லேபிள்கள்

வியாழன், 9 ஜனவரி, 2014

உங்கள் முக அழகைப் பாதிக்கிறதா கருவளையம் ! இதோ அதை மறைய வைக்க சில டிப்ஸ் !

உங்கள் முக அழகைப் பாதிக்கிறதா கருவளையம் ! இதோ அதை மறைய வைக்க சில டிப்ஸ் !

உங்களை பளிச்சென்று காட்டுவதே முகம் தான். அந்த முகத்தில் வசீகரமான அழகை தருவது கண்கள் தான். பல பெண்களுக்கு அவர்களின் கண்களே மைனஸ் பாயிண்ட் ஆக அமைந்து விடுவது உண்டு.நாம் இங்கே அவர்களின் கண் குறைபாட்டை குறிப்பிடவில்லை.அழகான கண்ணைச் சுற்றிலும் திடீரென்று தோன்றும் கருவளையத்தை தான் குறிப்பிடுகிறோம்.கண்களுக்கு கீழ் நோக்கினால் இந்த கருவளையத்தைக் கண்டுபிடித்து விடலாம். அந்த இடத்தில், சுமார் அரை அங்குலம் அகலத்திற்கு லேசான கருப்பு நிறத்தில் வில் போன்ற வளைவாக சருமம் காணப்படும். இது ஒரு பெண்ணின் முக அழகையேக் கெடுத்து விடும். இந்த கருவளையம் ஏற்பட பல காரணங்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். முதல் காரணம், அந்த இடத்தில் தோல் அதிகமாக சுருக்கம் அடைந்து காணப்படுவது தான். அந்த சுருக்கமே கருப்பு நிறமாக மாறி, கருவளையத்தை ஏற்படுத்தி விடுகிறது.சத்துக்கள் இல்லாத உணவு வகைகளை உண்பது கூட இதற்கு காரணமாக அமையலாம். தோலை வெளுப்படையச் செய்யும் தாது உப்புகளும், புரதமும், கொழுப்புச் சத்தும் உள்ள உணவுப் பொருட்களை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் இந்த கருவளையம் நாளடைவில் மறைந்து விடும்.

கண்களுக்கு அதிக வேலை கொடுத்தாலும் கருவளையம் வரலாம். அதாவது, அதிக நேரம் கண் விழித்து படிக்கும் பழக்கம் இருந்தாலோ அல்லது டி.வி. பார்த்து வந்தாலோ கருவளையம் தோன்றலாம். நீண்டகாலம் உடல்நலக்குறைவாக இருப்பதும், உணவு கட்டுப்பாட்டில் இருப்பதும்கூட இதற்கு காரணமாக அமையலாம்.சில பெண்கள் என்ன வேலையாக இருந்தாலும் இழுத்துப் போட்டுக் கொண்டு தாங்களே செய்வார்கள். வேலையை கொஞ்சமாவது பகிர்ந்து கொள்வோம் என்று எண்ண மாட்டார்கள். இப்படி எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக் கொண்டு பார்த்தாலும்கூட கருவளையம் வந்துவிடும். அதாவது, அதிகப்படியான வேலையை தொடர்ந்து செய்யும் போது அதிகப்படியான சோர்வு ஏற்பட்டு, ஏற்பட்டு இக்குறைபாடு வந்துவிடும். ரத்தசோகை பாதிப்பு உள்ளவர்களுக்கும் கூட கண்ணில் கருவளையம் வரலாம்.

கருவளையத்தை எப்படி விரட்டுவது?

கருவளையத்தை விரட்டுவதற்காக ரொம்பவும் ரிஸ்க் எடுக்க வேண்டாம். அன்றாட சமையலில் கொஞ்சம் அக்கறை காட்டினாலே போதும்.கண்ணில் உள்ள கருவளையத்தை நீக்க இரும்புச்சத்து அதிகம் கொண்ட காய்கறிகளை அதிகம் உண்ண வேண்டும். முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, முள்ளங்கி, சின்ன வெங்காயம், பூண்டு, அவரைக்கீரை, ஆப்பிள், நெல்லிக்காய், விளாம்பழம், நாவல்பழம், கமலா ஆரஞ்சு, வாழைப்பழம், வெள்ளரிப்பழம், பாகற்காய், வாழைத்தண்டு போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. பொன்னாங்கன்னி கீரை கூட இதற்கு நல்லது தான்.இந்த காய்கறிகளை சமையலில் அதிகம் பயன்படுத்தினாலே நாளடைவில் கருவளையத்தின் பாதிப்பில் இருந்து தப்பிவிடலாம். அழகான கண்களுக்கு சொந்தக்காரி ஆகிவிடலாம்.

கருவளையம் உள்ளவர்கள், இதுபோக இன்னொரு முறையையும் பின்பற்றலாம்.

வெற்றிலை போட பயன்படுத்தும் சுண்ணாம்பை ஒரு பட்டாணி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு கப் குளிர்ந்த நீரில் கரைத்து சுமார் ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள். அந்த சுண்ணாம்பு நீரானது தெளிந்தவுடன், அதில் இருந்து 2 ஸ்பூன் தெளிந்த தண்ணீரை வேறொரு கிண்ணத்தில் பிரித்தெடுத்துக் கொள்ளுங்கள்.பிரித்தெடுத்த தண்ணீரின் அளவுக்கு எலுமிச்சைச் சாறும் பிழிந்து வடிகட்டிக் கொள்ளுங்கள். தொடர்ந்து, இரண்டையும் ஒன்றாக கலந்து, அதை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கண்ணை சுற்றி பூசுங்கள். கண்விழியில் பட்டுவிடக்கூடாது.இப்படி தொடர்ந்து செய்து வந்தால் சில நாட்களில் கண் கருவளையம் மறைந்து விடும். அதன் பின்னர் கருவளையமே வரக்கூடாது என்று நீங்கள் விரும்பினால், உணவு முறையில் தான் மாற்றம் கொண்டுவர வேண்டும். அதாவது, இரும்புச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
http://www.valaitamil.com/eye-circle-remover-tips_7233.html

--
*more articles click*
www.sahabudeen.com


புதன், 8 ஜனவரி, 2014

சாப்பிட்ட உடன் செய்யக்கூடாதவை

சாப்பிட்ட உடன் செய்யக்கூடாதவை

சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப் பெரிய கெடுதலை விளைவிக்கும்.
சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம் உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது. எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். ஏனெனில் தேநீர் இழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச் சத்தினை கடினமாக்கி (Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.
சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள் (Don't Loosen Your Belt) ஏனெனில் அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.
சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில் குளிக்கும் போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்.
சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர், ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச்சொல்வது உண்டு. சர்க்கரை நோய் (டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல கேட்டிருப்பீர்கள். சாப்பிட்ட பின் நடந்தால் செரிமான உறுப்புகளுக்கு உணவு போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந் நடைப் பழக்கம் பயன்படும். எனவே இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது.
மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணி நேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும்.
குலசை.ஆ.சாமி


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

செவ்வாய், 7 ஜனவரி, 2014

அல்சரின் அறிகுறிகளும் அதை குணப்படுத்துவதற்கான வழிகளு

அல்சரின் அறிகுறிகளும் அதை குணப்படுத்துவதற்கான வழிகளும்!


அல்சர் என்பது உடலில் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் புண்களைக் குறிக்கும். புண்கள் ஏற்பட்டு, அப்புண்ணில் வலி ஏற்பட்டு, அந்த இடம் பாதிப்படைந்து, வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால், அவற்றில் இரண்டாம் தொற்று ஏற்பட்டு, உடல் சோர்வடைந்து, சிகிச்சையில் பெரும் தாமதத்தை ஏற்படுத்துவதே அல்சரின் அறிகுறிகளாகும்.

முன்பெல்லாம் மனஉளைச்சல், உணவு மற்றும் வாழ்க்கை மாற்றத்தால் அல்சர் வருவதாக நினைத்துக் கொண்டிருந்த விஞ்ஞானிகள், இப்பொழுது ஹீலிபாக்டார் பைலோரி (helibactor phylori) அல்லது எச்.பைலோரி என்ற ஒரு வகை பாக்டீரியாவால் அல்சர் ஏற்படுவதாக கூறுகின்றனர்.

நேரம் கடந்து உணவு உண்பதும் அல்சர் வர காரணமாக உள்ளது. மேலும் எடை இழப்பு, பசியின்மை, வீக்கம், குமட்டல், வாந்தி ஆகியவை அல்சரின் பிற அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் அவசரத் தன்மை கொண்டவை. குறிப்பாக மலம் ஒரு இருண்ட நிறத்தில் இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். சரி, இப்போது அல்சரை குணப்படுத்தும் சில விதிமுறைகளை பார்ப்போமா!!!

1.
சிவப்பு முட்டைகோஸை சாறெடுத்து அருந்தலாம் அல்லது அப்படியே உண்ணலாம்.

2.
தொடர்ந்தோ அல்லது மீண்டும் மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டாலோ, அது அல்சரின் முதல் அறிகுறியாக இருக்கலாம். ஆகவே இந்த நேரத்தில் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

3.
ஒருவேளை மருந்துகள் சாப்பிட்டும், நிலைமை மோசமாக இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சோதனைகளில் ஏதாவது ஒன்றை பரிசோதிக்க வேண்டும்.

-
உயர் இரையக தொடர் (upper gastrointestinal (G.I) series): அல்சர் உள்ளதா என்பதை அறிய பேரியம் என்ற பானத்தை குடித்துவிட்டு x-கதிர்களை எடுக்க வேண்டும்.

-
எண்டோஸ்கோப்பி (endoscopy): உணர்வற்ற நிலையில் இருக்கும் போது, மருத்துவர் உங்கள் வாய் வழியாக மெல்லிய குழாய் ஒன்றை செலுத்துவார். அக்குழாய் தொண்டை மற்றும் உணவுக்குழாய் மூலம் வயிற்றை சென்றடையும். அந்த குழாயின் முடிவில் ஒரு சிறிய கேமரா பொருத்தப்பட்டிருக்கும். அந்த கேமரா மூலம் மருத்துவர் செரிமான பாதையை பார்த்து, அங்குள்ள ஒரு திசு மாதிரியை ஆய்வு செய்வார்.

-
ஆன்டிபாடிக்களுக்கான ரத்தப் பரிசோதனையின் மூலம் எச்.பைலோரி (h.phylori) பாக்டீரியா உள்ளனவா என்பதை அறியலாம். – எச்.பைலோரி பாக்டீரியா இருக்கிறதா என்று அறிய மல பரிசோதனை செய்ய வேண்டும். – யூரியா என்ற பொருளை கரைத்து குடித்த பின், உங்கள் மூச்சை சரி பார்க்கும் மூச்சுப் பரிசோதனையை செய்ய வேண்டும்.

4.
அல்சர் நோய் உள்ளதை உறுதி செய்த பின் மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் அல்சரை சரி செய்யலாம்.

5.
புத்தம் புதிய பழ வகைகள், காய்கறிகள் போன்ற உயர் நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிட்டால், அல்சர் குணமாவது மட்டுமல்லாமல், அதனை வராமலே தடுக்கலாம்.

6.
ஃப்ளேவோனாய்டுகள் கொண்ட உணவு மற்றும் சாறு வகைகளை சாப்பிட வேண்டும். ஆப்பிள்கள், செலரி, கிரேன் பெர்ரீஸ், பூண்டு மற்றும் வெங்காயம் போன்றவற்றிலும், சில வகையான தேநீர் வகையிலும், இந்த ஃப்ளேவோனாய்டுகள் அதிகம் உள்ளன.

7.
காரசாரமான உணவை உண்ட பின் அல்சர் வலி அதிகரித்தால், அவற்றை நீக்கவும். காரசாரமான உணவுகளை உண்ணுவதால் அல்சர் வருவதில்லை என்று மருத்துவர்கள் இப்பொழுது கூறினாலும், சில ஆய்வுகள், இது போல் உணவு உண்ட பின் வலியின் அறிகுறி அதிகமாவதாக கூறுகிறது.

8.
காபியை முழுமையாகவோ தவிர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் கார்போனேட் பானங்கள் மற்றும் காப்ஃபைன் நீக்கப்பட்ட பானங்களையும் நீக்க வேண்டும். இந்த பானங்கள் அனைத்தும் வயிற்றில் உள்ள அமிலத்தை அதிகரிக்கச் செய்து புண்களின் அறிகுறிகளை மிகவும் மோசமாக்கிவிடும்.

9.
அல்சர் பூரணமாக குணமாகும் வரை மது அருந்துவதை முற்றிலுமாக தவிர்க்கவும். அனைத்து சிகிச்சைகளும் முடிந்த பிறகு மிதமான மதுவை அருந்தலாம். ஆனால் மது அருந்தும் முன் மருத்துவரை அணுக வேண்டும்.

10.
அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற அல்சரின் அறிகுறிகளை கட்டுப்படுத்த தன்னிச்சை அமில முறிவுகளை பயன்படுத்தலாம்.

நன்றி:http://www.tamilcloud.com


--
*more articles click*
www.sahabudeen.com


திங்கள், 6 ஜனவரி, 2014

18 வகையான வலிகளுக்கான சிறந்த நிவாரணிகள்

18 வகையான வலிகளுக்கான சிறந்த நிவாரணிகள்

ஓடியாடி வேலை செய்த காலம் போய், ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதேப்போல் அத்துடன் உடலில் பல வலிகளும் அதிகரித்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம், போதிய ஓய்வு இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது, தூக்கமின்மை என்று சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக் கொண்டே போகலாம். மேலும் இத்தகைய செயலால் உடலில் நாள்பட்ட வலிகள் தங்கி, உடலின் ஆரோக்கியத்தையே கெடுத்துவிடுகிறது. இதற்காக எத்தனையோ மருந்து மாத்திரைகள் கடைகளில் விற்கப்படுகின்றன. இருப்பினும் அவை தற்காலிகமானவையே தவிர, நிரந்தரமானவை அல்ல.
மேலும் இவ்வாறு மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொண்டால், அவை இதயம் மற்றும் சிறுநீரகத்திற்கு பெரும் அழுத்தத்தைக் கொடுத்துவிடும். எனவே மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதை விட, இயற்கை பொருட்களால் சரிசெய்வதன் மூலம், அதிலிருந்து நிரந்தரத் தீர்வையும் பெறலாம். ஆனால் பலர் இயற்கை பொருட்கள் நல்ல தீர்வைத் தருவதில்லை என்று அதனை பின்பற்றுவதை தவிர்க்கின்றனர். ஆனால் அது தவறான கருத்து. உடலில் உள்ள பிரச்சனைகளை உடனே சரிசெய்யும் பொருட்கள் எப்போதுமே உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. எந்த ஒரு பொருள் மெதுவாக பிரச்சனைகளை சரிசெய்கிறதோ, அது அந்த பிரச்சனையை முற்றிலும் சரிசெய்துவிடும்.
அதுமட்டுமல்லாமல், எந்த வலிக்கு எந்த பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது சரியாக தெரியாததால், பலரால் இயற்கை பொருட்களால் நல்ல பலனை உடனே பெற முடிவதில்லை. இப்போது அப்படி உடலில் ஏற்படும் பல்வேறு வலிகளை சரிசெய்யும் சில நிவாரணிகளைப் பார்ப்போமா!!!
தேன்: தொண்டை வலி
தேன் தொண்டையில் ஏற்படும் வலிக்கு ஒரு சிறந்த நிவாரணியாகும். எனவே தொண்டையில் புண் அல்லது அதனால் ஏற்படும் வலியை போக்குவதற்கு, தேனை தினமும் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
காபி: ஒற்றை தலைவலி
காப்ஃபைனை தினமும் அளவுக்கு அதிகமாக பருகினால் தான், உடலுக்கு ஆபத்தே தவிர, அளவாக பருகினால், ஒற்றை தலைவலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
பூண்டு எண்ணெய்: காது வலி
காதுகளில் வலி ஏற்பட்டால், அப்போது பூண்டுகளை தட்டி, கடுகு எண்ணெயில் போட்டு வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனை காதுகளில் ஊற்றினால், உடனே வலி நீங்கிவிடும்.
கிராம்பு: பல் வலி
சொத்தை காரணமாக பற்களில் வலி ஏற்பட்டால், அப்போது கிராம்புகளை, அந்த பற்களின் மேல் வைத்து கடித்துக் கொண்டால், பல் வலி போய்விடும்.
வெதுவெதுப்பான நீர் குளியல்: தசைப் பிடிப்பு
உடலில் ஆங்காங்கு தசைப் பிடிப்புகள் ஏற்பட்டால், அப்போது வெதுவெதுப்பான நீரில் குளியல் எடுத்தால், பிடிப்புக்கள் நீங்குவதோடு, உடலுக்கு மசாஜ் செய்தது போன்றும் இருக்கும்.
தயிர்: மாதவிடாய் பிடிப்புக்கள்
தயிரில் கால்சியம் மற்றும் மக்னீசியம் இருப்பதால், அது மாதவிடாயின் போது ஏற்படும் தசைப்பிடிப்புக்களை சரிசெய்யும். அதிலும் அந்த நேரத்தில் தினமும் 2 கப் தயிர் சாப்பிட வேண்டும்.
உப்பு: பாத வலி
நிறைய மக்களுக்கு இரவில் படுக்கும் போது பாத வலியால் அவஸ்தைப்படுவார்கள். முக்கியமாக கர்ப்பிணிகள் பாத வீக்கத்தால் பாதிக்கப்படுவார்கள். அப்போது வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து, அந்த நீரில் கால்களை சிறிது நேரம் ஊற வைத்தால், வலி நீங்குவதோடு, வீக்கமும் குறையும்.
திராட்சை: முதுகு வலி
முதுகு வலியின் போது திராட்சை சாப்பிட்டால், உடலில் இரத்த ஓட்டமானது சீராக இருந்து, முதுகு வலி வராமல் தடுக்கும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே நாள்பட்ட முதுகு வலியைக் கொண்டவர்கள், தினமும் திராட்சை சாப்பிட்டால், முதுகு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
மஞ்சள்: வீக்கத்தை குறைக்கும்
மஞ்சளில் எண்ணற்ற ஆன்டி-செப்டிக் தன்மை உள்ளதால், அது பல்வேறு வலிகள் மற்றும் வீக்கங்களை சரிசெய்யும். அதிலும் வீக்கம் அதிகம் உள்ள இடத்தில், மஞ்சளை தண்ணீரில் கலந்து, அந்த பேஸ்ட்டை தடவினால், வீக்கமானது தணியும்.
செர்ரிப் பழங்கள்: மூட்டு வலி
மூட்டு வலி உள்ளவர்கள் செர்ரிப் பழத்தை அதிகம் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆந்தோசையனின்கள் மூட்டு வலியை குணமாக்கும்.
ஆப்பிள் சீடர் வினிகர்: நெஞ்செரிச்சல்
அசிடிட்டியினால் ஏற்படும் நெஞ்செரிச்சலின் போது, 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர்ல தண்ணீரில் கலந்து, சாப்பிடுவதற்கு முன்பு குடிக்க வேண்டும். இதனால் அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் சரியாகும்.
தக்காளி: கால் பிடிப்பு
இரவில் கடுமையான கால் பிடிப்பு ஏற்படுகிறதா? அப்படியானால், உணவில் தக்காளியை அதிகம் சேர்த்தால், அதில் உள்ள பொட்டாசியம் கிடைத்து, நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
மீன்கள்: அடிவயிற்று வலி
மீன்களில் சால்மன் அல்லது டூனா போன்ற மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இது வயிற்றில் உள்ள புண்களை சரிசெய்யக்கூடிய சக்தி கொண்டவை. எனவே இத்தகைய மீன்களை அதிகம் சாப்பிட்டால், அடிவயிற்றில் ஏற்படும் வலியைத் தணிக்கலாம்.
ப்ளூபெர்ரி: சிறுநீரகப் பாதை தொற்று
சிறுநீரகப் பாதையில் தொற்று ஏற்பட்டிருந்தால், அத்தகையவர்கள் ப்ளூபெர்ரியை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, அந்த பிரச்சனையை சரிசெய்யும்.
ஓட்ஸ்: மாதவிடாய் வயிற்று வலி
மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலியை சரிசெய்ய, ஓட்ஸ் பெரிதும் உதவியாக இருக்கும். எனவே தினமும் 1 கப் ஓட்ஸை காலையில் சாப்பிடுங்கள்.
அன்னாசி: வாயுத் தொல்லை
வாயுவினால் ஏற்படும் வயிற்று வலியை தவிர்ப்பதற்கு, அன்னாசியை சாப்பிட்டு வந்தால், அன்னாசி வயிற்றில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, வயிற்றில் வாயு சேர்வதைத் தடுக்கும்.
ஆளி விதை: மார்பக வலி
மார்பக வலி ஏற்பட்டால், அதனை சரிசெய்ய ஆளி விதைகளை உணவில் சேர்த்தால், அது அந்த வலியை கட்டுப்படுத்தும்.
புதினா: தசைப்புண்
அதிகப்படியான வேலைப்பளுவால் தசைகள் அளவுக்கு அதிகமாக வலிக்க ஆரம்பித்தால், அப்போது வெதுவெதுப்பான நீரில் சிறிது புதினா எண்ணெய் சேர்த்து குளித்தால், அது வலியைக் குறைத்துவிடும்.


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

இது வேண்டாம்..அது...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ

ஒரு சின்ன கேள்வியோடு இந்த இடுகையை தொடங்குகிறேன்....

ஹலால், ஹராம் என்ற புரிதல் நமக்கு எந்த வயதிலிருந்து வந்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஹராமான, தடுக்கப்பட்ட உணவு என்று சொன்னாலே பலருக்கு உடனே நினைவுக்கு வருவது பன்றியின் இறைச்சியும், மதுவும் தான். பெரும்பாலான முஸ்லிம்கள் பன்றியின் பெயரைக்கூட உச்சரிக்கமாட்டார்கள், பதிலாக 'நாலு கால்' என்றே கூறுவோம் அல்லவா? அந்தளவுக்கு நமக்கு அல்லாஹ் ஹராமக்கியிருக்கும் அந்த இறைச்சியை நாம் வெறுக்கிறோம், அதை வெளிப்படையாக காட்டவும் செய்கிறோம். இந்த ஒரு விஷயம் மட்டும் சிறு வயதிலிருந்தே எல்லார் மனதிலும் ஆணியடித்தார் போல் பதிந்துவிட்டது அல்லவா?
ஹராம் வேணாம்... ஹலால் உணவு:
ஆனால் ஹராம் என்பது பன்றியின் இறைச்சி மட்டும் தானா? அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி அறுக்கப்படாத எந்த ஒரு பிராணியும் நமக்கு தடுக்கப்பட்டவை தானே? நாம் உட்கொள்ளும் உணவு ஹலாலாக இல்லாத பட்சத்தில் நாம் கேட்கும் எந்த துவாவும் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்தியா போன்ற பலதரப்பட்ட வழிபாடு, கலாச்சார பின்னணி கொண்ட நாடுகளில் நாம் செல்லும் இடமெல்லாம் ஹலால் உணவு கிடைக்கும் என்பது கேள்விக்குறி தானே? அப்போது என்ன செய்யலாம்? என் அனுபவத்தை பகிர விரும்புகிறேன்.

என்னுடைய மேலாண்மை படிப்புக்காக என்னை விடுதியில் சேர்க்க வந்த என் அம்மா, வாப்பா, வாப்சா, சாச்சி எல்லாரும் மெஸ்ல உள்ள சைவ சாப்பாட்டை வெளுத்துக்கட்ட, நான் மட்டும் செம்ம கடுப்புல ஒரு வாய் சோறு கூட உள்ள இறக்க முடியாம முழிச்சிட்டு இருந்தேன். என்ன காரணமா? அடம்புடிச்சு படிக்க அனுப்ப கேட்ட நானு, அங்க இனி எல்லா நாளுமே சைவம் தான் சாப்பிடணும்னு நினைச்சப்போ அப்படியே கண்ணுல தண்ணி வராத குறை தான். அங்க வாரத்துக்கு ரெண்டு நாள் கோழி போடுவாங்க.. ஆனா அது ஹலால் இல்லையே.. என்ன பண்றது? மூணு வேளையும் கறி கோழின்னு சாப்பிட்டு பழகின நாக்குக்கு வெண்டைக்காயும் அப்பளமும் எப்படி ருசிபடும்?
இந்த சிக்கன் 'ஹலாலா'- இல்ல இது 'சிக்கன் மசாலா' (க்ர்ர்ர்ர்ர்ர்) :
ஒரு நாள் நாங்க மூணாறு சுற்றுலா போயிருந்தப்போ அங்குள்ள ஒரு உணவகத்துல நான் கேட்டேன் 'சிக்கன் ஹலாலா?' அதுக்கு அவரு ரொம்ப அப்பாவியா சொன்னாரு 'இது சிக்கன் மசாலா'. இது காலேஜுல பயங்கர காமெடியா பரவிடுச்சு. ஆனா அதுல ஒரு நன்மை பாருங்க, ஹலால்னா என்னன்னு தெரியாத பலரும் நம்மகிட்ட வந்து 'ஹலால்னா என்ன?'ன்னு கேப்பாங்க. இதுல என் தோழி ஒருத்தி அவளே பதில் சொல்ல ட்ரை பண்ணினா 'ஹேய், நீங்க ஆடு வெட்டும்போது அதுகிட்ட சாரி கேப்பீங்க, அது தானே ஹலால்?'. சத்தியமா அது இல்ல, ஹலால்னா, இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது, ஒரு ஆட்டை உணவுக்காக அறுக்கும்போது அதை அல்லாஹ்வின் பெயரை சொல்லி கூரிய கத்தியால் கழுத்தில் வெட்டுவது தான் ஹலாலாகும். அப்படி கூரிய கத்தியால வெட்டுவதால் ஒரே கீரலோடு உயிர் போவதுடன் ரத்தம் எல்லாம் வடிந்துவிடும். இறைச்சியை அதனுடைய ரத்தம் இல்லாமல் சாப்பிடுவது தான் நல்லதுன்னு விளக்குவோம்.
கல்லூரியில், அலுவலகத்தில் - கொஞ்சம் மாத்திக்குவோமே :
வாழ்க்கையில் ஒரு கட்டம் வரைக்கும் எல்லாமே நம்முடைய தாய் தந்தையர் ஏற்படுத்தி தந்த ஒரு பாதுக்காப்பான வளையத்துக்குள்ள இருப்போம். ஆனா வளர வளர நாம் அந்த கட்டத்தை விட்டு வெளிவர வேண்டிய சூழல் இருக்கும். அப்போ நமக்கு ரெண்டு ஆப்ஷன்ஸ். ஒரேடியா அந்த வளையத்தை விட்டு வெளியே வருவது, அல்லது நாமும் நமக்கென்று ஒரு வளையத்தை ஏற்படுத்திக்கொள்வது. பள்ளி, கல்லூரி காலம் வரைக்கும் நம்முடைய பெற்றோர் இப்படித்தான் இருக்கனும், இப்படித்தான் தலையில முக்காடு போடனும்னு சொல்லுவாங்க. எப்படியும் நாம் இஸ்லாமிய சூழலில் தான் வளர்க்கப்படுவோம். ஆனா மேற்படிப்பு, வேலைன்னு வரும்போது நாம நம்ம கொள்கைகளை வீட்டோட விட்டுவிடாம அல்லாஹ்வின் துணையோடு உறுதியா பற்றி பிடிச்சிக்கணும்.

அலுவலகத்தில் நமக்குன்னு தொழ ஒரு இடத்தை ஏற்படுத்தி தர கேட்பதில் இருந்து, கை குலுக்குவதை தவிர்ப்பது, தேவையில்லாத சோசியலைசிங்க், அவுட்டிங்க் போன்றவற்றிற்கு செல்லாமல் இருப்பது, வேலை நேரம் போக அதிக வேலைப்பளு இருந்தால் வீட்டில் இருந்தபடி வேலை செய்ய அனுமதி வாங்குவது என்று நாம் தைரியமாக, அதே சமயம் தன்மையாகவும் மேலதிகாரியிடம் கேட்க வேண்டும்.

வீட்டில் இப்படி வேண்டாம்... பின் எப்படி??? :
நாம் வெளியில் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தாலும் பிற மஹரமில்லாத ஆண்களுடன் இன்டெராக்ட் செய்யாமல் இருக்க முடியாது. வீட்டுக்கதவை தட்டும் தண்ணி கேன், லான்ட்ரி நபர்களில் இருந்து ஏதாவது ரிப்பேர் வேலை செய்ய வரும் வாட்ச்மேன், எலெக்ட்ரிசியன், ப்ளம்பர்கள் இவர்களில் ஒருவரையாவது நாம் தினமும் சந்திக்க நேரிடும். முடிந்த வரை இவர்களுடனான ஐ கான்டாக்ட், அதாவது நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்து கதவுக்கு பின்னாலிலிருந்தே பதில் சொல்லி அனுப்புவது நலம்.   
அது போல அவர்களுக்கு காசு எதுவும் கொடுக்கும் பட்சத்தில் ஒரு ட்ரேயில் அல்லது பாக்ஸில் வைத்து கொடுப்பதும் நலம்.  அப்படி தெரிந்தவர்கள் யாரவது வந்தாலும் கூட முடிந்தவரை அவர்களை கணவன்மார் வந்த பிறகு வர சொல்லுவதில் நாம் எந்த வெட்கமும் படக்கூடாது. ஏனெனில் நாம் பயப்படுவது அல்லாஹ் ஒருவனுக்கே, வேறெந்த மனிதர் நம்மை என்ன நினைப்பார் என்ற எண்ணம் நமக்கு இருக்கவே கூடாது. 

அது போல துணி தைக்க கொடுக்கும்போது முடிந்தவரை நாமே அளவை எடுத்துக்கொண்டு போவது நல்லது. இல்லையென்றால் பெண் ஒருவரை மட்டுமே, அதுவும் தனிமையில் அளவெடுக்க அனுமதிக்க வேண்டும். இது சின்ன விஷயமாக பட்டாலும் நாம் இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
ஆண் மருத்துவரா??? வேண்டாம்...  பெண்மருத்துவர்...:
இப்படி எல்லா விஷயத்திலும் கவனமாக இருக்கும் நாம், மருத்துவர்களிடம் செல்லும்போது கட்டுபாடுகளை சிறிதளவு தளர்த்த வேண்டியிருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் நமது சக்திக்கு மீறி நம்மை சோதிக்க மாட்டான். பெண் மருத்துவர்கள் இல்லாத பட்சத்தில் ஆண் மருத்துவர்களிடம் தான் செல்ல வேண்டியிருக்கும். எப்படியும் பிள்ளைபேறு நேரத்தில் அனெஸ்தெடிக் கொடுக்க ஆண்களே பெரும்பாலும் வருகின்றனர். அத்தகைய சூழ்நிலைகள் தவிர்க்க இயலாதவை. ஆனால் மற்ற நேரங்களில் நாம் கவனமாக இருக்கலாமே! ஸ்கேன் செய்யும் சென்டர்களில் பெண் மருத்துவர்கள் இருக்கும் இடத்தையே மருத்துவரிடம் பரிந்துரைக்க சொல்லலாம். நாம் அல்லாஹ்வின் பாதையில் செல்லும்போது நமது நிய்யத்தை உறுதியாக, 'யா அல்லாஹ், இதை உனக்காகவே செய்கின்றேன்' என வைத்துக்கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் நமக்கு துணை புரிவான். இதை என் அனுபவத்தில் இருந்தே சொல்கின்றேன்.
நவீன கந்துவட்டிக்காரன் வேண்டாம் :
இன்றைய காலகட்டத்தில் வட்டி என்பது மிகவும் சாதரணமாகி விட்டது. நாமாக தேடி போகாவிட்டாலும் நம்மை தேடி தலையில் வந்து உட்கார்ந்து கொள்ளும் அளவுக்கு வட்டி நம்மை சுற்றி வளைத்து விட்டது. க்ரெடிட் கார்ட் வைத்திருந்தவன் எல்லாம் பணக்காரன் என்றிருந்த ஒரு காலம் போய் க்ரெடிட் கார்ட் இல்லையென்றால் ஒரு காரியமும் செய்ய முடியாது என்ற நிலைக்கு எல்லோருமே தள்ளப்பட்டிருக்கிறோம். அதுவும் சும்மா தானே கிடைக்கிறது என்று வாங்கி வைத்துக்கொண்டு அதனால் பல இன்னல்களுக்கு ஆளானோர்களே அதிக‌ம். இதனால் முடிந்த அளவுக்கு அந்த க்ரெடிட் கார்டுகளை வாங்காமல் இருக்க பழகிக்கொள்ள வேண்டும். சில நிறுவனங்களிலும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்யும் இடங்களிலும் க்ரெடிட் கார்ட் இல்லாவிடில் ஒரு வேலையும் நடக்காது. இருந்தாலும் இயன்ற வரை கடனட்டை இல்லாத ஒரு வாழ்க்கை முறையை நாம் பழகிக்கொள்வதே நல்லது. 
டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவா? கொஞ்சம் உஷார் :
அதுபோல, இப்போதெல்லாம் உணவுகள் எல்லாமே வயல்வெளிகளிலிருந்தும் தோட்டங்களிலிருந்தும் வருவதை விட தொழிற்சாலைகளிலிருந்து வருவதே அதிகம். நம் குளிர்சாதனப்பெட்டியை திறந்து பார்த்தாலே தெரியும் டப்பாக்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் உணவுகளை தான் நாம் இன்று அதிகமளவு உட்கொள்கிறோம் என்று. எப்போது கடைக்கு சென்று ஒரு பொருளை வாங்கினாலும் அதிலுள்ள 'இன் க்ரீடியன்ட்ஸ்' ஐ படிப்பது நல்லது. எப்படி படிச்சாலும் அந்த கெமிக்கல் பெயர்கள் ஹலாலா இல்லையான்னு நமக்கு தெரியாதில்லையா? எனக்கு தெரிந்த ஒரு சிம்பிள் ட்ரிக்: முடிந்த அளவு குறைவான உட்பொருட்கள் கொண்ட உணவுகளையே வாங்குங்கள். உதாரணமாக ஒரு பிஸ்கட் பாக்கெட்டில் "மைதா, சர்க்கரை, பால், எண்ணை, சோடா' என இருந்தால் நமக்கே ஒரளவுக்கு தெரியும் அவை ஹலாலாகத்தான் இருக்கக்கூடும் என. அது போல ஜெல்லி வகைகள், கலர் கலரான உணவு வகைகளை அறவே தவிர்ப்பது நலம்.

இதைத்தவிர நாம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் சில இருக்கு. ஆனால் அதை நாம் மிகவும் லேசாக எடைப்போட்டு விடுகிறோம். பல நேரங்களில் நம் குடும்பத்தினரின் கோபத்தையும் பெற வேண்டிய சூழ்நிலையும் அமைந்துவிடும். ஆனால், நாம் பயப்படுவது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் தான் என்பதால், நாம் சிறிது கடுமையாக நடந்துக்கொள்வது போல் தெரிந்தாலும் கவலைப்படாமல், உறுதியோடு இருக்கவேண்டும்.
வீட்டில் அந்நியர் முன் ஹிஜாப்- ரொம்ப சுலபம் தான் :
இதில் மிக மிக முக்கியமானது, நம் வீட்டிலேயே இருக்கும் மஹரமில்லாத ஆண்கள். நாம் அதிகம் அறிந்திராத ஹதீஸ் ஒன்று இருக்கிறது, அது என்ன தெரியுமா?
"உங்கள் கணவனின் சகோதரர் மரணத்திற்க்கு ஒப்பாவார்" (Sahih Bukhari Hadith5232)

ஆச்சரியமாக இருக்கிறதா? வீட்டுக்கு வெளியே மஹரமில்லாத ஆண்கள் முன்னிலையில் ஹிஜாபை பற்றி கண்டிப்புடன் இருக்கும் நாம், நம் வீட்டிலுள்ள மஹரமில்லாதவர்கள் முன் எவ்வாறு இருக்கிறோம்? என்னதான் வீட்டிலுள்ளவர்கள் ஐந்து வேளை தொழுபவர்களாக இருந்தாலும் கொழுந்தன் தனியாக இருக்கும்போது அவருக்கு உணவு பரிமாற மாட்டேன் என்று சொன்னால் அந்த பெண்ணை ஒரு குற்றவாளியைப்போன்று தான் பார்ப்பார்கள். "அண்ணியென்றால் தாய்க்கு சமம்" என்ற இஸ்லாத்தில் இல்லாத கருத்தை எடுத்துரைப்பார்கள். இந்த நேரத்தில் தான் நாம் அல்லாஹ்வின் உதவியோடு உறுதியாக இருக்க வேண்டும் சகோதரிகளே!
  அதே நேரத்தில் பொறுமையையும் கையாள வேண்டும். கண்டிப்பாக அவர்கள் முன் நம் ஹிஜாபை பேணத்தான் வேண்டும். ஹிஜாப் என்பது வெறுமனே தலையில் போடும் முக்காடு மட்டுமல்ல. புரிகிறதா? என்னைப்பொறுத்த மட்டில் இதற்கு சுலபமான வழி, சுடிதார் அணியும் பழக்கம் என்றால் ஒரு பெரிய காட்டன் துப்பட்டாவைக்கொண்டு போர்த்திக்கொள்ளலாம், சேலையென்றால் நம் தொழுகைக்கு பயன்படும் மக்கன்னா தான் பெஸ்ட். டக்கென்று மாட்டிக்கொள்ளலாம், வசதியும் கூட. :)
இசைக்கு நோ... வேறென்ன செய்யலாம் :
பிறகு, அடுத்த முக்கியமானது இசை கேட்பது. இன்றைய காலத்தில் ஒரு முஸ்லிமிடம் இசை ஹராமென்று சொன்னால், என்னது? ஹராமா? யார் சொன்னா? அப்படியெல்லாம் ஒன்றுமில்லைன்னு சாதாரணமா சொல்லிட்டு போயிடுவாங்க. வீட்டில் தனியாக இருக்கும்போது போர் அடிக்கிறது, அதான்னு சொல்லி எந்த நேரம் பார்த்தாலும் பாட்டு ஓடிக்கொண்டே இருக்கும், பாங்கு சொல்லும் நேரத்தை தவிர. சினிமாவும் பாடல்களும் நம்மையே அறியாமல் நம் வீட்டோடு ஒன்றாக மாறிவிட்டது. அதை இஸ்லாத்துக்கு எதிரானது என்பதை ஏற்கக்கூட மனமில்லாதவர்களாகத்தான் இன்றைய தலைமுறை இருக்கிறது. தனியாக இருக்கும் பட்சத்தில் பாட்டு கேட்பதற்கு பதிலாக குரான் வசனங்களை கேட்கலாமே? சரி, கவனம் அதில் இருக்காது என்றால் பேசாமல் செய்தி சேனல்களை வைத்துவிட்டு போங்களேன். பாடல்களில் வரும் ஆபாசமான வரிகளையும் நடன வரிகளையும் ஆமோதிக்கும் வகையில் அவற்றைக்கேட்டுக்கொண்டிருந்தால் நம்மை பார்த்து வளரும் நம் குழந்தைக்களுக்கு நாம் என்ன அறிவுரை சொன்னாலும் அது எடுபடாது.  நாமே ஆபாசத்தை அனுமதித்துவிட்டு இளைய தலைமுறையை குறை சொல்லகூடாது... என் அனுபவத்தில் வீட்டில் இதை நடைமுறைப்படுத்துவது தான் மிகவும் சவாலான ஒரு விஷயமாக கருதுகிறேன் (நல்லவேளை, வெளிநாட்டில் இருக்கிறோம் என்று ஒரு சின்ன சந்தோஷமும் கூட ) :)
எல்லாம் எளிதே... :
நம்முடைய மார்க்கம் கடைப்பிடிக்க மிகவும் எளிதானதே. அல்லாஹ் நம்மை படைத்த காரணம், அவன் ஒருவனை வணங்குவதற்காக மட்டுமே. அதை நாம் ஒவ்வொரு செயலிலும் காட்ட வேண்டும். மேற்கூறிய விஷயங்கள் சிறியதாக தெரியலாம். ஆனால் அல்லாஹ்வுக்காக என நாம் ஒரு நிய்யத்தை வைக்கும்போது அதி கிடைக்கும் கூலி நிச்சயமாக அதிகம். அதே போல் இவையெல்லாம் கடைபிடிப்பது பெரிய விஷயமாக தெரியலாம். ஆனால் அல்லாஹ்விற்காக நாம் ஒரு செயலை செய்யும் போது அதற்கான நன்மைகளை மறுமையில் பன்மடங்கு அள்ள முடியும் இன்ஷா அல்லாஹ்...

உங்கள் சகோதரி
நாஸியா
http://www.islamiyapenmani.com/2013/03/blog-post_12.html

--
*more articles click*
www.sahabudeen.com


சனி, 4 ஜனவரி, 2014

வீட்டைப் பராமரிப்போம்

வீட்டைப் பராமரிப்போம்


பார்த்துப் பார்த்து கட்டிய வீட்டையும், ரசித்து ரசித்து செய்த உள்அலங்காரங்களையும் பராமரிப்பதில்தான் வீட்டின் அழகே அடங்கியிருக்கிறது. "என் கடன் வீடு கட்டி முடிப்பதே" என்பதுடன் முடங்கிவிட்டால், அழகு ஒளிரும் இல்லத்துக்கு நாம் காரணகர்த்தாவாக இருக்க முடியாது.
காலை முதல் இரவு வரை காத்திருக்கும் வேலைகளுக்கு நடுவே பராமரிப்புக்கு நேரம் ஒதுக்க முடியாது என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். தினசரி வாழ்வியலோடு பராமரிப்பையும் சேர்த்துவிட்டால் கவலை இல்லை.
வீடு விசாலமாகத் தோற்றமளிக்க வேண்டுமென்றால், வீட்டில் இருக்கும் பொருள்களை நேர்த்தியாக வைக்க வேண்டும். தேவையில்லாத பொருள்களை எக்காரணம் கொண்டும் வீட்டுக்குள் அனுமதிக்கக்கூடாது. பெரியபெரிய பொருள்களைவிட சின்னச்சின்ன கலைப்படைப்புகளே சிறந்தவை. "கலைப்பொருள்களைச் சேகரிக்கிறேன்" என்று சொல்லிக்கொண்டு வீடு முழுக்க பொம்மைகளாக வாங்கி அடுக்கக்கூடாது. சுவர் முழுக்க படங்களாக நிறைக்காமல் மனதைக் கவரும் ஏதோவொரு ஓவியத்தை மையமாக மாட்டினால் பார்ப்பவர்களை அது கவர்ந்து இழுக்கும்.
எந்தப் பொருளை எங்கே வைக்க வேண்டுமோ அங்கேதான் வைக்க வேண்டும். குளிர்சாதனப்பெட்டி மீது சீப்பும், தொலைக்காட்சி மீது செல்போனையும் வைப்பது வீட்டு அலங்கார விதிக்கு எதிரானது. எடுத்த பொருளை அதனதன் இடத்தில் திருப்பி வைத்துவிட்டால் வீட்டை ஒதுங்க வைக்க, ஞாயிற்றுக்கிழமையை தனியாக ஒதுக்க வேண்டியதில்லை.
அட்டவணை போட்டு வேலை செய்தால், வீடு எப்போதுமே பளிச்சென்று இருக்கும். தினசரி வேலைகளைத் தள்ளிப்போடாமல் இருப்பதே பாதி பராமரிப்புக்குச் சமம். தினமும் வீட்டைப் பெருக்கித் துடைக்கும்போதே கையோடு மர அமலாரிகளையும் மெல்லிய துணியால் துடைக்க வேண்டும். சமையலறை சாதனங்களைச் சுத்தப்படுத்துவது, ஒட்டடை அடிப்பது போன்ற வேலைகளை வாரம் ஒருமுறை செய்யலாம். அதிக உடலுழைப்பு தேவைப்படுகிற வேலைகளை, மாதம் ஒருமுறை செய்யலாம். இப்படி தொடர்ந்து செய்வதால், வீட்டுக்கு விருந்தினர்கள் வரும்போது பதறிக்கொண்டு வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டிய தேவை இருக்காது.
வீட்டைச் சுத்தப்படுத்துவதற்கு வீட்டில் உள்ளவர்கள் அனைவருமே கைகொடுக்க வேண்டும். செடிகளைப் பராமரிக்கிற வேலையைக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். மின் சாதனங்களைக் கழட்டி, சுத்தப்படுத்தும் வேலையை ஆண்கள் ஏற்றுக் கொள்ளலாம்.
வீடு பார்வைக்கு சுத்தமாக இருப்பது மட்டுமில்லாமல், உள்அலங்காரமும் அவசியம். சுவர்களின் வண்ணங்களே நம் எண்ணங்களைப் பிரதிபலிக்கும். அதனால் கண்களை உறுத்துகிற அடர் நிறங்களைத் தவிர்த்து, மனதுக்கு இதம் தரும் வெளிர்நிறங்களைப் பூசலாம். சுவர்களின் நிறத்துக்கு ஒத்துப் போகிற நிறங்களில் திரைச்சீலைகள் இருப்பது கூடுதல் அழகு. தரைவிரிப்பும் அந்த நிறங்களுக்கு ஒத்திசைவாக இருந்தால், கச்சிதமாக இருக்கும்.
படுக்கையறைக்கு வெளிர்நீலம் அல்லது இளஞ்சிவப்பு நிறங்களைப் பரிந்துரைக்கலாம். படுக்கை விரிப்புகளும் அதே நிறங்களில் இருப்பது நல்லது.
இப்போது சின்னச்சின்ன தொட்டிகளிலும் அழகழகான பூச்செடிகள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி வீட்டு வரவேற்பறையிலோ, பால்கனியிலோ வைக்கலாம். அழகுக்கு அழகு, கண்களுக்கும் குளிர்ச்சி.
தி ஹிந்து
http://kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

மழைக்காலத்தில்ஏற்படும் வாய்ப்புண்... வீட்டு மருத்துவத்தின் மூலம் தீர்வு.

வாய்ப்புண் ஏற்பட்டுவிட்டால் , ஒருவருக்கு பெரும் தொந்தரவு. அதில் இருந்து எப்படியாவது மீண்டுவிட...

Popular Posts