லேபிள்கள்

வெள்ளி, 10 ஏப்ரல், 2015

என்ன சேவைகளை இணையம் வழி பெறலாம்?

- மா.பாரி, முன்னாள் உதவிப் பொது மேலாளர், லஷ்மி விலாஸ் வங்கி

வங்கிகள் இணையதளம் வழி சேவைகளைத் தொடங்கி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன.
  வங்கிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தே இன்டர்நெட் மூலம் வங்கி மற்றும் நுகர்வோர் துறைகள் சார்ந்த பலவகைப் பரிமாற்றங்களைச் செய்ய இயலும். அனைத்து வங்கிகளும் இன்றைக்குப் பல்வேறு வகையான இணைய தளச் சேவைகளை அளிக்கின்றன.

ஆனாலும்கூட, டிராக்டர் வந்தாலும் உழுவதற்கு எருதுகளையே பயன்படுத்துவேன் என்று அடம் பிடிக்கும் விவசாயிகளைப் போல பல வாடிக்கையாளர்கள் அதிலும் குறிப்பாக நடுத்தர மற்றும் முதியவர்கள் சிறு தொகைக்கான பரிமாற்றங்களுக்கும் வங்கிக்குச் செல்வதற்கே விரும்புகிறார்கள். ஒருபுறம் வங்கிக்குச் செல்வதையே பழக்கமாக்கிக் கொண்ட மனம்.
  மற்றொருபுறம் அறிவியல் சார்ந்த புதிய உத்திகளைக் கையாளுவதில் உள்ள பயம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில விவரங்களும் பாதுகாப்புக் கவசங்களும் உங்கள் நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்தும்.

என்ன சேவைகளை இணையம் வழி பெறலாம்?

வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் இன்றைய இணையதளச் சேவைகளைப் பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை விவரம் பெறுவதற்கான சேவைகள் மற்றும் பணப் பரிமாற்றச் சேவைகள்.

 Ø    தனது கணக்கிலுள்ள இருப்புத் தொகைகள், வைப்பு நிதிகளின் முதிர்வு தேதிகள், கடன் கணக்குகளில் உள்ள நிலுவைத் தொகைகள், கணக்கு விவரங்கள் (Account Statement), காசோலைப் புத்தகம் பெறுவதற்கான விண்ணப்பம், காசோலைத் தடுப்பிற்கான விண்ணப்பம் (Cheque Stop Payment Request), பல்வேறு வங்கிச் சேவைகளுக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் போன்றவை முதல் வகைச் சேவையிலே அடங்கும்.
 Ø    தனது கணக்கிலிருந்து அதே வங்கியில் தான் அல்லது மற்றவர்கள் வைத்திருக்கும் கணக்கில் செலுத்துவதற்கான                                                                                                                              
பணப் பரிமாற்றம்; மற்ற வங்கிகளில் உள்ள கணக்குகளில் வரவு வைப்பதற்கான பரிமாற்றங்கள்; ரயில் முன்பதிவு, மின்வணிகம், தொலைபேசி, மின்கட்டணம், சொத்துவரி போன்றவற்றிற்கான தொகைகளைச் செலுத்துதல் போன்றவற்றிற்கு இன்டர்நெட் பேங்கிங் பேருதவியாக அமைகிறது.
  வங்கிக்குச் செல்ல வேண்டாம், எங்கும் வரிசையில் நிற்க வேண்டாம், பணத்தைப் பாதுகாக்க வேண்டாம். அனைத்துச் சேவைகளும் 24 மணி நேரமும் கிடைக்கும். (வங்கிகளுக்கிடையிலான பணப் பரிமாற்றத்திற்கு (NEFT அல்லது RTGS) மட்டும் குறிப்பிட்ட கால வரையறை உண்டு).
ரயில் முன்பதிவு, மின்வணிகம் மற்றும் நுகர்வோர் கட்டணங்களை ஏடிஎம் அட்டை மற்றும் கிரெடிட் கார்டு மூலமும் செலுத்த இயலும்


முதலாவதாக நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலே விண்ணப்பத்தைக் கொடுத்து
  இன்டர்நெட் பேங்கிங் வசதியைப் பெற வேண்டும்.  விண்ணப்பத்திலேயே மேற்கண்ட வசதி, விவரம் பெறுவதற்கு மட்டுமா அல்லது பணப்  பரிமாற்றத்திற்கும் தேவையா என்பதைக் குறிப்பிட வேண்டும். தங்கள் விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்டபின்னர் வங்கியானது அந்த வசதிக்கான கடவுச் சொல்லை (Pass Word) தங்கள் முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தங்களது வங்கிக் கிளையின் மூலமாகவோ அனுப்பி வைக்கும். குறிப்பிட்ட வங்கியின் இணைய தளத்தில் நுழைந்து வங்கியால் கொடுக்கப்பட்ட தங்கள் நுகர்வோர் அடையாளச் சொல்லையும் (User ID) மற்றும் கடவுச் சொல்லையும் உபயோகித்து தாங்கள் விண்ணப்பித்திருந்த சேவைகளைப் பெறலாம்.

பெரும்பாலானவர்கள் இன்டர்நெட் பேங்கிங் வசதியைச் சொந்தக் கம்ப்யூட்டர் மூலமே அணுகுகின்றார்கள். அதுவே நல்லதும் கூட. அதனோடு பி.எஸ்.என்.எல், டாடா, ஏர்டெல், ரிலையன்ஸ், வோடபோன் போன்ற இன்டர்நெட் சேவை தருவோரின் மூலம் பெறப்பட்ட இன்டர்நெட் வசதியும் (Internet Connection) தேவை.
 

பாதுகாப்பு அடுக்குகள்
இன்டர்நெட் சேவைக்கென உள்ள கடவுச் சொல்லைத் தவிர, பணப் பரிமாற்றத்திற்கெனத் தனியாக ஒரு கடவுச் சொல்லும் தரப்படும். பணப் பரிமாற்றத்திற்கு அந்தக் கடவுச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
  பரிமாற்றத்தின் போது பெரும்பாலான வங்கிகள் ஒருமுறைக் கடவுச் சொல்லாகக் (One time Pass Word) குறிப்பிட்ட எண்ணை முன்னரே பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளரின் அலைபேசிக்குக் குறுஞ்செய்தியாக அனுப்பும்.  பணப்பரிமாற்றத்திற்கு அந்தக் கடவுச் சொல்லும் பயன்படுத்தப்பட வேண்டும். இது ஒருவகையிலே வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள மூன்றடுக்குப் பாதுகாப்பாகும்.

இணையதளம் மூலமாகக் கோடிக்கணக்கான ரூபாய்கள் வங்கிக் கணக்குகளிலிருந்து திருடப்படுவதும், பொய்யான இணைய தளங்களை உருவாக்கிக் கணக்கு விவரங்கள் பெறப்படுவதும் பாதுகாப்பு அடுக்குகளை மேலும் மேலும் வலுப்படுத்துவதற்கான காரணங்களாக அமைகின்றன.

கடைப்பிடிக்க வேண்டிய எச்சரிக்கைகள்.

வங்கியிலிருந்து பெறப்பட்ட கடவுச் சொல்லை உபயோகித்து உடனடியாக வேறு கடவுச் சொல்லைத் தேர்ந்தெடுங்கள். புதிய கடவுச் சொல் எண், எழுத்து மற்றும் குறியீடுகளை உள்ளடக்கியதாக இருக்கட்டும்.
            (Ex.: LTvn#45a) அவ்வப்பொழுது கடவுச் சொல்லை மாற்றிக் கொள்ளுங்கள்.

குறிப்பிட்ட வங்கியின் இணையதளத்தில் நுழைவதற்குத் தங்களுக்கு வந்த மின்னஞ்சலை உபயோகித்தோ அல்லது தங்கள் செயல்பாடின்றித் தாமாகவே உதயமான இணையதளங்கள் வழியோ முயல வேண்டாம்.

வங்கியின் இணையதள முகவரியை நேரடியாக டைப் செய்தல் நலம். தங்கள் வங்கியின் இணைய தள முகவரி "https://" என்று துவங்க வேண்டும் ("http://" என்று அல்ல), முன்குறிப்பிட்ட முகவரித் துவக்கத்தில் உள்ள 's' இணையதளம் பாதுகாப்பானது (secured) என்பதைக் குறிப்பிடுகிறது. முகவரிப் பட்டை (Address Bar) பூட்டுக் குறியுடன் துவங்கிப் பச்சை நிறமாக மாறினால் குறிப்பிட்ட இணையதளம் பாதுகாப்புச் சான்று உடையது என்று பொருள்.

எந்த வங்கியும் இணைய தளம் அல்லது தொலைபேசி மூலமாக உங்கள் தனிப்பட்ட மற்றும் கணக்கு விவரங்களைக் கேட்பதில்லை. ஆகவே தங்கள் கணக்கு விவரங்களைப் புதுப்பிக்கச் சொல்லிக் கேட்கும் யாருக்கும் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் வழி பதில் கொடுக்க வேண்டாம். அத்தகைய மின்னஞ்சல்களின் இணைப்புகளையும் திறக்க வேண்டாம். தேவைப்பட்டால் குறிப்பிட்ட வங்கியின் கிளைக்கு நேரடியாகச் சென்று விவரங்கள் கேட்கலாம்.

இன்டர்நெட் சென்டர் மற்றும் நெட்ஒர்க் மூலம் இணைந்துள்ள கம்ப்யூட்டர்களை உபயோகப் படுத்திப் பணமாற்றம் செய்தல் தவிர்க்கப்பட வேண்டும்.
  கம்ப்யூட்டர் மூலம் தாங்கள் செய்த நடவடிக்கைகள் மற்றும் தாங்கள் தட்டச்சு செய்த எண்களையும் எழுத்துக்களையும் அப்படியே மீட்டெடுப்பதற்குச் சில மென்பொருள்கள் (Key Logger) உதவிபுரியும். ஆகவே பொது இடங்கள் மற்றும் அலுவலகங்களில் உள்ள நெட்வொர்க்கில் இணைக்கப்பட்ட  கம்ப்யூட்டர்கள் மூலம் பணமாற்றம் செய்தல் கூடாது.

அறிவியல் வழங்கிய கொடைகளான மின்சாரம், போக்குவரத்து வாகனங்கள் போன்றவற்றால் விபத்துக்களும் நிகழ்கின்றனதான். ஆனாலும் அவற்றின் உபயோகம் ஒவ்வொருநாளும் அதிகரிக்கின்றனவே. தக்க பாதுகாப்புக் கவசங்களும் முன்னெச்சரிக்கைகளும் இணைந்தால் இன்டர்நெட் பேங்கிங் வங்கிச் சேவையை லகுவாக்கித் தரும்.
  அது இன்றைக்கு மனிதனுக்குக் கிடைத்த சாபமல்ல வரம்தான் என்பதும் உணரப்படும்.


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

புதன், 8 ஏப்ரல், 2015

வானவர்கள் என்றால் யார் ?

வானவர்கள் என்றால் யார் ?

மலக்குகள் (الْمَلَائِكَةَ)வானவர்கள்'மலக்' என்றால் வானவர் என்பது பொருளாகும்.. இதன் பன்மை ' மலாயிக், மலாயிகா என்பதாகும்.'மலக்' என்ற சொல் குர்ஆனில் பதிமூன்று இடங்களிலும்'மலகைன்'இருமை யாக இருதடவைகளும், 'மலாயிகா' என்று பன்மையில் 73 தடவைகளும் பயன் படுத்தப் பட்டுள்ளன.
1.வானவர்கள் என்றால் யார் ?
மலக்குகள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள். அவர்கள் ஆண்களுமல்ல பெண்களுமல்ல. அவர்கள் எப்போதும் அல்லாஹ்வின் கட்டளைப்படியே நடப்பவர்கள். ஒருபோதும் அவனை மீறி நடக்கவோ மாறு செய்யவோ மாட்டார்கள். அவர்களுக்கு இடப்பட்ட கட்டளைகளை தவறாது செய்து முடிப்பார்கள்
வானவர்கள் ஒளியினாலும், ஜின்கள் நெருப்பினாலும், ஆதம் (என்னும் முதல் மனிதர்) உங்களுக்குக்கு விளக்கியவாறு (மண்ணினாலும்) படைக்கப்பட்டவர்கள்' என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) முஸ்லிம், அஹ்மத்:2996)
இவர்கள் ஆண்களுமல்ல! பெண்களுமல்ல! இவர்களுக்கு ஊண், உறக்கம் எதுவும் கிடையாது. இவர்கள் அல்லாஹ்வைத் துதித்துக் கொண்டும், வணங்கிக் கொண்டும் இருப்பார்கள்.
 لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ ஒருபோதும் அவனை மீறி நடக்கவோ மாறு செய்யவோ மாட்டார்கள். எப்போதும் அவன் கட்டளைப்படியே நடப்பவர்கள். (66:6) இவர்கள் இறைவனுக்கும் மனிதர்களுக்கு மிடையே தொடர்பு கொள்ளும் தூதர்களாவர்.
2.வானவர்கள் எப்போது படைக்கப்பட்டார்கள்?
அவர்கள் எப்போது படைக்கப்பட்டார்கள்? என்பது இறைவனைத்தவிர எவருக்கும் தெரியாது. குர்ஆனிலோ நபிமொழிகளிலோ இது பற்றிய எந்த தகவலும் இல்லை. அவர்கள் படைக்கப்பட்ட காலம் குறித்து சில நபிமொழிகள் காணப்படுகின்றன. அறிவிப்பாளர் தொடர் பலம் குன்றியதாலும் முன்பின் முரணான ஆதாரமற்ற செய்திகள் என்பதாலும் அவற்றை நாம் நம்பகரமான தகவலாக எடுத்துக் கொள்ள முடியாது. இருப்பினும் அவர்கள் 'மனிதன் படைக்கப்படுமுன் படைக்கப் பட்டவர்கள்' என்பதை 'பூமியில் என் பிரதிநிதியைப் படைக்கப்போகிறேன் என வானவர்களிடம் இறைவன் கூறிய போது' என வரும் 2.30-வது வசனத்தை ஆதாரமாகக் கொண்டு உறுதியாகக் கூறமுடியும்.
3.வானவர்களின்-எண்ணிக்கை. وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُو
அவர்களின் எண்ணிக்கையை அல்லாஹ்வைத்தவிர எவரும் அறியமாட்டார்கள். 'மேலும் உம்முடைய இறைவனின் (வானவர்கள் என்னும்) படைகளை அவனைத் தவிர எவரும் அறியமாட்டார்கள்' (அல்குர்ஆன் 74:30)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'மிஃராஜின் போது 'பைத்துல் மஃமூர்' (வானவர்கள்தொழுமிடம்) உயர்த்தப்பட்டபோது (இது எந்த இடம்?) எனஜிப்ரீலிடம் கேட்டேன்.இது 'பைத்துல் மஃமூர்' என்ற இடமாகும். இங்கு ஒவ்வொரு நாளும் 70,000 வானவர்கள் உள்ளே செல்வார்கள். சென்றவர்கள் மிண்டும் திரும்பி வருவதில்லை. (அறிவிப்பவர்: மாலிக் இப்னு ஸஃஸஆ, நூல்: புகாரி 3207, முஸ்லிம் 162.) மறுமைநாளில் நரகில் 70,000 கடிவாளங்கள் கட்டப்பட்டிருக்கும். அவற்றின் ஒவ்வொரு கடிவாளத்தையும் 70,000 வானவர்கள் இழுத்து வருவார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி), நூல்கள் : முஸ்லிம் 2842-29, திர்மிதி : 2573)
كُلٌّ آمَنَ بِاللّهِ وَمَلآئِكَتِه (سورة البقرة()இவர்களை நம்புவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.. இதற்கு ஆதாரமாக 'அல்லாஹ்வையும், வானவர்களையும்,நம்பிக்கை கொண்டோரும்'என வரும் அல்குர்ஆனின் 2:285 வசனமேயாகும்..
4.வானவர்களை மனிதர்கள் பார்க்க முடியுமா?
 நபிமார்கள் வானவர்களை நேரிலே பார்த்தும் பேசியுமுள்ளனர். நாயகத்தோழர்களும் 'திஹிய்யத்துப்னு கலீஃபத்துல் கல்பி' எனும் ஸஹாபியின் தோற்றத்தில் பார்த்துள்ளனர். இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.ஜிப்ரீல் (அலை) அவர்கள் திஹிய்யத்துல் கல்பி அவர்களின் உருவத்தில் வருவார்கள். (அதாரம்: அஹ்மத்)
மனித உருவத்தில் முன் வாழ்ந்த நபிமார்கள் பார்த்துள்ளனர் என்பதை குர்ஆன் தெளிவு படுத்துகிறது. இப்றாஹீம் (அலை) அவர்களிடம் வானவர்கள் மனித உருவத்தில் விருந்தினராக வந்தபோது லூத் நபியின் மக்களும் பார்த்தனர் என்ற செய்தியை 11.69 வசனம் கூறுகிறது.
நபிகள் நாயகத்தின் காலத்திற்குப்பிறகு எவரும் வானவர்களைப் பார்த்ததில்லை.இனி எவரும் பார்க்கவும் முடியாது. ஆயினும் மறுமையில் நிச்சயம் அவர்களைப் பார்க்க முடியும்.
5.நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலை நேரில் கண்டார்களா?
 முதல் தடவையாக நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலை (அலை) ஹிரா மலைக்குகையில் இயற்கையான தோற்றத்தில் கண்டார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) புகாரி:)
இரண்டாவது தடவையும் அவரது இயற்கைத் தோற்றத்தில் வானிற்கும் பூமிக்கும் இடையே ஒர் ஆசனத்தில் அமர்ந்திருக்கக்கண்டேன் என நபிகளார்(ஸல்) கூறியதாக ஜாபிர் (ரலி) தெரிவிக்கிறார்கள். (நூல்:புகாரி:4)
மூன்றாவது தடவையாக மிஃராஜின் போது கண்டார்கள் ஸித்ரத்துல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக்கண்டார். (53:13,13) அங்கே தான் சொர்க்கமெனும் தங்குமிடம் உள்ளது.(53:15)அந்த இலந்தை மரத்தை மூடவேண்டியது மூடியபோது அவரது பார்வை திசைமாறவில்லை. தாண்டவுமில்லை. (53:16,17) தமது இறைவனின் பெரும் சான்றுகளைக் கண்டார்.(53:18)தூய்மையான வெண்ணிற ஆடையில் ஒரு மனிதர் வந்தார் என அறிவிக்கும் நபி மொழி, 'நபி(ஸல்) அவர்களும்,நாயத்தோழர் களும் மனித உருவத்தில் கண்டதற்கான ஆதாரமாகும்.' (முஸ்லிம் 1-8) (நபி (ஸல்) அவர்கள் ஜப்ரீலை அசல் தோற்றத்தில் இரு தடவைகள் தான் பார்த்துள்ளதாகவும் முதலாவது தடவை பார்த்தது மனித உருவத்தில் என்றும் கூறுகின்றனர். இறைவனே அறிந்தவன்)
6.மனிதர்கள் வானவர்களாக முடியுமா ?
 மனிதர்கள் ஒருபோதும் வானவர்களாக முடியாது. ஆனால் வானவர்கள் விரும்பிய தோற்றத்தில் வரமுடியும்.
7.வானவர்கள் இறைவனின் பிள்ளைகளா ?
சில மதத்தவர் வானவர்களை இறைவனின் பிள்ளைகள் எனக்கூறுவதையும் இறைமறை மறுக்கிறது.
' உங்கள் இறைவன் உங்களுக்கு ஆண்மக்களை வழங்கிவிட்டு தனக்கு வானவர்களை பெண்மக்களாக ஆக்கிக் கொண்டானா? (17:40) என்ற வசனமும், அவன் பெறவுமில்லை. பெறப்படவுமில்லை என்ற 112:1-4 வசனமும் இதற்கு ஆதாரமாகும்.
 8.வானவர்கள் பெண்களா ? أَمْ خَلَقْنَا الْمَلَائِكَةَ إِنَاثًا وَهُمْ شَاهِدُون
வானவர்களை சிலர் தேவைதைகளாகவும் பெண்களாகவும்; சித்தரித்துக்கூறும் பொய்ச் செய்திகளையும் மறுத்து அவர்கள் பெண்களல்ல என இறைவனின் வசனங்கள் 43:19,37:150,53:27 தெளிவுபடுத்துகின்றன.
9.வானவர்களின் உருவத் தோற்றம்.
நான் வானவர் ஜிப்ரீலை அவரின் அசல் உருவத்தில் பார்த்தேன். அவருக்கு 600இறக்கைகள் இருந்தன என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்:அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது, ஆதாரம்: புகாரி,தப்ரானி). (அவன்) வானவர்களை இரண்டிரண்டு, மும்மூன்று, நன்னான்கு இறக்கைகள்; கொண்ட தூதர்களாக அனுப்புவான் (அல்குர்ஆன் 35:1)
'அதன் மேல் (நரகின் மீது)கடுமையும்,கொடுமையும் கொண்ட வானவர்கள் உள்ளனர். 66:6
 عَلَّمَهُ شَدِيدُ الْقُوَى ذُو مِرَّةٍ فَاسْتَوَى
அழகிய தோற்றமுடைய வலிமைமிக்கவர் (ஜிப்ரீல்) அதைக்கற்றுக் கொடுக்கிறார். (53:5,6). 'அழகிய தோற்றமுடையவர்' என 12:31 என்ற வசனமும் தெளிவு படுத்துகிறது. ذُو مِرَّةٍ 'தூ மிர்ரத்தின்' என்பதற்கு 'அழகிய தோற்றமுடையவர்,பெரும் வலிமை மிக்கவர்' என இப்னு அப்பாஸ் (ரலி) விளக்கமளிக்கிறார்கள்.
10.வானவர்களின் உணவு, பானம்நபி இப்றாஹீம் (அலை) அவர்களிடம் கண்ணியமிக்க விருந்தினர் வந்தபோது அவர்களுக்கு காளைக் கன்றை பொரித்து வைத்ததும் உண்ணாததைக் கண்ட நபியவர்கள் பயந்துவிட்டார்கள். பயப்படாதீர்கள். நாங்கள் உங்களுக்கு நற்செய்தி கூறிவிட்டுச் செல்ல வந்த வானவர்கள்' என்ற செய்தி 51:26,27 வசனங்கள் எடுத்துரைக்கின்றன. இதிலிருந்து மனதர்களின் உணவை உண்ணவோ,அருந்தவோ மாட்டார்கள் எனத் தெரியவருகிறது.
11.வானவர்கள்-வெட்கப்படுவார்கள்.
ஒருமுறை அபூபக்கர் (ரலி) ,உமர் (ரலி) நபிகளாரிடம் வந்தபோது, நபி(ஸல்)தமது ஆடைகளைச் சரி செய்யாத போது, உத்மான் (ரலி) வந்ததும் தமது ஆடையைச் சரிசெய்தார்கள். காரணம் வினவியபோது நபி (ஸல்) கூறினார்கள். 'வானவர்கள் எவர் விசயத்தில் வெட்கப்படுகிறார்களோ அவர் விசயத்தில் நானும் வெட்கப்படுகிறேன்' என்றார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல் :முஸ்லிம்:2401)
12.வானவர்கள்-வேதனை-அடைகிறார்கள்
இறைவனின் நேசத்திற்குரியவரே மலக்குகளின் நேசத்திற்கும் உரியவர். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'வெங்காயம், பூண்டு (போன்றவற்றை) உண்டுவிட்டு நமது பள்ளிவாசல் பக்கம் வரவேண்டாம். நிச்சயமாக ஆதமின் மக்கள் வேதனை அடையும் (துர்வாடை வீசும்) பொருட்களி லிருந்து வானவர்களும் வேதனை அடைகிறார்கள்.' (அறிவிப்பவர்:ஜாபிர்இப்னுஅப்துல்லாஹ்,நூல் முஸ்லிம்-1655) -
13.இறைவனின் விருப்பமே வானவர் விருப்பம்
இறைவன் நேசிப்பவர்களை வானவர்களும் அவரவர் அமலுக்கேற்பவும், தகுதிக்கேற்பவும் நேசிப்பார்கள்.
'உயர்வும், மாண்பும் மிக்க அல்லாஹ், ஒரு அடியாரை நேசிக்கும் போது வானவர் ஜிப்ரீலை அழைத்து 'நான் இன்னாரை நேசிக்கிறேன். நீங்களும் அவரை நேசியுங்கள் எனக் கூறுவான்.அவ்வாறே ஜிப்ரீலும் அவரை நேசிப்பார்.பின்னர் 'வானுலகில் அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். நீங்களும் அவரை நேசியுங்கள' என அவரும் அழைத்துக் கூறுவார். அவ்வாறே விண்ணகத்தாரும் அவரை நேசிப்பார்கள். (அதன்படி மண்ணகத்தாருக்கு மத்தியில் அவருக்கு அங்கீகாரம் வழங்கப்படும். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புகாரி: 7485)
14. வானவர்கள் இறைவனை மிகவும் அஞ்சுவர்.
தமக்கு மேலேயிருக்கும் தமது இறைவனை மிகவும் அஞ்வார்கள். கட்டiயிடப்பட்டதைச் செய்வார்கள் ( 16:50)
15. முற்;றிலும் அவனுக்கு வழிப்படுவர்.
அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப்பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள் (21:26,27) தமது இறைவனை போற்றிப்புகழ்ந்த வண்ணமிருப்பார்கள் (39:75)
16. இறையில்லம், இறைமறை ஓதுமிடங்களில் வானவர்கள்.
உங்களில் உருவர் தொழுகையில் ஆமீன் கூறும்போது வானவர்களும்; ஆமீன் கூறுகின்றனர். எவரது ஆமீன் வானவர்களின் ஆமீனுக்கேற்ப உள்ளதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.(அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) நூல்: இப்னு மாஜா-851).
நாயகத் தோழர் உஸைத் இப்னு குளைர் குர்ஆன் ஓதும் போது ஒளிஉருவில் வானவர்கள் வந்து கேட்டுக் கொண்டிருந்தனர். (புகாரி 5018-ஹதீஸின் சுருக்கம்)
17. நல்லவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவர்.
(வானவர்கள்) நல்லவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவார்கள் (42:5)
18. தீயவர்களை சபிப்பர் (லஃனத்துல்லாஹி வல்மலாயிக்கத்தி)
வானவர்கள் இறைவனுக்கு மாறுசெய்பவர்களுக்கு எதிராக சாபமிடுவார்கள்.
ஏக இறைவனை மறுத்து,அதே நிலையில் இறந்தோர் மீது இறைவனின் சாபமும், வானவர்கள் நல்லோர்கள் அனைவரின் சாபமும் உள்ளது (2:161)
19. உருவமுள்ள வீட்டில் நுழையார்.
நாயும்,உருவப்படமும் இருக்கும் வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள். (புகாரி-3225,முஸ்லிம்-2112,திர்மிதி-2804, நஸய5347, இப்னுமாஜா3649,
20. வானவர்களின் பணிகள்
தூதுவச்செய்தியை அறிவிப்பது,மழைபொழிவிப்பது,காற்றை வீசச்செய்வது, கண்காணிப்பது, காப்பாற்றுவது,நன்மை தீமைகளை பதிவு செய்வது,உயிரைக்கைப்பற்றுவது,மண்ணறையில் விசாரணை செய்வது,நல்லவர்களுக்குப் பரிந்துரைப்பது,ஸூர்ஊதுவது, சுவர்க்கம் நரகத்தை காவல் புரிவது, அர்iஷ சுமப்பது போன்ற சில பொறுப்புகள் இறைவனால் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.அத்தனையும் அல்லாஹ்வால் தான் செய்யப்படுகின்றன.ஆயினும் நிர்வாக சீரமைப்புக்காhவும், உலகின் ஒழுங்கு முறைக்காகவும்,கட்டுப்பாடான இயக்கத்திற் காகவும், மனிதன் பாடம் பெறுவதற்காகவும் வானவர்களிடம் இவ்வாறு பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
21. யார் யாரிடம் என்னென்ன பொறுப்புகள் ?
இறைவன் வானவர்களுக்கு பல பொறுப்புகளை வழங்கியுள்ளான்.
1. வஹி -இறை தூதின்- பொறுப்பு.
இப்பொறுப்பு வானவர் தலைவர் ஜிப்ரீல்(அலை) அர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இறைதூதர்களுக்கு (நுபுவ்வத் என்னும்) தூதுவச் செய்திகளை கொண்டு வருவதே இவர்களின் பணியாகும். (ஜிப்ரீலின் பெயர் குர்ஆனில் 2:97,2:98,66;4 ஆகிய மூன்று இடங்களில் வருகின்றன.) இவர்களுக்கு சில சிறப்புப் பெயர்களும் உள்ளன.1.ரூஹுல் குத்ஸ். (16:102) 2. ரஸூலுன் கரீம் ( 81:19) 3.தூ குவ்வத்( 81:20) 4. ரூஹுல் அமீன்(26:193) 5. ஷதீதுல் குவா (52:5)
2. மழை, காற்றின் பொறுப்பு.
இதன் பொறுப்பாளர் வானவர் மீக்காயீல். இவர் மழை, காற்று,மரம் செடி கொடிகள் முதலானவற்றுக்குப்; பொறுப்பாளர் ஆவார். இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் மீக்காயீல் எதன் பொறுப்பாளர் எனக் கேட்டபோது,' மரம் செடிகொடிகளுக்கும், மழைக்கும் என்றார்கள்.
3. சூர் ஊதுவதின் பொறுப்பு.
இதன் பொறுப்பாளர் இஸ்ராஃபீல் (அலை). இரண்டு தடவைகள் சூர் ஊதப்படும். முதல் தடவை ஊதும் போது உலகிலுள்ள யாவும் அழிந்து விடும்.
' சூர் ஊதப்படும். அல்லாஹ் நாடியோரைத்தவிர வானங்களிலும் பூமியிலும் உள்ளளோர் மடிந்து விடுவர். (39:68) ஒரே ஒரு தடவை சூர் ஊதப்படுபோது (69:14), பூமியும்; மலைகளும் தூக்கி ஒரே அடியில் அவை நொறுங்கித் தூள்தூளாக ஆக்கப்படும் போது (69: 13,14) இரண்டாவது தடவை சூர் ஊதப்படும் போது மரணித்தவர் யாவரும் உயிர்ப் பிக்கப்படுவர்.
' (இரண்டாவது தடவை) சூர்ஊதப்படும். உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து இறைவனை நோக்கி விரைவார்கள். (36:51) பின்னர் மீண்டும் ஒருமுறை ஊதப்படும். அவர்கள் எழுந்து பார்ப்பார்கள் ( 39:68)
4. உயிரைக் கைப்பற்றும் வானவர். (மலக்குல் மவ்த்)உயிரைக்கைப்பற்றும் வானவருக்கு மலக்குல் மவ்த் எனக் குர்ஆன் கூறுகிறது. இவரை சிலர் 'இஸராயீல்' என்பர். இந்தப் பெயருக்கு நபி மொழிகளில் ஆதாரம் கிடையாது.
5. உயிரைக் கைப்பற்ற தனித்தனி வானவர்கள்.
நாம் நினைப்பது போல உயிகை;கைப்பற்றுவதற்கு ஒரே ஒரு வானவர் கிடையாது. இது தவறான கருத்தாகும். ஒவ்வொருவரின் உயிரையும் கைப்பற்றுவதற்கு தனித்தனிவானவர் உள்ளனர் என குர்ஆன் மிகத் தெளிவாகக் கூறுகிறது. ' உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரியவானவர் உற்களை கைப்பற்றுவார்.பிறகு உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள் (32:11) உங்களுக்குப் பாதுகாவலர்களை அவன் அனுப்புகிறான். உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள்.அவர்கள் (அதில்) குறை வைக்கமாட்டார்கள். (6: 61) இதில் ஹஃபளத்தன்-பாதுகாவலர்கள், ருஸுலுனா-நமது தூதர்கள் என்பது வானவர்களைக் குறிக்கம்.
6. நல்லோரின் உயிரைக்கைப்பற்ற தனி வானவர்.
இறந்த அடியார் நல்லவராக இருந்தால் உயிரைப் கைப்பற்ற வரும் வானவர் நல்ல அழகிய தோற்றத்தில் வந்து நற் செய்தி கூறும் முகமாக ' ஸலாமுன் அலைக்கும், உங்கள் மீது சாந்தி உண்டாவதாக! நீங்கள் செய்த (நல்ல) வற்றின் காரணமாக சொக்க்கம் செல்லுங்;கள்' எனக் கூறுவார்கள். (16: 32)
7.தீயோர் உயிரைக்கைப்பற்ற தனி வானவர்.
இறந்த அடியார் தீயோராக-பாவியாக- இருப்பின் அவரிடம் வரும்வானவர் காணச்சகிக்காத விகாரமாகன பயங்கரத் தோற்றத்தில் வந்து தொண்டைக் குழியை நெருங்கும் அவனது உயிரை கருணை காட்டாது கடுமையாகப் பறித்துச் செல்வர்.
' ஒருவனது உயிர் தொண்டைக்குழியை அடையும் போது அந்நேரத்தில் நீங்கள் (எதுவும் செய்ய முடியாது) பார்த்துக் கொண்டிருப்பீர்கள். உங்களை விட நாமே அவனுக்கு மிகவும் அருகிலிருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்கமாட்டீர்கள். (56:83, 84,85) அவர் இறைவனுக்கு நெருக்கமான ஒருவராக இருந்தால் அவருக்கு உயர்வும், நறுமணமும், சுகந்தரும் சுவர்க்கச்சோலையும் உளளன. அவர் வலப் புறத்தைச் சார்ந்தவராக (சுவர்க்க வாசியாக) இருந்தால் வலது சாராரிடமிருந்து (சுவர்க்க வாசிகளிடமிருந்து) உமக்கு ஸலாம் உண்டாவதாக. (இறையாணைகளை) பொய்படுத்திய வழிகெட்டவராக இருந்தால் கொதி நீரும், நரகில் வெந்துருகுவதும் விருந்தாகும். இது உறுதியான உண்மையாகும். எனவே மகத்தான உமது இறைவனைகப் (பணிந்து ) துதி செய்வீராக!
8. மனிதனை சதாவும் பாதுகாக்கும் வானவர்.
மனிதனது விழிப்பிலும், தூக்கத்திலும், ஓய்விலும், இயக்கத்திலும், பயணத்திலும் எல்லா நிலையிலும் வானவர்கள் காவல் காத்துக் கொண்டிருப்பர்.
' மனிதனுக்கு முன்னரும், பின்னரும் தொடர்ந்து வருவோர்(வானவர்)உள்ளனர்.அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனை (இடி, மின்னல், விபத்துகள் போன்ற சகல ஆபத்துகளிலிருந்து இறைவனின் விதி வருவது வரை) காப்பாற்றுகின்றனர். (13:11)
9. மனிதனைக் கருவிலும் காக்கும் வானவர்
நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
"அல்லாஹ் கர்ப்பப் பையில் ஒரு மலக்கை நியமனம் செய்கிறான்.கருவில் விந்து செலுத்தப்பட்ட பின் அதன் உவ்வொரு நிலை மாற்றத்தின் போதும், இறைவா! இப்போது விந்தாக இருக்கிறது. இறைவா! அடுத்து 'அலக்' (கருப்பை யின் சுவரில் ஒட்டிக் கொள்ளும் நிலை) ஆக இருக்கிறது.இறைவா! இப்போது சதைத்துண்டாக இருக்கிறது என்று கூறுவார். அல்லாஹ் அதை உருவாக்க நாடினால் அது (1) ஆணா? பெண்ணா? (2) நல்லவனா? கெட்டவனா? (3) அவனுக்கு வழங்கப்போகும் உணவு எவ்வளவு? (4) அவனது வாழ்நாள் எவ்வளவு? என்பதை (முதலிலேயே தீர்மானித்துச்) சொல்லி விடுகிறான்.மனிதன் தன் தாயின் வயிற்றிலிருக்கும் போதே இவை எழுதப்பட்டு விடுகின்றன. (அறிவிப்பாளர்: அனஸ்(ரலி) நூல் புகாரி : 318)
10. மனிதனின் நன்மை தீமைகளை பதிவு செய்யும் வானவர்கள்
மனிதன் செய்யும் நன்மை தீமை யாவற்றையும் பதிவு செய்வதற்காக கண்ணியத்திற்குரிய வானவர்களை அல்லாஹ் நியமனம் செய்துள்ளான்.
' வலப்புறமும் இடப்புறமும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது , அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை. (50: 17,18) வலது பக்கம் இருப்பவர் நன்மைகளைப் பதிவு செய்வார். இடது பக்கம் இருப்பவர் தீமைகளைப் பதிவு செய்வார்.
இவர்களின் பெயர்களை ரகீப், அத்தீத் என்று சொல்வார்கள். இது அவர்களின் பெயர்களல்ல. அவர்களின் பண்புப் பெயர்களாகும்.. வலது பக்கமும் இடது பக்கமும் இருக்கும் ஒவ்வொருவருக்கும் 'ரகீபுன் அத்தீத்' கண்காணிக்கும் எழுத்தாளர் என்று சொல்லலாம். இவர்களை 'கிராமன் காத்திபீன்' கண்ணியத்திற்குரிய எழுத்தாளர்கள் என்று அல்லாஹ்வே சிறப்பிக்கிறான்.(82;:12)
11.இரவும் பகலும் சுற்றிவரும் வானவர்கள்.(பாதுகாப்புப்பணியினர்)
வானவர்களில் சிலரை 'தனது நல்லடியார்களை கண்காணிக்கவும் பாதுகாத்து வரவும் கட்டளையிட்டுள்ளான்.
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
இரவிலும் பகலிலும் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டவர்கள் தொடர்ந்து உங்களிடம் ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருப்பார்கள்.அதிகாலை (ஃபஜ்ரு)த் தொழுகையிலும், மாலை (அஸ்ரு)த் தொழுகையிலும் இருசாராரும் சந்திக்கின்றனர்.பின்னர் இரவுப் பணியிலுள்ளவர்கள் மேலேறிச் சென்றுவிடுவர். இறைவன் அறிந்து கொண்டே அவர்களிடம் என் அடியார்களை எவ்வாறு விட்டு வந்தீர்கள்? என விசாரிப்பான். (அதற்கவர்கள்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் நிலையில் அவர்களை (அங்கே) விட்டு வருகிறோம். அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது அவர்களிடம் போய் சேருகிறோம் என விடையளிப்பர்.(நூல்: புகாரி :555)
12. லைலத்துல் கத்ர் இரவில் இறங்கும் வானவர்கள்.
லைலத்துல் கத்ர் என்னும் (மாண்பார்) இரவு ஆயிரம் மாதங்களை விட மாண்புடையது. வானவர்களும் (அவர்களின் தலைவர்) ரூஹும் (ஜிப்ரீலும்) தமது இறைவனின் கட்டளைப் படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். (97:3,4)
13. கப்ரில் (மண்ணறையில்) வருகை தரும் வானவர்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
'ஒரு அடியான் கப்ரில் வைக்கப்பட்டு அவனது தோழர்கள் அங்கிருந்து நகரும் போது, அவன் அவர்களின் காலணிகளின் ஓசையை செவியுறுவான். அப்போது அவனிடம் இரு வானவர்கள் வந்து அமர்ந்து கொண்டு (பல கேள்விகளைக் கேட்டபின்னர், நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் கேட்பார்கள்) இந்த மனிதரைப்பற்றி என்ன சொல்கிறாய்? என்று கேட்பார்கள்.
(ஒரு முஃமின்)- நம்பிக்கை கொண்டவனாயின், 'அவன் அல்லாஹ்வின் அடியாரும் அவனது திருத்தூதருமாவார்'என்று சாட்சி சொல்கிறேன் என்று கூறுவான். அப்போது அவனை நோக்கி, (இதோ, உனக்குத் தரப்படவிருந்த இடத்தைப் பார்! அதற்குப் பதிலாக உனக்கு சுவர்க்கத்தில் ஓரிடம் தரப்படவிருக்கிறது என்று அவனிடம் கூறப்படும். (அப்போது சுவர்க்கம், நரகம் ஆகிய) இரு இடங்களையும் அவன் பார்ப்பான். அறிவிப்பவர்:அனஸ் இப்னு மாலிக் (ரலி),நூல்: முஸ்லிம்: 2870).
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
' நம்பிக்கை கொண்டோரை உறுதியான கொள்கையின் மூலம் இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் நிலைப்படுத்துகிறான். (14:27) என்ற இறைவசனம் கப்ருடைய வேதனை சம்மந்தமாக அருளப்பட்டது. (கப்ரில் அடக்கமாயிருக்கும்) அவனிடம், (மன் ரப்புக்க) உன் இரட்சகன் யார்? அதற்கவன் 'அல்லாஹ் தான்'என்று பதிலளிப்பான்.( உனது நபி யார்? ) எனது நபி முஹம்மத்(ஸல்)அவர்களாவார் என்று பதில் கூறுவான். இதைத்தான் அல்லாஹ் (14:27-ல்) கூறுகிறான். (அறிவிப்பவர்:ஃபரா இப்னு ஆஸிஃப்(ரலி), நூல் : முஸ்லிம் :2871)
இவர்களின் பெயர்கள் முன்கர்,நக்கீர் என ஹதீஸ் நூல்களில் வருகின்றன.
14 பரிந்துரைக்கும் வானவர்கள்
அல்லாஹ் அனுமதியளித்தவர்களுக்காக வானவர்கள் பரிந்துரைப்பர்.
இறைமறை கூறுகிறது. 'வானங்களில் எத்தனையோ வானவர்கள் உள்ளனர். தான் நாடியோருக்கு அல்லாஹ் அனுமதியளித்து பொருந்திக் கொண்டோரைத்தவிர (மற்றவர்களுக்காக) அவர்களின் பரிந்துரை பயன் தராது. (53:26)
15. மரணவேளையிலும், இறுதிநாளிலும் வாழ்த்தும் வானவர்கள்.

'எங்கள் இறைவன் அல்லாஹ்வே என்று கூறி பின்னர் உறுதியாகவும் இருந்தோரிடம் வானவர்கள் இறங்கி,'அஞ்சாதீர்கள்!கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கம் பற்றிய நற்செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்' எனக்கூறுவார்கள். இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் உங்கள் உதவியாளர்கள்.நிகரற்ற அன்புடைய மன்னிப்ப வனின் விருந்தாக நீங்கள் ஆசைப்படுபவை உங்களுக்குக் கிடைக்கும்.நீங்கள் கேட்பதும் கிடைக்கும் என்றும் கூறுவர். (41:30,31)

16. சுவர்க்கத்தின் காவலர்கள் (خزنة الجنة )
காஸின் என்பதன் பன்மைச் சொல்லே கஸனத் என்பதாகும். கஸனத்துல்ஜன்னா- சுவர்க்கத்தின் காவலர்கள்) 'தமது இறைவனை அஞ்சியோர் சுவர்க்கத்திற்கு கூட்டம் கூட்டமாக கொண்டுவரப்படு வார்கள். அதன் வாசல்கள்திறக்கப்பட்டு அவர்கள் அங்கே வந்ததும் 'உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும!(இனி)நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். நிரந்தரமாக தங்குவதற்காக இதில் நுழையுங்கள்.
 (39:73.)

17. நரகின் காவலர்கள் (خزنة جهنم)
இவர்கள் ஸபானியாக்கள் என்றும் கூறப்படும்.(96:18).நரகிற்கு 19 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.'அதன் மேல் பத்தொன்பது வானவர்கள் உள்ளனர்'.74:30 என குர்ஆன் கூறுகிறது.
அதன் தலைவர் மாலிக் (அலை)ஆவார் என ஹதீஸ் நூல்களும் அறிவிக்கின்றன.இதை திருமறையும் உறுதிப்படுத்துகிறது.
  ' யாமாலிக்! (நரகக்காவலரான) மாலிக்கே! உமது இறைவன் எங்கள் பிரச்சனையை விரைவில் முடிக்கட்டும் என்று (நரக வாசிகள்) அழைப்பார்கள்.' நீங்கள் இங்கேயே கிடப்பீர்கள் என்று அவர் கூறுவார்.(43:77).

(ஏக இறைவனை) மறுத்தோர் கூட்டம் கூட்டமாக நரகிற்கு இழுத்து வரப்படுவார்கள். அவர்கள் அங்கே வந்ததும் அதன் வாசல்கள் திறக்கப்படும். உங்கள் இறைவனின் வசனங்களை உங்களுக்குக் கூறும் இறைதூதர்கள் உங்களிலிருந்தே உங்களிடம் வரவில்லையா? இந்த நாளை சந்திக்க வேண்டியது வரும் என்பதை உங்களுக்கு அவர்கள் எச்சரிக்கவில்லையா? என்று அதன் காவலர்கள் கேட்பார்கள். அதற்கு அவர்கள் 'ஆம்' என்பார்கள். எனினும் (ஏக இறைவனை மறுப்போருக்கு வேதனை என்னும் (கடும்) உத்தரவு உறுதியாகிவிட்டது. (39:71)

18. அர்ஷய் சுமக்கும் வானவர்கள்.

அர்ஷய் சுமப்போரும், அதைச் சுற்றியுள்ளோரும் தமது இறைவனைப் போற்றிப் புகழ்கின்றனர். அவனை நம்புகின்றனர்.' ஒவ்வொரு பொருளையும் (உன்) அருளாலும், அறிவாலும் சூழ்ந்திருக்கிறாய். எனவே (உன்னிடம்) மன்னிப்புக்கேட்டு உனது பாதையை பின்பற்றியோரை மன்னிப்பாயாக! அவர்களை நரகைவிட்டும் காப்பாயாக! என்று நம்பிக்கை கொண்டோருக்காக (அந்த வானவர்கள்) பாவ மன்னிப்புத் தேடுகின்றனர்.(40:7);;அர்ஷய் சுமப்பவர்களை'கரூபிய்யூன்-ஈச்சமரத்தின் அடிப்பாகம் கனத்திருப்பதைப் போன்ற பலமிக்க அகன்ற கால்களை உடையவர்கள்' என பொருள் விரிக்கப்படுகிறது.

19. மலைகளைக்காக்கும் வானவர்கள்

(முவக்கலுன் பில் ஜிபால்)தாயிப் நகருக்கு இஸ்லாமியப் பிரச்சாரம் சென்றபோது பனூ அப்து யாலைல் சென்று திரும்புகையில் நீங்கள் இந்த மக்களிடையே பிரச்சாரம் செய்ததையும் அவர்கள் கூறிய பதில்களையும் இறைவன் செவியுற்றான்.'நீங்கள் விரும்பினால் இந்த மலைகளுக்கிடையே இவர்களை அழித்து விடுகிறோம்.' அங்கே வானவர் ஜிப்ரீலும், மலைகளைக் காக்கும் அமரர்களும் வந்து கேட்டனர் என்ற நபி மொழி இதற்கு ஆதாரமாகும்.

19. பைத்துல் மஃமூரை வலம் வரும் வானவர்கள்
'பைத்துல் மஃமூர்' என்பது கஃபாவுக்கு மேலே வானிலுள்ள வானவர்கள் தொழுமிடமாகும்.. அங்கே நாள் தோறும் 70,000 வானவர்கள் உள்ளே செல்கிறார்கள். உள்ளே சென்றவர்கள் வெளியே வருவதில்லை. (ஆதாரம்: புகாரி)
20. அணிவகுத்து நிற்கும் வானவர்கள்
'நின்ற நிலையிலே சதாவும் நின்று வணக்கம் புரிபவர்கள்! நிமிராமல் ருகூவிலே குனிந்து வணங்குபவர்கள்! ஏழாமல் சுஜீதிலே சிரம் பணிந்து வணக்கம் புரிபவர்கள்!' என அணிஅணியாக இறைவனை வணங்கிக் கொண்டே இருக்கும் இலட்சக்கணக்கான வானவர் படையும் உள்ளனர் என்பதையும் குர்ஆன், சுன்னா ஒளியில் நாம் ஈமான் (நமபிக்கை) கொள்ளவேண்டும். நம்ப மறுப்போர் நிராகரிக்கப்படுபவர்கள் என்றே கருதப்படும்
http://kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

திங்கள், 6 ஏப்ரல், 2015

ஹிஜாப் – சமூக சிக்கல்களைச் சமாளிக்க சில ஆலோசனைகள்!

ஹிஜாப் சமூக சிக்கல்களைச் சமாளிக்க சில ஆலோசனைகள்!

அன்புச் சகோதரியே,
நீங்கள் ஹிஜாப் அணியத் தொடங்கியது முதல்
பல்வேறு தரப்பிலிருந்து பலவகைப்பட்ட
இடர்களையோ இன்னல்களையோ தொல்லைகளையோ சந்தித்து
வந்திருக்கலாம். அவற்றை நளினமாக எதிர்கொள்வதுடன்
சூழலையும் உங்களுக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்ள
சாதுரியமான அணுகுமுறை அவசியம். அவற்றில் சிலவற்றைப் பட்டியல் இட்டுள்ளோம். இதுவரை உங்கள் பாதையை எளிதாக்கித்
தந்த இறைவன் இது போன்ற அணுகுமுறைகள் மூலம்
உங்களுக்கு வெற்றியைத் தருவான் இன்ஷா அல்லாஹ்.
 
நீங்கள் புதிதாக ஹிஜாப் அணியத் தொடங்கியதைக் கண்ட உங்கள்
நண்பர்களின் கேலி விமர்சனங்களைக்
கண்டு தன்னம்பிக்கையை இழப்பது போல் தோன்றுகிறதா?

#1. ஹிஜாப் அணிதல் என்பது இறைவனின்
புறத்திலிருந்து இஸ்லாமிய பெண்ணிற்கு இடப்பட்ட
கட்டளை என்பதை நினைவு கூருங்கள். எந்த கட்டளைகளையும் விட
இறையாணையைப் பின்பற்றுவது முக்கியத்துவம் வாய்ந்தது.
அதே நேரத்தில் ஹிஜாப் அணியத் தொடங்குவதன் மூலம் சந்திக்கும்
சிரமங்களைப் பொறுத்துக்கொண்டு அமைதியுடன் இருங்கள். உண்மையான இறைநேசர்களுக்குச் சோதனை என்பது எப்போதும்
உண்டு என்பதையும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக
அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்
(அல்குர்ஆன் 29:69) என்ற இறைவாக்கையும் மறந்துவிடாதீர்கள்.

#2. மாற்று மதத்தவர்கள் மத்தியில் பிறரின் பார்வைக்கு நீங்கள்
வித்தியாசமாகத் தெரிவதனால் வரும் விமர்சனங்களை அலட்சியம்
செய்யுங்கள். ஹிஜாப் அணியத் துவங்கியதனால் குவியும்
விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்பட ஆரம்பித்துவிட்டீர்கள் எனில்
உங்களைச் சுற்றி எவர் எது பேசினாலும் அது உங்களின் புதிய
தோற்றம் பற்றியே பேசுவதாக எண்ணத் தொடங்கிவிடுவீர்கள். மனதளவில் குறை ஏற்பட்டு உடல் ரீதியாகவும்
அது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

#3. புதிய பரிமாணத்துடன் இவ்வுலகின் கண்களுக்கு நீங்கள்
தோற்றமளித்தாலும் இறைவனின்
கட்டளையை செயல்படுத்துவது எவ்வளவு முக்கியத்துவம்
வாய்ந்தது என்பதை நீங்கள் தீர்மானித்துக்கொள்ளுங்கள். இறைவனைத்
திருப்திப்படுத்துகின்ற ஒரு புனிதமான செயலைச் செய்கிறோம்
என்ற உள்ளுணர்வோடு புத்துணர்ச்சியும் தன்னம்பிக்கையும் மேலிட பிறர் மத்தியில் நடப்பதை உணர்வீர்கள்.

#4. தரமிழந்து விமர்சிப்பவர்களைக் கண்டு புன்முறுவல்
பூத்தவண்ணம் நகர்ந்துவிடுங்கள். தடுமாற்றமில்லாத உங்களின்
அமைதியே வார்த்தைகளால் உங்களைத்
தாக்குபவர்களுக்கு பதிலடியாக அமையும்.
உங்களுக்கு ஊக்கமளிக்காத சூழல்களைச் சமாளிப்பதற்கு ஏற்ற
சக்தியை வழங்க இறைவனிடம் உதவி கோருங்கள்.

ஹிஜாப் அணிந்து நீங்கள்
பள்ளிக்கோ அல்லது கல்லூரிக்கோ வருவதை அதன் நிர்வாகம்
தடை செய்து விட்டால் என்ன செய்வது?

நீங்கள் வசிக்கும் பகுதியில் இது போன்ற
பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டால், உங்களைப் போன்ற சிக்கலைச்
சந்தித்த பிற சகோதரிகளையும் ஒன்று சேர்த்து பள்ளி/
கல்லூரி நிர்வாகம் விதித்துள்ள தடைகளை நீக்குவது பற்றிய
சிந்தனை அழுத்தத்தை பொது மக்களிடம் குறிப்பாக உங்கள்
பள்ளி/கல்லூரி மாணவிகளிடத்தில் ஏற்படுத்துங்கள்.

ஹிஜாப் உடையணிந்தவர்கள் மீதான அநீதியான பள்ளி/கல்லூரியின்
இத்தடையை நீக்கக் கோரி உள்நாட்டு அரசியலமைப்பு விதிகளின்
அடிப்படையில், சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தில் வழக்குத்
தொடுப்பதன் மூலமும் ஆளும் அரசாங்கத்தின் மீது அழுத்தம் ஏற்பட
முயற்சி செய்யுங்கள்.

#1. கூடுமானவரையில் முயற்சித்து உலக ஊடகங்களுக்கு உங்கள்
முயற்சிகளைத் தெரியப்படுத்துங்கள்.

#2. உங்களின் கருத்துக்களை ஆதரிக்கும்
நபர்களை ஒன்று சேர்த்துக்கொள்ளுங்கள். மனித உரிமைகளுக்காகக்
கொடுக்கப்படும் உங்கள் குரல் வெகு எளிதில் வெளி உலகிற்குச்
சென்றடைய இது உதவும்.

#3. சத்தியத்திற்காகவும் நீதிக்காகவும் போராடும்
இப்போராட்டத்தில் ஏற்படும் இன்னல்களையும் இடர்ப்பாடுகளையும்
தாங்கும் சக்தியையும், இதற்கான வெற்றியையும்
வேண்டி இறைவனிடத்தில் பிரார்த்தியுங்கள்

நீங்கள் வசிக்கும் நாட்டில் சட்ட ரீதியாக விதிக்கப்பட்டுள்ள
ஹிஜாப் தடைகளுக்கு எதிராகப் போராடத் துணிந்து விட்டீர்கள்
எனில் அடுத்து என்ன செய்வது?

#1. உங்களின் ஜனநாயக உரிமைகளைப் பெற உரிய நபர்களைச்
சந்தித்துப் பேசுவதற்கு ஆயத்தமாகுங்கள்

#2. உங்களைச் சுற்றியுள்ள குறுகிய
வட்டத்திலிருந்து வெளியே வாருங்கள். உங்களுக்கு ஏற்பட்டுள்ள
பிரச்னை ஒரு தனிமனிதனுக்கானது இல்லை; மாறாக
பொதுவானது என்பதை அனைத்து சமுதாயத்தினரும்
அறிந்து கொள்ள வழி வகை செய்யுங்கள். தனிமனித
சுதந்திரத்தையும், மனித நேயத்தையும் விரும்பக்கூடிய சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் உங்களுடன்
துணைக்கு வருவார்கள்.

#3. உங்கள் பகுதி ஜமாஅத்தார்களின் உதவியை நாடுங்கள்
#4. அமைதியை விரும்பும் மக்களோடு உதவிக்கரம் சேருங்கள்.
இஸ்லாத்தை சுதந்திரமாக பின்பற்ற விரும்புவர்கள் படும்
இன்னல்களை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்

#5. உங்கள் போராட்டத்தை ஊடகங்கள்
வாயிலாகவே வெளியுலகிற்கு அறிவிப்பதை
வாடிக்கையாக்குங்கள்

#6. இறுதியாக, சத்தியத்தையும் நீதியையும் நிலை நாட்டிடும்
உங்களின் இத்தூய அறப்போராட்டத்தில் ஏற்படும் துன்பங்களில்
இருந்து உங்களைக் காத்திட இறைவனை மட்டுமே நம்புங்கள்.
சத்தியத்தின் பக்கம்
இருப்பவர்களுக்கு என்றுமே தோல்வியில்லை என்பதை மனதில்
திரும்பத் திரும்ப கூறிக் கொள்ளுங்கள்.

நீங்கள் பணிபுரியும் இடத்தில் ஹிஜாப் அணிவதை உங்களின்
மேலதிகாரி தடை செய்தால் என்ன செய்வது?

#1. அல்லாஹ்விற்குக் கீழ்படியாத எவருக்கும் கீழ்படியத்
தேவையில்லை என்ற நபிமொழிக்கேற்ப இறைவனின்
ஆணைக்கு எதிராக உத்தரவிடும் உங்கள் மேலதிகாரிக்கு நீங்கள்
கீழ்பணியத் தேவையில்லை.

#2. ஒரு பெண் தான் விரும்பி ஏற்றுள்ள இஸ்லாமியக் கோட்பாடுகள்
மற்றும் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் உங்கள்
பணியிடங்களில் ஹிஜாப்
அணிவதற்கு உங்களுக்கு முழு உரிமை உள்ளது. சர்வதேச
ஒப்பந்தங்கள் மற்றும் மனித உரிமை சட்டங்கள் ஆகிவற்றின்
அடிப்படையில் இது போன்ற உரிமைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. உங்கள் மேலதிகாரி நீங்கள் ஹிஜாப்
அணிவதை விட்டும் உங்களைத் தடுக்கிறார் என்றால் மேற்கண்ட
சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் அவர்
ஒரு குற்றவாளி என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

#3. எனவே ஒரு முஸ்லிம் பெண்மணியாக, இஸ்லாமிய
ஒழுங்குகளை நீங்கள் விட்டுக்கொடுக்க வேண்டாம். உங்களால்
தனித்து இது போன்ற சூழலை எதிர்கொள்ள முடியாத பட்சத்தில்,
நீங்கள் வசிக்கும் பகுதியில் இஸ்லாமிய வக்ஃப்
அமைப்பை அணுகி அவர்களிடமிருந்து கடிதம்
பெற்று அதனை உங்கள் மேலதிகாரிக்கு சட்டப்பூர்வமாக ஓர் எச்சரிக்கை விடுப்பதன் மூலம் அவரின் தவறை உணர்த்தச்
செய்யலாம்.

உங்கள் பெற்றோரே நீங்கள் ஹிஜாப் அணிவதற்குத் தடையாக
இருக்கும் சூழலில் என்ன செய்வது?

#1. ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் பெற்றோர்
உங்களிடம் எவ்வளவுதான் கடுமையாக நடந்து கொண்டாலும்,
அழகிய இஸ்லாமிய அடிப்படையின்படி, நீங்கள் திரும்ப
அவர்களிடம் கோபமாகவும் கடினமாகவும் நடந்து கொள்ள
உங்களுக்கு அனுமதியில்லை. மாறாக, அன்பாகவும்
அமைதியாகவும் அவர்களிடம் பேசுங்கள்.

#2. உங்கள் மனதைப் புண்படுத்தும்படியான வார்த்தைகளை உங்கள்
பெற்றோர் பேசியிருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள். இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம்
பூமியில் பணிவுடன் நடப்பவர்கள் மூடர்கள் அவர்களுடன்
பேசி(வாதா)ட முற்பட்டால் "ஸலாம்" (சாந்தியுண்டாகட்டும்
என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள். (அல்-குர்ஆன்
25:63)

#3. மறுமை நாளில் இறைவனை சந்திப்பவர்களாக இருக்கிறோம்
என்பதை மறந்துவிடாமல், உங்கள் நோக்கத்தை சத்திய
சிந்தனைகளைக் கொண்டு வலுப்படுத்துங்கள்.

#4. இறைவனை தியானிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உங்கள்
மனச் சுமைகளைக் குறைப்பதுடன், சந்தோஷத்தையும்
கூடவே அமைதியையும் இது தர வல்லது.

#5. இறைத்தூதர் நபி(ஸல்) சந்தித்த போராட்டங்களையும்
தியாகங்களையும் தொடர்ந்து நினைவு கூருங்கள்.
சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையே நடைபெறும்
போராடங்களை விவரிக்கும் இறைமறையின் சூரா யூஸூப்
அத்தியாயத்தை அடிக்கடி ஓதி நினைவு கூர்வது நன்மை பயக்கும.

#6. உங்கள் பெற்றோருடன் மிக மென்மையாகப் பேசி அவர்களின்
தவறான எண்ண ஓட்டத்தை மாற்ற முயலுங்கள். அதற்கு அவர்கள்
செவி சாய்க்காமல் போகும் பட்சத்தில் வல்ல ரஹ்மானிடம்
முறையிட்டு அவர்களின் மனதை மாற்றிட வேண்டுங்கள்.

#7. ஹிஜாப் அணிந்த நிலையில் கூடுமான வரையில் உங்கள்
நடத்தை மற்றும் செயல்பாடுகளில் கண்ணியத்தைப் பேணி நடக்க
முயற்சியுங்கள். ஹிஜாப் அணிந்தவர்களை அணியாதவர்கள் முதலில்
பார்க்கும் பார்வை அவர்களின் கண்ணியமான நடத்தையையும்
தோற்றத்தையுமே! அது போன்ற ஒன்று உங்கள் பெற்றோரிடம்
மனமாற்றத்தைக் கொண்டுவரலாம். அவ்வாறு நடவாத சூழலிலும் துவண்டு விடாதீர்கள். வருத்தப்படாதீர்கள்.

#8. மேற்கத்திய கலாச்சாரத்தைத் தவிர்த்து, உலகமெங்கும்
பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் எதிர்நோக்கும் ஒரு முக்கிய
விஷயம் கீழ்ப்படிதல் என்பதே! இறைவனுக்கு மாறு செய்தல் எனும்
ஒரு விஷயத்தில் பெற்றோருக்குக் கீழ்படிவதைத் தவிர்த்து மற்ற
அனைத்து விஷயங்களிலும் அவர்களுடன் கீழ்ப்படிந்து நடக்க
முயற்சி செய்யுங்கள்.

#9. கூடுமானவரையில் உங்கள் பெற்றோருடன் நெருக்கமாக இருக்க
முயலுங்கள். குறிப்பாக உங்கள் தாயுடன் பரஸ்பர
உறவுகளை நெருக்கப்படுத்திக் கொள்ளுங்கள். நினைவில்
வையுங்கள். உலகில் பணத்தால் சாதிக்க முடியாத
விஷயங்களை அன்பினால் வெகு சுலபமாக சாதித்து விடலாம்.

#10. இறுதியாக, ஹிஜாப் அணிவதை அவர்கள் மனதார ஏற்றுக்
கொள்ளும் விதத்தில் அவர்களை சமயோசிதமாக அணுகுங்கள்.
அதை அழகிய முறையில் ஒரு மார்க்க சொற்பொழிவைக் கேட்கச்
செய்வதன் மூலமாகவோ, அல்லது ஹிஜாபின் மாண்புகளை எளிமையாக
விவரிக்கும் ஒரு புத்தகத்தைக் கொண்டோ சாதிக்க இயலும்.

http://kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

அவல் உண்பதால்* *உண்டாகும் அற்புத பயன்கள்.

ஊறவைத்த நெல்லை பின் இடித்து தட்டையாக செய்யப்பட்டு அதிலிருந்து உமியை நீக்கி பயன்படுத்தப்படுவது அவல் ஆகும். முன்பு கைகுத்தல் முறையில்...

Popular Posts