க்கலாம்.

கேள்வி:
 இரவில் பிரா இல்லாமல் தூங்கலாமா?

பதில்:
 பெரும்பாலான பெண்களுக்கு இந்த சந்தேகம் உள்ளது. இரவில் பிரா அணியலாமா? வேண்டாமா? என்பது உங்கள் சவுகரியத்தைப் பொறுத்ததுதான். 34 மற்றும் அதற்கு மேற்பட்ட அளவுகளில் மார்பகம் கொண்ட பெண்களுக்கு, கனமான மார்பகத்தால் அவை தளர்ந்துபோய்தான் இருக்கும். இவர்கள் பிராவுடன் உறங்குவதே நல்லது. அதை விட்டுவிட்டு, பிரா இன்றி உறங்கினால் மார்பகம் இன்னும் தளர்ந்து போய்விடும். சில பெண்கள், பகல் முழுவதும் பிரா அணிந்திருப்பதால், இரவில் அதை கழற்றி விடலாமே என்று எண்ணுவார்கள். அப்படிப்பட்டவர்கள் வேண்டுமானால் பிராவை கழற்றி வைத்துவிடலாம். சிறிய மார்பகம் உள்ளவர்கள் இரவில் பிரா அணிய வேண்டும் என்கிற அவசியமே இல்லை. அணிந்தாலும் பிரச்சினை இல்லை.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

ஹேண்ட் பேக்கால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்... பெண்களே கவனம்!

தற்போதுள்ள வாழ்க்கை முறையில் பெண்கள் எங்கு சென்றாலும் கைப்பையை தங்களுடன் எடுத்து செல்கின்றனர். பல்வேறு வகைகளில் தயார் செய்யப்படும் கைப...

Popular Posts