லேபிள்கள்

சனி, 9 ஆகஸ்ட், 2014

வெளுத்ததெல்லாம் பால் அல்ல!

வெளுத்ததெல்லாம் பால் அல்ல!

வெளுத்ததெல்லாம் பால் அல்ல ….பாலுக்குள் இருக்கும் பாய்சன் நாம் அறிந்து கொள்ள வேண்டிய அதிர்ச்சி தகவல்கள்
கால்நடைகளில் உங்களுக்குப் படிப்பினை உள்ளது. அதன் வயிற்றில் உள்ளதிலிருந்து உங்களுக்கு பருகத் தருகிறோம். அவற்றில் உங்களுக்கு ஏராளமான பயன்களும் உள்ளன. அவற்றை உண்ணுகின்றீர்கள்! அல் குர்ஆன் 23.21.
கால்நடைகளில் உங்களுக்குப் படிப் பினை உள்ளது. அதன் வயிறுகளில் உள்ள செறிக்கப்பட்ட உணவுக்கும், இரத்தத்திற்கும் இடைப்பட்ட நிலையில் தூய்மையான பாலை உங்களுக்குப் புகட்டுகிறோம். அருந்துவோருக்கு அது இனிமையானது. அல் குர்ஆன் 16.66.
அல்லாஹ் தன்னுடைய திரு மறை குர் ஆனில் இந்த மக்களுக்கு பயன் தரத்தக்க வகையில் கால் நடைகளிலிருந்து தூய்மையான பாலை தருவதாக வாக்களித்து அந்த பாலை ஒரு அற்புதமான முறையில் கால் நடைகளின் வயிற்றிலிருந்து உற்பத்தி செய்து கலப்படம் இல்லாமல் தருகிறான் அப்படிப்பட்ட கலப்பற்ற பால் ஒரு மனிதனுக்கு ஊட்டச்சத்துக்களில் புரோட்டீன், கால்சியம் ஆகியவை இன்றியமையாமையாதவையாக உள்ளன. இவைகள் பசும் பாலில் அதிகமாக காணப்படுகின்றது. கால்சியம் எலும்பு நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.பசும்பாலில் விட்டமின் ஏ, பி12, தையாமின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளது.
பசும்பாலில் தயாரிக்கப்படும் வெண்ணெய், நெய் போன்றவைகளில் கால்சியம் உள்ளதால் இது மனிதனின் தற்காப்பு சிஸ்டம் அதாவது IMMUNE SYSTEM-ஐ மேம்படுத்துகிறது. உறங்குவதற்கு முன் 1 கிளாஸ் பால் அருந்திவிட்டால் அழகிய தூக்கம் கூட வருகிறதாம்.
அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் கலப்பற்ற பால் என்று கூறுவதன் மூலம் அந்த பாலில் எப்படிப்பட்ட ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன என்பதை சிந்திக்க வலியுறுத்துகிறான் ஆனால் மனிதன் அந்த பாலில் மக்களின் உயிருக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை கலப்படம் செய்து விற்கிறான். இஸ்லாம் கலப்படத்தை வண்மையாக கண்டிக்கிறது!
அல்லாஹ் இந்த பூமியில் பிறக்கும் குழந்தைகளுக்கு அக்குழந்தையின் அன்னையின் மூலம் அற்புதமான தாய்ப்பாலை உருவாகச்செய்து கலப்படமில்லாமல் அப்படியே 2 வருடங்கள் குழந்தைக்கு புகட்டச்சொல்லி கட்டளையிடுகிறான். ஆனால் இன்றைய தாய் மார்கள் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டினால் தன்னுடைய அழகு குறைந்து விடும் என நினைத்து புட்டிப்பால் புகட்ட ஆரம்பித்து விட்டனர். இதன் காரணத்தினாலும், மக்களுடைய பால் நுகர்வு அதிகரித்துள்ளதாலும், தேவைக்கு ஏற்ப வழங்கலில் தட்டுப்பாடு வந்ததால் தனியார் பால் பதனிடும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டன. இதன் காரணத்தினால் கலப்படமும் அதிகரித்துள்ளது.
வெளுத்ததெல்லாம் பால் அல்ல.. கள்ளம் கபடம் அறியாத மனிதர்கள் யாரையும் சுலபமாக நம்பி ஏமாந்து விடுவார்கள். அவர்களுக்கு சொல்லப்பட்ட பழமொழிதான் இது. இப்போது பால் விஷயம் இதற்கு ஒருபடி மேலே போய்விட்டது. நம்பிக்கை தளர்ந்துபோய்விட்டது. நாம் அருந்தும் பால் வெள்ளையாக இருந்தாலும்கூட நிஜமான பால் எவ்வளவு? கலப்படம் எவ்வளவு? என்ற கேள்வி பிறந்துவிட்டது.
பால் தண்ணியாக இருக்கிறது என்று சிலர் வருத்தப்படுவார்கள். பால் தண்ணீரைப் போல இல்லாவிட்டால்தான் அதன் தரம் குறித்து சந்தேகப்பட வேண்டும். ஏனெனில், பாலில் 87 சதவிகிதம் தண்ணீர்தான் இருக்கிறது; 13 சதவிகிதம்தான் இதர வேதிப்பொருட்கள். இதில் நான்கு சதவிகிதம் கொழுப்பு; ஒன்பது சதவிகிதம் புரதம், லாக்டோஸ், தாது உப்புக்கள், வைட்டமின்கள். இந்த நிலையில் உள்ள பால் தண்ணிப் பாலாகத்தான் காட்சி அளிக்கும். இதுதான் உடலுக்கும் நல்லது. ஒருவேளை பால் கெட்டியாக இருந்தால், ஒன்று அது கொழுப்பு, புரதம் கூடுதலாகச் சேர்க்கப்பட்ட பாலாக இருக்க வேண்டும்; அல்லது ஜெலாட்டின், மரவள்ளி மாவு, ஜவ்வரிசி போன்ற வஸ்துகள் ஏதாவது சேர்க்கப்பட்ட பாலாக இருக்கும்.
அப்போதைக்கு அப்போது கறந்து சைக்கிள் அல்லது டூ வீலரில் கொண்டுவந்து விநியோகிக்கப்படும் பாலையும்கூட நம்ப முடியவில்லை. சில விதமான பாக்கெட் பாலையும் நம்ப முடியவில்லை.
முன்பெல்லாம் லேக்டோ மீட்டர் போட்டுப் பாலில் எவ்வளவு தண்ணீர் என்று சோதிப்பார்கள். தண்ணீர்ப்பாலில் யூரியா, ஸ்டார்ச், மைதா மாவு, குளுக்கோஸ் கலந்து சோதித்தால் தண்ணீர் கலந்ததைக் கண்டுபிடிக்க முடியாது. சாதாரணமாக சைக்கிள் டூவீலரில் கறந்த பால் என்று விற்பவர்கள் மேற்கொள்ளும் கலப்படம் இது.
பிளாட்டிங் பேப்பரைப் பயன்படுத்துபவர்களும் உண்டு. இப்படி சில்லறையாகப் பால் வாங்காமல் பாக்கெட் பால் வாங்கினால் மட்டும் சுத்தமா என்ன? அங்கும் கலப்படம் உண்டு. மாடுகளின் காம்பிலிருந்து பீய்ச்சப்படும் கறந்த பால் சாதாரணமாக 7, 8 மணி நேரம் வரை தாங்கும். அதற்குள் விநியோகமாக வேண்டும். 8 மணி நேரத்துக்குப் பிறகு அது திரிந்துவிடும்.
அமுல், ஆவின் போன்ற நம்பிக்கையான பால் நிறுவனங்கள் கறந்த பாலைக் கொள்முதல் செய்து அது கெட்டுப் போவதற்கு முன்பே கொதிகலனில் காய்ச்சிய உடன் குளிரூட்டிப் பின் நிலைப்படுத்தப்பட்டு (அனுமதிக்கப்பட்ட கலப்படம்) பாக்கெட்டில் நிரப்பி விற்கின்றன. இது ""பாஸ்சரைஸ்டு மில்க்" என்று அழைக்கப்படுகிறது. காய்ச்சிக் குளிரூட்டப்பட்ட பால் என்றும் கூறலாம். UHT (Ultra-High-Temperature processing) முறையிலும் பால் பதப்படுத்தப்பட்டு பாக்கட்களில் அடைகப்படுகின்றது.
சாதாரணமாக இதைத்தான் பெரும்பான்மையான மக்கள் வாங்கிப் பயன்படுத்துகின்றனர். ராஜா பால், ராணி பால், அந்தப்பால், இந்தப்பால், சக்தி பால் என்று ஏராளமான பெயர்களில் பால் பாக்கெட்டுகள் வெற்றிலை பாக்குக் கடைகளில்கூட விற்பனையாகி வருவதைப் பார்க்கின்றோம். இவையெல்லாம் நிஜமாகவே தரமான பால்தானா?
இதற்கு விடை காணும் முன்பு பதப்படுத்தப்பட்ட இதரப் பால் வகைகளையும் அறிவது நல்லது. இந்த இதர வகைப்பால் பிரிவில் கலப்பட வாய்ப்பு அரிது. கண்டன்ஸ்டு மில்க், பாலைச் சுண்டக்காய்ச்சி 50 சதவிகிதம் ஆவியாகும் முன் சர்க்கரையுடன் ஒரு ஆல்கலிப் பொருள் (புளிப்பும் காரப்பொருளும்) கலக்கப்படும். மேலை நாடுகளில் எவாப்பரேட்டட் மில்க், லாக்டிக் ஆசிட் மில்க், ஸ்கிம்டு லாக்டிக் ஆசிட் மில்க், புரோட்டீன் மில்க் என்றெல்லாம் பலவகை கூடுதல் விலையில் கிட்டும்.
இங்கு நாம் பாக்கட் பால், கறந்த பால் என்று சொல்லி விற்கப்படும் ""சைக்கிள் பால்" பற்றி ஆராய்வோம்.
நிஜமான கறந்த பாலில் எவ்வளவு சத்துப் பொருள்கள் உள்ளன? அவற்றின் விகிதாசாரம் பற்றிய விவரமாவது:
சைக்கிள்களில் கொண்டு வரும் பாலில் தண்ணீர் கலப்பது வாடிக்கையானது. தண்ணீர் கலப்பதால் பாலில் உள்ள சத்தின் அளவு குறையும். வேறு தீமை இல்லை. ஆனால் தண்ணீர் கலந்து விட்டுப் பாலை அடர்த்தியாகக் காண்பிக்க ல்டார்ச்சு, மைதா மாவு, டிடர்ஜண்ட், யூரியா, சர்க்கரை, குளுகோஸ், பால் பவுடர் போன்றவை சேர்க்கப்படும்போது கலப்படமாகிறது. பாலை அப்படி கெட்டியாகக் காட்டிக் கெடாமல் இருக்கக் கெட்டவழியில் பாதுகாப்பு செய்யப்படுகிறது. அமோனியா, சோடியம் ஹைட்ராக்ûஸடு, கார்பன் ட்ரை ஆக்சைடு, பொட்டாசியம் ஹைட்ராக்சைடு இவற்றில் ஒன்று சேர்க்கப்படும். யூரியா எளிதில் கிடைக்கும். யூரியாவில் அமோனியா இருப்பதால் கலப்படம் செய்வோர் அதைப் பயன்படுத்துவார்கள்.
மேற்படி கலப்படப் பால் தென்னாட்டை விட வட நாடுகளில்தான் மிக அதிகம் என்றும், பாக்கட் பாலைவிட வாசலில் வந்து கறந்த பால் என்று விற்கப்படும் சைக்கிள் பாலில்தான் கலப்படம் அதிகம் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
அப்போ நம் ஆவின் பால்? கிட்டத்தட்ட நாலரை சதவிகிதம் கலப்படம். அதாவது 95 சொச்சம் சதவிகிதம் தான் சுத்தம். இத்தனைக்கும் வாங்கும் பாலைத், தரம் பிரித்து வாங்குவதாக, ஆவின் நிர்வாகம் மார் தட்டிக் கொள்கிறது. சரி என்னதான் நடக்கிறது. கறந்த பால் ஆவினுக்கு கொண்டு வரப்பட்டு, அதிலிருக்கும் கொழுப்புச் சத்து நீக்கப்படுகிறது. டோனிங் என்று பெயராம் இதற்கு. அமுல், ஆவின் போன்ற பெரிய பொதுத்துறை பால் நிறுவனங்களில் பதனப்படுத்தும்போது கொழுப்பின் அளவைக் குறைக்க வெண்ணெய் எடுத்த பாலை மாவாக்கி அந்தப் பால் பவுடர் சேர்த்துத் தரப்படுத்தப்படுவதுண்டு. டோன்ட் மில்க் என்று வழங்கப்படும் அந்த வகைப் பால் அனுமதிக்கப்படுகிறது. அதில் புரதச்சத்து இருக்கும். இது மட்டுமே அனுமதிக்கப்பட்ட கலப்படம்.
சமீபத்தில் உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணயம் வழங்கிய விதிமுறைப்படி பால் கலப்பட தேசிய ஆய்வு தில்லியைச் சுற்றியும் பின்னர் பல்வேறு மாநிலங்களிலும் பால் சாம்பிள் வாங்கிப் பரிசோதித்த போது பல்வேறு கலப்படங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சுமார் 2,000 சாம்பிள்களில் சோதனை நடந்தது. அவற்றில் 30 சதவீதம் மட்டுமே நிஜமான பால் என்றும் 70 சதவீதம் கலப்படப் பால் என்றும் நிரூபணம் ஆயின. இந்த 70 சதவீதக் கலப்படம் என்பது மேலே விவரித்தபடி பாலின் கெட்டித் தன்மைக்காக மாவுப் பொருள்கள் (மைதா, ஸ்டார்ச்சு பவுடர்) கெடாமல் இருக்க டிடர்ஜண்டுடன் யூரியா முதலியன கலப்படப் பொருளாகப் பயன்படுத்துவது என்று தெரியவந்துள்ளது.
இன்னொரு அதிர்ச்சியான உண்மை.. சுத்தமான பாலுடன் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட பால் பவுடரும் கலக்கப்படுவதுதான். கெட்டித் தன்மைக்கு இன்னொன்றும் செய்கிறார்கள். அதைக் கேட்டாலே மனம் அதிருது! டிடர்ஜண்ட் பவுடர்! பால் ஏன் வெள்ளையாக இருக்கிறது என்பது இப்போது புரிகிறதா? சுத்தமான கறந்த பால் வெள்ளையாக இருக்காது.
யூரியா போன்ற ரசாயனம் சேர்த்த பாலை அருந்தினால் வயிற்றுப்போக்கு, ரத்த சோகை ஏற்படும். தொடர்ந்து கலப்படப் பாலைப் பயன்படுத்தினால் சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் உண்டு.
பசும்பாலை மருந்து என்று ஆயுர்வேதம் கூறுகிறது. பாலுக்கு வைரஸ் எதிர்ப்பு சக்தி உண்டு என்றும் கூறப்படுகிறது. சிறார்களுக்கு நல்ல ஊட்ட உணவு. ஆனால் மருந்தே விஷமானால் மனித உடல் படும்பாடு என்ன?
யூரியா போன்ற ரசாயனம் சேர்த்த பாலை அருந்தினால் வயிற்றுப்போக்கு, ரத்த சோகை ஏற்படும்.தொடர்ந்து கலப்படப் பாலைப் பயன்படுத்தினால் சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் உண்டு.ஆகவே, வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணிக் கண்ட கண்ட பாக்கட் பாலை வாங்க வேண்டாம்.பாலில் உள்ள கலப்படத்தை நாமே வீடுகளில் சிறிய சோதனைகள் மூலம் கண்டறியலாம்.
கலப்படத்தை எவ்வாறு கண்டறிவது?
தண்ணீர் கலந்த பாலை கண்டறிய
ஒரு வழுவழுப்பான சாய்வான ஓட்டின்(டைல்ஸ்) மீது ஒரு துளி பாலை விடும்போது பால் மெதுவாக கீழ்நோக்கி ஓடும். அப்போது தான் ஓடிய பாதையில் தனது வெண்மை நிறத்தை கோடாக விட்டுச் சென்றால் அந்த பால் சுத்தமான தண்ணீர் கலக்காத பாலாகும். அவ்வாறில்லாமல் தனது பாதையில் வேகமாக ஓடி வெண்மை கோட்டை விட்டுச் செல்லாத பால் தண்ணீர் கலந்த கலப்படப் பாலாகும்.
மாவு கலந்த பாலை கண்டறிய
சிறிதளவுப் பாலில் சில துளிகள் டின்ச்சா; அயோடின் அல்லது அயோடினைச் சேர்க்கும்போது பாலின் நிறம் நீலநிறமாக மாறினால் அது ஸ்டார்ச்(மாவுப்பொருள்) சேர்க்கப்பட்ட கலப்படமான பாலாகும்.
யூரியா கலந்த பாலை கண்டறிய
1) ஒரு சோதனைக் குழாயில் ஒரு தேக்கரண்டி பாலில் அரை தேக்கரண்டி சோயாபீன் தூளைச் சேர்த்து நன்கு குலுக்கி 5 நிமிடங்கள் கழித்து அதில் சிவப்பு லிட்மஸ் தாளை அரை நிமிடம் வைக்கும்போது சிவப்பு லிட்மஸ் தாள் நீலநிறத்திற்கு மாறினால் அந்தப்பால் யூரியா சேர்க்கப்பட்ட கலப்படப்பாலாகும்.(SNF – மதிப்பை அதிகரிக்கச் செய்ய பாலில் யூரியா கலப்படம் செய்யப்படுகிறது)
2) ஒரு சோதனைக் குழாயில் 5 மிலி பாலில் 5 மிலி Paradimethyl
amino benzaldehyde (16 percent)-
ஐச் சேர்த்தால் மஞ்சள் நிறம் தோன்றினால் அந்தப்பால் யூரியா சேர்க்கப்பட்ட கலப்படப்பாலாகும்.
பாலில் கலப்படம் நடைபெறுவதைத் தடுக்க தமிழகத்தில் விற்பனைசெய்யப்படும் அனைத்து பால் நிறுவனங்களிலும் வாரம் ஒருமுறை சோதனை நடத்த வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஏ. பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: அத்தியாவசியப் பொருளான பாலில் 68 சதவீத கலப்பட பால் என்ற அதிர்ச்சியான தகவலை உச்ச நீதி மன்றத்தில் மத்திய அரசு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளது.
சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டுள்ள முகவர்களை இது மிகவும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. குழந்தைகளின் உயிர்காக்கும் இந்தப் பாலில் கலப்படம் செய்யும் நிறுவனங்களை பால் முகவர்கள் நலச்சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
யூரியா, சோடா, டிடர்ஜென்ட் உள்ளிட்ட மனிதர்களுக்கு தீங்கிழைக்கும் பல ரசாயனப் பொருள்கள் பாலில் கலப்படம் செய்தால் அதை பருகும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுவர்.
பாலில் விஷமான வேதிப் பொருள் கலப்படத்தைக் கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்குவது மாநில அரசுகளின் கடமையாகும். எனவே, தமிழக முதல்வர் கலப்பட பாலை கண்டறியும் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். அக்குழுவினர் வாரம்தோறும் அனைத்து நிறுவனங்களிலும் அதிரடி சோதனை நடத்தி கலப்பட பாலை தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி கலப்படம் செய்யும் நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த வெண்மைப் புரட்சி வந்த பிறகுநம் நாட்டில் சுற்றித் திரிந்த தரமான காளைகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக காயடித்து ஆண்மை நீக்கம் செய்யப்படுவதும்; ஊர் முழுவதும் சுற்றித் திரிந்து பசுக்களில் திருட்டுத் தனமாக சினை ஊசி செலுத்தும் செயல்களும் அரங்கேற ஆரம்பித்துள்ளன. இன்றைக்குக் காணுமிடமெல்லாம் கலப்பின மாடுகள் ராஜ்ஜியமாக மாறிப் போனது. இந்தக் கலப்பின மாட்டை உற்பத்திச் செய்வதில் தான் அரசு மிகுந்த கவனமாக இருந்ததே ஒழியஉள்ளூர் மாட்டினங்களைப் பாதுக்காக்கவில்லை. கலப்பினப் பசுக்களால் பால் வளம் பெருகியதுகாளைகள் குறைந்தன. கூடவே பலவிதமான நோய்களும் வரத் துவங்கின.
இரண்டு லிட்டர்கள் பாலைக் கொடுத்த மாட்டில் இருபது லிட்டர்கள் பால் கறக்க, செயற்கை முறையில் விந்தணுக்களைச் செலுத்தி கருத்தரிக்கச் செய்தனர். மேலும், மாடுகளுக்கு தேவைக்கு அதிகமான தீவனங்கள், ஊசிகள் என்று பால் சுரப்பை அதிகப்படுத்தும் போதுமாட்டின் 'ஜீனில்' மாற்றம் ஏற்படுகிறது. 5 முதல் 8 நிமிடங்களில் 2 லிட்டர்கள் பாலைக் கறக்க வேண்டிய நேரத்தில், 20 லிட்டர்கள் பால் கறவை செய்கின்றனர். பால் சுரப்புக்கான 'லேக்டேட்டிங் ஹார்மோன்' அதிகமாகி பாலில் கலந்து வெளியேறுகிறது. அந்த பாலை உட்கொண்டு வரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புதிதாக பிரச்சினைகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.
5, 16 வயதில் பருவமடைந்த பெண் மக்கள் தற்போது விபரம் தெரியாத 10, 11 வயதிலே பருவமடைந்து விடுகிறனர். சிறு வயதில் ஆரம்பமாகும் மாத விலக்குநடுத்தர வயதிலே நின்று விடுகிறது. மேலும், குழந்தை பெற்றுக்கொள்ளும் போது, 'சிசேரியன்' முறையில் குழந்தை பிறக்கிறது. தாய்மார்களுக்கு குழந்தை பிறந்த மூன்று நாட்களுக்கு மேல்தாய்ப் பால் சுரப்பு இல்லாமல் போய் விடுகிறது.  ஆண்களுக்கு பால் தன்மை அதிகமாக தூண்டி விடுகிறது. இவ்வாறு ஒழுங்கற்ற ஹார்மோன் சுரப்பால் ஏழில் ஒருவருக்கு மலட்டுத்தன்மை உருவாகி இருக்கிறது." என்கிறார் மருத்துவர் காசி.பிச்சை.
பால்குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் கால்சியம், புரதச் சத்து, விட்டமின் ''வையும் கொடுக்கிறது. ஆனால் பாலில் இருக்கும் கேசின் புரதம் நீரிழிவு நோயை தூண்டக் கூடியது. இந்த கேசினில் ஏ1,2 என்று இரண்டு வகை இருக்கிறது.  பாஸ் இன்டிகஸ் இன மாடுகளில்( திமில் உள்ளது, நாட்டு மாடுகள்) ஏ2 அதிகமாகவும், பாஸ் டாரஸ் ( திமில் அற்றது, ஹெச்.எப், ஜெர்சி போன்ற அயல்நாட்டு இனம்) மாடுகளில் ஏ1 கேசின் மட்டும் இருக்கின்றன. ஏ1 கேசின் இருக்கும் பாலைக் குடித்தால்அது குடலில் செறிக்கப்படும் போது BCM7 (beta-caso-morpine-7) ஆக மாற்றமடைந்து, நீரிழிவு,நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சியைப் பாதித்தல்(ஆடிசம்) போன்ற வியாதிகளை உண்டாக்குவதாகக் கண்டுபிடித்துள்ளார்கள். "2 கேசின் உள்ள பாலைக் குடித்து அது செறிக்கப்படும் போது, உடலுக்கு தீமை செய்யாமல் உடலைக் காப்பாற்றுகிறது" என்கிறார் பேராசிரியர் பாப் எலியாட்.
சீமை மாடுகள் என்னும் நோய்மூலம்
சீமை மாடு என்பதே ஒரு நோய் கூடம். சீமை மாட்டு பாலும் நாட்டு பசும பாலும் பார்க்க ஒன்று போல இருந்தாலும் இரண்டிலும் பெரும் வித்தியாசங்கள் உண்டு. பாலின் முக்கிய அங்கமான பால் புரதமானது (Milk Protein) நாட்டு பசுவில் A2 Beta-Casein ஆகவும் சீமை மாடுகளில் (பன்றிகளில்) A1 Beta-Casein ஆகவும் மாறுபடுகிறது. A1 Beta-Casein புரதம் மிகவும் அபாயகமான விளைவுகளை ஏற்படுத்துவதை தற்போது பல விஞ்ஞானிகள் கண்டறிந்து வருகிறார்கள். சீமை மாடுளின் மரபணுவே இப்படி இருக்க, அதற்க்கு போடப்படும் ஹார்மோன் ஊசிகள் மற்றும் பால் கரவைக்கு வைக்கப்படும் தீவனங்களில் கலக்கப்படும் தவறான வஸ்துக்கள் போன்றவற்றால் சீமை மாட்டு பால் அருந்த தகுதியற்றதாகிறது. (Refer:  http://cowprotectionforce.blogspot.in/2013/06/blog-post_27.html)
சீமை மாட்டு பால் ஸ்லோ பாய்சன் (Slow Poison) போல. அதன் பாதிப்புக்கள் உடனே தெரிவதில்லை. சீமை மாடுகள் நம் நாட்டுக்கு வந்த புதிதில் சரிசமாக கலப்பு செய்யப்பட்டதால் நாட்டு பசுக்களின் தாக்கம் சரிவிகிதமாக இருந்தது. அதனால் அன்றைய காலகட்டங்களில் தெரியவில்லை. ஆனால் தற்போது சீமை மாடுகளின் தாக்கம் அதிகம் இருப்பதால் வியாதி பெருக்கம் நன்றாக தெரிய துவங்கியுள்ளது.
சர்க்கரை நோய்
வெளிநாடுகளில் A2 பால் என்றே தனித்துவமாக பால் வியாபாரம் நடக்கிறது. இந்த A1 Beta-Casein புரதமானது நம் உடலின் இன்சுலின் சுரப்பியின் புரதத்தை ஒத்திருப்பதால் ஹார்மோன் சுரப்பி நிலை தடுமாறுகிறது. காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக ந்த தடுமாற்றம் சர்க்கரை நோயை வரவழைக்கிறது. நாட்டு பசுவின் பால் இதுபோன்ற எந்த தீங்கையும் உருவாக்குவதில்லை.
பிரசர்
சீமை மாடுகளுக்கு உடலில் வியர்வை சுரப்பி கிடையாது. அதன் கெட்ட நீர் மற்றும் உப்புக்கள் மூத்திரம் மற்றும் பாலின் வழியாக மட்டுமே வெளியேறியாக வேண்டும். சீமை மாடுளினால், அது உண்ணும முரட்டு தீனிக்கும்-மாட்டு தீவனத்தில் அதிக பால் கறவைக்கு சேர்க்கபட்டிருக்கும் வஸ்துக்களுக்கும், அத்தனை உப்பையும் சிறுநீர் வழியாக வெளியேற்றிவிட இயலாது. உடலின் உப்பும், கெட்ட நீர்களும் பாலின் வழியாக வெளியேறும். அதனால் தான் சீமை மாட்டு பால் கொஞ்சம் உப்புச்சுவை கூடுதலாக இருக்கும். நாளடைவில் இந்த தீய உப்பின் தேக்கத்தால் உடலில் ரத்தகொதிப்பு நோய் ஏற்ப்பட்டு விடுகிறது. நம் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற நாட்டு பசுவுக்கு உடல் எல்லாம் வியர்வை சுரப்பி உண்டு. அதுவுமன்றி அவை குறைந்த அளவே தீவனம் எடுக்கும். அதனால் அதன் பால் எவ்வித தீங்குகளையும் எர்ப்படுத்துவதில்லை.
ஆட்டிசம்
பல நூறு ஆண்டுகளாக நாம் அதிகம் கேட்டிராத நோய் ஆட்டிசம் (சதை பிறழ்வு). இது குழந்தைகளின் உடலையும் மூளையையும் ஒரு சேர தாக்கும் கொடூர நோய். தற்போது மாநகரங்களில் இந்நோய்க்கென தனியே மருத்துவமனை கட்டும் அளவு பெருகியதன் காரணம் என்ன..? சீமை மாட்டு A1 பால் இந்நோய்க்கான மிக முக்கிய காரணி. சீமை மாடுகள் நம் நாட்டுக்குள் வந்த பின்னர்தான் இந்நோயின் வளர்ச்சி அதிகமாகி வருகிறது. நாட்டு பசுவின் பால் நல்ல புத்தியையும், சூட்டிப்பையும், நரம்பு மண்டலத்துக்கு பலத்தையும் கொடுக்க வல்லது.
ஹார்மோன் சீர்கேடு
வெளிநாட்டு சீதோஷ்ண நிலைக்குரிய சீமை மாட்டு பால் நம் நாட்டில் பயன்படுத்தும்போது உடலின் ஹார்மோன் சமநிலையை தடுமாற செய்கிறது. இதன் தாக்கம் பிட்டியுட்டரி, தைராய்டு, அட்ரினல் உள்ளிட்ட முக்கிய சுரப்பிகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதால் உடலின் வளர்ச்சி முதல் அனைத்து உறுப்புக்கள், புத்தி, மனோ நிலை அனைத்தையும் தடுமாற செய்கிறது. நாட்டு பசுக்கள் நம் மண்ணுக்கேற்ற தன்மையோடு இயற்கையோடு இயைந்த உடல்வாகு உடையதால் தடுமாறிய ஹோர்மன் சமநிலையைகூட சரி செய்ய கூடியது.
பரம்பரை வியாதிகள்-மரபணு கோளாறுகள்:
சீமை மாடுகளின் பால் மூலக்கூறுகள் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் பரவுவதால் மரபணுவாகிய குரோமோசோம் சங்கிலியில் பாதிப்பை உண்டாக்கிவிடுகிறது. எனவே இதன் பாதிப்பு நமக்கு தெரியாவிட்டாலும் நம் பிள்ளைகளுக்கோ-பேரன் பேத்திகளுக்கோ நிச்சயம் தெரியும். அதுவும் இது மரபணு மூலமாக பரம்பரை வியாதியாக மாறிவிடும் அபாயம் வெகு அதிகமாகவே உள்ளது.
பாலியல் கோளாறுகள்
சீமை மாடுகளின் உடலில் ஆண்-பெண் செக்ஸ் ஹார்மோன் சமநிலையில் இல்லை. காளைகள் மந்தமானதாகவும் கிடாரிகள்(பெண்) ஹார்மோன் மிகுதியாக உடையதாகவும் உள்ளது. இதை பருகும் மக்களுக்கும் அந்த பாதிப்பு பல வகைகளில் வெளிப்படுகிறது. மலட்டுத்தனம், பாலியல் குறைபாடு, மாதவிடாய்-கர்ப்பப்பை-பால் சுரப்பு கோளாறுகள் போன்றவை சில.
நாட்டு பசுக்களில் காளை-கிடாரி இரண்டிலுமே செக்ஸ் ஹார்மோன் சமநிலையில் உள்ளது. ஒழுக்கமாக வாழ நாட்டு பசுவின் பாலே சிறந்தது.
மந்த புத்தி
சீமை மாட்டின் பால் தாமச உணவாகும். சோம்பேறித்தனம், மந்தம், அர்த்தமற்ற திடீர் கோபங்கள், எதையும் சடாரென புரிந்து கொள்ளா தன்மை போன்றவற்றை ஏற்ப்படுத்தும். அதன் தன்மையை மீறிய கொழுப்பும், தவறான புரதமும் இந்த பாதிப்பை உண்டாக்குகின்றன. எருமை பாலுக்கும் சீமை மாட்டு பாலுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.
மாறாக,நாட்டு மாடுகளின் பால் சாத்வீகமான உணவாகும். நிதானம், கவனம், சொரணையுள்ள கற்பூர புத்தி, செயல் வீரம் போன்றவற்றை ஏற்ப்படுத்தும்.
 மேலே சொல்லப்பட்டவையன்றி குடல்வால்,மலச்சிக்கல் என இன்னும் எண்ணற்ற நோய்களுக்கும் காரணியாக சீமை மாடுகளின் பால் உள்ளது
சாராயம் விற்று கஜானாவை நிரப்பும் மாநில அரசு சாராயம் குடிப்பவர்களுக்கு நட்சத்திர ஹோட்டல்களில் கிடைக்கும் தரமான பார் வசதி போல் வசதியை ஏற்படுத்திகொடுக்கும் அரசாங்கம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் ஆரோக்கியத்திற்காக உபயோகப்படுத்தும் பால் தரமானதா என ஆய்வு செய்யுமா? கலப்படம் செய்பவர்களை தண்டிக்குமா? நமக்கு சுத்தமான சுகாதாரமான பால் கிடைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்..
நன்றி:  அபூ யஹ்யா, cowprotectionforce , டாக்டர் விகடன் etc -Abu Mymoona
http://chittarkottai.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சர்க்கரை நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவது ஆதாயமா? ஆபத்தா?

பீட்ரூட்டில் பல மருத்துவ குணங்கள் உள்ளதால் பெரும்பாலான மருத்துவர்கள் பீட்ரூட்டை உணவில் அடிக்க...

Popular Posts