லேபிள்கள்

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

இலந்தை மரத்தின் மருத்துவ குணங்கள்

இலந்தைக்கு குல்லதி, குல்வலி, கோல், கோற்கொடி, வதரி என்று பல பெயர்கள் உண்டு.
உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம். 100 கிராம் இலந்தையில் கிடைக்கும் கலோரி 74% மாவுப் பொருள் 17 %, புரதம் 0.8 % மற்றும் தாது உப்புகள், இரும்புசத்தும் உள்ளது.இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் இதைச் சாப்பிடலாம்.
இலந்தைப் பழம் போல அதன் இலையிலும் அதிக மருத்துவப் பயன்பாடுகள் கிடைக்கின்றன
இந்தப் பழத்தில் இனிப்புச் சுவையும், சிலவற்றில் புளிப்புச் சுவையும்உண்டு. சிலவற்றில் சிறுசிறு புழுக்கள் இருக்கும். இந்தப் பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, டி சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் உள்ளது. வெறும் வயிற்றில் உண்ணக்கூடாது.
எலும்புகள் வலுப்பெற
உடலில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைவதால் எலும்புகள் பலமிழந்து காணப்படும். இதனால் இவர்கள் இலேசாக கீழே விழுந்தால்கூட எலும்புகள் உடைந்து போகும். இவர்கள் இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும். பற்களும் உறுதிபெறும்.

பித்தத்தைக் குறைக்க
உடலில் முக்குற்றங்களில் ஒன்றான பித்தம் அதிகரித்தால் தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல் என பல நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு. மேலும் பித்த நீர் அதிகரிப்பால் இரத்தம் சீர்கேடு அடையும். இவற்றைப் போக்கி, பித்தத்தைச் சமநிலைப்படுத்தும் குணம் இலந்தைக்கு உண்டு. இலந்தைப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்.

வாந்தி குறைய
பேருந்தில் பயணம் செய்யும்போது சிலருக்கு வாந்தி, தலைச்சுற்றல் உண்டாகும். இவர்கள் பயணம் என்றாலே அரண்டு போவார்கள். இவர்கள் படும் அவஸ்தையை விட அவர்களுக்கு அருகில் இருப்பவர்களின் நிலை சங்கடத்திற்குள்ளதாக இருக்கும். இவர்கள் இலந்தைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், வாந்தி ஏற்படாது.

உடல் வலியைப் போக்க
சிலருக்கு அடிக்கடி உடல்வலி ஏற்படும். சிறிது வேலை செய்தால் கூட அதிகளவு உடல்வலி தோன்றும். முன்பெல்லாம் இரவு பகல் பாராமல் வேலை செய்வேன் இப்போது அப்படி செய்ய முடியவில்லையே என்று ஆதங்கப்படுவார்கள். பெரும்பாலும் 40 வயதைத் தாண்டியவர்களுக்கே இந்த நிலை ஏற்படும். இந்த உடல்வலியைப் போக்கி உடலைத் தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும்.

செரிமான சக்தியைத் தூண்ட
பசியில்லாமல் அவதிப்படுபவர்களும் சிறிது சாப்பிட்டாலும் செரிமானம் ஆகாமல் கஷ்டப்படுபவர்களும் இலந்தைப் பழத்தின் விதையை நீக்கிவிட்டு பழச் சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.

பெண்களுக்கு
பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கவும், அதிக உதிரப்போக்கை தடுக்கவும் இலந்தைப் பழம் பயன்படுகிறது.

கால்சியச் சத்து இலந்தைப் பழத்தில் அதிகம் இருப்பதால் எலும்புகளில் ஏற்படும் தேய்மானத்தைக் கட்டுப்படுத்தி, மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் சத்து இழப்புகளை ஈடுசெய்யும்.
இலந்தை இலையின் மகத்துவம்
இல‌ந்தை பழ‌த்‌தி‌ல் ‌நிறைய ச‌க்‌தி‌க‌ள் உ‌ள்ளன. அதே‌ப்போல இல‌ந்தை இலை‌யிலு‌ம் அ‌திக மரு‌‌த்துவ ச‌க்‌திக‌ள் உ‌ள்ளன.

இலந்தை இலையை மை போல் அரைத்து வெட்டுக் காயத்தின் மீது வைத்து கட்டினால் விரைவில் காணம் குணமாகும்.
இலந்தை இலையை அரைத்து எலுமிச்சை அளவு எடுத்து பசு மோரில் கலந்து குடித்து வர எருவாய் கடுப்பு குணமாகும்.
இலந்தை இலையை அரைத்து அந்த விழுதைக் கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.
இலந்தை இலையை மைபோல் அரைத்து பூசி வர மயிர் புழுவெட்டு நீங்கும்.
இலந்தை இலையின் சாறெடுத்து அதனை உள்ளங்கை, உள்ளங் கால்களில் பூசி வர, அங்கு அதிகமாக வியர்வை சுரப்பது கட்டுப்படும்.

இலந்தை பழத்திற்கு உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் ஆற்றலும் உண்டு.
வயிற்றுக் கடுப்புக்கு மருந்து
பல இடங்களில் பல வகையான உணவுகளை உட்கொண்டு நமது வயிற்றைக் கெடுத்து வைத்திருக்கிறோம்.
அப்படி செய்வதால் வயிற்றுக் கடுப்புக்கு ஆளாவதும் நாம்தான்.அதற்கு மருந்து இலந்தை இலை மற்றும் பட்டையில் உள்ளது.
இலையையும், பட்டையையும் சம அளவு எடுத்து ஒன்றிரண்டாய் நசுக்கி 200 மில்லி நீர் விட்டுக் காய்ச்சி 100 மில்லியாக வற்றியதும் குடித்து வர கழிச்சலும், ரத்தம் கலந்து போவதும் குறையும். வயிற்றுக் கடுப்புக்கு இது ஒரு மாமருந்தாக அமையும்

இலந்தைப் பழத்தின் நன்மை
இழந்தை பழத்தில் வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து ஆகியவை உள்ளன.
இலந்தை பழம் சாப்பிட்டு வந்தால் உடல் வளர்ச்சி ப¦றும். எலும்பும், பல்லும் உறுதியடையும். இலந்தைக்கு பித்தத்தை தணிக்கும் குணம் உண்டு. உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்தும் ஆற்றல் இலந்தைப் பழத்திற்கு உண்டு. கொட்டையை நீக்கிவிட்டு இலந்தை பழத்தை மட்டும் உலர்த்தி சாப்பிட்டு வர இருமல் தணியும்

இளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம‌்
த‌ற்போது பெரு‌ம்பாலான இளைய தலைமுறை‌க்கு தலையாய ‌பிர‌ச்‌சினையே தலை முடிதா‌ன். தலை முடி உ‌தி‌ர்வது, இள நரை, பொடுகு போ‌ன்றவைதா‌ன். இவை பெரு‌ம்பாலு‌ம், சு‌ற்று‌ச்சூழ‌ல் கெ‌ட்டிரு‌ப்பது ம‌ற்று‌ம் ப‌ணி‌ச் சுமை காரணமாக ஏ‌ற்படு‌கிறது.

இளநரையைப் போக்கும் தன்மை இலந்தை இலைக்கு உண்டு. இதை நன்கு அரைத்து தலையில் தடவி 10 நிமிடங்கள் வரை ஊறவிட்டு தலையை அலச இளநரை மாறும்.
இலந்தை இலையையும் சிறுகிளைகளையும் நன்கு அரைத்து கட்டிகள், கொப்புளங்களின் மீது வைத்துக் கட்ட அவை சீக்கிரம் பழுத்து உடையும்.
மேலு‌ம், இள நரை ஏ‌ற்ப‌ட்டது‌ம் மன‌ம் கல‌‌ங்‌கி‌விடாம‌ல், உண‌வி‌ல் அ‌திகமான அளவு க‌றிவே‌ப்‌பிலையை சா‌ப்‌பி‌ட்டு வர வெ‌ள்ளை முடிக‌ள் ‌மீ‌ண்டு‌ம் கரு‌ப்பாக மாறு‌ம்.
பு‌த்‌தி‌க் கூ‌ர்மை‌க்கு இல‌ந்தை பழ‌ம்
மந்த புத்தியுள்ளவர்கள் இல‌ந்தை‌ப் பழ‌த்தை தொடர்ந்து உண்டு வர மூளை புத்துணர்வு பெறும்.
ஒரு கைப்பிடி இலந்தம்பழத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு அது 1_2 லிட்டராக சுண்டும் வரை கொதிக்க விட்டு தேன் அல்லது சர்க்கரை சேர்த்து எடுத்து வைத்து இரவில் படுக்கப் போகும் முன்பு இதை அருந்தி வர மூளை புத்துணர்ச்சி பெறும்.
பற்களில் ஏற்படும் கூச்சம், பல் ஈறுகளில் ஏற்படும் இரத்தக் கசிவு போன்றவைகளுக்கு இலந்தையை மென்று தின்பது நல்ல பலன் தரும்.

இ‌தி‌ல் கா‌ல்‌சிய‌ம் ச‌த்து அ‌திகமாக இரு‌ப்பதா‌ல் ப‌ற்க‌ள் ம‌ற்று‌ம் எலு‌ம்புகளு‌க்கு அ‌திக ந‌ன்மைகளை அ‌ளி‌க்‌கிறது. எலும்பு மற்றும் பற்களுக்கு உறுதியும், உடம்புக்கு பலமும் தரும் வகை‌யி‌ல் இ‌ல‌ந்தை பழ‌ம் அமை‌ந்து‌ள்ளது.
எ‌ல்லா‌ப் பழ‌ங்களையு‌ம் உணவு‌க்கு மு‌ன்பு தா‌ன் சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம். ஆனா‌ல் இல‌ந்தை‌ப் பழ‌த்தை பகல் உணவுக்குப் பின்பு உண்பதால் நன்கு ஜீரணமாவதும் பித்தமும் கட்டுப்படும்.
காட்டு இலந்தை

இந்த பழங்களிலுள்ள ஜிஜுவாய்டுகள், ஜிஜுவோசைடுகள், ரோசியோசைடுகள் போன்ற பிளேவனாய்டுகள், வைட்டமின் சி, கௌமாரியோலைட்டுகள் ஆகியன உடலில் ஏற்படும் ஒவ்வாமையை நீக்கி, மூளை நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, தூக்கத்தையும் மன அமைதியையும் தருவதுடன், உணவு, சிறுநீர்ப்பாதை மற்றும் சுவாசப் பாதையில் தோன்றும் வறட்சியை நீக்கி, புண்களை ஆற்றி, உடலுக்கு குளிர்ச்சியையும் தருகின்றன.
பழுத்த காட்டு இலந்தைப்பழங்களை கையால் பிசைந்து, கொட்டையை நீக்கி, அத்துடன் 8 பங்கு நீர்விட்டு கொதிக்கவைத்து, வடிகட்டி, தேவையான அளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து கொதிக்கவைத்து, பாகு பதத்தில் மீண்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை தினமும் இரவு படுக்கும்பொழுது 5 முதல் 10 மில்லியளவு சாப்பிட்டுவர உடல் எரிச்சல் தணிந்து, ரத்தஅழுத்தம் சீராகும். சுறுசுறுப்பு உண்டாகும். அடிக்கடி இந்த காட்டு இலந்தை சர்பத்தை குடித்துவர ஆரோக்கியம் மேம்படும். யுனானி மருந்துக்கடைகளில் கிடைக்கும் சர்பத்-ஏ-உன்னாப் என்ற யுனானி மருந்தில் சீமை இலந்தைப்பழம் சேர்க்கப்படுகிறது. இதனை 15 முதல் 30 மில்லியளவு தினமும் 1 அல்லது 2 வேளை சாப்பிட்டுவர உணவுப்பாதை வறட்சி நீங்கி, உடல் குளிர்ச்சியடையும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

வெப்பம் தணிக்கும் வேப்ப மர நிழல்.! வேம்பு பற்றி அறியாத சில தகவல்கள்.!


வெப்பம் தணிக்கும் வேப்ப மர நிழல்.! வேம்பு பற்றி அறியாத சில தகவல்கள்.!
* வேப்ப மரத்திலிருந்து வீசும் காற்று ஒரு வகை மருத்துவ குணம் கொண்டது. இது உடலுக்கு தீங்கை விளைவிக்கும் நோய் உண்டாக்கும் நுண் உயிரிகளைக் (bacteria) கொல்லும் சக்தியை உடையது. வேப்பமரங்கள் அதிகமாக இருக்கும் கிராமங்களில் மற்ற இடங்களில் நோய்கள் பரவுவது போல் பரவுவது இல்லை.
* நன்றாக தழைத்து வளர்ந்து இருக்கும் வேப்ப மரத்தை தினந்தோறும் பார்த்து வந்தாலே கண்களுக்கு குளிர்ச்சி உண்டாகும். அம்மரத்தின் அடியில் மாலை நேரங்களில் அமர்ந்து இருந்தாலே மன இறுக்கம் குறையும். உடல் உபாதைகளும் நீங்கும்.
* இதனால் தான் மன நல காப்பகங்களில் கூட அதிகமாக நாம் வேப்ப மரங்களை காண முடியும். இதனால் மன நலம் பாதிக்கபட்டவர்கள் குணமடைய வாய்ப்பு உண்டு.
* இயற்கையாகவே வேப்பமரத்தின் இலைகளின் நுனி பகுதிகள் பூமியை பார்த்த படியே கீழ் நோக்கி இருக்கும். இதனால் ஒளிச்சேர்கையின் போது வெளியாகும். பிராணவாயுவில் வெகு சக்தியுள்ள பிராண வாயுவின் ஒரு வகை (Ozone) (O3)கலந்து உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
* மனித உடலில் உண்டாகும் சகல வியாதிகளையும் குணமாக்கிடும் மருத்துவ குணத்தைக் கொண்ட சஞ்சீவி மரமாக வேம்பு திகழ்கின்றது. இம்மரத்தில் வேர், பட்டை, மரப்பட்டை, மரக்கட்டை , வேப்பங் கொட்டையின் மேல் ஓடு, உள்ளிருக்கும் பருப்பு, வேப்பமரத்து பால் , வேப்பம் பிசின், வேப்பங்காய், வேப்பம் பழம் , பூ, இலை , இலையின் ஈர்க்கு , வேப்பங் கொழுந்து போன்றவை மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளபடியால் அவை அனைத்துமே சித்த, ஆயுர்வேத முறை வைத்தியங்களில் மருந்துப் பொருளாகச் சேர்க்கப்பட்டு வருகிறது.
* இதனால் தான் அம்மை கண்டுள்ள வீட்டின் வாசற்புறத்தில் வேப்பிலைக் தோரணம் கட்டி வைப்பார்கள் .இவ்வாறு வைப்பதினால் அம்மை நோயானது பரவாமல் இருக்கும்.அம்மை நோய்க்கு ஆளானவர்களை வேப்பிலை மீது தான் படுக்க வைத்திருப்பார்கள். இது அம்மை நோய் இறங்கும் போது உடம்பில் ஒரு வித நமைச்சலும் அரிப்பும் உண்டாகும்
.
* இதைத் தடுக்கவே இவ்வாறு செய்கிறார்கள். அம்மை நோய் இறங்கிய பின் தலைக்குத் தண்ணீர் விடுவார்கள். அவ்வாறு தண்ணீர் விடும் சமயத்தில் வேப்பிலை மற்றும் மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து எடுத்த விழுதினை நோயாளியின் உடம்பு முழுவதும் பூசிப் பின் உடம்பைக் கழுவுவார்கள்.
* சமீப காலமாக அறிவியல் ஆய்வுகள் வேப்பிலைக்கு நச்சினை முறிக்கும் தன்மை மற்றும் நுண்ணிய விச கிருமிளையும் அழிக்கும் தன்மை உடையது எனத் தெளிவுபடுத்துகிறது.
* மேலும் குழந்தை பிரசவமான வீட்டின் வாசற்புறத்தில் வேப்பிலைத் தோரணம் கட்டி வைப்பார்கள். இவ்வாறு வைப்பதினால் வெளியிலிருந்து வருபவர்களிடமிருந்து நச்சுகிருமியானது தாய் சேய் இருவரிடமும் பரவாமல் தடுத்து இருவரையும் பாதுகாக்கும்.
* நீரழிவு என்று சொல்லகூடிய சர்க்கரை வியாதியையும் இது கட்டுபடுத்தும். எவ்வாறென்றால் வேப்பங் கொழுந்தை மை போல் அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சர்க்கரை வியாதியின் கடுமை குறைந்து அதைக் கட்டுபடுத்தலாம் .மேலும் மஞ்சள் காமலை, குடற்புண், பாம்புகடி, வீக்கம், காய்ச்சல் போன்றவைகளையும் இது குணப்படுத்த வல்லது.
* வேப்பம்பூ ஆனது நிம்பசு(ஸ்)டி ரோல் என்ற பொருளை கொண்டுள்ளது. இது மனித உடலில் சுரக்கும் ஊக்கிகளில் (On hormones) ஒன்றை ஒத்துப் போவதால் இது பசியை தூண்டிடவும், பித்தம் , வாந்தி, வாதம் சம்பந்தப்பட்ட நோய்களையும் குணப்படுத்துகிறது.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 15 பிப்ரவரி, 2017

உங்களுக்கு வேலை மாறும் எண்ணம் உள்ளதா? யோசித்து முடிவெடுங்கள்!

உங்களுக்கு வேலை மாறும் எண்ணம் உள்ளதா? யோசித்து முடிவெடுங்கள்!
``ஒரு நிறுவனத்தை விட்டு இன்னொரு நிறுவனத்துக்கு வேலை மாறுவது இன்றைய தலைமுறையினருக்கு சர்வசாதாரண விஷயமாக மாறிவிட்டது. தற்போது செய்துவரும் வேலையைவிட, இனி மாற விரும்பும் வேலை சிறப்பானது; வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடியது என்று நினைத்தால், மாறலாம். அப்படியில்லாமல் சம்பளம் குறைவு, நிறுவனம் சரியில்லை என்கிற காரணங்களுக்காக வேலையை மாற்றுவது தவறு. வேலை மாறும் எண்ணம் உங்களுக்கு இருந்தால், நிதானமாக யோசித்து நல்லதொரு முடிவினை எடுங்கள்'' என்ற எம்சிஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் ஹெச்.ஆர். பிரிவின் மேலாளர் ந.பத்மலட்சுமி, நீங்கள் தற்போது செய்துவரும் வேலையிலேயே தொடர்ந்து இருக்கலாமா அல்லது வேறு வேலைக்கு
  மாறலாமா என்கிற முடிவை எடுப்பதற்கான டெஸ்ட் கேள்விகளையும், பதிலையும் தந்தார். கீழே தரப்பட்டுள்ள பத்துக் கேள்விகளுக்கு நீங்கள் உண்மையாகப் பதிலளிக்கும்போது, உங்களால் சரியாக  முடிவெடுக்க முடியும்.
1.காலையில் அலுவலகம் செல்ல ஆயத்தமாகும் போது உங்களின் மனநிலை?
A.மிகவும் சுறுசுறுப்புடன் இருப்பேன். சரியான நேரத்துக்குள் அலுவலகத்தை அடைந்துவிட வேண்டும் என்கிற பரபரப்பு என் மனதில் இருக்கும்.
B.வேலைக்குச் செல்ல வேண்டுமே என்று அலுத்துக் கொள்வேன். தாமதமாகச் சென்றால் பிரச்னை இல்லை என்பதே எண்ணமாக இருக்கும்.
2.ஒருநாள் அலுவலகத்தில் தங்களின் சக பணியாளரை பார்க்காமல் இருந்தால், எப்படி உணர்வீர்கள்?
A.ஏமாற்றம் மற்றும் வருத்தத்துடன்.
B.நிம்மதியாக மற்றும் மகிழ்ச்சியாக.
3.நீங்கள் வேலை செய்யும் அலுவலகம் புதியவர்களை வேலைக்கு எடுக்கும்போது, உங்களின் செயல்பாடு?
A.அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆயத்தமாவேன்.
B.கவலை மற்றும் மன அழுத்தத்துடன் செயல்படுவேன்.
4.அலுவலகத்துக்கு அணிந்து செல்லும் உடையில் உங்களின் அக்கறை?
A.மிகச் சரியான ஆடை அணிந்து செல்வதில் அதிக அக்கறை காட்டுவேன்.
B.அயர்ன் செய்யப்பட்டிருக்கிறதா என்றெல்லாம் பார்க்காமல், இருப்பதை எடுத்து மாட்டிக்கொண்டு கிளம்பிவிடுவேன்.
5.நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் தலைமை அல்லது சீனியர் பதவியை அடைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா?
A.இலக்குகளை அடையும் நோக்கத்தோடு செயல்பட்டால் பதவி உயர்வுக்கான வாய்ப்பு உண்டு.
B.பல வருடங்களானாலும் வாய்ப்புகள் கிடையாது.
6.கடந்த ஆறு மாதங்களில் வேலையின் வளர்ச்சிக்கான புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறீர்களா?
A.ஒவ்வொரு நாளும் ஏதேனுமொரு புது விஷயத்தைக் கற்றுக்கொண்டேதான் இருக்கிறேன்.
B.மிகவும் சோர்வாக இருந்ததால், எந்தவொரு புது விஷயத்திலும் நான் கவனம் செலுத்தவில்லை.
7.உங்களுடன் பணியாற்றுபவர் உங்களுக்கு....
A.நண்பர் மற்றும் சக பணியாளர்.
B.சக பணியாளர் மட்டுமே.
8.சென்ற ஆண்டைவிட நடப்பு ஆண்டில் அலுவலகத்தில் உங்களுக்கான வேலை எப்படி இருக்கிறது?
A.அதிகரித்திருக்கிறது. கூடுதல் பொறுப்புகள் தரப்பட்டிருக்கின்றன.
B.வேலைப்பளு குறைந்துள்ளது. வேலைகள் அதிகமாக இருப்பதில்லை.
9.உங்களின் கருத்தால் நிறுவனம் வளர்ச்சி அடைகிறதா?
A.ஆம். நான் சொல்லும் கருத்து, நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது.
B.நான் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக எந்தக் கருத்தையும் முன்வைப்பதில்லை.
10.முந்தைய சம்பள உயர்வைவிட, சமீபத்திய சம்பள உயர்வு எப்படி இருக்கிறது?
A.முந்தைய சம்பள உயர்வைவிட அதிகம்.
B.முந்தைய சம்பள உயர்வைவிடக் குறைவு.
மேலே குறிப்பிட்டிருக்கும் கேள்விகளுக்குப் பதில் அளித்துவிட்டீர்களா? நீங்கள் A மற்றும் B ஆப்ஷன்களில் எதை அதிகமாகப் டிக்
  செய்திருக் கிறீர்கள் என்று கணக்கிடுங்கள். இனி உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
அதிக A டிக்!
நீங்கள் தற்போதைய வேலையில் சிறப்புடன், திருப்தியாகப் பணியாற்றி வருகிறீர்கள். வெறும் சம்பள உயர்வுக்காக வேலை மாறும் எண்ணம் உங்களுக்கு இருந்தால், அதை மாற்றிக்கொள்வது நல்லது. சம்பளம் அவசியம்தான் என்றாலும், வேலையில் திருப்தி மற்றும் வளர்ச்சி என்பது அவசியத்திலும் அவசியமாகும்.

உங்களில் ஒரு சிலர் நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் தலைமை அல்லது சீனியர் பதவியை அடைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்கிற கேள்விக்கு, வாய்ப்புகள் இல்லை என்கிற பதிலை தேர்வு செய்திருக்கலாம். இதை வைத்து மட்டுமே வேலையை மாற்றிவிட வேண்டும் என்கிற முடிவுக்குச் சென்றுவிடக் கூடாது. பதவி உயர்வு கிடைக்க இன்னும் கூடுதலாக, உத்வேகத்துடன் பணியாற்ற வேண்டும். நிறுவனம் வளர்ந்தால்தான் நாம் வளர முடியும். அதனால் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக நாம் பாடுபட வேண்டும் என்கிற எண்ணத்து டன் செயல்படுபவர்களாக இருக்கிறீர்கள்.

நீங்கள் இப்போது செய்துவரும் வேலை நீங்கள் விரும்பிச் செய்யும் வேலை என்பதால், தற்போதைய வேலையையே நீங்கள் தொடரலாம். முயற்சிக்கான முன்னேற்றம் கிடைக்கத் தாமதமானாலும், உங்களுகளுக்கான வளர்ச்சி இந்த அலுவலகத்திலேயே காத்துக் கொண்டிருக்கிறது.

அதிக B டிக்!
நீங்கள் விருப்பமே இல்லாமல் வேலையை செய்துவருகிறீர்கள் என்பதையே உங்கள் பதில் காட்டுகிறது. அதனால் உங்களுக்குப் பிடித்தமான வேலையைத் தேடிப் பிடியுங்கள். அல்லது கிடைத்த வேலையைப் பிடித்த வேலையாக மாற்றிக் கொள்ளுங்கள். வேலையில் வெற்றி பெறுவதன் மூலம் பதவி உயர்வு, சம்பள உயர்வு விரைவாகக் கிடைத்து முன்னேற்றப் பாதையை எளிதாகப் பெற முடியும்.

பிடிக்காத வேலையை திருப்தியில்லாமல் நீங்கள் செய்து வந்தால், அதனால் உங்களுக்கும் பலன் கிடையாது. உங்களால் நிறுவனத்துக்கும் பயன் கிடையாது. நீங்களாக வெளியேறுவதற்குள், உங்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு நிர்வாகமே சீக்கிரமாக உங்களை வேலையிலிருந்து நீக்கிவிடும்.

50:50!
தற்போதைய வேலையும் உங்களுக்குப் பிடித்திருக்கிறது. அதேசமயம் நிறுவனத்துடன், உடன் வேலை செய்யும் பணியாளர்களுடன் ஒரு சில மனக்கசப்புகள் இருப்பதாக உணர்கிறீர்கள். இந்த வேலை உங்களுக்குப் பிடித்த வேலையாக இருந்தால், இதில் நிலைத்திருக்க செய்யவேண்டிய விஷயங்கள் என்ன என்பதை ஆராய்ந்து, அதன்படி நடக்க ஆயத்த மாகுங்கள். அப்போது மனக்கசப்பாக உணரும் சில விஷயங்கள் எதிர்காலத்தில் காணாமலே போய்விட வாய்ப்புண்டு. அல்லது மனக்கசப்புகள் மறையவில்லை எனில், வேறு ஒரு நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்வது நல்லது


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 13 பிப்ரவரி, 2017

ஏகாந்தமான இரவுத் தூக்கத்தை வரவழைக்க, சில வழிகள் உண்டு!

 கவுதம்தாஸ்
நரம்பியல் மனநல மருத்துவர்
"எனக்கு வயது 21. கல்லூரியில் படிக்கிறேன். நான் தினமும் காலையில் சீக்கிரம் எழுந்திருக்க நினைத்தாலும், முடியவில்லை. இரவு இரண்டு மணி வரைகூட என்னால் விழித்திருக்க முடியும். ஆனால், காலை எட்டு மணிக்கு முன்னால் எழுந்திரிக்கவே முடியவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக இதே நிலைதான். இதில் இருந்து மீள்வது எப்படி?"

"இன்றைக்குப் பெரும்பாலானவர்கள் சந்திக்கும் பிரச்னையே இதுதான். தொலைக்காட்சி, கணினி, கைப்பேசி பயன்பாடு அதிகரித்தப் பிறகு, இரவுத் தூக்கம் தாமதம் ஆகிவிட்டது. உங்கள் பிரச்னைகளைப் பார்க்கும்போது, இன்சோம்னியா பிரச்னை இருக்க வாய்ப்பு உள்ளது. இரவு, படுக்கையில் படுத்தால் நீண்ட நேரத்துக்கு உறக்கம் வராமல் இருப்பது, அதிகாலையில் வெகு சீக்கிரமே விழிப்பு வருவது, அடிக்கடி திடுமென விழிப்பு வருவது ஆகியவை அனைத்துமே இன்சோம்னியாவின் அறிகுறிகள்தான்.

இன்சோம்னியா பிரச்னையால், வேலையில் கவனம் செலுத்த முடியாது. தலைவலி, அஜீரணக் கோளாறு ஏற்படலாம். ஹார்மோன்கள் சமச்சீரின்மை, பதற்றம், மன அழுத்தம் ஆகியவை வரும். இதற்கு மாத்திரை, மருந்துகள் மூலம் தீர்வு உண்டு என்றாலும், உங்கள் வாழ்க்கை முறையைச் சிறிதளவு மாற்றி அமைத்தாலே நல்ல பலன் கிடைக்கும்.

நமக்குள் உயிர் கடிகாரம் (Circadian rhythm) உள்ளது. இதனை முறைப்படுத்த, உங்கள் அன்றாட வேலை நேரத்தைச் சரியாகத் திட்டமிட வேண்டும். காலை ஆறு மணிக்கு எழ விரும்பினால், இரவு 10 மணிக்குப் படுக்கைக்குச் சென்றுவிட வேண்டும். பொதுவாக, ஏழெட்டு மணி நேரத் தூக்கம் அனைவருக்கும் அவசியம். ஏகாந்தமான இரவுத் தூக்கத்தை வரவழைக்க, சில வழிகள் உண்டு.
மாலையில், தளர்வான ஆடைகளை அணியுங்கள்.
இரவு ஏழு மணிக்குப் பிறகு காபி, டீ, சாக்லேட், கோலா பானங்களைத் தவிர்த்துவிடுங்கள். ஏழெட்டு மணிக்குள், இரவு உணவை முடித்துவிடுங்கள். வயிறு முட்ட சாப்பிட வேண்டாம். இரவு உணவில், எண்ணெய் அதிகம் சேர்க்காமல் இருப்பது நல்லது.
இரவு, படுக்கைக்குச் செல்லும் முன்பு, மிதமான வாக்கிங் செல்லலாம். அதன் பிறகு, சாதாரண நீரில் குளிக்கவும்.
உடல் நன்றாகச் சோர்வாகி, தூக்கம்வந்தால் மட்டுமே, படுக்கையறைக்குச் செல்ல வேண்டும். தூக்கம் வரவில்லை எனில், படுக்கையில் புரள வேண்டாம். மற்றொரு அறையில் புத்தகம் படிப்பது, மெல்லிசை கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுங்கள்.
செல்போன் சைலண்ட் மோடில் இருக்கட்டும். அதிக சத்தத்தில் பாடல்கள் கேட்பதைத் தவிருங்கள்.
படுக்கையறையில் டி.வி இருந்தால் அணைத்துவிடுங்கள். பளீர் வெளிச்சம் வேண்டாம். மங்கலான வெளிச்சம் தரும் விளக்கைப் பொருத்துங்கள்.
இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பு, வெதுவெதுப்பான சூட்டில் அரை டம்ளர் பால் அருந்துங்கள். காலை நேரத்தில் செய்யும் யோகா முதலான மனதை ஒழுங்குபடுத்தும் பயிற்சிகள், இரவு நேரத் தூக்கத்தை எளிதில் வரவழைத்துவிடும்.
இந்தப் பழக்கத்தை கடைபிடித்தால் சில நாட்களிலேயே உங்கள் பிரச்னை சரியாகிவிடும். முன் தூங்கி முன் எழலாம்!
இவை எதுவுமே உங்களுக்கு பலனளிக்காத பட்சத்தில், நீங்கள் விரைந்து மருத்துவரை அணுகவும்
http://pettagum.blogspot.in/2015/05/blog-post_60.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 11 பிப்ரவரி, 2017

ரத்தசோகைக்கு என்னென்ன சாப்பிட வேண்டும்?”

 "எனக்கு ரத்தசோகை இருப்பதாக மருத்துவர் சொல்லியிருக்கிறார். ரத்தத்தில் ஹீமோகுளோபின் (HB) அளவு 9  ஆக இருக்கிறது. உடலில் ரத்தம் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும். என்னென்ன சாப்பிட வேண்டும்?"

ரோஹையா,
மகப்பேறு மற்றும் குழந்தையின்மைக்கான சிறப்பு நிபுணர், திருச்சி.
"பெண்களுக்கு ஹீமோகுளோபினின் அளவு 12-க்கும் மேல் இருப்பது நல்லது. வயிற்றில் பூச்சி, சீரற்ற மாதவிடாய், சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது போன்ற காரணங்களால் ரத்தசோகை வரலாம். கல்லீரலில் ஏதாவது பிரச்னை இருந்தால் பசி எடுக்காது. இதனால், சரிவர சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டு, ரத்தசோகையாக மாறிவிடும். ரத்தசோகை இருப்பவர்கள், தினமும் பச்சை நிறக் காய்கறிகளைச் சாப்பிடுவது அவசியம். தினமும், ஒரு பழத்தை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எதனால் ரத்தசோகை ஏற்பட்டது என்ற காரணத்தைக் கண்டறிந்து, அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். கீரை, பாதாம், பிஸ்தா, நிலக்கடலை, பேரீச்சம்பழம் போன்றவற்றைத் தினமும் சாப்பிட்டுவர, இதில் உள்ள இரும்புச்சத்து, ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். அசைவ உணவு சாப்பிடுவோர் மீன், ஆட்டு இறைச்சி, ஈரல், மண்ணீரல் போன்றவற்றைச் சாப்பிடலாம். உடற்பயிற்சி செய்தால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். வயிற்றுக்கு ரத்த ஓட்டம் நன்றாக இருந்தால், சாப்பிடுவது எளிதாக இருக்கும். இரும்புச் சத்தை அதிகரிக்க மாத்திரைகளும் சாப்பிடலாம். ஆனால், அதைவிட உணவுப் பழக்கத்தின் மூலம்  ஹீமோகுளோபினின் அளவை அதிகரிப்பதே நல்லது."


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 9 பிப்ரவரி, 2017

எலும்புகளை காக்க 10 கட்டளைகள்


முத்துக்குமார்
எலும்பு மருத்துவர்

அரை மணி நேரத்துக்கு மேல் ஒரே நிலையில் (Postures) அமரக் கூடாது. உட்காருவதோ, நிற்பதோ, எழுதுவதோ, படம் பார்ப்பதோ, ஓவியம் வரைவதோ எதுவாக இருந்தாலும், அரை மணி நேரத்துக்கு மேல் தொடரக் கூடாது. இடைவெளி விட்டு வேலைகள் செய்வது, எலும்புகளின் ஆரோக்கியத்துக்கான முதல் கட்டளை.
சோம்பலான வாழ்க்கைமுறை, எலும்பு நோய்களுக்கு முக்கியமான காரணம். நடைப்பயிற்சி, மெதுஓட்டம் போன்ற பயிற்சிகளின் மூலம் எதிர் மின்னோட்டம் (நெகட்டிவ் எலக்ட்ரிசிட்டி) உடல் முழுவதும் பாயும். இதனால், கால்சியம் மற்றும் தாதுக்கள் ஈர்க்கப்பட்டு, எலும்புகள் வலுவாகும். மூட்டு, தசை வளைந்துகொடுக்கும் தன்மையைப் பெறும்.
எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் டி அவசியம் தேவை. சூரிய ஒளி மூலமாகவே வைட்டமின் டியைப் பெற முடியும்.
  வைட்டமின் டி மாத்திரைகளைச் சாப்பிட்டாலும், அது முழுமையாகக் கிரகித்து உடலுக்குள் செல்ல, சூரிய ஒளி தேவைப்படுகிறது. தினமும் காலை, மாலை இருவேளையும் சூரிய ஒளி அரை மணி நேரமாவது நம் உடலில் படவேண்டும்.
எலும்புகளின் ஆரோக்கியத்தைக் கெடுப்பதில், சர்க்கரை நோய்க்கு முதல் இடம். சர்க்கரை, ரத்த அழுத்தம் இரண்டையும் கட்டுக்குள் வைத்துக்கொண்டால், எலும்பு அடர்த்திக் குறைவு வராமல் தடுக்க முடியும்.
எலும்பு தொடர்பான பிரச்னைக்கு, மருத்துவர் பரிந்துரைக்கும் உடற்பயிற்சிகளை, அறிவுறுத்தும் காலம் வரை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். வலி குறைந்ததும் உடற்பயிற்சியை நிறுத்தினால், மீண்டும் பிரச்னைகள் தொடரத்தான் செய்யும்.
மூட்டுகளை வலுவாக்கச் சிறந்த பயிற்சி நீச்சல்தான். தண்ணீருக்குள் இருக்கும்போது, நம் உடல் எடை ஆறில் ஒரு பங்காகக் குறைந்துவிடுகிறது. தண்ணீருக்குள் மூட்டுகளை நன்கு அசைக்கக்கூடிய இலகுத்தன்மை கிடைப்பதால், தசைகள் வலுவடைந்து, மூட்டுக்களின் வளைவுத்தன்மையும் அதிகரிக்கிறது.
எலும்பு தொடர்பான விபத்துகள் ஏற்பட்டால், முழுமையான சிகிச்சையை எடுத்துக்கொள்வது நல்லது. விளையாட்டின்போது ஏற்படும் காயங்களை அலட்சியம் செய்யக் கூடாது. 'சிறிய அடிதானே, அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்' போன்ற அலட்சியங்கள், அதிக அளவில் எலும்பு பாதிப்பை ஏற்படுத்தும்.
மூட்டு வலி, முதுகு வலி, கால் வலி, வீக்கம், முட்டியில் சத்தம் வருதல், காலை எழுந்ததும் கை, கால்களை அசைக்க முடியாமல் இருத்தல் போன்ற பிரச்னைகளை, ஆரம்பத்திலேயே கவனித்தால் எளிதில் சரிசெய்யலாம். அறிகுறிகள் தீவிரமானால், சிகிச்சை தேவைப்படும் நாட்களும் அதிகமாகிவிடும்.
எலும்புகளின் உருவ அமைப்புக்குப் புரதம் தேவைப்படுகிறது. புரதம் நிறைந்த உணவுகளைத் தேவைப்படும் அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அதுபோல, எலும்புகள் ஆரோக்கியமாக வைட்டமின் சி, டி, கால்சியம் சத்துக்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். பால், பால் பொருட்கள், கேழ்வரகு, மீன், ஆரஞ்சு, சோயா, அதிக அளவு பச்சைக் காய்கறிகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
உயரத்துக்குத் தகுந்த எடையைப் பராமரிப்பது, மூட்டுக்களைப் பாதுகாக்கும். அதிக எடையைத் தாங்க முடியாமல், மூட்டுக்கள் தேய்ந்துவிடும் என்பதால், எடை அதிகமாக இருப்பவர்கள், எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டால், மூட்டுவலி குறைவதை உணர முடியும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

குழந்தைக்கு பசும்பால் தரலாமா?


சௌமியா
ஊட்டச்சத்து ஆலோசகர்
பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு பிறகு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்பதில் எல்லா பெற்றோருக்கும் குழப்பம் வரும். நான்கு மாதங்கள் முடிந்ததுமே, தாய்ப்பால் போதவில்லை என தெரிந்தவர்கள் அட்வைஸ் செய்ய ஆரம்பிப்பார்கள்.  அடிக்கடி அழும் குழந்தை வேறு அது உண்மையோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தும். எந்த வயதில் இருந்து திட உணவு ஆரம்பிப்பது? அதை எப்படிப் பழக்குவது?
குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தாய் சத்தான உணவுகளை சாப்பிடும்பட்சத்தில், குழந்தைக்கு தேவையான பால் நிச்சயம் சுரக்கும். தாய்ப்பாலில் தான் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. அதிலேயே 88 சதவிகிதம் நீர் உள்ளதால், தனியாக தண்ணீர் தரத் தேவை இல்லை. ஆறு மாதங்களுக்குப் பிறகு, திட உணவுகளை மெல்ல பழக்கலாம்.

உணவின் அளவில் கவனம் தேவை
எந்த உணவைக் கொடுத்தாலும், முதலில் ஒன்றிரண்டு ஸ்பூன் அளவுக்குத் தரலாம். பின், குழந்தை விரும்பிச் சாப்பிடத் தொடங்கியதும் ஒவ்வொரு ஸ்பூனாக அளவை அதிகரிக்கலாம். குழந்தை சாப்பிடுகிறது என்பதற்காக, அதிகமாகவும் ஊட்டக் கூடாது. ஒவ்வொரு முறையும் புதிதாகத் தயாரித்துத் தர வேண்டும். பழைய உணவை சூடுசெய்து தரக் கூடாது.
குழந்தையின் செய்கைகளைக் கவனியுங்கள்
உணவை முதன் முதலில் ஊட்டும்போது, முகம் சுளித்து, உணவை குழந்தைகள் துப்பலாம். உடனே, நிறுத்திவிடக் கூடாது. மூன்று நான்கு நாட்கள் கொடுத்து பழக்க முயற்சிக்கவும். சாப்பிட மறுத்து அழுதால், அன்றைய தினம் தவிர்த்துவிட்டு, மறுநாள் அந்த உணவைக் கொடுத்துப் பழக்கலாம். உணவு தேவை எனில், ஸ்பூனை கையில் பிடிக்க முயற்சி செய்யும். இதன் மூலம், குழந்தை உணவைக் கேட்கிறது எனப் புரிந்துகொள்ளலாம்.
உப்பு, சர்க்கரைக்கு நோ
தாய்ப்பாலில் எந்த சுவையும் இருக்காது. ஆறு மாதங்கள் வரையில் எந்த சுவையையும் சுவைத்திடாத குழந்தைக்கு, சர்க்கரை, உப்பு கலந்த உணவை உடனே தரக் கூடாது. பனைவெல்லம், பனங்கல்கண்டு போன்ற இனிப்புகளையும் பழக்கக் கூடாது. தேனில் இருக்கும் பாக்டீரியா, குழந்தைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.
பசும்பால் வேண்டாம்
தாய்ப்பால் போதவில்லை எனில், மருத்துவர் பரிந்துரைக்கும் ஆயத்த பால் பவுடரைத் தரலாம். பசும்பால் ஜீரணம் ஆக தாமதமாகும் என்பதால், ஒரு வயது நிரம்பாத குழந்தைகளுக்கு தரக் கூடாது. தவிரவும் பசும்பாலின் சுவைக்குப் பழகிய குழந்தைகள், தாய்ப்பாலைத் தவிர்க்க நேரிடலாம்.
மசித்த காய்கறிகள், பழங்கள்
உருளைக்கிழங்கு, கேரட், பூசணி போன்ற காய்களை வேகவைத்து, நன்கு மசித்துத் தரலாம். ஒரு வாரம் முழுவதும் உருளைக்கிழங்கு என்றால், அடுத்த வாரம் கேரட் என மாற்றி மாற்றிக் கொடுக்கலாம். தோல் நீக்கிய காய்கறிகளை நன்கு மசித்த பிறகே கொடுக்க வேண்டும். இந்த உணவுகளில் உப்பைத் தவிர்க்க வேண்டும்.
தோல் நீக்கிய ஆப்பிள், வாழைப்பழம் ஆகியவற்றை மசித்து, மாவு போல மாற்றிய பின் தரலாம். ஒருவேளை, காய்கறி, ஒருவேளை பழம் என, மாற்றி ஊட்டுவது நல்லது. இதனால், குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். உணவை மிக்ஸியில் போட்டு, அரைத்துக் கொடுக்கக் கூடாது.
வளரும் குழந்தைக்கு புரதம்
பருப்பு சாதத்தை நெய் விட்டு குழந்தைக்குக் கொடுக்கலாம். நன்கு வேகவைத்து, மசித்த பச்சைப் பட்டாணியும் குழந்தைக்கு நல்லது. முட்டையில் புரதம் உள்ளது.
  ஒன்பது மாத குழந்தைக்கு, வெறும் மஞ்சள் கருவை மட்டும் தரலாம். ஆனால், ஒரு வயது ஆன பிறகுதான், குழந்தைக்கு வேகவைத்த முழு முட்டை, மீன், கோழி போன்றவற்றைத் தர வேண்டும். இவற்றில் காரம், மசாலாவைத் தவிர்க்கவும்.
பசியைப் போக்கும் கஞ்சி
அரிசியை இரண்டாக உடைத்து கஞ்சி வைத்துத் தரலாம்.
  இதேபோல் கேழ்வரகுக் கஞ்சியும் தரலாம். இந்தக் கஞ்சிகளை ஒரே நாளில் அதிக அளவு சாப்பிடத் தரக்
கூடாது. ஒவ்வொரு ஸ்பூனாக பழக்கப்படுத்தி, அளவை அதிகரிக்க வேண்டும்.
நல்ல பாக்டீரியாவுக்கு யோகர்ட்
கடைகளில் விற்கப்படும் பிளெயின் யோகர்டை, ஒன்பது மாதக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். ஃப்ளேவர்களைத் தவிர்க்க வேண்டும். தயிர், பாலைவிட யோகர்ட்டில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள்,
  குழந்தைக்கு நன்மையைச் செய்யும்.

நீர்த்த பழச்சாறு
முதன் முதலில் பழச்சாறை அறிமுகப்படுத்தும்போது,
  ஒரு ஸ்பூன் பழச்சாற்றில் மூன்று ஸ்பூன் நீர் கலந்து நீர்த்த வடிவில் தர வேண்டும். ஏழாவது மாதம் தொடங்கிய பின், பழச்சாறுகளை அப்படியே தரலாம். ஆப்பிள், சாத்துக்குடி, மாதுளை, தர்பூசணி, எலுமிச்சை போன்ற அனைத்துப் பழச்சாறுகளையும் கொடுக்கலாம். ஆனால், மாலை ஐந்து மணிக்கு மேல் தரக் கூடாது.
சிப்பர் / பாட்டிலை தவிருங்கள்
எந்த உணவாக இருந்தாலும் குழந்தைகளுக்கு ஸ்பூன், பாலாடை போன்றவற்றில் ஊட்டுவதே நல்லது. சிப்பர், பால் புட்டி போன்ற ப்ளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்கவும். பால் புட்டி மற்றும் சிப்பரில் குடித்துப் பழகும் குழந்தைகளுக்கு, கை சப்பும் பழக்கமும் ஏற்படக்கூடும்.
நல்ல தண்ணீர்
திட உணவுகளை உண்ணும் குழந்தைக்கு,
  நீரும் அவசியம். வடிகட்டி, நன்றாகக் கொதிக்கவைத்து, ஆறிய நீரை குழந்தைகளுக்குக் கொடுப்பதே நல்லது.
முதுகைத் தட்டிவிடுங்கள்
தாய்ப்பாலோ, பிற உணவுகளோ கொடுத்த உடன் குழந்தைகளைப் படுக்கவைக்கக் கூடாது. குழந்தையின் முதுகில் மெதுவாகத் தட்டி ஏப்பம் வந்த பிறகுதான் படுக்கவோ, உட்காரவோ வைக்க வேண்டும். குழந்தைக்கு விக்கல் வந்தால், முதுகில் இதமாகத் தடவிவிட்டு, ஒரு ஸ்பூன் நீரை அருந்தக் கொடுக்கலாம்.

தாய்ப்பாலை சேகரிக்கலாம்
ஆறு மாதக் குழந்தைக்குத் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழல் வரலாம். வேலைக்குப் போகும் பெண்கள், தாய்ப்பாலை, பாட்டிலில் சேகரித்து ஃப்ரீசரில் வைக்க வேண்டும். பாலை, குழந்தைக்குக் கொடுப்பதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன், பால் சேகரித்த பாட்டிலை ஒடும் தண்ணீரில் (Running tap water) காண்பித்து, குளிர்ச்சியைப் போக்க வேண்டும். ஃப்ரீசரிலிருந்து எடுக்கப்பட்ட தாய்ப்பாலை, சூடு செய்வதோ மீண்டும் குளுமைப்படுத்துவதோ கூடாது. ஒருமுறை சேகரித்துவைத்த பாட்டிலைத் திறந்து, குழந்தைக்குக் கொடுத்துவிட்டால், மீண்டும் மூடி ஃப்ரீசரில் வைத்துப் பயன்படுத்தக் கூடாது. நிறைய பாட்டில்கள் வாங்கிவைத்து, அதில், ஒருவேளை குழந்தைக்குத் தேவைப்படுகிற பாலை மட்டும் சேமிக்கலாம். இப்படிச் சேமிக்கும் பாலை, ஒன்றிரண்டு வாரம் வரை ஃப்ரீசரில்வைத்துப் பயன்படுத்தலாம்.
ஒர் ஆண்டு வரை குழந்தைகளுக்கு அறுசுவையை அறிமுகப்படுத்தக் கூடாது. குறிப்பாக, இனிப்பு, உப்பு, காரத்தைத் தவிர்க்க வேண்டும்.
திட உணவுகளை ஒரு நாளைக்கு மூன்று நான்கு முறை கொடுக்கலாம். இடை இடையே தாய்ப்பாலும் அவசியம். ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் ஒருமுறை என, அதிகப்படியான உணவைக் கொடுக்கக் கூடாது.
தாய்ப்பாலிலே லாக்டோஸ் சர்க்கரை (Lactose sugar) உள்ளதால், குழந்தைக்கு இனிப்புச் சுவை தேவைப்படாது.
கை சப்பும் குழந்தைகளை அடிக்கக் கூடாது. வாயிலிருந்து கையை எடுத்துவிட்டு குழந்தையின் கவனத்தைத் திருப்ப முயற்சிக்கவும். பசி இருக்கிறதா என உறுதிசெய்துகொள்ளவும். மருத்துவரின் உதவியோடு, கை சப்பும் பழக்கத்தை நிறுத்தலாம்.
குழந்தையின் இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுப்பது நல்லது. குறைந்தது ஒரு வயது வரையாவது கொடுக்க வேண்டும்.
பசும்பால், தேன், வேர்க்கடலை, முட்டையின் வெள்ளை கரு போன்றவற்றை ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்குத் தரலாம்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

ஆகாரத்துக்கு முன்... பின்...

சாந்தி காவேரி
உணவியல் நிபுணர்
செரிமானம், நாம் சாப்பிட்ட பிறகு தொடங்கும் செயல் அல்ல. ஒரு உணவைப் பார்க்கும்போதோ அதன் வாசனையை உணரும்போதோ அல்லது பிடித்த உணவைப் பற்றி நினைத்தவுடனே, நம் வாயில் உமிழ்நீர் சுரக்கும்போதே ஆரம்பித்துவிடுகிறது. அடுத்ததாக உணவு சாப்பிட்டதும், வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் உணவைச் சிதைத்து உடலுக்குத் தேவையான வகையில் மாற்றிக்கொடுக்கும் பணியைச் செய்கிறது. "முறையான உணவு பழக்கம் என்பது சாப்பிடும் உணவையும், அதற்கு எடுத்துக்கொள்ளும் நேரத்தையும் மட்டும் குறிப்பதல்ல. இரண்டு உணவு நேரத்துக்கான இடைவேளையில் நாம் என்ன உண்கிறோம் என்பதும்தான். எனவே, இந்த நேரத்தில் நாம் என்ன செய்கிறோம் என்பதும் மிகவும் கவனிக்கப்பட வேண்டும்.

தண்ணீருக்குத் தடை:
வயிற்றின் அமிலத்தன்மையானது ஒன்றரையிலிருந்து மூன்று பி.ஹெச்(Ph) வரை இருக்கும். இந்த அளவில்தான் உணவானது அமிலத்துடன் சேர்ந்து நன்றாகச் செரிக்கப்படும். ஆனால், சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்தால், வயிற்றில் செரிமானத்துக்குத் தயாராக இருக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை நீர்க்கச் செய்துவிடும். இதனால், வயிற்றில் செரிமானக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னும் பின்னும் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். சாப்பிடும்போது, விக்கலோ அடைப்போ ஏற்பட்டால் மட்டும் சிறிது தண்ணீர் குடிக்கலாம். சாப்பிட்ட பிறகு, வெந்நீர் குடிப்பது சிறந்தது.
உணவுக்குப் பின் பழம் உண்ணலாமா?
உணவு செரிக்கப்படும் விதமும் பழங்கள் செரிக்கப்படும் விதமும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை. பழத்தில் உள்ள நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் எளிதான சர்க்கரை மூலக்கூறுகள் செரிப்பதற்கு, வேறு விதமான நொதிகள் பயன்படுத்தப்படும். உணவு சாப்பிடும்போதோ அல்லது சாப்பிட்ட உடனே பழங்களை எடுத்துக் கொள்ளும்போது, பழங்கள் உணவுடன் சேர்ந்து, வயிற்றிலேயே தங்கிவிடும். அதில், உள்ள சத்துக்களை உடலினால் உறிஞ்சிக்கொள்ள முடியாது. எனவே, சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்துக்கு முன்பும் பின்பும் பழங்கள் சாப்பிடக்கூடாது. சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டவுடன் பழங்களை எடுத்துக் கொண்டால், உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டுடன் பழத்திலுள்ள சர்க்கரையும் சேர்ந்து, சர்க்கரையின் அளவை அதிகரித்துவிடும். இவர்கள், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னரும் சாப்பிட்டபின் இரண்டு மணி நேரம் கழித்தும்தான் பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு கப் டீ ஓகே வா?
சாப்பிட்டவுடன் ஒரு கப் டீ அல்லது காபி குடிப்பது நிறைய பேருக்கு பிடித்த விஷயம். டீ மற்றும் காபியில் உள்ள டானின், காஃபைன் போன்ற பொருள்கள், நரம்பு மண்டலத்தைத் தூண்டி விடுவதால், ஏற்படும் புத்துணர்ச்சிதான் இதற்கு காரணம். ஆனால், சாப்பிட்டவுடன் டீ குடிக்கும்போது டீயானது, உணவிலுள்ள புரத மூலக்கூறுகளைக் கடினமாக்கி அதை செரிமானம் அடைய விடாமல் செய்துவிடும். இதிலுள்ள, பாலிபினால், டானின் போன்ற வேதிப்பொருள்கள் இரும்புச்சத்துடன் சேர்வதால், உடலால் இரும்புச்சத்தைக் கிரகிக்க முடியாது. இதனால், ரத்தசோகை வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம். சாப்பிடுவதற்கும் டீ குடிப்பதற்கும் குறைந்தது ஒரு மணி நேரமாவது இடைவேளை இருக்க வேண்டும்.
சாப்பிட்டவுடன் குளிக்கலாமா?
காலையில் வெந்நீரில் குளித்த உடன்,
  சாப்பிடும் பழக்கமும் சாப்பிட்டுவிட்டு, குளிக்கும் பழக்கமும் சிலருக்கு உண்டு. இவை இரண்டுமே தவறானவை. உணவு சரியாக செரிக்க சாப்பிட்டதும், ரத்த ஓட்டமானது நமது வயிற்றுப் பகுதிக்குதான் செல்ல வேண்டும். ஆனால், வெந்நீரில் குளிப்பதால் சூடான, உடலைக் குளிரிச்சியாக்க அதிக ரத்தம் சருமத்துக்குச் சென்றுவிடும். சாப்பிட்டவுடன் குளிப்பதால் ரத்த ஓட்டம் கை, கால் என அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றுவிடும். இதனால், வயிற்றுபகுதிக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, உணவானது சரியாகச் செரிக்க முடியாமல் போய்விடும். எனவே, குளித்து அரைமணி நேரம் கழித்துச் சாப்பிடலாம். அல்லது சாப்பிட்டுவிட்டு இரண்டு மணி நேரம் கழித்துக் குளிக்கலாம்.

ஓட்டமும் நடையும் வேண்டாம்
சாப்பிட்டவுடன் நடப்பது, உடற்பயிற்சி செய்வது நல்லதல்ல. இதனால், வயிற்றுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, செரிமானக் குறைபாடு ஏற்படும். அசிடிட்டி போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். சாப்பிட்ட பின் அரைமணி நேரம் கழித்து, 10 நிமிடங்கள் மெதுவாக நடப்பது நல்லது. உடற்பயிற்சி செய்பவர்கள் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்போ, சாப்பிட்ட இரண்டு மணி நேரத்துக்குப் பின்போ செய்யலாம்.
குட்டி தூக்கம் சரிதானா?
சாப்பிட்டவுடன் ரத்த ஓட்டம் முழுவதும் வயிற்றுபகுதிக்குச் செல்வதால், மூளைக்குச் செல்லக்கூடிய ரத்த ஓட்டம் குறைந்து விடும். இதனால், மூளை மந்தமாவதால், தூங்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது. சாப்பிட்டதும், படுக்கும்போது வயிற்றில் உள்ள அமிலத்துடன் கலந்த உணவானது, உணவுக்குழாய் வழியாகத் தொண்டைப் பகுதிக்கு மேல்நோக்கி வரும். உணவின் அமிலத்தன்மையால் உணவுக்குழாய் அரிக்கப்பட்டு நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். மேலும், நாம் படுக்கும்போது வயிற்றில் உள்ள உணவானது, உதரவிதானம் (Diaphragm) பகுதியில் அதிகப்படியான அழுத்தத்தை ஏற்படுத்துவதால், குறட்டை பிரச்னை ஏற்படுவதோடு தூக்கமின்மையும் வரும். எனவே, சாப்பிட்டதும் குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்துதான் தூங்கச் செல்ல வேண்டும்.
அப்படியானால் சாப்பிட்ட உடனே என்னதான் செய்வது? மனதுக்கு பிடித்தவர்களிடம், கொஞ்சம் நேரம் மனம்விட்டு பேசுங்கள். மகிழ்ச்சி தாண்டவமாடும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

புத்துணர்வு தரும் புதினா


ஆர்.எஸ்.இராமசுவாமி
தலைமை இயக்குநர், சித்த மருத்துவ மத்திய ஆராய்ச்சிக் குழுமம்
எளிதில் கிடைக்கக்கூடிய கீரை வகை புதினா. கார்ப்பும் துவர்ப்பும் கலந்த சுவையைக் கூட்டும் புதினாவை, தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் ஆரோக்கியம் பெருகும்.

புதினாவில், வைட்டமின்-பி, இரும்புச்சத்து அதிக அளவு இருக்கின்றன.
பசியைத் தூண்டுவதற்கு புதினாகீரை பெரிதும் உதவும். சிறுநீரைப் பெருக்கும், வாயுப் பிரச்னையை நீக்கும்.
சுவையின்மைப் பிரச்னையால் அவதிப்படுபவர்களும் வாந்தி வரும் உணர்வு இருப்பவர்களும், புதினாவை துவையலாகச் செய்து சாப்பிடலாம்.
புதினாவுடன் உலர்ந்த பேரீச்சம்பழம், மிளகு, இந்துப்பு, உலர்ந்த திராட்சை, சீரகம் சம அளவு சேர்த்து, எலுமிச்சைச் சாற்றுடன் கலந்து அரைத்துக்
கொள்ள வேண்டும். இதை, உணவுடன் சேர்த்துச் சாப்பிடலாம். காய்ச்சலின் போது ஏற்படும் வாய் கசப்பைப் போக்கும். ருசியை உணரவைக்கும்.
 
புதினாவை நிழலில் காய வைத்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் சமயங்களில், உலர்ந்த புதினா ஒரு கைப்பிடி எடுத்து, ஒன்றரை லிட்டர் நீர் சேர்த்து, கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை, மூன்று, நான்கு மணி நேர இடைவேளையில் 30 - 60 மி.லி குடித்துவந்தால், காய்ச்சல் சரியாகும்.
புதினாவுடன் கற்பூர புல்லை சம அளவு சேர்த்துக் காய்ச்சி, குடிநீர் தயார் செய்து அருந்தினால் தலைவலி, வாந்தி, காய்ச்சல் குணமாகும். சிறுநீர் நன்றாகப் பிரியும். நல்ல உறக்கமும் உண்டாகும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலியைப் போக்கும்.
ஈரில் ரத்தம் வடிதல் பிரச்னை சரியாகவும், வாய் துர்நாற்றத்தை
  போக்கவும், புதினா இலையை, நிழலில் காயவைத்துப் பொடித்து, பற்பொடியாகப் பயன்படுத்தலாம்.
புதினா இலையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய், பெப்பர்மிண்ட் தைலத்தை போல இருக்கும். ஆனால், காரம் குறைவாக இருக்கும்.
  இந்த எண்ணெயைத் தலைவலி வந்தால் தடவலாம். இந்த எண்ணெயை, சிறிதளவு நீரில் கலந்து உட்கொள்ள வயிற்றுவலி, வயிறு மந்தம் நீங்கி நன்றாகப் பசி எடுக்கும்.
புதினாவின் வாசனைக்கு, கொசுக்களை விரட்டும் தன்மை உண்டு.
  எனவே, வீட்டில் புதினா செடிகளை வளர்க்கலாம்.
புதினா கீரை சாற்றுடன் சிறிது தேன் கலந்து, தலையின் பக்கவாட்டில் தடவ, தலைவலி நீங்கும்.
தலைவலி, மூட்டு வலி, தசைப்பிடிப்பு ஆகியவற்றுக்கு பூசப்படும் களிம்புகளிலும் செரிமானக் கோளாறுகள், இருமல் ஆகியவற்றுக்கான மருந்துகளிலும் புதினா எண்ணெய் சேர்க்கப்படுகிறது.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 1 பிப்ரவரி, 2017

நோன்பும் மருத்துவமும்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
நோன்பாளி சில மருந்துகளைப் பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் பலருக்குள்ளது.
குறிப்பாக ஆஸ்துமா, பீனிஸ வருத்தம் உள்ளவர்கள் சுவாசிப்பதை இலகு படுத்துவதற்காக இன்ஹேலர் போன்றவற்றைப் பயன்படுத்துவர். நோன்பு இருக்கும் போது வீசிங் பிரச்சினை ஏற்பட்டால் இதைப் பயன்படுத்தலாமா என்றால் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறே ஆவி பிடிப்பதாக இருந்தாலும் பிடிக்கலாம். பெக்லேட் போன்ற டெப்லட் துகல்களைப் பொருத்த வரையில் தவிர்ப்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாகும். ஏனெனில், மருந்து துகல்கள் வாய்வழியே உள்ளே செல்கின்றது. எனவே, இதைத் தவிர்ப்பதே நல்லது.

இவ்வாறே ஊசி மூலம் மருந்து ஏற்றுவதிலும் தப்பில்லை. சேலைன் ஏற்றுவதைப் பொருத்தமட்டில் சேலைன் வழியாக உணவும் ஊட்டப்படுவதுண்டு. சேலைன் மூலமாக மனித உடலுக்குத் தேவையான சத்தும் ஊட்டப்படுகின்றது. எனவே, ஊசி மூலம் மருந்து ஏற்றுவதில் பிரச்சினை இல்லை. சேலைன் என்பது உணவிற்குப் பகரமாகவும் பயன்படுத்தப் படுவதால் அதைத் தவிர்ப்பதே நல்லதாகும். அத்துடன், சேலைன் ஏற்றும் அளவிற்கு நோயாளியாக இருந்தால் அவர் சந்தேகத்துடன் செயற்படுவதை விட நோன்பை விட்டுவிடலாம்.
நோன்பு காலத்தில் மாதத்தீட்டைத் தள்ளிப் போடுவதற்காக மருந்துகளைப் பயன்படுத்த முடியுமா என்ற சந்தேகம் அநேக பெண்களுக்கு ஏற்படுவதுண்டு. நோன்பு காலத்தில் அமல் செய்வதிலுள்ள ஆர்வம், குடும்பத்துடன் நோன்பு நோற்பதில் உள்ள இலகு, பின்னர் நோன்பைக் கழாச் செய்வதில் உள்ள சிரமம் போன்ற காரணங்களால் மாதத்தீட்டை தள்ளிப் போடுவதற்கு மாத்திரைகளைப் பயன்படுத்த விரும்புகின்றனர்.
பொதுவாக மாதத்தீட்டு என்பது அல்லாஹ் பெண்களுக்கு ஏற்படுத்திய இயற்கை நிகழ்வாகும். இயற்கையுடன் இணைந்து செல்வதே சிறந்ததாகும். விடுபடும் நோன்புகளைக் கழாச் செய்து கொள்ள முடியும். இதுவே சிறந்த வழிமுறையுமாகும்.
இதற்கு மாற்றமாக மாத்திரைகளைப் பயன்படுத்துவதாக இருந்தால் அதனால் எந்தப் பக்கவிளைவுகளும் இல்லை என்பது மருத்துவ ரீதியில் உறுதி செய்யப்பட வேண்டும். வேறு உபாதைகள் அதனால் ஏற்படும் என்றால் இஸ்லாம் அதை அனுமதிக்காததுடன் தடுக்கவும் செய்கின்றது.
ஹஜ்ஜுடைய காலங்களில் பெண்களின் மாதத்தீட்டைத் தடுக்கும் விதத்தில் சில செடிகளின் சாறுகளை ஸலபுகள் கொடுப்பார் கள் என்ற செய்தியின் அடிப்படையில் நோன்புக்கும் இப்படி மாதத்தீட்டைத் தள்ளிப் போடலாம் என சில அறிஞர்கள் குறிப்பிட் டுள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

லேப்டாப் over-heat ஆகுதா..? சில டிப்ஸ்

இன்றைய காலத்தில் லேப்டாப் களின் பாவனையாளர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டு இருக்கிறது. அந்த வகையில் 9௦% மேற்பட்ட பயனர்கள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சினை லேப்டாப் over-heat ஆகுவது. இங்கே நான் சில டிப்ஸ் களை தர இருக்கிறேன். முடிந்தவரை லேப்டாப் over-heat ஆகுவதைத் தடுப்பது பற்றி..
Power Setting : பல லேப்டாப் பயனர்கள் தமது Power Setting ல் High Performance என செட் செய்திருப்பார்கள். உண்மையில் High Performance ல் விட்டால் லேப்டாப் ற்கு கிடைக்கும் மின் அதிகமாக வரும் இதனால் லேப்டாப் சூடாகும்.
இதனை சரி செய்ய உங்கள் power setting ல் Power Saver Mode ஐ On செய்து பாவனை செய்யுங்கள்...
அழுத்தக் காற்று (compressed air) : நீங்கள் லேப்டாப் பாவனை செய்யும் போது DUST ஆன இடங்களில் பாவிக்கவேண்டிய நிலை ஏற்படலாம்.. இதனால் dust துணிக்கைகள் உங்கள் லேப்டாப் ல் படியலாம்... அதனை அகற்றுவதற்காக கணனியின் fan வேகமாக சுற்றும் போது அதிக வெப்பம் வெளிவிடப்படும் அதனால் சூடு அதிகரிக்கும்.. எனவே Compressed Air ஐ இடையிடையே லேப்டாப் ற்கு அடியுங்கள் அப்போது உங்கள் லேப்டாப் ல் படிந்த தூசிகள் அகற்றப்படும்...
மேல்தளம் (surface) : பலர் தமக்கு விரும்பியவாறு blanket , கட்டில் போன்ற இடங்களில் வைத்துப் பாவிப்பார்கள் , அப்படிப் பாவிக்கும் போது அப்படிப்பட்ட மேல்தளங்கள் heat ஐ போகவிடாது மீண்டும் லேப்டாப் உள்ளேயே தள்ளுகிறது.
எனவே, இப் பிரச்சினையை நிறைவேற்ற தட்டையான மேல்தளங்களில் பாவிக்கவும்.
உதாரணமாக மேசை...
Cool Pad : நண்பர்களே.. இது தான் பொதுவாகப் பலரால் பாவிக்கப்படும் உபகரணம். என்ன..?? வாங்க கொஞ்சம் சிலவாகும் ஆனால் பயனுள்ளது. இதைப் பாவிப்பது உங்களுக்கு over-heatஆவதைக் குறைக்கலாம்.
தேவையற்ற நேரங்களில் லப்டொப்பை off செய்தல் வேண்டும். Hibernate பண்ணி வைப்பதை விட தேவையற்ற நேரங்களில் stand by ல் விடாமல் shut down செய்வது நல்லது..


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வாழையடி வாழையாக உணவாகவும் மருந்தாகவும் வாழ்வை மேம்படுத்தும் வாழை.

நாம் இன்று உண்ணும் உணவில் தெரிந்தோ தெரியாமலோ பிளாஸ்டிக்கின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இது நமக்கு மட்டுமல்ல பூமிக்கும் மிகப்பெரிய சா...

Popular Posts