லேபிள்கள்

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

எக்ஸெல் டிப்ஸ்


எக்ஸெல் டிப்ஸ்

Shift+F11 - புதிய ஒர்க்ஷீட்
எக்ஸெல் ஒர்க்புக்கில் புதிய ஒர்க்ஷீட் ஒன்றை இணைப்பது சில சமயம் பல இடங்களில் இழுபறி வேலை போல் இருக்கலாம். பல மெனுக்களில் சென்று அவற்றை இழுத்துப் பின் இன்ஸெர்ட் தேர்ந்தெடுப்பது நேரம் இழுக்கும் வேலையாக இருக்கலாம். இவற்றைத் தவிர்க்க ஒரு சிறிய ஷார்ட் கட் கீ உள்ளது. அதுதான் Shift+F11. இந்த இரண்டையும் அழுத்தினால் அப்போது இருக்கும் ஒர்க்ஷீட்டிற்கு முன் புதிய ஒர்க்ஷீட் ஒன்று இணைக்கப்படும்.
பேஜ் பிரேக் கோடு தெரிய
ஒரு எக்ஸெல் ஒர்க்ஷீட்டை பார்மட் செய்கையில் அதன் பிரிண்ட் அவுட்டில் பேஜ் பிரேக் எங்கு வரும் என்று தெரிவது நமக்கு முக்கியம். இதனை பிரிண்ட் பிரிவியூ ஆப்ஷன் சென்று பார்த்தால் தெரிய வரும். அல்லது Page Break Preview என்ற ஆப்ஷனைப் பெற்று பார்த்தாலும் தெரிய வரும். தொடர்ந்து ஒர்க்ஷீட்டினை எடிட் செய்தால் இந்த பேஜ் பிரேக் மாறுவதனை மீண்டும் மீண்டும் பார்த்து நாம் உறுதி செய்திட வேண்டும். எக்ஸெல் இந்த பேஜ் பிரேக்கினை இடைவெளிக் கோடாக நெட்டு வரிசை மற்றும் படுக்கை வரிசைகளின் ஊடாகக் கொடுக்கிறது. சில செட்டிங்ஸ் அமைப்பில் இந்த கோடு தெரியாமல் இருக்கலாம். அதனைச் சரி செய்திடக் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றலாம்.
1. Tools
மெனு சென்று அதில் ஆப்ஷன்ஸ் செலக்ட் செய்திடவும். இங்கு Options டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
2.
இதில் View டேப்பினை செலக்ட் செய்திடவும். இதில் Page Breaks செக் பாக்ஸ் ஒன்றும் இருக்கும். இதில் ஒரு டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
3.
அதன்பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இனி பேஜ் பிரேக் கோடுகள் கிடைக்கும்.
எக்ஸெல் பேஸ்ட்
எக்ஸெல் தொகுப்பில் தகவல்களை பேஸ்ட் செய்திட கண்ட்ரோல்+வி அல்லது பேஸ்ட் பட்டனைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஒரு செல்லில் உள்ள தகவல்களை கண்ட்ரோல்+சி கொடுத்து காப்பி செய்திடுங்கள். பின் எந்த செல்லில் அவற்றை பேஸ்ட் செய்திட வேண்டுமோ அந்த செல்லில் கர்சரைக் கொண்டு செல்லுங்கள். பின் ஜஸ்ட் என்டர் தட்டுங்கள். ஆஹா! பேஸ்ட் ஆகிவிட்டதா உங்கள் தகவல்கள்.
செல்களைக் குழுவாகக் கட்டமிட
எக்ஸெல் தொகுப்பில் டேட்டாக்களைக் கொடுத்து பணியாற்றிக் கொண்டிருக்கையில் குறிப்பிட்ட செல்கள ஒரு குரூப்பாகக் கட்டம் கட்ட வேண்டும் என எண்ணுகிறீர்களா? அப்போது நீங்கள் கட்டமிட விரும்பும் செல்களை ஹைலைட் செய்து தேர்ந்தெடுத்து பின் Ctrl + Shift + அழுத்துங்கள். அழகாகக் கட்டம் கட்டி காணப்படும். அதன்பின் கட்டமிட்ட செல்களில் பார்டரை எப்படி நீக்குவது என யோசிக்கிறீர்களா? முன்பு போலவே கட்டமிட்ட செல்களை ஹைலைட் செய்து தேர்ந்தெடுத்து பின் Ctrl + Shift + _ ஆகிய கீகளை அழுத்தவும். அனைத்து பார்டர்களும் காணாமல் போச்சா!
படுக்கை வரிசை இணைக்க
எக்ஸெல் ஒர்க்ஷீட்டில், புதிய படுக்கை வரிசைகளை குறிப்பிட்ட இடத்தில் இணைக்க நமக்கு வசதிகள் தரப்பட்டுள்ளன. எந்த வரிசையின் கீழாகக் கூடுதல் வரிசை வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுத்து, பின்னர் இன்ஸெர்ட் (Insert) மெனு சென்று, அதில் Rows தேர்ந்தெடுத்து கிளிக் செய்வோம். இதன் மூலம் ஒரே ஒரு வரிசை நமக்குக் கிடைக்கும்.
ஒன்றுக்கு மேற்பட்ட வரிசை வேண்டும் எனில் என்ன செய்கிறோம்? இதற்கு இரண்டு வழிகள் உள்ளன. மேலே கூறியபடி வரிசை ஒன்றை இணைத்த பின்னர், F4 பட்டனை அழுத்தினால், அடுத்தடுத்து வரிசைகள் இணைக்கப்படும்.

இன்னொரு வழி இதைக் காட்டிலும் எளிய வழியாகும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஐந்து வரிசைகள் இணைக்கப்பட வேண்டும் என விரும்பினால், அந்த வரிசை சென்று, தொடர்ச்சியாக ஏற்கனவே இருக்கும் ஐந்து வரிசைகளைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, இன்ஸெர்ட் (Insert) மெனு சென்று, அதில் Rows தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். நீங்கள் தேர்ந்தெடுத்த முதல் வரிசைக்கு மேலாக, எக்ஸெல் ஐந்து வரிசைகளை இணைத்திருக்கும். இது சற்று வேடிக்கையாகக் கூடத் தோன்றலாம்.
http://kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

விஷ ஜந்துக்கள் கடித்தால் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து தெரிந்து கொள்ளலாம்

விஷ ஜந்துக்கள் கடித்து மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து கீழே காணலாம். கண்ணாடி விரிய...

Popular Posts