லேபிள்கள்

வியாழன், 12 மார்ச், 2015

வேர்ட் டிப்ஸ்,எக்ஸெல் டிப்ஸ்

வேர்ட் டிப்ஸ்,எக்ஸெல் டிப்ஸ்

வேர்டின் முதல் டைரக்டரியை மாற்ற: வேர்ட் முதலில் இன்ஸ்டால் செய்யப்பட்டவுடன், அதில் உருவாக்கப்படும் டாகுமெண்ட்கள் சேவ் செய்திட, மை டாகுமெண்ட்ஸ் போல்டரை மாறா நிலையில் அமைத்துக் கொள்கிறது. ஆனால் நாம் வேறு ஒரு போல்டரில் இவற்றை சேவ் செய்திடத் திட்டமிட்டால், அதற்கும் வேர்ட் வழி தருகிறது.


1. ஆபீஸ் பட்டனை அழுத்தவும். அதன் பின்னர் என்பதில் கிளிக் செய்திடவும். இது, Word Options டயலாக் பாக்ஸைத் திறக்கும்.
2.
டயலாக் பாக்ஸின் இடது பிரிவில், Save என்பதில் கிளிக் செய்திடவும்.
3.
வலது பக்கத்தில் உள்ள Default File Location என்ற பீல்டில், Browse பட்டனை அழுத்தவும்.இப்போது வேர்ட் காட்டும் டயலாக் பாக்ஸில், பிரவுஸ் செய்து டைரக்டரிகளைத் தேர்ந்தெடுக்கலாம். எந்த டைரக்டரியை ஸ்டார்ட் அப் டைரக்டரியாகப் பயன்படுத்த விருப்பமோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
4.
அடுத்தடுத்து இருமுறை ஓகே பட்டனை கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் தேர்ந்தெடுத்த டைரக்டரி, மாறா நிலை டாகுமெண்ட் பைல்களை சேவ் செய்திடும் டைரக்டரியாக அமைக்கப்படும்.
மெனு பட்டன்களை இடம் மாற்ற: நாம் அன்றாடம் வேர்ட் தொகுப்பைப் பயன்படுத்துகிறோம். அதில் மேலாக உள்ள மெனு பட்டன்களை அவற்றின் வழக்கமான இடங்களில் வைத்துப் பார்த்து தேர்தெடுக்கிறோம். சில வேளைகளில் இவை இடம் மாறி, வேறு ஒரு இடத்தில் இருந்தால் நல்லது என்று எண்ணுவோம். ஆனால் அதற்கு என்ன செய்வது என்று எண்ணாமல் விட்டுவிடுவோம். இதற்கான வழியை இங்கு காண்போம்.


இதற்கு முதலில் Alt கீயை அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள். இனி நீங்கள் இடம் மாற்ற விரும்பும் மெனு பட்டனை உங்கள் மவுஸால் கிளிக் செய்து அப்படியே இழுத்து நீங்கள் விரும்பும் புதிய இடத்திற்குச் செல்லுங்கள். அப்போது பாய்ண்ட்டர் ஒரு நான்கு முனை சக்கர அம்பாக மாறி இருப்பதனைப் பார்ப்பீர்கள். புதிய இடத்திற்குச் சென்றவுடன் மவுஸை விட்டுவிடுங்கள். நீங்கள் விரும்பிய வகையில் மெனு பாரில் பட்டன்கள் அமைந்திருக்கும்.
டேபிளில் பார்டர்கள் தேவையா?: வேர்டில் டாகுமெண்ட் இடையே டேபிள் ஒன்றை உருவாக்கும்போது, வேர்ட் அந்த டேபிளில் பார்டர் கோடுகளை நீங்கள் விரும்புகிறீர்கள் என்றபடி கோடுகளை செல்களைச் சுற்றிலும் அமைத்துத் தரும். ஏதேனும் காரணத்தினால் இந்த கோடுகள் உங்களுக்குத் தேவை யில்லை என்று எண்ணினால் அதனை நீக்கலாம். இதற்கான பல வழிகளில் எளிய வழி ஒன்று உள்ளது. கண்ட்ரோல் + ஆல்ட் +யு (Ctrl+Alt+U) கீகளை அழுத்தினால் பார்டர் கோடுகள் நீக்கப்படும். இந்த கீகளை அழுத்தும் முன் கர்சர் ஏதேனும் ஒரு செல்லில் இருக்க வேண்டும்.
பாண்ட் டயலாக் பாக்ஸ்: வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கையில், அவசரமாக டெக்ஸ்ட்டின் ஒரு பகுதியைக் குறிப்பிட்ட வகையில் பார்மட் செய்திட வேண்டியதிருந்தால், மெனு பார் சென்று Format கிளிக் செய்து பின்னர், Font தேர்ந்தெடுக்கிறோம். பின்னர், நமக்கு பாண்ட் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் டெக்ஸ்ட் பார்மட் செய்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் தரப்பட்டிருக்கும். இது சற்று நேரம் எடுக்கும் வேலை ஆகும்.


ஒரு சில சொற்கள் அல்லது வரிகளில், ஏதேனும் பார்மட்டிங் வேலையை மேற்கொள்ள கீழ்க்காணும் வகையில் செயல்படலாம். முதலில் பார்மட் செய்யப்பட வேண்டிய டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின்னர், அந்த பகுதியில், மவுஸ் கர்சரைக் கொண்டு, ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில், Font கிளிக் செய்தால் Font Dialogue Box கிடைக்கும். தேவையான பார்மட்டிங் பணியை நிறைவு செய்திடுங்கள். இறுதியில் ஓகே கிளிக் செய்து முடிக்கவும்.
எக்ஸெல் டிப்ஸ்

பார்மட்டிங் ஷார்ட்கட்: எக்ஸெல் செல் ஒன்றில், அதன் தகவல்களைத் தனியே பார்மட்டிங் செய்கையில், ஒவ்வொன்றுக்கும் மெனுவிற்குச் செல்ல வேண் டாம். இந்த ஷார்ட்கட் கீகளைப் பயன்படுத்துங்கள். முதலில் பார்மட் செய்திட வேண்டிய செல்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின் Ctrl + Shift + ! அழுத்தினால் செல்லில் 50 என உள்ள எண்ணை 50.00 என மாற்றும். Ctrl + Shift + % என்ற கீ இணைப்பு .75 என்பதை 75% என மாற்றும். Ctrl + Shift + @ என்ற கீகளை இணைத்து அழுத்தினால் 15.45 என்ற நேரக் குறியீட்டை 3:45 PM என மாற்றும். Ctrl + Shift + # என்ற கீகள் 11/4/2007 என்ற நாள் குறியீட்டை 4Nov07 என மாற்றும். Ctrl + Shift + $ என்ற கீகள் 50 என உள்ள எண்களை கரன்சியுடன் ($50.00) சேர்த்துக் காட்டும்.
பெர்சனல் தகவல்களை மறைக்க: எக்ஸெல் தொகுப்பில் புதிய ஒர்க்ஷீட்களை உருவாக்கி, அவற்றில் டேட்டாவினைப் பதிகையில், அந்த ஒர்க்ஷீட் பைலில், நம்முடைய பெர்சனல் தகவல்களும் இணைக்கப்படுகின்றன. பைல் ப்ராப்பர்ட்டீஸ் என்ற வகையில் இவை பதியப்படும். இதனால், பைல் ஒன்றை யார் உருவாக்கியது போன்ற தகவல்கள் அனைவருக்கும் தெரிய வரும். இந்த தகவல்களை ஒவ்வொரு பைலின் ப்ராப்பர்ட்டீஸ் சென்று நீக்கலாம். ஒவ்வொரு பைலாக இதனை மேற்கொள்வதைக் காட்டிலும், ஒர்க்ஷீட்கள் உருவாகும்போது இத்தகைய தகவல்களை இணைக் காமல் இருக்க செட்டிங்ஸ் மேற்கொள்ளலாம். இதற்கு Tools > Options என முதலில் தேர்ந்தெடுக்கவும். இங்கு Options டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இங்குள்ள டேப்களில் Security டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் விண்டோ பிரிவில் Remove Personal Information from File Properties on Save என்று இருப்பதைப் பார்த்து, அதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். அடுத்து ஓகே கிளிக் செய்து அனைத்தையும் மூடவும். இனி பெர்சனல் தகவல்கள் சேர்க்கப்பட மாட்டா.


எக்ஸெல் 2007 பயன்படுத்துபவர்கள், கீழே குறிப்பிட்ட வழிகளில் செயல்படவும். இந்த தொகுப்பில் Document Inspector என்று ஒரு வசதியைக் காணலாம். இதன் மூலம் பைல் ஒன்றின் பல தகவல்களைப் பார்க்கலாம். Office பட்டன் கிளிக் செய்து, Prepare | Inspect Document எனச் செல்லவும். இப்போது கிடைக்கும் டாகுமெண்ட் இன்ஸ்பெக்டர் டயலாக் பாக்ஸில், கண்காணிப்பில் இருக்க வேண்டிய விஷயங்களைத் தேர்ந்தெடுத்துப் பின்னர் Inspect என்பதில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் ஒர்க் புக்கில் இருக்கும் பெர்சனல் தகவல்களைக் காட்டி, அவற்றில் எவை எல்லாம் இருக்கக் கூடாது என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும்படி கேட்கும். அவ்வாறே செயல்படலாம்.
ஒர்க் ஷீட்டின் இறுதி வரிசை: எக்ஸெல் தொகுப்பில் Ctrl+End அழுத்துகையில், எக்ஸெல், ஒர்க்ஷீட்டின் கீழாக டேட்டா அமைக்கப்பட்டுள்ள செல்லுக்கு, உங்களை அழைத்துச் செல்லும். இது கீழ் வரிசையில் குறுக்கு வலது நெட்டு வரிசை எனச் சொல்லப்படும். நீங்கள் சில படுக்கை வரிசைகள் அல்லது நெட்டு வரிசைகளை, ஒர்க்ஷீட்டில் நீக்கினால், Ctrl+End கீகள் உங்களை நீக்கியவற்றிற்கு முன்பாகக் கீழாக டேட்டா அமைந்துள்ள வலது ஓர செல்லுக்கு எடுத்துச் செல்லும் என்று தானே எதிர்பார்ப்பீர்கள். அதுதான் இல்லை. ஏற்கனவே ஒரிஜினலாக, இறுதியாக எந்த செல்லுக்குச் சென்றதோ, அந்த செல்லுக்குத் தான் செல்லும்.


எடுத்துக்காட்டாக, நீங்கள் அமைத்த ஒர்க் ஷீட் ஒன்றில் H20 செல் கீழாக, இறுதியானதாக இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதில் நீங்கள் மூன்று படுக்கை வரிசைகளையும், ஒரு நெட்டு வரிசையினையும் இடையே நீக்குகிறீர்கள். இப்போது Ctrl+End கீகளை அழுத்தினால், கர்சர் G17 செல்லுக்குத்தானே செல்லும் என்று எதிர்பார்க்கிறீர்கள். இல்லை. அதற்குப் பதிலாக H20 என்ற செல்லுக்கே செல்லும். இதற்குக் காரணம் என்னவென்றால், நீங்கள் ஏற்படுத்திய மாற்றம், பைலில் பதியப்படாததே ஆகும். எனவே, மாற்றத்திற்கேற்ற வகையில் இறுதி செல் காட்டப்பட வேண்டும் என்றால், பைலை சேவ் செய்தால் போதும். மாற்றத்தின் அடிப்படையில் கடைசி செல்லைக் காட்டும்.
http://kulasaisulthan.wordpress.com


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

செவ்வாய், 10 மார்ச், 2015

பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.

பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.


ஆயில் புல்லிங் எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை வாயில் விட்டு சாதாரணமாக கொப்பளிப்பதுதானே என்று அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களுக்கு அனைத்து நோய்களும் தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இன்றைக்கு பிரபலமாகிக் கொண்டு வரும் ஆயில்புல்லிங்கை நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து பின்பற்றியுள்ளனர். இது அனைத்து நோய்களுக்கும் பாதுகாப்பான எளிய மருத்துவ முறையாக இருந்துள்ளது. பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து அதன் மூலமாக உடலில் நஞ்சு கலந்த வேதியியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் புத்துணர்வு பெறுகிறது.
ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்வது பற்றி தெலுங்கு நாளிதழான ஆந்திர ஜோதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது. மூன்று வருடங்களாக 1041 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 927 நபர்களுக்கு நோய் குணமானது தெரியவந்தது. 758 நபர்களுக்கு கழுத்து மற்றும் உடல்வலி குணமாகியது. அலர்ஜி மற்றும் ஆஸ்துமா நோய்கள் 191 பேருக்கு சரியானது.
தோல்நோய், அரிப்பு,கரும்படை, உள்ளிட்ட நோய்கள் குணமடைந்ததாக தெரிவித்திருந்தனர். மேலும், இதயநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்,நரம்பு தொடர்பான நோய்கள் குணமடைந்ததாக சர்வேயில் தெரிவித்திருந்தனர்.


நிரூபிக்கப்பட்ட உண்மை
நம் உடலில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தம், இதய நோய், பார்க்கின்சன் நோய்கள் கல்லீரல், நுரையீரல்நோய், புற்று நோய், பக்க வாதம், நரம்பு சம்பந்தமான நோய்கள், வெரிகோஸ் வெயின்ஸ், வலிப்பு, மாதவிடாய் தொல்லைகள், மார்பக நோய்கள், கருப்பை தொடர்பான நோய்கள், முகப்பருக்கள், படை போன்ற எண்ணிலடங்கா நோய்களுக்கும் தொல்லைகளுக்கும் மிக எளிமையான மருத்துவக் கோட்பாடு ஒன்றினை மனித குலத்துக்கு தந்துள்ளனர் நம் முன்னோர்கள். இதனை அப்போதய சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த அறிஞர், டாக்டர் மெத்கராஷ் என்பவர் அறிவியல் முறைப்படி ஆய்வு நடத்தி மெய்ப்பித்துக் காட்டியுள்ளார்.
வலி நிவாரணி
தலைவலி என்பது கடுமையான தொந்தரவினை தரக்கூடியது. ஒற்றைத்தலைவலியானது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. தினமும் தவறாமல் ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களை இந்த நோய்கள் தாக்குவதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.
மூட்டு வலி, முழங்கால் வலி, பல் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள், கண் காது மூக்கு சம்பந்தமான நோய்கள், வயிறு குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம், தும்மல், சளி, களைப்பு, தூக்க81ல்லிங்
காலையில் எழுந்து, வெறும் வயிற்றில், பல் துலக்கிய உடன் தூய்மை செய்யப்பட்ட நல்லெண்ணெயோ, ஆலிவ் எண்ணெயையோ, வேர்க்கடலை அல்லது சூரியகாந்தி எண்ணெயையோ, இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் ஓய்வாக அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறும் கொப்பளிக்க வேண்டும். இப்படியே தொடர்ந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொப்பளியுங்கள். முதலில் வாய் முழுவதும் வழு வழுவென்று எண்ணெயின் தன்மை இருக்கும். ஆனால், சில நிமிடங்களில் அந்த தன்மை மாறி வாயினுள் எளிதாக நகரும். 15-20 நிமிடங்களில் எண்ணெயில் தன்மை முற்றாக நீர்த்துப்போய், நுரைத்து, வெண்மையாகிவிடும். அப்போது அதனை உமிழ்ந்து விடுங்கள்.
விடியற்காலையே சிறந்தது
உமிழ்ந்த திரவம் வெள்ளையாக இல்லாது மஞ்சளாக இருந்தால், இன்னும் கொஞ்ச நேரம் கொப்பளிக்க வேண்டும். மீண்டும் எண்ணெய் ஊற்றி கொப்பளித்து விட்டு உமிழ்ந்ததும் வாயைக் கழுவி நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இதனால், உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய கிருமிகள் எல்லாம் நீங்கள் உமிழ்ந்த நீர்மத்தில் முழுமையாக வெளியேற்றப் படுகின்றன. இந்த எளிய எண்ணெய் மருத்துவத்தைச் செய்வதற்கு விடியற்காலை நேரமே சிறந்தது.
நாளொன்றுக்கு மூன்று முறை
எண்ணெயை கொப்பளிக்க முடிந்த எவரும், எந்த வயதினரும் இதனை செய்யலாம். இதற்கு எந்த வித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது. எதாவது நோய்க்காக மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் கவலை இல்லை. நீங்கள் அந்த மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளலாம். நோயின் தன்மை குறைந்தால், மருந்தின் அளவையும் மருத்துவரின் ஆலோசனையோடு குறைத்துக் கொள்ளலாம்.
ஆயில் புல்லிங் செய்யும் போது ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால், உடனே வேறு நிறுவனத்தின் எண்ணெய்க்கு மாற்றிவிடலாம். இதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும் பயப்பட வேண்டாம். வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி தவிர வேறொன்றும் நேராது! விரைவில் நிவாரணம் வேண்டுவோர், நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம். ஆனால், வெற்று வயிற்றுடன் தான் இதைச் செய்ய வேண்டுமென்பது விதி.
இந்த மருத்துவத்தை செய்ய ஆரம்பித்ததும், சிலருக்கு, நோயின் தன்மை சற்று அதிகரித்து பின்னர் குறைகிறது. இது, நெடுநாளாய் வாட்டும் நோய் குணமாகப் போகிறது என்பதின் அறிகுறி. இந்த எளிய வைத்திய முறையை பின் பற்றுவதோடு, தூய காற்றை சுவாசித்து, நிறைய நீர் பருகி, அளவான சுகாதாரமான உணவுகளை உட்கொண்டு நல்ல முறையில் உடற்பயிற்சி செய்து வந்தால், நம் முன்னோர்கள் போன்று நோயற்ற வாழ்வு வாழலாம்.
http://kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

ஞாயிறு, 8 மார்ச், 2015

அடிக்கடி சிறுநீர்

அடிக்கடி சிறுநீர்

பிரச்னை அடிக்கடி காலோடு சிறுநீர் வந்து விடுவதைப் போல உணர்வார்கள் சிலர்அல்லது இருமல்  வரும்போதோ, தும்மல் வரும் போதோசிறுநீர் துளி எட்டிப் பார்க்கும்! அப்படியென்றால் 'கட்டுப்பாடற்ற சிறுநீர் கழிதல் (ஓவர்ஆக்டிவ் பிளாடர்)' பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று அர்த்தம்.
இது சிறுநீரகங்களை பழுதாக்கும் சைலன்ட் கில்லர். நம்நாட்டில் 40 முதல் 60 வயதுடைய பெண்களில் 25 சதவீதம் பேர்இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது சமீபத்திய ஆளிணிவு. ''நம் உடலில் 400 மி.லி.சிறுநீரை மட்டுமே சிறுநீர்ப்பையில் தேக்கிவைக்க முடியும். அந்த அளவுக்கு சிறுநீர் சேர்ந்துவிட்டால் நார்மலாகவே  சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வரும். ஆனால்,சிலருக்கோ இதில் பாதி அளவுக்கு சிறுநீர் தேங்கியிருக்கும்போதே சிறுநீர்  வருவது போன்று தோன்றும். சிலர் அதை அடக்கி வைப்பார்கள்.
அதிகப் படியாக 300 மி.லி. வரை அவர்களால் தாக்குப்பிடிக்க முடியும். அதற்கு  மேல் காலோடு சிறுநீர் வருவது போல் இருக்கும். எனவேபாத்ரூம் நோக்கி ஓடுவார்கள். சிறிது நேரத்தில் மீண்டும் இதே பிரச்னை வரும். 400 மி.லி. சிறுநீரை தேக்குபவர்கள் சராசரியாக தினமும் பகலில்2 & 3 முறையும், இரவில் ஒருமுறையும் சிறுநீர் கழிப்பார்கள். இது நார்மலாக நடப்பது.
ஆனால், 200 அல்லது 300 மி.லி. தேங்கும்போதேஅடிக்கடி சிறுநீர் வந்தால் அது ஏதோ ஒரு பிரச்னையின் ஆரம்பம்  என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்''மருததுவமஎன்கிறார் சென்னைஅப்போலோ மருத்துவமனையின் சிறுநீரக சிகிச்சை நிபுணர் டாக்டர் ''நம் மக்களை ஒரு விதத்தில் பாராட்டியே தீர வேண்டும். இரவில் அடிக்கடிசிறுநீர் வந்தால் நீரிழிவு நோளிணி இருக்குமோ என்று பயந்து பரிசோதனை செளிணிது கொள்கிறார்கள். அதாவது, அடிக்கடி சிறுநீர் வர நீரிழிவுநோளிணி காரணம் என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.
ஆனால், அதுமட்டுமே முழு காரணமல்ல. கட்டுப்பாடற்ற சிறுநீர் வர சிறுநீர் பையில்காசநோளிணி,தொற்று, புற்றுநோளிணி மற்றும் மன அழுத்தம் ஆகியவையும் காரணங்களாக இருக்கலாம். இவற்றில் எந்த காரணத்தால் சிறுநீர்அடிக்கடி வருகிறது  என்பதை பரிசோதிக்க வேண்டும். நீரிழிவு நோளிணி இல்லை என்று தெரிய வந்தால், அதற்கு அடுத்து பரிசோதனைசெளிணிது பார்க்க வேண்டும்.முன்பு இந்த பிரச்னைக்கு சிகிச்சைகள் இல்லாமல் இருந்தது. இப்போது ஏராளமான சிகிச்சை முறைகள் உள்ளன.அதற்கான  டெஸ்ட் செளிணிதால் காரணத்தை சுலபமாக அறிய முடியும்.
2 முதல் 3 மாதங்களில் மருந்து,மாத்திரைகள் மூலம் இந்தப்பிரச்னையை சரி செளிணிய முடியும். இதற்கென்றே சில உடற்பயிற்சிகளும் உள்ளன'' என்று கூறும் டாக்டர் துரைசாமி, ''இந்நோளிணிஆண்களைவிட பெண்களையே அதிகம் தாக்குகிறது. பிரசவ நேரங்களிலும், ஆபரேஷன் மூலம் குழந்தை பெற்றெடுக்கும் பெண்களுக்கும் இந்தப்பிரச்னை அதிகமாக  இருக்கும். இதேபோல, கர்ப்பம் தரிக்கும் முதல் 2 முதல் 3 மாதங்களுக்கு பெண்களுக்கு அடிக்கடி இப்பிரச்னை தோன்றும்.
பின்னர், தானாகவே  சரியாகி  விடும். இதுபோல மெனோபாஸ் காலங்களிலும் இந்நோளிணி பெண்களுக்கு ஏற்படும். பொதுவாகஇருமும்போதோதும்மும் போதோ சிறுநீர் வந்துவிடுவதே இந்நோளிணிக்கான அறிகுறி'' என்கிறார். ''சில ஆண்களுக்கு சிறுநீர் வெளியேறிமுடித்த சிறிது நேரத்திலேயே மீண்டும் துளித்துளியாக வந்து கொண்டே இருக்கும்.
இதற்கு விந்துச்சுரப்பியில் ஏற்படும் அடைப்பேகாரணம்.எப்போதும் சராசரி மனிதனால் கூட முழுமையாக சிறு நீரை வெளியேற்ற முடியாது. 30 முதல் 40 மி.லி. வரை சிறுநீர் பையில்தேங்கியே இருக்கும். இது நார்மல் அளவு. இன்னும் அதிகமாக இருந்தால் பிளாடர் பம்ப் வேலை செளிணியவில்லை என்று அர்த்தம். உடனேமருத்துவரைப் பார்ப்பது அவசியம். மேற்கூறிய  எல்லா பிரச்னைகளையும் கண்டு கொள்ளாமல் விடால் சிறுநீரகங்கள் செயலிழக்கும் அபாயம்உள்ளது…''என்று எச்சரிக்கிறார் டாக்டர் கட்டுப்பாடற்ற சிறுநீர் வர  சிறுநீர் பையில் காசநோளிணி, தொற்று, புற்று நோளிணி மற்றும் மனஅழுத்தம் ஆகியவையும் காரணங்களாக இருக்கலாம்.
http://kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வெள்ளி, 6 மார்ச், 2015

பைல்ஸ் பிரச்னையா?

பைல்ஸ் பிரச்னையா?

அனைவரது உடலில் இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் மலச்சிக்கல். அந்த மலச்சிக்கல் பிரச்சனை அதிகம் இருந்தாலே, அதற்கு அடுத்த நிலையான பைல்ஸ் வந்துவிடும். பைல்ஸை மூல நோய் என்றும் அழைப்பர். இத்தகைய பைல்ஸ் பிரச்சனை வந்தால் சரியாக உட்கார முடியாது. எப்போதும் ஒருவித டென்சன் இருக்கும். ஏன் தெரியுமா? ஆம், மலவாயில் புண் வந்தால் பின்னர் எப்படி இருக்கும். அதிலும் பைல்ஸ் என்பது சாதாரணமானது அல்ல. அது வந்தால், மலவாயில் கழிவுகளை வெளியேற்றியப் பின்னரும், வெளியேற்றும் போதும் கடுமையான வலி ஏற்படுவதோடு, இரத்தப்போக்கு, அரிப்பு போன்றவை ஏற்படும். இந்த பிரச்சனை வருவதற்கு உடலில் அதிகப்படியான வெப்பமும் ஒரு காரணம். எனவே மலச்சிக்கல் வந்தால், அதனை ஆரம்பத்திலேயே சரிசெய்துவிட வேண்டும். அதற்கான மருந்து வீட்டிலேயே இருக்கிறது. அது என்னவென்றால், உணவுகள் தான். குறிப்பாக பைல்ஸ் வந்துவிட்டால், அதனை மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று, அதற்கான மருந்துகளையும் உட்கொள்ளலாம். இல்லையெனில் ஒருசில வீட்டு மருந்துகளைக் கொண்டும் சரிசெய்யலாம். இப்போது அந்த பைல்ஸ் பிரச்சனையை சரிசெய்ய என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

முள்ளங்கி ஜூஸ் பைல்ஸ் இருந்தால் ஒரு டம்ளர் முள்ளங்கி ஜூஸ் குடித்தால், சரியாகிவிடும். அதிலும் எடுத்தவுடன் ஒரு டம்ளரை குடிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து குடித்து வந்தால், சரியாகிவிடும்.
மாதுளை தோல் இந்த சிவப்பு நிற மாதுளைப் பழத்தின் தோல் பைல்ஸ் பிரச்சனையை சரிசெய்யும். அதற்கு மாதுளையின் தோலை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை தினமும் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் குடித்தால், சரியாகிவிடும்.

இஞ்சி மற்றும் எலுமிச்சை ஜூஸ் நீர் வறட்சியும் பைல்ஸ் பிரச்சனைக்கு ஒரு காரணம். எனவே தினமும் இரண்டு முறை இஞ்சி மற்றும் எலுமிச்சையை நீரில் கலந்து ஜூஸ் போன்று இரண்டு முறை குடித்து வந்தால், உடலில் வறட்சி குறைந்து, பைல்ஸ் சரியாகிவிடும்.
அத்திப்பழம் அத்திப்பழத்தில் உலர்ந்ததை வாங்கி, அதனை இரவில் படுக்கும் போது ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்ததும் பாதியை குடித்துவிட்டு, மீதியை மாலையில் குடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் குணமாகிவிடும்.
வெங்காயம் வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால், பைல்ஸால் ஏற்படும் இரத்தப் போக்கை சரிசெய்துவிடலாம். அதுமட்டுமின்றி, அவை மலவாயில் ஏற்படும் வலியையும் குணமாக்கும்.
சரியான நிலை மலம் கழிக்கும் போது சரியான நிலையில் லேசாக அடிவயிற்றை அழுத்தும் படியாக உட்கார்ந்து செல்ல வேண்டும். அவ்வாறு சரியான நிலையில் உட்கார்ந்து செல்வதால், மலக்குடலுக்கு எந்த ஒரு அழுத்தமும் கொடுத்து, கஷ்டப்பட்டு செல்ல வேண்டி இருக்காது. இதனால் பைல்ஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
உடற்பயிற்சி மலச்சிக்கலை தடுத்து, இரத்த சுழற்சியை சீராக்க, தினமும் நன்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதிலும் மிகவும் கடினமாக இருக்கும் உடற்பயிற்சியான எடை தூக்குதல் போன்றவற்றை செய்யவே கூடாது. அதற்கு பதிலாக வாக்கிங், ஜாக்கிங், நீச்சல் போன்ற லேசான உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
மஞ்சள் மசாலா பொருட்களில் காயங்களை குணப்படுத்தும் பொருள் அதிகம் உள்ளது. எனவே மஞ்சளை சூடான நீரில் கரைத்து, தினமும் குடித்து வந்தால், பைல்ஸ் இயற்கையாக சரியாகிவிடும்.

வாழைப்பழம் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனை சரியாகிவிடும் வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவார்கள். அதிலும் இதை இரவில் ஒரு டம்ளர் சூடான பால் குடித்துவிட்டு, ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால், மறுநாள் காலையில் எந்த ஒரு கஷ்டமுமின்றி கழிவுகளை வெளியேற்றலாம்.

பருப்பு வகைகள் பருப்பு வகைகளில் காராமணி, உளுத்தம் பருப்பு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்தால், பைல்ஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்
http://kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

புதன், 4 மார்ச், 2015

இனிப்புக்குள் ஒளிந்திருக்கும் ஆபத்து! உங்கள் தட்டில் உணவா... விஷமா?

இனிப்புக்குள் ஒளிந்திருக்கும் ஆபத்து! உங்கள் தட்டில் உணவா... விஷமா?

உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான சர்க்கரை நோயாளிகள் காபி, டீ-யில் தவறாமல் உபயோகப்படுத்துவது 'சுகர்ஃப்ரீ/ஈக்குவல்' (Sugar free/Equal) எனும் வஸ்துவைத்தான். இன்றைக்கு இது அனைத்து ஹோட்டல்கள், வீடுகள் என்று எங்கெங்கும் நீக்கமற தினமும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு முன், சர்க்கரைக்கு மாற்றாக உபயோகப்படுத்தப்பட்ட பொருள் 'சாக்ரின்'. அதைப் பயன்படுத்தினால், 'சிறுநீர்ப்பையில் புற்றுநோய் வரலாம்' என்று கருதப்பட்டதால், மெள்ள அந்த இடத்தை 'சுகர்ஃப்ரீ/ஈக்குவல்' பிடித்துக் கொண்டது. சுகர்ஃப்ரீயின் வேதியியல் பெயர் அஸ்பார்டேம் (Aspartame).
இந்த 'அஸ்பார்டேம்' சாக்ரினைவிட மிகவும் கெடுதலான பொருள் என்று உலகெங்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனாலும், நூற்றுக்கணக்கான மருத்துவ ஆராய்ச்சி முடிவுகளை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு, அசைக்க முடியாத மாபெரும் ராட்சத சக்தியாக 'அஸ்பார்டேம்' வேரூன்றிவிட்டது. இதைப் பற்றிய மருத்துவ உண்மைகளை உங்களுக்குச் சொல்லவேண்டியது என் தார்மிகக் கடமை.

1971-ம் ஆண்டு 'ஸியர்லி' என்கிற பிரபல மருந்து கம்பெனியின் மருத்துவ ஆராய்ச்சியாளர் டாக்டர் சிலேட்டர், வயிற்றுப் புண்ணுக்கான மருந்துகளை சோதனை செய்து கொண்டிருந்தார். தற்செயலாக அவரின் விரலில் பட்ட வெள்ளை நிற பவுடரை சுவைத்தார். சீனியைவிட 500 பங்கு இனிப் பாக இருந்த அந்த பவுடர்தான் 'அஸ்பார்டேம்'. அன்று முதல் 'ஸியர்லி' கம்பெனிக்கு அடித்தது யோகம்! 1974-ம் ஆண்டு அமெரிக்காவின் எஃப்.டி.ஏ. (FDA-Food and Drug Administration) இதற்கு அனுமதி அளித்தது. அதற்குள், 'அஸ்பார்டேம் கெடுதலை உண்டு பண்ணலாம்' என்று நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்துவிட்டன.

வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனநலப் பேராசிரியர் டாக்டர் ஓல்னி அஸ்பார்டேமுக்கு எதிராக தனி மனித போராட்டத்தையே தொடங்கினார். அஸ்பார்டேம் உட்கொண்ட எலிகளுக்கு மூளையில் புற்றுநோய் வருவதை நிரூபித்து, 'மனிதர்களுக்கும் குறிப்பாகக் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், மற்றும் முதியவர்கள் பாதிக்கப்படலாம்' என்ற கருத்துக்களை முன் வைத்தார். உடனே (1975) அஸ்பார்டேமுக்கு வழங்கிய அங்கீகாரத்தை வாபஸ் பெற்றது எஃப்.டி.ஏ. அதுவரை பணமழையில் நனைந்து வந்த 'ஸியர்லி' கம்பெனி சும்மா இருக்குமா..? 'அஸ்பார்டேம் மிகவும் பாதுகாப்பானது' என கிட்டத்தட்ட 200 மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டது.

ஒரு விஷயத்தை 'கெட்டது' என்று சொல்வதற்கும்... அதே விஷயத்தை 'நல்லது' என்று சொல்வதற்கும் இந்த டாக்டர்களே ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடுகிறார்களே... என்று உங்களுக்கு ஆச்சர்யமாக / அதிர்ச்சியாக இருக்கிறதா? சக்தி வாய்ந்த மருந்து கம்பெனிகள் நினைத்தால், எந்த மாதிரி ஆராய்ச்சி முடிவுகளும் வெளியிட முடியும் என்கிற கசப்பான உண்மையை வருத்தத்தோடு ஒப்புக்கொள்கிறேன். 'ஒருவன் கொலைகாரன்' என்று சொல்வதற்கும் வக்கீல்கள் இருக்கிறார்கள். 'அவனே நிரபராதி' என்று வாதிடுவதற்கும் வக்கீல்கள் இருக்கிறார்களே, அதுபோலத்தான்.

'ஸியர்லி கம்பெனி வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஜோடிக்கப்பட்ட பொய்' என்று டாக்டர் ஓல்னி வாதிட்டார். இதை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரல் ஸ்கின்னர், விசாரணை கமிஷன் அமைக்காமல் இழுத்தடித்தார். ஒரு கட்டத்தில் பதவியை ராஜினாமா செய்தார் (பிறகு இவர், ஸியர்லி கம் பெனியின் சட்ட ஆலோசகராகச் சேர்ந்து கொண்டது தனிக்கதை).
1984-ம் ஆண்டு அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜனாதிபதி பதவியில் அமர்ந்த ரீகன், தன்னுடைய நெருங்கிய நண்பரான ஹேஸ் என்பவரை எஃப்.டி.ஏ-வின் புதிய தலைவராக நியமித்தார். அதே சூட்டோடு அஸ்பார்டேமுக்கு மீண்டும் அங்கீகாரம் கொடுத்துவிட்டு, அடுத்த வருஷமே பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஸியர்லி கம்பெனியிலேயே சேர்ந்தார் ஹேஸ். க்ளைமாக்ஸாக 1985-ம் ஆண்டு ஸியர்லி கம்பெனியை விலைக்கு வாங்கிவிட்டது... 'மான்சான்டோ'.

முந்தைய சாக்ரினை உற்பத்தி செய்தது, இந்த மான்சான்டோ நிறுவனம்தான். பிரபல பூச்சிக்கொல்லி மருந்தாக உலகெங்கும் உபயோகிக்கப்பட்டு, தற்போது இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளெல்லாம் தடை செய்து விட்ட டிடிடீ (DDT) உற்பத்தி செய்பவர்களும் இவர்கள்தான்.

தற்போது, உலகளவில் முக்கால் பங்கு அஸ்பார்டேமை உற்பத்தி செய்வது மான்சான்டோ. மீதி கால்பங்கு உற்பத்தி செய்வது யார் தெரியுமா... அஜினோமோட்டோ! உலகெங்கிலும் உள்ள சமையல் அறைகளைக் கெடுத்து வருவதாகக் குற்றம்சாட்டப்படும் 'மானோசோடியம் குளுடாமேட்' (MSG) என்கிற வேதிப்பொருள் கலந்த அஜினாமோட்டோவை உற்பத்தி செய்பவர்கள்தான் இவர்கள். இந்த இரண்டு பேரின் பிடியில் சிக்கியுள்ள அஸ்பார்டேம், நீங்கள் அன்றாடம் பருகும் காபி, டீயில் தவறாமல் இடம் பிடித்ததில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது?


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

திங்கள், 2 மார்ச், 2015

கம்ப்யூட்டரில் ஃபங்சன் கீ பயன்பாடு

கம்ப்யூட்டரில் ஃபங்சன் கீ பயன்பாடு
கம்ப்யூட்டரில் எண் வரிசை விசைகளுக்கு மேலே இருப்பது ஃபங்சன் கீ வரிசை. இதில் பெரும்பாலும் நாம் பயன்படுத்தும் இரண்டு விசைகள் F1 மற்றும் F5. 
இணையத்தைப் பயன்படுத்தும்போது மட்டும் பெரும்பாலும் F5 விசையை மட்டும் பயன்படுத்துவோம். இது வலைப்பக்கத்தை மீள் தொடக்கம் (Refresh) செய்வதற்குப் பயன்படும். 
மற்ற விசைகளும் இதைப்போன்று பயன்மிக்க பயன்பாடுகளைக் கொண்டதுதான்.

ஒவ்வொரு விசையும் எதற்கு எதற்கு பயன்படுகிறது என்பதை தெரிந்துகொண்டால் மிகவும் பயன்மிக்கதாக இருக்கும். எதையும் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தால் அதுவே பழக்கமாகிவிடும்.  
பிறகு உங்களுக்கும் விரைவாக பிரௌசிங் செய்வது, விரைவாக கணினியைக் கையாள்வது எளிமையாகிவிடும். 
F1 விசை பயன்பாடு: 
  • அனைத்து புரோகிராம்களிலும் இது உதவிகுறிப்பு பக்கத்தைத் திறக்கப் பயன்படுகிறது. அதாவது நீங்கள் எந்த புரோகிராமை பயன்படுத்திக்கொண்டிருக்கிறீர்களோ அந்த புரோகிராம் பற்றிய உதவிக்குறிப்புகளைப் பெறலாம்.  (உதாரணமாக போட்டோஷாப் மென்பொருளைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும்பொழுது, அதைப்பற்றி உதவிக்குறிப்புகளைப் பெற F1 விசையை அழுத்திப் பெறலாம். போட்டோஷாப் மட்டும் அல்ல.. கணினியில் உள்ள அனைத்து புரோகிராம்களுக்கும் உதவிக்குறிப்புகளைப் பெற இந்த F1 விசைப் பயன்படுகிறது.)
  • CMOS செட்டப்பில் பயன்படுகிறது. 
F2 விசை பயன்பாடு: 
  • ஒரு கோப்பு அல்லது ஒரு கோப்புறைக்கு "மாற்றுப்பெயர்" (Rename) கொடுக்கப் பயன்படுகிறது. Boot menu செல்ல பயன்படுகிறது. 
  • மைக்ரோசாப்ட் வேர்டில்..
  • புதிய டாகுமெண்ட் ஒன்றை திறக்கப்  (Alt+Ctrl+F2)பயன்படுகிறது
  • Print Preview பார்க்க (Ctrl+F2) பயன்படுகிறது. 
F3 விசை பயன்பாடு: 
  • பெரும்பாலான புரோகிராமில் தேடுதல் வசதியை (Search) கொண்டு வர பயன்படுகிறது. 
  • மைக்ரோசாப்ட் வேர்ட் டாகுமெண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தையை பெரிய எழுத்திலிருந்து சிறிய எழுத்தாக (Upper case to Lower case) மாற்ற பயன்படுகிறது. 
  • MS-DOS லும் இறுதிய வரியை ரிப்பீட் (Repeat)செய்ய பயன்படுகிறது. 
F4 விசையின் பயன்பாடு: 
  • புரோகிராமில் உள்ளதை Find செய்யப் பயன்படும் திரையை கொண்டுவர பயன்படுகிறது. 
  • மைக்ரோசாப்ட் எம்எஸ் வேர்ட் டாகுமெண்டில் முந்தைய வரி ஒன்றை பேஸ்ட் செய்ய பயன்படுகிறது. 
  • ஒரு புரோகிராமை மூட பயன்படுகிறது. (Alt+F4)
  • தற்பொழுது காட்சித்திரையில் தோற்றமளிக்கும் புரோகிராமை (Current Window) மூட (Ctrl+F4)பயன்படுகிறது. 
F5 விசையின் பயன்பாடு: 
  • கணினியை அல்லது இணையப்பக்கத்தை மீள்தொடக்கம் (Reload அல்லது Refresh)செய்ய பயன்படுகிறது. 
  • மைக்ரோசாப்ட் வேர்டில் Find and Replace விண்டோவைத் திறக்கப் பயன்படுகிறது. 
  • பவர்பாய்ண்ட் பிரசன்ட்டேசனை இயக்கப் பயன்படுகிறது. 
F6 விசையின் பயன்பாடு: 
  • கூகிள் குரோம்,இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ் போன்ற உலவிகளில் கர்சரை அட்ரஸ்பாருக்கு கொண்டுசெல்ல பயன்படுகிறது. 
  • மைக்ரோசாப்ட் வேர்டில் புதிய டாகுமெண்ட்டைத் திறக்க பயன்படுகிறது. (Ctrl+Shift+F6)
F7 விசையின் பயன்பாடு: 
  • மைக்ரோசாப்ட் வேர்ட் டாகுமெண்டில் Spelling check மற்றும் Grammer Check செய்யப் பயன்படுகிறது. 
  • மொசில்லா பயர்பாக்சில் Caret Brwosing பயன்பாட்டைத் திறக்கப் பயன்படுகிறது. 
F8 விசை பயன்பாடு: 
  • விண்டோஸ் கணினி தொடக்கம் செய்யும்போது Safe Mode ல் திறக்கப் பயன்படுகிறது. 
F9 விசை பயன்பாடு: 
  • Quark 5.0 வில் மெசர்மெண்ட் டூல்பார் திறக்கப் பயன்படுகிறது. 
F10 விசையின் பயன்பாடு: 
  • மைக்ரோசாப்ட் வேர்டில் "MenuBar" திறக்கப் பயன்படுகிறது. 
  • மௌசில் ரைட் கிளிக் பயன்பாட்டைக் கொண்டுவர பயன்படுகிறது (Shift+F10)
F11 விசையின் பயன்பாடு: 
  • கணனியில் முழுதிரையை (Full Screen)கொண்டுவர பயன்படுகிறது. 
F12 விசையின் பயன்பாடு: 
  • மைக்ரோசாப்ட் வேர்டில் Save As Menu  கொண்டுவர பயன்படுகிறது. 
  • மைக்ரோசாப்ட் வேர்ட் டாகுமெண்ட்டை சேமிக்க பயன்படுகிறது (Shift+F12)
  • மைக்ரோசாப்ட் வேர்ட் டாகுமெண்ட்டை பிரிண்ட் செய்ய பயன்படுகிறது. (Ctrl+Shift+F12)
http://www.pettagum.blogspot.in/2013/10/blog-post_4124.html

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

பிறந்தகுழந்தைகளுக்கு டயாப்பர் அணிவிப்பது சரியானதா?

  டயாப்பர் அணிவிக்காமல் இன்றைய சூழ்நிலையில் சமாளிக்க முடிவதில்லை. டயாப்பர் அணிவிக்கக் கூட...

Popular Posts