லேபிள்கள்

திங்கள், 1 அக்டோபர், 2018

கோடை நோய்களை தவிர்க்க!

* வெயிலில் அலைவதால் தலையில் ஏற்படும் எண்ணெய் பிசுக்கை போக்க, கசகசாவை ஊற வைத்து, அரைத்து குளிக்கலாம். வடித்த அரிசி கஞ்சியை, வாரத்திற்கு ஒரிரு முறை தேய்த்து குளிப்பதும், பிசுபிசுப்பை நீக்கும். இரவு, விளக்கெண்ணையை உள்ளங்காலில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து குளிக்க, நல்ல தூக்கம் வரும்.

* கோடையின் முக்கிய பிரச்னை, 'டீ ஹைட்ரேட்' என, சொல்லப்படும், உடம்பின் நீர் வற்றுதல் தான். உடலில், நீர் சத்து குறையும் போது, சோர்வு ஏற்பட்டு, பல பிரச்னைகளை கொண்டு வரும். இதற்கு, இளநீர், பனை நுங்கு, முலாம்பழம், மாதுளம், வெள்ளரி பிஞ்சு, தர்பூசணி மற்றும் எலுமிச்சை ஜூஸ் அருந்தாலம்.

* விலாமிச்சை மற்றும் வெட்டி வேரை துணியில் கட்டி, மண் பானையிலுள்ள தண்ணீரில் போட்டு அருந்த, உடம்பு, குளிர்ச்சி அடையும். கிராமங்களில், விலாமிச்சை வேரை, தட்டி மாதிரி தயார் செய்து, தண்ணீர் தெளித்து வைப்பர். அந்த ஈரக்காற்று வீட்டிற்குள் இருக்கும் வெம்மையை தணிக்கும்.
பனை நுங்கிற்கு, உடலின் உள் மற்றும் வெளிச்சூட்டை தணிக்கும் சக்தி உள்ளது.

* இஞ்சி மற்றும் கல் உப்பு கலந்த மோர் சாப்பிட, கோடை காலத்தில் வரும் பித்த மயக்கம் போகும்.

* சூட்டை குறைக்க, வெள்ளரி் பிஞ்சில், உப்பு மற்றும் மிளகு சேர்த்து சாப்பிடலாம்.

* கோடை காலத்தில், நீர் காய்களான, பூசணி, பரங்கி, சுரைக்காய், பீர்க்கங்காய் மற்றும் கோவைக்காயை உணவில் அதிகம் சேர்க்கலாம்.

* சிலருக்கு, கோடையில் நீர்ச்சத்து வெளியேறி, மலச்சிக்கல் வரும். இவர்கள், கடுக்காய் தூளை, இளநீரில் கலந்து குடிக்கலாம். உலர் திராட்சை, சுக்கு,ரோஜா மொக்கு, இஞ்சி மற்றும் கடுக்காய் ஆகியவற்றை போட்டு, கஷாயம் செய்து சாப்பிட்டால், வெயில் கால மலச்சிக்கல் ஓடிப்போகும்.

* வெயிலில் அலைந்து திரும்பும் போது, வரும் தலைவலி பாடாய்ப்படுத்தும். இதற்கு, சந்தனக்கட்டை மற்றும் நெல்லி முள்ளி விழுதை, தனி தனியாக அரைத்து, இரண்டையும் கலந்து பத்து போட வேண்டும். ஏலக்காய் மற்றும் சீரகம் சேர்த்து அரைத்து, நெற்றியில் பற்று போட்டாலும், தலைவலி சரியாகும்.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

ஃபிரண்ட் லோடிங்வாஷிங் மெஷின், டாப் லோடிங் வாஷிங்மெஷின். இதில் எது சிறந்தது?

பொதுவாக நாம் வாஷிங் மெஷின் வாங்கும் போது நமக்கு ஏற்படுகின்ற மிக பெரிய குழப்பம் என்ன என்றால் ,...

Popular Posts