லேபிள்கள்

வெள்ளி, 13 அக்டோபர், 2023

*காது குடைவதால் ஏற்படும் பிரச்சனைகள்.*

 


தலைக்கு குளிக்கும் போதெல்லாம் காது அடைத்துக் கொள்கிறது. அப்போது காது சரியாகக் கேட்பதில்லை.

`பட்ஸ்' கொண்டு காதை சுத்தப்படுத்திய பிறகுதான் பிரச்சினை சரியாகிறது என சிலர் சொல்வதை கேட்டு இருப்போம்.

காது அரிப்பு, காதில் அழுக்கு சேருவது, குரும்பி சேர்வது, சீழ் பிடிப்பது, காது அடைத்துக்கொள்வது போன்ற பல்வேறு சந்தர்ப்பங்களில் ஊக்கு, `ஹேர் பின்', தீக்குச்சி, பேனா, பென்சில், பட்ஸ் என்று கையில் கிடைப்பதை எல்லாம் காதுக்குள் சொருகிக் குடையும் பழக்கம் நிறைய பேரிடம் உள்ளது. காரணம், காது குடைவதில் கிடைக்கும் சுகம். இதற்கு அடிமையானவர்களுக்கு இது ஒரு பழக்கமாகவே ஆகிவிடுகிறது. ஆனால், இது ஆபத்தானது.

பட்ஸ் வைத்து காது குடைவதால், காதில் தொற்று ஏற்படவே வழி வகுக்கும். இயற்கையாக அழுக்கை வெளியேற்றும் திறனை காது இழந்துவிடும். அப்போது மீண்டும் மீண்டும் அழுக்கு சேருவதைத் தடுக்க முடியாது. பல நேரங்களில் அழுக்கை வெளியில் எடுப்பதற்குப் பதிலாகக் காதின் உட்புறம் உள்ள செவிப்பறைக்கு தள்ளிவிடுவதுதான் நடக்கும். அப்போது செவிப்பறை பாதிக்கப்படும். `பட்ஸ்' பட்டு செவிப்பறை கிழித்துவிட்டால், காது வலி, காது இரைச்சல், காது கேட்காமல் போவது போன்ற ஆபத்துகளும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதனால் முடிந்தவரை பட்ஸ் கொண்டு காது குடைவதை தவிர்ப்பதே நல்லது.

காதுகள் சரியாகக் கேட்க வேண்டுமானால், செவிப்பறை சீராக இருக்க வேண்டும். இதற்கு இயற்கை நமக்கு தந்துள்ள பாதுகாப்பு வளையம்தான், காதுக் குரும்பி. காதுக்குள் 'செருமினஸ் சுரப்பிகள்' உள்ளன. இவைதான் காதுக்குள் குரும்பியை சுரந்து, செவிப்பறையை பாதுகாக்கின்றன. குறிப்பாக, காதுக்குள் நுழையும் பூச்சிகள், அழுக்குகள், அந்நியப் பொருட்கள் போன்றவை செவிப்பறையை பாதிக்காதபடி தடுப்பது, இந்த குரும்பிதான். இதை அகற்ற வேண்டிய அவசியமில்லை. தானாகவே மெல்ல மெல்ல ஊர்ந்து வெளியில் வந்துவிடும்.

அப்படி அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுமானால், இதற்கென உள்ள காது சொட்டு மருந்து அல்லது தேங்காய் எண்ணெயை காதில் சில சொட்டுகள் விட்டால், அதில் ஊறி, தானாகவே வெளியில் வந்துவிடும். என்றாலும், நாட்பட்ட குரும்பி இந்த வழியில் வராது. சிரிஞ்ச் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து அகற்ற வேண்டும். இதற்கு மருத்துவர் உதவி தேவை.

காதுக்குள் புகுந்த பொருள் கண்ணுக்குத் தெரிந்தால், தலையைச் சாய்த்துப் பொருளைக் கீழே விழ வைக்கலாம். அல்லது மருத்துவரிடம் காண்பித்து அதற்கென உரிய கருவியால் வெளியில் எடுப்பதே நல்லது. காதில் எறும்பு போன்ற பூச்சி புகுந்திருந்தால், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை சில சொட்டுகள் விட்டால், பூச்சி இறந்துவிடும். பிறகு, சில சொட்டுகள் தண்ணீர் விட்டு, தலையை சாய்த்தால் பூச்சி வெளியில் வந்துவிடும். எந்தக் காரணத்தைக் கொண்டும் காய்ச்சிய எண்ணெயை காதுக்குள் ஊற்றக் கூடாது, அப்படிச் செய்தால் காது பாதிக்கப்படும் என்கிறார்கள், மருத்துவர்கள்.

திங்கள், 9 அக்டோபர், 2023

இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!

 


இ‌‌ஸ்லா‌மிய ஆ‌ண்டிலு‌ம் ம‌ற்ற எ‌ல்லா ஆ‌ண்டுகளை‌ப் போல 12 மாத‌ங்க‌ள் வகு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. ச‌ந்‌திர‌னி‌ன் ஓ‌ட்ட‌த்தை அடி‌ப்படையாக வை‌த்து அமை‌ந்த இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ள் ஒ‌வ்வொ‌ற்‌றிலு‌ம் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ள் ‌நிறை‌ந்து‌ள்ளது. அவ‌ற்றை பா‌ர்‌க்கலா‌ம்.

முகர‌ம் :

இ‌ஸ்லா‌மிய ஆ‌ண்டி‌ன் முத‌ல் மாதமாகு‌ம். போ‌ர் செ‌ய்‌ய‌த் தடை செ‌ய்ய‌ப்ப‌ட்ட மாதமாக இரு‌ந்ததால், போ‌ர் ‌வில‌க்க மாத‌ம் எ‌ன்ற பொரு‌ளி‌ல் இட‌ம்‌ பெறு‌கிறது. இ‌ந்த மாத‌த்‌தி‌ல் தா‌ன் இ‌‌ஸ்லா‌ம் கூறு‌ம் பல மு‌க்‌கிய ‌‌நிக‌ழ்வுகளு‌ம், அ‌ற்புத‌ங்களு‌ம் நட‌ந்து‌ள்ளன.

ஸஃப‌ர் :

பயண‌ம் எ‌ன்ற பொரு‌ளிலு‌ம், இலைக‌ள் பழு‌த்து ‌விழு‌ம் இலையு‌தி‌ர் கால‌த்‌‌தி‌ல் வருவதா‌‌ல் பழு‌ப்பு நிற‌ம் எ‌ன்ற பொரு‌ளிலு‌ம் இ‌ம்மாத‌ம் அழை‌க்க‌ப்படு‌‌கி‌ன்றது. ‌பீடை மாத‌ம் என ஒது‌க்கு‌ம் ஒரு ‌சிலரு‌க்காக ந‌பிக‌ள் நாயக‌ம் (ஸ‌ல்) அவ‌ர்க‌ள் இ‌ஸ்லா‌த்‌தி‌ல் இதுபோ‌ன்ற எ‌ண்ண‌‌த்தி‌ற்கே இட‌மி‌ல்லை என வ‌லியுறு‌த்‌தினா‌ர்க‌ள். வெ‌ற்‌றி‌யி‌ன் மாத‌ம் எ‌ன்று‌ம், ந‌ன்மை ந‌ல்கு‌ம் மாத‌ம் என்று‌ம் ந‌வி‌ன்றா‌ர்க‌ள்.

ர‌பீஉ‌ல் அ‌வ்வ‌ல் :

வச‌ந்த‌ம் எனு‌ம் பொரு‌ள் கொ‌ண்ட ர‌ஃபீ எனு‌ம் அர‌பி மூல‌ச் சொ‌‌ல்‌லி‌ல் இரு‌ந்து வரு‌கி‌ன்றது. இ‌ம்மாத‌த்‌தி‌ல் வச‌ந்த கால‌ம் துவங்குவதா‌ல் முத‌ல் வச‌ந்த‌ம் அ‌ல்லது வச‌ந்த‌த்‌தி‌ன் துவ‌க்க‌‌ம் எ‌ன்று பொரு‌ள்படு‌கி‌ன்றது. ந‌பிக‌ள் நாயக‌ம் (‌ஸ‌ல்) அவ‌ர்க‌ள் ‌பிற‌ந்தது‌ம், மர‌ணி‌த்தது‌ம் இ‌ம்மாத‌த்‌தி‌ன் 12ஆ‌ம் நா‌ளி‌ல்தா‌ன் எ‌ன்பதா‌ல் இ‌ம்மாத‌ம் ‌மிகவு‌‌ம் ‌சிற‌ப்பு‌க்கு‌ரிய மாதமாகு‌ம்.

ர‌பீஉ‌ல் ஆ‌கி‌ர் :

வச‌ந்த‌த்‌தி‌ன் இறு‌தி என‌ப் பொரு‌ளி‌ல் வரு‌ம் இ‌ந்த மாத‌த்‌தி‌ல் தா‌ன் ஆ‌‌ன்‌‌‌மிக‌ப் பேரொ‌ளி முஹ‌ி‌ய்யு‌த்‌தீ‌ன் அ‌ப்து‌ல் கா‌தி‌ர் (ரஹ்) அவ‌ர்க‌ள் மர‌ணி‌த்தா‌ர்க‌‌ள்.

ஜமா‌தி‌ல் அ‌வ்வ‌ல் :

இ‌ம்மாத‌த்‌தி‌ல் ப‌‌னி உறைய‌த் துவங்குவதா‌ல் இ‌ம்மாத‌ம் ப‌‌‌னி உறையு‌ம் மாத‌த் துவ‌க்க‌ம் எ‌ன்னு‌ம் பொரு‌ள்பட அழை‌க்க‌ப்படு‌கி‌ன்றது. இ‌ம்மாத‌த்‌‌தி‌ல் இறை‌த் தூத‌ர் ஸா‌லி‌ஹ் (அலை) அவ‌ர்க‌ள் ‌பிற‌ந்தா‌ர்க‌ள்.ஜமா‌தி‌ல் ஆ‌கி‌ர் : ப‌னி உறையு‌‌ம் இறு‌‌தி மாத‌ம் எ‌ன்ற பொரு‌ளி‌ல் அழை‌க்க‌ப்படு‌கி‌ன்றது. ந‌பிக‌ள் நாயக‌ம் (‌ஸ‌‌ல்) அவ‌ர்க‌ளி‌ன் தோழ‌ர் அபூப‌க்க‌ர் ‌பிற‌ந்தா‌ர்க‌ள்.

ரஜ‌ப் :

ரஜ‌ப் த‌ர்‌ஜீ‌ப் : எ‌ன்ற சொ‌ல்‌லி‌ல் இரு‌ந்து வ‌ந்தது ரஜ‌ப் சொ‌ல்லாகு‌ம். க‌‌ண்‌ணிய‌மி‌க்க அ‌ல்லது ம‌தி‌ப்பு‌மி‌க்க எ‌ன்று பொரு‌ள்படு‌ம் இ‌‌ம்மாத‌த்‌தி‌‌ன் 27ஆ‌ம் தே‌தி இர‌வி‌ல்தா‌ன் அ‌ண்ண‌ல் ந‌பி (‌ஸ‌ல்) அவ‌ர்க‌ள் இறைவனை‌ச் ச‌ந்‌தி‌க்க ‌வி‌ண்ணே‌ற்ற‌ம் செ‌ய்தா‌ர்க‌ள்.

ஷஃபா‌ன் :

ப‌ங்‌கிடுத‌ல் எ‌ன்ற பொரு‌ளி‌ல் இ‌ம்மாத‌த்‌தி‌ல் இறைவ‌ன் த‌ன் அடியா‌ர்க்கு உணவை‌ப் ப‌ங்‌கீடு செ‌ய்வதா‌ல் இ‌வ்வாறு அழை‌க்க‌ப்படு‌கிறது. ஷபே பராஅ‌த் எ‌ன்னு‌ம் பாவ ‌விடுதலை இரவு இ‌ம்மாத‌த்‌தி‌ல் தா‌‌ன் வரு‌கிறது. ரமலா‌ன் இறைவனுடைய மா‌த‌ம், ஷஅபா‌ன் எ‌ன்னுடைய மாத‌ம் என ந‌பிக‌ள் நாயக‌ம் (ஸ‌ல்) அவ‌ர்க‌ள் அரு‌ளி‌யிரு‌க்‌கி‌ன்றா‌ர்க‌ள்.

ரமலா‌ன் :

ர‌மீது எ‌ன்ற வே‌ர்‌ச்சொ‌ல்‌லி‌ல் இரு‌ந்து ரமலா‌ன் ‌பிற‌ந்தது. இத‌ன் பொரு‌ள் எ‌ரி‌ப்பது எ‌ன்பதாகு‌ம். ஆர‌ம்ப‌க் கால‌த்‌தி‌ல் சூ‌ரிய‌க் கண‌க்கு‌ப்படி இ‌ம்மாத‌ம் கோடை கால‌த்‌தி‌ல் வ‌‌ந்ததா‌ல் எ‌ரி‌க்கு‌ம் கோடை வெ‌ப்ப‌த்‌தி‌ற்காகவு‌ம், இ‌ம்மாத‌ம் நோ‌ன்பு நோ‌ற்பதா‌ல் அடியா‌ர்க‌ளி‌ன் பாவ‌ங்க‌ள் எ‌ரி‌க்க‌ப்படுவதாலு‌ம் இ‌ப்பெய‌ர் பெ‌ற்றது. இ‌ம்மாத‌ம் வேத‌ங்க‌ள் இற‌க்க‌ப்ப‌ட்ட மாதமாகு‌ம்.

ஷ‌வ்வா‌ல் :

ஷ‌வ்‌ஸ் எ‌ன்ற அர‌பி‌ச் சொ‌ல்‌‌லி‌ல் இரு‌ந்து ஷ‌வ்வா‌ல் வ‌ந்தது. ‌சித‌றி ‌விடுத‌ல் எ‌ன்ற பொரு‌ள்படு‌ம் இ‌ம்மாத‌த்தி‌ல் தா‌ன் சொ‌ர்‌க்க‌ம், நரக‌ம் படை‌க்க‌ப்ப‌ட்டன. இ‌ம்மாத‌த்‌தி‌ன் முத‌ல் நா‌ளி‌ல் தா‌ன் மு‌ப்பது நா‌‌ட்க‌ள் நோ‌ன்பே‌ற்ற ம‌க்க‌ள் ஈது‌ல் ஃ‌பி‌த்‌ர் பெருநா‌ள் கொ‌ண்டாடு‌கி‌ன்றன‌ர்.

து‌ல்கஃதா :

இறைவனா‌ல் ‌சிற‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்ட நா‌ன்கு மாத‌ங்க‌ளி‌ல் இதுவு‌ம் ஒ‌‌ன்றாகு‌ம். இரு‌த்த‌ல் எ‌ன்ற பொரு‌ளி‌ல் வரு‌ம் இ‌ம்மாத‌த்‌தி‌ல் அ‌க்கால அர‌பிக‌ள் போரை‌த் த‌வி‌ர்‌த்து ‌வீ‌‌‌ட்டி‌ல் இரு‌ந்தா‌ர்க‌ள். இறைவ‌ன் ஆணை‌ப்படி ந‌பி இ‌ப்றாஹ‌ீ‌ம் (அலை) அவ‌ர்களு‌ம், ந‌பி இ‌ஸ்மா‌யீ‌ல் (அலை) அவ‌ர்களு‌ம் கஃபாவை ‌நி‌ர்மா‌ணி‌‌க்க‌த் துவ‌ங்‌கி, முடி‌த்த மாதமாகு‌ம்.

து‌ல்ஹ‌ஜ் :

இ‌ஸ்லா‌மிய ஆ‌ண்டி‌ன் ‌நிறைவு மாத‌ம் இது. இ‌ஸ்லா‌‌மிய ஐ‌‌ம்பெரு‌ம் கடமைக‌ளி‌ல் ஒ‌ன்றான ஹ‌ஜ் கடமை ‌நிறைவே‌ற்ற‌ப்படு‌ம் மாத‌ம் இது. இ‌ம்மா‌த‌த்‌தி‌ன் முத‌ல் ப‌த்து இரவுக‌ள் ‌மிக‌ப் பு‌னிதமானவை.

https://www.nidur.info/2022/01/28/%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81/

செவ்வாய், 3 அக்டோபர், 2023

படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள்?

 


உண்டாகும் தீய விளைவுகள்!

திருமணமான புதிதில் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக கட்டியணைத்து உறங்குவார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இடைவெளி குறையும். ஏதே சில காரண்களுக்காக இருவரும் இடைவெளிவிட்டு அல்லது தனித்தனியே தூங்குவார்கள். இதனால் கணவன் மனைவி உறவில் என்னென்ன மாற்றங்கள் வருகிறது என்பது பற்றி காணலாம்.

1. நெருக்கம் குறைகிறது
கணவன் மனைவி இருவருக்கும் கொஞ்ச நேரம் ரிலாக்ஸாக பேச மற்றும் காதலிக்க கிடைக்கும் நேரமே படுக்கை அறை நேரம் தான். இந்த நேரத்தை உறவை வழுப்படுத்த பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். இங்கு இருவேறு துருவங்கள் போல பிரிந்து படுப்பது கணவன் மனைவி உறவுக்கு நல்லதல்ல என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

2. எளிதில் போர் அடித்து விடும்
படுக்கை அறையில் இருவரும் நெருக்கமின்றி படுத்து உறங்கவில்லை என்றால் உங்களது உறவு எளிதில் போரடித்து விடும். உங்கள் மனைவி உங்களை தொடும் போது கூட உங்களுக்கு பெரிதாக எந்த உணர்ச்சியும் வராது.

3. உடலுறவில் நாட்டமின்மை
நீங்கள் தனித்தனியாக படுத்து உறங்குவதை வழக்கமாக கொண்டிருந்தால், நாளடைவில் உங்களுக்கு உடலுறவில் கூட பெரிதாக நாட்டமில்லாமல் போகும்.

4. வேறு ஒருவர் மீது காதல்
நீங்கள் எப்போதும் நெருக்கமில்லாமல் இருந்தால், நீங்கள் படிப்படியாக வேறு ஒருவர் மீது காதல்வயப்பட வாய்ப்புகள் அதிகமாகும். மேலும் உங்கள் மனைவியுடன் படுத்து உறங்குவது உங்களுக்கு யாரோ ஒரு தெரியாத நபருடன் படுத்து உறங்குவது போன்ற அனுபவத்தை தரும். அவர் மீது நாட்டமில்லாமல் போகும்.

5. சண்டைகள்
உடலுறவு மற்றும் காதல் தீண்டல்கள் உறவில் இல்லாமல் போகும் போது அடிக்கடி சண்டை கணவன் மனைவிக்குள் சண்டை வரும்.

6. வெறுப்பு
உங்களது கவனம் வேறு ஒரு நபர் மீது திசை திரும்பிவிட்டால், உங்களது துணையை வெறுக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.

ஆகவே நண்பர்களே

துணையை அணைத்து துயரம் தவிர்ப்போம்

https://www.nidur.info/2021/10/30/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%85%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf/

ஞாயிறு, 1 அக்டோபர், 2023

காடி நீர் – Vinegar வினிகர்

 


ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனது கையைப் பிடித்துத் தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.

அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், (அங்குள்ள ஒருவர்) ரொட்டித் துண்டைக் கொடுத்தார்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “குழம்பேதும் இல்லையா?” என்று கேட்டார்கள்.

வீட்டார், “இல்லை, சிறிது காடியைத் தவிர வேறெதுவுமில்லைஎன்று கூறினர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “காடிதான் குழம்புகளில் அருமையானதுஎன்று கூறினார்கள்.

ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், இறைவனின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்வாறு கூறியதைக் கேட்டதிலிருந்து நான் காடியை விரும்பி(ச் சாப்பிட்டு)க் கொண்டிருக்கிறேன்என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் : 4170)

காடி செய்யும் விதம்:

ஒரு பெரிய பாத்திரத்தில் கால் படி கருங்குருவை அரிசியை சமைத்து கஞ்சியும் சாதமும் இரண்டையும் கொட்டி 6 படி சுத்தநீர் விட்டு துணியால் வாய்கட்டி சூரிய புடத்தில் வைத்துவர வேண்டும்.

வாரத்திற்கு ஒரு முறை வேறு பாத்திரத்தில் மாற்றி விட வேண்டும் இப்படி ஒரு மாதம் கழிந்தபின் பார்க்க முதலில் போட்ட அன்னமானது காணப்படாது அந்த சமயம் மறுபடியும் கால் படி அன்னம் சமைத்து அதில் கலந்துவிட வேண்டும்.

கலந்தபின் நாள் தவறாமல் சூரிய புடத்தில் வைப்பதுவும் வாரத்திற்கு ஒரு முறை பானை மாற்றுவதுவும் முக்கியமாய் கவனித்தல் வேண்டும்.

இதன்படி மாதம் ஒருமுறை அன்னம் சமைத்து கலந்து கொண்டு வரவேண்டும் இப்படி செய்துகொண்டு வருங்காலத்தில் மூன்று மாதத்திற்கு மேல் அந்த காடியை உபயோகித்து வரலாம்.

எவ்வளவு காடி எடுத்து கொள்ளுகின்றோமோ அவ்வளவு நீரை அதில் கலந்துவிட வேண்டும் இப்படி கலந்து வருவதால் எத்தனை ஆயிரம் பேருக்கு நாம் கொடுத்தாலும் காடி குறைந்துவிடாது ஆறு மாதத்திற்கு பின் காடியில் அதிக புளிப்பு ஏறிவிடும். ஆகையால் 4 நாளைக்கு ஒரு முறை பானை மாற்றுதல் வேண்டும்.

மழைக்காலங்களில் சூரிய புடத்தில் வைக்க இயலாத காரணத்தால் காடியில் பூசணம் பிடிக்காதபடி தடுக்க சமையல் செய்த பிறகு அடுப்பில் உள்ள நெருப்பை எடுத்து விட்டு அடுப்பின் மேல் காடியை வைத்து விட வேண்டும் இப்படி செய்ய காடி கெடாமல் இருக்கும்.

காடிக்கு அதிக நாள் ஏற ஏற புளிப்பு அதிகரிக்கும்.புளிப்பு அதிகரிக்க அதிகரிக்க கொடுக்க வேண்டிய அளவை குறைத்தல் வேண்டும் ஆறு மாதத்திற்கு மேற்பட்ட காடியானது பௌர்ணமி தினத்தில் இரவில் ஒருவித சப்தத்தை உண்டு பண்ணும்.

காடியால் தீரும் வியாதி:

வயிற்று வலி, நீர் கடுப்பு, மார்வலி, உஷ்ண பேதி, அஜீரண பேதி, விஷ பேதி முதலிய வியாதிகள் நீங்கும் சரீரத்திலுள்ள வெக்கையை போக்கும்.

காடி நீர் என்பது நம் நாட்டில் பழமையான ஒரு பெரிய மருந்து
.
கடையில் விற்கும் காடியானது சர்க்கரையை வாணலில் போட்டு வறுக்க வறுக்க ஒருவித கருநிறமாக மாறிவிடும். அப்பொழுது அசிட்டிக் ஆசிட் வேண்டிய அளவிற்கு சேர்த்து நீரைக் கொட்டி வடிகட்டி புட்டியில் பதனம் பண்ணி விற்கப்படுவதே காடி ஆகும்.

இந்த காடியும் புளிப்புள்ளதாக காணப்படும். இந்த காடியை வாங்கி ஊர்காய்களுக்கும் மற்றும் மருந்தின் பிரயோகங்களுக்கும் உபயோகப்படுத்தி வருகின்றார்கள். எனவே கடையில் விற்கும் காடியானது முன்னோர்கள் சொல்லி வைத்த காடி அன்று ஆனால் இது உடலுக்கு பெரும் தீங்கை விளைவிக்கும் என்று கூறப்படுகிறது.

ரஹ்மத் ராஜகுமாரன் 

https://www.nidur.info/2021/11/05/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-vinegar-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d/

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

ஒரு எறும்பு உங்களைக் கடித்தால் அதற்கு நன்றி சொல்லுங்கள்! ஏன்?

 


ஒரு எறும்பு உங்களைக் கடித்தால் அதற்கு நன்றி சொல்லுங்கள்! ஏன்?

ஒரு எறும்பு உங்களைக் கடித்தால், அதைக் கொல்லாதே, ஆனால் அதற்கு நன்றி சொல்,லுங்கள் ஆனால் ஏன்?!!!

முதலில், குரானில் எறும்பு குறிப்பிடப்பட்டு, ஒரு முழு சூராவும் அதற்குப் பிறகு பெயர் வைக்கப்பட்டு இருப்பது அவதிப்படுகிறது (சூரத் அன்-நாம்ல்).

நபி ( صل ى الله عليه وسلم) நான்கு  வகையான விலங்குகளை கொல்வதைத் தடுக்கிறார்: எறும்புகள், தேனீக்கள், ஹுத்(பறவைகள்), மற்றும் சூரடி (பருந்து போன்ற குருவி).

(ஹதித் அஹ்மத் 3066, அபு தாவுத் 5267 மற்றும் ஸைஐப் அல்-அர்னாவூத்தால் சரிபார்க்கப்பட்டது)
முஸ்லிம்களாகிய எங்களுக்கு அல்ஹம்துலில்லாஹ் ஹதீஸ்கள் போதுமானது மற்றும் அது அல்லா மற்றும் அவரது தூதர் முகமதுவின் கட்டளை (
صل ى الله عليه وسلم) ஆனால் வாழும் இந்த உயிரினத்துடன் நாம் ஒரு அறிவியல் சுற்றுலா போகலாம்.

எறும்பு கிள்ளலின் நன்மைகள்:

அங்கும் இங்கும் பலரை எறும்பு கடிக்கிறது. ஆனால் அவர்கள் உடனடியாக ஆக்ரோஷமான எறும்பைக் கொன்றுவிட்டார்கள். இங்கே பிழை வருகிறது.

ஒரு எறும்பை கொல்வது தடைசெய்யப்பட்டுள்ளது, அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அது ஒரு உயிருள்ள உயிரினம் என்பதால். ஆனால் எறும்புக்கு ஏன் மனமார்ந்த நன்றியை தெரிவிக்க கூடாது, குறிப்பாக அதன் பலன்கள் பல என்பதால்.

இந்த நன்மைகள் பின்வருமாறு:

1. ஒரு எறும்பின் கிள்ளி இரத்த ஓட்டத்தைத் தூண்டி, சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுக்கிறது, இது உடலின் செயல்பாடு மற்றும் உயிர்த்தன்மையை பிரதிபலிக்கும்.
2. ஒரு எறும்பின் கிள்ளல் மூளையின் அடிப்பாகத்தில் உள்ள உணர்ச்சி உயிரணுக்களுக்கு பரவக்கூடிய உணர்ச்சி சமிக்ஞைகள் மூலம் மூளையில் உள்ள நரம்புகளை செயல்படுத்துகிறது.

3. மனித உடல் அதே இடத்தில் கிள்ளியை விட அதிகமாக வெளிப்படும் போது அதே நேரத்தில் தோலின் வட்ட நோய் வெளிப்படும்.

தோலில் இருந்து சருமத்தின் உள்நோக்கமான சுழல் பாக்டீரியாவை அதிகமாக எதிர்க்கிறது, ஏனெனில் தோல் அதிக வெப்பநிலைக்கு சகிப்புத்தன்மை அடைகிறது.

மேலும் உடலில் வெவ்வேறு இடங்களில் கிள்ளிகளால் பாதிக்கப்பட்ட பலருக்கு உடல் விஷயத்தில் இரத்தத்தை சுரக்கச் செய்யும், மற்றும் இரத்தம் உறைவதற்கு உத்தேசம்: இரத்த அடுக்கு ஓரளவு இரத்தத்தில் இருக்க ஆடம்மா இரத்த நாளங்களின் திறனை கொடுக்கிறது மிகக் கடினமான விஷத்தை கொடுக்கிறது. இதனால் கல்லீரலுக்கு உதவுங்கள் மற்றும் அவருடன் இருக்கும் சுமையைக் குறைக்கவும்.

4. உணவுக்கட்டுப்பாட்டின் சிறந்த அர்த்தமாக எறும்பை கிள்ளி எறியுங்கள். எறும்பு (பெண்) விரும்பிய கோலுக்கு கிள்ளிக் கொடுக்கும் போது.

இயோனிக் உமிழ்நீரின் அளவு இரகசியமானது, மேலும் விசித்திரமான விஷயம் என்னவென்றால் இந்த உமிழ்நீர் கிள்ளப்பட்ட உறுப்பில் உள்ள அனைத்து கொழுப்புக்களையும் எரிக்கிறது.

எடுத்துக்காட்டாக, கிள்ளப்பட்ட உறுப்பு கை, உமிழ்நீராக இருந்தால் அது படிப்படியாக கை முழுவதும் பரவும்.. இது கைகளில் காணப்படும் 99% கொழுப்புகளைக் கரைத்துவிடும்.
அல்லாவுக்கே பெருமை உண்டாகட்டும்.

நபி [ صل ى الله عليه وسلم] எறும்புகளையும் ஹதீஸ்களையும் கொல்ல தடை செய்துள்ளார் என்று முஸ்லிம் நம்புகிறார்.

அல்லாஹ் நன்கு அறிவான்

https://www.nidur.info/2021/12/27/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%8e%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf/


சனி, 26 ஆகஸ்ட், 2023

தொழுகையாளிகளைத் தவிர…!

 


மனிதனின் என்னென்ன கீழ்த்தரமான குணங்களைக் கொண்டவன் அவன் எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டவனாக படைக்கப்பட்டிருக்கின்றான் என்பதை படைத்த இறைவன் விவரிக்கின்றான்.

اِنَّ الْاِنْسَانَ خُلِقَ هَلُوْعًا ۙ‏ ✳️اِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوْعًا ۙ‏ ✳️وَاِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوْعًا ✳️اِلَّا الْمُصَلِّيْنَۙ ✳️

நிச்சயமாக மனிதன் பேராசையும் பதற்றமும் நிறைந்தவனாக படைக்கப்பட்டிருக்கின்றான். ஏதேனும் துன்பம் அவனுக்கு வந்தால் பொறுமை இழந்தவனாக அவன் ஆகின்றான். ஆனால் அவனுக்கு வளம் (வசதி) வந்துவிட்டால் கடும் கஞ்சனாக ஆகிவிடுகின்றான். ஆனால் தொழுகையாளிகளைத் தவிர! (அல்குர்ஆன்: 70:19 – 22)

மனிதனின் இயல்பான மோசமான கெட்ட குணங்களை உபதேசங்கள் மூலமாகவும் இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் மூலமாகத்தான் மாற்றமுடியும்.

ஆசை பேராசை இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். ஒரு பொருளை அடைவதற்காக அதைப் பெறுவதற்காக நியாயமாக முயற்சி செய்வது ஆசையாகும்.

ஆனால் எள்ளளவு கீழ்த்தரமான காரியங்களைச் செய்தேனும் அப்பொருளை அடையவேண்டும் என்று முயற்சிப்பதும், இறைவன் வகுத்த வரம்புகளை மீறி அதை அடைய முயற்சி செய்வதும் பேராசையாகும்.

உதாரணமாக ஒருவருக்கு மருத்துவ சிகிச்சைக்காகப் பத்து லட்சம் ருபாய் தேவை, இவர் சுயமரியாதையோடு அதை அடைய முயற்சிக்கின்றார், இது ஆசை. ஆனால் இன்னொருவர் பத்து ருபாய் பெறுவதற்கும் கூனிக்குறுகி சுயமரியாதையை இழந்து பெறுகின்றார் இது பேராசையாகும்!

ஒருவன் தொழில் செய்து பொருளாதாரத்தை திரட்டுவதை இஸ்லாமை அங்கீகரித்துள்ளது. தனது கையால் உழைத்து பொருளீட்டுபவனை விட சிறந்தவன் யாருமில்லை என்ற அளவுக்கு சிறந்த உழைப்பாளர்களை இஸ்லாம் அடையாளப்படுத்துகின்றது. தொழில் செய்து பணம் சேர்ப்பது ஆசையாகும்.

ஆனால் நியாயமாகவும், நேர்மையாகவும் தொழில் செய்யும் ஒருவன் தொழுகை நேரத்தில் அதைக் கண்டுகொள்வதே இல்லை! அவனது கவனம் முழுவதும் பொருளீட்டுவதிலேயே இருக்கிறது, அல்லாஹுவை வணங்குவதை தொழுவதை விட்டும் பொருளாதாரம் ஈட்டுவதிலேயே மூழ்கிப்போய் இருக்கின்றான் இவன் பேராசைக்காரனாவான்!

தொழுகையை விட்டுவிட்டு ஒரு காரியத்தில் ஈடுபடுவதால் ஒருவனுக்குப் பணம் கிடைக்கும் என்றால் தொழுகையை விட்டுவிட்டு அந்தப் பணத்திற்கு ஆசைப்படுவது பேராசை. தொகை சிறிதாக இருந்தாலும் அது பேராசைதான். காரணம் பணத்தை அடைவதற்காக அதைவிட முக்கியமானதை அவன் விட்டு விட்டான்.

அவன் சேமித்த சொத்துக்கு ஏதாவது சேதாரம் வந்துவிட்டால், அல்லது அதற்கு ஏதாவது அழிவு வந்துவிட்டால் அவனால் அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் பதறி துடிதுடித்துப் பலஹீனமாகி விரைவாகவே நோயாளியாகிப் போகின்றான். அல்லாஹுவின் நாட்டப்படி அது நடந்துவிட்டது என்ற முடிவுக்கு வர மறுக்கின்றான் ஆனால் தொழுகையாளிகளைத் தவிர!

அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதனிடம் உள்ள குணங்களில் மிகவும் கெட்ட குணம் என்னவெனில் அவனைப் பதற்றத்திற்கு உள்ளாகும் கஞ்சத்தனமும், இதயம் நொடிந்துபோகச் செய்யும் கோழைத்தனமும் ஆகும். (நூல்: அபூ தாவூத்)

அடுத்ததாக மனிதனுக்கு இன்னொரு கெட்டப் பழக்கம் உண்டு! ஒன்றுமே இல்லாதவனாக இருந்தவன் பேராசைக்காரனாக இருந்தவன், அவனுக்கு செல்வம் கொழிக்கும்போது, அவன் செல்வச் செழிப்பானவனாக ஆகும்போது அவனிடம் கஞ்சத்தனமும், கருமித்தனமும் குடி கொண்டுவிடுகின்றது. தனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் எவ்வளவுதான் சிரமப்பட்டாலும், எப்படிக் கஷ்டப்பட்டாலும் அதைக் கண்டு கொள்ள மறுக்கின்றான். அல்லாஹுவின் பாதையில் சிலவு செய்ய மறுக்கின்றான், தர்மம் செய்ய மறுக்கின்றான். ஆனால் தொழுகையாளிகளைத் தவிர!

ஆக கெட்ட குணங்களிலிருந்தும், இழிவான செயல்களிலிருந்தும், கருமித்தனத்திலிருந்தும் ஒருவனை தொழுகை பாதுகாக்கின்றது. தொழுகை நற்காரியங்களின் பக்கம் தூண்டுகிறது. தொழுகை விசாலமான, தாரளான உள்ளத்தை ஏற்படுத்துகிறது.

http://www.islamkalvi.com/?p=126747


புதன், 23 ஆகஸ்ட், 2023

தொழுகையாளிகளைத் தவிர..!

 


தொழுகை, ஒருவனைப் பக்குவப்படுத்துகின்றது! தொழுகை, ஒருவனின் கெட்ட குணத்தையும் நற்குணமாக மாற்றி அமைக்கின்றது! தொழுகை, தீய செயல்கள் நிறைந்தவனையும் நற்செயலாற்ற வைக்கின்றது! என்ற விஷயங்களைச் சென்ற தொடரில் கண்டோம்.

அது எவ்வாறான தொழுகை? அந்த தொழுகையின் மாண்புகள் என்ன என்ற செய்திகளை இப்போது பார்ப்போம்.

நிரந்தரமாக நிறைவேற்றுதல்:🔵

அவர்கள் எப்படிப்பட்ட தொழுகையாளிகள்? என்பதை الَّذِينَ هُمْ عَلَى صَلَاتِهِمْ دَائِمُونَ அவர்கள் தொழுகையை விடாமல் நிரந்தரமாக நிறைவேற்றுவார்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். دَآٮِٕمٌ (தாயிம்) என்றால் நிலையான, நிரந்தரமான என்று பொருள். دَائِمُونَ (தாயின்மூன்) என்றால் அந்த காரியத்தை நிலையாக நிரந்தரமாகச் செய்பவன் என்று பொருள்.

நாலடியார்களுக்கு சுவனத்தின் உணவும் அதன் நிழலும் நிலையான, நிரந்தரமானது என்பதைக் குறிப்பிடும்போது دَائِمُ என்ற சொல்லைத்தான் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். (அல்குர்ஆன்: 13:35)

ஒருவன் ஒரு காரியத்தை தற்காலிகமாகச் செய்வதற்கும், அதே காரியத்தை நிரந்தரமாகச் செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது. இஸ்லாத்தில் எந்த ஒரு அமலாக இருந்தாலும் அதை விடாமல் நிரந்தரமாகத் தொடர்ந்து செய்யவேண்டும். உலகக் காரியங்களில்கூட விடாமல் தொடர்ந்து செய்பவனுக்குத்தான் மதிப்பும், சலுகையும் அதிகம்.

மக்களே! உங்களால் இயன்ற (நற்) செயல்களையே செய்துவாருங்கள். ஏனெனில், நீங்கள் சலிப்படையாத வரை அல்லாஹ்வும் சலிப்படைய மாட்டான். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் யாதெனில், குறைவாக இருந்தாலும் நிலையாக இருப்பதேயாகும்என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆயிஷா (ரலி) (ஸஹீஹுல் புகாரி:5861)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நேர்மையோடு (நடுநிலையாக) செயல்படுங்கள். நிதானமாகச் செயல்படுங்கள். (வரம்பு மீறிவிடாதீர்கள்) அறிந்து கொள்ளுங்கள். உங்களில் யாரையும் அவரின் நற்செயல் சொர்க்கத்தில் நுழைவிக்காது. (மாறாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் சொர்க்கம் புகமுடியும். நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, (எண்ணிக்கையில்) மிகவும் குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும். ஆயிஷா(ரலி) (ஸஹீஹுல் புகாரி: 6464).

குறித்த நேரத்தில் தொழுதல்

தொழுகையின் நேரத்தை பற்றி அல்லாஹ் கூறும்போது اِنَّ الصَّلٰوةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِيْنَ كِتٰبًا مَّوْقُوْتًا‏ தொழுகையானது இறைநம்பிக்கையானார்கள் மீது குறித்த நேரத்தில் நிறைவேற்ற வேண்டிய கடமையாகும். (அல்குர்ஆன்: 04:103)

அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, ‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்என்று பதில் கூறினார்கள். (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) (ஸஹீஹுல் புகாரி: 527).

நோன்பு ஹஜ் போன்ற வணக்கங்களை நிறைவேற்றுவதற்குக் காலங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று ஒவ்வொரு தொழுகைக்கும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தந்த தொழுகையை அதன் ஆரம்ப நேரத்திலேயே நிறைவேற்றுவது இறைநம்பிக்கையாளர்கள்மீது கடமையாகும் அதுதான் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான காரியமாகும்.

இறையச்சத்தோடு தொழுதல்

நிலையாக, நிரந்தரமாக, அந்த நேரத்தோடு நிறைவேற்றப்படும் தொழுகையை நிதானமாகவும், இறையச்சத்தோடும், நிறைவேற்றவேண்டும். தொழுகையில் நிற்பவர் அல்லாஹ்வைப் பார்க்காவிட்டாலும் அல்லாஹ் அவரைப் பார்க்கின்றான் என்ற உள்ளச்சத்தோடு தொழவேண்டும். அடியான் தொழும்போது தன் இரட்சகனோடு (அல்லாஹ்வோடு) உரையாடுகின்றார், அல்லாஹுவும் அடியானுக்கு பதிலளிக்கின்றான் என்பதை நினைவில் கொண்டு தொழவேண்டும்.

அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்கள் மத்தியிலிருந்தார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் (மனிதரின் தோற்றத்தில் வந்து நபி -ஸல்-) அவர்களிடம் ஈமான் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவன் தூதர்களையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது எனக் கூறினார்கள். இஸ்லாம் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கவர்கள், இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்கு (எதனையும்) நீர் இணையாகக் கருதாத நிலையில் அவனை மட்டுமே நீர் வணங்குவதும் தொழுகையை நிலைநிறுத்தி வருவதும் கடமையாக்கப்பட்ட ஜகாதை நீர் வழங்கி வருவதும் ரமலான் மாதத்தில் நீர் நோன்பு நோற்பதுமாகும் என்று கூறினார்கள்.

இஹ்ஸான் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கவர்கள், (இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்கா விட்டாலும் நிச்சயமாக அவன் உம்மைப் பார்த்துக்கொண்டு இருக்கிறான் என்றார்கள்.., (ஹதீஸ் சுருக்கம்)
(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்கள் : புகாரீ 50,)

தொழுகையில் இறைவனோடு உரையாடுதல்!

தொழுகையில் ஓதுவதை எனக்கும் எனது அடியானுக்கும் மத்தியில் பங்கிட்டுள்ளேன். என் அடியான் கேட்டவை அவனுக்கு உண்டு. அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்என்று ஒருவன் கூறும் போது என்னை என் அடியான் புகழ்ந்துவிட்டான்என்று அல்லாஹ் கூறுகிறான். அவன் அர்ரஹ்மானிர் ரஹீம்என்று கூறும் போது என் அடியான் என்னைப் பாராட்ட வேண்டிய விதத்தில் பாராட்டிவிட்டான்என்று அல்லாஹ் கூறுகிறான். மாலிக்கி யவ்மித்தீன்என்று கூறும் போது என் அடியான் என்னைக் கௌரவப்படுத்த வேண்டிய விதத்தில் கௌரவப்படுத்தி விட்டான்என்று அல்லாஹ் கூறுகிறான். இய்யாக நஃபுது வ இய்யாக நஸ்தயீன்என்று கூறும் போது இதுதான் எனக்கும் எனது அடியானுக்கும் இடையே உள்ள உறவாகும்என்று அல்லாஹ் கூறுகிறான். இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம்என்று கூறும் போது என் அடியானின் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும்என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 655)

தொழுகை, ஒருவனைப் பக்குவப்படுத்துகின்றது! தொழுகை, கெட்ட குணத்தையும் நற்குணமாக மாற்றி அமைக்கின்றது! தொழுகை, தீய செயல்கள் நிறைந்தவனையும் நற்செயலாற்ற வைக்கின்றது! என்றால் அது எப்படியான தொழுகையாக இருக்கவேண்டும்

http://www.islamkalvi.com/?p=126751


கண் தெரியாதவர்கள் ஏன் கருப்பு கண்ணாடி போடுகிறார்கள் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

கண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுகிறார்கள். கண்கள் தெரியாமல் இருந்தாலும் கண்ணாடி போடுகிறார்கள். பொதுவாக கண்களில் ஏற்படு...

Popular Posts