லேபிள்கள்

வெள்ளி, 23 செப்டம்பர், 2022

கைகளின் வறட்சியை போக்க சில அற்புத வழிகள் !!

சிலருக்கு கைகளில் உள்ள இயற்கை எண்ணெய்கள் வறட்சியடைந்து, கைகள் சொறிப் பிடித்தது போன்று காணப்படும். இதற்கு கிரீம்களை விட இயற்கை முறையின் மூலம் எளிதில் நீக்க முடியும்.

* ஆலிவ் ஆயிலை தினமும் இரவில் படுக்கும் போது கை, கால்களுக்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், சருமத்திற்கு வேண்டிய ஈரப்பசை கிடைத்து, கை, கால்களில் உள்ள வறட்சி நீங்கும்.

* மில்க் க்ரீம் ஓர் சிறந்த மாய்ஸ்சுரைசர். மில்க் க்ரீம் கொண்டு தினமும் மசாஜ் செய்து வாருங்கள். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, புதிய செரும செல்கள் உருவாக வழிவகுக்கும்.

குளிர்காலத்தில் தயிரை தினமும் கை, கால்களுக்கு தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, சருமத்தின் ஈரப்பசை தக்க வைக்கப்படும்.

* கண்ட க்ரீம் மாய்ஸ்சுரைசர்களை கை, கால்களுக்கு தேய்ப்பதற்கு பதிலாக, தினமும் இரவில் படுக்கும் முன் தேங்காய் எண்ணெய்யை கை, கால்களுக்கு தடவி  வந்தால், கைகளில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கலாம்.

https://tamil.webdunia.com/article/health-related-to-beauty/here-are-some-amazing-ways-to-get-rid-of-dry-hands-121021500077_1.html

--

திங்கள், 19 செப்டம்பர், 2022

உடலை சீரான சீதோஷ்ண நிலைக்கு கொண்டுவரும் சப்ஜா விதைகள்...!!

 

சளி, காய்ச்சல், குடல் புழுக்கள், வயிற்றுக் கோளாறுகள், கீல்வாதம் போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. இலைச்சாறு, மூக்கடைப்பை நீக்கும்; தோல் வியாதிகளைப் போக்கும்; குடல் புழுக்களை வெளியாக்கும்.

சிறுநீர் பாதையில் ஏற்படும் புண், நீர் எரிச்சல் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலுக்கும் இது நல்ல மருந்து. இது உடல் சூட்டை குறைத்து, உடலை சீரான  சீதோஷ்ண நிலைக்கு கொண்டுவரும் இயல்புகொண்டது. அதனால் இதை கோடைகாலத்தில் மட்டுமின்றி, உடல் சூட்டால் அவதிப்படும் காலகட்டத்திலும்  பயன்படுத்தலாம்.

கோடை காலத்தில் வட மாநிலங்களில் பலூடர் என்ற குளிர்பானத்தில் கலந்து இந்த விதையை பயன்படுத்துவதால் இதற்கு 'பலூடா விதை' என்ற பெயரும்  உண்டு. கோடை காலத்தில் நன்னாரி சர்பத்தில் இதை கலந்து சாப்பிடுவது நல்லது. இந்த சப்ஜா விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

முகப்பருக்கள் மறைய திருநீற்றுப்பச்சிலை சாற்றுடன் வசம்பைச் சேர்த்து அரைத்து, பசைபோல செய்து, நன்றாகக் குழைத்து, பருக்கள் உள்ள இடத்தில் தடவ  வேண்டும்.

திருநீற்றுப் பச்சிலை செடி மருத்துவ குணம் நிறைந்தது. திருநீற்றுப்பச்சை இலையைத்தான் பேசின் என்று அழைக்கிறோம். சப்ஜா விதை பித்தத்தை குறைக்கும்.  உடல் சூட்டை நீக்கும்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/sapja-seeds-that-bring-the-body-to-a-balanced-climate-121021300020_1.html


--

வெள்ளி, 16 செப்டம்பர், 2022

குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்குமா பிஸ்கட்டுகள்...?

 

சாதாரண பிஸ்கட்டுகளுடன் ஒப்பிட்டு பார்த்தால், கிரீம் பிஸ்கட்டுகள் இன்னும் ஆபத்தானவை ஆகும். க்ரீம் பிஸ்கட்டுகளில் சேர்க்கப்படும் ஃபிளேவர்கள் மற்றும் நிறங்கள், முழுக்க முழுக்க ரசாயணங்களால் ஆனது.

உப்பு சேர்க்கப்படும் பிஸ்கட்டுகளில் சோடியம் கார்பனேட், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். தொடர்ந்து அளவுக்கு அதிகமான உப்பு சுவைக்கொண்ட பிஸ்கட்டுகள் சாப்பிடும்போது குழந்தைகளுக்கு சிறுநீரகப் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உண்டு.

பிஸ்கட்டுகள் மைதா மாவில் தயார் செய்யப்படுவதால், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். சிலர் குழந்தைக்கு ஒரு டம்ளர் பாலுடன் இரண்டு பிஸ்கட்டுகள் சாப்பிடும்போது உடலில் கொழுப்புச்சத்து அதிகரித்து குழந்தைகள் மந்தநிலையுடன் செயல்பட ஆரம்பிப்பார்கள். செரிமானக் கோளாறுகளும்  ஏற்படலாம். 

பிஸ்கட்டுகளின் சுவைக்காக சுக்ரோஸ் அதிகமுள்ள வெள்ளைச் சர்க்கரை அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. இது பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட எல்லாருடைய உடம்பிலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டது.

சில பிஸ்கட் பாக்கெட்டுகளில், சுகர் ஃப்ரீ பிஸ்கட்டுகள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆனால் இந்த பிஸ்கட்டுகளில் சுக்ரோஸ் நிறைந்த சர்க்கரை சேர்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அதன் சுவைக்காக சுகர் ஃப்ரீ மாத்திரைகள், சோள மாவு, சுகர் சிரப் போன்றவை சேர்க்கப்பட்டிருப்பதால் உடலில் உள்ள மெட்டபாலிசத்தின் அளவைக் குறைப்பதோடு, கல்லீரல் சார்ந்த பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம்.

எப்போதும் குழந்தைகளுக்கு இயற்கை உணவு அல்லது வீட்டில் தயார்செய்த உணவுகளை சாப்பிடக் கொடுப்பதே ஆரோக்கியத்தை கொடுக்கும். வளரும் குழந்தைகளுக்கு பிஸ்கட் சாப்பிட கொடுப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லதாகும்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/biscuits-affect-the-health-of-children-121021200018_1.html


--

செவ்வாய், 13 செப்டம்பர், 2022

கை நடுக்கம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன...?

 

அறுபது வயதுக்கு மேற்பட்டவரானால் முதுமையால் ஏற்படும் கை நடுக்கமாக இது இருக்கலாம். அப்படியிருந்தால், அதற்கு பெரிதாகப் பயப்பட தேவையில்லை. ஒருவேளை பிரச்சினையாக இருந்தால், மருந்து கொடுத்து சரிப்படுத்தலாம்.

முதுமை அடைந்தவர்களுக்கு வரும் இன்னொரு தீவிர நடுக்கம் பார்கின்சன் நோய் எனப்படும் நடுக்குவாதம். இது மிகத் தீவிரமான நடுக்கம். அத்துடன் நடை, சிந்தனை போன்றவற்றையும் இது மெதுவாக்கிவிடும். இதற்கு நரம்பியல் நிபுணரிடம் காட்டி சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். 

தைராய்டு சுரப்பிப் பிரச்சினைகளாலும் சில வகையான மருந்துகளாலும் கை நடுக்கம் ஏற்படுவதற்குச் சாத்தியமுள்ளது.

இளம் வயதில் கை நடுக்கம் ஏற்பட மனப் பதற்றமும் ஒரு முக்கியக் காரணம். கூடுதலாகப் படபடப்பு, தூக்கமின்மை போன்ற காரணங்களும் இருக்கும். மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றால் இதைச் சரியாக்கலாம். 

காப்பி, டீ போன்றவற்றை அதிகமாகக் குடித்தாலும், அதிகமாக மது குடித்தாலும் கை நடுக்கம் ஏற்படலாம். சிலருக்கு எந்த காரணமும் இன்றிக் கை நடுக்கம் ஏற்படலாம். இதையும் மருந்துகள் கொடுத்துக் கட்டுப்படுத்த முடியும்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/what-are-the-causes-of-hand-tremors-121020500032_1.html


--

குழந்தைகளுக்கு பற்சிதைவு ஏற்படுவதைத்தடுப்பதற்கான வழி முறைகள்.

பற்சிதைவு அல்லது பல் சொத்தை என்பது தான் குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினர் மத்தியில் பொதுவான பிரச்சினையாக இருந்து வருகிறது. ...

Popular Posts