லேபிள்கள்

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

ஃபார்மேட் செய்ய போறீங்களா?

கணினி பயனாளர்கள் தங்களது கணினியின் வன்தட்டை ஃபார்மேட் செய்து மறுபடியும் புதிதாக இயங்குதளத்தை நிறுவி விடலாம் என்ற முடிவிற்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. உதாரணமாக கணினியின் வேகம் குறைந்து விட்டது, சிஸ்டம் ஃபைல்களில் கோளாறு, வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதல், வன்தட்டின் பார்ட்டிஷன் அளவை மாற்ற போன்ற பல காரணங்கள். 

ஆனால் அப்படி முடிவு செய்துவிட்ட பின்னர், அந்த முடிவிலிருந்து பின் வாங்குவதற்கு முக்கியமாக ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்கக்கூடும். அது 'டிவைஸ் ட்ரைவர் சிடி கையில் இல்லையே?'  என்பதாக இருக்கலாம். காரணம் மிக சரியானதே. ஏனெனில் புதியதாக நீங்கள் இயங்குதளத்தை நிறுவிய பிறகு, உங்கள் கிராபிக்ஸ் கார்டு, சவுண்ட் கார்டு, வெப் கேமரா, பிரிண்டர், ஸ்கேனர் போன்ற சாதனங்கள் முறையாக வேலை செய்வதற்கு, அந்தந்த கருவிகளுக்கான பிரத்யேகமான டிவைஸ் ட்ரைவர்கள் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். 

ஆனால் அந்த டிவைஸ் ட்ரைவர் சீடிக்கள் உங்கள் வசம் இல்லாத பொழுது,  உங்கள் கணினியில் புதியதாக இயங்குதளத்தை நிறுவ  அல்லது ஒரே கான்பிகரேஷனை கொண்ட உங்கள் நண்பரின் கணினிக்கு உங்கள்  கணினியில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள டிவைஸ் ட்ரைவர்களை  படி எடுத்து  கொடுக்க என மிகவும் பயனுள்ள ட்ரைவர் பேக்கப் மற்றும் ரீஸ்டோர் மென்பொருள் Double Driver (தரவிறக்கச் சுட்டி இறுதியில்..) 

இதிலுள்ள Scan பொத்தானை சொடுக்கியவுடன், உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து டிவைஸ் ட்ரைவர்களும்  பட்டியலிடப்படும். 

இந்த பட்டியலிலிருந்து நமக்கு தேவையான டிவைஸ் ட்ரைவர்களையோ, அல்லது எல்லாவற்றையுமோ தேர்வு செய்து Backup பொத்தானை அழுத்தி, பிறகு திறக்கும் Backup Drivers வசனப் பெட்டியில், இதனை எங்கு சேமிக்க வேண்டும் (பென் ட்ரைவிலும்) என்பதை கொடுத்து விட்டால் போதும். 

நீங்கள் தேர்வு செய்திருந்த அனைத்து ட்ரைவர்களும் அதற்கான குறிப்பிட்ட ஃபோல்டர்களில் பேக்கப் ஆகியிருப்பது தனிச் சிறப்பு. 

இயங்குதளத்தை மறுபடியும் நிறுவிய பிறகு இந்த பேக்கப் ஃபோல்டருக்குச் சென்று இங்குள்ள Double Driver அப்ளிகேஷனை ரன் செய்து ட்ரைவர்களை மறுபடியும் எளிதாக ரீஸ்டோர் செய்து கொள்ளலாம்.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

Employment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?


தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்" என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்த நிலையில், தற்போது அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.

இன்று நாம் புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம். இதற்கு குடும்ப அட்டை
, சாதி சான்றிதழ், 10th (or)
 12th  மதிப்பெண் அட்டை கண்டிப்பாக கையில் வைத்திருத்தல் வேண்டும். முதலில் இணையதள முகவரி www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று 

click here for new user ID registration என்று இருக்கும் ( உதாரணத்திற்கு மேலே உள்ள படத்தை பார்க்கவும்) அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் I agree என்று சொடுக்கி அடுத்து வரும் பக்கத்தில்

பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID  கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி, குடும்ப அட்டை எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும். அடுத்து வரும் பக்கத்தில்

உங்களது Personal detail, Contact detail, Qualification detail, Technical detail ஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number Create ஆகிவிடும்.

குறிப்பு 1 :  Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக் செய்து Save கொடுக்கவும். இதே போன்று Technical Detailம் செய்ய வேண்டும்.

குறிப்பு 2 :  மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.

குறிப்பு 3 :  ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home  பகுதியில் Modify Contact இருக்கும் அதில் சென்று மாற்றி கொள்ளலாம்.

குறிப்பு 4 :  Update Profileல் சென்று Renewal செய்து கொள்ளலாம்.

Renewal செய்வதற்கான குறிப்பு :
உதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும்.

Register Number :              ARD2012M00007502

வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்:  ARD  - என்பது ( வேலைவாய்ப்பு அலுவலகம், அரியலூர் )
பதிவு செய்த ஆண்டு  : 2012
ஆண் / பெண்         :   M
பதிவு எண்             :  7502

பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், அப்படி இல்லாமல் 4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும்.

User ID :  ARD2012M00007502
Password : dd / mm / yyyy

கடவு சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும்.
உங்களது ID CARD இப்படிதான் இருக்கும்..
 

அவ்வளவு தான் நண்பர்களே.. இனி கால விரையமுமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். பதிவில் ஏதேனும் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள் திருத்தம் செய்து கொள்கிறேன்.
http://pettagum.blogspot.in/2013/12/employment.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

புதன், 11 பிப்ரவரி, 2015

தண்ணீர்... – ஏழு அற்புதங்கள்!

 'நீரின்றி அமையாது உலகு' என்பது நாமறிந்த சொல்தான்... சிலர் அதிகம் தண்ணீர் குடித்தால் பல்வேறு நோய்களை உண்டு பண்ணும் என்றும், சிலர் அதிகம் தண்ணீர் குடித்தால் உடல் நலத்திற்கு நல்லது என்றும் விதவிதமாக கருத்து கூறுவர்...
உண்மை என்ன?...
தண்ணீர் நமக்களிக்கும் நன்மைகளை இந்த ''7 வொண்டர்ஸ் ஆஃப் வாட்டர்'' மூலம் தெரிந்து கொள்ளலாம்...
  1)   தண்ணீர் உங்கள் உடலை சிலிம்மாக வைத்துக்கொள்ள உதவும்...
உடல் எடையைக்குறைக்க விரும்புகிறீர்களா?... அதில் தண்ணீரின் பங்கு அலாதியானது.

கலோரியுடன் கூடிய பல்வேறு குளிர்பானங்கள், ஜூஸ்கள் ஆகியவற்றிற்கு பதில் தண்ணீரை குடித்து உங்கள் தாகத்தை தணித்துக்கொள்ளப் பழகுங்கள். அதே போல உணவருந்தும் முன்னர் ஒரு டம்ளர் தண்ணீரை பருகுவது உங்களுக்கு விருப்பமான உணவாக இருந்தாலும்கூட உங்களை அளவுக்கு அதிகமாக உண்ண விடாமல் வயிறு நிரம்பியதொரு உணர்வைக்கொடுத்து உங்கள் டயட்டுக்கு பெரிதும் உதவும்.
தண்ணீர் உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு பெரிதும் உதவக்கூடியது. உதாரணத்திற்கு நீங்கள் கொஞ்சம் குளிர்ந்த தண்ணீரை குடிக்கும்போது உங்கள் உடல் அந்த தண்ணீரை சமவெப்பநிலைக்கு கொண்டுவர மேற்கொள்ளும் உழைப்பில் ஒரு சில கலோரிகள் எரிக்கப்படுமாம்...
  2)   தண்ணீர் உங்கள் எனெர்ஜியை அதிகப்படுத்தும்...
உங்கள் உடலில் நீர்ச்சத்து குறையும்போது(டிஹைட்ரேஷன்) பெரிதளவு சோர்வு உண்டாகும்.

தண்ணீர் உங்கள் உடலில் இரத்தம் எடுத்துச்செல்லும் ஆக்ஸிசனையும், செல்களுக்குத்தேவையான அத்தியாவசிய சத்துக்களையும் கொடுத்து உதவுகிறது.

நீங்கள் சரியான அளவு தண்ணீர் அருந்துவதால் உங்களது இதயம் இரத்தத்தை உடல் முழுவதும் பம்ப் செய்வதற்கு வழக்கத்தைவிட அதிக அளவு வேலை செய்ய வேண்டியதிருக்காது.
  3)   தண்ணீர் உங்கள் உடல் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும்...
உங்கள் மூளையின் 70 முதல் 80% திசுக்கள் தண்ணீர் கொண்டதுதான்... உங்கள் உடலில் நீர்ச்சத்து குறையும்போது உடல் மற்றும் மனது இரண்டுமே அழுத்தத்திற்கு ஆளாகும்.


நீங்கள் தண்ணீர் தாகத்துடன் இருக்கிறீர்கள் என்றால் ஏற்கனவே உங்கள் உடல் டிஹைட்ரேஷன் ஆகத்தொடங்கிவிட்டது என்றுதான் அர்த்தம். அதனால் எப்போதுமே உங்கள் மேஜையில் ஒரு டம்ளர் தண்ணீரை வைத்துக்கொள்வதோ... இல்லை... உங்களுடன் தண்ணீரை சிப் பண்ணிக்குடிக்க ஒரு ஸ்போர்ட்ஸ் பாட்டிலை வைத்துக்கொள்வதோ மிகச்சிறந்தது.
தண்ணீர் குடிப்பது தசை சுருங்குதலை தடுப்பதோடு, உடலின் அனைத்து இணைப்புகளிலும் சிறந்ததொரு லூப்ரிகண்ட்ஸாக செயல்படவும் உதவும்.
  4)   தண்ணீர் உங்களது பொலிவைக் கூட்டும்...
தண்ணீர் இயற்கை கொடுத்த ஒரு அழகு கிரீம் என்று சொன்னால் மிகையல்ல.


சரியான அளவில் தண்ணீர் அருந்துவது தோலின் செல்களுக்கு நல்ல பலன்களை அளித்து உங்கள் முகத்தை எப்போதும் இளமையாக வைத்திருக்க உதவும்.

தண்ணீர் உங்கள் உடலிலிருந்து அசுத்தங்களை அகற்றுவதோடு, இரத்த ஓட்டத்தையும், சுத்திகரிப்பையும் அதிகரித்து உங்களுக்கு முகப்பொலிவை வழங்குகிறது.
  5)   தண்ணீர் உங்கள் உடலின் சரியான செரிமாணத்திற்கு உதவும்...
சரியான செரிமாணத்திற்கு நார்ச்சத்துக்களுடன், தண்ணீரும் மிக அவசியமானதாகும்.
தண்ணீர் உணவின் தேவையற்ற பகுதிகளை கரைத்து மெதுவாக செரிமாணத்தின் மூலம் உடலை விட்டு அகற்றுகிறது.
உங்கள் உடல் டிஹைட்ரேட் ஆகும்போது உடலின் எல்லா பாகத்திலுமிருந்து நீர்ச்சத்துக்கள் உறிஞ்சப்பட்டு காலியாகிவிடுவதால் உடலில் உள்ள தேவையற்றவற்றை நீக்குவது கடினமாகிப்போகும்.
  6)   தண்ணீர் உங்கள் கிட்னியில் கற்கள் உண்டாவதை தடுக்கும்...
மிகுந்த வலியையும், வேதனையையும் கொடுக்கும் கிட்னி கற்கள் இன்று பரவலாக அதிகரித்து வருவதன் முக்கிய காரணம்... பெரியவர்களும் குழந்தைகளும் போதிய அளவு தண்ணீர் குடிக்காமலிருப்பதுதான்...

சரியான அளவில் அருந்தும் தண்ணீர் உங்களது யூரினில் உள்ள சால்ட் மற்றும் மினரல்ஸை கரைத்து வெளியேற்றிவிடுவதால் அவைகளால் உருவாகும் சாலிட் கிரிஸ்ட்டல்ஸ் எனப்படும் கிட்னி கற்கள் உருவாகாமல் தடுக்க முடியும்.
நன்றாக டைல்யூட் செய்யப்பட்ட யூரினால் கிட்னி கற்கள் உண்டாகும் வாய்ப்பு மிகக்குறைவு என்பதால் முடிந்த அளவு தண்ணீரை பருகுவது நலம்.
  7)   நீங்கள் தினமும் தேவையான அளவு தண்ணீர் குடிக்கிறீர்களா?...
பொதுவாக நியூட்ரிசியன்களால் நமக்கு பரிந்துரைக்கப்படுவது 8X8 என்ற ரூல்ஸ்தான்...

தினமும் 8 அவுன்ஸ் கிளாஸ் தண்ணீர் குடிப்பது கட்டாயமாகும்.
நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போதும், அதிக அளவு வியர்வையில் நனையும் போதும் வழக்கத்தை விடவும் அதிகமாக தண்ணீர் அருந்துவது மிக அவசியம்.
ஆகவே மக்களே... எண்ணற்ற நோய்களும், உடல் பருமன் பிரச்சினைகளும் ஆட்டுவித்துக்கொண்டிருக்கும் இந்தக்காலத்தில் இயற்கையே கொடுத்திருக்கும் வரப்பிரசாதமான தண்ணீரை தவறாமல், சரியான அளவில் தினந்தோறும் பருகி நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சந்தோஷமாய் நீங்களும் வாழ்ந்து, உங்கள் வருங்கால சந்ததியினரையும் அவ்வாறே வாழப்பழக்குங்கள்...
http://pettagum.blogspot.in/2014/01/blog-post_1994.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

திங்கள், 9 பிப்ரவரி, 2015

துணியை சுலபமாக துவைத்து சலவை செய்ய சில எளிய வழிகள்

சலவை என்று சொல்லும் போது ஒற்றை எளிய வார்த்தையாகத் தான் இருக்கும். ஆனால் உங்கள் துணியை நீங்களே துவைத்து சலவை செய்யும் போது தான் அந்த ஒற்றை வார்த்தையில் இருக்கும் கஷ்டம் உங்களுக்கு தெரியும். துணியை ஊற வைத்தல், துவைத்தல், உலர்த்துதல், மீண்டும் அதனை பயன்படுத்துவதற்கு தயார் படுத்துதல் என இவை அனைத்துமே சலவையின் அங்கமாகும். உங்கள் வீட்டில் வளரும் குழந்தைகள் இருந்தால், சலவை செய்யும் வேலை பளு அதிகரிப்பதோடு மட்டுமல்லாது பல விதமான கரைகளுக்கும் துணிகள் ஆளாகும். 

 உங்கள் துணிகளை தொழில் ரீதியான சலவைகாரர்களிடம் கொடுத்தும் கூட சலவை செய்யலாம். ஆனால் அதற்கு அதிக அளவில் செலவாகும். ஏன் நீங்களே எளிய முறைகளை பின்பற்றி சலவை செய்து, சலவை செலவுகளை குறைக்க கூடாது? கண்டிப்பாக இதற்கு சற்று நேரத்தை நீங்கள் செலவு செய்து தான் ஆக வேண்டும். ஆனால் வேலை முடிந்து விட்டால் உங்களை நினைத்து நீங்களே பெருமை அடைவீர்கள். மேலும் உங்கள் துணிகளும் கூட தூய்மையாகவும் நற்பதமாகவும் விளங்கும்.

துடைக்கும் துண்டு பளிச்சென்று மின்னுவதற்கு, இதோ சில எளிய வழிகள்!!!

 இந்த மிகப்பெரிய வேலையை செய்து முடிக்க பல வழிகள் இருக்கிறது. உங்கள் தேவைக்கு எது வசதியாக உள்ளதோ அந்த வழிமுறையை நீங்கள் உங்கள் அனுபவத்தில் தேர்ந்தெடுத்து விடலாம். நாங்கள் இங்கே உங்களுக்கு சொல்லப்போவது ஒன்றும் ராக்கெட் செய்யும் வித்தையல்ல. சொல்லப்போனால், எளிய முறையில் சிறப்பாக சலவை செய்ய சில அடிப்படை வழிகளே இவைகள். சிறப்பாக செயல்படாவிட்டால் எளிய முறையை பின்பற்றி பயந்தான் என்ன?
  
 வாஷிங் மெஷின் (சலவை இயந்திரம்) 

சலவை செய்ய சிறந்த வழிகளில் ஒன்றாக விளங்குகிறது வாஷிங் மெஷின். இது உங்கள் நேரத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல் தேவையற்ற டென்ஷன் மற்றும் மன உளைச்சலை நீக்கும். சந்தையில் பல வகையான வாஷிங் மெஷின் உள்ளது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், டாப் லோட், ஃப்ரண்ட் லோட், ஆட்டோமாட்டிக் (தானியங்கி), செமி ஆட்டோமாட்டிக் (பகுதித் தானியங்கி), சிங்கிள் டப் மற்றும் ட்வின் டப். 

 ALSO READ: BEST WAYS TO CLEAN A WASHING MACHINE 

 லேபிலை படியுங்கள் 

 ஆடையை பராமரிக்க அதனுடன் சேர்ந்து வரும் பராமரிப்பு லேபிலை படிக்க தவற விடாதீர்கள். பொக்கிஷமான உங்கள் ஆடைகளை பற்றிய முக்கிய தகவல்களை அது வைத்திருக்கும். உங்கள் ஆடை நல்ல தரத்துடன் நீண்ட நாட்களுக்கு நீடிக்க வேண்டுமானால், அதில் துவைப்பதற்கு கொடுத்திருக்கும் அறிவுரையை கண்டிப்பாக பின்பற்றுங்கள். இல்லையென்றால் தவறான தண்ணீர் வெப்ப நிலை அல்லது தவறான சோப்பு தூளால் உங்கள் ஆடைகள் பாழாகி விடும். 

 வகைப்படுத்துங்கள் 

ஒரு முறை துவைக்கப் போகும் போது அதில் நிறம், துணி வகை மற்றும் பயன்பாட்டு வகை என பல வகையான ஆடைகள் கலந்திருக்கும். உங்கள் சலவையை சுலபமாக்க வேண்டுமானால் உங்கள் ஆடைகளை கண்டிப்பாக வகைப்படுத்த வேண்டும். வெண்ணிற ஆடைகளை பிற நிற ஆடைகளிடம் இருந்து பிரிக்க வேண்டும். முக்கியமாகவும் முதன்மையாகவும் கடைப்பிடிக்க வேண்டிய டிப்ஸ் இது. அதே போல் மென்மையான ஆடைகளை எல்லாம் தனியாக துவைக்க வேண்டும். 

கறைகள் 

சில நேரங்களில், முக்கியமாக குழந்தைகள் இருக்கும் வீட்டில், கையாளுவதற்கு கடினமாக இருக்கும் கறைகள் உண்டாகும். உங்கள் சலவையை சுலபமாக்க, கரையை நீக்கும் பொருட்களின் பட்டியலை எப்போதும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். இந்த பட்டியலில் அடிப்படியான பொருட்களாக வினீகர், பேக்கிங் சோடா அல்லது கறைகளை அகற்ற சந்தையில் கிடைக்கும் பொருட்கள் மற்றும் சுத்தப்படுத்துவதற்கு தேவையான பிற பொருட்கள் கருதப்படுகிறது. கறைகளை நீக்க பல வலைத்தளங்கள் பல விதமான டிப்ஸ்களையும் அளித்து வருகிறது. 

டிடர்ஜெண்ட் 

திரவ வடிவில் இருக்கும் டிடர்ஜெண்டை பயன்படுத்துவது உங்கள் ஆடைகளுக்கு நல்லது. இதனால் ஆடைகளில் சோப்பு தூளின் எச்சம் தேங்குவதில்லை. சலவையை சிறந்த முறையில் செய்ய வேண்டுமானால், நீங்கள் எவ்வளவு ஆடைகளை துவைக்க போகிறீர்களோ அதற்கேற்ப அளவில் டிடர்ஜெண்டை பயன்படுத்துங்கள். டிடர்ஜெண்டை அதிகமாக பயன்படுத்தினால் கூடுதல் சுத்தம் கிடைக்கும் என்பதெல்லாம் உண்மையல்ல. 

உலர்த்தி இஸ்திரியிடுதல் 

ஆடைகளை வரிசையாக தொங்கப்போட்டு காய வைப்பதே சலவையில் சிறந்த வழியாக பார்க்கப்படுகிறது. இது உங்கள் ஆற்றலை திறனை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் ஆடைகளையும் நற்பதமாக வைக்கும். இதை செய்த பின்னரும் உங்கள் ஆடைகள் சுருக்கமாக இருந்தால், அவைகளுக்கு இஸ்திரி போடுங்கள். இந்த கட்டத்தில் நீராவி பயன்படுத்த தேவையில்லை என்பதால், இஸ்திரி போடுவதும் சுலமபாக இருக்கும். 

சிறிதளவு உழைப்பு மற்றும் மேற்கூறிய அடிப்படை வழிகளை பின்பற்றினால் துவைப்பதனால் ஏற்படும் உடல் மற்றும் மன உளைச்சலை தவிர்க்கலாம். சலவையை சுலபமாக்க உங்களுக்கு எது சுலபமாக உள்ளதோ அந்த வழிமுறைகளை பின்பற்றி பயனை அடையுங்கள்.
http://pettagum.blogspot.in/2014/01/blog-post_1538.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

சனி, 7 பிப்ரவரி, 2015

ஜலதோசம், மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும் மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம்


உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லை என்று பலர் இமெயிலில் தெரியப்படுத்தி இருந்தனர். மிக மிக உடனடியாக ஜலதோசத்தை குணப்படுத்தும் மருந்துகள் குருநாதர் அகத்தியரில் நூலில் நிறைந்து கிடைக்கிறது. உதாரணமாக நூலில் இருந்து ஒரு மருந்தை எடுத்து 10 பேருக்கு கொடுத்து பார்த்தோம் உடனடியாக தீர்வு கிடைத்தது.

முதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் ( மண்டையில் ) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லது தான் மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது, தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது. ஜலதோசம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் இதிலிருந்தே நமக்கு ஜலதோசம் வரப்போகிறது என்பதை கண்டுபிடிக்கலாம். இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும். தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவைகளினால் வரும் ஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.

மஞ்சள் பொடி மற்றும் சுண்ணாம்பு
மண்டையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது.தலையில் சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்றுவிரிவாகத் தெரியப்படுத்துகிறோம். அகத்தியர் தன் நூலில் அக்கினிசேகரத்தையும் வெள்ளை-யையும் சேர்த்தால் இரத்தம் வரும் இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும் என்று தெரியப்படுத்தி இருந்தார். வெளியே இருந்து பார்ப்பதற்கு ஏன் இப்படி குழப்பி இருக்கிறார் என்று நினைக்கத்தோன்றும் ஆனால் உண்மையில் சந்தேகத்திற்கு இடமே இல்லாமல் இந்த எளியவனுக்கும் தெரியப்படுத்திவிட்டார் என்றே தோன்றியது. அக்கினிசேகரம் என்றால் மஞ்சளையும், வெள்ளை என்றால் வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு -ஐ குறிக்கும். இரண்டும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் கிடைக்கும். மருந்து கிடைத்தாச்சு ஆனால் எந்த மருந்தையும் சோதிக்காமல் வெளியே தெரியப்படுத்தியது கிடையாது.

ஜலதோசத்துடன் யாராவது வந்தால் சோதித்து பின் தெரியப்படுத்தலாம் என்று வைத்துவிட்டோம். இரண்டு நாள் கழித்து நம் நண்பர் ஒருவர் ஜலதோசத்திற்கு ஏதாவது மருந்து இருக்கிறதா என்று தாமாக வந்து கேட்டார். உடனடியாக நாம் அவர் வீட்டிற்கு வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு ஒரு சிறிய பாக்கெட் வாங்கிக்கொண்டு சென்றோம். அவர் அம்மாவிடம் மஞ்சள் பொடி எடுத்து வரச்சொன்னோம். (சிறிய ஸ்பூன் ) இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல் கலந்தோம்.
 மண்ண்டையைச்சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும் என்று சொல்லி அவங்க அம்மாவிடம் கொடுத்தோம். அவர்கள் முதலில் கேட்டது சுண்ணாம்பு தேய்ப்பதால் நெற்றி புண்ணாகிவிடுமோ என்ற பயம் இருக்கிறது என்றார், மஞ்சள் சேர்வதால் உங்களுக்கு பயமே வேண்டாம் எக்காரணம் கொண்டும் புண்ணாகாது என்று சொல்லி பூசக்கூறினோம். நண்பரின் நெற்றி முழுவதும் மற்றும் மூக்கிலும் இந்தக்கலவையை அவர் அம்மாவே பூசிவிட்டார்.

1 மணி நேரம் நன்றாக தூங்க சொல்லிவிட்டு பிறகு வந்து பார்ப்பதாக கூறிவிட்டு சென்றோம். சரியாக மூன்று மணி நேரம் நன்றாக அசந்து தூங்கியுள்ளார் அதன் பின் நேரடியாக நம் வீட்டிற்கு வந்தார் ஜலதோசம் சளி பிடித்தற்கான எந்த அறிகுறியும் இல்லை. மண்டையில் இருக்கும் அத்தனை நீரையும் சுண்ணாம்பு எடுத்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறி விட்டு சென்றார். குருநாதாரின் அன்பை என்ன சொல்வேன். நன்றியை அப்படியே குருநாதருக்கு சமர்பித்தோம். சில நாட்கள் கழித்து இவரின் தெருவில் 10 வயதுள்ள ஒரு சிறுவன் இதே போல் நெற்றியில் நம் சுண்ணாம்பு கலவை பூசிக்கொண்டு செல்வதைக்கண்டு அவனை அழைத்து ஏன் நெற்றியில் ஏதோ பூசி இருக்கிறாயே என்று கேட்டோம் அவன் உடனே நம் நண்பரின் வீட்டை காட்டி அவர் தான் பூசிவிட்டார் என்று கூறினார்.

உடனடியாக நம் நண்பரை அழைத்து எத்தனை பேருக்கு இதே போல் பூசிவிட்டாய் என்று கேட்டோம். அவர் கொஞ்சம் காத்திருக்குமாறு கூறிவிட்டு வெளியே சென்று 10 நபர்களை அழைத்து வந்தார் இத்தனை பேருக்கும் ஜலதோசத்திற்கு மருந்து கொடுத்து உடனடி குணம் கிடைத்தது என்றார். 10 பேரிடமும் தனித்தனியாக விசாரித்ததில் கிடைத்த சில தகவல்கள் மருந்து பூசிய பின் தூக்கம் வருகிறது, நாம் தூங்கினால் தான் மண்டையில் இருக்கும் நீரை சுண்ணாம்பு முழுமையாக எடுக்கிறது என்றும், அத்துடன் இரவு படுக்கப்போகும் முன்னும் இதே போல் பூசிவிட்டு படுக்கலாம் என்றும், ஒரே நாளில் இரண்டு முறை பயன்படுத்தினாலும் எந்தப்பக்கவிளைவுகளும் இல்லை என்றும் தெரிவித்தனர்.
http://pettagum.blogspot.in/2014/01/blog-post_8130.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வியாழன், 5 பிப்ரவரி, 2015

வேர்ட் பாரா பார்மட்டிங்:

 வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் ஒரு பாரா முழுவதும் ஏதேனும் மாற்றங்களை மேற்கொள்ள முடிவு செய்கிறீர்களா? முழு பாராவின் வரிகளுக்கிடையேயான இடைவெளியை அதிகப்படுத்தவோ, குறைக்கவோ விரும்புகிறீர்களா? பாரா இன்டென்ட் எதனையேனும் மாற்ற விரும்புகிறீர்களா? இடது, வலது, நடு என பாரா இணையாக அமைவதை மாற்றி அமைக்க எண்ணமா? இதற்கெல்லாம் முழு பாராவினையும் நீங்கள் செலக்ட் செய்திட வேண்டியதில்லை. பாராவில் ஒரு சிறு பகுதியை செலக்ட் செய்து, தேவையான மாற்றத்திற்கான கட்டளையைத் தரவும். அது அப்படியே பாரா முழுவதும் மேற்கொள்ளப்படும்.

எழுத்தின் அளவை அரைப் புள்ளி குறைக்க: வேர்டில் பயன்படுத்தப்படும் எழுத்து ஒன்றின் அளவைக் குறைக்க பாண்ட் பெயர் கட்டத்திற்குப் பக்கத்தில் இருக்கும் பாண்ட் சைஸ் கட்டத்தில் அளவு எண்ணைக் கொடுக்கலாம். எண் பெரிய அளவில் இருந்தால் எழுத்தின் அளவும் பெரிதாகும். இதனை ஒவ்வொன்றாக உயர்த்தலாம். அதே போல அவற்றைச் சிறியதாகவும் மாற்றலாம். ஆனால் ஓரளவிற்கு மேல் மிகவும் சிறியதாக மாற்றினால் அது திரையில் தெரியாது.
எழுத்தின் அளவைப் பாதியாகவும் வேர்டில் குறைக்கலாம். எடுத்துக்காட்டாக, Arial எழுத்து வகையில் சில சொற்களை பாய்ண்ட் 30ல் வைக்கிறீர்கள். அந்த எழுத்து அளவு கொஞ்சம் குறைந்தால் நல்லது என்று எண்ணுகிறீர்கள். ஆனால் 29 உங்கள் தலைப்பின் இடத்திற்குச் சிறியதாக இருக்கிறது. இந்நிலையில் அதனை 29.5 ஆகவும் அமைக்கலாம். அப்படியானால் இதனை கால் அளவு, அதாவது எட்டேகால் என, 8.25, என அமைக்கலாமா என்று ஒருவர் கேட்கலாம். அது முடியாது. கொடுத்துப் பார்த்தால் உங்களுக்கே இது தெரிய வரும்.

சில கீ பயன்பாடுகள்: வேர்ட் டாகுமெண்ட்டில் உடனடியாக ஸ்பெல்லிங் சோதனை மேற்கொள்ள எப்7 அழுத்தவும். ஹைபன் பயன்படுத்திய சொற்கள் பிரியாமல் இருக்க வேண்டும் என்றால் ஹைபன் டைப் செய்திடுகையில் கண்ட்ரோல் +ஷிப்ட் கீகளை அழுத்திக் கொள்ளுங்கள். குறிப்பிட்ட இரண்டு சொற்கள் வரி ஓரங்களில் பிரியாமல் அமைய வேண்டும் என்றால் கண்ட்ரோல்+ஷிப்ட்+ஸ்பேஸ் பயன்படுத்துங்கள். திரையில் தெரியும் முதல் வாக்கியத்தின் தொடக்கத் திற்குச் செல்ல Alt + Ctrl + Page Up அழுத்திப் பாருங்கள். அதே போல் திரையில் தெரியும் பக்கத்தின் கீழ்ப்பாகத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Down அழுத்தவும்.

வேர்டில் எப்2 கீ: டெக்ஸ்ட் ஒன்றை செலக்ட் செய்கிறீர்கள். பின் அதனை இன்னொரு இடத்தில் கொண்டு அமைக்க விரும்புகிறீர்கள். எப்படி இந்த செயலை மேற்கொள்கிறீர்கள்? டெக்ஸ்ட்டை செலக்ட் செய்த பின்னர் மவுஸின் கர்சரை அதில் கொண்டு சென்று பின் மவுஸால் இழுத்து குறிப்பிட்ட இடம் வந்தவுடன் கர்சரை விடுவித்து அமைக்கிறீர்கள். வேறு வழியாக கட் அல்லது காப்பி செய்து தேவையான இடத்தில் பேஸ்ட் செய்கிறீர்கள். எப்படிப் பார்த்தாலும் இது பல நிலைகளில் மேற்கொள்கிற சமாச்சாரமாக இருக்கிறது. இதற்கு ஓர் எளிய வழியை எப்2 கீ தருகிறது. இங்கும் முதலில் நகர்த்த வேண்டிய டெக்ஸ்ட்டை செலக்ட் செய்து கொள்ளுங்கள். இங்கும் மவுஸ் வேண்டாம் என்றால் ஷிப்ட் கீயுடன் ஆரோ கீயைச் சேர்த்து இயக்கி டெக்ஸ்ட்டை செலக்ட் செய்திடலாம். செலக்ட் ஆனவுடன் எப்2 கீயை அழுத்துங்கள். அதன் பின் ஆரோ கீ அல்லது பேஜ் அப் அல்லது டவுண் அழுத்தி தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை எங்கு அமைக்க வேண்டுமோ அங்கு செல்லுங்கள். (இப்படிச் செல்லும்போது டெக்ஸ்ட் நகர்த்தும் வேலை வேண்டாம் என்று நினைத்தால் எஸ்கேப் கீயை அழுத்துங்கள்; எல்லாம் ரத்தாகிவிடும்.) இனி எந்த இடத்தில் டெக்ஸ்ட் அமைக்க வேண்டுமோ அந்த இடம் வந்தவுடன் ஜஸ்ட் என்டர் கீயைத் தட்டுங்கள். டெக்ஸ்ட் அந்த இடத்தில் வந்தமர்ந்துவிடும். இது கட் அண்ட் பேஸ்ட் வழிக்கு இன்னொரு செயல்வழியாகும். காப்பி அல்ல


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

செல்போன்- சில டிப்ஸ்கள்

 
இன்று எல்லோரது கைகளிலும் செல்போன் தவழ்கிறது. அழகழகான வடிவங்களில், விதவிதமான வசதிகளுடன் செல்போன்கள் கிடைக்கின்றன. அழைப்புகள், முகம் பார்த்து பேசும் வசதி, எஸ்.எம்.எஸ், எம்.எம்.எஸ்., விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் என ஏராளமான வசதிகள் இருப்பதால் அனைவருக்கும் செல்போன்கள் அத்தியாவசியமாகி விட்டன. அவை நீண்ட காலம் பயன்தர வேண்டுமா?
***
பேட்டரியின் ஆயுளில் கவனம் செலுத்தினால் செல்போன்களும் நீண்டகாலம் உழைக்கும். பேட்டரியின் ஆயுளை காக்க எப்போது பேட்டரி சார்ஜ் தீர்கிறதோ அந்த நேரத்தில் சார்ஜ் செய்யத் தொடங்கினால் போதுமானது. ரெட் சிக்னல் காட்டியபின் அதிக நேரம் கழித்து சார்ஜ் செய்வதையும், நீண்ட நேரம் (விடியவிடிய) சார்ஜ் செய்வதும் கூடாது. இடையில் நிறுத்தி விடாமல் முழுவதும் சார்ஜ் ஏறிய பிறகுதான் உபயோகப்படுத்த வேண்டும்.
***
`புளூடூத்' மெனு உள்ள செல்போன்களில் `புளூடூத்` உபயோகித்து முடித்ததும் அதை ஆப் செய்து விட வேண்டும். இது கதிர்வீச்சு முறையில் அருகில் உள்ள செல்போன்களை தொடர்பு கொள்ளும் வசதி என்பதால், அதிக சக்தியை பயன்படுத்திக் கொள்ளும். எனவே தேவையான நேரங்களில் பயன்படுத்திவிட்டு இணைப்பை துண்டிப்பது பேட்டரி சார்ஜை சேமிக்கும். புளூடூத் வழியாக வைரஸ்களும் பரவ வாய்ப்பிருப்பதால் அதை ஆப் செய்து வைத்திருப்பது செல்போனுக்கும் நல்லது.
***
தேவையற்ற சத்தங்களையும், வைப்ரேஷன் அதிர்வையும் எப்போதும் `ஆன்' செய்து வைத்திருக்க வேண்டாம். உதாரணமாக `கிபோர்டு டோன்', `ஸ்டார்ட் அப் டோன்' ஆகியவை மிக அவசியமானவை அல்ல. எனவே இவற்றை குறைவாக பயன்படுத்தலாம். அதேபோல வைப்ரேஷன் அதிர்வு மீட்டிங் நேரத்திலும், சத்தம் நிறைந்த தியேட்டர் போன்ற இடங்களில் மட்டும் பயன்படுத்த வேண்டிய வசதி. இதை எப்போதும் `ஆன்' செய்து வைத்திருப்பது பேட்டரி சார்ஜை வீணாக்கும்.
***
`பவர் சேவர் லைட்', `பேக் லைட்` ஆகியவற்றை அணைத்து வைத்திருப்பது பேட்டரியின் ஆற்றலை மிச்சப்படுத்தும். `பேக் லைட்' என்பது கீபோர்டின் பின்புறம் ஒளிரும் லைட் ஆகும். `டோன்'கள் உபயோகத்தில் இருக்கும்போது இதுபோன்ற `லைட்'கள் அவசியமில்லைதான். இரவு நேரத்தில் மட்டும் தேவைப்படுபவர்கள் `ஆன்' செய்து பயன்படுத்தி பேட்டரியின் ஆயுளை காக்கலாம். `டிஸ்பிளே செட்டிங்ஸ்'-இல் இந்த ஆப்ஷன்கள் இருக்கும்.
***
உபயோகப்படுத்தும் ஆப்ஷன்களை மட்டும் எப்போதும் `ஆக்டிவ்'-இல் வைத்திருக்க வேண்டும். எப்போதோ உபயோகிக்கும் ஆப்சன்களையும், தேவையில்லாத ஆப்சன்களையும், `ஆப்' செய்து வைத்திருப்பது பேட்டரி ஆயுளை நீடிக்கும். இது செல்போனுக்கு மட்டுமல்லாது அனைத்துவிதமான எலக்ட்ரானிக் டிவைஸ்களுக்கும் பொருந்தும்.
***
கம்ப்யூட்டர், செல்போன்களில் உள்ள வேடிக்கை நிறைந்த எலக்ட்ரானிக் விளையாட்டுகள் எல்லோரையும் கவர்ந்த ஒன்று. அதனால்தான் சிறிது நேரம் ஓய்வு கிடைத்தாலும் சிறுவர்களும், இளைஞர்களும் `கேம்ஸ்`களில் மூழ்கி விடுகிறார்கள். நிஜத்தில் விளையாடுவது எப்படி உடலில் அதிகப்படியான கலோரிகளை எரிக்குமோ, அதுபோலவே செல்போனில் விளையாடுவது அதிக அளவில் பேட்டரி சார்ஜை காலியாக்கி விடும். பேட்டரி நலன் கருதினால் குறைவாக விளையாடுங்கள்.
***
தேவையற்ற ஆப்ஷன்களை எப்படி `ஆன்' செய்து வைக்கக்கூடாதோ, அதுபோலவே பயன்படுத்தாத நேரங்களில் செல்போன்களையும் `ஆன்' செய்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நிறைய பேர் செல்போன்களை அணைத்து வைப்பதே கிடையாது. அவசர உதவி எண்கள் போல எல்லா நேரத்திலும் ஆனிலேயே இருக்கிறது. இதுவும் பேட்டரி சார்ஜை வீணாக்கும் செயல் தான். குறைந்தபட்சம் தூங்கும் நேரத்திலாவது அணைத்து வைக்கலாமே!
***
கவர்ச்சிகரமாக தோன்றுவதற்காக ஸ்கிரீன் சேவர், மூவிங் வால்பேப்பர் ஆகியவற்றை பயன்படுத்துவதை பலரும் விரும்புகிறார்கள். இவை அதிகமாக சார்ஜ் உறிஞ்சுபவை. சாதாரண படங்களை வால்பேப்பருக்கு பயன்படுத்துவதன் மூலம் அதிக சார்ஜை மிச்சப்படுத்தலாம். அதேபோல `டவர்' குறைவாக உள்ள இடங்களில் போன்களை உபயோகித்தால் நிறைய பேட்டரி ஆற்றல் வீணாகும். அப்போது `ஆப்' செய்து வைக்கலாம்.
***
நீண்ட நேரம் நிலைத்து நிற்கக்கூடிய பேட்டரிகள் கொண்ட நவீன செல்போன்கள் நிறையவே கிடைக்கின்றன. எளிதாக சார்ஜ் செய்யும் வசதிகளுடைய போன்களும், பயன்படுத்தாத, தேவையற்ற ஆப்ஷன்களை தானாக ஆப் செய்துகொள்ளும் நவீன மொபைல்களும் கூட விற்பனைக்கு கிடைக்கின்றன. எனவே விலை குறைவாக இருக்கிறது என்று எண்ணி தரமற்ற செல்போன், பேட்டரிகளை வாங்கி விட்டு அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்க வேண்டாம்.
http://pettagum.blogspot.in/2014/01/blog-post_12.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

மருதாணியை நாம் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்

 இயற்கை நமக்கு கொடுத்த அற்புதமான கொடையில் மருதாணியும் ஒன்று. என்னற்ற பயன்கள் ஒவ்வொரு செடிக்கும் ஒரு பயன் உள்ளது அதில் மருதாணி மிக முக்கியமானது ஆகும்.

மருதாணி இலையை வெறும் அழகுக்காக பெண்கள் கைககளில்வைக்கிறார்கள் என்று கருதினால் அது மிகப்பெரிய தவறாகும்.மருதாணி இலையை கைகளில் வைப்பதால் பல்வேறு பயன்களை பெண்கள் பெறுகிறார்கள்.

இன்று பெண்கள் கைகளுக்கு பல கெமிக்கல்கள் கலந்த சாயத்தை பூசுகின்றனர் அதனால் உடல் நலத்திற்கு கேடு தான். 10ஆண்டுகளுக்கு முன்பு அதிகம் பெண்கள் கைகளில் பூசுவது மருதாணியாகத்தான் இருக்கம் இன்றும் பூசுகின்றனர் ஆனால் கெமிக்கல் தடவப்பட்டதைத்தான் அதிகம் பூசுகின்றனர்.

மருதாணியின் பயன்கள்

மருதாணி இலையை அரைத்து கைககளுக்கு வைத்து வர, உடல்வெப்பம் தணியும்.

சிலருக்கு மருதாணி இட்டுக் கொண்டால் சளி பிடித்து விடும்.இதற்கு மருதாணி இலைகளை அரைக்கும் போது கூடவே 7அல்லது 8 நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளலாம்.

மருதாணி இட்டுக் கொள்வதால் நகங்களுக்கு எந்த நோயும்வராமல் பாதுகாக்கலாம். ஆனால் இந்த பயன்கள் எல்லாம் தற்போது கடைகளில் கிடைக்கும் மருதாணி கோன்களில் கிடைக்கவாய்ப்பே இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

சிலருக்கு கழுத்திலும், முகத்திலும் கருந்தேமல் காணப்படும்.இதற்கு நல்ல கை மருத்துவம் உள்ளது.

மருதாணி இலையுடன் சிறிது குளியல் சோப்பைச் சேர்த்துஅரைத்து பூசி வர விரைவில் கருந்தேமல் மறையும்.

மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும்.புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள்.

தோல் நோய்

தோல் பற்றிய அரிப்பு, படை ஆகிய நோய்களுக்கு, இந்த இலையை அரிசிச் சோற்றுடன் இரவு ஊறப் போட்டக் காலை வெறும் வயிற்றில் நீராகாரமாகச் சாப்பிட வேண்டும். உப்பில்லாத பத்தியம் இருத்தல் வேண்டும். 10 – 15 நாள் சாப்பிட வேண்டும்.

புண்கள்

ஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம்.

முடிவளர

இதன் தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும்.இரும்பு வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும். நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்.

தூக்கமின்மை

தூக்கமின்மைக்குத் தூக்க மாத்திரை சாப்பிடுதல் கூடாது. அது நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கும். மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்.

கால் ஆணி

உள்ளங்காலில் ஆணி ஏற்பட்டிருந்தால் மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள் கற்பூரம் சேர்த்து அரைத்து, ஆணிஉள்ள இடத்தில் தொடர்ந்து கட்டி வர ஒரு வாரத்தில்குணமாகும்.

படைகள்

கரும்படை, வண்ணான் படை கால் இடுக்கிலும், இடுப்பிலும், கழுத்து, கை இடுக்கிலும் வரும். இதற்கு ஒரு பிடி மருதாணி இலையுடன் 5 கிராம் 501 பார் கதர் சோப்புவைத்து அரைத்துக் களிம்பு போல தடவி வந்தால் கரும்படை யாவும் சுகமடையும். 10 -15 நாள் பூச வேண்டும். வண்டு கடிக்கும் சொறி, சிரங்கிற்கும் இதனைப் பூச்சு மருந்தாகப் பயன்படுத்தலாம்.

இளநரையை போக்கும் மருதாணி

இன்றைய இளைஞர்களுக்கு உள்ள ஒருசில பிரச்னைகளில் இளநரையும் ஒன்று. இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம்.

மருதாணி இலை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெல்லி முல்லி பொடி ஆகியவற்றை, ஒரு கப் தயிருடன் கலந்து கொள்ளுங்கள்.இந்த கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும். பின்னர், இதனை காலையில் எழுந்து தலை முடியில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

சுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை காய வைத்துவிட்டு, பின்னர் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், தலையில் உள்ள இளநரை மறைந்துவிடும்.
http://pettagum.blogspot.in/2014/01/blog-post_9672.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

மழைக்காலத்தில்ஏற்படும் வாய்ப்புண்... வீட்டு மருத்துவத்தின் மூலம் தீர்வு.

வாய்ப்புண் ஏற்பட்டுவிட்டால் , ஒருவருக்கு பெரும் தொந்தரவு. அதில் இருந்து எப்படியாவது மீண்டுவிட...

Popular Posts