லேபிள்கள்

சனி, 25 அக்டோபர், 2014

பற்களை அழகாக்க சில குறிப்புக்கள் உங்களுக்காக!

பற்களை அழகாக்க சில குறிப்புக்கள் உங்களுக்காக!
அனைவருக்குமே அழகான மற்றும் வெள்ளையான பற்கள் வேண்டுமென்ற ஆசை இருக்கும். பற்களை பொலிவோடு வைப்பதற்கு அனைவரும் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை பற்களை துலக்குவோம். இருப்பினும் ஏதாவது உணவுகளை சாப்பிட்டு விட்டால், பற்களில் உணவுக்கறைகள் படிந்து மற்றும் ஆங்காங்கு சிக்கிக் கொண்டு, பற்களின் நிறத்தை மஞ்சள் நிறமாக்குகின்றன.

பற்களுக்கு நன்மை தரும் உணவுகளான ஸ்ட்ராபெர்ரி, சிட்ரஸ் பழங்கள், கேரட் போன்றவற்றை சாப்பிட்டால், பற்கள் வெண்மையுடன் இருக்கும். மேலும் ஒரு சில வீட்டுப்பொருட்களைப் பயன்படுத்தி, பற்களை துலக்கினாலும், பற்களை நன்கு ஆரோக்கியமாகவும், பளிச் சென்று வெண்மையுடனும் இருக்கும். சரி, இப்போது அத்தகைய பொருட்கள் என்ன வென்று பார்க்காம்.

• எலுமிச்சை எலுமிச்சை துண்டை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள் இயற்கையாக வெண்மையாக இருக்கும். அதிலும் எலுமிச்சையை உப்பில் தொட்டு தேய்க்க வேண்டும்.

• பற்களை வெள்ளையாக்கும் பராம்பரிய வீட்டு வைத்திய பொருட்களில் கடுகு எண்ணெயும் ஒன்று. அதற்கு கடுகு எண்ணெய் மற்றும் மஞ்சள்தூள் கலந்து பேஸ்ட் போல் செய்து துலக்க வேண்டும்.

• பேக்கிங் சோடாவை உப்புடன் சேர்த்து பற்களை துலக்கினால், பற்கள் வெண்மையோடு ஜொலிக்கும்.

• அக்காலத்தில் பேஸ்ட் கிடைக்காத நேரத்தில் வாழ்ந்த மக்கள், வீட்டில் விறகு அடுப்பில் சமைக்கும் போது கிடைக்கும் சாம்பலைப் பயன்படுத்தி பற்களை துலக்கினார்கள். இதனால் பற்கள் வலுவோடு இருப்பதோடு, வெள்ளையாகவும் இருக்கும்.

• அனைவருக்குமே உப்பு பற்களை வெள்ளையாக்கும் பொருட்களில் மிகவும் சிறந்தது என்று. இவற்றை வைத்து பற்களை துலக்கினால் பற்களை வெள்ளையாக மட்டும் மாறாமல், பளிச்சென்றும் மின்னும்.

• ஆரஞ்சு தோல் பற்களுக்கு மிகவும் நல்லது. பற்கள் வெள்ளையாக இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள், ஆரஞ்சு பழத்தின் தோல் அல்லது அதன் கூழை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள் மின்னுவதோடு, வாய் துர்நாற்றமின்றியும் இருக்கும்.

• ஈறுகளில் வலி அல்லது சொத்தை பற்கள் இருப்பவர்களுக்கு கிராம்பு ஒரு சிறந்த மருத்துவப் பொருள். அதிலும் தினமும் பற்களை துலக்கும் போது, பிரஷ்ஷில் சிறிது கிராம்பு எண்ணெய் ஊற்றி, பின் பேஸ்ட் சேர்த்து தேய்க்க, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

• பற்களை வெண்மையாக்கும் பொருட்களில் இதுவும் ஒன்று. இதனை வைத்து தினமும் பற்களை தேய்த்து வந்தால், பற்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, பளிச்சென்றும் மின்னும்.

• பிரியாணி இலையை பொடி செய்து, அதனை எலுமிச்சை சாற்றில் கலந்து, பற்களை துலக்க, பற்கள் வெள்ளையாகும்.
http://pettagum.blogspot.in/2013/09/blog-post_9684.html

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வியாழன், 23 அக்டோபர், 2014

ஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்! அவேர்னஸ் அம்மாக்களுக்கு அழகான கைடு!

முதல் வரவு... இரண்டாவது வரவு...

இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்கப் போகும் தாய்மார்களுக்கு வரும் கவலை, அந்தப் புது ஜீவனின் வரவால் முதல் குழந்தையின் மனம் வாடிவிடக் கூடாது என்பதுதான். குழந்தை மனதின் சற்று சிக்கலான இந்த உளவியலை பக்குவமாகக் கடக்கும் வழிகளைக் கற்றுத் தருகிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் வெங்கடேஷ் மதன் குமார்.

1. முதன் முறை தாயாகும்போது ஏற்படும் எதிர்பார்ப்பு, சந்தோஷம், அக்கறை, பரவசமெல்லாம் இரண்டாவது பிரசவத்தின் போதும் அதே அளவில் இருப்பதில்லை. உங்களுக்கு தாய்மை புதிதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், பிறக்கப்போகும் குழந்தைக்கு இந்த உலகம் புதிது, சுவாசம் புதிது, ஸ்பரிசம் புதிது, அம்மா புதிது. எனவே, முதல் குழந்தையை வரவேற்ற அதே உற்சாக மனநிலையுடன் இரண்டாவது குழந்தையையும் வரவேற்கத் தயாராகுங்கள்.

2. இரண்டாவது குழந்தையை கருவில் சுமக்கும் மாதங்களிலேயே அந்த புது உறவை உங்கள் முதல் குழந்தைக்கு பக்குவமாக அறிமுகப்படுத்திவிடுங்கள். 'அம்மா வயித்துல உனக்காக, உன்கூட சேர்ந்து விளையாட ஒரு தம்பி/தங்கச்சி பாப்பா வளருது...' என்று தொடர்ந்து சொல்லி வாருங்கள்.

3. ஒவ்வொரு மாதமும் மருத்துவமனைக்குச் செல்லும்போது முதல் குழந்தையையும் அழைத்துச் செல்லுங்கள். 'நீ வயித்துக்குள்ள இருந்தப்போ அம்மா இந்த பழங்கள், மாத்திரைகள் எல்லாம் சாப்பிட்டதாலதான், நீ அறிவா, ஆரோக்கியமா, அழகா பிறந்தே. அதேமாதிரி குட்டிப் பாப்பாவும் பிறக்க நீதான் அம்மாவுக்கு பழம், மாத்திரை எல்லாம் சாப்பிட்டீங்களானு கேட்டு ஞாபகப்படுத்தணும்...' என்று பிறக்கப்போகும் குழந்தையைப் பற்றி தொடர்ந்து பேசி, பேறுகாலம் நெருங்க நெருங்க, உங்களுடன் சேர்ந்து அதுவும் தன் குட்டி தம்பி/தங்கையின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கும் மனநிலையை வளருங்கள்.

4.. 'பாப்பா பிறந்ததுக்கு அப்புறம் கொஞ்ச நாளைக்கு அம்மா ரொம்ப டயர்டா இருப்பேன். அப்போ குளிக்க வைக்க, சாப்பாடு ஊட்ட, ஸ்கூல்ல விட, ஹோம் வொர்க் செய்ய வைக்க எல்லாம் அப்பா, அம்மாச்சி, தாத்தாதான் உன்னை கவனிச்சுக்குவாங்க...' என்று முன்கூட்டியே முதல் குழந்தையிடம் வேண்டுகோளாக விண்ணப்பம் போட்டுவிடுங்கள்.

5. முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் குறைந்தபட்சம் மூன்று வருட இடைவெளி இருந்தால் தாய்க்கு வளர்ப்பு சிரமமும், சேய்க்கு புரிதல் சிரமமும் குறைவாக இருக்கும்.

6.குழந்தை பிறந்த பிறகு, புதுவரவை முதல் குழந்தையின் எதிரில் நீங்களோ, மற்றவர்களோ அதிகமாக கொஞ்சுவதை தவிருங்கள். கூடவே, 'நீயும் என்னைக்கும் எனக்கு ஸ்பெஷல்' என்று, உங்கள் முதல் குழந்தைக்கான அன்பை தொடர்ந்து அதனிடம் உறுதிசெய்யுங்கள். செய்யும் சேட்டைகளுக்கான வழக்கமான கண்டிப்புகூட, 'பாப்பா வந்துட்டதாலதான் அம்மாவுக்கு நம்மை பிடிக்காம போயிடுச்சு...' என்று இந்த நேரத்தில் அதற்கு தோன்றும் என்பதால், மிகவும் பொறுமையாக அணுகுங்கள்.

7. பவுடர் டப்பா, டயபரில் ஆரம்பித்து பாத் டப், டாய்லெட் டப், வாக்கர் என்று பிறந்த குழந்தைக்கு மாதம் ஒரு புதிய பொருள் வாங்கிக்கொண்டேதான் இருக்க நேரிடும். அதில் எல்லாம் முதல் குழந்தை ஏங்கிப்போய்விடாமல் இருக்க, இந்தக் குழந்தைக்குப் புதிதாக ஒரு பொருள் வாங்கும்போது, கேம்ஸ், பென்சில் பாக்ஸ், க்ரயான்ஸ் செட் என்று முதல் குழந்தைக்கும் மறக்காமல் ஏதாவது ஒரு குட்டி கிஃப்ட் வாங்கிக் கொடுங்கள். மேலும் குட்டிப் பாப்பாவுக்கான பொருட்களை, 'பாப்பாவுக்கு இந்த டவல் வாங்குவோமா..?', 'தம்பிக்கு இந்த கலர் வாக்கர் வாங்குவோமா..?' என்று முதல் குழந்தையையே அதை தேர்ந்தெடுக்க வையுங்கள். குழந்தைக்கு பெயரிடும்போதுகூட, முதல் குழந்தையின் சாய்ஸ்களையும் கேட்டு மதிப்புக் கொடுங்கள்.

8. அம்மா, மாமியார், கணவர் என மற்றவர்கள் என்னதான் உங்கள் குழந்தையை குறையில்லாமல் பார்த்துக்கொண்டாலும், குளிக்க வைக்க, சாப்பாடு ஊட்ட என்று கடமையளவில் உங்கள் குழந்தைகளின் தேவைகளில் இருந்து நீங்கள் விடுபட்டிருந்தாலும், மனதளவில் அதனுடனான நெருக்கத்தை தொடர்ந்து பேணுங்கள். குழந்தை ஸ்கூல் விட்டு வந்ததும் ஒரு அணைப்பு முத்தம், 'இன்னைக்கு ஸ்கூல்ல என்ன நடந்துச்சு..?' போன்ற விசாரிப்புகள், உங்கள் அருகில் உறங்கும் அரவணைப்பு என்று அதன் மீதான உங்களின் அன்புப் பிடி தளராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

9. இரண்டாவது குழந்தையின் சின்ன சின்ன தேவைகளை முதல் குழந்தையை செய்யச் சொல்லிப் பழக்குங்கள். 'அண்ணா பவுடர் எடுத்து கொடுத்தாதான் பாப்பா போட்டுப்பாளாம்', 'அக்காவுக்குதான் தம்பியோட ஜட்டி எங்க இருக்குனு தெரியுமாம்... எடுத்துட்டு வாங்க செல்லம்...' என்று, நேரடியாக வேலை வாங்காமல், இரண்டு குழந்தைகளுக்குமான பாலமாக அந்தத் தருணத்தை அமைத்துக் கொடுங்கள்.

10.. நிறைய முடி, பெரிய கண்கள், கொழுகொழு தேகம் என்று இரண்டாவது குழந்தையை கொண்டாடும்போது, எக்காரணம் கொண்டும் அதை முதல் குழந்தையோடு ஒப்பிட்டுப் பேசாதீர்கள். 'பெரியவனுக்கு பிறந்தப்போ மூக்கே இல்லை, ஆனா, பாப்பாவுக்கு நல்ல கூர்மையான மூக்கு', 'பெரியவ பிறந்தப்போ அழுதுட்டே இருப்பா, இந்தக் குட்டிப் பையன் சமர்த்தா தூங்குறான்' போன்ற ஒப்பீடுகள் எல்லாம் முதல் குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மையையும், தன் உடன்பிறப்பின் மீதான் தீராத பகையையும் (சிப்லிங் ரைவல்ரி) ஏற்படுத்தலாம்... ஜாக்கிரதை.

11. அதற்காக, 'நீதான் பெரியவன், விட்டுக் கொடுத்துப் போகணும்' என்று பொறுப்புகளை முதல் குழந்தை மீது சுமத்தாதீர்கள். 'சின்னப்பிள்ளைகூட சரிக்குச்
சமமா பிடிவாதம் பிடிக்கலாமா..?' போன்ற வன்சொற்களும் வேண்டாம். தனக்கான அன்பு பங்கிடப்படுகிறது என்ற தவிப்பைத் தவிர, வேறு எதுவும் குழந்தைக்கு இப்போது புரியாது, மனதில் பதியாது.    

12. ஒரு தாய் வயிற்றில் பிறந்த குழந்தைகள் சகோதரர்களாக வளர்வதும், பங்காளிகளாக வளர்வதும் வளர்ப்பு முறையில்தான் இருக்கிறது. பின்னாளில் உங்கள் குழந்தைகளுக்கு இடையேயான நெருக்கம் எள் அளவும் குன்றாமல் பாசமலர்களாக இருக்க, இப்போதே அதற்கான விதையிடப்பட வேண்டும். எந்தவிதத்திலும், சூழ்நிலையிலும் குழந்தைகளுக்கு இடையில் பாரபட்சம் காட்டாமல், அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பை மட்டுமே இறுதிவரை பரிமாறும் வகையில் அன்னைதான் வார்த்தெடுக்க வேண்டும் பிள்ளைகளை! 


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

செவ்வாய், 21 அக்டோபர், 2014

கணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குறிப்புகள் !!

கணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குறிப்புகள் !!
நீங்கள் கணனியின் முன்பு நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிபவரா? உங்கள் கண்களைப் பாதுகாக்க சில குறிப்புகளை பார்ப்போம். ஆயர்வேத மருத்துவ அடிப்படைத் தகவல்(Ayarveta Medical Basic Information) என்ன சொல்கிறதெனில், மனிதனின் உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் (Land, water, fire, air, space) என ஐம்பூதங்கள்.
இவையனைத்தும் ஒன்றாய் தொகுத்து உருவாக்கப்பட்டதே மனிதனின் உடல்.

ஆயுர்வேத மருத்துவத்தின் அடிப்படையில் நீங்கள் உங்கள் கண்களுக்கும், உடலுக்கும் எப்படி பாதுகாப்பு அளிப்பது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
தொடர்ந்து இடைவிடாமல் கணனியில் உட்கார்ந்துகொண்டு வேலைப் பார்ப்பவர்களுக்கு உடல் சோர்வு உண்டாகும். உடல் சோர்வில் கண்களும் அடங்கும். கணனியால் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் உறுப்பு கண்கள்தான்.

அடிக்கடி computer Screen Blink ஆவதால்தான் கண்களுக்குப் பிரச்னையே உண்டாகிறது. தொடர்ந்து இவ்வாறான ஒளிகளை கண்கள் சந்திப்பதால் உடலில் உள்ள உயிர்த்துடிப்பை இயக்குகிற காற்று சிரமத்திற்கு ஆட்படுகிறது.
அடிக்கடி ஒளிரும் கணனித் திரையால் உடலில் உள்ள உணர்ச்சி மண்டலம், புலன் உணர்வு மற்றும் மூளை போன்ற நரம்பு தொடர்பான இத்தியாதிகள் கூடுதல் பணிச்சுமைக்கு ஆட்படுத்தப்படுகின்றன.
உடலில் உள்ள பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்று அதிக சிரமத்திற்கு உள்ளாவதால்தான் மனதும் சோர்வடைந்து மன இறுக்கம் ஏற்படுகிறது. தொடர்ந்து இவ்வாறு மூளைக்கு வேலை கொடுப்பதால் அதிக உடல்சோர்வும், மனச்சோர்வும் ஏற்படுகிறது.

மனச்சோர்வு, உடல் சோர்வு, கண்கள் சோர்வடைவதை எப்படி தடுப்பது?
அமெரிக்க மருத்துவரான ஜூடித் மாரிசன் இதற்கென சில வழிமுறைகளை நமக்கு கற்றுக்கொடுக்கிறார். பெண் மருத்துவரான இவர் ஆயுர்வேத முறைப்படி நல்லெண்ணையை முகம் முழுவதுமாக பூசி மசாஜ் செய்யச்சொல்கிறார்.

பின்னர் முழங்கையில் தொடங்கி விரல் நுனிகள் வரை நல்லெண்ணையை (Sesame oil)தடவி நன்றாக மசாஜ் செய்யச் சொல்கிறார்.
சில நேரம் கணனியின் இயக்கத்தை நிறுத்திவிட்டோ அல்லது எழுந்து வெளியில் சென்று ஒரு ஐந்து நிமிடமாவது பேசிவிட்டு வரச் சொல்கிறார். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது இப்படி ஐந்து நிமிடம் ஓய்வு எடுத்தால் உடலும், மூளையும் ஒரு சீரான நிலைக்கு மீண்டும் திரும்பும்.

அவ்வப்போது உங்கள் கைவிரல்களை நீட்டி மடக்கலாம். நீங்கள் உங்கள் கை விரல்கள், மற்றும் கைகளை இலேசாக அழுத்தி மசாஜ் செய்துகொள்ளலாம். இதனால் நரம்புகளில் இரத்த ஓட்டம் சீராகும்.
கணனி இருக்கையில் உட்கார்ந்தவாறே கூட உங்கள் கண்களுக்கு நீங்கள் ஓய்வளிக்கலாம் (You can rest your eyes).
உள்ளங்கை கொண்டு உங்கள் கண்களை மூடிக்கொண்டு நான்கு புறமும் கண்களை சுழற்றுவதன் மூலம், ஒரு நேர்க்கோட்டுப் பார்வையில் வேலை செய்த உங்கள் கண்களும், கண் தசை நார்களும் இயல்பு நிலைக்கு திரும்ப வைக்கலாம். இயல்பு நிலைக்கு கண் தசைநார்கள்(Eye ligaments) திரும்புவதால் கண்களுக்கு ஏற்படும் சோர்வு, அயற்சி நீங்கும்.

கணனி முன்பு நீண்ட நேரம் அமர்ந்து பணி செய்யும் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள், அக்கவுண்டன்ட், முழுநேர பதிவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், மற்றும் மாணவர்கள் ஆகியோர்கள் இந்த முறையைப் பயன்படுத்தி நல்ல பலனைப் பெறலாம். இரவில் இந்த நல்லெண்ணை மசாஜ் செய்துகொள்ளலாம்.

பகலில் கைவிரல்கள், தோள்பட்டை, பின்னங்கழுத்து, முதுகுத் தண்டு (Fingers, shoulder, hind neck, spinal cord) ஆகியவற்றை நீங்களே பிடித்துவிட்டுக்கொள்வதன் மூலம் இலேசாக நீவிக்கொள்வதன் மூலம் முதுகு வலி, கழுத்து வலி, முழங்கை வலி (Back pain, neck pain, elbow pain) ஆகிய வலிகளிலிருந்து நீங்கள் தற்காத்துக்கொள்ள முடியும்.
அடிக்கடி கண்களுக்கு பயிற்சி அளித்துக்கொள்வதன் மூலம் கண்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்.


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

உங்கள் கணினி விரைவாக செயல்பட வேண்டுமா?

உங்கள் கணினி விரைவாக செயல்பட வேண்டுமா?
மிக மெதுவாகச் செயல்படும் கணினி உங்களை வெறுப்பேற்றுகிறதா? கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுவதன் மூலமாக உங்கள் கணினியை விரைவாகச் செயல்பட வைக்க முடியும்.

1. உங்கள் கணினியைச் சுத்தம் செய்யுங்கள்: உங்கள் கணிணியின் டெஸ்க்டாப் அடைசலாக இல்லாமல் இருந்தாலே உங்கள் கணிணி விரைவாகச் செயல்படத் தொடங்கும். அதேபோல், உங்கள் C: (Drive) முழுக்க கோப்புகளை அடைத்து வைக்காமல் நிறைய வெற்றிடம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். குறைந்தது 25 சதவீத இடமாவது காலியாக இருந்தால்தான் கணிணியின் வேகம் அதிகரிக்கும்.

  • இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யுமுன் உண்மையிலேயே அது தேவையான கோப்புதானா என்று பார்த்துக்கொண்டு பதிவிறக்கம் செய்யுங்கள். அக்கோப்பின் பயன்பாடு முடிந்தபின் அதை அழித்துவிடுங்கள்.
  • உங்களுக்குப் பயன்படாத மென்பொருட்களைத் தேவையில்லாமல் சேமித்து வைக்கவேண்டாம்.
  • புகைப்படங்கள், பவர்பாயிண்ட்கள், திரைப்படங்கள், பாடல்கள் இவற்றைத் தனியாக 'சி டி' 'டிவிடி'க்களில் பதிந்து வைத்துக்கொண்டால், 'ஹார்ட் டிஸ்க்' இடமும் மிச்சமாகும். உங்கள் கணிணி பாதிப்படைந்தாலும், இவை பத்திரமாகவே இருக்கவும் உதவும்.
  • 'ஸ்டார்ட்' ஐச் சொடுக்கவும். 'ரன்' என்பதைத் தேர்ந்தெடுத்து அதில் '%Temp%' என்று தட்டச்சு செய்து 'Enter' ஐத் தட்டவும். தற்காலிகமாகத் தேவைப்பட்ட, சேமிக்கப்பட்ட கோப்புகள் உள்ள Folder திறக்கப்படும். அதில் உள்ள கோப்புகளை எல்லாம் முழுமையாக அழித்துவிடவும்.
  • தேவைப்படாத கோப்புகளை அழிக்கையில் 'Shift Key'ஐப் பிடித்துக்கொண்டு அழிப்பதன் மூலம், Recyecle Binல் கோப்புகள் சேராமல் நேராக அழிக்கப் படும். அடிக்கடி உங்கள் Recycle Binஐக் காலி செய்வது அவசியம். ஏனினெல் அழிக்கப்பட்ட கோப்புகள் Recycle Binஇல் இருக்குமானால் உங்கள் சி டிரைவின் இடத்தை அது எடுத்துக்கொள்ளுவதாகவே ஆகிறது.
2. உங்கள் கணினித் திரையில் 'WallPaper' பயன்படுத்தாதீர்கள். அது கணிணிச் செயல்பாட்டின் வேகத்தைக் குறைக்கக் கூடியது.

3. கூடியவரை ஒரே நேரத்தில் பல கோப்புகளைத் திறப்பது, பல மென்பொருட்களைப் பயன்படுத்துவது வேகத்தைக் குறைக்கும். தேவையென்றால் ஒழிய, பல கோப்புகளைத் திறந்து வைக்கவேண்டாம். அப்படி ஒரே நேரத்தில் பல கோப்புகளைத் திறக்க நேர்ந்தால், அப்பொழுது பயன்படுத்தும் கோப்பைத்தவிர மற்றவற்றைச் சிறிதாக்கி (Minimize) வைக்கவும்.
4. கணிணியில் பாடல் கேட்டுக்கொண்டே வேலை செய்வது உங்களுக்குச் சுகம்தான். ஆனால் உங்கள் 'RAM' இன் சக்தி கண்டிப்பாகக் குறைந்துவிடும். முடிந்தால் இதைத் தவிர்க்கலாம்.

5. உங்கள் கணிணியில் 'விண்டோஸ்' ஒவ்வொரு முறை துவக்கப்படுகையிலும், அத்தனை எழுத்துருக்களையும்(Fonts) லோட் செய்கிறது. இதனாலும், தாமதம் ஏற்படலாம். இதைத் தவிர்க்க, நீங்கள் பயன்படுத்தாத எழுத்துருக்களை கணிணியில் இருந்து நீக்கி விடலாம். அதற்கு, உங்கள் C:\Windows சென்று Fonts ஃபோல்டரைத்திறந்து, தேவைப்படாத எழுத்துருக்களை அழித்துவிடுங்கள். (எ.கா. Windings). உங்கள் கணினி பயன்படுத்தும் எழுத்துருக்கள் சிவப்பு நிறத்தில் A என்ற எழுதப்பட்டிருக்கும். அவற்றை அழித்து விடக்கூடாது. கவனம்.

6. பொதுவாக கணினியில் கோப்புகள் பதியப்படும்பொழுது துண்டாக்கப் பட்டுப் பதியப்பட்டிருக்கலாம் (Fragmentation). இதன் காரணமாக நீங்கள் ஒவ்வொரு முறை அந்தக் கோப்பைத் திறக்கும்பொழுதும் கணிணி அந்த முழுக் கோப்பின் துண்டுகளைத்தேடித் தேடி இணைத்துத் தருகிறது. இதனால் நீங்கள் கோப்பைத் திறக்கத் தாமதமாகிறது. இப்பிரச்னை,நீங்கள் குறைந்தது மாதம் ஒருமுறையாவது உங்கள் கணிணியை Defragmentation செய்வதன் மூலம் தீர்ந்துவிடும். எப்பொழுதெல்லாம் உங்கள் கணிணியில் ஏராளமான கோப்புகள் குவிந்து விடுகின்றனவோ, உங்கள் கணிணி
 hard Disk உள்ள காலியிடம் 15 சதவீதத்திற்கு கீழ் வந்துவிடுகையிலோ, நீங்கள் உங்கள் கணினியில் புதிய நிரல்கள் அல்லது 'விண்டோஸ்' மென்பொருளின் சமீப வெளியீடு எதையாவது நிறுவுகையிலோ நீங்கள் Defragmentation செய்வது மிகவும் அவசியம்.

7. தேவையற்ற பயன்படாத Portகளை முடக்கிவையுங்கள்.

8. உங்கள் Hard Disk ஐ, பிரித்து 'சி' 'டி', 'இ' எனத்தனித்தனியாக வைப்பது உங்கள் கணிணியில் செயல்பாடு வேகமடைய உதவும்.

9. சமீபத்தில் பார்க்கப்பட்ட கோப்புகள் என்ற பயன்பாட்டை நீங்கள் உபயோகப்படுத்துவதில்லை எனில், அதை நிரந்தரமாக முடக்கி வைக்கலாம். இது உங்கள் கணிணியின் வேகத்தைக் குறைக்கும் ஒரு செயல்பாடு. அதை முடக்குவதன்மூலம் உங்கள் கணிணியின் வேகம் அதிகரிக்கிறது.

10. இணையத்தில் தேவையற்ற விளம்பரங்கள் வந்து உங்கள் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்க 'AdBlocker' பொருத்துங்கள்.
16. இது எல்லாவற்றையும் விட மிகவும் எளிய வழி......பழய கணினியை Upgrade செய்து பயன்படுத்தாமல் ஒரு புதிய நவீனமான கணிணியை வாங்கி விடுங்கள்.


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வெள்ளி, 17 அக்டோபர், 2014

இணைய வேகத்தை அதிகரிக்க எளிய வழி!

இணைய வேகத்தை அதிகரிக்க எளிய வழி!
நீங்கள் அன்லிமிடட் பிளானில் இணைய இணைப்பு பெற்றிருக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் இணைய வேகம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். அன்லிமிட்ட் பிளான் பயன்படுத்துபவர்களுக்கு இது நன்றாக தெரியும். உங்கள் பிளானில் உள்ளபடி இணைய வேகத்தை அதிகரிக்க ஒரு சுலப வழியைப் பார்ப்போம்.

இணைய வேகம் இடத்திற்கு இடம் மாறும். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதைப்பற்றி மற்றொரு பதிவில் பார்ப்போம். நம்மில் பெரும்பாலானோர் Unlimited Internet தான் பெற்றிருப்போம். இவ்வாறான அன்லிமிட்டட் பிளானில் இணைய வேகமானாது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்காது. ஒரு கோப்பைத் தரவிறக்கம் செய்ய வேண்டுமெனில் அதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது வரும்.

இவ்வாறில்லாமல் இணைய வேகத்தை அதிகரித்து, விரைவாக தரவிறக்கம்(Download), மற்றும் கோப்புகளை மேலேற்றம்(upload) செய்வதற்கும், பிரௌசிங் வேகத்தை அதிகப்படுத்தவும் கீழ்க்கண்ட உத்திகள் உங்களுக்குப் பயன்படும்.

இணைய வேகத்தை அதிகப்படுத்த வழிகள்:

நீங்கள் Windows XP வைத்திருப்பீர்களானால் இந்த முறை உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

Windows XP
 யில் இணைய வேகத்தை அதிகரிக்கும் வழி முறைகள்: 

1.Strar button கிளிக் செய்யுங்கள்.
2. Run கிளிக் செய்யுங்ள். அல்லது CTRL+R கிளிக் செய்தாலும் Run Window-வைப் பெற முடியும்.
3. Run Window-வில் gpedit.msc என தட்டச்சிடுங்கள்.
4. கிளிக் ஓ.கே.
5. அடுத்து தோன்றும் திரையில் computer configuration==>administrative Templates தேர்ந்தெடுங்கள்.
6. தோன்றும் சப்மெனுவில் (submenu) நெட்வொர்க் network தேர்ந்தெடுங்கள்.
7. இப்போது தோன்றும் சப்மெனுவில் (submenu) Qos Packet scheduler என்பதை கிளிக் செய்யுங்கள்.
Limit reservable bandwith என்பதை கிளிக் செய்யுங்கள்.
8. அதில் Band with limit என்பதில் 4% என கொடுத்து OK கொடுங்கள்.
இப்போது செய்த மாற்றங்களை சேமித்துவிடுங்கள்.

அனைத்தையும் சரிவர செய்தவுடன் கணினியை மறுதொடக்கம் (Restart) செய்துவிட்டு இன்டர்நெட்டை இயக்கிப் பாருங்கள்.. நிச்சயம் நல்ல மாற்றம் தெரியும். முன்பை விட இணைய வேகம் அதிகரித்திருப்பதை கண்கூடாக பார்ப்பீர்கள்..

விண்டோஸ் 7 - ல் இணைய வேகத்தை அதிகரிக்கும் வழி:

நீங்கள் விண்டோஸ் 7 பயன்படுத்துகிறீர்களா? அப்படி எனில் கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். உங்களின் இணையவேகம் அதிகரிக்கும்.
Windows 7-ல் இணைய வேகத்தை அதிகரிக்க முதலில்
1. ரன் விண்டோவை திறக்கச் செய்யுங்கள். (இதற்கு search பாக்சில் run என கொடுத்து என்டர் தட்டலாம். அல்லது Start+R கொடுத்து ரன் விண்டோவைத் திறக்கலாம்.)
2.திறக்கும் run window-வில் system.ini என தட்டச்சிடுங்கள்.
3. புதிய விண்டோ திறகும். அதில் ஏற்கனவே சில நிரல்வரிகள் இருக்கும். அதில் மாற்றம் எதுவும் செய்யவேண்டாம்.
4. திறந்த கோப்பில் கீழ்க்கண்ட நிரல்வரிகளை காப்பி செய்து கோப்பில் உள்ள நிரல்வரிகளுக்கு கீழே பேஸ்ட் செய்துவிடுங்கள்.

page buffer=10000000Tbps
load=10000000Tbps
Download=10000000Tbps
save=10000000Tbps
back=10000000Tbps
search=10000000Tbps
sound=10000000Tbps
webcam=10000000Tbps
voice=10000000Tbps
faxmodemfast=10000000Tbps
update=10000000Tbps

பேஸ்ட் செய்தவுடன் Ctrl+S அழுத்தி மாற்றத்தை சேமித்துவிடுங்கள். அல்லது file==>save கிளிக் செய்யவும். மாற்றம் செய்ததை சேமித்தவுடன் கோப்பை மூடிவிடவும்.
தற்போது Windows xp பயனர்களுக்கு சொன்னதுபோலவே உங்கள் கணினியை Restart செய்யுங்கள். பிரௌசரை திறந்து இணையத்தின் வேகத்தை சோதனை செய்யுங்கள். மாற்றம் தெரிகிறதா?


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

புதன், 15 அக்டோபர், 2014

சாப்பிட்டதும் டீ குடிக்கலாமா?

சாப்பிட்டதும் டீ குடிக்கலாமா?

ஒருவர் நலமாக இருப்பதற்கு உணவு, உடற்பயிற்சி, நல்ல பழக்க வழக்கங்கள் என ஆயிரம் காரணங்கள் கூறினாலும், அனைத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தது நம்முடைய உணவுப் பழக்கம்தான். சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா?  சாப்பிட்டவுடன் பழங்கள் சாப்பிடுவது சரியா? என நம் மனதில் பல்வேறு கேள்விகள் எழும். உணவு உட்கொள்ளும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி, ஊட்டச் சத்து நிபுணர் திவ்யா கிருஷ்ணமூர்த்தி மிகத் தெளிவாக விளக்கினார்.

 நம்முடைய உடலின் ஒவ்வொரு உறுப்பும் இயங்கத் தேவையான ஆற்றல் மற்றும் ஆக்ஸிஜனை ரத்தம் கொண்டு செல்கிறது. உணவு உட்கொண்டதும் இரைப்பையின் செயல்பாடு அதிகரித்து, மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறைய வாய்ப்பு இருக்கிறது. இதனாலேயே உணவு உட்கொண்டதும் ஒருவித மந்த நிலை ஏற்படுகிறது.

  சாப்பிட்டதும் தேநீர் அருந்தலாமா?
'கூடாது. ஏனெனில், தேயிலையில் சில அமிலங்கள் உள்ளன. இது, புரதச் சத்தையும் (Hardening), செரிமானத்தையும் கடினமாக்கி விடுவதற்கான வாய்ப்பு அதிகம்.   சாப்பிட்டு அரை முதல் ஒரு மணி நேரம் கழித்து தேநீர் அருந்தலாம்.'

சாப்பிட்டதும் சிகரெட் பிடிப்பது தவறா?
'சிகரெட் பிடிப்பதே ஆரோக்கியமானது அல்ல. சாதாரணமாக ஒரு சிகரெட் பிடித்தால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுமோ, அதைக் காட்டிலும் 10 மடங்கு பாதிப்பு, சாப்பிட்டதும் சிகரெட் பிடிக்கும்போது ஏற்படும். எனவே, சிகரெட் பிடிப்பதை முற்றிலும் நிறுத்த முடியாவிட்டாலும், சாப்பிட்டதும் சிகரெட் பிடிப்பதையாவது நிறுத்த வேண்டும்.'

சாப்பிடும்போது குளிர்ந்த நீர் அருந்தலாமா?
'உணவு உட்கொண்டதும், குளிர்ந்த நீரோ, குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதயம், சிறுநீரகம் போன்றவை பாதிப்படைய அதிக வாய்ப்பு உண்டு.  மேலும், நெஞ்சு எரிச்சல், உயர் ரத்த அழுத்தம், சரும பாதிப்பு, பக்கவாதம், வயிற்றுவலி, மைக்ரேன் தலைவலி, மூளை உறைவு நோய், பற்சிதைவு போன்றவை ஏற்படக் கூடும். சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய், ரத்த நாளங்களில் தங்கி அடைப்பை உண்டாக்கிவிடும்.  குறிப்பாக, மாரடைப்பு போன்ற இதய நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளவர்கள், சாப்பிடும்போது குளிர்ந்த நீரைப் பருகவே கூடாது. வெதுவெதுப்பான நீர் அருந்துவது, செரிமானத் திறனை மேம்படுத்தும்.'

சாப்பிட்டதும் குளிக்கலாமா?
'கூடாது. குளிக்கும்போது கை, கால், உடல் பாகங்களில் ரத்த ஓட்டம் அதிக அளவில் இருக்கும். இதனால், இரைப்பைக்கும் செரிமானத்துக்கும் தேவையான ரத்த ஓட்டம் குறைந்து விடும்.  இதனால், உணவு செரிமான மண்டல உறுப்புகள் பாதிப்படையும்.'

சாப்பாட்டின்போது அல்லது சாப்பிட்டு முடித்ததும் பழங்கள் சாப்பிடலாமா?
'உணவுக்கு இடையில் அல்லது முடித்தவுடன் பழங்கள் எடுத்துக் கொள்ள கூடாது. அப்படி எடுத்துக் கொண்டால், வயிற்றுக்குள் உப்புசம் (Bloated with air) ஏற்படும். எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்போ அல்லது பின்போதான் பழங்களைச் சாப்பிட வேண்டும். இப்படி இடைவெளி விட்டுச் சாப்பிடும்போது செரிமானத் திறன் மேம்படும்'

சாப்பிட்டதும் தூங்கலாமா?  
'மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே தூங்கச் செல்லக்கூடாது. உணவுக்குப் பின் குறைந்தது அரைமணி நேரம் கழிந்த பிறகே தூங்க  செல்லவேண்டும்.'

சாப்பிட்டதும் உடற்பயிற்சி, நடைப் பயிற்சி செய்யலாமா?
'சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது அல்ல. நடந்தால், செரிமான உறுப்புகளுக்குச் செல்லக் கூடிய ரத்த ஓட்டம் தடைப்பட்டு, கால்களுக்குச் செல்லும். உணவில் உள்ள சத்துகள் முழுமையாக ரத்தத்தில் கலப்பதற்கு இடையூறாக இருக்கும். இதனால், உணவு சரியாக செரிமானம் ஆகாமல், சத்துக்கள் அனைத்தும் வீணாகும். சாப்பிட்டவுடன் சிறிது நேரம் சும்மாவே இருப்பதுதான் பெஸ்ட்.'
http://pettagum.blogspot.in/2013/08/blog-post_4943.html

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

திங்கள், 13 அக்டோபர், 2014

பெண்கள் விரும்பும் பரோட்டா! நல்லதா... கெட்டதா?

பெண்கள் விரும்பும் பரோட்டா! நல்லதா... கெட்டதா?

 ''ஹலோ, நான்தாங்க பேசுறேன். எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு. நைட் டின்னர் பண்ண முடியாது. நீங்க ஹோட்டல்ல வாங்கிட்டு வந்துடுங்க!''
- வாரத்தில் ஏதாவது ஒரு நாள் பெரும்பாலான குடும்பங்களிலிருந்தும் இப்படி ஒரு போன் கால் பதிவாகும்.

''சரி... என்ன வாங்கி வரட்டும்?'' என்ற குடும்பத் தலைவரின் கேள்விக்கு, பெரும்பாலான குடும்பத் தலைவிகளும், குழந்தைகளும் கோரஸாக சொல்லும் பதில் - ''பரோட்டா!''
இது என்ன உளவியல்..? இருக்கிறது விஷயம்.
''நம் பெண்களால் எளிதாக வீட்டில் செய்யமுடியாத ஒரு அயிட்டம்... பரோட்டா. ஆகையால், அதன் மீது அவர்களுக்கு ஒரு ஈர்ப்பு!'' என்கிறார் கோயம்புத்தூரில் வசிக்கும் குடும்பத்
தலைவி ஜெயலட்சுமி.

''இட்லி, தோசை, சப்பாத்தி என்று விதவிதமாக வீட்டில் சமைத்தாலும், பரோட்டாவை மட்டும் பெண்களால் வீட்டில் அத்தனை சுலபமாக செய்ய முடிவதில்லை. மைதா மாவை தண்ணீர் ஊற்றி பிசை பிசை என்று பிசைந்து, சரியான பக்குவத்துக்குக் கொண்டு வருவதற்குள்... நாக்குத் தள்ளிவிடும். தோசைக்கல் எல்லாம் பரோட்டாவுக்கு சரிப்படாது. மேலும் கியாஸ் அடுப்பில் ஏறும் தோசைக்கல் சூடும் போதாது. பரோட்டா சுடுவதற்கு விறகு அடுப்புதான் சரி. இதெல்லாம் நடக்கிற காரியமா? ஆக, வீட்டில் செய்ய முடியாததும், ஆண்கள் மட்டுமே செய்யக் கூடியதுமான பரோட்டாவை கடையில் வாங்கிச் சாப்பிடுவதில் பெண்களுக்கு ஓர் அலாதி இன்பம். ஆண்கள் சமைத்த பொருளை சாப்பிடும் உளவியல் சந்தோஷமும் அதில் ஒளிந்திருக்கிறது!'' என்று சிரித்தபடியே சொல்கிறார் ஜெயலட்சுமி.

சென்னை, திருவல்லிக்கேணியில் ஏக பிரபலம் 'கோபால் பரோட்டா கடை'. அங்கே செம பிஸியாக இருந்த முகமது ரிலா, ''26 வருஷமா பரோட்டா கடை வெச்சுருக்கோம். கொத்து பரோட்டா, முட்டை பரோட்டா, சில்லி பரோட்டா, விருதுநகர் வீச்சு பரோட்டா, சிலோன் பரோட்டா, முட்டை லாப்பா - இப்படி பல வெரைட்டீஸ் இருந்தாலும்... நாங்க பிளெயின் பரோட்டாதான் போடுறோம். எங்க கடை நூறு சதவிகிதம் சுத்த சைவம். சாப்பிட வர்றவங்க எல்லாருமே... முதல்ல நான் எப்படி பரோட்டா போடுறேன்ங்கிறத உத்து பாத்துட்டே இருப்பாங்க. இந்தப் பக்கமா வண்டிகள்ல போறவங்களும்கூட ஒரு நிமிஷம் திரும்பிப் பாக்காம போக மாட்டாங்க'' என்று வாய்கொள்ளா சிரிப்புடன் சொல்லும்

பரோட்டா மாஸ்டர் முகமது ரிலா,
''எங்க கடைக்கு ஒரு நாளைக்கு சுமார் 2,000 கஸ்டமர்கள் வந்து போறாங்க. ஆச்சர்யம் என்னனா... இப்போ ஆண்களைவிட பெண்கள்தான் பரோட்டாவை விரும்பிச் சாப்பிடறாங்க. 'எத்தனை பரோட்டாம்மா..?'னு 'வீட்டுல' போன்ல கேட்டுட்டே இங்க பார்சல் கட்டி வாங்கிட்டுப் போறவங்கதான் அதிகம்!'' என்கிறார் சின்னச் சிரிப்புடன்.

''ஆமாம்... எனக்கும் என் பிள்ளைகளுக்கும் பரோட்டானா ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனா, வீட்டுல செய்றதுக்கு ரொம்ப மெனக்கெடணும். அதனால எப்பவெல்லாம் எங்க நாக்குக்கு பரோட்டா தேடுதோ, அப்போவெல்லாம் என் வீட்டுக்காரருக்கு ஒரு போன் பண்ணிட்டா போதும். 'அப்போ இன்னிக்கு உன் சமையல்ல இருந்து விடுதலையா..?'னு சிரிச்சுட்டே பார்சலோட வந்துடுவாரு'' என்று ஆமோதிக்கிறார் சென்னையைச் சேர்ந்த மாலா சங்கர்.
''ஆமாம்... பீட்ஸா, பர்கர்னு எத்தனை அயிட்டம் வந்தாலும் பரோட்டாவை அடிச்சுக்க முடியாது. நாங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் சேர்ந்து எப்படியும் மாசத்துக்கு ஒரு தடவையாச்சும் பரோட்டா வேட்டைக்கு கிளம்பிடுவோம். வாரத்துக்கு ஒரு முறை அடம் பண்ணி வீட்டுக்கும் பார்சல் வாங்கிட்டு வர வெச்சுடுவோம்!'' என்கிறார் கல்லூரி

மாணவி மகாலட்சுமி.
''சும்மா நாலா பக்கமும் அடிச்சு லேயர் லேயரா இருக்குற பரோட்டாவோட... பாயா, சேர்வானு ஊத்தி அடிச்சுப் பாருங்க... செமசெம கிக்குதான்! நாலு பேர் ஒண்ணு சேந்துட்டா... பரோட்டா மாஸ்டரை உண்டு இல்லைனு பண்ணிடுவோம். 'பரோட்டா' சூரி மாதிரி நாங்க போட்டிப் போட்டுட்டு பரோட்டா சாப்பிட்டு, கடையையே காலி பண்றதெல்லாம்கூட அப்பப்ப நடக்கும்'' என்று ரசிக்க ரசிக்கச் சொல்கிறார் கல்லூரி மாணவர் ரத்னா!
இப்படி விஜய், சூர்யா, அஜீத்தைவிட பரோட்டாவுக்கு ரசிகர்கள் இருப்பதால்தான்... டான்ஸ் மாஸ்டர், ஸ்டண்ட் மாஸ்டர், ஸ்டேஷன் மாஸ்     டர் (!!) வரிசையில், இன்று பட்டிதொட்டியெங்கும் 'ஹீரோ'வாக வலம் வருகிறார்கள்... 'பரோட்டா மாஸ்டர்'கள்! கொதிக்கும் அடுப்பு முன்பாக, கொசுவலை பனியன் அணிந்தபடி, பரோட்டா கல்லில் 'டன்டன்டன்டன்' என்று அவர்கள் எழுப்பும் இசைதான்... இன்று, தமிழகத்தின் 'தேசிய இசை'யாகவே மாறிக்கிடக்கிறது!
40 ஆண்டுகளுக்கு முன்பு தார்ச்சாலை ஓரக்கடைகளில் மட்டுமே கிடைத்து வந்த இந்த பரோட்டா, இன்று தாஜ் கோரமண்டல் ஹோட்டலிலும் கிடைக்கிறது என்றால், அது பரோட்டாவுக்கு கிடைத்த 'பத்மபூஷண்' விருதுதான்!

'செஃப்' தாமுவின் ஸ்பெஷல் பரோட்டா!
''பரோட்டா ரெசிபி சொல்லுங்களேன்...'' என்றபடி, பிரபல செஃப் தாமு முன்பாக போய் நின்றோம்.
''பரோட்டாவை முழுசா செஞ்சு முடிக்க... கிட்டத்தட்ட மூணு மணி நேரம் ஆகும்!'' என்பதை அழுத்தமாகச் சொல்லவிட்டு ஆரம்பித்தவர்,

''அரை கிலோ மைதா மாவுடன், 250 மில்லி தண்ணீர், 50 மில்லி பால், தேவையான அளவு உப்பு சேர்த்துப் பிசைந்து, எண்ணெய் தடவி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, சம அளவுகளில் அந்த மாவை உருண்டைகள் பிடித்து, அதை நன்கு அடித்துப் பிசைந்து, எண்ணெய் தடவி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறிய பிறகு, மெலிதாக திரட்டி, திரும்பவும் உருட்டி, எண்ணெய் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு, உள்ளங்கையில் தட்டி லேசாக தேய்த்து... சூடான தோசைக் கல்லில் போட்டு, பிரவுன் கலர் வரும் வரை திருப்பித் திருப்பி போட்டு எடுக்க வேண்டும். இப்படி வெந்த பரோட்டாவை தட்டில் வைத்து, இரண்டு கைகளையும் பயன்படுத்தி நான்கு பக்கமும் சுற்றி சுற்றி அடித்தால்... பரோட்டா லேயர் லேயராப் பிரியும். குருமா ஊற்றிச் சாப்பிட்டால், ருசியோ ருசிதான்!'' என்ற தாமு,

''சரியான அளவு தண்ணீர் முக்கியம். நன்றாக ஊறவும் வைக்க வேண்டும். அளவுக்கு அதிகமான சூட்டில் பரோட்டாவை வேக வைத்தால்... வெளிப்பக்கம் வெந்த மாதிரி இருக்கும். ஆனால், உள்புறம் வெந்திருக்காது. அதனால மிதமான சூட்டில் பொரிக்க வேண்டும்'' என்று டிப்ஸ்களையும் தந்தார்!

நல்லதா... கெட்டதா?
''பரோட்டா சாப்பிட்டால், உடல் நலத்துக்குக் கேடு, சர்க்கரை, ரத்தக்கொதிப்பு என நோய்கள் வரிசை கட்டுமாமே... உண்மைதானா?'' என்ற கேள்விக்கு பதில் சொல்கிறார்,

சென்னை, டயட்டீஷியன் ஷைனி சந்திரன்.
''பரோட்டா, முழுக்க முழுக்க மைதாவால் செய்யப்படும் உணவு. கோதுமையில் இருக்கும் நல்ல குணங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, அதில் இருந்து பிரிக்கப்படுவதுதான் மைதா.
மைதா மூலம் தயாராகும் பரோட்டாவில் உடலுக்குத் தேவையான நல்ல சத்துக்கள் ஏதும் இல்லை. பரோட்டாவுடன் சேரும் குருமா போன்ற கிரேவி மட்டுமே புரோட்டீன் மற்றும் கலோரிகளை கொடுக்கிறது. அது மட்டுமல்லாமல், பரோட்டாவில் அளவுக்கு அதிகமான எண்ணெய் சேர்க்கப்படுகிறது. இது, துளிகூட உடம்புக்கு நல்லது கிடையாது.

பொதுவாக, உடல் உழைப்பு அதிகம் இருப்பவர்கள் பரோட்டா சாப்பிடும்போது, எளிதில் ஜீரணமாகிவிடும். பெரிதாக பிரச்னை இல்லை. ஆனால், அதிக உடல் அசைவுகள் இன்றி, 'டெக்ஸ்'கில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு பரோட்டா நல்லதல்ல. அதிகமாக ஓடி விளையாடாத குழந்தைகளும் பரோட்டா சாப்பிட்டால் வயிற்றுவலியால் அவதிப்படுவார்கள்.

பரோட்டாவில் எண்ணெய் அதிகமாக சேர்க்கப்படுவதால், கொழுப்புச் சத்து அதிகமாகிறது. இதன் காரணமாக உடல் எடை கூடும். சர்க்கரை வியாதி, இதய நோய் மற்றும் ஹார்மோன் குறைபாடு உள்ளவர்கள் கண்டிப்பாக பரோட்டாவை தவிர்க்க வேண்டும்.

'எனக்கு பரோட்டா பிடிக்கும், சாப்பிட்டே தீர வேண்டும்' என்பவர்கள், அதன் விளைவை ஈடு செய்ய, தினமும் வாக்கிங், உடற்பயிற்சி என்று மெனக்கெட வேண்டும்'' என்று வலியுறுத்தினார் ஷைனி சந்திரன்.
பரோட்டா பிரியர்களே... உஷார்!
http://pettagum.blogspot.in/2013/08/blog-post_127.html

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

சனி, 11 அக்டோபர், 2014

நான்கு மனைவிக்காரன்..

நான்கு மனைவிக்காரன்..

ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.

அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான். பிறரோடு ஓடிவிடுவாளோ என்று பயந்தான்.

அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான். ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.

ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்துக்கொண்டா:ள்.

ஒருநாள்...

அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான். எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான்.

தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான். அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள்.

அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான். அவளோ நீயோ சாகப்போகிறாய். நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான். அவளும் சாரி என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.

நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது. அப்போதுதான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. '' நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன். உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் '' என்று சொன்னாள்.

ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான். நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த வருத்தத்திலேயே மரித்தும் போயினான்.

உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.

1. நான்காவது மனைவி நமது உடம்பு. நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை. நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.

2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான். நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.

3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள். அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள். அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.

4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா. நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.

எந்த மனைவியை இனி நீங்கள் நன்கு நேசிக்கப்போகிறீர்கள்..?

- கலைவேந்தன்.


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வியாழன், 9 அக்டோபர், 2014

மருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவைகள்!

மருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவைகள்!

வியாதிகள் இல்லாதவர்களே இருக்க முடியாது. அத்தகைய சரியான வியாதியை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து, அதற்கான சிகிச்சையை பெற்றால் சீக்கிரம் குணமாகும் வாய்ப்பு உள்ளது. உங்கள் மருத்துவர் பெரிய அறிவு ஜீவியாக இருக்கலாம். ஆனால் அதற்காக அவர்கள் தவறு செய்வதில்லை என்று சொல்ல முடியாது.
குறிப்பாக சொல்ல வேண்டுமானால், முக்கியமானது அல்ல என்று நினைத்து ஏதாவது ஒரு விஷயத்தை மருத்துவர்களிடம் சொல்ல மறைத்தால், மருத்துவரால் நோய்க்கான காரணங்களை முழுமையாக அறிய முடியாமல் போகலாம். சொல்லப்போனால், உண்மையான பலம் உண்மையை மறைப்பதால் வருவதில்லை.  உண்மையை சந்திப்பதால் மட்டுமே கிடைக்கும். ஆகவே மருத்துவரிடம் எதையும் மறைக்காமல் உள்ளதை உள்ள படி கூறி, நீண்ட ஆயுளை பெற்று 100 வருடங்களுக்கு மேலாக ஆரோக்கியமாக வாழ்ந்திடுங்கள். இப்போது மருத்துவரால் கண்டுபிடிக்க முடியாத சில நோய்களைப் பார்ப்போம்….நாசியழற்சியின் அறிகுறிகளை பார்க்கும் போது சாதாரண அழற்சியின் அறிகுறிகளை போலத் தான் இருக்கும். இதனை அறியாமல் மருத்துவர் அதற்குண்டான வைத்தியத்தை பார்க்காமல், வேறு சிகிச்சையை அளித்து வந்தால் நிலைமை மோசமாகத் தான் செய்யும். மேலும் பிரச்சனைக்கான அறிகுறிகளை மருத்துவரிடம் மறைப்பதாலும், இப்பிரச்சனை ஏற்படுவதுண்டு.
வாசனை திரவியம், சில உணவுகள் போன்றவைகளால் அலர்ஜி ஏற்பட்டு நாசி அடைப்பு, கண்ணில் நீர் வழிதல், தொடர்ச்சியாக மூக்கு ஒழுகுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதனால் முதல் வேலையாக முறையான அலர்ஜி சோதனையை செய்துக் கொள்ள வேண்டும்.
உடற்குழி நோய் என்ற உடல்நல கோளாறு, செரிமான பிரச்சனைகளால் ஏற்படும். சிலருக்கு க்ளுடென் (Gluten) உட்கொள்வதால் இப்பிரச்சனை அதிகரிக்கும். இந்த நோயால் அவஸ்தைப்படுபவர்களுக்கு அவர்கள் உண்ணும் உணவுகளின் ஊட்டச்சத்து, உடலில் போய் சேர்வதில்லை. அதற்கு காரணம் அவர்களின் சிறுகுடல் பாதிப்படைந்திருப்பதே ஆகும். வயிற்றுப் போக்கு, அடிக்கடி ஏப்பம், வயிறு வீங்குதல், மலச்சிக்கல் போன்றவைகளே இதற்கான அறிகுறிகள். ஆகவே இத்தகைய அறிகுறிகளை மருத்துவரிடம் வெளிப்படையாக சொல்ல வேண்டும். இல்லாவிட்டால், அவர்களால் கண்டறிவது கஷ்டமாகிவிடும்.
தைராய்டு ஒழுங்கின்மையால் அவஸ்தைப்படுபவர்கள், முதலில் சந்திக்கும் பிரச்சனை நெஞ்சு வலியும், நெஞ்சு படபடப்பும் தான். இது போக ஆக்கச்சிதைவு ஒழுங்கின்மை, தசைகள் மற்றும் மூட்டு வலி மற்றும் வளர்ச்சி பிரச்சனைகள் போன்ற பிற பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். மருத்துவரும் சரி நோயாளிகளும் சரி, தைராய்டு பிரச்சனையை மன அழுத்தம் என்று தவறாக நினைக்க வாய்ப்பு உள்ளது.
புற்றுநோய் அறிகுறிகளை சளிக்கான அறிகுறிகள் என்று பெரிய தவறை மருத்துவர்கள் செய்ய வாய்ப்புள்ளது. கொடிய அணுக்களின் கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சியினால் ஏற்படும் புற்றுநோயின் அறிகுறிகள். ஒவ்வொரு நோயாளிகளை பொறுத்து மாறுபடும். பசியின்மை, அதிகப்படியான வியர்வை, கடும் காய்ச்சல் போன்ற பல அறிகுறிகளை புற்றுநோய் ஏற்படுத்தும். புற்றுநோயால் அவதிப்படுபவர் அதனை கவனிக்காமல் விடும் போது, அதிக அளவில் எடை குறைவும் ஏற்படும்.
ஹார்ட் அட்டாக் ஏற்படும் போது மரணம் அல்லது மரணம் ஏற்படும் வகையில் ஆபத்து வருவது அனைவரும் அறிந்ததே. தமனி இரத்தக் குழாய்கள் அடைத்துக் கொள்வதால், இரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதனால் சோர்வு, மூச்சுத் திணறல், நெஞ்சு வலி போன்றவைகள் ஏற்படும். இவை அனைத்தும் இதற்கான அறிகுறிகள் ஆகும். இதை பொதுவாக மன அழுத்தம் என்று தவறாக நினைக்க வாய்ப்புள்ளது.
இந்த பிரச்சனை ஏற்படும் போது, முதுகு தண்டு வீங்கும். மேலும் மூளைக்கு செல்லும் இரத்தக் குழாய்கள் பாதிப்படையும். சொறி, காய்ச்சல், இறுகிய கழுத்து என்பதே இதன் அறிகுறிகள். இந்த அறிகுறிகள் சளிக்கானது என்று தவறாக நினைக்க வைக்கும். இது மரணத்தை கூட ஏற்படுத்தும். ஆகவே மருத்துவர்கள் நோய்க்கான காரணத்தை தவறாக புரிந்துக் கொள்ளாமல் இருப்பதற்கு, உங்களுக்கு ஏற்படும் அனைத்து அறிகுறிகளையும் உங்கள் மருத்துவரிடம் மறைக்காமல் தெரிவியுங்கள்.
உங்கள் மருத்துவரிடம் உங்களுக்கு பிடிப்பு ஏற்படவில்லை என்றால், மற்றொரு மருத்துவரை பார்ப்பதில் தவறு ஏதும் இல்லை.
நன்றி: இன்று ஒரு தகவல்


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

மழைக்காலத்தில்ஏற்படும் வாய்ப்புண்... வீட்டு மருத்துவத்தின் மூலம் தீர்வு.

வாய்ப்புண் ஏற்பட்டுவிட்டால் , ஒருவருக்கு பெரும் தொந்தரவு. அதில் இருந்து எப்படியாவது மீண்டுவிட...

Popular Posts