லேபிள்கள்

புதன், 9 டிசம்பர், 2015

பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்!

1. வாழைக்காயை ப்ரிஜ்ஜில் வைக்கும் போது, அப்படியே வைக்காமல், இரண்டாக கட் பண்ணி வைத்தால் வாழைக்காய் கருப்பாகாமல் அப்படியே புதியது போல் இருக்கும்.

2. சப்பாத்திக்கு மாவு பிசையும் போது இரண்டு ஸ்பூன் நல்லெண்ணய்யை சூடு பண்ணி, மாவு பிசைந்தால் மிருதுவாக வரும்.

3. டீ தயாரிக்கும் பொழுது, அதனுடன் தேவையான சக்கரையைச் சேர்த்தால் டீ நல்ல நிறமுடன் இருக்கும்.

4. முருங்கைக்காய் குழம்பிற்கு துண்டு துண்டாய் நறுக்கும் போது ஒவ்வொரு துண்டிலும் கத்தியால் ஒரு கீறு கீறினால் அதன் உள்ளே குழம்பின் உப்பு காரம் இறங்கும்.

5. பிஞ்சுக் கத்தரிக்காய் ஸ்டப்புடு பொரியல் செய்யும் போது காம்பை வெட்டாமல் அதன் எதிர்பாகத்தில் நான்கு துண்டுகளாக வெட்டி உள்ளே பொடியை வைத்தால் நல்ல ருசியாக இருக்கும்.

6. தயிர்ச்சாதம் செய்வதற்கு குக்கரில் அரிசியுடன் தண்ணீர் சேர்க்கும் போது, அதனுடன் ஒரு டம்ளர் பால் சேர்த்து வைக்கும் போது நன்றாகக் குழைந்து வரும்.

7. துவரம் பருப்பு குக்கரில் வேக வைக்கும் போது, அதனுடன் இரண்டு சில்லு தேங்காய்ப் பத்தையை சேர்த்தால் நன்றாக பருப்பு வெந்து விடும்.

8. பாகற்காய் வறுவல் செய்யும் போது, காயை எண்ணெய்யில் நன்றாக வறுத்து பின்னர் உப்பு, காரம் போட்டால், கெடாமல் நாளைக்கு மொறுமொறுப்பாக இருக்கும்.

9. உள்ளிப் பூண்டை சீக்கிரம் உரிக்க, ஒரு வாணலியை நன்றாக காய்ந்ததும் உரிக்க வேண்டிய பூண்டை போட்டால் படபடவென தோல் எல்லம் வந்து விடும்.

10. வாழைக்காய் வறுவல் செய்யும்போது, ஒரு சிறிய ஸ்பூனில், நீர்மோரை எண்ணெய்யில் விட்டால் வாழைக்காய் கருக்காமல் வறுபடும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

திங்கள், 7 டிசம்பர், 2015

கோடையை, குளிர்ச்சியாக்க .......


கோடைக்காலம் நெருங்கி வந்து விட்டது.அறிகுறியாக ஆங்காங்கே குடிநீர்த் தட்டுப்பாடு குரல்கள் வர ஆரம்பித்து விட்டது.சில ஆண்டுகளாக
 
கோடை காலம் வர.வர தற்பொது வெப்பம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
கோடை வெப்பத்தை இயற்கையிடமிருந்து நம்மால் குறைக்கவோ,தவிர்க்கவோ இயலாது.ஆனால் அதன் தாக்கத்திலிருந்து தப்பிக்க சில தற்காப்புகளை நாம் செய்து கொள்ளலாம்.கீழ்க்கண்டவற்றை நாம் செய்தாலும் தமிழக சாபக்கேடான மின் வெட்டு நம்மை வருத்தெடுக்கத்தான் போகிறது.
அதில் சில:

* கோடைக் காலத்தில் அதிகாலை, 5:00 மணிக்கு எழும் பழக்கத்தை மேற்கொள்வது நல்லது. பெண்கள், வெயில் வரும்முன்னே சமையல், வீட்டு வேலைகளை முடித்து விடலாம்.
* உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணிவதுடன், அந்த ஆடைகளில், வெண்மை நிறம் கலந்திருப்பது நல்லது. கறுப்பு, சிவப்பு மற்றும் "பளிச்' வண்ணங்கள் சூரிய ஒளியை உள்வாங்கும் என்பதால், அவற்றை தவிர்ப்பது நல்லது.
* வெயிலின் தாக்கத்தால், உடலில்இருந்து அதிகளவு வியர்வை வெளியேறுவதால், உடலின் நீர்ச் சத்து குறைந்துவிடும். அதனால், அதிக நீர் அருந்துவதுடன், இடைவெளி விட்டு நீர் அருந்துவது நல்லது. இது, நீர் எரிச்சல், நீர்த்தாரை கடுப்பு போன்றவை உருவாவதை தடுக்கும்.
* வெயிலில் அலைந்து வந்தவுடன், நீர் அருந்தக் கூடாது. எவ்வளவு தாகம் இருந்தாலும், பத்து நிமிடம் கழித்தே, நீர் அருந்த வேண்டும். அந்த நீர் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்த நீராக இருக்கக்கூடாது. ஏனெனில், இந்த நீர் ஜலதோஷம், தலைவலியை ஏற்படுத்தும். மண்பானையில் வைத்த தண்ணீரோ அல்லது சாதாரண நீரோ போதுமானது.
* அதிக நீர்ச்சத்துள்ள பழங்களை சாப்பிட வேண்டும்.

* இளநீர், பனை நுங்கு உடல் வெப்பத்தைத் தடுத்து, உடலுக்கு சக்தியைக் கொடுக்கும்.
* ஆரஞ்சு, சாத்துக்குடி, கிர்ணி, எலுமிச்சை பழச்சாறு, பதநீர் சாப்பிடலாம். தர்பூசணி சாப்பிடலாம்.
* குடிநீரை கொதிக்க வைக்கும்போது, அதில் சீரகம் கலந்து கொதிக்க வைத்து, ஆறியபின் அருந்தலாம். தினமும், மூன்று லிட்டர் தண்ணீர் அருந்தினால் தான், உடல் சூடு குறைந்து, சமநிலைப்படும்.
* மதிய வேளையில், மோரில் நீர் கலந்து, அதனுடன் சீரகம், கொத்தமல்லி சேர்த்து குடிப்பது நல்லது.
* கோடைக் காலத்தில், காலை உணவாக, தோசை, பூரி, பரோட்டாவை தவிர்த்து, இட்லி அல்லது கேழ்வரகு, கம்பு கஞ்சி செய்து சாப்பிடலாம்.
* மதிய உணவில் அதிக காரம், புளி சேர்க்காமல் நீர்ச்சத்து நிறைந்த, பரங்கிக்காய், பூசணிக்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.

* தினமும் இரு முறை குளிப்பது நல்லது. அதிக வியர்வை இருக்கும்போதும், வெயிலில் இருந்து திரும்பிய உடன் குளிக்கக் கூடாது.
* வெயில் தாக்காமலிருக்க தலையில் தொப்பி அணிந்து கொள்ளலாம்.
* வாரம் இரு முறை, எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.

* கோடை வெப்பத்தின் போது, அதிக நேரம், குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பது நல்லதல்ல. அதுபோல் அலைந்து திரிந்து, வியர்வையுடன் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குச் செல்வதும் நல்லதல்ல.
* சர்க்கரை நோயாளிகள் கோடைக் காலத்தில் அதிகம் வெயிலில் அலைவதைத் தவிர்க்கவும். கை கால்களுக்கு எண்ணெய் பூசிக் கொள்ளவும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* படுக்கையறை காற்றோட்டமானதாக இருக்கட்டும். பருத்தியினால் தயாரிக்கப் பட்ட விரிப்புகளை பயன்படுத்துவது நல்லது.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

சனி, 5 டிசம்பர், 2015

கண்களை பாதுகாக்க:

1. உட‌ல் உறு‌ப்‌பி‌ல் ‌மிக மு‌க்‌கியமானது க‌ண். சாதாரணமாக நா‌ம் பா‌ர்‌‌ப்பதா‌ல் ‌க‌ண்களு‌‌க்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படுவ‌தி‌ல்லை. ஆனா‌ல், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியை‌த் தொட‌ர்‌ந்து பல ம‌ணிநேர‌ங்க‌ள் பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பதா‌ல் கண் பாதிக்கப்படுகிறது.

2. க‌ண்களு‌க்கு ஓ‌ய்‌வு எ‌ன்றா‌ல் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

3. கண்களுக்கு ஓய்வளிக்க பல ஆசனங்கள் உள்ளது. கண்களுக்கு அதிக ரத்த ஓட்டம் அளிக்க தலைகீழ் ஆசனம் உள்ளது. சிரசாசனம் செய்வதால் கண்களின் பார்வை அதிகரிக்கும்.

4. மேலும், கண்களுக்கு திராடகம் என்ற ஒரு பயிற்சி உள்ளது. அதாவது, ஒரு இருளான அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அதைப் பார்த்துக் கொண்டே இருந்தால் கண்களுக்கு அதிகமான சக்திக் கிடைக்கும்.

7. முக்கியமான விஷயம் என்னவென்றால், தினமும் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதுவும் மிகவும் இருளான ஒரு அறையில் தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல ஓ‌ய்வாக அமையு‌ம்.

8. பின் தூங்கி முன் எழுதல் மிகவும் நல்லது. அதாவது சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுவது உடலுக்கும் புத்துணர்ச்சி கிட்டும்.

9. அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இடையே உங்கள் கண்களுக்கு ஓய்வு தேவைப்படும்போது, உள்ளங்கைகள் இரண்டையும், நமது கண்களில் அழுத்தி சிறிது நேரம் வைத்திருந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

10. அ‌ப்படி செ‌ய்யு‌ம்போது உ‌ள்ள‌ங்கைகளை எடு‌த்து‌வி‌ட்டு ‌சி‌றிது நேர‌ம் க‌ழி‌த்து மெதுவாக க‌ண்களை‌த் ‌திற‌க்க வே‌ண்டு‌ம்.

11. மேலும், இதனை வேறு முறையிலும் செய்யலாம். அதற்கு அதிக பலன் கிட்டும். அதாவது, ஒரு ஈரத் துணியை நனைத்து பின்பக்க கழுத்தில் போட்டுவிட்டு சிறிது எண்ணெயை புருவங்களில் தடவிவிட்டு இரண்டு உள்ளங்கைகளையும் கண்களில் அழுத்தும்போது உங்களது கண்களுக்கு குளிர்ச்சியும், ஓய்வும் ஒரு சேர கிடைக்கும்.

12. புருவம் என்பது, கண்களுக்குத் தேவையான வெப்பத்தை சீராக வைத்திருக்க அமைக்கப்பட்ட ஒரு இயற்கை கொடையாகும். புருவங்களின் சூட்டினால்தான் கண்களின் குவியங்கள் எளிதாக சுருங்கி விரிகின்றன.

13. ஆனால், அதை விட அதிகமான வெப்பத்தை நம் கண்கள் கணினியில் இருந்து பெற்று வருகிறது. எனவே அந்த வெப்பத்தைக் குறைக்க புருவங்களில் எண்ணெய் வைப்பது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.

14. பொதுவாக கண்களுக்கு ஓய்வு என்றால், எதையும் உற்று அல்லது கூர்ந்து பார்க்காமல் இருந்தாலேப் போதும். அதாவது சாதாரணமாக கண்களால் எந்தப் பொருளையும் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

15. ஆனால் எதையாவது உற்றுப் பார்க்கும் போதுதான் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. சிறிது நேரம் எந்தப் பொருளையும் உற்றுப் பார்காகமல், எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பதும் நல்ல பயிற்சிதான்.


16. அதேப்போல மதியம் உணவு இடைவேளையின் போது சாப்பிட்டுவிட்டு உடனடியாக கணினி முன் அமர்வதைவிட, சாப்பிட்ட பின் ஒரு 15 நிமிடம் அமரும் நாற்காலியிலேயே தளர்வாக அமர்ந்தபடி கண் மூடி இருப்பது ஏன் 10 நிமிடம் தூங்குவது கூட மிகவும் நல்லது.

17. ஒரு நாளைக்குத் தேவையான சக்தியை இந்த 15 நிமிட தூக்கத்தில் உடல் பெற்று விடும். அதற்காக படுக்கையில் படுத்து தூங்கக் கூடாது.

18. அமர்ந்த படி தளர்வாக 15 நிமிடம் அமர்ந்திருந்தாலும் கூட நல்லது. இப்படி செய்வதால் மாலையிலும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வியாழன், 3 டிசம்பர், 2015

ஸ்நாக்ஸ் சாப்பிட போறிங்களா?

எப்போது பார்த்தாலும் எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அவ்வாறு சாப்பிடும் ஸ்நாக்ஸ்களில் ஆரோக்கியமானவை மற்றும் ஆரோக்கியமற்றவை என்று இருக்கின்றன. இப்போது டயட்டில் இருக்கும் போது வறுத்த ஸ்நாக்ஸ்களை எப்போதும் சாப்பிடக் கூடாது. இதனால் எடை தான் அதிகரிக்கும். ஸ்நாக்ஸ்களில் பல வகைகள் இருக்கின்றன.

மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ்களை அதிகமாக சாப்பிட்டால், டயட் தான் பாதிக்கப்படும். மேலும் கண்ட கண்ட நேரங்களிலும் சாப்பிடக் கூடாது. அவ்வாறு அதிகமாக சாப்பிட்டால், உடல் எடை தான் அதிகரிக்கும். மேலும் தேவையான அளவு உணவு சாப்பிட முடியாமல், பின்னர் அடிக்கடி பசி எடுக்க ஆரம்பிக்கும். ஆகவே இத்தகைய ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கத்தை கட்டுப்படுத்த ஒரு சில டிப்ஸ் இருக்கிறது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

* நிறைய ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள், எப்போதுமே எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இப்போது மதிய வேளையில் உணவு உண்டு, 1/2 மணிநேரத்திற்குப் பின் ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். ஆனால் அதை முற்றிலும் விட வேண்டும். ஏனென்றால் எப்போதும் சாப்பிட்டுக் கொண்டே இருந்தால், அது உங்களது டயட்டை வீணாக்கும். ஆகவே எப்போது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று ப்ளான் செய்ய வேண்டும். உதாரணமாக, ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டுமென்றால், காலையில் 11am-ல் இருக்க வேண்டும். அதுவே மாலை என்றால் 5-7pm ஆக இருக்க வேண்டும். இதனால் வயிற்றில் சரியான செரிமானம் நடைபெற்று, உணவு சாப்பிடுவதற்கு சரியாக இருக்கும்.

* எளிதான உணவுகளை உண்டால் எளிதில் செரிமானமடைந்துவிடும். அதனால் தான் விரைவில் பசியெடுக்கிறது. உதாரணமாக, குறைவாக சாதம் சாப்பிட்டால், 2 மணிநேரத்தில் செரிமானமடைந்துவிடுகிறது, அதனால் தான் பசியெடுக்கிறது. ஆனால் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ள உணவுகளான ப்ரௌன் அரிசி, ஆப்பிள், பாஸ்தா போன்றவைகள் சாப்பிட்டால் எளிதில் செரிமானமடைவதோடு, உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்து, உடலில் எனர்ஜியும் அதிகரிக்கிறது. வேகமாக பசி எடுப்பதற்கு, உடலில் உள்ள எனர்ஜியின் அளவு குறைவாக இருப்பதனாலேயே, விரைவில் பசி எடுக்கிறது.

* புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால், பசி எடுப்பதை தவிர்ககலாம். ஏனெனில் புரோட்டீன் உணவுகளை சாப்பிட்டால், வயிறு நிறைந்தது போல் இருப்பதோடு, உடலுக்கும் மிகவும் ஆரோக்கியமானது. ஆகவே காலையில் புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகளான முட்டை, சிக்கன், கொண்டை கடலை போன்றவற்றை சாப்பிட வேண்டும். இவை நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். மேலும் தேவையற்ற நேரங்களில் உண்ணும் ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ்களை சாப்பிட முடியாத அளவு செய்யும்.

* ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைப்பது தவறில்லை. ஆனால் அப்போது ஆரோக்கியமற்றவைகளை சாப்பிடுவதை விட, உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் ஸ்நாக்ஸ்களான நட்1, பழங்கள், பாதாம், ஆப்பிள், ஆப்ரிகாட், ஆரஞ்சு போன்றவைகளை சாப்பிட்டால், நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருக்கும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும். இதை விட்டு, வறுத்த, அதிக கலோரிகள் இருக்கும் உணவுகளான பர்க்கர், பிரஞ்சு ப்ரைஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவைகளை சாப்பிட்டால், உடல் தான் பாதிக்கப்படும். ஆகவே ஸ்நாக்ஸ் சாப்பிடும் போதெல்லாம், மேற்கூறியவற்றை நினைவில் வைத்து, பின் அதனை சாப்பிடுவதா, வேண்டாமா என்று நீங்களே முடிவெடுங்கள்.
http://www.thenkoodu.in/manage_blogs.php?blogid=71965&url=tamil4health.blogspot.in/2014/03/Protect-your-eyes-from-the-computer.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

செவ்வாய், 1 டிசம்பர், 2015

பல் வலியை போக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்...!

குளிர் காலத்தில் காலைப்பொழுதில் எழுந்தவுடன் சிலர் குளிரின் தாக்கத்தால் தாங்கமுடியாத பல் வலியால் துடித்துக் கொண்டிருப்பர்.

அப்போது உடனே அந்த வலிக்காக மருத்துவரிடம் செல்ல முடியாத காரணத்தினால், வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தான் சரிசெய்ய பலர் முயற்சிப்பர்.

 மேலும் அக்காலத்தில் பல் வலி ஏற்பட்டால், அப்போது எத்தனையோ வீட்டு வைத்திய முறைகளைப் பயன்படுத்தி தான் சரிசெய்தார்கள். சொல்லப்போனால், அக்காலத்தில் சமைலறையைத் தான் மருத்துவமனையாக பயன்படுத்தி வந்தனர்.

 இன்னும் நம்முடைய பாட்டிகளிடம் போய் கேட்டால், அவர்கள் பலவிதமான சூப்பர் டிப்ஸ்களை தருவார்கள்.

ஆனால் காலப்போக்கில், நாம் இருக்கும் அவசர நிலையில் சிறு சிறு பிரச்சனைக்குக் கூட மருத்துவரைத் தேடி ஓடுகிறோம். ஒருவேளை வீட்டிலேயே மருத்துவம் செய்து நோய் குணமாகாது போனால், உடனே நம்முடைய மருத்துவ முறைகளை அலட்சியப்படுத்துகிறோம்.

இந்நிலையில் மருத்துவர்கள் கூறுவதையே வேத வாக்காக நினைக்கிறோம். அவ்வாறான எண்ணத்திலிருந்து விடுபட்டு சில வீட்டு வைத்திய முறைகளை தொடர்ந்து பின்பற்றி எவ்வாறு பல்வலியை போக்கிக் கொள்ளலாம் என்பதை இங்கு காணலாம். பல்வலியைப் போக்க இந்த வழிகளை பின்பற்றிப் பாருங்கள்.

கிராம்பு

இரண்டு கிராம்புகளை பல் வலி உள்ள இடத்தில் வைத்து சிறிது நேரம் கடித்திருந்தால், பல்வலி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

உப்பு

பல்வலி கண்டால், ஒரு கோப்பை வெதுவெதுப்பான வெந்நீரில் ஓரு டீஸ்பூன் கல் உப்பைக் கரைத்து, லேசான சூட்டில் கொஞ்சம் கொஞ்சமாக வாயில் ஊற்றி கோப்பை முழுவதும் கொப்பளித்து துப்பிவிடவும். இவ்வாறு தினமும் செய்து வர, பல்வலி மற்றும் வீக்கம் குறையும். மேலும் உப்பு நீரினால் கிருமிகளும் அழியும்.

பூண்டு

ஒரு பல் பூண்டை நசுக்கி வலி உள்ள இடத்தில் வைக்க பல்வலி படிப்படியாக குறையும். பூண்டில் அல்லிசின் (allicin) என்ற நோயை எதிர்க்கும் ரசாயனப் பொருள் உள்ளதால் இந்த நல்ல பலன் கிடைக்கும்.

கோதுமைப்புல் சாறு

கோதுமைப்புல் சாற்றினை அருந்தி வர பல் வலி விலகும். ஒரு சிறிய தொட்டியில் கோதுமைகளை ஆங்காங்கே பதித்து தண்ணீர் விட்டு வர, அதிலிருந்து புல் முளைக்கும். அதனை பறித்து சுத்தப்படுத்தி மைய அரைத்து சாறெடுத்து அருந்தலாம்.

வெங்காயம்

பச்சை வெங்காயத்தை கடித்து மென்று சாற்றை விழுங்க பல் வலி குறையும். பச்சை வெங்காயத்திலுள்ள காரத்தன்மையானது பல்லிலுள்ள கிருமிகளை அழிப்பது மட்டுமல்லாமல் பல் சொத்தையையும் தடுக்கும்.

கொய்யாப்பழ இலை

வீட்டில் கொய்யா மரம் இருந்தால் இரண்டு இலைகளைப் பறித்து வாயில் போட்டு மென்று, அதன் சாறை வாயில் சில நிமிடங்கள் இருக்கும்படி செய்யலாம்.

ஐஸ் கட்டிகள்

ஐஸ் கட்டிகளை வலியுள்ள இடத்தில் வைத்து எடுக்க சிறிது நேரத்தில் பல் வலி குறைந்து, வீக்கமும் வற்றிவிடும்.

கால்சியம் உணவுகள்

பல் வலி உள்ளவர்கள் அதிக சூடான அல்லது அதிக குளிர்ச்சியான உணவை தவிர்க்கவும். கால்சியம் சத்துக்கள் நிரம்பிய உணவு வகைகளை உண்ணவும். நெல்லிக்காய், பால், வெண்ணை, எலுமிச்சை போன்றவற்றை முறையாக உண்டு வர பற்கள் பலமடையும்.

நல்லெண்ணெய்

காலையில் எழுந்தவுடன் நல்லெண்ணெயை சிறிது வாயிலிட்டு 15 நிமிடங்கள் கொப்பளிக்க வெள்ளை நிறத்தில் நுரைத்துக் கொண்டு வரும். அதனை துப்பி விடவும். இவ்வாறு சில நாட்கள் செய்ய வாயிலுள்ள பிரச்சனைகள் அனைத்தும் விலகும்.

இஞ்சி சாறு

இஞ்சிச்சாற்றை லேசாக சூடுபடுத்தி வாய் கொப்பளித்து வர பல்வலி குறையும். சுக்கு பொடியை வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்தி விடவும். சுக்கு வீக்கதிலுள்ள கேட்ட நீரை உறிஞ்சி, பல் வலியை போக்கும்.

சூடம்

சூடத்தை பல் வலி இருந்த இடத்தில் வைத்து கடித்தால், சிறிது நேரத்தில் பல் வலியானது நின்றுவிடும்.

மருத்துவர் ஆலோசனை

தேவையில்லாமல் மருத்துவரை அணுக வேண்டாம். மிகவும் மோசமான நிலையில், பல்லை நீக்கினால் மட்டுமே நல்லது என்ற முடிவு வரும் போது ஒரு நல்ல மருத்துவரை அணுகலாம். தேவையில்லாமல் பல்லை நீக்கினால் அது பல வித பிரச்சனைகளில் கொண்டு விட்டு விடும். பல்லை நீக்கியவுடன் எதுவும் தெரியாது. காலம் போகப் போக பல்வலியுடன் தலைவலியும் சேர்ந்து வந்துவிடும். அதனால் இவ்விஷயத்தில் எச்சரிக்கையோடு இருக்கவும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

திங்கள், 30 நவம்பர், 2015

சி.எஃப்.எல். பல்பு ஜாக்கிரதை!


'குடும்ப பட்ஜெட்டில் முதல் இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு மின் கட்டணம், ஜெட் வேகத்தில் எகிறிக்கொண்டிருக்கிறது. குண்டு பல்பினால், அதிக மின்சாரம் செலவாகும் என்பதால், இன்று பெரும்பாலான வீடுகளிலும் குறைந்த மின்சாரத்தில், அதிக வெளிச்சத்தைத் தரும் சி.எஃப்.எல். பல்புகள்தான் பயன்படுத்தப்படுகின்றன.
ஒரு குண்டு பல்பு, தான் உட்கொள்ளும் எரிசக்தியில் ஐந்து சதவிகிதம் மட்டுமே வெளிச்சமாக மாற்றுகிறது. ஒரு சி.எஃப்.எல் பல்பு, குண்டு பல்பைவிட ஐந்து மடங்கு குறைவாகவே மின்சக்தியை உட்கொள்கிறது. சி.எஃப்.எல் பல்புகள் மூலம் எரிசக்தி மிச்சமாகிறது; கார்பனின் அளவும் குறைகிறது. அப்படியானால், சி.எஃப்.எல் பல்புகளை, 'சுற்றுச்சூழலின் நண்பன்' என்று கூறலாமா? ஆனால், அப்படிக் கூறத் தயங்குகிறார்கள் ஆய்வாளர்கள்.

சி.எஃப்.எல். பல்புகள் கை தவறி விழுந்து உடைந்துவிட்டால், உடனே அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. ஒவ்வொரு சி.எஃப்.எல். பல்புகளிலும் 68 மில்லிகிராம் மெர்க்குரி இருக்கிறது. இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம், ஆர்சனிக், துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மை உடையது. இந்த விஷத்தை முகர்ந்தாலோ, சருமத்தில் பட்டாலோ, மைக்ரேன் தலைவலி, மூளை பாதிப்பு, உடல்அசைவுகள் பாதிக்கப்பட்டு நிலைதடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம். அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு, சருமப் பாதிப்புகளும் ஏற்படலாம். சி.எஃப்.எல். பல்புகள் உடைந்துவிட்டால், பாதுகாப்பாக இருப்பதுபற்றியும் சுகாதாரத் துறை விளக்கியுள்ளது.

அந்த அறையிலிருந்து உடனே வெளியேறிவிட வேண்டும். நெடி மூக்கில் ஏறக் கூடாது. 15 நிமிடங்களுக்குப் பிறகே அப்புறப்படுத்த வேண்டும். நொறுங்கிக்கிடக்கும் கண்ணாடி, காலில் படாமல் பார்த்துக்கொள்ளவும்.

வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது. வேக்வம் உறிஞ்சப்பட்டால், அது உள்ளே ஒட்டிக்கொள்ளும். அதைத் திரும்ப உபயோகிக்கும்போது மெர்க்குரித் துகள்கள் அறையின் மற்ற பகுதிகளுக்கும் பரவி, மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.

கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு, துடைப்பத்தால் சுத்தப்படுத்தினால் போதும்.

சிதறிய துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் சேகரித்து, 'சீல்' செய்து, அவற்றைக் குப்பைத்தொட்டியில் போடாமல், கார்ப்பரேஷன் ஆட்கள் வரும்போது, தனியாக அவர்களிடம் கொடுத்து, பாதுகாப்பாக அப்புறப்படுத்துமாறு சொல்ல வேண்டும்.

சி.எஃப்.எல் பல்புகளை மிக அருகில், குறிப்பாக மேஜை விளக்குகளாகப் பயன்படுத்த வேண்டாம். மைக்ரேன், கண் எரிச்சல், வலிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், சி.எஃப்.எல் பல்புகளை மாற்றிவிட்டு, எல்.இ.டி. அல்லது  ஹலோஜன் பல்புகளைப் பொருத்துவது பாதுகாப்பு.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

ஞாயிறு, 29 நவம்பர், 2015

பிரணாயாமம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

பிரணாயாமம் என்பது யோகாவின் ஒரு பகுதியாகும். இது பெரும்பாலும் மூச்சுப்பயிற்சி சம்பந்தப்பட்டவை. பிரணாயாமம் என்பது 'பிராண' மற்றும் 'அயாமா' என்ற வார்த்தைகளின் கூட்டாகும். 'பிராண' என்றால் அதிமுக்கிய ஆற்றல் திறன் என்று பொருளாகும். 
அதே போல் 'அயாமா' என்றால் கட்டுப்பாடு என்று பொருளாகும். வேறு எந்த செயல்முறையும் தர முடியாத பல உடல்நல பயன்களை பிரணாயாமம் உங்களுக்கு தருகிறது. பிராணயாமாவால் கிடைக்கும் எண்ணிலடங்கா பயன்களில் உடல் மற்றும் மன ரீதியான பயன்கள் என இரண்டுமே அடங்கும். 
பிரணாயாமம் செய்யும் போது சில முக்கியமான விஷயங்களை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பிரணாயாமம் செய்வதால் கிடைக்கும் அனைத்து பயன்களையும் அடைய வேண்டுமானால் அதனை விடிய காலை, சூரிய உதயத்தின் போது செய்திட வேண்டும். 

அதே போல் அதனை செய்யும் போது சரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பிரணாயாமம் செய்ய முயற்சிப்பதற்கு முன், ஒரு தேர்ந்தெடுத்த யோகா ஆசிரியரிடம் பயிற்சி பெற பரிந்துரைக்கப்படுகிறது. பிரணாயாமம் செய்வதால் கிடைக்கும் முக்கியமான உடல்நல பயன்களில் இதுவும் ஒன்றாகும். 
பிரணாயாமம் என்பது சிறந்த மூச்சுப்பயிற்சியாகும். அதனால் உங்கள் நுரையீரலும் சிறப்பான முறையில் செயல்படும். சுவாசக் கோளாறுகள் அல்லது ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும். பிரணாயாமம் செய்வதால் கிடைக்கும் உடல்நல பயன்கள், உங்கள் உடலுக்குள் இருக்கும் அங்கங்களின் ஒழுங்காக செயல்பாட்டோடு மட்டும் நிற்பதில்லை. 
உங்கள் உடல் எடையை குறைப்பதற்கும் உதவுகிறது என்பதையும் தெரிந்துக் கொள்ளுங்கள். பிரணாயாமம் பயிற்சியை தினமும் தொடர்ச்சியாக செய்து வந்தால் நீங்களே வித்தியாசத்தை உணர்வீர்கள். உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுப் பொருட்களை நீக்க சிறந்த வழியாக விளங்குகிறது பிரணாயாமம் பயிற்சி. 

உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க யோகாவில் பல வழிகள் உள்ளது. அவைகளில் புகழ்பெற்ற வழிகளில் ஒன்றாக விளங்குகிறது பிரணாயாமம். உங்கள் வாழ்க்கையில் எரிச்சலடைய வைக்கும் பிரச்சனைகளில் ஒன்றான மூக்கடைப்பை ஒரு முறையாவது சந்தித்திருப்பீர்கள். பிரணாயாமம் செய்வதால் கிடைக்கும் பயன்களில் தெளிவான சுவாச குழாய்களும் ஒன்று என்பதை மறந்து விடாதீர்கள்.

பிரணாயாமம் என்பது ஒரு வெறும் மூச்சுப்பயிற்சி மட்டுமே என்று பலரும் நினைத்துக் கொண்டிருப்பது தவறாகும். இயல்பான சுவாசத்திலிருந்து அது வேறுபடுகிறது என்பதோடு வேறுபடுத்தப்படுகிறது ஒழுங்குபடுத்தப்படுகிறது. 

ஓடுதல்,குதித்தல், தாண்டுதல், நீந்துதல், பளு தூக்குதல், அதிக நிறை உள்ளவற்றை நகர்த்துதல் நீண்ட நேரம் களைப்படையாமல் பணிபுரிதல் போன்றவற்றை எந்தவிதப் பயிற்சியும் இல்லாத சாதாரண ஒரு மனிதனை விட யோகப்பயிற்சி பெற்ற ஒருவரின் மேற்கண்டசெயல்பாடுகளை மிகச்சுலபமாகவும் விரைவாகவும் அதிசயத்தக்க வகையில் செய்யக்கூடியதாகவும் இருக்கும்.
 

இயல்பான மூச்சை பிரணாயாமத்தின் மூலம் வகைப்படுத்தப்படும்போது மனிதனின் உடல் ஆற்றல் மற்றும் உள்ள ஆற்றல் பல மடங்கு பெருகுகிறது. எனவே பிரணாயாமம் என்பது ஆற்றல்களைப் பெருக்கும் ஒரு வித்தையும் ஆகும்.
 

இந்த வித்தையினை மூச்சுக்கலை , சரகலை, வாசிக்கலை , என பல பெயர்களை கொண்டதாகும். பிரணாயாமம் என்பதற்கு அடக்குதல் என்பது ஒரு பொதுப்பெயர்,பொதுச்சொல் ஆகும். மூச்சினால் பிராணன் இயக்கப்படுகிறது. பிராணனை அடக்கும்போது மனம் அடங்குகிறது.

அதனால் வாழ்வு சிறக்கிறது. மனதை , புலன்களைக் கட்டுப்படுத்த பிரணாயாமம் முக்கியமாகிறது.
 பசி, தாகம், மூச்சு, உடல் இயக்கம் இந்த நான்கும் பிராணனால் நடத்தபடுபவையே. பிராணன் குறையும் போது இந்த நான்கு செயல்களாலும் உடல் துன்பம், உள்ளத்துன்பம், ஏற்படுகிறது. உணவில், நீரில், காற்றில், பிராணன் உலவுகிறது. 

மூச்சு உள் இழுத்தல், உள்நிறுத்துதல், வெளி விடுதல், இந்த மூன்று வகையிலும் உள் நிறுத்துதல் என்பது பிரணாயாம நெறிகளில் தலைமைச் செயல் என கருதப்படுகிறது.

பலன்கள்-

சகிப்புத்தன்மை (பொறுமை) , சமாளித்தல், சுற்றுப்புற துன்பங்களை சகித்தல், உடல் வேதனை (வலி) தாங்குதல் , வாழ்க்கைப்போரட்டங்களை தாங்கி நிற்றல். கவலை, கலக்கம், இவைகள் அனைத்திலும் பாதிப்பின்றி வெற்றியடைய மனபலம் பெற, மனமடங்க, பிராணனை அடக்குவதன் மூலம் இப்பலன்கள் கிடைக்கிறது.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வெள்ளி, 27 நவம்பர், 2015

பெண் தனியே பயணம் செய்யலாமா?

கணவன் அல்லது மஹ்ரமான உறவினர் துணை இல்லாமல் ஒரு பெண் பயணம் செய்யலாமா?

செய்யலாம் என்றால் அதற்கான எல்லை எதுவும் உள்ளதா என்பதில் அறிஞர்கள் மத்தியில் நீண்ட காலமாகக் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.

ஒரு பெண், திருமணம் முடிக்கத்தகாத ஆண் உறவினர் இல்லாமல் பயணம் செய்வது பற்றிப் பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன.

குறிப்பிட்ட தூரம் வரை பெண் தனியே பயணம் மேற்கொள்ளலாம்; அதற்கு மேல் பயணம் மேற்கொண்டால் மஹ்ரமான துணை அவசியம் ஒரு சாரார் கூறுகின்றனர்.

பெண்ணின் உயிர், உடைமை, கற்பு ஆகியவற்றுக்குப் பாதுகாப்பு இருக்கும் காலத்தில் அவள் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணம் மேற்கொள்ளலாம் என்று இன்னொரு சாரார் கூறுகின்றனர்.

மேலும் சிலர், ஒரு பெண் எந்தச் சூழ்நிலையிலும் இவ்வாறு பயணம் செய்யக் கூடாது என்று கூறுகின்றனர்.

இது தொடர்பாக வரும் செய்திகளில் ஒன்றை ஏற்று, மற்றதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதால் தான் கருத்து வேறுபாடு உருவாகின்றது.

அனைத்து ஆதாரங்களையும் கவனத்தில் கொண்டு ஆய்வு செய்தால் குழப்பமின்றி தெளிவான முடிவுக்கு வரலாம்.

இது தொடர்பாக வரும் செய்திகளை நாம் ஆய்வு செய்யும் போது "அச்சமற்ற காலத்தில் பெண் தனியே பயணம் மேற்கொள்வதில் தவறல்ல' என்ற இரண்டாவது சாராரின் கருத்தே சரியானது என்ற முடிவுக்கு நாம் வரலாம்.

நமது நிலைபாட்டுக்குரிய ஆதாரங்களை அறிந்து கொள்வதற்கு முன்னால் "குறிப்பிட்ட தூரம் வரை பெண் தனியே பயணம் மேற்கொள்ளலாம்' என்று கூறுவோர் ஆதாரமாகக் கருதும் செய்திகளின் உண்மை நிலையை முதலில் அறிந்து கொள்வோம்.

முரண்பட்ட செய்திகள் பெண்கள் மஹ்ரமான துணை இல்லாமல் அதிகப்பட்சமாக எவ்வளவு தூரம் செல்லலாம் என்பது குறித்து சில ஹதீஸ்கள் உள்ளன.

இவை ஒவ்வொன்றிலும் வெவ்வேறான அளவுகள் கூறப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:

1. ஒரு நாள் தொலைவுடைய பயணத்தை ஒரு பெண் தனியே மேற்கொள்ளக் கூடாது.

2. இரண்டு நாட்கள் தொலைவுடைய பயணத்தை ஒரு பெண் தனியே மேற்கொள்ளக் கூடாது.

3. மூன்று நாட்கள் தொலைவுடைய பயணத்தை ஒரு பெண் தனியே மேற்கொள்ளக் கூடாது.

4. ஒரு பரீத் தூரத்திற்கு ஒரு பெண் தனியே பயணம் செய்யக் கூடாது.

(ஒரு பரீத் என்பது 12 மைல்களாகும். ஏறத்தாழ 19 கிலோ மீட்டார் இதன் தொலைவாகும்)

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய எந்தப் பெண்ணும் ஒரு நாள் தொலைவுடைய பயணத்தை (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாகப்) பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1088)

"ஒரு பெண் தன் கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத நெருங்கிய உறவினர் ஒருவர் தம்முடன் இருக்கும் நிலையில் தவிர, (மற்ற நிலைகளில்) இரண்டு நாட்கள் தொலைவுள்ள பயணத்தை மேற்கொள்ளக் கூடாது'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1995)

"அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய எந்தப் பெண்ணும் மூன்று நாட்கள் தொலைவுடைய பயணத்தை மணமுடிக்கத்தகாத நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாகப்) பயணம் மேற்கொள்ள வேண்டாம்'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 2382)

"ஒரு பெண் மணமுடிக்கத் தகாத நெருங்கிய உறவினர் ஒருவர் தம்முடன் இருக்கும் நிலையில் தவிர, (மற்ற நிலைகளில்) ஒரு பரீத் தொலைவுள்ள பயணத்தை மேற்கொள்ளக் கூடாது'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: சஹீஹ் இப்னி குஸைமா 2350)

இந்த நான்கு விதமான அறிவிப்புகள் ஒவ்வொன்றிலும் வெவ்வேறான தூர அளவுகள் கூறப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றை ஏற்றால் மற்றவற்றை மறுக்கும் நிலை ஏற்படும். எனவே இந்தச் செய்திகள் ஒன்றுக்கொன்று முரணாக அமைந்துள்ளன.

இவற்றில் ஒன்றை ஏற்று மற்றவற்றைப் புறக்கணிக்கவும் முடியாது. ஏனென்றால் இவை அனைத்தும் சமமான தரத்திலமைந்த செய்திகள்.

இரண்டு செய்திகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டால் அந்த முரண்பாடு நீங்கும் வகையில் விளக்கம் அளிக்க வேண்டும்.

விளக்கம் அளிக்க முடியாத வகையில் முரண்பாடு இருந்தால் அந்த இரண்டில் எது தரத்தில் உயர்ந்தது என்று பார்த்து உயர்ந்த தரத்தில் அமைந்த செய்தியை ஏற்று, தரத்தில் குறைந்த செய்தியை விட்டுவிட வேண்டும்.

முரண்பாடு நீங்காமலும் ஒன்றை விட மற்றொன்றை முற்படுத்த முடியாத வகையில் தரத்தில் சமமாகவும் அவை இருந்தால் இவற்றில் முந்தியது எது? பிந்தியது எது? என்று பார்க்க வேண்டும்.

முந்திய சட்டத்தை மாற்றப்பட்ட சட்டமாக முடிவு செய்து அதை விட்டுவிட வேண்டும். பிந்திய சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

முந்தியது எது? பிந்தியது எது? என்பதை முடிவு செய்ய முடியாவிட்டால் ஒரே தரத்தில் அமைந்த, முரண்படும் இந்தச் செய்திகளை அமல்படுத்தாமல் விட்டுவிட வேண்டும்.

பெண் தனியே பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்ட தூரத்தைப் பற்றிப் பேசும் மேற்கண்ட செய்திகள், இணைத்து விளக்கம் கூற முடியாத வகையில் முரண்படுகின்றன.

இவை அனைத்தும் சமமான தரத்தைக் கொண்டிருக்கின்றன.

இவற்றில் முந்தி கூறப்பட்டது எது? பிந்தி கூறப்பட்டது எது? என்பதை அறிந்துகொள்ள முடியவில்லை.

எனவே இந்தச் செய்திகளில் எந்த ஒன்றையும் செயல்படுத்தாமல் இவை அனைத்தையும் விட்டுவிட வேண்டும்.

முரண்படாத செய்தி ஒரு குறிப்பிட்ட தூரத்தை வரையறுக்காமல் பொதுவாக, பெண் எவ்வளவு தூரமானாலும் தனியே பயணம் மேற்கொள்ளக்கூடாது என்று ஒரு ஹதீஸ் கூறுகின்றது.

"மணமுடிக்கத் தகாத ஆண் துணையில்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது. மணமுடிக்கத்தகாத ஆண் துணையுடன் பெண் இருக்கும் போது தான் ஆண்கள் அவளைச் சந்திக்க வேண்டும்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1862)

ஒன்றுக்கொன்று முரண்படுவதாக முன்பு நாம் எடுத்துக் காட்டிய நான்கு வகையான செய்திகளில் ஒரு பெண் தனியே பயணம் மேற்கொள்வது கூடாது என்ற அம்சம் மட்டுமே சரியானது.

ஒரு குறிப்பிட்ட தூரத்தை வரையறுப்பது தவறு என்பதை இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, அறிவிக்கும் இந்தச் செய்தி தெளிவுபடுத்துகின்றது.

எனவே ஒரு பெண் தக்க துணை இல்லாமல் தனியே எவ்வளவு தூரமானாலும் பயணம் செய்யக்கூடாது என்பதே சரியான நபிமொழி.

அச்சமற்ற சூழ்நிலையில் அனுமதி உண்டு மணமுடிக்கத்தகாத ஆண் துணை இல்லாமல் பெண் தனியே பயணம் செய்யக் கூடாது என்ற இச்சட்டம் பெண்ணுடைய பாதுகாப்புக் கருதியே பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இயற்கையாக பெண் என்பவள் உடல் அளவிலும் மன அளவிலும் பலவீனமானவளாக இருக்கின்றாள். இவள் தனியே பயணம் செய்யும் போது இவளுடைய உயிர், உடைமை, கற்பு ஆகியவற்றுக்குத் தீயவர்கள் பங்கம் விளைவித்தால் அதை எதிர்கொள்ளும் ஆற்றல் இவளிடம் இல்லை.

எனவே தான் இஸ்லாம் இந்தத் தடையை விதித்துள்ளது. பெண்ணுக்குப் பாதுகாப்பு இல்லாத அச்சமான காலகட்டத்தில் தான் இந்தத் தடை பொருந்தும்.

பாதுகாப்பு உள்ள அச்சமற்ற சூழ்நிலையில் ஒரு பெண் மஹ்ரமான ஆண் துணை இல்லாமல் தனியே பயணம் செய்தால் அதை இஸ்லாம் தடை செய்யவில்லை. மாறாக இதற்கு அனுமதி வழங்குகின்றது.

நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கற்டம் இருந்த போது ஒரு மனிதர் அவர்கற்டம் வந்து (தன்னுடைய) வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்கற்டம் வந்து, வழிப்பறி பற்றி முறையிட்டார். உடனே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "அதீயே! நீ "ஹீரா'வைப் பார்த்ததுண்டா?'' என்று கேட்டார்கள். "நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால், அது பற்றி எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது'' என்று பதிலற்த்தேன். அவர்கள், "நீ நீண்ட நாள் வாழ்ந்தால், நீ நிச்சயம் பார்ப்பாய். ஒட்டகச் சிவிகையில் அமர்ந்திருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதற்காகப் பயணித்து ஹீராவி-ருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்ச மாட்டாள்'' என்று சொன்னார்கள்.

 நான் என் மனத்திற்குள், "அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பிவிட்ட "தய்யி' குலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது) எங்கே சென்று விட்டிருப்பார்கள்?'' என்று கேட்டுக் கொண்டேன். (அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3595)

மேற்கண்ட சம்பவத்தில் கூறப்படும் பெண் மஹ்ரமான ஆண் துணையில்லாமல் தனியே பயணம் செய்வாள். அப்போது வழிப்பறி கொள்ளை இருக்காது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னறிவிப்புச் செய்கின்றார்கள்.

இந்தப் பெண் இறையில்லமான கஅபாவை தவாஃப் செய்து இறைவனை வணங்கக்கூடியவள் என்றும், ஏக இறைவனுக்கு அஞ்சக்கூடியவள் என்றும் புகழாரம் சூட்டுகிறார்கள்.

அச்சமற்ற நிலையிலும் ஒரு பெண் தனியே பயணம் செய்யக் கூடாது என்று மார்க்கம் கூறுமேயானால் இந்தக் காரியத்தைச் செய்யும் இப்பெண்ணைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு புகழ மாட்டார்கள்.

இப்பெண் செய்த இந்தக் காரியத்தை நல்லாட்சிக்கு அடையாளமாக நபியவர்கள் கூறியிருக்கவும் மாட்டார்கள்.

ஆனால் நபியவர்கள் இப்பெண் இறையச்சமுள்ளவள் என்று சான்று தருவதிலிருந்து அச்சமற்ற பாதுகாப்பான சூழ்நிலையில் பெண் தனியே பயணம் செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது என்பதை அறிய முடிகின்றது.

மக்காவிற்கு மட்டும் உரிய அனுமதியா?

மேலுள்ள சம்பவத்தில் அந்தப் பெண் கஅபாவிற்கு வருகை தருவாள் என்று கூறப்பட்டுள்ளதால் பெண் தனியே பயணம் மேற்கொள்ளலாம் என்ற சட்டம் இறையில்லம் கஅபாவிற்குச் செல்வதற்கு மட்டுமே பொருந்தும்.

இதைத் தவிர மற்ற இடங்களுக்குச் செல்லும் போது பெண் மஹ்ரமான துணையுடனே செல்ல வேண்டும் என்று நாம் முன்னர் கூறி இருந்தோம் ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மேற்கண்ட முன்னறிவிப்பைப் போன்று இன்னொரு முன்னறிவிப்பையும் செய்துள்ளார்கள்.

இந்த முன்னறிவிப்பு இந்த அனுமதி மக்காவிற்கு மட்டும் உரியதல்ல என்பதை தெளிவுபடுத்துகின்றது.

பொதுவாக எந்த ஊராக இருந்தாலும் நாடாக இருந்தாலும் பாதுகாப்பு நிலவும் பட்சத்தில் மார்க்கம் இந்த அனுமதியை பெண்ணுக்கு வழங்குகின்றது. இதைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "அதீ பின் ஹாதிமே! ஒட்டகச் சிவிகையில் ஒரு பெண் அல்லாஹ்வையும் தனது ஆடுகள் விஷயத்தில் ஓநாயையும் தவிர வேறு யாருக்கும் அஞ்சாமல் எமன் நாட்டுக் கோட்டையிலிருந்து ஹியராவிற்கு வருகை தருவாள்'' என்று கூறினார்கள். நான், "(வழிப்பறி கொள்ளையர்களான) தய்யி குலத்தினரும் அவர்களின் குதிரைப் படையும் இருக்குமே'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "அப்போது அக்கூட்டத்தினரையும் (வழிப்பறியில் ஈடுபடும்) மற்றவர்களையும் அல்லாஹ் பார்த்துக் கொள்வான்'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அதீ பின் ஹாதிம் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: தப்ரானீ (14039)

இந்தச் செய்தியில் யமன் நாட்டிலிருந்து ஹியரா வரை பெண் தனியே பயணம் செய்வதாகக் கூறப்பட்டுள்ளது.

எனவே பாதுகாப்பு உள்ள காலத்தில் பெண் தனியே மக்காவிற்கு மட்டுமின்றி அனைத்து நாடுகளுக்கும் ஊர்களுக்கும் பயணம் மேற்கொள்ள அனுமதி உண்டு என்பதை அறிய முடிகின்றது.

இன்றைக்கு ஒரு பெண் அச்சமில்லாமல் தனியே பயணம் மேற்கொண்டு தன் உயிர், உடைமை, கற்பு ஆகியவற்றுக்குப் பாதிப்பு ஏற்படாமல் திரும்பி வர முடியும்.

சில நேரங்களில் ஏதாவது ஒரு பகுதியில் இதற்கு மாற்றமான நிகழ்வு நடக்கலாம். ஆனால் இவை அரிதாக நிகழக் கூடியதாகும். பயணம் செய்யும் அனேக பெண்களைக் கவனத்தில் கொண்டால் அவர்கள் பாதுகாப்புடன் சென்று வருகிறார்கள் என்பதே உண்மை.

#எனவே தற்காலத்தில், திருமணம் முடிக்கத் தடை செய்யப்பட்ட மஹ்ரமான உறவினர் இல்லாமல் ஒரு பெண் பயணம் செய்தால் அது மார்க்க அடிப்படையில் தவறல்ல. இதற்கு மார்க்கம் அனுமதி வழங்கியுள்ளது.#

விமர்சனமும் விளக்கமும்:

அச்சமற்ற காலத்தில் பெண் யாருடைய துணையுமின்றி தனியே பயணம் மேற்கொள்ளலாம் என்ற கருத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இதற்கு எதிராக பின்வரும் ஹதீஸை சுட்டிக் காட்டுகின்றனர்.

"மணமுடிக்கத் தகாத ஆண் துணையில்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது.
 

மணமுடிக்கத்தகாத ஆண் துணையுடன் பெண் இருக்கும் போது தான் ஆண்கள் அவளைச் சந்திக்க வேண்டும்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! நான் இன்னின்ன இராணுவப் பிரிவுடன் புறப்பட இருக்கிறேன்; என் மனைவி ஹஜ் செய்ய எண்ணுகிறார் (நான் என்ன செய்வது)?' என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "நீரும் மனைவியுடன் (ஹஜ்ஜுக்குப்) புறப்படுவீராக!'' என்றார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி (1862)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் ஒரு பெண் தனியே ஹஜ் செய்ய நாடிய போது அதை நபியவர்கள் அங்கீகரிக்கவில்லை. அப்பெண் தனது கணவனுடன் தான் ஹஜ்ஜுக்குப் புறப்பட வேண்டும் என்று உத்தரவிடுகிறார்கள்.

எனவே பெண் மஹ்ரமான துணை இல்லாமல் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று வாதிடுகின்றனர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், எதிர் காலத்தில் பெண்கள் அச்சமின்றி பயணம் மேற்கொள்ளும் நிலை ஏற்படும் என்று முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.

இதிலிருந்தே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் பெண்கள் அச்சமின்றி தனியாகப் பயணம் செய்யும் நிலை ஏற்படவில்லை என்பதை அறியலாம்.
எனவே தான் அந்த நபித்தோழரை மனைவியுடன் ஹஜ்ஜுக்குச் செல்லுமாறு உத்தரவிட்டார்கள். அச்சமான காலத்தில் சொல்லப்பட்ட விதியை அச்சம் நீங்கிய காலத்திற்குப் பொருத்தக் கூடாது.
அதாவது இந்த நிகழ்வு நடந்த போது பாதுகாப்பான, அச்சமற்ற நிலை இருக்கவில்லை.
 

எனவே தான் தன் மனைவியுடன் சேர்ந்து ஹஜ்ஜுக்குப் புறப்படுமாறு அந்த நபித்தோழருக்கு நபியவர்கள் உத்தரவிட்டார்கள் என்று இதை முரண்பாடில்லாமல் புரிந்து கொள்ளலாம்.

பெண்கள் அச்சமற்ற காலத்தில் தனியாகப் பயணம் செய்யலாம் எனும் போது, அவர்கள் தவறான வழியில் செல்வதற்கு இதைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று சிலர் காரணம் கூறுகின்றனர்.

இந்தக் காரணத்தை நாம் ஏற்க முடியாது. ஏனெனில் தவறான நடத்தையில் ஈடுபட நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற தேவை இல்லை. இருக்கும் இடத்திலிருந்தே தீய நடத்தையில் ஈடுபட முடியும்.

மேலும் ஒரு நாள், இரு நாள் அல்லது சில நாட்கள் தூரம் பெண்கள் தனியாகப் பயணம் செய்யலாம் என்று மற்றவர்கள் வாதிடுகின்றனர். ஒரு பெண் தீய நடத்தையில் ஈடுபட விரும்பினால் இது போதுமான அவகாசம் தான்.

எனவே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வார்த்தையிலிருந்து பெறப்படும் அனுமதியை இதுபோன்ற காரணங்களைக் கூறி தள்ளுபடி செய்ய முடியாது.
http://pettagum.blogspot.in/2014/02/blog-post_1057.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

புதன், 25 நவம்பர், 2015

ஆயுள் காக்கும் 10 கட்டளைகள்!

தவறு செய்யாத மனிதன் இல்லை. ஆனால், 'இது தப்பு' என்று தெரிந்தும், ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் செய்தால்? நம் ஆரோக்கியத்துக்கு நாமே வேட்டுவைக்கக்கூடிய 'தவறுகள்' என்னென்ன என்பது குறித்து, தமிழகத்தின் பல்வேறு டாக்டர்களிடம் கேட்டோம். சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிறப்பு மருத்துவர் ராஜா, பல் மருத்துவர் ரவிவர்மா, புதுச்சேரியைச் சேர்ந்த பொது நல மருத்துவர் நாகராஜன், திருநெல்வேலியைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் கவிதா, சாத்தூரைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் அறம் ஆகியோரின் பரிந்துரைப்படி முக்கியமான 10 தவறுகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

புகைபிடித்தல்  மது அருந்துதல்

சந்தோஷம், சோகம், டென்ஷன்... என, எந்த ஓர் உணர்ச்சிக்கும் உடனே புகைபிடிக்க வேண்டும் என்ற தூண்டுதல் பலருக்கும் உள்ளது. ஒரு சிகரெட்டைப் பற்றவைக்காமல், இவர்களால் கொண்டாட்டத்தைத் தொடங்க முடியாது. புகைபிடிப்பது புகைப்பவர் உடலுக்கு மட்டுமல்ல; அந்தப் புகையை சுவாசிப்பவர்களின் உடல்நலத்துக்கும் கேடு. புகை பிடிக்கும்போது ரத்தத்தில் ஆக்சிஜன் குறைந்து கார்பன்டை ஆக்ஸைடு அளவு அதிகரிப்பதால், கடைக்கோடி திசுக்களுக்கும் போதிய ஆக்சிஜன் கிடைக்காது. இதுபோல ஆயிரக்கணக்கான பிரச்னைகள் ஒரு சிகரெட் பிடிப்பதால் ஏற்படுகின்றன. அதேபோல், தினசரிக் கட்டுப்பாடு இன்றி மது அருந்துவதால், கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க, மது அருந்துவதைக் கைவிடுவது நல்லது.

பல் துலக்காமல் தூங்குதல்
காலை, மாலை இருவேளையும் பல் துலக்குவது அவசியம் என்று எவ்வளவுதான் கூறினாலும், ஒருசிலர்தான் இதைப் பின்பற்றுகின்றனர். பல் துலக்கும் நுட்பம் தெரிந்தவர்களால்கூட, 90 சதவிகிதம் அளவுக்குத்தான் கிருமிகளை அகற்ற முடியும். மீதம் உள்ள 10 சதவிகிதம் கிருமி மேலும் பெருக 12 மணி நேரம் போதும். இதைத் தவிர்க்க, இரவு தூங்குவதற்கு முன்பும் பல் துலக்க வேண்டும். ஆனால், தூங்கும் அவசரத்தில், இது என்ன பெரிய விஷயமா என்று நாம் ஒதுக்கித் தள்ளுவதால் ஈறு, சொத்தை போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதை நம்மால் தவிர்க்க முடியும்.

வேகமாக உண்ணுதல்
சூடான உணவுகளை, சுவைக்க விரும்புபவர்களும் சரி... பசியில் துடிப்பவர்களும் சரி, சாப்பிடும்போது அவர்களை அறியாமல் வேகமாகச் சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். அந்த நேரத்துக்கு அது திருப்தியளித்தாலும், அது ஏற்படுத்தும் விளைவுகள் அதிகம். நம் வாயில் உள்ள சுரப்பிகள் நாம் உட்கொள்ளும் உணவை நன்கு அரைத்துச் செரிமானம் செய்வதற்கு எளிதாக 'களி' போன்று ஆக்கி இரைப்பைக்கு அனுப்புகிறது. ஆனால் ஒருவர் வேகமாக உண்ணும்போது வாயில் மெல்வது தடைபட்டு, நேரடியாக உணவு இரைப்பைக்குள் செல்கிறது. இதனால் உணவை, செரிமானம் செய்வதில் வயிற்றுக்குப் பிரச்னை ஏற்படுகிறது. உணவுக் குழாய்க்குப் பதில் மூச்சுக்குழாயில் உணவு சிக்கிவிடவும் வாய்ப்பு உள்ளது. இது மூச்சுத் திணறலுக்கு வழிவகுத்துவிடும். உணவை மெதுவாக மென்று விழுங்க வேண்டும்.

காலை உணவைத் தவிர்ப்பது
அனைவரும் செய்யும் மிகப் பெரிய தவறு, காலை உணவைத் தவிர்ப்பது. காலையில் வெறும் வயிற்றுடனோ அல்லது ஒரு கப் காபி, பால் குடித்துவிட்டு வேலைக்குச் செல்பவராக இருந்தால், உங்கள் எதிர்கால ஆரோக்கியம் கேள்விக்குறியாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை உணரவேண்டும். இந்தப் பழக்கம், உங்கள் செரிமான மண்டலத்தின் பணியைப் பாதிக்கும். காலையில் சாப்பிடாதபோது, உடல் பலவீனம் அடையலாம்.

உடற்பயிற்சியைத் தவிர்ப்பது
நாள் ஒன்றுக்கு குறைந்தது 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி, வாரத்துக்கு மூன்று நாட்களுக்கு உடலை வலுவாக்கும் பயிற்சிகள் செய்வது அவசியம். பயிற்சிக்கு இடையில் இடைவெளி இருக்கலாம். ஆனால், பயிற்சி செய்வதற்கு நீண்ட இடைவெளி கூடாது. மிக அவசியமான காரணங்களைத் தவிர்த்து வேறு எந்த ஒரு காரணத்துக்காகவும் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கக் கூடாது. அலுவலகத்தில் காலார நடக்கப் பழகுங்கள். பேருந்தில் பயணிப்பவர்கள், இறங்குவதற்கு முந்தைய நிறுத்தத்தில் இறங்கி நடக்க ஆரம்பியுங்கள்.

நேரம்கெட்ட நேரத்தில் தூங்குவது
மாணவப் பருவத்தில், தேர்வுக்கு முந்தைய நாள் மட்டும் விடிய விடியப் படிப்போம். மற்றபடி இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால், நேரம் கெட்ட நேரத்தில் தூங்குவது, காலையில் அவசர அவசரமாக எழுந்திருப்பது என்பது வழக்கமாகிவிட்டது. ஒரு நாளைக்கு 8 மணி நேரத் தூக்கம் அவசியம். தூக்கம் குறையும்போது, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும். மேலும், உடலின் செயல்பாட்டிலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்பை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, சாதாரணக் கிருமித் தொற்றைக்கூட, உடலால் எதிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும். போதுமான தூக்கமின்மையால் கண் எரிச்சல், பணியில் ஈடுபாடின்மை போன்றவையும் ஏற்படும்.

டிவியில் மூழ்குவது
மணிக்கணக்கில் கம்ப்யூட்டர், டிவி முன்பு மூழ்கியிருந்தால், இதயம், கண், செரிமான மண்டலம் எனப் பலவற்றையும் பாதிக்கும். மாரடைப்பு, பக்கவாதம், உடல் பருமனுக்கான வாய்ப்பை அதிகரிக்கச்செய்யும். டி.வி. பார்க்கும்«பாது, நம்மை அறியாமல் அதிகக் கொழுப்புள்ள உணவை எடுத்துக்கொள்கிறோம். உடல் உழைப்பு குறைகிறது. இதனால் கலோரி அதிகரித்து, கொழுப்பு படிந்து, உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்போது, மாரடைப்பு உள்ளிட்ட பிரச்னைக்கு வழிவகுத்துவிடுகிறது. எனவே, குறிப்பிட்ட மணி நேரம் மட்டுமே தொலைக்காட்சி என்று சுய கட்டுப்பாட்டுடன் இருந்தால், ஆரோக்கியம் காக்கலாம்.

கலர்ஃபுல் ஜங்க் ஃபுட்
இன்றைய குழந்தைகளுக்கு, பாரம்பரிய இட்லி, தோசை பிடிப்பது இல்லை. கலர்ஃபுல்லான ஜங்க் ஃபுட்ஸ் அவர்களை ஈர்க்கின்றன. அவை பெரும்பாலும் மைதா மாவில் செய்யப்படுவதால், உடலுக்குக் கேடு. இந்த வகை உணவில், 'நார்ச் சத்து' கொஞ்சமும் இல்லை. இதனால் மலச்சிக்கல் ஏற்படும்.  சில ஜங்க் ஃபுட்களில் இருக்கின்ற மெழுகு போன்ற பொருள் உடலினுள் சென்று குடலின் மேல் படிந்து, கேடு விளைவிக்கின்றன. இத்தகைய உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால், சின்ன வயதிலேயே பெப்டிக் அல்சர், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அவர்களை ஈர்ப்பது உணவிலுள்ள அந்த நிறங்கள்தான் என்பதால், வீட்டிலேயே குழந்தைகளுக்கு, கலர்ஃபுல் 'ஃப்ரூட் சாலட்' செய்து தரலாம்.

ஆறு வேளையும் அரிசிக்கு அடிமை
உணவு விரும்பிகள் இன்று ஏராளம். உணவு, அதன் தரத்தையும் சரிபார்த்த பின்னர் அவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக நாம் உண்ணும் அரிசியில் கார்போஹைட்ரேட் மட்டுமே உள்ளது. உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட் போக மீதம் உள்ளவை கொழுப்பாக மாற்றம் அடையும். இதனால் உடல் பருமன், ரத்தக் குழாயில் கொலஸ்ட்ரால் படிதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். உணவுகளின் கலோரியை அறிந்துகொண்டு, அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரித்து ஒரு நாளைக்கு ஆறு வேளைகளாகச் சாப்பிடலாம். பருப்பில் புரதச் சத்து, சாதத்தில் கார்போஹைட்ரேட், எண்ணெயில் கொழுப்புச் சத்து இருக்கிறது. காய்கறி, பழங்களில் நார்ச் சத்து, வைட்டமின், மினரல்கள் உள்ளன. எனவே, இவற்றைச் சரிவிகிதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் சாப்பிடும் உணவைத் தெரிந்து உட்கொண்டால், ஆரோக்கியம் நம் கையில்.

டீ, காபி தவிர்க்கலாமே!
டீ, காபி போன்ற பானங்களுக்கு அடிப்படையிலேயே மூளையைத் தூண்டிவிடும் சக்தியுள்ளது. ஒரு நாளுக்கு நான்கு முறைக்கும் மேல் டீ, காபி அருந்துபவர்களுக்கு அந்தத் 'தூண்டுதல்' அதிகமாகி மூளையைத் 'தொந்தரவு' செய்யும் நிலைமைக்குப் போய்விடுகிறது. இதன் விளைவாக மூளை மந்தமடையலாம். மேலும் சர்க்கரை, பாலில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளதால், இதய நோய்க்கான வாய்ப்பு அதிகரிக்கும். கலோரிகள் அதிகரிக்கும். காபி, தேநீருக்குப் பதில் ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்த கிரீன் டீ அருந்துவது ஆரோக்கியமானது. கிரீன் டீயில் சர்க்கரை, தேன் எதையும் சேர்க்காமல் அப்படியே அருந்துவது முக்கியம்.
http://pettagum.blogspot.in/2014/02/10.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

திங்கள், 23 நவம்பர், 2015

பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்!

ஆயில் புல்லிங்  எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து  வருகிறது. எண்ணெயை வாயில் விட்டு சாதாரணமாக கொப்பளிப்பதுதானே என்று அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களுக்கு
அனைத்து நோய்களும் தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இன்றைக்கு பிரபலமாகிக் கொண்டு வரும் ஆயில்புல்லிங்கை நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து பின்பற்றியுள்ளனர். இது அனைத்து நோய்களுக்கும் பாதுகாப்பான எளிய மருத்துவ முறையாக இருந்துள்ளது. பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து அதன் மூலமாக உடலில் நஞ்சு கலந்த
வேதியியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் புத்துணர்வு பெறுகிறது.

ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்வது பற்றி தெலுங்கு நாளிதழான ஆந்திர
ஜோதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது. மூன்று வருடங்களாக 1041 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 927 நபர்களுக்கு நோய் குணமானது தெரியவந்தது. 758 நபர்களுக்கு கழுத்து மற்றும் உடல்வலி
குணமாகியது. அலர்ஜி மற்றும் ஆஸ்துமா நோய்கள் 191 பேருக்கு சரியானது.

தோல்நோய், அரிப்பு,கரும்படை, உள்ளிட்ட நோய்கள் குணமடைந்ததாக
தெரிவித்திருந்தனர். மேலும், இதயநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்,நரம்பு
  தொடர்பான நோய்கள் குணமடைந்ததாக சர்வேயில் தெரிவித்திருந்தனர்.

நிரூபிக்கப்பட்ட உண்மை

நம் உடலில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தம், இதய நோய், பார்க்கின்சன்
நோய்கள் கல்லீரல், நுரையீரல்நோய், புற்று நோய், பக்க வாதம், நரம்பு
சம்பந்தமான நோய்கள், வெரிகோஸ் வெயின்ஸ், வலிப்பு, மாதவிடாய் தொல்லைகள்,
  மார்பக நோய்கள், கருப்பை தொடர்பான நோய்கள், முகப்பருக்கள், படை போன்ற  எண்ணிலடங்கா நோய்களுக்கும் தொல்லைகளுக்கும் மிக எளிமையான மருத்துவக் கோட்பாடு ஒன்றினை மனித குலத்துக்கு தந்துள்ளனர் நம் முன்னோர்கள். இதனை அப்போதய சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த அறிஞர், டாக்டர் மெத்கராஷ் என்பவர்
அறிவியல் முறைப்படி ஆய்வு நடத்தி மெய்ப்பித்துக் காட்டியுள்ளார்.

வலி நிவாரணி

தலைவலி என்பது கடுமையான தொந்தரவினை தரக்கூடியது. ஒற்றைத்தலைவலியானது
  கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. தினமும் தவறாமல் ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களை இந்த நோய்கள் தாக்குவதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

மூட்டு வலி, முழங்கால் வலி, பல் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள், கண்
காது மூக்கு சம்பந்தமான நோய்கள், வயிறு குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம்,
  தும்மல், சளி, களைப்பு, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத்தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி), போன்ற நோய்களை உடனடியாக குணப்படுத்தியுள்ளது.

எப்படி செய்வது ஆயில் புல்லிங்

காலையில் எழுந்து, வெறும் வயிற்றில், பல் துலக்கிய உடன் தூய்மை
செய்யப்பட்ட நல்லெண்ணெயோ, ஆலிவ் எண்ணெயையோ, வேர்க்கடலை அல்லது சூரியகாந்தி
  எண்ணெயையோ, இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டுக்கொள்ள  வேண்டும். பின்னர் ஓய்வாக அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே  ஊடுருவிச் செல்லுமாறும் கொப்பளிக்க வேண்டும். இப்படியே தொடர்ந்து 15 முதல்  20 நிமிடங்கள் வரை கொப்பளியுங்கள். முதலில் வாய் முழுவதும் வழு வழுவென்று எண்ணெயின் தன்மை இருக்கும். ஆனால், சில நிமிடங்களில் அந்த தன்மை மாறி
வாயினுள் எளிதாக நகரும். 15-20 நிமிடங்களில் எண்ணெயில் தன்மை முற்றாக நீர்த்துப்போய், நுரைத்து, வெண்மையாகிவிடும். அப்போது அதனை உமிழ்ந்து
  விடுங்கள்.

விடியற்காலையே சிறந்தது

உமிழ்ந்த திரவம் வெள்ளையாக இல்லாது மஞ்சளாக இருந்தால், இன்னும் கொஞ்ச நேரம் கொப்பளிக்க வேண்டும். மீண்டும் எண்ணெய் ஊற்றி கொப்பளித்து விட்டு உமிழ்ந்ததும் வாயைக் கழுவி நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இதனால், உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய கிருமிகள் எல்லாம் நீங்கள் உமிழ்ந்த நீர்மத்தில் முழுமையாக வெளியேற்றப் படுகின்றன. இந்த எளிய எண்ணெய் மருத்துவத்தைச் செய்வதற்கு விடியற்காலை நேரமே சிறந்தது.

நாளொன்றுக்கு மூன்று முறை

எண்ணெயை கொப்பளிக்க முடிந்த எவரும், எந்த வயதினரும் இதனை செய்யலாம். இதற்கு எந்த வித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது. எதாவது நோய்க்காக மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் கவலை இல்லை. நீங்கள் அந்த

ஆயில் புல்லிங் செய்யும் போது ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால், உடனே வேறு
  நிறுவனத்தின் எண்ணெய்க்கு மாற்றிவிடலாம். இதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும் பயப்பட வேண்டாம். வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி தவிர வேறொன்றும் நேராது! விரைவில் நிவாரணம் வேண்டுவோர், நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம். ஆனால், வெற்று வயிற்றுடன் தான் இதைச் செய்ய வேண்டுமென்பது விதி.

இந்த மருத்துவத்தை செய்ய ஆரம்பித்ததும், சிலருக்கு, நோயின் தன்மை சற்று
அதிகரித்து பின்னர் குறைகிறது. இது, நெடுநாளாய் வாட்டும் நோய் குணமாகப்
போகிறது என்பதின் அறிகுறி. இந்த எளிய வைத்திய முறையை பின் பற்றுவதோடு, தூய காற்றை சுவாசித்து, நிறைய நீர் பருகி, அளவான சுகாதாரமான உணவுகளை உட்கொண்டு நல்ல முறையில் உடற்பயிற்சி செய்து வந்தால், நம் முன்னோர்கள் போன்று நோயற்ற வாழ்வு வாழலாம்.
மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளலாம். நோயின் தன்மை குறைந்தால், மருந்தின் அளவையும் மருத்துவரின் ஆலோசனையோடு குறைத்துக் கொள்ளலாம்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

உயில் எழுதுவதற்கு முன்பு மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.

குடும்பத்திற்கு உணவளித்து வந்த முக்கிய நபர் அல்லது பாதுகாவலர் இறந்த பிறகு குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்படும் சண்டை சொத்து சம்பந்தமானதா...

Popular Posts