லேபிள்கள்

வியாழன், 13 பிப்ரவரி, 2020

வழக்குகளில் சமரசம் செய்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?

ஏதோ ஒரு செயலினால் பாதிக்கப்பட்டவர், ஏதோ ஒரு வேகத்தில் எதிரி மீது குற்றம் சாட்டி, "ஒன்ன என்ன செய்றேன் பார்!" என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து விடுவார். ஆனால், வழக்கின் போக்கு, அதற்கு ஆகின்ற செலவு, வீண் அலைச்சல் மற்றும் அதனால் ஏற்படுகின்ற மன உளைச்சல் ஆகியவற்றைப் பார்த்துவிட்டு, "சமாதானமாக போய்விட்டால் என்ன?" என்று வாதி மற்றும் பிரதிவாதி ஆகிய இருவருமே ஒரு காலகட்டத்தில் நினைப்பதுண்டு. ஆனால், எல்லா வழக்கிலும் சமரசம் செய்துகொள்ள நீதிமன்றங்கள் அனுமதிப்பதில்லை. சில வழக்குகளில் குற்றவாளிக்கு தண்டணை வழங்கியே தீர வேண்டும்! என்று சட்டம் சொல்கிறது. சமரசம் செய்து கொள்ளும் குற்றங்கள் எந்த சட்டப்பிரிவுக்குட்பட்டவை? அதற்கு வழக்குத்தொடுத்தவரும், குற்றம் சாட்டப்பட்டவரும் என்ன செய்ய வேண்டும்? என்பதை கீழே காண்போம் வாருங்கள்.
சமரசம் செய்து கொள்ளும் குற்றங்கள்
சமரசம் செய்து கொள்ளும் குற்றங்களைப் (Compounding of Offences) பற்றி இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 298, 323, 324, 341, 342, 352, 355, 358, 426, 427, 447, 448, 491, 497, 498, 500, 501, 502, 504, 506 மற்றும் 508 ஆகியவற்றின் கீழ் அடங்கிய குற்றங்களின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த தரப்பினர்கள் சமாதானம் செய்து கொள்வதற்கு நீதிமன்றத்தில் முன் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. பாதிக்கப்பட்டவரும் எதிரிகளும் உள்ளூர் பெரியவர்களின் முன்னிலையில் ஆஜராகி, வழக்கை மேற்கொண்டு நடத்த வேண்டாமென்று முடிவு மேற்கொண்டு, எழுத்து மூலமாக ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தி, அதனைக் குறிப்பிட்டு நீதிமன்றத்தில் குற்ற விசாரணை முறை சட்டம் பிரிவு 320(1)ன் கீழ்மனுத்தாக்கல் செய்தாலே போதுமானதாகும். அந்த மனுவில் கண்டிப்பாக பாதிக்கப்பட்டவரும், அனைத்து எதிரிகளும் கையொப்பம் செய்திருக்க வேண்டும்.
நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பின்னர் சமரசம்
இந்திய தண்டணைச் சட்டத்தின் பிரிவுகள் 324, 325, 335, 337, 338, 343, 344, 346, 354, 357, 379, 381, 403, 406, 407, 408, 411, 414, 417, 418, 419, 420, 421, 422, 423, 424, 428, 429, 430, 451, 482, 483, 486, 494, 500 மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் சமரசம் செய்து கொள்வதாக இருந்தால் எந்த நீதிமன்றத்தில் வழக்கு நடக்கின்றதோ அந்த நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும்.
எந்த ஒரு வழக்கிலும் தீர்ப்பு சொன்ன பின்னரோ அல்லது ஒரு வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்ட பின்னரோ சமரசம் செய்து கொள்ள முடியாது.
நீதிமன்றம் என்ன செய்யும்?
சமரசத்தின் பொருட்டு மனுத்தாக்கல் செய்த பின்னர் நீதிபதி பாதிக்கப்பட்டவரை விசாரித்து அவர் வழக்கில் சமாதானமாக போக விரும்புவதை பதிவு செய்து கொண்டு எதிரிகளை அந்த வழக்கிலிருந்து விடுவிப்பார். பாதிக்கப்பட்டவர் 18 வயதுக்கு உட்பட்டவராக அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்தால் வழக்கை சமரசம் செய்து கொள்ள முடியாது.
அது போன்ற சூழ்நிலையில் அவர் சார்பில் தந்தை அல்லது தாய் அல்லது காப்பாளர் சமரசம் செய்து கொள்ளலாம்.
சமரசம் செய்ய முடியாத குற்றங்களில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் மூலம் உயர்நீதிமன்றமோ அல்லது அமர்வு நீதிமன்றமோ சமரசம் செய்து கொள்ள சம்பந்தப்பட்ட நபருக்கு குற்ற விசாரணை முறை சட்டம் பிரிவு 401ன் கீழ் அனுமதி வழங்கலாம்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

ஃபிரண்ட் லோடிங்வாஷிங் மெஷின், டாப் லோடிங் வாஷிங்மெஷின். இதில் எது சிறந்தது?

பொதுவாக நாம் வாஷிங் மெஷின் வாங்கும் போது நமக்கு ஏற்படுகின்ற மிக பெரிய குழப்பம் என்ன என்றால் ,...

Popular Posts