லேபிள்கள்

புதன், 9 ஜனவரி, 2019

முஷ்ரிக்குகளின் நரித்தனங்கள் – அன்றும், இன்றும்

!

புகழ் அனைத்தும் அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானது.
ஜாஹிலிய்யக் காலத்திலே வாழ்ந்த முஷ்ரிக்குகளைப் பொறுத்தவரை தவ்ஹீதுர் ருபூபிய்யாவை – அதாவது இப்பிரபஞ்சத்தையும் அதிலுள்ளவர்களையும் படைத்துப் பரிபாலிப்பவன் அல்லாஹ்வே என்ற ஏகத்துவக் கொள்கையை ஏற்றிருந்தார்கள்! இதை அல்லாஹ்வும் அவனது திருமறையின் மூலமாக உறுதிப்படுத்துகின்றான்! (பார்க்கவும்: 10:31, 23:84-89, 26:63, 43:87)
அதே நேரத்தில் அவர்கள் செய்த மாபெரும் தவறு என்னவெனில் படைத்துப் பரிபாலிப்பவன் ஒரே இறைவனாகிய அல்லாஹ் தான் என்று ஏற்றிருந்த அவர்கள், அந்த அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்குரியவன் என்ற ஏகத்துவத்திலும்,
அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்புகளை அவனுக்கே உரித்தானது என்று ஏற்றுக் கொள்ளும் விசயத்திலும் கோட்டை விட்டு அந்த இருவகையான ஏகத்துவத்தில் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து அதன் மூலம் முஷ்ரிக்குகளாக ஆனார்கள்!
அதாவது,
அல்லாஹ் தான் தம்மைப் படைத்துப் பரிபாலிப்பவன் என்ற நம்பிக்கையை மக்கத்து முஷ்ரிக்குகள் கொண்டிருந்த போதிலும் பிரார்த்தனை, நேர்ச்சை, அறுத்துப்பலியிடுதல், அழைத்து உதவி தேடுதல், பாதுகாப்பு தேடுதல் போன்ற அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களை அல்லாஹ் அல்லாத அவர்களின் அவர்களின் முன்னோர்களின் வடிவில் உள்ள சிலைகளுக்கு செய்து அதன் மூலம்  தவ்ஹீதுல் உலூஹிய்யா என்ற வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வை ஒருமைப் படுத்தவேண்டும் என்ற ஏகத்துவத்தில் அல்லாஹ்வுக்கு இணைக் கற்பித்தனர்!
அது போலவே, மறைவான விசயங்களை அறியும் ஆற்றல், ஒருவரின் உள்ளத்தில் உள்ளதை அறிந்து அவரது தேவைகளை நிறைவேற்றும் ஆற்றல், ஒரே நேரத்தில் எத்தனை பேர்கள் அழைத்தாலும் எத்தனை தூரத்தில் இருந்து அழைத்தாலும் அனைத்தையும் ஒரே நேரத்தில் கேட்டு அனைத்தையும் அவர்களுக்கு உதவும் ஆற்றல் அவர்களின் முன்னோர்களுக்கும் இருக்கு என்று நம்பிக்கை கொண்டு அதன் மூலம் அஸமா வஸ்ஸிபாத் என்ற அல்லாஹ்வின் பண்புகள் மற்றும் பெயர்களில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்த வேண்டும் என்ற ஏகத்துவத்தில் இணை கற்பித்தனர்!
நல்லோர்களாக வாழ்ந்த அந்த முன்னோர்களின் வடிவில் உள்ள சிலைகளிடம் பிரார்த்தித்தால் அவை நம்மை அல்லாஹ்விடம் நெருக்கமாக்கி வைக்கும் என்று நம்பிக்கைகொண்டிருந்தனர் மக்கத்து முஷ்ரிக்குகள்!
இது குறித்து அல்லாஹ் கூறும் போது,
'அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை' (என்கின்றனர்). (அல்-குர்ஆன் 39:3)
என்று அந்த மக்கத்து முஷ்ரிக்குகள் கூறியதாக கூறுகின்றான்.
எந்த வகையான ஏகத்துவத்தை ஏற்று மற்ற இரண்டு வகை ஏகத்துவத்தை மறுத்த காரணத்திற்காக அல்லாஹ்வும் அவனது தூதரும் ஜாஹிலிய்யாக் கால மக்கத்துவாசிகளை முஷ்ரிக்குகள் என்றும் இறை நிராகரிப்பாளர்கள் என்றும் கூறி அவர்களுடன் போர்கள் பல புரிந்து அவர்களைச் சிறைப் பிடித்தார்களோ அதேபோல தான்,
தற்காலத்திய கப்ர் வணங்கிகளும் படைத்துப் பரிபாலித்தலில் அல்லாஹ்வை ஒருமைப் படுத்திவிட்டு மற்ற இருவகை ஏகத்துவங்களை மறுக்கின்ற விதத்திலே பிரார்த்தனை, நேர்ச்சை, அறுத்துப்பலியிடுதல், அழைத்து உதவி தேடுதல், பாதுகாப்பு தேடுதல் போன்ற அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களை அல்லாஹ் அல்லாத இறைநேசகர்களுக்கும் அவுலியாக்களுக்கும் செய்வதும் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக்கூடிய பண்புகளான மறைவான விசயங்களை அறியும் ஆற்றல், இதயங்களிலுள்ளதை அறியும் ஆற்றல், மரணித்தாலும் உயிருடன் இருப்பவர்களுக்கு உதவும் ஆற்றல் போன்றவை அல்லாஹ்வின் அடிமைகளுக்கும் இருப்பதாக கருதி அவர்களின் சமாதிகளிலே தட்டழைந்து திரிந்து அல்லாஹ்வுக்கு மாபெரும் இணை கறபிக்கின்றனர்.
என்றோ இறந்து மக்கி மண்ணாகிப் போனவர்களும் தங்களை அல்லாஹ்விடம் நெருக்கமாக்கி வைப்பார்கள் என்று அன்று மக்கத்து முஷ்ரிக்குகள் கூறியதாக அல்லாஹ் கூறுகின்ற அதே டயலாக்குகளை தற்காலத்திய முஷ்ரிக்குகளும் கூறுகின்றனர்.
எந்த செயல்களை செய்ததால் ஜாஹிலிய்யக் காலத்து மக்காவாசிகள் முஷ்ரிக்குகளாகவும் காஃபிர்களாகவும் ஆனார்களோ அதே காரியத்தை தான் தற்காலத்திய கப்ர் வணக்கஸ்தர்களும் செய்கின்றனர். பிறகு இவர்கள் மட்டும் தங்களை முஸ்லிம்கள் என்று கூறிக்கொள்ள என்ன தகுதியிருக்கிறது? என்பதை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்!
இந்தக் கட்டுரையின் தலைப்பு இதுவல்ல! இது அன்றைய முஷ்ரிக்குகளின் நம்பிக்கையுடன் தற்காலத்திய முஷ்ரிக்குகளின் நம்பிக்கையை ஒரு ஓப்பீடு செய்வதற்காக மட்டுமே! இப்போது விசயத்திற்கு வருவோம்!
நபி (ஸல்) அவர்களின் ஏகத்துவப் பிரச்சார பீரங்களின் மூலமாக மக்கத்து முஷ்ரிக்குகளின் ஷிர்க்கின் கோட்டை தகர்ந்து சின்னாமாகி மக்கள் சாரை சாரையாக ஏகத்துவத்தை நோக்கி வருகின்ற வேளையிலே செய்வதறியாது திகைத்த அந்த முஷ்ரிக்குகள் நரித்தனமாக கையாண்ட தந்திரம் தான் வரலாற்றிலே மிக மிக முக்கியமானது! நபி (ஸல்) அவர்களையே மனம் நோகும் அளவிற்கு அவர்களின் அந்த விசமத்தனமான நரித்தனம் அமைந்தது!
அதாவது ஏகத்துவப் பிரச்சாரத்தை எதிர்கொள்ள இயலாத கோழைகளான அந்த மக்கத்து முஷ்ரிக்குகள், அந்த ஏகத்துவப் பிரச்சாரம் செய்த நபி (ஸல்) அவர்கள் மீது களங்கத்தைச் சுமத்தினார்கள்!
காரணம் நபி (ஸல்) அவர்கள் சத்தியத்தை எடுத்துக் கூறுகின்ற போது மக்கள் கூட்டம் கூட்டமாக அந்த சத்தியத்தில் சேருவதை சகிக்க இயலாத அற்பர்களான அந்த முஷ்ரிக்குகள் அந்த சத்தியத்தைப் போதிப்பவரின் மீது களங்கத்தைச் சுமத்தி அவரை மிக மோசமானவரா மக்கள் மன்றத்திலே காட்டினால் அவரின் எந்தப் பிரச்சாரமும் மக்களிடையே எடுபடாது என்ற விசமத்தனமான, நரித்தனமான வேலையைத் தான் செய்தனர் மக்கத்து காஃபிர்கள்!
அவர்கள் நபி (ஸல்) அவர்களை சூனியக்காரர் என்றும் பைத்தியக்காரார் என்றும் பொய்யர் என்றும் பலவாறாக மக்கள் மன்றத்திலே பரப்பி நபி (ஸல்) அவர்களின் உபதேசங்கள் மக்களை சென்றடையாமல் இருப்பதற்காக என்னென்ன தகிடுதத்தங்கள் செய்ய வேண்டுமோ அத்தனையையும் செய்தனர்!
அதே விசமத்தனமான நரித்தனமான செயல்களைத் தான் மக்கத்து முஷ்ரிக்குகளைப் போலவே அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்ற கப்று வணங்கிகளும் அல்லாஹ்வையும் அவனது படைப்பினங்களை ஒன்றாக்கும் சூஃபித்துவ வழிடேர்களும் தற்போது செய்து கொண்டிருக்கின்றனர்!
இவர்களோடு "நானும் தவ்ஹீதுவாதி தான்" என்று வேடமிடும் முனாஃபிக்குகளும் கலந்துகொள்கின்றனர்.
முன்னோர்களின் வழிமுறை என்ற பெயரிலே அவர்கள் செய்துவந்த அதே இணைவைப்பிலே குருட்டுத்தனமாக உழன்றுகொண்டு இருந்த சமுதாயத்தில் இறைவனின் அருளால் ஏகத்துவம் என்ற ஒளி வீசி தமிழகத்தின் எட்டுதிக்கெல்லாம் பரவி மக்கள் கூட்டம் கூட்டாமக எப்படி அன்றைய ஜாஹிலிய்யக்காலத்தின் மக்காவாசிகள் இஸ்லாத்தில் இணைந்தார்களோ அதுபோல் ஏகத்துவத்தை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள்!
சத்தியமான ஏகத்துவத்தை மக்காவாசிகள் ஏற்றுக்கொள்வதை விரும்பாத மக்கத்து முஷ்ரிக்குகள் அந்த ஏகத்துவப்பிரச்சாரம் செய்த நபி (ஸல்) அவர்களின் போதனைகள் மக்களிடம் எடுபடாமல் இருப்பதற்காக எவ்வாறு நபி (ஸல்) அவர்கள் மீது அபாண்டணமான குற்றச்சாட்டுகளையும், அவதூறுகளையும் பொய்களையும் கூறினார்களோ அதுபோலவே,
தற்காலத்திய கப்று வணங்கிகளும், அல்லாஹ்வை அவனது படைப்பினங்களுடன் ஒன்றாக்கும் வழிகெட்ட சூஃபிகளும், ஏகத்துவ நாடகமாடும் முனாஃபிக்குகளும் அல்லாஹ்வை மடடுமே வணங்க வேண்டும் என்ற ஓரிறைக் கொள்கையை எவ்வித தயவுதாட்சண்யமின்றி எடுத்துரைக்கும் அறிஞர்களின் மீதும் அவதூறுகளை மக்கள் மன்றத்திலே பரப்பி அதன் மூலம் அந்த ஏகத்துவப் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்திவிடலாம் என்று மனப்பால் குடிக்கின்றனர் முஷ்ரிக்குகள்!
கேவலமான முறையில் அவதூறை அள்ளிவீசுகின்ற அந்த முஷ்ரிக்குகளுக்கும், சூஃபிகளுக்கும், முனாஃபிக்குகளுக்கும் நாம் கூறிக்கொள்வது என்னவென்றால் நபி (ஸல்) அவர்களின் ஏகத்துவப் பிரச்சாரத்தை முடக்குவதற்காக முயன்ற அன்றைய மக்கத்து முஷ்ரிக்குகள் எப்படி தங்களின் முயற்சியில் தோற்று மண்ணைக் கவ்வுமாறு இறைவன் செய்தானோ,
அதே போன்று தான்
நபி (ஸல்) அவர்கள் போதித்த அதே ஏகத்துவ போதனையைச் செய்கின்ற தற்காலத்திய அறிஞர்கள் மீது மக்கத்து காஃபிர்கள் கொண்டிருந்த அதே நம்பிக்கையைக் கொண்டிருக்கும் தற்காலத்திய முஷ்ரிக்குகள் சுமத்தும் அவதூறுகளையும் ஒன்றுமில்லாமல் ஆக்கி மக்கத்து முஷ்ரிக்குகள் மண்ணைக் கவ்வியதை விட மிக மோசமாக மண்ணைக் கவ்வுகின்ற நலையை அல்லாஹ் ஆக்கியருள்வான்!
ஏகத்துவம் என்பது எந்த ஒரு குறிப்பிட்ட அறிஞரின் சொத்து அல்ல! ஏகத்துவம் என்பது அல்லாஹ்வன் ஒளி! அதை எந்தக் கொம்பனாலும் வாயால் ஊதி அணைக்க இயலாது!
நபி (ஸல்) அவர்கள் போதித்த இந்த ஏகத்துவம் நபி (ஸல்) அவர்களின் மறைவிற்குப் பிறகு எப்படி அதிவேகமாக உலகின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் பரவியதோ அது போல எந்த ஒரு மார்க்க அறிஞரின் மறைவிற்காகவும் இந்த ஏகத்துவம் ஒடுங்கி முலையில் அடங்கிவிடாது என்றும் அந்தக் கொள்கையை ஏற்றிருக்கும் பல இலட்சக் கணக்கான ஏன் கோடிக்கணக்கான மக்களின் மூலம் பரவிக்கொண்டு தான் இருக்கும் என்பதையும் அறிவீனத்தின் உச்சத்திலிருக்கும் அவதூறுகளைப் பரப்பும் தற்காலத்திய முஷ்ரிக்குகளும் 'அல்லாம் அவனே' என்ற வழிகெட்ட சூஃபிகளும் ஏகத்துவ நாடகமாடும் முனாஃபிக்குகளும் உணரவேண்டும்!



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 7 ஜனவரி, 2019

பூமியதிர்ச்சிகள் உணர்துவது என்ன?

பூமியதிர்ச்சிகள் உணர்துவது என்ன?

அல்லாஹ் கூறுகின்றான்:
وما نرسل بالآيات إلا تخويفا ' الإسراء : 59
"(மக்களை) அச்சமூட்டி எச்சரிப்பதற்காவே அன்றி நாம் (இத்தகைய) அத்தாட்சிகளை அனுப்புவதில்லை." (17:59)
سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يكف بربك أنه على كل شيء شهيد ' فصلت : 53
"நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம்! (நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா?" (41:53)
قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض ' الأنعام : 65 .
"(நபியே!) நீர் கூறும்; 'உங்கள் (தலைக்கு) மேலிருந்தோ அல்லது உங்களுடைய கால்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்குத் துன்பம் ஏற்படும்படி செய்யவும் அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி உங்களில் சிலர் சிலருடைய கொடுமையை அனுபவிக்கும்படிச் செய்யவும் அவன் ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான்.' அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக (நம்) வசனங்களை எவ்வாறு (பலவகைகளில் தெளிவாக்கி) விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக." (6:65)
மேற்படி அல்-குர்ஆனிய வசனம் இறங்கிய போது நபியவர்கள் கூறினார்கள்:
"யா அல்லாஹ் உனது முகத்தை கொண்டு நான் பாதுகாவல் தேடுகின்றேன். உன் முகத்தைக் கொண்டு பாதுகாவல் தேடுகின்றேன்"
என இரு முறை சொன்னார்கள்" ஸஹீஹுல் புகாரி 5-193
இமாம் முஜாஹித் அவர்கள் மேற்படி வசனத்திற்கு விரிவுரை வழங்கும் போது,
"'உங்களுக்கு மேல் இருந்து வரும் துன்பம்' என்பற்கு 'சத்தம், கற்களை மற்றும் காற்றைக் கொண்டு மேலிருந்து அல்லாஹ் சோதனைகளை அனுப்புகின்றான்' என்றும், 'கால்களுக்குக் கீழிருந்து வரும் துன்பங்கள்' எனும் போது 'பூமியதிர்ச்சி மற்றும் பூமி தனக்குள்ளே விழுங்கிக் கொள்வது' கொண்டு சோதிக்கின்றான்"
என குறிப்பிடுகின்றார்கள்.
அல்லாஹ்வின் சோதனையாக இருக்கும் மேற்படி அழிவுகளில் பாடம் கற்கக் கூடிய நன்மக்களாக நாம் மாறவேண்டும். இவ்வாறான சேதனைகள் வருவதென்பது வெறும் இயற்கையின் சீற்றம் அல்லது விஞ்ஞான ரீதியான காரணங்களை சொல்லி விட்டு சென்று விடாமல் இதிலிருந்து படிப்பினை பெற வேண்டும் என்பதே அல்லாஹ் நம்மவர்களிடம் எதிர்பார்கின்றான்.
இப்படியான அழிவுகள் வரும் போது நாம் என் செய்ய வேண்டும்?
01) நாம் செய்து கொண்டிருக்கும் பாவங்களில் இருந்து முழுமையாக விடுபட்டு உண்மையான பாவமன்னிப்பில் (தவ்பாவில்) ஈடுபட வேண்டும்.
ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون ' الأعراف : 96
"நிச்சயமாக அவ்வூர்வாசிகள் ஈமான் கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்திருந்தால், நாம் அவர்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் – பரகத்துகளை – பாக்கியங்களைத் திறந்து விட்டிருப்போம்; ஆனால் அவர்கள் (நபிமார்களை நம்பாது) பொய்ப்பித்தனர், ஆகவே அவர்கள் செய்து கொண்டிருந்த (பாவத்)தின் காரணமாக நாம் அவர்களைப் பிடித்தோம்." (7:96)
02) ஏழை எளியவர்கள் மீது அன்பு செலுத்தி அவர்களுக்கு தான தர்மங்களை கொடுப்பது!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"பூமியில் உள்ளவர்கள் மீது நீங்கள் அன்பு செலுத்துங்கள், வானத்தில் உள்ளவன் உங்களுக்கு அன்பு காட்டுவான்." ஆதாரம் அபூதாவுத் 13-285
03) சத்தியத்தை நிலைநாட்டி, அல்லாஹ்வின் சட்டங்கள் இப்பூவுலகில் நடைமுறைப்படுத்தப்பட்டு, நன்மையை ஏவி தீமையை தடை செய்ய வேண்டும்:
والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم ' التوبة :71
"முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய துண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்படிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் – நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்." (9:71)
04) சக மனிதர்களுக்கு எல்லா வகையிலும் உதவும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"யார் ஒரு சகோதரனின் தேவையை நிறைவு செய்கின்றாரோ, அவரது தேவைகளை அல்லாஹ் நிவர்தி செய்கின்றான்." ஆதாரம் புகாரி, முஸ்லிம்.
எனவே அல்லாஹ்வின் சோதனைகள் வரும் போது மேலே சொல்லப்பட்ட நடைமுறைகளை பேணி நம்மையும் நமது சமுதாயத்தையும் பெரும் அழிவுகளில் இருந்து காத்துக் கொள்ள முயற்சிப்போமாக! நமது நிலைமைகள் சீர் பெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இருகரம் ஏந்தி பிரார்திப்போம்.
மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி,



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 5 ஜனவரி, 2019

ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாத பொருள்கள் பல உள்ளன. அவற்றை அறிவோம்.!


ஒரு பொருளைப் பதப்படுத்தி, பாதுகாத்து நீண்ட நாள்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள கண்டுபிடிக்கப்பட்டதுதான் ஃப்ரிட்ஜ். ஆனால், காய்கறிகள், பழங்கள், சாக்லேட், பீட்சா என எல்லாவற்றையுமே ஃப்ரிட்ஜுக்குள் அடக்கிவிடுகிறோம். ஃப்ரிட்ஜுக்குள் இடமிருக்கிறது என்பதற்காக இருக்கும் பொருள்களையெல்லாம் அடுக்கிவிடுவது நல்லதல்ல. பலருக்கு இதுபற்றிய விழிப்பு உணர்வு இருப்பதில்லை. பொருள்களை எத்தனை நாள்கள் வைத்திருக்கலாம் என்பதை அறியாமல் அந்தப் பொருளையும் கெடுத்து, உடல்நலனையும் பாழாக்கிக் கொள்கிறோம். ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாத பொருள்கள் பல உள்ளன. அவற்றை அறிவோம்.
பச்சை மிளகாய்
பச்சை மிளகாயை ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது. ஃப்ரிட்ஜினுடைய அதிக குளிரானது மிளகாயை அழுகச் செய்துவிடும். சாதாரண சூழலில் வெளியில் வைப்பதே போதுமானது.

பூண்டு
பூண்டை ஃப்ரிட்ஜில் வைத் தால் சுவை குறைந்துவிடும். பூண்டையும் பச்சை மிளகாய் போலவே வெளியில் வைத்தாலே போதும்.

வெங்காயம்
வெங்காயத்தை ஃப்ரிட்ஜில் வைத்தால் அழுகிய நாற்றம் ஏற்படும். அதி்லுள்ள ஃபோலிக் ஆசிட், குவர்சிட்டின் சத்துகளும் குறைந்துவிடும். வெங்காயத்தை வெளியே வைத்திருந்தாலே போதும். வெங்காயம் உலர்ந்தாலும் அதன் சுவையும் சத்துகளும் மாறாமல் இருக்கும்.

பரங்கிக்காய், சுரைக்காய்
பரங்கிக்காய், சுரைக்காய் வகை களையும் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. அதன் இயற்கையான நீர்ச்சத்து மாறி, சுவையும் கெட்டுவிடும்.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்குகளை ஃப்ரிட்ஜில் வைப்பதால் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படலாம். இதனால் காற்றோட்ட முள்ள இடங்களில் உருளைக்கிழங்கு களை வைக்க லாம். ஃப்ரிட்ஜில் வைப்பதால் அதனுடைய சுவை குறைந்து விடும்.

தர்பூசணி, முலாம்பழம்
தர்பூசணி, முலாம்பழம் உள்ளிட்ட நீர்ச்சத்து அதிகமுள்ள பழங்களை வெளியில் வைத்தாலே போதும். ஒருவேளை நறுக்கினால், இரண்டு நாள்கள் மட்டும் ஃப்ரிட்ஜில் வைத்திருந்து சாப்பிடலாம். அதற்கு மேல் அப்பழங்கள் நீர்த்தன்மையை இழந்துவிடும்.

சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் வகை பழங்களையும் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. சாதாரண வெப்பநிலையே இந்தப் பழங்களைப் பழுக்கச் செய்துவிடும். ஃப்ரிட்ஜில் வைப்பதால் அப்பழங் களின் தோல் பாதித்து, பளபளப்பும் மங்கிவிடும்.

மூலிகைகள், கீரைகள்
மூலிகைகள், கீரைகள், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. ஃப்ரிட்ஜில் வைக்கும்போது அவற்றின் சத்துகள் குறையும். நீர் நிறைந்த பாத்திரத்தில் இவற்றின் தண்டுப்பகுதியை நீரில் மூழ்கி இருக்குமாறு வைத்திருந்தாலே போதும். உலர்ந்து போகாமல் இருக்கும்.
பழங்கள்

எந்தப் பழத்தையும் நறுக்கிய பின்னர் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. ஃப்ரிட்ஜுக்குள் இருக்கும் வாயு பழங்களின் மீது படரும். இது உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கும். பழங்களில் கிருமிகளின் தாக்கம் ஏற்படும். தேவையானபோது பழத்தை நறுக்கி உண்பதே நல்லது.

வாழைப்பழம்
ஃப்ரிட்ஜில் இருந்து வெளியாகும் வாயுவானது அதிகப்படியான குளிரில் வாழைப்பழத்தின் சத்தைக் கெடுத்துவிடும். பழமும் அழுகிவிடும். காற்றோட்டமுள்ள இடத்தில் வாழைப் பழத்தை வைத்திருப்பதே நல்லது.

தக்காளி
அதிக குளிர், தக்காளியின் பளபளப்பையும் சுவையும் பாதிக்கக் கூடியது. காற்றுப்புகக் கூடிய சாதாரண சூழலிலேயே தக்காளி சில நாள்கள் வரை கெடாமல் இருக்கும். ஃப்ரிட்ஜில் வைக்கும் தக்காளியின் சுவை குறையும்.

உலர்பழங்கள்
திராட்சை, அத்தி, பேரீச்சம் போன்ற உலர்பழங்களையும் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. உலர்ந்த பழங்கள் அதன் உலர்ந்த தன்மைக்காகத்தான் விரும்பப் படுகின்றன. அந்தத் தன்மையை ஃப்ரிட்ஜ் கெடுத்துவிடும்.

பெர்ரி வகைப் பழங்கள்
சாதாரண தட்பவெப்ப நிலையே பெர்ரி வகைப் பழங்களுக்குப் போதுமானது. ஃப்ரிட்ஜில் வைக்கும்போது இப் பழங்களின் சுவை கெட்டு விடும்.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 3 ஜனவரி, 2019

குழந்தை வளர்ப்பு அவ்வளவு கஷ்டமாக இருக்கிறதா..?

 

குழந்தை வளர்ப்பு என்ன அவ்வளவு சிரமமானதா? 'என்னங்க இப்படிக் கேட்டுட்டீங்க? இல்லையா பின்ன? அதுவும் இந்தக் காலத்துப் பசங்களை வளர்க்கிறது..?' என்று பலர் முணுமுணுக்கக்கூடும். ஏனென்றால் குழந்தை வளர்ப்பு என்பது சிக்கலானதாகவும், சவால் நிறைந்ததாகவும் இன்றைய பெற்றோருக்கு மாறிவிட்டது.

குழந்தைகளோடு கூடிக்களிப்பதுதான் மனதுக்கு மகிழ்ச்சிதரும் நிகழ்வு என்பதுபோய், குழந்தைகளைவிட்டு ஒரு ஒருமணிநேரம் ரிலாக்ஸாக தனித்திருந்தால் போதும், மனசு அமைதியாகிவிடும் என்று நிறையப் பெற்றோர்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டனர். இத்தனைக்கும் ஒரே ஒரு குழந்தை இருக்கும் குடும்பங்கள்தாம் இன்று அதிகம்.
 அல்லது அதிகபட்சம் இரண்டு குழந்தைகள். இதற்கே இவ்வளவு போராட்டங்கள்.
'ஒண்ணு வேணும்னா, இப்போவே அது வேணும். அது நடக்கலைன்னா வீட்டையே என் மகன் ரெண்டாக்கிடுவான்.
 இவனாலேயே எனக்கும் அவனோட அப்பாவுக்கும் அடிக்கடி சண்டை வருது...' - இதுபோல புலம்பாத அம்மாக்கள் இல்லை. விடுமுறை நாள்களில், மால்களில் அடம்பிடிக்கும் குழந்தைகளையும் அவர்களை அதட்டியபடியே வரும் பெற்றோர்களையும் பார்க்கத்தானே செய்கிறோம்!

அதுமட்டுமில்லை, எவ்வளவுதான் மல்லிகா பத்ரிநாத்,வெங்கடேஷ் பட் சமையல் நிகழ்ச்சிகளையெல்லாம் பார்த்து குழந்தைகளுக்குப் பள்ளிக்குச் சமைத்துக்கொடுத்து அனுப்பினாலும், அதை முழுவதுமாகச் சாப்பிடாமல் மிச்சம்வைத்துக் கொண்டுவரும் பிள்ளைகள், குழந்தை வளர்ப்பு என்பதைப் புரியாத புதிராக மாற்றிவிடுகிறார்கள்.
இன்னொரு பக்கம், சதா மொபைல் மற்றும் வீடியோ கேம்ஸில் மூழ்கிக்கிடக்கும் பிள்ளைகளை அந்த மோகத்திலிருந்து
 மீட்டெடுக்க முடியாமல் திணறும் பெற்றோர் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள். சரி, கொஞ்சம் வளர்ந்தால் குழந்தைகள் சரியாகிவிடுவார்கள் என்றும் நினைக்க முடியவில்லை. டீன் ஏஜில் இருக்கும் பிள்ளைகள், 'நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது' என்கிற மனோபாவத்தில்தான் இருக்கிறார்கள். 'உன் புருஷன்கிட்ட சொல்லி வை. ரொம்பத்தான் பண்றாரு...' என்று கரகரக் குரலில் பதின்பருவ ஆண்பிள்ளைகள் பேசும்போது திக்கென்றிருக்கிறது.
ஆனால், குழந்தை வளர்ப்பு குறித்த சூட்சமங்களை அறிந்துகொண்டால், அது உண்மையில் அத்தனை கடினமான காரியம் இல்லை என்கிறார் மனநல
 ஆலோசகர் பிருந்தா ஜெயராமன். என்ன அந்த சூட்சமங்கள் என்று கேட்கிறீர்களா? இதோ பிருந்தா ஜெயராமனின் வார்த்தைகள் உங்களுக்காக...
'' * குழந்தை வளர்ப்பு என்பது குழந்தை பிறந்த கணத்திலிருந்து செய்யவேண்டிய ஓர் அதிமுக்கியக் கடமை. குழந்தை பிறந்து 10 வயது வரை
 அந்தக் குழந்தையைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு அதன்பிறகு திடீரென்று குழந்தை வளர்ப்பை நீங்கள் கையில் எடுத்தால், அக்குழந்தை உங்கள் வசப்படாது.
* குழந்தை பிறந்த
 மூன்று, நான்கு மாதங்களில் மற்றவர்களின் முகம் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்துவிடும். குறிப்பாக தன் அம்மாவை நிறையத் தேடஆரம்பிக்கும். பேசத் தெரியாத அந்தக் குழந்தைக்கு அழுகைதான் ஒரே மொழி. பசித்தாலோ, ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டாலோ, அல்லது எறும்புபோன்ற பூச்சிகள் கடித்தாலோ, அல்லது அம்மா தன்னைத் தூக்கிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாலோ, அழுகை மூலமாக மட்டுமே அந்தக் குழந்தை தன் உணர்வுகளை வெளிப்படுத்தும். பசி, உறக்கம், உடல் உபாதை எனக் குழந்தையின் அழுகைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் தேவையை உணர்ந்து நிறைவேற்ற வேண்டும். ஆனால், வெறுமனே நீங்கள் தூக்கிக்கொள்ள வேண்டும் என்று அது அழுதால் அதற்கு நீங்கள் செவிமடுக்காதீர்கள். வேறு வழிகளில் குழந்தைக்கு விளையாட்டுக்காட்டி ரிலாக்ஸ் செய்யுங்கள். அப்படியல்லாமல் குழந்தை அழும்போதெல்லாம் தூக்கித் தூக்கி நீங்கள் பழக்கினால், குழந்தை இந்த விஷயத்தைப் புரிந்துகொண்டு அழுது, அழுதே உங்களைத் தூக்கிக்கொள்ள வைத்துவிடும். பிடிவாதம் மூலம் காரியம் சாதித்துக்கொள்ள முடியும் என்பதை குழந்தை கற்றுக்கொள்ளும் இடமும் இதுதான்.
* இன்றைய பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு
 ஒன்று அதீத செல்லம் கொடுத்து வளர்க்கிறார்கள். இல்லையென்றால் கட்டுப்பாடாக வளர்க்கிறேன் பேர்வழி என்று மிரட்டி வதைக்கிறார்கள். 'என் குழந்தை அழுதா என்னால தாங்க முடியாது' என்று பெற்றோரால் அதீத செல்லம் கொடுக்கப்பட்டு வளர்க்கப்படும் குழந்தைகள் பொறுப்பற்றவர்களாகவும், நான், எனது என்று சுயநலம் மிகுந்தவர்களாகவும் வளர்வார்கள். ஒரு குழுவாக இணைந்து செயல்பட இவர்களால் முடியவே முடியாது.கேட்பதெல்லாம் கிடைத்தே இவர்கள் வளர்வதால், தோல்விகளை எதிர்கொள்ளத் தெரியாதவர்களாகவும் இருப்பார்கள்.
* அதே சமயம் கண்டிப்பும் தண்டனையுமாக வளர்க்கப்படும் குழந்தைகளும் பயந்த சுபாவம் உள்ளவர்களாகவும், தன்னம்பிக்கை இல்லாதவர்களாகவும் வளர்வார்கள். சதா திட்டிக்கொண்டே இருக்கும் பெற்றோரிடம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த இயலாமல், மனதிற்குள்ளேயே புழுங்கிப் புழுங்கி மனச்சிக்கலுக்கு ஆளாகிவிடுவார்கள்.
* அதனால், ஒரு நல்ல குழந்தை வளர்ப்பு என்பது கனிவு, உறுதி இந்த இரண்டும் கலந்ததாக அமைய வேண்டும். கனிவு ஓ.கே, அதென்ன உறுதி என்று கேட்கிறீர்களா? உங்கள் குழந்தை ஏதாவது தவறு செய்கிறது என்று வைத்துக்கொள்வோம்... நீங்கள் என்ன செய்வீர்கள்? ஒன்று, குழந்தையை அடிப்பீர்கள். அல்லது குரலை உயர்த்திக் கத்துவீர்கள். இந்த இரண்டுமே சரியான குழந்தை வளர்ப்பு அல்ல. குழந்தை ஒருவேளை தவறு செய்தால் உங்கள் குரலை உயர்த்தாமல், அதே சமயம் உறுதியுடன் உங்கள் கருத்துகளை அதனிடம் தெரிவியுங்கள்.
* உதாரணத்துக்கு, உங்கள் குழந்தை படிக்காமல் சதா டிவி பார்த்துக்கொண்டே இருக்கிறது, அல்லது மொபைல் போனில் மூழ்கிக்கிடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். உடனே குழந்தையை அடிக்கப் பாயாமல், 'இங்க பாருடா கண்ணா... தினமும் ஈவ்னிங் ஒரு மணிநேரம் டிவி பார்க்க அம்மா உன்னை அலோ பண்றேன். ஆனா அதையும் தாண்டி அம்மா பேச்சைக் கேட்காமல், நீ தொடர்ந்து மொபைல் பாக்குற. டிவி பாக்குற. இனிமேல் இப்படிச் செய்தா, இனி நீ வழக்கமா டிவி பாக்குற நேரத்தில்கூட டிவி பார்க்க அம்மா அலோ பண்ண மாட்டேன். அதனால கவனமா நடந்துக்கோ' என்று உறுதியான குரலில் தெரிவியுங்கள்.
* மறுநாள், உங்கள் பேச்சை மதித்து குழந்தை டிவி பார்க்கும் நேரம் முடிந்ததும் அதை ஆஃப் செய்துவிட்டு படிக்கவந்தால் நலம். அப்படி இல்லாமல், அப்போதும் முதல்நாள்போல டிவி பார்க்க ஆரம்பித்தால், அதற்கடுத்த நாள்களில் உங்கள் குழந்தையை முற்றிலும் டிவி பார்க்க அனுமதிக்காதீர்கள்.
* இதற்காகக் குழந்தை அழுது அடம்பிடித்தால், அதை அடிக்காதீர்கள். உங்கள் முடிவில் உறுதியாக இருங்கள். தொடர்ந்து இதுபோல உங்கள் உறுதியைக் காண்பித்தால், குழந்தைகள், 'இனி அம்மாகிட்ட நம்மா பாச்சா பலிக்காது' என்று முடிவுசெய்து உங்கள் வழிக்கு வருவார்கள். ஆனால், ஒரு நாளிலேயே இந்த மாற்றம் குழந்தைகளிடம் வந்துவிடாது. உங்களின் தொடர்ந்த உறுதியும், பொறுமையும் மட்டுமே அவர்களை உங்கள் வழிக்குக் கொண்டுவரும்.
* குழந்தைகளுடன் வெளியே ஷாப்பிங் செல்வது என்றால் கிளம்புவதற்கு முன்பே, 'ஷாப்பிங்ல உங்களுக்குப் பிடிச்ச ஐஸ்க்ரீமை நாங்க வாங்கித் தர்றோம். ஆனா, பாக்குற பொருளை எல்லாம் கேக்கக் கூடாது. அப்படிக் கேட்டு பிடிவாதம் பண்ணா, இனிமேல் உங்களை மறுபடியும் ஷாப்பிங் கூட்டிட்டுப்போக மாட்டோம். நாங்க சொன்னா அதைச் செய்வோம்னு உங்களுக்குத் தெரியும்ல? அதுக்கேத்த மாதிரி நடந்துக்கோங்க' என்று அறிவுறுத்தி அழைத்துச் செல்லுங்கள். இப்படி ஓரளவு குழந்தைகளைத் தயார்செய்து வெளியில் அழைத்துக்கொண்டு சென்றால், குழந்தைகளும் பிடிவாதம் இல்லாமல் நடந்துகொள்வார்கள்.
* பார்க், பீச் என்று குழந்தைகளை வெளியே அழைத்து வந்துவிட்டு, அங்கேயும் குழந்தைகள் முன் கடுமையாக வாக்குவாதம் செய்துகொள்ளும் பெற்றோர் நம் ஊரில் நிறைய இருக்கிறார்கள். குழந்தை வளர்ப்பில் மிக மிக முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? அவர்கள் முன் இப்படி பெற்றோர் சண்டைபோட்டுக்கொள்ளவே கூடாது என்பதுதான். தொடர்ந்து குழந்தைகள் முன் பெற்றோர் சண்டையிட்டுக் கொள்ளும்பொழுது, குழந்தைகள் மனதளவில் கடும் அதிர்ச்சிக்கும், குழப்பத்திற்கும் ஆளாகிறார்கள். குழந்தை ஏதேனும் தப்பு செய்யும்போது, 'அப்படியே அப்பா புத்தி' என்று அம்மாக்களும், 'அம்மாவோட ஜெராக்ஸ்தானே இவன்...' என்று அப்பாக்களும் குற்றம் சொல்லச் சொல்ல, குழந்தைகள் மனதளவில் தங்களைச் சுருக்கிக்கொள்கிறார்கள். தங்கள் பெற்றோரிடமிருந்து தங்களை விலக்கிக்கொள்ளவும் செய்கிறார்கள்.
* இன்றைய பெற்றோர் குழந்தை வளர்ப்பில் செய்யும் ஆகப் பெரிய தவறு என்ன தெரியுமா? குழந்தைகளுக்கு எதற்கெடுத்தாலும் பொருள்களை கிஃப்ட்டாக வாங்கிக்கொடுத்து ஊக்குவிப்பது. 'முதல் மார்க் வாங்கினா சைக்கிள் வாங்கித்தர்றேன்', 'சமர்த்தா சாப்பிட்டா கார் பொம்மை வாங்கித் தர்றேன்' - இப்படி ஒவ்வொரு விஷயத்தை நிறைவேற்றவும் பொருள்களை லஞ்சமாகக் கொடுக்கிறார்கள் பெற்றோர்கள். குழந்தைகளுக்குப் பணத்தின் அருமை புரியாமல்போக, இது பெரும் காரணமாக அமைந்துவிடுகிறது. அதுமட்டுமல்ல, ஒன்றை அன்பளிப்பாகக் கொடுத்து ஒரு வேலையை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்கிற தவறான பாடத்தை அவர்கள் இதன் மூலம் கற்றுக்கொள்கிறார்கள். அதனால், பிள்ளைகளை உத்வேகப்படுதி நல்ல விஷயங்களைச் செயல்படுத்த நினைத்தால், பொருள்களைக் கொடுத்து அவர்களிடம் பேரம் பேசாதீர்கள்.

* 'அம்மூ... மேத்ஸ்-ல போன தடவையைவிட இந்தத் தடவை அதிகமா மார்க்ஸ் வாங்கியிருக்க. அதனால, இன்னைக்கு அம்மா உனக்குப் பிடிச்ச வெங்காய பக்கோடா செய்து தர்றேன்', 'நீ இன்னைக்கு ரன்னிங்ல ஃபர்ஸ்ட் வந்ததை செலிபிரேட் பண்ண, நாம இன்னைக்கு மொட்டை மாடில நிலாச்சோறு சாப்பிடலாமா?' - குழந்தைளை இப்படி உற்சாகப்படுத்தலாம், பாராட்டலாம்.

* இதுவே சற்று வளர்ந்த குழந்தைகளை ஊக்குவிக்க நினைத்தால், உங்கள் மகனை அல்லது மகளை தன்
 நண்பர்களோடு வெளியே செல்ல அனுமதிப்பது, அல்லது உங்கள் மகன் அல்லது மகளின் நண்பர்களை வீட்டுக்கு அழைத்துச் சாப்பாடு செய்துகொடுப்பது போன்றவற்றை மேற்கொள்ளலாம். இதனால், பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான புரிதல் பலப்படும். இதன் மூலம் பதின்பருவக் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் கம்ஃபர்ட்டாக உணர்வார்கள்.

* கடைசியாக ஒன்று... குழந்தை வளர்ப்பில் அம்மா அல்லது அப்பா இருவரில் யார் அதிகம் பொறுப்பெடுத்துக் கொள்கிறார்களோ, அவர்களோடு இணைந்து மற்றவரும் செல்ல வேண்டும். இதையெல்லாம் ஓரளவு செயல்படுத்த ஆரம்பித்தால் போதும், நீங்களே உணர்வீர்கள் குழந்தை வளர்ப்பு அவ்வளவு கடினமானதில்லை என்று!"
 விரிவாகச் சொல்லி முடித்தார் பிருந்தா ஜெயராமன்.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 1 ஜனவரி, 2019

டானிக்! டானிக்!! டானிக்!!!

டானிக்! டானிக்!! டானிக்!!!
 இரும்புக்கு டானிக், இதயத்துக்கு டானிக், மூளைக்கு டானிக், கிட்னிக்கு டானிக் என டானிக் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்க ஆசைப்படுவோரின்எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அவர்களைக் குறிவைத்து வணிக உலகமும் சாமர்த்தியமாக, வேகமாக விற்பனையாகும் வீட்டு நுகர்பொருட்களை (FMCG-FAST MOVING CONSUMER GOODS), வேகமாக விற்பனையாகும் ஆரோக்கிய உணவுகளாக (FMHG- FAST MOVING HEALTH GOODS)  மதிப்புக் கூட்டி விற்பனை செய்கிறது. கொஞ்சம் அக்கறை; கொஞ்சம் உறுத்தல்; நிறையப் பயம் நிறைந்த நடுத்தர வர்க்கமும், இணையம் மூலமும் விளம்பரம் வழியாகவும் ஊட்டப்பட்ட அரைகுறைத் தெளிவுடன் இருக்கும் இளைய தலைமுறையினரும் மாசத் தொடக்கத்தில் புளி, பருப்போடு, இரண்டு பாட்டில் இரும்பு டானிக், ஒரு பாக்கெட் உயிர்ச்சத்து மாத்திரை வாங்கிவருவதைப் புத்திசாலித்தனமான அக்கறையாகக் கருதுகிறது.
'அவசர உலகில் அரக்கப்பறக்கத் தின்று திரியும்போது, இப்படி டானிக்குகள், பி-காம்ப்ளெக்ஸ் மாத்திரைகள் தினம் ஒன்று எடுத்தால் நல்லதுதானே?', 'அப்போதைக்கப்போது 'கட்டிங்' போடும் பழக்கம் உள்ள எனக்கு லிவர் டானிக் நல்லதுதானே செய்யும்?' என்போருக்கு ஒரு தகவல்… செய்த குற்றங்களுக்கு இப்படி டானிக்குகளைச் சாப்பிடுவது என்பது பாவத்தைக் கழுவும் பிராயச்சித்தம் அல்ல; தவிர, அவசியம் இல்லாமல் எடுக்கப்படும் இந்த மருந்துகள் ஆபத்தைத்தான் தரும். எப்படி?
இரும்புச் சத்து டானிக் என்பது வெகு அதிகமாக மக்களால் அவசியம் இன்றிப் பயன்படுத்தப்படும் ஒரு சத்து மருந்து. சோகை நீக்க மிக அவசியமான அந்த மருந்து, அவசியம் இன்றி அதிகம் பயன்படுத்தப்படும்போது, இரைப்பைக் குடலில் புண்களையும், மலச்சிக்கலையும், சில நேரங்களில் ஈரல் பாதிப்பையும்கூட ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கு சாக்லேட், பிஸ்கட் வாங்கிச் செல்வதுபோல, 'எதற்கும் இருக்கட்டும்' என இரும்புச் சத்து டானிக் வாங்கிச் செல்வது அந்தக் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடும் என எச்சரிக்கிறது நவீன மருத்துவ உலகம். இரும்புச் சத்து ஏற்கெனவே ஏராளமாக நம் அன்றாட உணவில் பொதிந்திருக்கிறது. இரும்பை உடல் உட்கிரகிக்க வைட்டமின் சி சத்து அவசியம்.
பட்டை தீட்டிய வெள்ளை அரிசியில் இரும்புச் சத்து கிட்டத்தட்ட கிடையாது. ஆனால், கம்பு அரிசியில் ஏராளம். குதிரைவாலியிலும் வரகு, சாமையிலும்கூட அதிகம். அந்தச் சிறுதானியங்களில் எலுமிச்சை சாதம் செய்து சாப்பிடுவது, வைட்டமின் சி சேர்த்து இரும்புச் சத்து மாத்திரை சாப்பிடுவதற்கு இணையானது. இது தவிர, முருங்கைக் கீரை சூப், கோழி ஈரல், நிலக்கடலை மிட்டாய், நெல்லிக்கனிச் சாறு, உலர்ந்த திராட்சை இவை அனைத்தும் இரும்புச் சத்தை இயல்பாகத் தரும். இப்படிச் சாப்பிடுபவருக்கு இரும்புச் சத்துக்கு என தனி டானிக் தேவை இல்லை.
நாகச் சத்து (zinc), குழந்தை டானிக்குகளில் பிரபலம். உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றல் தருவதிலும், கேன்சர் நோய்த் தடுப்பிலும், ஹார்மோன் சுரப்பைச் சீர்ப்படுத்துவதிலும் அதன் பயன்குறித்து ஏராளமான ஆய்வுகள் வந்துள்ளன. இந்த நாகச் சத்து நம் ஊர் நிலக்கடலை, சோயா, பீன்ஸ், மாதுளம் பழம், கோழி மற்றும் ஆட்டு ஈரல், பூசணி விதை, தர்பூசணி விதை, வெள்ளரி விதையில் ஏராளம். பூசணி, தர்பூசணியைச் சாப்பிடும்போது/சமைக்கும்போது விதையைத் தூர எறிந்துவிடாமல் உலர்த்தி எடுத்து, அவ்வப்போது சாப்பிட்டால் நாகச் சத்து தாராளமாகக் கிடைக்கும்.
இப்படி நாகச் சத்தைச் சாப்பிடாமல், டானிக்காக அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், உங்களுக்கு நல்லது செய்யும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவு குறையும். மற்ற வைட்டமின்கள் உட்கிரகிக்கப் படுவதைக் குறைத்து, குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும் தன்மையைக் கொடுத்துவிடும் என பாதிப்புகளை வரிசையாகப் பட்டியலிடுகிறது உலகின் பிரபல மருத்துவமனையான மேயோ கிளினிக்.
வைட்டமின்கள் மிக அவசியமான உணவுக் கூறுகள் என்பது புது விஷயம் இல்லை. அதே, 'உடம்பு சோர்வாக இருக்கிறது; தோல் இன்னும் பளபளப்பாக இருந்தால் நல்லா இருக்குமே; கணக்கில் சென்டம் வரலையே' என்று காலை, மதியம், இரவு என வைட்டமின் மாத்திரைகளை இஷ்டத்துக்குச் சாப்பிடுவது, உயிர்ச் சத்தாகாமல், உயிரை எடுக்கும் சத்தாகிவிடும். அளவுக்கு அதிகமான ஃபோலிக் அமிலம் எனும் பி9 வைட்டமின் மலக்குடல் புற்றைத் தரக்கூடும். அளவுக்கு அதிகமான வைட்டமின் சி சிறுநீர்ப்பை புற்றைத்தரக் கூடும். ஆனால், இந்த இரண்டு வைட்டமின்களையுமே இயற்கையாக அளவோடு எடுத்துக்கொள்ளும்போது புற்றைத் தடுக்கக்கூடிய ஆற்றலுடன் செயல்படும்.
'பையனுக்கு இந்த டானிக் கொடுத்தீங்கன்னா, அடுத்த சீன்லயே உலக செஸ் சாம்பியன் ஆகிடுவான்' என்று மூளைக்கு டானிக் விற்பது, 'இந்தப் புரத பானம் குடிக்கக் குடிக்க இந்திய கிரிக்கெட் அணியில் அவனுக்கான இடம்  கர்ச்சீப் போட்டுவைக்கப்படும்' என்பது போன்ற கற்பனை கமர்ஷியல்களுடன் தினமும் நாலு டானிக் கம்பெனிகள் சந்தையில் இறங்குகின்றன. பிளாஸ்டிக் பக்கெட், குடம் சைஸில் மாத்திரை டப்பாக்கள், இன்று ஒவ்வொரு ஜிம்முக்கு அருகிலும் ஊட்டச் சத்து உணவுகளாக விற்கப்படுகின்றன. அவசியம் இல்லாமல், அளவு தெரியாமல், குடும்ப மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இதற்கு வசப்படுவது என்பது 'சொ.செ.சூ'தான்!

http://chittarkottai.com

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

நாம் தூங்கும் போர்வையை ஏன் மடித்து வைக்க வேண்டும் தெரியுமா?

நாம் தூங்கும் போர்வையை பல வேளைகளிலும் ஒழுங்காக மடித்து வைப்பதில்லை. ஆனால் மடித்து வைக்க வேண்டும் என்று நம் முதியோர்கள் கூறுவார்கள்...

Popular Posts