லேபிள்கள்

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

அன்றாடம்தலைக்கு எண்ணெய் தேய்ப்பதால்கிடைக்கும் பயன்கள் !!

 

தலையில் எண்ணெய் தேய்க்கும் பழக்கம் நம்மிடையே தொன்று தொட்டு இருந்து வருகிறது. தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்தால், தலை முடிக்கொட்டாது என்று சிலர் கூறுவார்கள்.

ஒரு சிலர் எண்ணெய் தேய்ப்பதால் தான் முடிக்கொட்டுகிறது என்று கூறுவார்கள். ஆனால், உண்மையில் சொல்லப்போனால், எண்ணெய் வைக்கும் முறையை தான்  மாற்ற வேண்டும் என்று பலருக்கும் தெரிவதில்லை.

நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்களிலும் கல்சியம், மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. முடி செம்பட்டையாக உள்ளவர்கள்  நல்லெண்ணெய் தேய்த்தால் செம்பட்டை குறைய வாய்ப்பு உள்ளது. தலை உலர்ந்து பொடுகு உள்ளவர்களுக்கு எண்ணெய் தேய்த்தால் அரிப்பு குறையும்.

தலைக்கு அதிக அளவில் எண்ணெயை வைக்கக் கூடாது. இவ்வாறு எண்ணெய் வைத்தால், அது தலைமுடியின் வேர்களில் நிரம்பிவிடும். இப்படி செய்வதன் மூலம், முடிக்கு சீரான வளர்ச்சிக் கிடைக்காமல் முடி கொட்டிவிடும்.

எண்ணெய் தலைக்கு தேய்த்தால் ஒரு சிலர் ஒரு வாரத்திற்கும் மேல், தலைக்கு குளிக்க மாட்டார்கள். ஏன் என்று கேட்டால் சளி பிடிக்கும் என்று கூறுவார்கள்.  ஆனால், அவ்வாறு தலைக்கு எண்ணெய் தேய்த்தால், 2 நாட்களுக்குள் குளித்துவிடவேண்டும். இல்லையென்றால், முடிக்கொட்டும் அபாயம் இருக்கிறது.

குளிப்பதற்கு 2 மணி நேரம் முன்பே தலையில் எண்ணெய்யை ஊறவைக்க வேண்டும். அப்போது தான் அது நன்றாக வேர்களில் ஊடுருவும். சிலர் தலை முடியில் உள்ள சிக்கல்களை எடுப்பதற்காகவே, எண்ணெய்யை வைத்து எடுப்பார்கள். ஆனால், இப்படி செய்தால் அது இன்னும் ஆபத்தாக முடியும். சிக்கல் எடுத்த பிறகு தான், முடியில் எண்ணெய்யை தடவ வேண்டும்.

https://tamil.webdunia.com/article/health-related-to-beauty/the-benefits-of-rubbing-oil-on-the-head-every-day-121013000079_1.html


--

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

தினமும்காதை குடைந்து அழுக்கைஎடுப்பது நல்லதா...?

 

நாம் அன்றாடம் காது குடைந்து அழுக்கை எடுப்பது பெரிய தவறு. நீங்கள் தினமும் காது குடைந்து அழுக்கை எடுக்கவே தேவை இல்லை என மருத்துவ நிபுணர்கள்  கூறுகின்றனர்.

ஏனெனில், காதில் நீங்கள் அழுக்கு என்று எண்ணி சுத்தம் செய்பவை தான் உண்மையில் காதுகளை பாதுகாக்கும் ஆண்டி-பாக்டீரியா ஆகும். எனவே, இதை முதலில் நீங்கள் சரி செய்துக் கொள்ள வேண்டும். பிறகு, காதுக்குள் தினமும் உறங்கும் போது பஞ்சை வைத்துக் கொள்வது, கண்டதை விட்டு காதுகளை குடைவதை  தவிர்க்க வேண்டும்.

நீங்கள் தினமும் காதை குடைந்து சுத்தம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. காதில் பெரும்பாலும் இறந்த சரும செல்கள் தான் அழுக்கு போன்று படிந்திருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இவை, லைசோசைம் எனப்படும் ஆண்டி-பாக்டீரியல் என்சைம் ஆகும்.

உண்மையில் நீங்கள் தினமும் காதை குடைந்து சுத்தம் செய்வது காதுகளுக்கு நல்லது என எண்ண வேண்டாம். உண்மையில் இந்த லைசோசைம்கள் தான் காதுகளை பாதுகாக்கின்றன என மேலும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உண்மையில் குளிக்கும் போது காதுகளின் மேற்புறத்தில் நீர் ஊற்றி கழுவி, மென்மையான துணியைக் கொண்டு காதின் மேற்புறத்தில் மட்டும் சுத்தம் செய்தாலே  போதுமானது.

சிலர் காதுக்குள் அழுக்கு போகாமல் இருக்கவும், குளிர் காலத்தின் போதும் கூட பஞ்சு வைத்துக் கொள்வார்கள். ஒருவேளை அந்த பஞ்சு காதின் உட்பகுதிக்குள்  சென்றுவிட்டால் அதை மருத்துவ முறையை கையாண்டு அகற்ற வேண்டிய சூழல் ஏற்படலாம். மேலும், காதுக்குரும்பி எனப்படுவதை இது காதினுள்ளே அடைப்பு  போலே உண்டாக செய்கிறது. இது செவிப்பறையை பாதிக்க கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/is-it-good-to-clean-the-ear-everyday-and-remove-dirt-121012700043_1.html


--

சனி, 13 ஆகஸ்ட், 2022

தோப்புக்கரணம்போடுவதனால் ஏற்படும் நன்மைகள்பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

 

தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக  தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள்.

தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர், ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை விரித்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போடவேண்டும். பின்னர் பயிற்சியானவுடன் கால்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும்.

வலது கை விரல்களால் இடது காது மடல்களையும், இடது கை விரல்களால் வலது காது மடல்களையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழ வேண்டும்.

உட்காரும்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். எழும்போது மூச்சை வெளிவிட வேண்டும். இவ்வாறு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதால், நமது தண்டுவடத்தில்  மூலாதாரத்தில் - சக்தி உருவாகும்.

உட்கார்ந்து எழும்போது, காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்கு வேலை கொடுக்கிறோம்.  உடல் முழுக்க இரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தின் தசைகளைப்  போலவே இயங்கக் கூடியது, இந்த சோலியஸ் தசை.  இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும்.

தோப்புக்கரணம் போடும்போது மூளையின் நியூரான் நரம்புகள் தூண்டப்பட்டு புத்துணர்ச்சி அடையும். அதனால், மனம் ஒருமுகப்படுகிறது. நினைவாற்றல்  அதிகரிக்கும்.

உடல், புத்துணர்ச்சி பெறும். மன அழுத்தம், மனச் சோர்வு விலகும். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொள்வதால்  அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுவதுடன் மூளை நரம்புகள் சக்தி பெறுவதாகக் கூறுகிறார்கள் நரம்பியல் வல்லுநர்கள்.

மூளையின் வலது மற்றும் இடது பகுதி சமமாகத் தூண்டப்படுகிறது. மேலும், மூளைக்குச் செய்திகளைப் பரிமாற்றம் செய்யும் நரம்புகள் வலுப்பெறுகின்றன

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/let-s-find-out-about-the-benefits-of-thoppukaranam-121012500053_1.html


--

குழந்தைகளுக்கு பற்சிதைவு ஏற்படுவதைத்தடுப்பதற்கான வழி முறைகள்.

பற்சிதைவு அல்லது பல் சொத்தை என்பது தான் குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினர் மத்தியில் பொதுவான பிரச்சினையாக இருந்து வருகிறது. ...

Popular Posts