லேபிள்கள்

வெள்ளி, 3 ஜனவரி, 2020

பாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டிய 12 விஷயங்கள்

சரிசமமாக பிரித்து கொள்கிறோம் என்பது பல பங்குகளாக பிரித்து கொண்டு, ஒருவருக்கு மட்டும் அதில் மதிப்பு குறைவானதாக சொத்து கிடைத்தால், அந்த பாகப் பிரிவினையை எதிர்த்து கோர்ட்க்கு சென்று அந்த பாகப்பிரிவினை செல்லாது என்றும் நியாயமாக பிரிக்கவில்லை என்று டிகிரி வாங்கலாம்.
எல்லோருக்கும் சமமாக பங்கு பிரிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை, ஒருவருக்கு கூட, ஒருவருக்கு குறைய இருக்கலாம். ஆனால் அதற்கு சரியான விளக்கம் பாகப்பிரிவினை பத்திரத்தில் இருக்க வேண்டும்.
பிரிக்க முடிந்த சொத்தை சுலபமாக பாகம் பிரித்துக் கொள்ளலாம். பிரிக்க முடியாததை பிரித்தால், மிக சிறிய பங்காகி விடும் என்று கருதினால் அதனை, (NOT DIVISIBLE BY METES AND BOUNDS) அதாவது, நீள அகலத்துடன் பிரிக்க முடியாத சொத்து என்று சொல்லபடுகிறது.
பிரிக்க முடியாத சொத்தை யாராவது ஒருவர் யாருக்காவது விட்டு கொடுத்துவிட்டு அதற்கேற்ற பணத்தை பெற்று கொண்டு விடுதலை பத்திரம் எழுதி கொடுத்து சொத்தில் இருந்து வெளியேறலாம். (இப்பொழுது பாகப்பிரிவினை பத்திரம் தேவையில்லை.)
பிரிக்க முடியாத சொத்தை, யாரும் யாருக்கும் விட்டு கொடுக்க மனம் இல்லை, பகை முரண்களில் சகோதர சகோதரிகள் சிக்கிக் கொண்டு அனைவரும் சொத்து எனக்கு வேண்டும் என்று சொன்னால் அந்த சொத்தை பொது ஏலத்திற்கு தான் கொண்டு வர வேண்டும். அதில் வரும் தொகையை அனைவரும் பிரித்து கொள்ள வேண்டும்.
பாகம் பிரிக்கும் சொத்துக்களில் இருக்கும் கடன்களை, ஒருவர் மட்டும் மீட்டு இருந்தால், அதற்கான பணத்தை பெற அவருக்கு உரிமை உண்டு.
மேற்படி சொத்துக்களில் மற்ற பாகஸ்தர்களின் சம்மதத்தோடு அதில் ஒரு மாடியோ, சுற்று சுவரோ கட்டி இருந்தால் அதற்கான பணத்தை பெறலாம்.
மற்ற பாகஸ்தரர்கள் முதலில் ஒப்புக்கொண்டு விட்டு பிறகு ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும், அதற்கு பங்கு கேட்பதும் முடியாத காரியம்.
பாகப்பிரிவினையில் எப்போது மூத்தவர்கள் தான் விட்டு கொடுக்க வேண்டும். இளையவர்களும் விட்டுக் கொடுக்கலாம். ஆனால் நம் முன்னோர் மரபு "வலுத்தவர்கள் விட்டு கொடுக்க வேண்டும் என்பதே"! அதனால் வயதில் பெரியவர்களையே விட்டு கொடுக்க சொல்லி இருக்கின்றனர்.
சொத்தை பங்கிடும் போது கிழமேலாகவோ அல்லது தென் வடக்காகவோ பங்கிடலாம். அவ்வாறு பங்கிடும் போது கிழமேலிருந்தால் கிழக்கு ஓரத்தின் முதல் பங்கு கடைசி குட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதற்கு அடுத்தவர் அதற்கு அடுத்த பங்கு, இப்படியாக மேற்கு கடைசி பங்கு மூத்தவர் எடுத்து கொள்ளலாம். இதேபோல் வடக்கிலிருந்து பிரிக்கும் போது வடக்கின் முதல் பாகம் கடைசி தம்பிக்கும், தெற்கின் இறுதி பங்கு மூத்தவர்க்கும் கிடைக்கும்.
இளையவன் அதிக சலுகை பெற்றால் எதிர்காலத்தில் மூத்தவர்கள் வயதாகும் போது இளையவன் தோள் கொடுப்பான் என்று இந்த மரபு கடைப்பிடிக்கப்படுகிறது.
பாகப்பிரிவினையில் பணத்தை வீணாக்காமல் இருக்க 11 வழி முறைகள்:
சகோதர, சகோதரிகளிடையே இணக்கமும், அன்பும் இல்லாத இடத்தில் பாகவிரினையில், அதிக அளவு செலவுகள் ஆகும். மூத்தவர் இறுக்கி பிடித்தால் இளையவரும் இறுக்கிப் பிடிப்பார் என்ற உண்மையை உணர்தல் வேண்டும்.
பங்குகளில் சச்சரவு இல்லாமல் பிரிக்க வேண்டும். எப்போதும் குடும்பத்தினருக்குள்ளேயே பேசி முடிக்க வேண்டும். யாருக்கு என்ன பங்கு என்று, வெளிநபரையோ, நாட்டாமையையோ, பெரிய மனுஷங்களையோ அறவே தவிர்க்க வேண்டும்.
பங்கு பிரிப்பதில் முரண்பாடுகள் அதிகம் இருந்தாலும் நிச்சயம் நீதிமன்றம் நாடக்கூடாது. பேசித் தீர்க்க வேண்டும். மிக மிக கடைசி வாய்ப்பாக கோர்ட்டை தீர்வாக நினைக்க வேண்டும்.
நீதிமன்றத்திற்கு செல்லும் நிலையில், பெரிய மனுஷன்களை வைத்து பேச்சுவார்த்தையை நடத்தலாம்.
சகோதரர் சகோதரிகளிடையே பேச்சுவார்த்தை இல்லாத நிலையில் பாகம் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பக் கூடாது. முடிந்தவரை நேரில் சந்தித்து பேச வேண்டும். முடியவில்லை என்றால் நீங்களே கைப்பட பாகம் கேட்டு சகோதரர் சகோதரிகளுக்கு கடிதம் எழுதலாம்.
பாகப் பிரிவினை வேலையை செய்ய செலவு யார் செய்வது என தள்ளி போட்டால், நாள் தள்ள தள்ள செலவு கூடுமே தவிர நிச்சயம் செலவு குறையாது.
"பூனைக்கு யாராவாது மணிகட்ட வேண்டும்" என்ற எண்ணத்தில் யாராவது ஒரு சகோதரர் அல்லது சகோதரி முன் முயற்சி எடுக்க வேண்டும். அனைத்து சகோதரி சகோதர்களும் ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு வேலையில் இருந்தாலும், இவர்களை ஒருங்கிணைக்க ஒருவர் முன் முயற்சி எடுக்க வேண்டும்.
பெரும்பாலும், குடும்ப நல்லது கெட்டதுகளில் கூடும்போது இந்த பாக பிரிவினைகளை முடித்துவிட வேண்டும். பாகப் பிரிவினைக்கு என்று ஒரு தனி சந்திப்பு என்பது வீணான செலவுகள்.
நிலவரி திட்ட சர்வே நடக்கும் போதோ , ஜமாபந்தியின் போதோ எளிதாக வருவாய் துறையின் ஆவணங்களில், அனைத்து பாகஸ்தாரர்களின் பெயரை சேர்த்து விடலாம். செலவு மிக குறைவு.
பெரும்பாலும் விவசாய நிலங்களை கூர்சீட்டு போட்டு கொள்ளலாம். தனிப்பட்டாவை அதன் மூலம் மாற்றி கொள்ளலாம்.
நகர சொத்துகளுக்கு மற்றும் அதிக மதிப்பு உள்ள சொத்துக்களுக்கு மட்டும், பாகவிரினை பத்திரம் போட்டு கொள்ளலாம்.
பாகப் பிரிவினையில் யார் யாருக்கு எவ்வளவு பங்கு?
நீங்கள் வாங்கும் சொத்து பாக பிரிவினை மூலம் வந்து இருக்கிறது என்றால், பாகப்பிரிவினை பத்திரத்தையோ (அ) கூர் சீட்டையோ நன்கு படித்து பார்த்து சட்டப்படி யார் யாருக்கு எவ்வளவு பாகம் என்று தெரிந்து கொண்டு, அந்த பங்கின் படி தான் நீங்கள் வாங்கும் சொத்து இருக்கிறதா என்று சரி பார்க்க வேண்டும்.
இதில் கொஞ்சம் கவனம் குறைந்து விட்டாலும் எதிர்காலத்தில் மற்றொரு பாகஸ்தர்களோ, அவர்களின் வாரிசுகளோ வழக்கு போடலாம். எனவே கீழ்க்கண்ட பட்டியலை எப்போதும் மனதில் வையுங்கள்.
இஸ்லாம் சட்டப்படி கணவன் இறந்தால் யார்யாருக்கு எவ்வளவு பங்கு?
கணவன் இறந்தால்கணவன் சொத்தில் மனைவிக்கு 1/8 பிள்ளைகளுக்கு மீதி இருக்கும் பங்கு
பிள்ளைகளில் ஆண்களுக்குமீதியில் 2 பங்கு வீதம்
பிள்ளைகளில் பெண்களுக்குமீதியில் 1 பங்கு வீதம்
ஆண் வாரிசு இல்லாமல் ஒரே ஒரு பெண் மட்டும் வாரிசாக இருந்தால்
மீதியில் 1/2 பங்கு ஆண் வாரிசு இல்லாமல் பல பெண்கள் வாரிசாக இருந்தால்
மீதியில் 2/3 பங்கு இறந்த கணவனுக்கு வாரிசுகள் இல்லை என்றால்
மனைவிக்கு 1/4 பங்கு இறந்த கணவனுக்கு வாரிசுகள் இல்லை என்றால் தாயாருக்கு
மீதியில் 1/3 பங்கு இறந்த கணவனுக்கு வாரிசுகள் இல்லை என்றால் தந்தை மற்றும் தாத்தா பாட்டிக்கு 1/6 பங்கு இஸ்லாம் சட்டப்படி மனைவி இறந்தால் யார்யாருக்கு எவ்வளவு பங்கு ?
மனைவி இறந்தால், மனைவி சொத்தில் கணவனுக்கு 1/4 பங்கு
பிள்ளைகளுக்கு மீதி உள்ளதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
எப்படி எடுத்துகொள்ள வேண்டும் என்றால் மகன்களுக்கு
மீதி உள்ளதில் 2 பங்கு வீதம்
மகள்களுக்கு மீதி உள்ளதில் 1 பங்கு வீதம்
ஆண் வாரிசு இல்லாமல் ஒரே ஒரு பெண் மட்டும் வாரிசாக இருந்தால்
மீதி உள்ளதில் 1/2 பங்கு
ஆண் வாரிசு இல்லாமல் பல பெண்கள் வாரிசாக இருந்தால்
தலா 2/3 பங்கு மேற்படி மனைவி, வாரிசுகள் இல்லாமல் இறந்து விட்டால்
½ பாகம் சரி பாதி கணவனுக்கு
மனைவியின் தாயாருக்கு
மீதி சொத்தில் 1/3 பங்கு வீதம்
மனைவியின் தகப்பனார்ருக்கு (தாத்தா & பாட்டிக்கு)
1/6 பங்கு
…………………………………………………………………………………………………
கிறிஸ்தவ சட்டப்படி கணவன் இறந்தால் யார்யாருக்கு எவ்வளவு பங்கு?
கணவன் இறந்தால் மனைவிக்கு
கணவரின் சொத்தில் 1/3 பங்கு
மகன்கள் மற்றும் மகள்களுக்கு
மீதம் உள்ள இரண்டு பங்கு 2/3 பங்கு சரி சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.
கணவருக்கு வாரிசு இல்லையென்றால் 1/3 பங்கை மனைவி எடுத்து கொண்டு கணவனின் தந்தைக்கு கொடுக்க வேண்டும்.
தந்தையும் இல்லை என்றால் அவரின் தாயாரும் சகோதர சகோதரிகளும் சரி சமமாக எடுத்து கொள்ளலாம்
…………………………………………………………………………………………………
கிறிஸ்தவ சட்டப்படி மனைவி இறந்தால் யார்யாருக்கு எவ்வளவு பங்கு?
மனைவி இறந்தால் அவரின் கணவருக்கு
மனைவியின் சொத்து கணவருக்கு சொத்தில் 1/3 பங்கு
மகன்கள் மற்றும் மகள்கள்
மீதம் உள்ள இரண்டு பங்கு 2/3 பங்கு சரி சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இறந்தவர் மனைவி வாரிசு இல்லை என்றால்
கணவன் சொத்தில் 1/3 எடுத்து கொண்டு மீதி சொத்தை தந்தைக்கு கொடுத்து விட வேண்டும்.
மேற்படி தந்தை இல்லை என்றால் மேற்படி சொத்து தாயாருக்கோ அல்லது சகோதர சகோதரிக்கோ சரி சமமாக பிரித்து கொடுக்க வேண்டும்.
……………………………………………………………………………………………………
இந்து சட்டப்படி கணவன் இறந்தால் யார்யாருக்கு எவ்வளவு பங்கு ?
கணவன் இறந்தால் அவருடைய முதல் வாரிசுகள் அனைவருக்கும் சம பங்கு.
கணவரின் முதல் வாரிசுகள் யாரும் இல்லையென்றால் இரண்டாம் வாரிசுகளில் தந்தை மட்டும் முழு சொத்தையும் அடையலாம்.
கணவரின் இரண்டாம் வாரிசுகளில் தந்தை இல்லையென்றால் மீதி உள்ள இரண்டாம் வாரிசுகள் அனைவரும் அனைவருக்கும் சம பங்கு அடையலாம்.
இரண்டாம் வாரிசுகளில் சிலர் உயிருடன் இருந்து சிலர் உயிருடன் இல்லையென்றால் உயிருடன் இல்லாதவர்களுக்கும் அவர்களுடைய வாரிசுகளுக்கும் எந்த வித பங்கும் கிடையாது.
இரண்டாம் வாரிசுகளில் தந்தை மற்றும் சகோதர சகோதரிகள் யாருமே உயிருடன் இல்லையென்றால் இரண்டாம் வாரிசுகளின் வாரிசுகளுக்கு சொத்து கிடைக்கும் .
இந்து சட்டப்படி கணவனின் முதல் வாரிசுகள் யார் யார் ?
1. தாய்
2. மனைவி
3. மகன்
4. மகள்
5. முன்னரே இறந்த மகனின் குழந்தை
6. முன்னரே இறந்த மகளின் குழந்தை
7. இறந்த மகனின் விதவை மனைவி
இந்து சட்டப்படி கணவனின் இரண்டாம் வாரிசுகள் யார் யார் ?
1. தந்தை
2. தந்தை இல்லையென்றால் உயிருடன் இருக்கும் சகோதர சகோதரிகள்
3. சகோதர சகோதரிகள் யாரும் உயிருடன் இல்லையென்றால் அவர்களின் வாரிசுகள்
……………………………………………………………………………………………………
இந்து சட்டப்படி மனைவி இறந்தால் யார்யாருக்கு எவ்வளவு பங்கு ?
மனைவி இறந்தால் அவருடைய வாரிசுகள் அனைவருக்கும் சம பங்கு.
மனைவியின் வாரிசுகள் யாரும் இல்லையென்றால் கணவனின் வாரிசுகளுக்கு சம பங்கு.
கணவனின் வாரிசுகள் இல்லையென்றால் மனைவியின் தகப்பனார் வாரிசுகள் சம பங்கு அடைவார்கள்.
மனைவியின் தகப்பனார் வாரிசுகள் இல்லையென்றால் மனைவியின் தாயார் வாரிசுகள் அடைவார்கள் சம பங்கு அடைவார்கள் .
மனைவிக்கு குழந்தை இல்லாமல் கணவன் மட்டும் இருந்து சொத்து மனைவியின் சுய சம்பாத்தியமாக இருந்தால் கணவனுக்கும் கணவனின் வாரிசுகளுக்கும் முழுமையாக சென்றடையும் .
மனைவிக்கு குழந்தை இல்லாமல் கணவன் மட்டும் இருந்து சொத்து சீதனமாக தந்தையார் வழியில் வந்திருந்தால் மேற்படி சொத்து கணவனுக்கும் கணவனின் வாரிசுக்கும் சேராது . திரும்ப தந்தையார் வாரிசுகளுக்கு சென்று விடும்.
இந்து சட்டப்படி மனைவிக்கு முதல் வாரிசுகள் யார் யார் ?
1. பெண்ணின் மகன்கள்
2. பெண்ணின் மகள்கள்
3. முன்னரே இறந்த மகனின் குழந்தைகள்
4. முன்னரே இறந்த மகளின் குழந்தைகள்
5. கணவர்
…………………………………………………………………………………………………..
தெரிந்து கொள்ள வேண்டிய 3 வகையான பாகப்பிரிவினை பத்திரங்கள்
ஒரே குடும்பத்தினர் பாகபிரிவினை பத்திரம்:
"ஒரே குடும்ப உறுப்பினர்கள்" என்பது 'தாத்தா, பாட்டி, (தந்தைவழி தாய்வழி, இரண்டும் தான்), தந்தை, தாய், மகன், வளர்ப்பு மகன், மகள், வளர்ப்பு மகள், பேரன், பேத்தி, சகோதரன், சகோதரி" ஆகிய இந்த உறவுக்குள் மட்டுமே இருக்க வேண்டும். (இதைத் தாண்டி, பெரியப்பா, சித்தப்பா, அவர்களின் மகன், மகள், அண்ணி, மைத்துனன் போன்றவர்கள் இரத்த உறவாக இருந்தாலும், அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் என்ற இந்த விளக்கத்துக்குள் வரமாட்டார்கள்) என்று பத்திரபதிவு அலுவலகம் சொல்கிறது .
பாகம் பிரித்துக் கொள்ளும் சொத்தானது
1. பூர்வீகச் சொத்தாக இருந்தாலும்,
2. நம் தகப்பனார், தாயார் மூலம் கிடைக்கும் சொத்தாக இருந்தாலும்,
3. பெற்றோர்கள் இறந்த பின், நமக்கு வாரிசு முறைப்படி கிடைக்கும் சொத்தாக இருந்தாலும்
மேற்படி பூர்வீக சொத்தைப் பிரித்துக் கொள்பவர்கள் அனைவரும் "ஒரே குடும்ப உறுப்பினர்களாக" இருக்க வேண்டும்.
ஒரே குடும்ப உறுப்பினர்களாக இருந்தால், அவரவர் பாகச் சொத்தின் மதிப்புக்கு 1% ஸ்டாம்ப் கட்டணமும், 1% பதிவுக் கட்டணமும் செலுத்த வேண்டும்; அதிலும் சலுகையாக, ஸ்டாம்ப் கட்டணம் மிக அதிகபட்சமாக ரூ.25,000/-ம், பதிவுக் கட்டணம் மிக அதிக பட்சமாக ரூ.4,000/- செலுத்தினால் போதும் என்று, இந்திய முத்திரைச் சட்டத்தில் (தமிழ்நாடு திருத்தல் சட்டத்தில்) சொல்லப்பட்டுள்ளது.
அதாவது சொத்தின் மதிப்பு ரூ..25 லட்சம் வரை 1% ஸ்டாம்பு கட்டணம் என்றும், சொத்தின் மதிப்பை அந்த ரூ..25 லட்சத்தை தாண்டிவிட்டால், அது எவ்வளவு அதிகமான மதிப்பாக இருந்தாலும், அதிக பட்ச ஸ்டாம்ப் கட்டணமாக ரூ.25,000/- செலுத்தினால் போதும். மேலும் இந்த கட்டணத்தை பிரித்துக் கொள்ளும் ஒவ்வொரு பங்கின் மதிப்புக்கும் செலுத்தி இருக்க வேண்டும். இவ்வாறான ஸ்டாம்ப் கட்டணம் அல்லாமல், பதிவுக் கட்டணமாக அதிக பட்சமாக ரூ.4,000/- ஒவ்வொரு பங்குக்கும் செலுத்த வேண்டும்.
குடும்ப உறுப்பினர் அல்லாத பாகபிரிவினை பத்திரம்
குடும்ப உறுப்பினர் அல்லாதவர்களுக்குள் நடக்கும் பாகப் பிரிவினை. இதில், உறவே இல்லாத இரண்டு நபர்கள் சொத்தை வாங்கி வைத்திருந்தால், அவர்கள் இந்த இரண்டாம் வகைப்படி பாகம் பிரித்துக் கொள்ளலாம்.
குடும்ப உறுப்பினர் அல்லாத வேறு உறவினர்கள் கூட்டாக ஒரு சொத்தை வாங்கி இருந்தாலும், அல்லது வாரிசு முறையில் அடைந்திருந்தாலும் அவர்களும் இதன்படி பாகம் பிரித்துக் கொள்ளலாம்.
இதில், சொத்தை இரண்டாகவோ, அல்லது பல பங்குகளாகவோ பிரித்துக் கொள்வர். இந்தமுறை பாகப்பிரிவினைப்படி, ஸ்டாம்ப் கட்டணம் சற்று வித்தியாசமாக இருக்கும்.
இதில் எது பெரிய பங்காக இருக்கிறதோ அதை விட்டு விட்டு, மற்ற சிறிய பங்குகளின் மொத்த மதிப்பை கணக்கெடுத்து அந்த தொகைக்கு 4% வீதம் (அதாவது பிரிந்த பங்கு சொத்துக்களின் மதிப்பு ரூ. ஒரு லட்சமாக இருந்தால் ஸ்டாம்ப் கட்டணம் ரூ.4,000/- என்றும், மதிப்பு இரண்டு லட்சமாக இருந்தால் ஸ்டாம்ப் கட்டணம் ரூ.8,000/- என்றும் செலுத்த வேண்டும்.)
பின்னர் பதிவுக் கட்டணமாக இதேபோல பிரிந்த பங்குகளின் (பெரிய பங்கு தவிர மற்ற பங்குகள் பிரிந்த பங்குகள் எனப்படும்) மதிப்புக்கு 1% வீதம் பதிவுக் கட்டணமும் செலுத்த வேண்டும்.
3.கூர்சீட்டு (வாய்மொழி பாகப்பிரிவினை பத்திரம்)
விவசாய நிலங்களை பாகம் செய்து கொள்ளும் போது, வாய்மொழியாகவே பேசி அவரவர் பங்கு நிலத்தை பாகமாகப் பிரித்துக் கொள்ளலாம். நம் குடும்ப பெரியவர்கள் முன்னிலையிலும் பேசிக் கொள்ளலாம்.
அதை பத்திரத்தில் எழுதிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
அவ்வாறு பங்கு பிரித்த படியே பட்டாவை மாற்றிக் கொண்டால் போதுமானது. பாகப்பிரிவினை என்பது "சொத்து மாறுதல்" என்ற கணக்கில் வராது.
எனவே இந்திய பதிவுச் சட்டப்படி அதை பத்திரமாக எழுதிப் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என இந்திய சுப்ரீம் கோர்ட் பல வழக்குகளில் குறிப்பிட்டுள்ளது.
இருந்த போதிலும், நாம் அவரவர் ஞாபகத்துக்காக அதை ஒரு சீட்டில் (பேப்பரில் எழுதி) அதில் சம்மந்தப்பட்டவர்கள் கையெழுத்தையும் பெற்று ஒவ்வொருவரும் ஒரு காப்பியை வைத்துக் கொள்ளலாம்.
இதையே "வாய்மொழி பாகப் பிரிவினை" என்றும் "கூர்சீட்டு" (அதாவது கூர் போட்டுக் கொண்ட கணக்குச் சீட்டு) என்றும் சொல்கிறோம்.
அதை பத்திரப் பதிவு அலுலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஏன் என்றால், அந்த கூர்சீட்டில் இன்றைய தேதியில் சொத்துக்களை பிரித்துக் கொண்டதாக எழுதிக் கொள்ளமாட்டோம்.
அதற்குப் பதிலாக, பங்குதாரர்கள் ஏற்கனவே வாய்மொழியாக சொத்தை முன்னரே பிரித்துக் கொண்டதாகவும், அதை இன்று ஒரு ஞாபகச் சீட்டாக எழுதிக் கொண்டோம் என்று தான் அதில் எழுதி இருக்க வேண்டும்.
ஆனால், இன்றே சொத்துக்களை பாகமாகப் பிரித்து எடுத்துக் கொண்டுள்ளோம் என்று எழுதி இருந்தால், அது சொத்தை மீது பரிமாற்றம் நடைபெற்றதாகக் கருதி, அதை பதிவு செய்ய வேண்டிய கட்டாயாமும் ஏற்பட்டுவிடும்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 1 ஜனவரி, 2020

நம் அன்றாட தேவைக்காக பாயன்படும் சான்றிதழ்

நம் அன்றாட தேவைக்காக பாயன்படும்  சான்றிதழ் Online-ல் Apply செய்து பெறும் வழிமுறைகள் Video பதிவுகள் link கிழே....!
குறிப்பு: link-ஐ click செய்தவுடன் page ஒன்று open ஆகும்.அதில் SKIP AD என்ற yellow Button click சொய்தவுடன் Video  பதிவு play ஆகும்.
 1. PAN Card Online-ல் Apply செய்து பெறும் வழிமுறை.
2.Passport Online-ல் Apply செய்து பெறும் வழிமுறை.
3. Passport Renewal செய்வது எப்படி?
4.Driving Licence Online-ல் Apply செய்து பெறும் வழிமுறை.
5.Smart  Ration Card Online-ல் Apply செய்து பெறும் வழிமுறை.
6.OBC Certificate Online-ல் Apply செய்து பெறும் வழிமுறை.
7.Community certificate Online-ல் Apply செய்து பெறுவது  எப்படி?
8.Income Certificate Online-ல் Apply செய்து பெறும் வழிமுறை.
9.Nativity Certificate Online-ல் Apply செய்து பெறும் வழிமுறை.
10.First gradation Certificate Online-ல் Apply செய்து பெறும் வழிமுறை.
11.Aadhar Card Online-ல் Download செய்வது எப்படி?
12.Birth Certificate Online-ல் Apply செய்து பொறுவது எப்படி?
13.Birth Certificate Online-ல் Download செய்வது எப்படி?
14.Death Certificate Online-ல் Download செய்வது எப்படி?
15.Voter ID Online-ல் Apply செய்து பெறுவது எப்படி?
16.Voter ID Online-ல் Download செய்வது எப்படி?
17. PF கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என செக் செய்வது எப்படி?
18. IT Return File செய்வது எப்படி?
19.TDS pay செய்வது எப்படி?
20.முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பணம் எவ்வளவு உள்ளது என check செய்வது எப்படி?

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 26 டிசம்பர், 2019

பழங்களின் பயன்கள்

"பப்பாளி இருக்கும் வீட்டில் நோயாளி இல்லை!" பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்!!
சர்க்கரை நோய்க்கு மருந்தாகும், எலும்புகளுக்கு பலம் தரும்... நாவல் பழம்!
தினசரி மூன்று பேரீச்சம் பழம்... தித்திப்பான பலன்கள்!
தொப்பை குறைக்கும், இதய நோய் தடுக்கும்... 5 பழங்கள்!
ரத்தப்போக்கை நிறுத்தும் மாதுளை!
தேங்காய்தண்ணீர் -- மருத்துவம்,,!
ஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா!
இளநீரின் நன்மைகளைப் பற்றி அனைவருக்கும் தெரியும்.
அதேபோல் தேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்களைப் பற்றியும் பலரும் அறிந்திருப்பீர்கள்.
இப்போது நாம் பார்க்கப் போவது இளநீர் பற்றி அல்ல,
தேங்காய் தண்ணீரின் நன்மைகளைப் பற்றி தான்.
அதிலும் இதுவரை நீங்கள் கேட்டிராத தேங்காய் தண்ணீரின் நன்மைகளைத் தான் இங்கு கொடுத்துள்ளோம்.
ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைய வேண்டுமா?
இதோ அட்டகாசமான சில டயட் டிப்ஸ்...
தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அவற்றை 7 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் நல்ல மாற்றங்களைக் காணலாம்.

மேலும் தேங்காய் தண்ணீர் மிகவும் சிறப்பான உடலை சுத்தப்படுத்தும் பானங்களுள் ஒன்று.
பத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா?
அப்ப வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க...
சரி,
இப்போது தேங்காய் தண்ணீரைக் குடிப்பதால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும் என்று பார்ப்போம்.
1 நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை பெறும் தேங்காய் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் நோயெதிர்பபு மண்டலம் வலிமைப் பெறுவதோடு, சிறுநீர் பாதை தொற்றுகள், ஈறு நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் மற்றும் காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ்களையும் தேங்காய் தண்ணீர் அழித்து வெளியேற்றிவிடும்.
2 தைராய்டு ஹார்மோன்கள் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து, தைராய்டு சுரப்பி சீராக செயல்பட வழிவகுக்கும்
3 சிறுநீரக பிரச்சனைகள் சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால், தேங்காய் தண்ணீரைக் குடித்து வருவதன் மூலம், சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.
மேலும் தேங்காய் தண்ணீர் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, சிறுநீரக கற்கள் இருந்தால், அவற்றைக் கரைத்துவிடவும் செய்யும்.
4 செரிமான பிரச்சனை செரிமான பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீரை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால், செரிமான பிரச்சனை நீங்குவதை நன்கு உணரலாம்.
ஏனெனில் தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளது.
இவற்றை தெடர்ந்து குடித்து வந்தால், வாய்வு தொல்லையில் இருந்தும் விடுபடலாம்.
5 எடையைக் குறைக்கும் தேங்காய் தண்ணீரை எவ்வளவு குடித்தாலும், உடலில் கொழுப்புக்கள் சேராது.
மேலும் இதனை குடித்தால், பசி கட்டுப்படும்.
இதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.

6 உயர் இரத்த அழுத்தம் உயர் இரத்த அழுத்தம் இருந்தால், தினமும் காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்தால், அவை உடலின் எலெக்ரோலைட்டுக்களை சீராக்கி,
உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.
7 தலைவலி இரவில் அதிகமாக மது அருந்திவிட்டு, மறுநாள் காலையில் எழும் போது கடுமையான தலைவலியை உணரும் போது, தேங்காய் தண்ணீர் குடித்தால், தலைவலி நீங்குவதோடு, ஆல்கஹால் மூலம் உடல் வறட்சி அடைவது தடுக்கப்பட்டு, ஹேங்ஓவர் பிரச்சனை நீங்கும்.
8 நீர்ச்சத்து அதிகமாகும் தினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, நாள் முழுவதும் பொலிவான தோற்றத்துடனும், போதிய ஆற்றலுடனும் செயல்பட முடியும்.
9 கர்ப்பிணிகளுக்கு நல்லது கர்ப்பிணிகள் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்
உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் தெரிந்து கொள்ள #பகிருங்கள் #நண்பர்களே.....

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 23 டிசம்பர், 2019

பழங்களின் பயன்கள்

"பப்பாளி இருக்கும் வீட்டில் நோயாளி இல்லை!" பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்!!
சர்க்கரை நோய்க்கு மருந்தாகும், எலும்புகளுக்கு பலம் தரும்... நாவல் பழம்!
தினசரி மூன்று பேரீச்சம் பழம்... தித்திப்பான பலன்கள்!

தொப்பை குறைக்கும், இதய நோய் தடுக்கும்... 5 பழங்கள்!
ரத்தப்போக்கை நிறுத்தும் மாதுளை!
புதினா கீரையில் அடங்கியுள்ள சத்துக்கள்!
 மூலிகைகள் கீரைகள்
புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு கார்போஹைடிரேட், நார்ப் பொருள் உலோகச் சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம் இரும்புச் சத்துக்களும், வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன.
புதினாக் கீரையைத் துவையலாகவோ, சட்னியாகவோ பயன்படுத்தினால் புதினாவின் பொதுக்குணங்கள் அனைத்தும் எளிதில் கிடைத்துவிடுகிறது.
புதினாவை நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு கஷாயமாகத் தயாரித்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை கொடுத்து வந்தால் காய்ச்சல் தணியும்.
மூச்சுத்திணறல் உடனே நிற்க வேண்டுமானால், புதினா இலையைச் சிறிதளவு எடுத்து மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து இந்த ஊறல் குடிநீரைக் குடித்தால் மூச்சுத்திணறல் நீங்கும்.
கைப்பிடியளவு புதினாக் கீரையைச் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொண்டு ஒரு எலுமிச்சம் பழச்சாற்றை விட்டுச் சாப்பிட்டு வந்தால் வாய் வேக்காளம் குணமாகும்.
புதினாவை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும்.
வெயிலிலிருந்து களைப்பாக வீடு திரும்பிய கணவருக்கோ, விளையாடிவிட்டு வந்த குழந்தைகளுக்கோ கொடுத்தால் உடனடி புத்துணர்ச்சி கிடைக்கும்.
புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
சிறு நீர் கழிப்பதில் எரிச்சல் உள்ளவர்கள் புதினாக் குடிநீர் தயார் செய்து குடித்து வர எரிச்சல் தணியும். உடல் உஷ்ணம் தணியும்.
தொண்டைப்புண் உள்ளவர்கள் புதினாக் கீரையை அரைத்து தொண்டையின் வெளிப்பகுதியில் பற்றுப்போட்டால் தொண்டைப் புண் ஆறிவிடும்.
புதினாக் கீரை 60 கிராம் அளவில் எடுத்து 200 மில்லி தண்ணீரில் மூன்று மணி நேரம் ஊற வைத்து, இந்த தண்ணீரைக் குடித்து வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 21 டிசம்பர், 2019

உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை

:அதிர்ந்து போன மருத்துவர்கள்.
இன்றைக்குத் தான் சாதாரண தலைவலிக்கே மருத்துவமனைக்கு ஓடுகிறோம். நம் முன்னோர்களை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அவர்களின் வாழ்க்கையில் மூலிகைகளே பிரதானமாக இருந்தது.
அவர்களின் மருத்துவத்தில் முக்கியப் பங்கு வகித்த மூலிகை தான் அருகாம்பச்சை என்றும், சதாப்பு இலைச்செடி என்றும் அழைக்கப்படும் அருவதா செடி. இதன் பூர்வீகம் மேலை நாடு என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் நம்மூரு காடுகளிலும் திபு, திபுவென வளர்ந்து விடுகிறது. அடர்ந்த காடுகளில் மற்றும் மலைகளில் இயற்கையாக உள்ள இந்தச் செடி மூன்றடி உயரம் மட்டுமே வளரும். இதன் இலைகள் முருங்கை இலைகள் போல, சின்னதாக தண்டுகளில் இணைந்து காணப்படும். இந்த செடியில் மஞ்சள் நிறத்தில் பூவும் பூக்கும்.
இவை வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடவை. இதன் இலைகள், வேர்கள், காய்கள் அனைத்தும் மருத்துவப் பலன்கள் நிறைந்தது. இவை வீடு, வணிக நிறுவனங்களிலும் அழகுக்காகவும் வளர்க்கப்படுகிறது. இந்த மூலிகை செடி இருக்கும் இடத்தில் ஈக்கள் மொய்க்காது. இந்த செடி நாய், பூனைகளுக்கும் ஆகாது.
இந்த இலைக்கு எழும்பு முறிவு பாதிப்புகளை குணமாக்கும் ஆற்றலும் உண்டு.முதுகு தண்டு பாதிப்பை குணமாக்கும். முதுகுத்தண்டுவட வலி மற்றும் முதுகு வலி பாதிப்புகளையும் இது குணமாக்கும். சிறுநீர் கழிக்கும் போது அவரும் எரிச்சலைப் போக்கும். சிறுநீர்த்தாரை அடைப்பை சரியாக்கும். கருப்பை பாதிப்புகளையும் அகற்றும். இந்த இலைகளுக்கு மூட்டுவலியை குணப்படுத்தும் தன்மையும் உண்டு. மன அழுத்தத்தினால் உருவாகும் நரம்பு பாதிப்புகளை குணப்படுத்தி இரத்தத்தை தூய்மைப்படுத்தி வயிற்றுப் புழுக்கள அழிக்கும்.
பெண்களுக்கு மாதவிலக்கில் ஏற்படும் இரத்தப் போக்கு பாதிப்புகளை சரி செய்யும். உடல் சூட்டையும் போக்கும். மேலும் அதனால் ஏற்படும் வாத உடல் வலி, வயிற்று வலியையும் போக்கும். சுளுக்கைக், கூட இந்த இலை சுளுக்கெடுத்து விடும். அதாவது போக வைத்துவிடும். மூலவியாதி, உடல் அணுக்களை பாதிக்கும் புற்றுவியாதி ஆகியவற்றையும் சரி செய்யும்.சுவாச பாதிப்பை போக்கும்.
இந்த இலைகளை பூண்டு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து, கீரையைப் போல் கடைந்து உணவில் சேர்த்து சாப்பிடலாம். இதனால் மூட்டு வலி, சிறுநீர்ப்பை அடைப்பு, மூச்சுத்திணறல் ஆகியவை ஓடிவிடும்.
இதேபோல் இந்த இலையை நிழலில் உலர்த்து, இடித்துப் பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
அதிமதுரப்பொடி, சதகுப்பை, கருஞ்சீரகம், இலவங்கப்பட்டை, இதையெல்லா பொடியாக்கி அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, அதில் சிறிதளவு எடுத்து அத்துடன் பணங்கற்கண்டு சேர்த்து தினமும் இருவேளை சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.
உங்களை மன அழுத்தம் வாட்டுகிறதா? அதற்கும் கூட சதாப்பு இலை மருந்து தான். இந்த இலைகளை சிறிதுஎடுத்து, நன்கு மையமாக அரைத்து அத்துடன் சிறிது மிளகுத்தூள் சேர்த்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் மன அழுத்த பாதிப்புகள் விலகி, மனநிலை இயல்பாகும்.
இந்த இலைச்சாறை தேனில் குழைத்தும் சாப்பிடலாம். இந்த இலையை நன்றாக அரைத்து அந்த விழுதை மிளகுத்தூள் சேர்த்து, கொஞ்சம் எடுத்து தாய்ப்பாலில் கலந்து குழந்தைகளுக்கு சங்கில் இட்டு வாயில் ஊட்டினால் குழந்தைகளின் மார்பு சளி மட்டுப்படும்.
பக்கவாத பாதிப்பால் பலரும் வீட்டுக்குள் முடங்கிப் போய் இருப்பார்கள். இவர்கள் சதாப்பிலைகளை நன்றாக அரைத்து உடலில் வாத பாதிப்பு உள்ள இடங்களில் மேலே தடவினால் சிறிது, சிறிதாக பாதிப்புகள் அகலும். இதேபோல் நரம்பு சுருட்டல் பாதிப்பையும் இது குணமாக்கும். இந்த இலைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீர் வற்றியதும் ஆறவைத்து தினசரி இரண்டு அல்லது மூன்று வேளை பருகினால் மூட்டுவலி சரியாகும். குடல் புழு அழியும். இரத்த நாள அடைப்புகள் இருந்தால் அதையும் போக்கிவிடும்.
ஞாபசக்தியை அதிகரிப்பது, கண் வீக்கம், வலியை போக்குவது என இதன் பயன்கள் இன்னும் அதிகம். உங்க ஊர் நாட்டு மருந்து கடைகளில் இந்த இலை கிடைக்கிறதா என முயற்சித்து பாருங்களேன்

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 16 டிசம்பர், 2019

உடல் சூட்டை தணிக்கும் மருத்துவகுணம் மிகுந்த சப்ஜா விதை...!

உணவே மருந்து, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள்
திருநீற்றுப் பச்சிலை செடி மருத்துவ குணம் நிறைந்தது. திருநீற்றுப்பச்சை இலையைத்தான் பேசின் என்று அழைக்கிறோம். சப்ஜா விதை பித்தத்தை குறைக்கும். உடல் சூட்டை நீக்கும். இந்த விதைகளை நீரில் ஊறவைத்து பயன்படுத்த வேண்டும். இது நீரை உறிஞ்சி வழுவழுப்பாக மாறும் இயல்புகொண்டது.
ஒரு தேக்கரண்டி விதைகள் நீரில் ஊறிய பின்பு பல மடங்காக அதிகரிக்கும். இந்த விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. சர்க்கரை   நோயாளிகள் தினமும் ஒரு தேக்கரண்டி விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும். எடையை குறைக்க விரும்புகிறவர்களும் தினம் ஒரு தேக்கரண்டி விதையை ஊறவைத்து சாப்பிடலாம்.
ஜீரண பாதையில் ஏற்படும் புண்களை இது ஆற்றும். நெஞ்செரிச்சலையும் போக்கும். மலச்சிக்கலை போக்குவதற்கு இது சிறந்த மருந்து.
மலச் சிக்கலால் அவதிப்படும் முதியோர்கள் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை சூடான பாலில் கலந்து குடிக்கவேண்டும். கர்ப்ப காலத்தில்  ஏற்படும் மலச்சிக்கலுக்கும் இது நிவாரணமாகும்.
சளி, காய்ச்சல், குடல் புழுக்கள், வயிற்றுக் கோளாறுகள், கீல்வாதம் போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. இலைச்சாறு, மூக்கடைப்பை நீக்கும்; தோல் வியாதிகளைப் போக்கும்; குடல் புழுக்களை வெளியாக்கும்.
சிறுநீர் பாதையில் ஏற்படும் புண், நீர் எரிச்சல் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலுக்கும் இது நல்ல மருந்து. இது உடல் சூட்டை   குறைத்து, உடலை சீரான சீதோஷ்ண நிலைக்கு கொண்டுவரும் இயல்புகொண்டது. அதனால் இதை கோடைகாலத்தில் மட்டுமின்றி, உடல் சூட்டால் அவதிப்படும் காலகட்டத்திலும் பயன்படுத்தலாம்.
கோடை காலத்தில் வட மாநிலங்களில் பலூடர் என்ற குளிர்பானத்தில் கலந்து இந்த விதையை பயன்படுத்துவதால் இதற்கு 'பலூடா விதை'  என்ற பெயரும் உண்டு. கோடை காலத்தில் நன்னாரி சர்பத்தில் இதை கலந்து சாப்பிடுவது நல்லது. இந்த சப்ஜா விதை நாட்டு மருந்து  கடைகளில் கிடைக்கும்.
முகப்பருக்கள் மறைய திருநீற்றுப்பச்சை இலைச்சாற்றுடன் வசம்பைச் சேர்த்து அரைத்து, பசைபோல செய்து, நன்றாகக் குழைத்து, பருக்கள்  உள்ள இடத்தில் தடவ வேண்டும்.
இருமல் கட்டுப்பட இலைச்சாறு, தேன் ஆகியவற்றை சமமாகக் கலந்து, 30 மி.லி. அளவு குடிக்க வேண்டும். தினமும், 2 வேளைகள் இவ்வாறு  செய்ய வேண்டும்.
அம்மை நோயிலிருந்து பாதுகாக்க...!!
வெள்ளைபடுதல் குணமாக  இலைச்சாறு 2 தேக்கரண்டி அளவுடன் காய்ச்சாத பசும்பால் ஒரு டம்ளர் கலந்து உள்ளுக்குச் சாப்பிட வேண்டும். காலையில் மட்டும் 10 நாள்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 13 டிசம்பர், 2019

பழுதான விண்ரேர் பைல்களை ஒப்பன் செய்திட -WIN RAR REPAIR TOOLAI

நாம் பயன்படுத்தும் வின்ரேர் பைல்கள் சிலசமயம் ஓப்பன் ஆகாமல் போகலாம். நமககு  கீழே உள்ள விண்டோவில் உள்ளவாறு எரர் மெசெஜ் வரும்.
 அவ்வாறு தகவல் வந்தால் அந்த வின்ரேர் பைல்களை நாம் திறந்து படிக்க முடியாது. அவாவறான வின்ரேர் பைல்களை படிக்க திறக்க இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இநத இணையதளம் செலல இங்கு கிளிக் https://winrarrepair.recoverytoolbox.com/ செய்யவும். இங்குள்ள மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்ககொள்ளவும். உங்களுக்கு கீழ்கண்ட வாறு விண்டோ ஓப்பன் ஆகும்.
 எரர் ஆன வின்ரேர் பைலினை தேர்வு செய்து ஓ.கே.தரவும்.
உங்கள் வின்ரேர் பைலில் உள்ள ஒவ்வொரு தகவல்களாக பிரித்து உங்களுக்கு எரர் இல்லாத பைலாக கிடைக்கும் பைல்களை பிரிப்பதற்கு உங்கள் பைல அளவினை பொறுத்து காலதாமதமாகலாம்
எரர் பைல்களை நிவர்த்தி செய்தபின்னர் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓபபன் ஆகும்.
நீங்கள் விரும்பும் இடத்தில் அதனை சேவ் செய்திடவும். இப்போது நீங்கள் சேமித்த் இடத்தில் செனறு பார்த்தால் உங்களுக்கான வின்ரேர் பைலானது எரர் மெசெஜ் இல்லாமல் ஓப்பன் ஆகும். பயன்படுத்திப்பாருங்கள்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 11 டிசம்பர், 2019

வாழை இலையின் பயன்கள்

1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.
2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.
3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.
4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.
5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.
6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.
7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.
தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் . அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.
ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.
நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.
வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 6 டிசம்பர், 2019

என்ன இல்லை சோற்றுக் கற்றாழையில்!

சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள், ரெசின்கள், பாலிசக்கரைடு மற்றும் ஆலோக்டின்பி எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் மூசாம்பரம் எனப்படுகிறது.
தளிர்பச்சை, இளம்பச்சை, கரும்பச்சை எனப் பலவிதமாக உள்ள சோற்றுக்கற்றாழை முதிர்ந்தவற்றில்தான் மருத்துவத்தன்மை மிகுந்து காணப்படுகின்றன.
பொதுவாக் 40 வயதைக் கடந்து விட்டாலே மூட்டு வலி, கை,கால் வலி ஏற்படுவது பெரிதும் வாடிக்கையாகி விட்டது. அதிலும் வயது முதிர்ந்தவர்களுக்கு கால் மூட்டில் இருக்கும் திரவம் குறைவதால், நடப்பதே மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தக் கூடியதாகி விட்டது.
மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற "அலோசன் ஹெல்த் டிரிங்க் உதவும்.இது உலகின் அபூர்வ சாகாவரம் பெற்ற சோற்றுக் கற்றாழை மூலிகையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள ஊட்டச் சத்துகள் நிறைந்த தண்ணீர் உடலில் குறைவாக உள்ள நீர்ச் சத்தை அதிகப்படுத்தி மூட்டுகள் சரியாக இயங்குவதற்குத் தேவையான கூழ் போன்ற திரவத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது.
மேலும் எலும்புகளுக்குத் தேவைப்படும் சுண்ணாம்புச் சத்தையும் (கால்ஷியம்) அலோசன் ஹெல்த் டிரிங்க் அளித்து மூட்டு வலியைப் போக்க உதவுகிறது.
மஞ்சள் காமாலை நோய்க்கும் சோற்றுக் கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதால் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையும் அதிகரிக்கிறது.
கண்நோய், கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை, மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர, உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.
உள் மருந்தாக வயிற்றுப் புண் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும்.
நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும், தாதுக்களும் நிறைந்தது இச்சாறு. சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம், வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.
பிரயாணக் களைப்பினால் சோர்வுற்ற கால்களுக்கு கற்றாழை சாறைத் தடவலாம். சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி, சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து, ஈரப்பதம் அளிக்கும்.
இத்தகைய கற்றாழை இளம் தலைமுறையின் இனிய தோழி தானே! வீட்டிற்கொரு கற்றாழை வளர்ப்போம்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 3 டிசம்பர், 2019

அம்மை, பரு தழும்புகளால் பிரச்சினையா?

கோடைகாலத்தில் பெரும்பாலோனோரை பாதிக்கும் நோய் அம்மை. சின்னம்மை என்றால் பெரும்பாலும் தழும்புகள் ஏற்பட வாய்ப்பில்லை. அதேசமயம் பெரிய அம்மை ஏற்பட்டு கொப்புளங்கள் பெரிதானால் அவை குணமான பின்னரும் வடுக்களாக மாறிவிடும். சருமத்தின் மறைவான இடங்களில் வடு இருந்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. அதே முகத்தில் தழும்புகள் இருந்தால் முகத்தின் அழகையே மாற்றி அமைத்து ஒருவித தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடும். எனவே அம்மைத் தழும்புகள் ஏற்பட்டவர்கள் இயற்கையாக கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி இழந்த அழகை திரும்பவும் பெற முடியும்.
கசகசா, மஞ்சள் துண்டு
2 ஸ்பூன் கசகசா எடுத்து தண்ணீரில் ஊறவைக்கவும். சிறிதளவு மஞ்சள் துண்டு, கறிவேப்பிலை சிறிதளவு எடுத்து மூன்றையும் மை பதத்திற்கு அரைக்கவும்.
இந்தக் கலவையை முகத்தில் அம்மை வடுக்கள் உள்ள இடத்தில் நன்றாகத் பூசி உலற விடுங்கள். 20 நிமிடம் கழித்து பாசிப் பருப்பு மாவினால் முகத்தைக் கழுவுங்கள். மூன்று நாட்களுக்கு ஒரு முறை செய்யுங்கள். அம்மை வடுக்கள் நீங்கி முகம் மினுமினுக்கும்.
எலுமிச்சை வைத்தியம்
ஒரு எலுமிச்சம் பழத்தை குறுக்காக வெட்டவும். அதனை அம்மைத் தழும்புகள் உள்ள இடத்தில் பரவலாக அழுத்தமாகத் தேய்த்து விடவும். தினசரி இதனை செய்து வர அம்மைத் தழும்புகள் மறைந்துவிடும்.
கருமை நீங்க
அம்மை தழும்பு உள்ள இடத்தைச் சுற்றி கருமை படர்ந்திருக்கும். அதனை நீங்க எலுமிச்சை சாறு சிறந்த மருந்து. எலுமிச்சசம் பழம் சாறு எடுத்து ஒரு மெல்லிய துணியினாலோ, மிருதுவான பஞ்சினாலோ தொட்டுப் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். 10 நிமிடங்கள் உலரவிட்டு குளிர்ந்த நீரில் முகத்தை நன்றாகக் கழுவி விடுங்கள். முகம் கருமை நிங்கும். தொடர்ந்து சில நாட்கள் இதை செய்து வர முகம் பளிச் ஆகும்.
முகப்பரு அகல
அம்மை வடுக்களைப் போல முகப்பருவும் அழகை பாதிக்கும். இதற்கு பப்பாளிப் பால் சிறந்த மருந்தாகும். பப்பாளி மரத்திலிருந்து எதை உடைத்தாலும் பால் வரும். அதைச் சிறிதளவு சேகரித்து அத்துடன் கொஞ்சம் தண்ணீரையும் சேர்க்கவும். இந்தக் கலவையில் சிறிதளவு சீரகத்தை ஊறப் போடவும். இதை கால் மணி நேரம் வைத்திருக்கவும். பின் முகப்பரு எங்கே உள்ளதோ அங்கே இக்கலவையை நன்றாக பூசி ஊறவைத்து பின் கழுவவேண்டும். இதனால் முகப்பருக்கள் மறைந்து, இருந்த சுவடு தெரியாமல் போய்விடும்.
இதேபோல் நாட்டு மருந்து கடைகளில் விற்பனை செய்யப்படும் புனுகு வாங்கி வந்து முகப்பரு எங்கெங்கு உள்ளதோ அங்கங்கே தடவி விட்டு சில மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகப்பரு மறைந்து போகும்

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 1 டிசம்பர், 2019

மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்..!!!

தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.
ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது. மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும்.
அதிக தாகத்தைப் போக்கும்.மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.
மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும்.
மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம்.
வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்மந்தமான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம்.
மாதுளம்பூவின் பயன்கள்:
மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.
மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.
மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

அவல் உண்பதால்* *உண்டாகும் அற்புத பயன்கள்.

ஊறவைத்த நெல்லை பின் இடித்து தட்டையாக செய்யப்பட்டு அதிலிருந்து உமியை நீக்கி பயன்படுத்தப்படுவது அவல் ஆகும். முன்பு கைகுத்தல் முறையில்...

Popular Posts