லேபிள்கள்

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

குளிர்காலத்தில் சளிக்கு இயற்கை மருத்துவம்

*அலர்ஜியால் திடீரென சளி பிடிக்கும். நாள்பட்ட சளியானது காசநோயாக மாறும். காய்ச்சலை உண்டாக்கும். அதிக சளியால் மூச்சு திணறல் உள்ளிட்ட* *பிரச்சினைகள் ஏற்படும். தூதுவளையை பயன்படுத்தி சளி பிரச்சினையை தீர்க்கும் மருந்து தயாரிக்கலாம். 10 தூதுவளை இலைகளை எடுக்கவும். இதனுடன், சிறிது முசுமுசுக்கை இலை* *பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சளி, இருமல் இல்லாமல் போகும்*
*சளி பிரச்சினைக்கு தூதுவளை மருந்தாகிறது. இது, உஷ்ணத்தை கொடுக்க கூடியது. உடலுக்கு பலத்தை தருகிறது. முசுமுசுக்கை சளியை போக்குகிறது. ஆயுளை அதிகரிக்கும் தன்மை* *கொண்டது. தூதுவளை, முசுமுசுக்கை பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வெள்ளெருக்கம் பூவை பயன்படுத்தி ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்து யாரிக்கலாம்*
*வெள்ளெருக்கம் பூவின் இதழ்களை நீர்விடாமல் பசையாக அரைத்து எடுக்கவும். இதனுடன் மிளகுப்பொடி சேர்க்கவும். 4 பங்கு பூவுக்கு ஒரு பங்கு மிளகு என்ற அளவில் எடுக்கவும். இதை நன்றாக கலந்து சுண்டைக்காய் அளவில் உருண்டைகளாக பிடிக்கவும். இது காய்ந்தவுடன் மிளகு அளவுக்கு கிடைக்கும். அன்றாடம் இருவேளை மிளகு அளவுக்கு சாப்பிடும்போது ஆஸ்மா சரியாகும்* *ஆஸ்துமாவுக்கு மிகவும் பாதுகாப்பான மருந்தாக வெள்ளெருக்கம் பூ விளங்குகிறது. ஒரு வெள்ளெருக்கம் பூவுடன் 5 மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டால் ஆஸ்துமா பிரச்சினை தீரும்*
*கடுகை பயன்படுத்தி வறட்டு இருமலுக்கான தேநீர் தயாரிக்கலாம். கால் ஸ்பூன் கடுகு எடுத்து லேசாக வறுக்கவும். இதை இடித்து எடுக்கவும். இந்த பொடியில் ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். வடிகட்டி தேன் சேர்த்து குடிப்பதால் சளி, காய்ச்சல், இருமல், உடல் வலி, கண்களில் நீர் வழிதல் போன்ற பிரச்சினைகள் இல்லாமல் போகும். இந்த தேநீரை 50 முதல் 100 மில்லி வரை குடிக்கலாம்*
*இருமலுக்கு கடுகு உன்னதமான மருந்தாகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட கடுகு காரம் மிக்கது, உடலுக்கு உஷ்ணத்தை தரக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. காய்ச்சலை தணிப்பதுடன் வலியை குறைக்கும்* *வீக்கத்தை கரைக்கிறது*

*ஆடாதொடை இலை முசுமுசுக்கை தூதுவளை கண்டங்கத்திரி துளசி இவை அளவும் சம அளவு சாறு எடுத்து சுக்கு மிளகு திப்பிலி அக்கிரகாரம் தாளிசபத்திரி குரோசானி ஓமம் வால் மிளகு வகைக்கு 10 கிராம் முறைப்படி கஷாயம் இட்டு கலந்து தயார் செய்து காலை இரவு 10 மில்லி சாப்பிட சளி இருமல் தும்மல் மூக்கடைப்பு இவைகள் அனைத்தும் தீரும் தாழ்மையுடன் அரும் நாகலிங்கம்*
*அருள் ஹெர்பல்ஸ் தயாரிப்பில்* *தீராத சளி இருமல் தும்மல் மூக்கடைப்பு சைனஸ் பிரச்சினையை தீர்க்கும் கசாயம்*
*தீராத சளி இருமல் அடுக்கு தும்மல் மூக்கடைப்பு சைனஸ் அலர்ஜி ஆஸ்த்துமா மிகவும் அதிசயமாக குணமாகிறது நுரையீரலில் சேர்ந்துள்ள* *கபத்தை வெளியேற்றும் அதிசய மூலிகை மருந்து . பரிபூரணமாக குணம் கிடைத்தது மூன்றே மாதத்தில் பத்தாண்டு கால நோய்* *குணமானது தேவைப்படுவோருக்கு கூரியரும் அனுப்பப்படும் யாம் பெற்ற நண்மை உலகம்* *பெற பகிர்வோம் நமக்கு பயன்படாவிட்டாலும் பிறருக்காக பயன்படும்*


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

தயிர் மற்றும் யோகர்ட் என்ன வித்தியாசம்? எது ஆரோக்கியமானது?

தயிர் மற்றும் யோகர்ட் இடையே உண்மையான வேறுபாடு உள்ளதா அல்லது இரண்டும் ஒன்றா ? நமது அன்றாட உணவின் ஒரு பகுதியாக இருக்கும் மிகவும் ஒத்த அத...

Popular Posts