லேபிள்கள்

சனி, 21 செப்டம்பர், 2013

நோய்களைக் வெளிக்காட்டும் “நகங்கள்”

நோய்களைக் வெளிக்காட்டும் "நகங்கள்"

 உடலில் உள்ள நோய்களைக் வெளிக்காட்டும் "நகங்கள்" – அறிந்து கொள்வோம்
பொதுவாக நகங்கள் தேவையற்ற ஒரு உறுப்பாக பலரும் கருதுகின்றனர். ஆனால் அது உண்மையிலே உடல் நலத்திற்கு தேவையான உறுப்பாகும். நம் உடலில் உள்ள கழிவகற்றும் உறுப்புகளினால் வெளியேற்ற முடியாத கழிவுகள் நகமாக வளர்கின்றது. அதனால் அது மனிதர்களுக்கு மட்டுமன்றி விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இன்றியமையாத முக்கிய உறுப்பு ஆகின்றது.
கெரட்டின் என்னும் உடல்கழிவுதான் நகமாக வளர்கிறது. கழிவுகள் நீங்குவது உடலுக்கு நலம் தானே?  நகத்தில் மேட்ரிக்ஸ், நெயில்ரூட் என்று இரு முக்கிய பாகங்கள் உண்டு. மேட்ரிக்ஸ் நகத்தின் இதயப் பகுதியாகும். இதுதான் நக செல்கள் வளர காரணமாக அமைகின்றது. மேட்ரிக்ஸ் பாதித்தால் தொடர்ந்து நகம் சேதத்துடனேயே வளரும்.
வெளிப்புறம் நகங்களாக இருக்கும் நெயில் பிளேட் கழிவுப் பொருள் என்பதால் அதற்கு ஒக்சிஜன் தேவையில்லை. ஆனால் உட்புறம் இருக்கும் மேட்ரிக்ஸ், நெயில் பெட், கிடிகிள் போன்ற பாகங்களுக்கு ஒக்சிஜன் அவசியம். எனவே அவை தேவையான ஒக்சிஜனை சுவாசத்தின் மூலம் பெற்றுக் கொள்கிறது. இதில் கிடிகிள், விரல் பகுதிக்கு அதிக இரத்த ஓட்டம் கிடைக்க உதவுகிறது.
நகத்தில் 18 சதவீத அளவில் ஈரப்பதம் இருக்கிறது. எனவே நகங்கள் குறிப்பிட்ட அளவில் வியர்வையையும் வெளியேற்றும். நகங்கள் நமது ஆரோக்கியம் காட்டும் 'மொனிட்டர்' போலவும் செயல்படும். நகங்களின் நிறம் மாறுவதைக் கொண்டு உடல் நலம் பாதிக்கப்படுவதைக் கண்டுபிடிக்கலாம்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் நலத்தை நகத்தில் தெரிந்து கொள்ளலாம். நகத்தின் அமைப்பைக் கொண்டு,  நம்முடைய குணாதிசயங்களை சில ஜோதிடர்கள் கூறுவார்கள்..
ஆனால் மருத்துவ உலகில் நகங்களை வைத்தே நம்முடைய உடலில் என்ன பிரச்சினை என்று கூறி விடுகிறார்கள் மருத்துவ அறிஞர்கள்.
நகங்கள் விரல்களுக்கு அழகு சேர்க்க மட்டுமல்ல, கரட்டின் என்ற புரதச்சத்தைக் கொண்ட நகங்கள் விரல் நுனிவரை பரவியுள்ள நரம்பு மற்றும் இரத்தக் குழாய்களை பாதுகாக்கக் கூடிய ஒரு அமைப்பாகும். நகங்கள் இல்லா விட்டால் விரல்களின் முனைகளில் கடினத்தன்மை ஏற்பட்டு விடும்..
நகங்களில் ஏற்படும் சில மாற்றங்களும், அவை சொல்லும் உண்மைகளும்:
நகங்கள் மிருதுவானவை. விரல்களின் சதைப்பகுதியின் அடிப் பாகத்தில் இருப்பது. பொதுவாக ஆண்களுக்கு அதிக வளர்ச்சியும், பெண்களுக்கு பிரசவ காலங்களிலும், வயதான காலங்களிலும் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
பொதுவாக நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் நமது உடலில் ஏற்படுகின்ற பாதிப்புகளைப் பொறுத்து நகங்களின் நிறம் வேறுபட்டிருக்கும்.
*  ஈரல் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் வெண்மையாக இருக்கும்..
*  சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருந்தால் நகங்களின் வளர்ச்சி குறைந்து பாதி நகங்கள் சிவப்பாக இருக்கும்.
* மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
*  இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு நல்ல இரத்தமும், கெட்ட இரத்தமும் கலந்திருந்தால் நகங்கள் நீல நிறத்தில் இருக்கும்.
*  நாள்பட்ட நுரையீரல், இதய நோய் உள்ளவர்களுக்கு நகங்கள் கிளிச்சொண்டு போல வளைந்து இருக்கும்.
*  இரத்தச் சோகை ஏற்பட்டு இரும்புச் சத்து குறைவாக இருந்தால் நகங்கள் வெளுத்து குழியாக இருக்கும்.
*  சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாக சத்து குறைவாகவும் இருந்தால் நகத்தில் வெண்திட்டுக்கள் காணப்படும்.
*  நகத்தில் மஞ்சள் கோடுகள் இருப்பதற்கு காரணம், புகைபிடிப்பதனால் நிக்கோடின் கறை படிந்து ஏற்பட்டதாக இருக்கலாம்.  நகங்களுக்கு பொலிஷ் தீட்டுவதால் ஏற்பட்ட இரசாயன மாற்றத்தின் காரணமாகவும் மஞ்சள் கோடுகள் இருக்கலாம்.
*  நகத்தில் சின்ன சின்னக் குழிகள் உண்டாகி, அவற்றில் வெடிப்பு ஏற்பட்டு செதில் செதிலாக உதிர்ந்தால் சொரியாசிஸ் என்ற தோல் வியாதியின் அறிகுறியாகும்..
*  இரத்தத்தில் போதிய அளவுக்கு ஒட்சிசன் இல்லாவிட்டால் நகங்கள் நீலமாக இருக்கும். ஆர்சனிக் என்ற நச்சுகளால் பாதிக்கப் பட்டிருந்தால் நகங்கள் நீலநிறத்தில் காணப்படும்.
*  மங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால் மூட்டுவலி உள்ளதாக காட்டும்
*  மஞ்சள் நிறம் தென்பட்டால் கல்லீரல் பாதிப்பின் அறிகுறி.
நகங்களை நலமாக வைத்துக் கொள்ள பின்பற்ற வேண்டிய பராமரிப்பு முறை:.
*
  நகங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குழி பறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களுக்கு நகங்களைப் பயன்படுத்தக்கூடாது. இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கிருமிகள் தொற்றி நோய் ஏற்படவும் காரணமாகிறது.
*  இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதிகப்படியாக வளர்ந்திருக்கும் நகங்களை நறுக்கி விடலாம்.
*  நகங்களின் நுனிப்பகுதிகளை முழுவதுமாக வெட்டக் கூடாது. அவ்வாறு வெட்டினால் நகத்தை மூடி சதை வளர்ந்து அதிக வலியினை ஏற்படுத்தும். நகத்தினை பற்களால் கடிக்கக் கூடாது. இதனால் நகங்கள் உடைந்து போக வாய்ப்பு அதிகம். நகம் வெட்டும் கருவியினால் மட்டுமே வெட்ட வேண்டும்.
*  சாப்பிட்ட பின்னர் கைகளை கழுவும்போது நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். நகங்களின் இடுக்குகளில் தங்கும் நுண்ணுயிரிகளால் வயிற்றுத் தொல்லை, வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை உண்டாகும்.
*  நகங்கள் அழகுடன் திகழ, காய், கனிகள் நிறைய உட்கொள்ளவேண்டும். இரவில் குளிர்ந்த நீரினால் கை மற்றும் கால் நகங்களை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
*  சருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணெயை நகங்களிலும் தடவலாம். இது நகங்களின் மேற்புற செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து நகங்களை மிருதுவாக வைத்திருக்கும்.
*  சமையல் அறை, தோட்டங்கள், கழிவறைகளில் பிளீச்சிங் பவுடர், அம்மோனியா மற்றும் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும்போது கண்டிப்பாக கைகளில் உறைகள் அணிந்திருந்தால் நகங்களைப் பாதுகாக்கலாம்.
*  பசை, தண்ணீரில் கலந்து உபயோகிக்கும் பசை ஆகியவை பயன்படுத்தும் போது, அவை நகங்களில் ஒட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை நகங்களை வெகுவாக பாதிக்கும்.
*  ரசாயனங்கள் சேர்த்த நகப்பூச்சுகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இயற்கை மருதாணியை வேண்டுமானால் நக அலங்காரத்திற்கு பயன்படுத்தலாம்.


--
*more articles click*
www.sahabudeen.com


வியாழன், 19 செப்டம்பர், 2013

அடுத்த 20 ஆண்டுகளில் உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 219 கோடியாக உயரும்


கான் பாகவி

லக முஸ்லிம்களின் எண்ணிக்கை அடுத்த இருபது ஆண்டுகளில் 219 கோடியாக உயரும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த பியூ ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 2010ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 161 கோடியாக இருந்தது குறிப்பிடத் தக்கது.

அமெரிக்காவின் PEW எனும் சமயம் மற்றும் பொதுவாழ்வு ஆய்வு மையம், அடுத்த 20 ஆண்டுகளில் உலக முஸ்லிம்களின் மக்கள் தொகை 35 விழுக்காடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது. 2010இல் 1.6 மில்லியராக இருந்த இந்த எண்ணிக்கை, 2030இல் 2.2 மில்லியராக உயரலாம். (ஒரு மில்லியர் அல்லது பில்லியன் என்பது 100 கோடி ஆகும்.)
பியூ ஆய்வு மையத்தின் தலைமையகம் வாஷிங்டனில் உள்ளது. இது அரசியல் சார்பற்றது; மதப் பாகுபாடு பாராட்டாதது; பியூ அறக்கட்டளைதான் இதற்கு நிதியுதவி செய்துவருகிறது. இம்மையத்தின் மேலாளர்: Luis Lugo.

உலகமெங்கிலுமுள்ள பல்துறை அறிஞர்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். 2010ஆம் ஆண்டின் ஆய்வு முடிவை முன்பே அறிவித்திருந்த இந்த மையம், இப்போது அடுத்த இரு தசாப்தங்களுக்கான ஆய்வின் எதிர்பார்ப்பு என்ன என்பதை வெளியிட்டுள்ளது.

அடுத்த இருபது ஆண்டுகளில்

எதிர்வரும் இரு தசாப்தங்களில் முஸ்லிம் அல்லாத மக்களின் சராசரி ஆண்டு வளர்ச்சி 0.7 விழுக்காடாக இருக்கும் நிலையில், முஸ்லிம் மக்களின் சராசரி வளர்ச்சி 1.5 விழுக்காடாக இருக்கும்.


2030ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை சுமார் 8.3 மில்லியராக (830 கோடி) இருக்கும் நிலையில், மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 26.4 விழுக்காடாக இருப்பர். 2010இல் உலக மக்கட்தொகை 6.9 மில்லியர் (690 கோடி) என்பதும் அதில் 23.4 விழுக்காடு முஸ்லிம்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.

இருப்பினும், முஸ்லிம் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 1990-2010 தசாப்தங்களில் 2.2 விழுக்காடாக இருந்தது; இது 2010-2030 ஆகிய தசாப்தங்களில் 1.5 விழுக்காடாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 தசாப்தங்களில் மக்கட்தொகை

ஆண்டு
1990
2000
2010
2020
2030
மற்றவர்கள் (மில்லியர்)
4.2
4.8
5.3
5.8
6.1
முஸ்லிம்கள் (மில்லியர்)
1.1 (19.9%)
1.3 (21.6%)
1.6 (23.4%)
1.9 (24.9%)
2.2 (26.4%)
                
கண்டங்கள் வாரியாக முஸ்லிம் மக்கட் தொகை
                                                             2010                                2030
கண்டங்கள்
முஸ்லிம் மக்கட்தொகை
உலக முஸ்லிம்களில் விழுக்காடு
முஸ்லிம் மக்கட்தொகை
உலக முஸ்லிம்களில் விழுக்காடு
உலகம்
161,93,14,000
100%
219,01,54,000
100%
ஆசியா & மத்திய தரைக்கடல் பகுதி
100,55,07,000
62.1%
129,56,25,000
59.2%
மத்திய கிழக்கு & வட ஆப்ரிக்கா
32,18,69,000
19.9%
43,94,53,000
20.1%
ஆப்ரிக்கா & தெற்கு பாலைவனம்
24,25,44,000
15.0%
38,59,39,000
17.6%
ஐரோப்பா
4,41,38,000
2.7%
5,82,09,000
2.7%
அமெரிக்கா
52,56,000
0.3%
1,09,27,000
0.5%



ஐரோப்பா

அடுத்த 20 ஆண்டுகளில், இந்தோனேசியாவைவிட பாகிஸ்தானில் முஸ்லிம் மக்கட்தொகை உயரும்.

எகிப்தைவிட நைஜீரியாவில் முஸ்லிம் மக்கட்தொகை அதிகமாகும்.

ஐரோப்பாவில் மொத்த மக்கட்தொகையில் மூன்றில் ஒரு பங்கை முஸ்லிம் மக்கட்தொகை நெருங்கிவிடலாம். 2010இல் 6 விழுக்காடாக இருந்த முஸ்லிம்கள் 2030இல் 8.2 விழுக்காடாக உயர்வர். அதாவது ஐரோப்பிய முஸ்லிம்களின் எண்ணிக்கை (2010) 44.1 மில்லியனிலிருந்து (2030) 58.2 மில்லியனாக அதிகரிக்கும்.

நாடு
2010
(மொத்த மக்கட்தொகையில் சதவீதம்)
2030
(மொத்த மக்கட்தொகையில் சதவீதம்)
ஆஸ்திரியா
5.7%
9.3%
சுவிட்சர்லாந்து
4.9%
9.9%
பெல்ஜியம்
6%
10.2%
ஃபிரான்ஸ்
7.5%
10.3%
பிரிட்டன்
4.6%
8.2%

அதிகரித்த ஆயுள்

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் வயது பெரும்பாலும் 15-29ஆக இருக்கிறது. பொருளாதார நிலை உயர்ந்துள்ளது. சுகாதாரம் மேம்பட்டுள்ளது. குழந்தை இறப்பு விகிதம் குறைந்து காணப்படுகிறது. மனித ஆயுள் கூடியுள்ளது. இத்தியாதி காரணங்களால் முஸ்லிம் மக்கட்தொகை பெருகுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருக்கும் நாடுகளில் 30 வயதுக்கு மேற்பட்டோர் 40 முதல் 50 விழுக்காடு இருப்பர்; 60 வயதுக்கு மேற்பட்டோர் 7 முதல் 12 விழுக்காடு இருப்பர். நடுத்தர வயதினர் 1990இல் 19 விழுக்காடு; 2010இல் 24 விழுக்காடு; 2030இல் 30 விழுக்காடு இருப்பர்.

2030ஆம் ஆண்டில் உலகிலுள்ள ஒவ்வொரு 10 இளைஞர்களில் மூவர் முஸ்லிம்களாக இருப்பர். 15 முதல் 29 வயது வரையிலானவர்களில் 29.1 விழுக்காடு முஸ்லிம்களாக இருப்பர் என எதிர்பார்க்கலாம். இது 2010இல் 25.8 விழுக்காடாகவும் 1990இல் 20 விழுக்காடாகவும் இருந்தது.

2030இல் முஸ்லிம்களில் சன்னிகளே 87-90 விழுக்காடு இருப்பார்கள். ஷியா முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உண்டு.

உலக முஸ்லிம்களில் 74.1 விழுக்காட்டினர் 49 நாடுகளில் பெரும்பான்மையினராக (2010) வாழ்கின்றனர். முஸ்லிமல்லாதோர் பெரும்பான்மையாக உள்ள வளரும் நாடுகளில் 23.3 விழுக்காடு முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.

முஸ்லிம்களில் 3 விழுக்காட்டினர், வளர்ந்த நாடுகளான ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ளனர்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் 47.8 விழுக்காடு இல்லத்தரசிகள் (15-49 வயதினர்) ஏதேனும் ஒரு குடும்பக் கட்டுப்பாடுச் சாதனம் பயன்படுத்துகின்றனர். மற்ற நாடுகளில் இது 63.3 விழுக்காடாக உள்ளது.
ஆசியா

ஆசிய நாடுகளில் 2030இல் 10 பேரில் 3 பேர் (27.3%) முஸ்லிம்களாக இருப்பார்கள். 2010இல் 24.8 விழுக்காடாக இது இருந்தது. சீனாவில் முஸ்லிம்கள் 2 விழுக்காடே இருந்தாலும், 2030இல் உலகிலேயே முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடுகளில் சீனா 19ஆம் இடத்தில் இருக்கப்போகிறது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளின் முன்னணியில் இருப்பது மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்க நாடுகள்தான். இந்தப் பிராந்தியத்தில் உள்ள 20 நாடுகளில் -இஸ்ரேலைத் தவிர- மொத்தத்தில் 50 விழுக்காடு முஸ்லிம்கள் 2030இல் இருப்பர்; 17 நாடுகளில் 75 விழுக்காட்டைவிடக் கூடுதலாக இருப்பர்.

பாலஸ்தீனத்தில் 2010இல் 17.7 விழுக்காடு முஸ்லிம்கள் இருந்தனர். இது 2030இல் 23.2 விழுக்காடாக -அதாவது 2.1 மில்லியனாக- உயர வாய்ப்பு உண்டு.

ஆப்ரிக்கா மற்றும் தெற்குப் பாலைவனப் பகுதிகளில் அடுத்த 20 ஆண்டுகளில் 38.59 கோடி (60%) முஸ்லிம்கள் இருப்பார்கள். ஐரோப்பாவில் மொத்த மக்கட் தொகையில் 10 விழுக்காடு முஸ்லிம்களாக இருப்பர்.

கொசோவா: 93.5%; அல்பேனியா: 83.2%; போஸ்னியா: 42.7%; மாசிடோனியா: 40.3%; பல்கேரியா: 15.7%; ரஷியா: 14.4%; ஜார்ஜியா: 11.5%; பிரான்ஸ்: 10.3%; பெல்ஜியம்: 10.2%.

அடுத்த 20 ஆண்டுகளில் கனடாவில் முஸ்லிம்கள் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரிக்கலாம். அதாவது 9,40,000லிருந்து 20,70,000ஆக உயரக்கூடும். இது, மொத்த மக்கட்தொகையில் 6.6 விழுக்காடு ஆகும்.

அல்லாஹ்வே மிகப் பெரியவன்!

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

(நன்றி: ஆலூகா (அரபி) இணையதளம்)
http://www.alukah.net/World_Muslims/0/47000/#Comments
http://www.pewforum.org/global-muslim-population.aspx


--
*more articles click*
www.sahabudeen.com


பிறந்தகுழந்தைகளுக்கு டயாப்பர் அணிவிப்பது சரியானதா?

  டயாப்பர் அணிவிக்காமல் இன்றைய சூழ்நிலையில் சமாளிக்க முடிவதில்லை. டயாப்பர் அணிவிக்கக் கூட...

Popular Posts