லேபிள்கள்

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

லஞ்ச_ஒழிப்புப்_புகார்_அளிப்பது_ #எப்படி.?

லஞ்ச ஒழிப்பு துறை அமைப்பானது, முற்றிலும், சென்னையில் தலைமைச்செயலகத்தில் இயங்கி வரும் CHIEF SECRETARY அந்தஸ்த்தில் உள்ள VIGILANCE COMMISSIONER- அவர்களின் கட்டுப்பாட்டிலும்,
சென்னை ஆலந்தூரில் உள்ள DGP அல்லது ADDL.DGP அந்தஸ்த்தில் உள்ள,ஒரு மூத்த IPS அதிகாரியின் தலைமையில் இயங்கிவரும்,DVAC என்றழைக்கப்படும் *Directorate of Vigilance and Anti-Corruption* என்ற இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டிலும் மட்டும்தான் செயல்படுகின்றனர்.
லஞ்ச ஒழிப்புச்சட்டம்-என்று அழைக்கப்படும் PREVENTION OF CORRUPTION ACT 1988- பிரிவு-2 பிரகாரம், அரசுப்பணியில் உள்ள அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, மக்களால் பொதுப்பணிக்கென தேர்ந்தெடுக்கப்படும், பஞ்சாயத்துப் போர்டு தலைவர், வார்டு உறுப்பினர்கள், நகரம், மாவட்டம் மற்றும் முனிசிபல் கவுன்சிலர்கள், சேர்மேன் மற்றும் அரசு நிர்வாகத்தில் உள்ள அனைத்து மக்கள் பிரதிநிதிகளும்- PUBLIC SERVANTS என்ற வரையரறைக்கு, உட்பட்டவர்கள்தான்.
*லஞ்சத்தில் பலவகைகள் உண்டு*
*#எப்படி_புகார்_அளிப்பது*
லஞ்சம்கொடுத்தால்தான் வாயையே தொறப்பேன் என்று செயல் படும் சில Corruptive Officials மீது பொறிவைப்பு நடவடிக்கை வேண்டுவோர், அந்தந்த மாவட்ட தலைநகரில் ஒரு டி.எஸ்.பி தலைமையில் செயல் படும் லஞ்ச ஒழிப்பு பிரிவிற்கு நேரில் சென்று விபரம் கூறினால் போதும். பொறி வைத்து முடித்து, அந்த லஞ்ச அதிகாரிகளை கைதுசெய்யும் வரை அவர்களே உடனிருந்து செயல் படுவார்கள்.
பொதுமக்கள் தாங்கள் அவ்வாறு புகார் அளித்தால், நம் அரசு வேலையை முடித்துக் கொடுக்க மாட்டார்களே என்று கவலைப்பட வேண்டாம். பொறிவைப்பு நடவடிக்கை முடிந்ததும், அந்த வேலையை செய்து கொடுக்க, லஞ்ச ஒழிப்பு போலீஸாரே உரிய உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு,ஆவன செய்து கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே அரசு உத்தரவிட்டுள்ளது.
இதில், பொறிவைப்பு நடவடிக்கை போல உடனடி கைது இல்லாவிட்டாலும், சம்பந்தப்பட்ட லஞ்சப்பேர்வழி காலப்போக்கில் சட்னியாகிவிடுவார்.
*விஜிலன்ஸ் கமிஷனர் மற்றும் DVAC- முகவரிகள்*
1) Vigilance Commissioner
Personnel and Administrative Reforms Department Secretariat, Chennai 600 009 PBX No. 044-25665566
(2)The Director,
Vigilance and Anti-Corruption,
293,MKN Road, Collectors Nagar, Alandur,Chennai,Tamil Nadu-600016.
Chennai – 600 028.
Phone-044-22321090/22321085/ 22310989/
22342142
E-mail: dvac@nic.in
மத்திய அரசுப்பணியில் உள்ளவர்கள் மீது லஞ்சப்புகார்களை அளிக்கும்பட்சத்தில், மாநில அரசுகட்டுப்பட்டில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடவடிக்கை எடுக்க முன்வர மாட்டார்கள்.
அப்புகார்களை கீழே அளிக்கப்பட்டுள்ள CBI-Anti-Corruption பிரிவிற்கு தொலைபேசி மூலம் தகவல் அளித்தாலே போதும். அவர்களேஉங்கள் இடத்திற்கு, உங்களைத்தேடி வந்து புகாரைப்பெற்று சம்பந்தப்பட்ட Corrupt Officer-மீது பொறிவைப்பு நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
Joint Director and Head of Zone,
III Floor, E.V.K., Sampath Building, College Road, Chennai 600006.
044-28232756 (Direct),
044-28272358(General),
044-28232755 (FAX)
09444446240
State of Tamil Nadu, Kerala & Pondicherry.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

பகலில் தூங்குவதால் ஏற்படும் விளைவுகள்.

தூங்குவதால் உடலுக்கு ஓய்வு கிடைத்து சோர்வு நீங்குகிறது. சிலருக்கு படுத்தவுடன் தூக் கம் கண்களை...

Popular Posts