லேபிள்கள்

செவ்வாய், 3 மார்ச், 2020

சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள் !! ஒரு தவகல்..

1.)தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும்.
எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது.
இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில்
சாப்பிடவேண்டும்.
2.)வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து
சாப்பிடக்கூடாது. வாழைப்பழம்
சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது.
3.)பழங்களைத் தனியேதான் சாப்பிடவேண்டும்.
சாப்பாட்டுடன் சேர்ந்து
சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.
4.வெண்ணெயுடன்
காய்கறிகளைச் சேர்த்துச்
சாப்பிடக்கூடாது.
5.) மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது.
அவ்வாறு மீறி உண்டால் "வெண் மேகம்" போன்ற நோய்கள் வர வாய்ப்பு
உள்ளது.
6.)உடல் மெலிந்தவர்கள், புழுங்கலரிசிசாதம் சாப்பிட வேண்டும்.
7.)உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு
உண்பது நல்லது.
8.)ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய்,முள்ளங்கி ஆகியவற்றைச்
சாப்பிடக்கூடாது.
9.)மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிககாரம், மாமிச உணவு
ஆகியவற்றை உண்ணக்கூடாது.
10.)நெய்யை வெண்கலப்
பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது.
11.)காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ குடிக்கக்கூடாது.
ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக்
குடிக்கலாம்.
12.)அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் மிளகாய்,
ஊறுகாய்ஆகியவற்றைச்சேர்த்துக்கொள்ளக்கூடாது.
13.)பெண்கள் வீட்டிற்குத் தூரமான நாட்களில் கத்தரிக்காய், எள்,அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச்சேர்த்து கொள்ளக்கூடாது.
14.)தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய்,புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு,அதிக காரம், அதிக புளிப்பு,கொத்தவரங்காய், பீன்ஸ்
ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.
15.)கோதுமையை நல்லெண்ணெயுடன்
சமைத்துச் சாப்பிடக்கூடாது.

1. சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும்.
2. சீரகத்தையும், உப்பையும் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி உடனே தீரும்.
3. சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும்.
4. சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் அகலும்.
5. சீரகத்தை அரைத்து மூல முளையில் பூசினால் மூலம் வற்றும்.
6. சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நிற்கும். 7. சீரகத்தை மென்று தின்றாலே, வயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும்.
7. சீரகப்பொடியோடு எலுமிச்சைச் சாறு சேர்த்து குழைத்துச் சாப்பிட்டால் பித்தம் அகலும்.
8. நல்லெண்ணெயில் சீரகத்தை போட்டுக் காய்ச்சி, எண்ணெய் தேய்த்து குளித்தாலும் பித்தம் நீங்கும். 10. சீரகப்பொடியோடு தேன், உப்பு, நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்.
9. சீரகத்தை வறுத்து சுடு நீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும், மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் மந்தம் நீங்கும்.
சேற்றுப் புண்:
இது பொதுவாக மனிதர்களுக்கு கால் விரல்களுக்கு இடையே உள்ள சவ்வுப் பகுதிகளில் ஏற்படும் புண்ணைக் குறிக்கும். இது ஒரு வகையான பங்கஸ் தொற்று.
*அரைக்கப்பட்ட மருதாணி இலையை தொடர்ந்து இந்த இடங்களில் பூசி வர இது குறையும்.
*அல்லது தேனுடன் குழைக்கப்பட்ட மஞ்சள் தூளை இட்டு வர, இது குறையும்.
*அல்லது, சிறிதளவு வேப்பெண்ணெயை காய்ச்சி சேற்று புண்ணில் தடவி வர சேற்று புண் குறையும்.
· ஊமத்தன் இலைச்சாறில் தயாரிக்கப்பட்ட மத்தன் தைலம், குப்பைமேனி பொடி, மஞ்சள்தூள் ஆகியவற்றை கலந்து சேற்றுப்புண் பாதிக்கப்பட்ட இடத்தில் போட வேண்டும். இதனை சேற்றுப்புண் பாதிக்காமல் தற்காப்புக்காகவும் பயன்படுத்தலாம்.
*அல்லது, இதற்கு ஆங்கில மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் இந்த கிரீம்களை வாங்கியும் தடவலாம். Clotrimazole, Imidazole, Miconazole, Econazole, Terbinafine
1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
பல நோய்களுக்கு மருந்தாகும் ஏலக்காய்….
ஏலக்காயில் உள்ள வாலட்டைல் என்ற எண்ணெய் நறுமணத்தையும் தந்து நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலையும் தனக்குள் கொண்டுள்ளது. இதில் உள்ள காரக்குணம் வயிற்றுப் பொருமலைக் குணமாக்கி எளிதில் செரிமானம் ஆகும்படி தூண்டுகிறது.
சியே ஏற்படுவதில்லை, சாப்பிட ‌‌பிடிக்கவில்லை என்று கூறுபவர்கள், ‌தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், சி எடுக்கும். ‌ஜீரண உறுப்புள் சீராக இயங்கும்.
நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்களும், ளியால் இருமல் வந்து, அடிக்கடி இருமி வயிற்றுவலி வந்தவர்களுக்கும் கூட ஏலக்காய் நல்ல மருந்தாக அமையும். ஏலக்காயை மென்று சாப்பி‌‌ட்டாலே, குத்திரும்பல், தொடர் இருல் குறையும்.
வா‌‌ய் துர்நாற்றம் ஏ‌‌ற்படுவதற்கும் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் பிச்சனை தான் காரணம். எனவே வாய் துர்நாற்றத்தைப் போக்க ஏலக்காயை மென்று சாப்பிட்டு வரலாம்.
சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள் !! ஒரு தவகல்..


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 1 மார்ச், 2020

சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா?

சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்
நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்
இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.
இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது
இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது
நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்.
மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது.
எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.
எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.
ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.
சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது.
இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம் யுரோப்பியன் கழிவறையில் அமரும் பொழுது குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும், அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள்.
ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்எனவே யுரோப்பியன் வகை கழிவறைகளை தவிருங்கள்
கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்
சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்
சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்
சாப்பிடும் முறை!
1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க
1. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்
2. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது
3. சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க.
போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்
4. அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்
5. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்
6. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்
7. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்
8. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்
10.சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்
9. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்
10. சாப்பிட வேண்டிய நேரம்காலை – 7 to 9 மணிக்குள் மதியம் – 1 to 3 மணிக்குள் இரவு – 7 to 9 மணிக்குள்
11. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்
12. சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்
அமருங்கள் சம்மணமிட்டு.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

டென்ஷனைக் குறைத்து ஆரோக்கியமாக வாழ சில குறிப்புகள்.

டென்ஷனைக் குறைத்து ஆரோக்கியமாக வாழ சில குறிப்புகள். மன அழுத்தமாக அல்லது டென்ஷனாக இருப்பதாக உண...

Popular Posts