லேபிள்கள்

புதன், 9 ஆகஸ்ட், 2017

குழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நேரத்தில் கொடுக்க வேண்டிய உணவு முறைகளும்

எழுத்தாளர்: டாக்டர் யசோதா சேதுராமன்

தாய்ப் பிரிவு: மருத்துவம்
1.    முதல் சில மாதங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி & வயிற்றுப்போக்கு (Vomiting & Diarrhoea):
Vomiting & Diarrhoea குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களில் முக்கியமானவை. முதல் Step குழந்தைக்கு கொதிக்க வைத்து ஆறவைத்த தண்ணீரைச் சிறிது கொடுக்கலாம். (or) feed of பால் கொடுப்பதை நிறுத்தலாம். பால் கொடுப்பதற்கு பதிலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளதை செய்து கொடுக்கலாம். பாலைக் கொதிக்க வைத்து அதில் சிறிது எலுமிச்சம் பழச்சாற்றை விடவும். பாலிலிருந்து தண்ணீர் தனியாகவும் Paneer தனியாகவும் பிரிந்து விடும். இதை வடிகட்டி அந்த நீரை மட்டும் இடைவெளி விட்டு கொடுத்து வரலாம். (or) (i) 200ml தண்ணீர் (ii) 2 tsp சர்க்கரை (iii) 1 tsp உப்பு (iv) அரைமூடி எலுமிச்சம் பழச்சாறு (v) ½ tsp Soad bicarb (cooking soda) இவற்றைக் கலந்து அடிக்கடி கொடுத்து வரலாம். குழந்தை dehydration ஆகாமல் தடுப்பதற்கு இது மிகவும் உதவும். குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் பாத்திரங்களை மிகவும் சுத்தமாக உபயோகப்படுத்தல் அவசியம்.


(2)   Blocked Nose : You can give Acu Treatment. Along with it put a drop of luke warm ghee each cash nostril at the time of sleep.
(3)   Bronchitis/Pheumonia Flu and Hay Fever:
i. திட உணவு கொடுப்பதை நிறுத்தவும். புளிப்பு சுவையுள்ள உணவு அதிகம் கொடுக்கக் கூடாது.
ii. காலையில் ½ glass மிதமான வெந்நீரில் சிறிது உப்பும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் சேர்த்து அந்த நீரை சிறிது கொடுக்கவும். மதியம், இரவு என சிறிது சிறிதாய் கொடுக்கவும். குழந்தைகள் சிறது Vomit செய்யலாம். அதன் மூலம் கபம் வெளியேறும் வாய்ப்பு உள்ளது.
iii. Green juice சிறிது கொடுக்கலாம். Green juice செய்ய சிறிதளவு கொத்தமல்லி தழை, புதினா இலை, கோஸ், கோதுமைப் புல் இவற்றை நன்கு அலம்பி நீர் விட்டு அரைத்து வடிகட்டி தினமும் சிறிது குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
(4)   Constipation : குழந்தைகளுக்கு உணவுக்கிடையில் Warm water சிறிது கொடுத்து வரவும். கடுக்காய்பொடி சிறிது குழைத்து தேனில் குழைத்துக் கொடுக்கலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
(5)   Whooping cough : திட உணவு மிதமாகக் கொடுக்கவும். சிறிது இஞ்சி, மஞ்சள் பொடி சிறிது Pinch of salt இவற்றை நீரில் சேர்த்து கொதிக்க வைத்து சிறிது சிறிதாகக் கொடுக்கவும்.
(6)   Tonsilitis ; குழந்தைகளுக்கு பொதுவாக வரக்கூடிய ஒன்று Gargling with lukewarm water with a little salt (சிறிது வளர்ந்த குழந்தைகள்) உதவியாக இருக்கும். Tonsils வீக்கமாகி இருந்தால் சிறிது மஞ்சள் பொடி apply செய்யலாம்.
(7)   Asthma / breathlessness / Suffocation : ¼ tsp மஞ்சள் பொடி ¼ tsp சீரகப்பொடி சிறிது சுக்கு பொடி இவற்றை நன்கு கலந்து தேனில் குழைத்து கொடுக்கலாம்.
(8)   Eosinophillia : மாலையில், ஓமத்தை எலுமிச்சம் சாற்றில் ஊறவைத்து நிழலில் காயவைத்து பொடி செய்து அதை தினமும் கொடுத்து வரலாம்.
(9)   Juices for common problems :
(a)   Alfalfa            ஜீரணக் கோளாறுகள் / அஜீரணம்
(b)   Apple                Constipation
(c)   Apricot               Anaemia
(d)   Beetroot             Build blood
(e)   Cabbage          Digestion
(f)    Carrot                Nutrition for eyes, hairs, nails
(g)   Cauliflower       intestinal cleauser
(h)   Onion                Bronchial catarrh
(i)    Orange             Acidity & Cold
(j)    Pine apple        Sore throat, catarrh, digestion
எந்த வித நோய்கள் குழந்தைகளுக்கு வந்தாலும் உணவுகள் கொடுப்பதை சிறிது மாற்றி பொருத்தமான உணவுகளைக் கொடுத்தால் ¾ பங்கு நோய் குணமாகிவிடும். எளிமையாகக் கிடைக்கும் கீரைகள், வெந்தயம், தூதுவளை, துளசி போன்றவை மருத்துவ குணம் நிறைந்தவை. இஞ்சி, சுக்கு, தேன், நெல்லிக்காய், நல்ல சத்தான தானியங்கள் போன்றவற்றையும் நிறைய கொடுக்கலாம்.
குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சி முக்கியமாக தாய்மார்களின் கையில் தான் உள்ளது.
எதற்கெடுத்தாலும் மருத்துவமனை, மருந்துகள், என்ற பழக்கத்தைக் குறைத்துக் கொண்டு எளிமையான முறையில் மிகவும் ஆரோக்கிய மாக குழந்தைகளை வளர்க்கலாம். நாம் உண்ணும் உணவே மருந்து. குழந்தைகளுக்கும் இது மிகவும் பொருந்தும். சிறிய குழந்தைகளுக்கு, பிறந்த ஒரு நாள் குழந்தைக்கும் ஆரம்பத்திலிருந்தே சில முறைகள் பின்பற்றினால் குழந்தைகள் ஆரோக்கிய மாக வளரும் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
1. சீரகம் ½ tsp கற்பூரவல்லி இலை சிறிது, துளசி சிறிது, மூக்கரட்டை வேர் சிறிது, கருப்பு வெற்றிலை சிறிது, சித்திரத்தை சிறிது, வசம்பு சிறிது இவற்றை நன்கு நசுக்கி நல்ல வெள்ளை துணியில் (புதுத்துணியாக இருத்தல் நல்லது) முடிந்து ஆவிகாட்டி எடுத்து பிழிந்து சிறிது வெந்நீர் சேர்த்து குழந்தைகளின் வயதிற்கேற்ப 2.5 ml to 5 ml வரை ஒரு நாளைக்கு இருமுறை கொடுக்கலாம். சளி, காய்ச்சல், மாந்தம், வயிற்றுக்கோளாறு, வாந்தி எல்லாவற்றிற்கும் இது மிகவும் நல்லது. சாதாரணமாக சிறிய குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை இந்த சாற்றைக் கொடுத்து வந்தால் குழந்தை நன்கு ஆரோக்கியமாக வளரும்.
2. ஜாதிக்காய், மாசிக்காய் இவைகளும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. அதிக உடல்வெப்பம். வயிற்றுக் கோளாறு, அடிக்கடி தொந்தரவு தரும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கு இவற்றைக் கொடுக்கலாம். சாதம் வேகும்போது இவை இரண்டையும் கூடவே வேகவைத்து பிறகு நிழலில் நன்கு காயவைத்து வைத்துக் கொள்ளவும். சந்தனக் கல்லில் இரண்டையும் தனித்தனியாக இழைத்து சிறிது வெந்நீர் கலந்து கொடுக்கவும். 3 நாட்கள் தொடர்ந்து தினமும் ஒரு வேளை என்று கொடுத்து வந்தால் மேற்சொன்னவைகள் யாவும் முற்றிலும் குணமாகிவிடும். சிறிய குழந்தைகள் அடிக்கடி சாப்பிடும் பால் கக்குவதற்கு வாய்ப்புண்டு. அதுபோன்ற நேரத்தில் 4 (or) 5 மிளகு நெய்யில் பொரித்து தூள் செய்து நெய்யில் கலந்து கொடுக்கவும். உடனே வாயிலெடுப்பது நிற்கும்.
3. தும்பைப்பூ (சிறிய கிண்ணம்) வெற்றிலை, கற்பூரவல்லி கொதிக்க வைத்து 1 பாலாடை கொடுக்கலாம். சளி, மாந்தம் அஜீரணம் இவை நீங்கும்.
4. 5 ஆம் மாதக் குழந்தையிலிருந்து 2 வேப்பிலை ஈர்க்கு, மிளகளவு சுக்கு, 1 பல் பூண்டு, சீரகம் இவைகளை சற்று பொடிசெய்து 1 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு இதை வடிகட்டி 1 பாலாடை அளவு கொடுக்கவும் வயிறு Upset குணமாகும்.
5. வசம்பு : இது எல்லோரும் அறிந்த ஒன்று. சிறிய வசம்பு துண்டு எடுத்து சிறிய விளக்கில் சுட்டு கறியாக்கி, தாய்ப்பால் (or) பசும்பாலில் இழைத்து 1 tsp அளவு வாரம் ஒரு முறை கொடுத்துவரலாம். வாந்தி, அஜீரணம், வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். வசம்பு 5g, சீரகம் 5g, சித்திரத்தை சிறிது, சுக்கு சிறிய துண்டு, மிளகு சிறிது. பெருங்காயம், ஓமம் 5g இவற்றை பொன்னிறமாக வறுத்து வசம்பை நன்கு சுட்டு கறியாக்கி எல்லாவற்றையும் காற்றுபுகாமல் ஒரு சிறிய பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். சிறிய குழந்தைகளுக்கு ஒரு சிட்டிகை அளவு எடுத்து தேனில் குழைத்து கொடுக்கலாம். 5 வயது மேற்பட்டவர்களுக்கு ¼ tsp அளவு எடுத்து தேனில் குழைத்து கொடுக்கலாம். வயிறு சம்பந்தமான கோளாறுகள் சளி, காய்ச்சல் இவை குணமாகும்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 7 ஆகஸ்ட், 2017

குழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா ??

 கருவுற்ற காலத்தில் வெளித்தோற்றத்தில் மட்டுமே நமக்கு மாற்றங்கள் ஏற்படுவதில்லை உள்ளுக்குள்,ஹார்மோன்களின் செயல்பாட்டினால் நம்முடைய உடலின் அனைத்து இயக்கங்களுமே மாறு பட்டுப் போகிறது. இப்படி சுமார் பத்து மாதகாலம் இந்த மாற் றங்களுக்கே பழகிப்போன நம் உடல், திடீ ரென்று ஒரே நாளில் பழைய நிலைமைக்குத் திரும்பிவிடாது. அந்த மாற்றங்கள் முற்றிலுமாக இல்லா விட்டாலும் ஓரளவுக்காவது பழைய நிலைக்கு வர குறைந்த பட்சம் ஆறு வார காலம் ஆகும். சிசேரியன் ஆனவர்களுக்கும் இது பொருந்தும் என்றாலும், காயங்கள் இருப்பதால் அவர்களுக்குக் கூடுதல் நேரம் பிடிக்கும்.


குழந்தை பிறந்ததும், ''சூடா காஃபி சாப்பிடக்கூடாது..! பச்சைத் தண்ணில கை வைக்காதே..! குழந்தைக்குப் பால் கொடுக்கும்போது மல்லிகைப்பூ ஆகாது! மாம்பழமா… கூடவே கூடாது!'' என்று நம் வீட்டுப் பெரியவர்கள் ஒரு பெரிய பட்டியலே போடுவார்கள். உண்மையில்இதெல்லாம் தேவையில்லாத பயங்கள்தான்!
இன்னும் சில வீடுகளில் குழந்தை பெற்றுக் கொண்ட பெண்ணுக்குத்தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெறும் பிரெட் மட்டும்தான் சாப்பிடக் கொடுப்பார்கள். இதெல்லாம் ரொம்பத் தவறான விஷயம். பிரசவமான பெண்ணுக்கு சாதாரணமாக, நாம் வீட்டில் சாப்பிடும் உணவு வகைகளைக் கொடுப்பதுதான் சிறந்தது. அப்படிக் கொடுத்தால்தான் அம்மாவுக்கு இயல்பாக தாய்ப்பாலும் சுரக்கத் தொடங்கும்
நார்மலான டெலிவரிக்கே சில சமயங்ளில், வஜைனாவின் வாய்ப் பகுதியில் தையல் போட வேண்டி வரலாம். சிசேரியனுக்கோ சொல்லவே வேண்டாம். இப்படிக் காயப்பட்ட பெண்களுக்குத் தண் ணீரே கொடுக்கக் கூடாது… அப்படியே கொடுத்தாலும் தொண்டையை நனைக்குமளவுக்குக் கொடுத்தால் போதும் என்று பல வீடுகளில் சொல்வார்கள்.
தண்ணீர் அதிகம் குடித்தால் காயத்தில் சீழ் பிடித்துவிடும் என்பது அ வர்களின் விளக்கம். இந்தத் தண்ணீர்க்கட்டுப்பாடு சில நாட்கள்தான் என்றில்லை… சில மாதங்கள் வரைகூட தொ டரும்! இதுவும் மிகவும் தவறான விஷயம்.
உண்மையில் இச்சமயத்தில்தான் தாய் நிறைய, தண்ணீர் குடிக்க வேண்டும். அப்படி நிறைய தண்ணீர் குடித்தால்தான் தாய்க்கு நீர்க் கடுப்பு (யூரினரி இன்ஃபெக்ஷன்) போன்ற பிரச் னைகள் ஏற்படாது.
குழந்தை பிறந்தவுடனேயே அத்தனை நாளும் பெரிதாகி, குழந்தையைத்தாங்கி ஏந்திய தாயி ன் கர்ப்பப்பை மெதுமெதுவாக பழைய நிலை க்கு வந்துவிடும். அச் சமயத்தில் ரத்தப்போக்கு வருவது இயற்கை. 4_5 வாரங்கள் வரைக் கும் இந்த ரத்தப் போக்கு நீடிக்கும். அதற்கு மேல் போனால் தவறு.இப்படி அதிகப்படியாக ரத்தப் போக்கு ஏற்படக்காரணம் என்ன..?

தாயின் கர்ப்பப்பையில் நோய் த்தொற்று ஏதேனும் ஏற்பட்டி ருந்தால் இப்படி ஆகலாம். சில சமயம் தாயின் கர்ப்பப்பையில் நஞ்சின் பாகங்கள் அல்லது சில திசுக்கள் வெளிவராமல் விட்டுப் போயிருந்தாலு ம் அதிகப்படியான ரத்தப் போக்கு ஏற்படலாம்.
இப்படி ஆகும்போது மருத்துவரை அணுகுவதுதான் சரி. மருந்து மாத்திரைகள் மூலம் அவரால் தான் இ தற்கு நிரந்தரத் தீர்வு கொடுக்கமு டியும்.

பிரசவமான பெண்களுக்கு மிகவு ம் அரிதாக ஙிணீதீஹ் ஙிறீuமீs என் கிற நிலை ஏற்படுவதுண்டு. ( இது எதனால் ஏற்படுகிறது என்றெல்லாம் சொல்லமுடியாது)
இதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்…

சில பெண்கள் டெலிவரி ஆனதும் தங்களையறியாமல் ஒருவித மன அழுத்தத்தால் அவதிப்படுவதுண்டு. இந்த நிலைக்கு ஆளாகும் பெண்கள் தங்களுக்குள் தாங்களாக வே காரணமின்றி அழுவார்கள். குழந் தையை கவனிக்கக்கூட ஆர்வம் காட்டாமல் ஒருமாதிரி விட்டேத் தியாக இருப்பார்கள். இதுபோன்ற சில அறிகுறிக ளால் இவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும். இந்த நிலைக்குத்தான் Baby Blues என்று பெயர். டெலிவரி ஆன கொஞ்ச நாட்களில் இது தானாகவே சரியாகத் தொடங்கும்.
சிலருக்கு இதுபோல எல்லாம் சாதாரணமாக இல்லாமல் தீவிரமான பிரச்னையாக இது உருவெடுக்கலாம். அப்படி அது மோசமான நிலையை அடையும்போது அதை Puerperal Psychosis என்று பெயரிட்டு அழைக் கிறோம். இது ஏற்கெனவே மனநோயா ல் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரலாம். சாதாரணப் பெண்களுக்கும் இது போல நிலைமை தீவிரமடைவதுண்டு.
இந்த நிலை ஏற்படும்போது சம்பந்தப்பட் ட பெண்ணைத் தனியாகவிடுவது நல்ல தல்ல. காரணம், அவர்களுக்குத் தற் கொலை செய்து கொள்ளும் எண்ண ம் இச்சமயத்தில் அதிகப்படியாக ஏற்படும். அதனால் அவர்களை மருத்துவரின் கண்காணிப்பில் வைத்திருப்பது தான் நல்லது.
சிலசமயம் ஆவேசத்தின் உச்சியில் இந்தப் பெண்கள் தங்களையும் அறியாமல் குழந்தையைக்கொன்றுவிடும் அளவுக்கேகூடச்செல்வார்கள்!தேர்ந்த மனநல மருத்துவரிடம் இவர்களை அழைத்துச் சென்று சிகி ச்சை கொடுத்து வர மெதுவாகக் குணம் தெரியும். சிகிச்சையின்போது இவர்களுக்கு மருந்துகள் கொடுக்க வேண்டி வரும்போது, சில சமயம் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதைக்கூட நிறுத்த வேண் டி வரலாம்..
குழந்தை பிறந்ததும் பெண்களுக்கு இது போன்ற மனரீதியான மாறுதல்கள் ஏற்படு வதோடு, வெளித்தோற்றத்திலும் பல மாற்றங்கள் ஏற்படலாம். நிறையப் பேருக்கு ஏற் படுவது தலைமுடி கொட்டும் பிரச்னை இது சாதாரண விஷயம்தான்.கர்ப்பமாக இருந்த காலத்தில் நம்முடைய உடலில் ஹார்மோன்களின் செயல்பாடுகள் சற்றே அதிகப்படியாக இருக்கும். அந்தச் சமயத்தில் கூடுதல் ஊட்டம் பெற்று முடி நன்றாக வளரத் தொடங்கும். குழந்தை பிறந்ததும் ஹார்மோன்களின் செயல் பாடுகள் வழக்கம்போல ஒரு கட்டுக்குள் வந்துவிடும். அச்சமயத்தில் தான் கூந்தல் உதிரும் பிரச்னை தலைதூக்கும். இதைத் தடுக்க வழியில்லை என்றாலும் ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட்டு வர, மீண்டும் முடி இயல்பாக வளர வாய்ப்புள்ளது.
கர்ப்பமடைந்த ஒருசில மாதங்களில் தாயின் மார்பகம் தாய்ப்பால் சுரப்பதற்கு ஏதுவாக, அளவில் பெரி தாகத் தொடங்கும். குழந்தை பிறக்கும்போது முழுவளர்ச்சியடைந் துவிடும் தாயின் மார்பகம், பால் சுரப்பதால் சற்றே கனமாகி லேசாக த் தொங்கினாற்போல காட் சி தரும். இது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இதை இப்படியே விட்டுவிட்டா ல் தாயின் மார்பகம் நிரந்த ரமாகவே தொ ங்கிப் போய் விடும் வாய்ப்புள்ளது.
கனமான மார்பகத்துக்கு சப்போர்ட் தரும் வகையில் தாய் எப்போதும் பிரா அணிவ து நல்லது. அதுவும் தனக்கு சரியான அள விலான பிரா அணிய வேண்டும். பிரா அணிந்தால் குழந்தைக்கு ஒவ்வொரு முறை பாலூட்டும் போதும் கஷ்டமாக இருக்குமே என்று நிறையப் பேர் கேட்கி றார்கள். இவர்கள் சாதாரண பிரா அணி யாமல் கடையில் ஸ்பெஷலாக விற்கக் கூடிய 'மெட்டர்னிட்டி பிரா' வாங்கி அணி யலாம். இப்படி அணிந்தால் ஒவ்வொரு முறை பால் கொடுக்கும் போதும் பிராவை அவிழ்த்து மாற்றவேண்டிய அவசியமில்லை.
கர்ப்பகாலத்தில் நம் வயிற்றின் தசைப்பகுதிகள் கர்ப்பப்பை விரிவடைவதற்கு ஈடு கொடுத்து விரிவ டையும். குழந்தை பிறந்ததும் கர்ப் பப்பை தானாகவே சுருங்கிவிடும். ஆனால் விரிவடைந்த வயிற்றின் தசைப் பகுதிகளோ பழைய நிலை க்கு வர நாளாகும். இது தெரியாமல் என்னிடம் வரும் பலபெண்கள் 'டாக்டர்! என் வயிற் றைப் பார்த்தால் இன்னொரு பாப் பா உள்ளே இருக்கும் போலிரு க்கே…' என்று கேலியாக, சில சமயம் சந்தேகமாகக் கூடக் கேட்பதுண்டு. இப்படிப் பெருத்துப்போன வயிற்றை இயல்பான நிலைக்குக் கொண்டுவர, குழந்தை பிறந்ததுமே பெல்ட் போடவேண்டும் என்று பல வீடுகளில் இன்னும் கூட சொல்கிறார்கள். பெல்ட் போ ட்டால் இந்நிலை உடனே சரி யாகிவிடும் என்று நினைக்கி றார்கள். இது ரொம்பத் தவறு. ஏன் தெரியுமா?
குழந்தை பிறந்தவுடன் அது வரை விரிந்திருந்த வயிற்றுப் பகுதியின் தசைப்பகுதிகள் தளர்ந்து போயிருக்கும். பெல்ட் போடு வதால் ஏற்படும் இறுக்கத்தால் இந்தத் தசைகள் வலுவிழந்துதான் போகுமே ஒழிய அளவில் மாறுதல் ஏற் படாது. தளர்ந்துபோன வயிற்றுத் தசை கள் மேலும் தளர்ந்து போகாமல் இருக் க, சரியான அளவிலான பேண்டீ ஸ் (Panties) அணிந்தாலே போதும்.
அதனால், வயிற்றை அதன் இயல்புப்படி யே சுருங்கச் செய்வதுதான் சிறந்தது. இதற்கென்று PostNatal போன்ற சில எளிய பயிற்சிகள் உள்ளன.
நன்றி:- Dr . Jeyasiri Gayaraj – நன்றி:- முகநூல்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 5 ஆகஸ்ட், 2017

எது சிறந்த சட்டம்?

தனக்கு உரிமையுள்ளவை மட்டுமல்லாது அதற்கு மேலுள்ளவற்றையும் தனதாக்கிக் கொள்ளும் மனநிலையில் உள்ள ஒரு சமுதாயத்தில் நீதியை நிலைநாட்ட உபயோகப்படும் ஒரு கருவியாக சட்டம் உள்ளது. ஆனால் அந்தச் சட்டமே அநீதிக்குள்ளாக்கப்பட்டால்…? இதுதான் ஷரீஅத்தின் நிலை!
ஒருசில வர்க்கத்தினரிடம் ஷரீஅத் என்ற பெயரைச் சொல்லிப் பாருங்கள். அவர்களது முகங்களில் ஓர் இனம் புரியாத மாற்றம் வெளிப்படும். நீங்கள் அவர்களிடம் ஷரீஅத் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும் என்று கேட்டுப் பாருங்கள். நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். ஷரீஅத் பற்றி அவர்கள் இவ்வளவு குறைவாகத் தெரிந்து வைத்திருக்கிறார்களே என்று.


அன்றொரு நாள் நான் பி.பி.சி. வானொலியைத் திருப்பினேன். ஓர் அமெரிக்கப் பேட்டியாளர் நேயர்கள் சிலரிடம் பேட்டி கண்டு கொண்டிருந்தார்.
அவர் அப்பொழுது கூறியதாவது: நான் இஸ்லாம் அல்லது முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தும்பொழுது கூட்டத்தினரைப் பார்த்து ஒரு கெள்வி கேட்பேன். இஸ்லாம் அல்லது முஸ்லிம்கள் என்றவுடனேயே உங்கள் மனதில் என்ன எண்ண அலைகள் ஊற்றெடுக்கின்றன என்று கெட்பேன்.
உடனே அவர்கள் "பயங்கரவாதம்" என்று கூறுவார்கள்.
ஆனால் பயங்கரவாதத்திற்கும், இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. அப்பாவி மக்களைக் கொல்வதற்கும் அப்பாவி மக்களின் சொத்துகளைச் சூறையாடுவதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை.
இஸ்லாத்திற்கும், பயங்கரவதத்திற்கும் இந்தப் பிணைப்பை ஏற்படுத்தியது யார்? நீங்கள் அதை ஆராயப் போவீர்களானால் முதல் குற்றவளியாகவும், முக்கியக் குற்றவாளியாகவும் மேற்குலக ஊடகங்களைத்தான் காணுவீர்கள்.
இந்த மேற்குலக மீடியாவின் கருத்துகளைத்தான் அதிகமான முஸ்லிம் நாடுகளும் எதிரொலிக்கின்றன. இந்த முஸ்லிம் நாடுகளில் இந்தத் தவறான கருத்துகளைப் பரப்புவது  யார்? இஸ்லாமியப் பெயர்களை வைத்துள்ள சில அறிவுஜீவிகள்தான் இந்தக் கைங்கர்யத்தைச் செய்கின்றனர்.
இதுதான் ஷரீஅத்திற்கும் ஏற்பட்ட நிலைமை. சில வரங்களுக்கு முன்பு பி.பி.சி. வானொலியின் ஆய்வாளர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ஷரீஅத் சட்டங்கள் குறித்த ஒரு கலந்துரையாடல் நடைபெறவிருக்கிறதாம். அதில் நான் கலந்து கொள்ள முடியுமா என்று கெட்டார்.
நான் எனது சம்மதத்தைத் தெரிவித்தேன். அதன் பிறகு அவர் என்னுடன் அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார். ஷரீஅத் சட்டங்கள் குறித்து அந்த உரையாடல் நீண்டது.
இஸ்லாமியச் சட்டங்கள் குறித்து பொதுவாக மக்களின் மனங்களில் உள்ள குறுகிய எண்ணங்களையும், இஸ்லாமியச் சட்டங்களுக்கும், இவர்களுக்கும் இடையிலுள்ள நீண்ட இடைவெளியையும் நான் அவரிடம் சுட்டிக் காட்டினேன். அத்தோடு எங்கள் உரையாடல் நிறைவுற்றது.
இரண்டு நாள்கள் கழித்து மீண்டும் அவரிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. நான் எதிர்பார்த்தது மாதிரியே நீங்கள் அந்தக் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட மாட்டீர்கள் என்று அவர் என்னிடம் சொன்னார்.
அந்த நிகழ்ச்சியின் பொறுப்புதாரிகள் நான் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை விரும்பவில்லையாம். அதாவது, அல்லாஹ் வகுத்து வழங்கிய குறைவில்லா ஷரீஅத் சட்டங்களைப் பற்றி மக்கள் வைத்துள்ள தவறான கருத்துகள் அப்படியே நிலைத்திருக்க வெண்டும். அது கலைந்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் எவ்வளவு குறியாக இருக்கிறார்கள் பார்த்தீர்களா?
ஷரீஅத் சட்டம் என்றால் என்ன? இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் ஷரீஅத் என்ற பதத்திற்கு இஸ்லாம் என்றே பொருள் கொள்ளபபடும். ஆனால் மேற்குலக ஊடகங்களின் எழுத்தாளர்களையும் முஸ்லிம் நாடுகளிலுள்ள சில அறிவுஜீவிகளையும் அழைத்து ஷரீஅத் பற்றி நீங்கள் என்ன புரிந்து வைத்திருக்கின்றீர்கள் என்று கேட்டால் உடனே அவர்களிடமிருந்து ஒரு பதில் வரும் – அது கடுமையான குற்றவியல் சட்டங்களைக் கொண்டது, அது நாகரிகமடைந்த மனித சமூகத்திற்கு ஒத்து வராதது.
ஆனால் இஸ்லாத்தின் குற்றவியல் சட்டங்கள் அடக்குமுறைக்கு மிகத் தூரமனது. இஸ்லாத்தில் சில குற்றங்களுக்குத்தான் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. அதாவது, 7 குற்றங்களுக்கு என்று சில அறிஞர்களும், 4 குற்றங்களுக்கு என்று சில அறிஞர்களும் கூறுகிறார்கள்.
ஆனால் இந்தக் குற்றங்களுக்கும் தண்டனை வழங்க வேண்டுமானால் உறுதியான ஆதாரங்கள் வேண்டும். தகுந்த சாட்சிகள் வைத்து அக்குற்றத்தை நிரூபிக்க வேண்டும். இஸ்லாமியச் சட்டங்களைக் குறை கூறுவோர் இது பற்றி மிகக் குறைவாகவே அறிந்து வைத்துள்ளனர். அதிகமனோர் ஒன்றும் அறியாதவர்களாகவே உள்ளனர்.
உண்மையில் முஸ்லிம் உலகில் உள்ள சில அறிவுஜீவிகளுக்கு இஸ்லாமியச் சட்டங்கள் குறித்து உண்மை வடிவம் நன்றாகவே தெரியும். அவர்களிடம் இஸ்லாமியச் சட்டங்கள் பற்றிக் கேட்டால் உடனே அவர்கள் இந்தக் கடுமையான தண்டனைகளின் நன்மைகளைப் பற்றியே வாக்குவாதம் செய்வார்கள்.
இஸ்லாம் கடுமையான தண்டனைகளைப் பற்றி மட்டும்தான் சொல்வது போல ஒரு பிரமையை ஏற்படுத்துவார்கள். மாறாக, இஸ்லாம் தனிப்பட்ட, குடும்ப, சிவில், சர்வதேசச் சட்டங்கள் எனத் தொடாத பகுதிகளே இல்லை.
இந்தச் சட்டம் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தது. மனித வாழ்வின் அனைத்து அம்சங்களையும் அரவணைத்துச் செல்லும் நெகிழ்வுத் தன்மையை அது கொண்டுள்ளது. தனிப்பட்ட முறையில் இஸ்லாமியச் சட்டங்கள் ஒவ்வொரு தனி மனிதரின் உரிமைகளுக்கும் சுதந்திரத்திற்கும் உத்தரவாதம் அளிக்கிறது.
அதேபோல் ஆண்கள், பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் என்று அனைவருக்கும் அவரவருக்குரிய சுதந்திரத்திற்கும் உத்தரவாதம் அளிக்கிறது.
மிக முக்கியமாக சமூகத்தில் பலஹீனர்கள் என்று கருதப்படுபவர்களை அது மிகக் கவனமாகப் பாதுகாக்கிறது. அந்த வகையில் பெண்களும், சிறுவர்களும் இந்தச் சலுகைகளைப் பெறுகின்றனர். ஓர் இஸ்லாமிய அரசு பெண்களினதும், சிறுவர்களதும் உரிமைகளைப் பாதுகாக்க வெண்டும். இஸ்லாமியச் சட்டங்களை ஒழுங்காக அமுல்படுத்தாத சமூகங்களில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? பெண்கள் புண்படுத்தப்படுகிறார்கள். அவர்களது உழைப்பு சுரண்டப்படுகிறது. இன்று வரை இது நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
இஸ்லாமியச் சட்டத்தில் ஆண்களுக்கு நிகரான சமூக அந்தஸ்து பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப் போனால், நிறைய விஷயங்களில் ஆண்களை விட அதிகமான பலன்கள் பெண்களுக்குத்தான் கிடைக்கின்றன.
வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம், ஆரோக்கியம், சுயசார்பு நம்பிக்கை, அதனை வெளிப்படுத்துதல் ஆகிய உரிமைகள், வேலை செய்வதற்கான உரிமை, தனக்குச் சொந்தமானவற்றைத் தனதாக்கிக் கொள்ளும் உரிமை ஆகிய அனைத்து அடிப்படை மனித உரிமைகளும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அங்கே வழங்கப்படுகின்றன.
குடும்பவியல் சட்டத்தை எடுத்துக் கொள்வோம். அல்லாஹ் வாரிசு சட்டத்தை அழகாக வகுத்து வழங்கியுள்ளான். இதனால் வாரிசுதாரர்கள் அனைவருக்கும் நியாயமான பங்கீடு கிடைக்கிறது. இதில் ஏற்படும் அனைத்து சிக்கல்களையும் அது தீர்த்து வைக்கிறது.
அவமரியாதை, ஒருபக்கச் சார்பு, அநீதி ஆகியவை இஸ்லாமியச் சட்டத்தில் கிடையாது. திருமண உறவுகளை எடுத்துக் கொள்வோம். கணவன், மனைவி ஆகிய இரு பாலருக்கும் இஸ்லாம் கொடுக்கும் நியாயமான சட்டப்பூர்வமான உரிமைகள், இஸ்லாமிய மதிப்பீடுகள் வேறு எந்தச் சமூகத்திலும் நாம் காணக் கிடைக்காதவை.
அது இருவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறது. அவர்களின் குழந்தைகள் நல்ல முறையில் வளர்வதற்குண்டான ஆரோக்கியமான சூழலை அது வழங்குகிறது. இஸ்லாமியச் சட்டங்களை அமுல்படுத்துவதற்கு அரசு சிறு முயற்சி எடுத்தால் போதும். இது இஸ்லாமியச் சட்டத்தின் சிறப்பம்சமாகும்.
மனிதக் கரங்களால் உருவாக்கப்பட்ட சட்டங்களில் அதனை அமுல்படுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. காவல்துறையினரின் உதவியில்லாமல் அதனை அமுலாக்குவது சாத்தியமில்லாத ஒன்று. இஸ்லாமியச் சட்டங்களை அமுல்படுத்தும்போது இத்தனைக் கெடுபிடிகள் தேவையில்லை.
இஸ்லாமியச் சட்டங்கள் நிலைநாட்டப்படாத ஒரு சமூகத்தில் கூட குடும்பவியல் சட்டங்களில் முஸ்லிம்கள் நியாயமாக நடந்து கொள்கிறார்கள். வாரிசுதாரர்களுக்குப் பங்கீடு செய்யும்பொழுது எல்லோருக்கும் அவரவருக்குரிய பங்கு தங்கு தடையின்றி கிடைக்கின்றது.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இஸ்லாமியச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறை இப்படித்தான் இருந்தது. அவர்கள் எப்பொழுதும் மக்களை அழைத்து இதன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்றுதான் சொல்வார்கள்.
இந்தச் சட்டத்தை அமுல்படுத்துங்கள் என்று அவர்கள் ஒருபோதும் கூறியதில்லை. அசைக்க முடியாத நம்பிக்கை வந்து விட்டால் மக்கள் தானாகவே அதனை அமுல்படுத்துவார்கள். யாரும் நிர்ப்பந்திக்கத் தேவையில்லை.
அனைத்தையும் அறிந்த அறிவாளன் அல்லாஹ் மக்களை விசுவாசம் கொள்ளவே அழைக்கின்றான். ஏனெனில் அந்த நம்பிக்கை அவர்களின் இதயங்களில் நிறுவப்பட்டு விட்டால் சட்டங்களை அமுல்படுத்துதல் என்பது இயல்பாகவே வந்து விடும்.
இன்று இஸ்லாமிய சமூகங்கள் இஸ்லாமியச் சட்டத்தின்பால் திரும்புகின்றன. எப்பொழுதோ கைவிட்டிருந்த அதனைத் திரும்ப எடுத்து ஆரத் தழுவிக் கொள்கின்றனர். இது ஏன் என்று மேற்குலகம் வியந்து  தன்னையே கேட்டுக் கொள்கிறது. இந்தக் கேள்விக்கு விடை மிக எளிது – அவர்கள் காலனியாதிக்கவாதிகள்.
பாராளுமன்றங்கள், சர்வாதிகாரிகள் இயற்றிய சட்டங்களை அமுல்படுத்திப் பார்த்து விட்டார்கள். இதில் யார் இயற்றிய சட்டமும் இஸ்லாமியச் சட்டம் வழங்கும் நீதிக்குப் பக்கத்தில் கூட வர முடியாததை அவர்கள் தெரிந்து கொண்டார்கள். ஏன், அவர்கள் தோற்றுப் போய்விட்ட இந்தச் சட்டங்களையெல்லாம் விட மிகச் சிறந்த வெற்றியாளனான அல்லாஹ்வின் பால் திரும்பக் கூடாது? அதைத்தான் இன்றைய முஸ்லிம்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
ஆதில் ஸலாஹி
தமிழில் : MSAH – விடியல் வெள்ளி, செப்டம்பர் 2001


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 3 ஆகஸ்ட், 2017

இரவு நேரத்துக்கு ஏற்ற எளிய உணவு

   "காலையில் ராஜாவைப் போல் சாப்பிடு, மதியம் சேவகனைப் போல் சாப்பிடு, இரவில் பிச்சைக்காரனைப் போல் சாப்பிடு" என ஒரு பழமொழி உண்டு. காலையில் எல்லா சத்துக்களும் நிரம்பிய தானியங்கள், பழங்கள், காய்கறிகள் கலந்த உணவை சாப்பிட வேண்டும். மதியம் நிறைய காய்கறிகள் கொஞ்சம் சோறு, இரவில் எளிதில் ஜீரணமாகக்கூடிய, எளிதான உணவை மிகக் குறைவாக சாப்பிட வேண்டும் என்பதே இதன் அர்த்தம். மாறாக நாம் காலையில் சாப்பிடாமல், ஒரு நாளை ஆரம்பிக்கிறோம். இரவில் கொழுப்புச்சத்து நிரம்பிய வறுத்த, பொரித்த உணவுகளை அதிக அளவில் உண்டு விடுகிறோம். பிரியாணி, ஃப்ரைடு ரைஸ், பரோட்டா தான் இன்றைக்கு பெரும்பாலானோரின் இரவு உணவு. எடை அதிகரிப்பதற்கும், நோய்கள் உள்ளே வருவதற்கும் முக்கியக் காரணமே இந்த உணவுமுறைதான்.
ஆரோக்கியமான, எளிதான உணவை இரவில் எடுத்துக்கொள்வதன் மூலம், பல்வேறு நோய்களில் இருந்து காக்க முடியும். அப்படியான உணவு வகைகள் சிலவற்றை டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி சொல்லித்தர, அவற்றை செய்து காட்டியிருக்கிறார் சமையல் கலை நிபுணர் பத்மா.


என்ன சாப்பிட வேண்டும்?
உப்புமா, சுக்கா ரொட்டி, சப்பாத்தி, இட்லி, இடியாப்பம், தோசை, சாலட் என வயிற்றுக்குப் பங்கம் விளைவிக்காத, மிதமான உணவைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடலாம். கூடவே பருப்பு சாம்பார், கொத்தமல்லி, தேங்காய், புதினாவில் செய்த சட்னி வகைகளைச் சிறிதளவு சாப்பிடும்போது, நல்ல ஜீரண சக்தி கிடைக்கும்.
எவற்றைச் சாப்பிடக்கூடாது?
நூடுல்ஸ், பரோட்டா, அசைவ உணவுகள், வறுத்த பொரித்த உணவுகள், மசாலா உணவுகள், ஜங்க் ஃபுட், கூல் டிரிங்ஸ் இவற்றைத் தவிர்க்கவேண்டும். மசாலா உணவுகள் அசிடிட்டியை ஏற்படுத்தும். அசைவம், பரோட்டா உணவுகள் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
எப்படிச் சாப்பிடுவது?
இரவு 7  8 மணிக்குள் சாப்பிட்டு விடவேண்டும். லேட் நைட்டில் சாப்பிடுவதால் காலையில், மலச்சிக்கல் பிரச்னை வரலாம். காலையில் பசி எடுக்காது. இரவு உணவை அதிகமாகவோ குறைவாகவோ எடுத்துக்கொள்ளக் கூடாது. தூங்கச் செல்கையில், அரை வயிறாகத்தான் இருக்க வேண்டும். அப்படியே பசித்தாலும், ஒரு டம்ளர் பாலுடன் ஏதேனும் ஒரு பழம் சாப்பிடலாம்.
சப்பாத்தி  தால்
சப்பாத்திக்குத் தேவையானவை: கோதுமை மாவு  200 கிராம், வெண்ணெய்  ஒரு டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவுடன் வெண்ணெய், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திகளாக இட்டு, தோசைக் கல்லில் போட்டு மிதமான வெப்பத்தில் சுட்டு எடுக்கவும். வெண்ணெய்க்குப் பதிலாக மிதமான சூட்டில் இருக்கும் பால் அல்லது தண்ணீர் சேர்த்துப் பிசையலாம். இதனால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.
தேவையானவை: பாசிப்பருப்பு  100 கிராம், இஞ்சி  ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய், தக்காளிப்பழம்  தலா 1, எண்ணெய்  ஒரு டீஸ்பூன். கடுகு  ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி  சிறிதளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, ஒரு டீஸ்பூன் கடுகு போட்டுத் தாளித்து, துருவிய இஞ்சி, நறுக்கிய பச்சைமிளகாய், நறுக்கிய ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு, வேகவைத்த பருப்பு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கலக்கவும்.
ஜவ்வரிசி உப்புமா  வெங்காயச் சட்னி
தேவையானவை: ஜவ்வரிசி  100 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட் துருவல், வறுத்த வேர்க்கடலை  தலா ஒரு கப், பச்சைமிளகாய்  1, துருவிய இஞ்சி  ஒரு டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு, பொட்டுக்கடலை  2 டீஸ்பூன், கொத்தமல்லி  சிறிதளவு, விருப்பப்பட்டால் நெய்  1 டீஸ்பூன், எலுமிச்சம்பழம்  அரை மூடி.
செய்முறை: ஜவ்வரிசியை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, ஒரு மணி நேரம் ஊறவிடவும். கடாயில் நெய் விட்டு, கடுகு, பச்சைமிளகாய் நறுக்கிப் போட்டு வெங்காயம், பொட்டுக்கடலை, இஞ்சி, கேரட் துருவல், வேர்க்கடலை எல்லாவற்றையும் சேர்த்து, ஊறிய ஜவ்வரிசியையும் சேர்த்துக் கிளறவும். உப்பு சேர்த்துக் கிளறி ஜவ்வரிசி வெந்ததும் நறுக்கிய கொத்துமல்லி எலுமிச்சம் பழச்சாறு கலந்து நன்றாகக் கிளறி இறக்கவும்.
வெங்காயச் சட்னி: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு 10 சின்ன வெங்காயத்தைத் தோல் உரித்துச் சேர்த்து வதக்கவும். 2 காய்ந்த மிளகாய், 2 டீஸ்பூன் கடலைப்பருப்பு சேர்த்து வறுத்து, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கடுகு தாளித்து நன்றாகக் கலக்கவும்.
அவல் தோசை  தேங்காய் சட்னி
தேவையானவை: அவல்  200 கிராம், அரிசி  100 கிராம், உப்பு  தேவையான அளவு, கடுகு, இஞ்சி துருவல்  சிறிது, மிளகாய்  1.
செய்முறை: அவல், அரிசியை ஒரு மணி நேரம் தனித்தனியே ஊறவைத்து, ஒன்றாகச் சேர்த்து நைஸாக அரைக்கவும். மாவுடன் உப்பு சேர்த்து கடுகு, மிளகாய், இஞ்சி போட்டுத் தாளித்துக் கொட்டி கலக்கவும். தோசைக்கல்லில் மாவை ஊற்றி, மிதமான வெப்பத்தில் தோசைகளைச் சுட்டெடுக்கவும்.
தேங்காய் சட்னி: ஒரு கப் தேங்காய்த் துருவலுடன், 1 பச்சை மிளகாய், 4 டீஸ்பூன் பொட்டுக்கடலை, உப்பு சேர்த்துத் தண்ணீர் விட்டு அரைக்கவும். அவல் தோசைக்கு அருமையான சைடுடிஷ்.
இடியாப்பம்  சொதி
தேவையானவை: இட்லி அரிசி  கால் கிலோ, எண்ணெய்  ஒரு ஸ்பூன், உப்பு  தேவையான அளவு.
செய்முறை: அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்துக் களைந்து, சிறிது தண்ணீர் விட்டு, கிரைண்டரில் நைஸாக அரைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு மாவை, தோசைமாவுப் பதத்தில் கரைத்து உப்பு சேர்த்து மிதமான வெப்பத்தில் அடுப்பில் வைத்து கெட்டியாகக் கிளறவும். ஆறியதும் நீளவாக்கில் மாவை நன்றாகப் பிசைந்து உருட்டிவைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் (உருண்டைகள் மூழ்கும் அளவுக்கு) விட்டு நன்றாகக் கொதிக்கவிடவும். உருண்டைகளைப் போட்டு நன்றாக வெந்ததும், இடியாப்ப அச்சில் ஒவ்வொன்றாகப் போட்டுப் பிழிந்துகொள்ளவும்.
சொதி: 6 பீன்ஸ், 1 கேரட், 1 குடமிளகாய் மூன்றையும் நீளவாக்கில் நறுக்கி, சிறிது எண்ணெய் விட்டு வதக்கி, உப்பு சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்ததும் 100 மி.லி தேங்காய்ப்பால் சேர்க்கவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து இறக்கவும்.
குழிப்பணியாரம்  சட்னி
தேவையானவை: இட்லி அரிசி  200 கிராம், வெந்தயம்  2 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு  4 டீஸ்பூன், தேங்காய்ப்பால்  100 மி.லி, கேரட் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம்  தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி  ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய்  1, கடுகு  ஒரு ஸ்பூன், எண்ணெய், உப்பு  தேவையான அளவு.
செய்முறை: இட்லி அரிசியுடன் வெந்தயம், உளுத்தம் பருப்பு சேர்த்து, இரண்டு மணிநேரம் ஊறவைத்துக் களைந்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து, தேவையான
உப்பு சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கேரட், வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி மாவுடன் கலந்து, தேங்காய்ப் பால் விடவும். பணியாரக் கல்லில் ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் விட்டு மாவை ஊற்றிப் பொன்னிறமாக  இருபுறமும் திருப்பி வேகவிடவும். புதினா, தேங்காய், வெங்காயம், கொத்தமல்லி என இதற்குத் தொட்டுக்கொள்ள எல்லா வகைச் சட்னியும் அருமையாக இருக்கும்.
கேழ்வரகு தோசை  சட்னி
தேவையானவை: கேழ்வரகு மாவு  200 கிராம், கடுகு, சீரகம்  தலா ஒரு டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு, பெருங்காயத்தூள்  சிறிதளவு, எண்ணெய்  100 மி.லி
செய்முறை: கேழ்வரகு மாவுடன் உப்பு, சீரகம், பெருங்காயத்தூள்,கடுகு  சேர்த்துத் தாளித்து, தோசைமாவுப் பதத்தில் கரைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மிதமான வெப்பத்தில் தோசை மாவைப் பரவலாக ஊற்றி இருபுறமும் எண்ணெய்விட்டு வெந்ததும் எடுக்கவும். இதற்குத் தொட்டுக்கொள்ள, தேங்காய் சட்னி அருமையாக இருக்கும்.
ஆலு சப்பாத்தி கொத்தமல்லி சட்னி
தேவையானவை: கோதுமை மாவு  200 கிராம், வெண்ணெய்  2 டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு, சிறிய உருளைக்கிழங்கு  3, மிளகாய்த்தூள்  ஒரு டீஸ்பூன்.
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவிட்டு தோல் உரித்து நன்றாக மசிக்கவும். இதில், கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு, வெண்ணெய், மிளகாய்த்தூள் சேர்த்துத் தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். இதைச் சப்பாத்திகளாக இட்டு, தோசைக் கல்லில் போட்டு சுட்டெடுக்கவும்.
கொத்தமல்லி சட்னி: கொத்தமல்லி, பச்சைமிளகாய், உப்பு மூன்றையும் சேர்த்து அரைத்து, கடுகு தாளித்துக் கலக்கவும்.
நன்றி-விகடன்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

நேரத்தை சரியாக நிர்வகிக்க சுலபமான 10 டிப்ஸ்!

கணேஷும் ராஜனும் கல்லூரி காலத்தில் நெருங்கிய நண்பர்கள். ஆனால், படித்து முடித்தபிறகு இருவரும் இருவேறு பாதையில் சென்றுவிட்டார்கள். தினப்படி வேலைகளில் இருவருமே பிஸியாக இருக்க, பத்து ஆண்டு காலம் ஓடிவிட்டது. சமீபத்தில் ஃபேஸ்புக்கில் மீண்டும் இருவரும் இணைய, சென்னையில் ஒரு ஹோட்டலில் சந்திக்க முடிவு செய்தார்கள். கணேஷ் தன்னுடைய பைக்கில் போய் ஹோட்டலில் இறங்கினான். ராஜன் தன்னுடைய புதிய காரில் ஹோட்டலுக்கு வந்தான். கார் மட்டுமல்ல, அவன் வாங்கியிருந்த வீடு, அவன் அணிந்திருந்த ஆடை, சேர்த்திருந்த சொத்து என எல்லாமே கணேஷைவிட மிக மிக அதிக மதிப்புடையவையாக இருந்தது. இத்தனைக்கும் படிப்பு விஷயத்தில் கணேஷைவிட ராஜன் பெரிய புத்திசாலியல்ல. பிறகு எப்படி ராஜன் இந்த அளவுக்கு முன்னேறினான்?



அடுத்தடுத்த சந்திப்பில் ராஜனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டான் கணேஷ். ''பெரிய அற்புதம் எதையும் நான் செய்துவிடவில்லை. நேரத்தை சரியாகப் பயன்படுத்திக்கொண்டது தான். நம் எல்லோருக்கும் ஒருநாளில்  கிடைக்கும் 24 மணி நேரமானது பொன் போன்றது. அதைக் கண்ணும் கருத்துமாக நிர்வகித்து, ஒரு மணித் துளியைக்கூட வீணாக்காமல், நமது வேலைகளைத் திறனோடு முடித்தால், நம் வாழ்க்கையில் நாம் வெற்றியடைவது நிச்சயம். வெற்றியாளர்களால் செய்ய முடிந்த விஷயத்தை; இன்னொருவரால் செய்ய முடிவதில்லை என்றால், அதற்கு மிக முக்கிய மூலகாரணம் வெற்றியாளர் களுக்கு நேரத்தைப் பயன்படுத்தும் வழிமுறைகள் தெரிந்திருப்பதே'' என்று சொன்னான்.
வீடு திரும்பும் வழியில் ராஜன் சொன்னதை நினைத்துப் பார்த்தான் கணேஷ். கல்லூரிப் படிப்பு  முடிந்ததும், நல்ல வேலையில் இருந்தாலும், அந்த வேலையை நன்றாகச் செய்து, உயர்பதவி களை அடைய வேண்டும் என்கிற லட்சியம் எதுவும் இல்லாமல், காதல், சினிமா, பீச் எனப் பலநாட்கள் அலைந்தது அவனுக்கு ஞாபகத்துக்கு வந்தது. நேரத்தைத் திட்டமிட்டுப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தான் கணேஷ். இந்த கணேஷைப்போல, நீங்களும் நேரத்தின் அருமையை உணர்ந்து வெற்றியுடன் செயல்பட 10 எளிமை யான டிப்ஸ்கள் இதோ உங்களுக்காக…
1 உங்களுடைய பொன்னான நேரம் எங்கு வீணாகச் செலவாகிறது என்பதைக் கண்டறிய உங்களின் ஒருவார கால நடவடிக்கைகள், எண்ணங்கள் மற்றும் உரையாடல்களைப் பதிவு செய்து ஆராயுங்கள். உதாரணத்துக்கு, தேவையில்லாமல் நீங்கள் பேசும் செல்போன் உரையாடல் கள், டிவி பார்ப்பதில் நேரம் கழித்தல், இணையத்தில் மிகுந்த நேரத்தைச் செலவிடுதல் ஆகியவைகளைக் கண்ட றிந்து அவைகளைத் தவிர்க்க முயற்சி எடுங்கள்.
2 வெற்றிக்கு முக்கியமான ஒவ்வொரு நடவடிக்கையும் உரையாடலும் சரியான கால அளவைப் பின்பற்றி இருப்பது மிக அவசியம். உங்கள் மிக முக்கியமான வேலைகளைத் தொடங்கும் நேரத்தையும்; முடியும் நேரத்தையும் அளவிட்டு, அதைக் கச்சிதமாக அமைத்துக்கொள்வது அவசியம். இதை மற்றவர்கள் விமர்சித்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் உங்கள் வேலையைக் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும் என்று திட்டம் போட்டுச் செயல்படுத்தினால், எந்த வேலையிலும் தோல்வி என்பது இருக்கவே இருக்காது.
3 உங்களை வாழ்க்கையில் முன்னேற்றும் எண்ணங்கள், நடவடிக்கைகள் மற்றும் உரையாடல் களுக்கு உங்களது 50 சதவிகித நேரத்தையாவது செலவிடுங்கள். தேவையற்ற வேலைகளில் கவனம் சிதறாமல் இருத்தல் மிகவும் நல்லது.
4 தினமும் அலுவலகத்துக்கு அரை மணி நேரம் முன்னதாக வந்து உங்களது அன்றைய பணிகளை முழுமையாகப் பட்டியலிடுங்கள். இதை ஒரு முக்கியமான முதல் பணியாக உங்களின் ஒவ்வொருநாள் தொடக்கத்திலும் மேற்கொள்ளுங்கள். அன்றாடப் பணிகளைப் பட்டியலிடும் போது முக்கியமான பணிகளை முதன்மைப்படுத்துதல் அவசியம்.
5 வேலையையும் வாழ்க்கையையும் சமன்படுத்திக்கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். தினமும் எழும் நேரம் மற்றும் தூங்கச் செல்லும் நேரம் இரண்டையும் சரியாக வகைப்படுத்திக்கொள்ள வேண்டும். ஏழு முதல் எட்டு மணி நேர தூக்கமும், தினசரி உடற்பயிற்சியும் புத்துணர்ச்சியுடன் நாம் வேலையில் ஈடுபட இன்றியமையாததாகும்.
6 மிகவும் முக்கியமான வேலைகளில் கவனம் செலுத்தும்போது, மற்றவர்கள் உங்களைத் தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதுமாதிரியான சமயங்களில் 'do not disturb' என்று உங்கள் அறை அல்லது மேஜையின் மீது எழுதிவைத்துவிட்டு, வேலை பார்க்கலாம். அப்படி செய்யும்போது மற்றவர்கள் நீங்கள் செய்யும் வேலை யின் முக்கியத்துவத்தைச் சரியாகவே புரிந்துகொள்வார்கள்.
இதுமாதிரியான சமயங்களில் எந்தவித சமூக வலைதளங்களிலும் கவனம் சிதறாமல் இருத்தல் அவசியம். உங்களின் வேலைக்கு உதவுவதாக இருந்தால் மட்டுமே அத்தகைய வலைதளங்களை உபயோகிக்கலாம். தொலைபேசி / கைப்பேசி அழைப்பு களுக்கும் மெயில்களுக்கும் தனியாக நேரம் ஒதுக்குங்கள். உங்கள் வேலை நேரத்தில் வரும் அழைப்புகளையோ, மெயில்களையோ மிக முக்கியமான தாக இருந்தால் மட்டுமே பதிலளியுங் கள். அவற்றுக்குப் பிற்பாடு, அதாவது நீங்கள் ரிலாக்ஸ்டாக இருக்கும் நேரத்தில் பதில் அளித்துக்கொள்ளலாம்.
7 சிலர் காலை நேரங்களில் வேலைகளைச் சிறப்பாகச் செய்வார்கள்; இன்னும் சிலர் மாலை நேரங்களில் அதிகக் கவனம் செலுத்துவார்கள். அவரவருக்கு ஏற்றமாதிரி முக்கியத்துவம் வாய்ந்த வேலைகளை அந்தந்த நேரங்களில் செய்யலாம். கடிகாரத்துடன் போட்டிபோட்டு வேலை செய்வது நம்பிக்கையைக் கொடுக்கும். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை பத்து நிமிடமாவது இடைவேளை எடுத்துக்கொள்வது உடல்நலத்துக்கும் மனதுக்கும் மிக, மிக அவசியம். ஏனென்றால், உடலும் மனதும் தொடர்ச்சியாக உழைக்க ஒத்துழைக்காது. ஆனால், இடைவேளைவிட்டு முக்கியமான வேலைக்குத் திரும்பும்போது அதை மட்டும் செய்தால், கவனம் சிதறாமலும் தடம் மாறாமலும் வேலையைச் செய்துமுடிக்கலாம்.
8 எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக் கொண்டு செய்ய முடியாமல் திணறுவதைத் தவிர்க்க வேண்டும். நேரத்தை திறம்பட நிர்வகித்து வேலைகளைச் செய்து முடிக்க, தேவையில்லாத வேலைகளைப் பக்குவமாக நிராகரிக்கவும், சரியானவர்களிடம் ஒப்படைக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இது உங்கள் வேலையை நீங்கள் திறம்படச் செயல்படுத்தவும் மற்றவர்களின் வளர்ச்சியில் உங்கள் பங்களிப்பு இடம் பெறவும் உதவும்.
9  நீங்கள் பட்டியலிட்டுள்ள வேலைகளை ஒவ்வொன்றாக முடிக்கும்போது அதை 'டிக்' செய்து கொள்ளுங்கள். இது உங்களின் வேலைகளைச் சிறப்பாக விரைந்து முடிக்க ஊக்குவிக்கும். அது மட்டுமல்லாமல், இது நாம் தயாரித்து வைத்திருக்கும் வேலை முதன்மை பட்டியலை மாற்றியமைக்கவும், புது வேலைகளைச் சேர்க்கவும் உதவும்.
10 உங்கள் கணினியின் டெஸ்க்டாப்பிலும் சரி, நீங்கள் உபயோகிக்கும் பணி மேஜையானாலும் சரி, அதில் பராமரிக்கும் கோப்புகளை ஒழுங்குபடுத்தி வைப்பது நீங்கள் அவைகளைத் தேடும் நேரத்தை மிச்சமாக்கும். இதனால் மற்ற வேலைகளை விரைந்து முடிக்க முடியும். நமக்குக் கிடைக்கும் காலநேரத்தின் அருமையை உணர்ந்து நாம் செய்யும் வேலையைச் சிறப்பாகவும் துரிதமாகவும் சரியான நேரத்தில் செய்து முடித்து எல்லோரது பாராட்டுக்களைப் பெற்று முன்னேறுவதே இன்றைய புரஃபஷனல் வாழ்க்கைக்கு அவசியம்.
முடிவுகளை உங்கள் நிறுவனத்தின் நன்மைக் காகவும் உங்களின் வேலையின் தேவைக்காவும் சரியான நேரத்தில் எடுக்கத் தெரிந்திருப்பது உங்கள் முன்னேற்றத்துக்குத் தேவையான சூட்சுமம். நேரத்தை நிர்வகிக்கும் திறனை கற்றுக் கொண்டால், வெற்றி நிச்சயம்.
ந.பத்மலட்சுமி – ஹெச்ஆர் பிரிவின் மேலாளர் எம்சிஸ் டென்னாஜிஸ்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

நாம் தூங்கும் போர்வையை ஏன் மடித்து வைக்க வேண்டும் தெரியுமா?

நாம் தூங்கும் போர்வையை பல வேளைகளிலும் ஒழுங்காக மடித்து வைப்பதில்லை. ஆனால் மடித்து வைக்க வேண்டும் என்று நம் முதியோர்கள் கூறுவார்கள்...

Popular Posts