லேபிள்கள்

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

Laptop பராமரிப்பு ஒரு குட்டி டிப்ஸ் உங்களக்காக



நீங்கள் உங்கள் லேப்டாப்பை பாதுகாப்பாக நீண்டநாள் பாவனையுடன் வைத்திருக்க விரும்புகிறீர்களா? எந்த நேரமும் லேப்டாப் பராமரிப்பு பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்களா? எப்படி முழுமையான பாதுகாப்பை பெறுவது என்று தேடிக்கொண்டிருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான தீர்வு.


சாதாரண Desk Top கணினிகளுடன் ஒப்பிடுகையில் லேப்டாப்களின் பராமரிப்பு அத்தியாவசியமானதும்  சிறிது கடினமானதும் கூட. இன்று அநேகமானோர் லேப்டாப்பை பயன்படுத்துகிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் லேப்டாப்பை கையாள்வதற்கான அடிப்படை வழிகளை கூட பின்பற்றுவதில்லை. அநேகமாக பெரும்பாலானவர்கள் லேப்டாப்பை வெளியில் எடுத்துச்சென்றுதான் பாவிக்கிறார்கள். அப்படியிருக்கும்போது அதற்குரிய சரியான பாதுகாப்பை கொடுக்காவிட்டால், அந்த லேப்டாப்பின் பாவனை காலத்தை இழக்கவேண்டி இருக்கும். இங்கு லேப்டாப் பாதுகாப்பிற்கான சில வழிகளை தருகிறேன்.

Over Heat பிரச்சினை

எப்பொழுதும் உங்கள் லேப்டாப் Over Heat ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வெப்பமான பிரதேசங்களில் அதிக நேரம் பாவிப்பதையும் தவிருங்கள். இப்படியான சம்பவங்களால் பாட்டரி பழுதடைய கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன. அதோடு அநேகமான சந்தர்ப்பங்களில் ஹார்ட் டிஸ்க் மற்றும் சில Internal parts ஐயும் பழுதடைய செய்துவிடும். சில வேளைகளிக் ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆகி சேமிக்கப்பட்டிருந்த தரவுகள் அனைத்தும் அழிந்துவிடும். ஆகவே லேப்டாப்பை வெளியில் எடுத்து செல்லமுன்னர் சுற்று சூழல் பற்றி அதிக கவனமெடுங்கள்.
1.                   குளிரூட்டப்பட்ட அறைகளில் (Air conditioned) இருந்து சட்டென சாதாரண வெப்ப நிலையுள்ள பகுதிக்கு எடுத்து வராதீர்கள்.
2.                  அப்படி மாறுபட்ட வெப்பநிலையுள்ள பிரதேசத்துக்கு மாற்றவேண்டிய தேவை ஏற்பட்டால் லேப்டாப்பை ஆஃப் செய்துவிட்டு எடுத்து செல்லுங்கள்.
3.                  வெப்பநிலையான பிரதேசங்களில் ( சாதாரன வெப்பநிலையில் கூட) 2 மணித்தியாலங்களுக்கு மேலாக பாவிப்பதை தவிருங்கள்
4.                  எங்கு சென்றாலும் லேப்டாப்புடன் ஒரு பொலுத்தீன் பையை எடுத்து செல்லுங்கள். பயணங்களின் போது லேப்டாப்பின் மீது நீர் படுவதை தவிர்க்கமுடியும்.
5.                  Cool pad ஐ பாவிப்பது நல்லது. 2 மணிநேரத்துக்கு அதிகமாக பாவிக்கவேண்டியிருந்தால் Cool Pad ஐ உபயோகியுங்கள். லேப்டாப்பின் Heat ஐ ஓரளவிற்கு குறைக்கும்
6.                  அவன் (Microwave Ovens), டிவிடி ப்ளேயர், டி.வி ஏனைய இலத்திரணியல் உபகரணங்களுக்கு அருகில் லேப்டாப்பை எடுத்து செல்வதை முற்றாக தவிருங்கள். இவற்றில் இருந்து வரும் காந்த சக்தி லேப்டாப்பின் ஹார்ட் டிஸ்கை நிச்சயம் பாதிக்கும்
7.                   லேப்டாப்பை ஆஃப் செய்து ஒரு நிமிடத்துக்குள் மறுபடியும் ஆன் செய்யாதீர்கள். ஆகக்குறைந்தது 2 நிமிட இடைவெளியையாவது பேணுங்கள்.
8.                  லேப்டாப் மீது நீர் படவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் ஈரத்தன்மை காயும் வரை லேப்டாப்பை ஆன் செய்வதை தவிருங்கள். ஈரத்துடன் ஆன் செய்வதால் short circuit ஏற்பட வாய்ப்புள்ளது.
9.                  அளவுக்கதிகமாக லேப்டாப்பை சார்ஜ் செய்யாதீர்கள். ஆரம்பத்தில் AC அடாப்டரை பழுதுபடுத்தும். பின்னர் காலப்போக்கில் லேப்டாப்பின் Internal Parts ஐ பாதிக்கும்
10.               அதிக மழைபொழிவின் போது சார்ஜ் இடுவதை தவிருங்கள். வீட்டில் இருந்தால் UPS மூலம் சார்ஜ் இட முயற்சியுங்கள்.

பாட்டரி பாதுகாப்பு
பலர் ஏனைய பாதுகாப்பு விடயங்களில் கவனம் செலுத்தினாலும் பாட்டரி விடயத்தில் கவனம் செலுத்த தவறுகின்றனர். இதனால் பாட்டரி குறுகிய காலத்துக்குள்ளேயே செயலிழந்து போகிறது. இதை தடுப்பதற்கு
1.                   லேப்டாப்பை சார்ஜ் செய்யும்போது ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள்
2.                  சார்ஜ்ஜிங் முழுவதுமாக முடியும்வரை காத்திருங்கள். வழக்கமாக 2 தொடக்கம் 3 மணித்தியாலங்களில் முழுவதுமாக சார்ஜ் ஆகிவிடும்
3.                  சூரிய வெளிச்சமுள்ள இடங்களில் பாட்டரியை வெளியே எடுக்காதீர்கள்
4.                  லேப்டாப்பையோ அல்லது பாட்டரியையோ வெப்பமுள்ள இடங்களில் வைக்காதீர்கள்.


மேலே குறிப்பிட்டவை பாட்டரியை பாதுகாப்பதற்கான External வழிகள். இப்போது சில Internal முறைகளை பார்ப்போம்
1.                   Wi-fi,  Bluetooth போன்றவற்றை பாவிக்காதபோது ஆஃப் செய்துவிடுங்கள்
2.                  பாட்டரி சார்ஜ் 50 % இற்கும் குறைவாக இருக்கும்போது High Resolution கொண்ட வீடியோ கேம்ஸ் விளையாடாதீர்கள். இப்படியான கேம்ஸ் பட்டரியை இரு மடங்கு வேகமாக சார்ஜ் ஐ குறைக்கும்
3.                  USB port பட்டரி Life ஐ குறைக்கும். ஆகவே USB Mouse, Joystick,  Pen Drive போன்றவற்றை பாவிக்காத நேரங்களில் அகற்றிவிடுங்கள்.
4.                  லேப்டாப் Screen ஐ மாத்திரம் ஆஃப் செய்யும் மென்பொருள்களை உபயோகித்து தேவையற்ற நேரங்களில் Screen ஐ ஆஃப் செய்துவிடுங்கள். TurnOffMonitor 1.0  இந்த மென்பொருளை நிறுவி Shift+F1 ஐ உபயோகித்து Screen ஐ ஆஃப்/ ஆன் செய்துகொள்ளலாம்
5.                  தேவையில்லாதபோது சிடி ட்றைவில் உள்ள சிடிக்களை அகற்றிவிடுங்கள்
6.                  Screen Server களை உபயோகிப்பதை தவிருங்கள்
7.                   முக்கியமாக Screen இன் Brightness குறைத்து வையுங்கள்
http://99likes.blogspot.in/2012/09/laptop.html

--
*more articles click*
www.sahabudeen.com



ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

குழந்தைகள் குண்டாகாம பாத்துக்க சில டிப்ஸ்!!!




இன்றைய காலத்தில் உடல் பருமன் பெரியவர்களை மட்டும் பாதிக்கவில்லை, குழந்தைகளையும் தான். அதிலும் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் பருமனால்,
அவர்களுக்கு டைப் 2 நீரிழிவு, இதய நோய், தூக்கமின்மை போன்ற நோய்கள் விரைவில் வந்துவிடுகின்றன. ஆகவே அவர்களுக்கு இத்தகைய நோய்கள் எல்லாம் தாக்காமல் இருக்க, தேவையில்லாத கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை கொடுக்க வேண்டாம். ஆனால் அவர்களை கவனமாக பார்த்துக் கொள்வது என்பது சற்று கடினமானது. ஏனெனில் அவர்களுக்கு பிடித்தவற்றை சாப்பிடாமல் வைப்பது என்பது மிகவும் கடினம். மேலும் அவர்களது டயட், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, அதிகமான அளவில் உண்ணுதல் போன்றவைகளும் குழந்தைகளை குண்டாக்குகின்றன. ஆகவே அவர்களை சரியாக பாதுகாக்க ஒரு சில டிப்ஸ்களை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
* குழந்தைகள் குண்டாவதற்கு அவர்களின் உடலில் இருக்கும் மரபணுக்கள் பெரும்பாலும் காரணமாகின்றன. ஆகவே மறக்காமல் மருத்துவரை உடனே அணுக வேண்டும். ஏனெனில் மரபணுவில் ஏதாவது திடீரென மாற்றங்கள் ஏற்பட்டாலும், குழந்தைகள் குண்டாவார்கள்.
* குழந்தைகளின் உடல் எடை சரியாக உள்ளதா என்பதை அடிக்கடி பார்த்துக் கொண்டே வர வேண்டும். மேலும் அதற்கேற்றவாறு உணவுப் பொருட்களை கொடுக்க வேண்டும். ஏனெனில் அதிகமான உணவுப் பொருட்களை கொடுத்தால், அதில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் குழந்தைகளின் உடலில் சென்று உடல் பருமனை ஏற்படுத்திவிடும். ஆகவே அவர்களின் உயரத்திற்கு ஏற்ப உடல் எடை இருக்குமாறு பார்த்து வரவும்.
* குழந்தைகளை எப்போதும் விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும். அதாவது, குழந்தைகள் வீட்டில் உட்கார்ந்து டி.வியை பார்த்துக் கொண்டிருந்தால், அவர்களை விளையாட சொல்ல வேண்டும். ஏனெனில் இதனால் குழந்தைகளின் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் ஓடுதல், நடத்தல், குதித்தல், சைக்கிளிங் மற்றும் நீச்சல் போன்ற விளையாட்டுக்களை விளையாட வைக்கலாம்.
* குழந்தைகளுக்கு அதிகமான அளவில் பாஸ்ட் ஃபுட் உணவுகளான பிரன்ச் ப்ரைஸ், சிப்ஸ், ப்ரைடு சிக்கன், மில்க் ஷேக் போன்றவற்றை கொடுக்க வேண்டாம். ஏனெனில் இவற்றில் அதிக அளவு கொழுப்புக்கள் நிறைந்துள்ளன. இதனை அதிகம் சாப்பிட்டால், பிற்காலத்தில் இதய நோய் விரைவில் வந்துவிடும்.
* அதிக அளவில் கொழுப்புக்கள் உள்ள பாலைக் கொடுப்பதை விட, குறைந்த அளவில் கொழுப்புக்கள் இருக்கும் பாலை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் பிற்காலத்தில் குண்டு தான் ஆவார்கள்.
* பால் பொருட்களை கொடுக்கும்போது கூட, கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் அதிகம் உள்ள உணவுகளை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
* குண்டாகும் குழந்தைகள் விரைவில் மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். ஏனெனில் குண்டாக இருப்பதால், நிறைய பேர் கிண்டல் செய்வார்கள். ஆகவே அவர்கள் எடையை குறைக்க ஊக்குவிப்பதோடு, அவர்களுடன் அன்பாக, பாசத்துடன் நடக்க வேண்டும்.
* மாலை வேளையிலோ அல்லது மற்ற வேளைகளிலோ, அவர்களுக்கு உண்ண உணவுகளை கொடுக்கும் போது, ஆரோக்கியமற்ற உணவுகளைக் கொடுக்காமல், அவர்களுக்கு ஏதேனும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாலட் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
ஆகவே, மேற்கூறிய வழிகளைப் பின்பற்றினால், குழந்தைகள் எடை கூடாமல், அழகாக பிட்டோடு இருப்பார்கள்.


--
*more articles click*
www.sahabudeen.com



வெள்ளி, 5 ஏப்ரல், 2013

தன்னம்பிக்கை உடையவரா நீங்கள்? ஒரு சுயபரிசோதனை


மனிதன் வாழ்வில் பெறும் வெற்றியும் தோல்வியும் அவனுடைய தன்னம்பிக்கையை பொறுத்தே அமைகின்றது.
ஆண், பெண் வேறுபாடு இல்லாமல், வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் தன்னம்பிக்கை பெற்றிருக்க வேண்டும். நீங்கள் யோசிக்கலாம். நமக்கு தன்னம்பிக்கை உள்ளதா? இல்லையா? என்று. நீங்களே உங்கள் தன்னம்பிக்கையின் அளவை தெரிந்து கொள்ளலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள தன்னம்பிக்கை இல்லாதவருக்கான விஷயங்களை கவனித்துப் பாருங்கள். அவற்றிலிருந்து நீங்கள் பெருமளவு நீங்கள் முரண்பட்டு நின்றால், நீங்கள் அதிக தன்னம்பிக்கை உள்ளவர் என்று அர்த்தம்.

·  எண்ணங்கள்:
தன்னம்பிக்கை இல்லாதவரின் எண்ணங்கள் கீழ்கண்டவாறு இருக்கும்.
*
என்னால் முடியாது
*
இது மிகவும் கஷ்டம்
*
இது எப்படி என்று எனக்கு தெரியாது
*
இதை என்னால் செய்ய முடியுமா என்று தெரியவில்லை
*
இதை நான் செய்வதை விட இவர் செய்வது சிறப்பாக இருக்கும்.
*
என்ன செய்ய வேண்டும் என்பதை என்னால் தீர்மானிக்க முடியவில்லை.
உணர்வுகள்:
தன்னம்பிக்கை இல்லாதவரின் உணர்வுகள் கீழ்கண்டவாறு இருக்கும்.
* சந்தேகம்
*
வரப்போவதை நினைத்து பயம்
*
எதிர்கொள்ளும் விஷயத்தைப் பற்றிய கவலை
*
தன்னைப்பற்றியே வெறுப்பு, கோபம்
*
புதிய சூழ்நிலையில் எதையோ நினைத்து பயம்
*
மனக்கசப்பு
*
குற்ற உணர்ச்சி மற்றும் ஊக்கமின்மை
நடத்தைகள்:
தன்னம்பிக்கை இல்லாதவரின் நடத்தைகள் கீழ்கண்டவாறு இருக்கும்.
* எதையாவது செய்து மாட்டிக் கொள்வதைவிட பேசாமல் இருந்துவிடலாம் என்ற போக்கு
*
பரிந்துரைகள் சொல்வதில் இடர்பாடு
*
யாராவது செய்யட்டும் பார்க்கலாம் என்று இருந்துவிடல் அல்லது எதையும் முந்தி செய்யாமலிருத்தல்
*
புதிய விஷயங்களை தவிர்த்தல் அல்லது மாற்றம் ஏற்படுவதை ஏற்றுக் கொள்ளாமலிருத்தல்.
*
தெரிந்த விஷயத்தைப் பற்றிக்கூட தொடர்ந்து அடுத்தவரிடம் ஆலோசனை மற்றும் உறுதிப்படுத்துவதற்கு கேட்பது.
*
எல்லாவற்றுக்கும் தயங்குவது. தொடர்ந்து ஊக்கமளித்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை.
*
கடைசி பெஞ்சில் அமர்வது
*
மீண்டும் மீண்டும் உறுதிபடுத்தல்
உடல்ரீதியான அறிகுறிகள்:
தன்னம்பிக்கை இல்லாதவரின் உடல் ரீதியான அறிகுறிகள் கீழ்கண்டவாறு இருக்கும்.
* தலைகுனிந்து நிற்பது.
*
கண்களைப் பார்த்து பேசாதது
*
அமைதியின்றி அங்கும் இங்கும் அலைவது
*
பதட்டத்துடனும் படபடப்புடனும் காணப்படுவது
*
சோம்பலாகவும் அக்கறையின்றியும் காணப்படுவது.
இவ்விஷயங்கள் அனைத்தும் தன்னம்பிக்கை இல்லாததை காட்டுகிறது. இதில் எது உங்கள் குணத்துடன் பொருந்திப் போகிறது என்பதை அறிந்து, அதை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். மேற்கூறியவை அனைத்தும் தகர்த்து உங்களை வெற்றியாளராக மாறுங்கள்.
நீடூரிக்காக
தொகுப்பு
- கோவை பஷீர், நைஜீரியாவிலிருந்து
Source : http://niduri.com/?p=803


--
*more articles click*
www.sahabudeen.com



புதன், 3 ஏப்ரல், 2013

கணினியைப் பயன்படுத்துபவர்களுக்கான பயனுள்ள குறிப்புகள்..!


நீங்கள் கணினியின் முன்பு நீண்ட நேரம் அமர்ந்து பணி புரிபவரா? உங்கள் கண்களைப் பாதுகாக்க சில டிப்ஸ்களைப் பார்ப்போம்.

ஆயர்வேத மருத்துவ அடிப்படைத் தகவல்(Ayarveta Medical Basic Information) என்ன சொல்கிறதெனில், மனிதனின் உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் (Land, water, fire, air, space) என ஐம்பூதங்கள்.

இவையனைத்தும் ஒன்றாய் தொகுத்து உருவாக்கப்பட்டதே மனிதனின் உடல்.

ஆயுர்வேத மருத்துவத்தின் அடிப்படையில் நீங்கள் உங்கள் கண்களுக்கும், உடலுக்கும் எப்படி பாதுகாப்பு அளிப்பது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

தொடர்ந்து இடைவிடாமல் கணினியில் உட்கார்ந்துகொண்டு வேலைப் பார்ப்பவர்களுக்கு உடல் சோர்வு உண்டாகும். உடல் சோர்வில் கண்களும் அடங்கும். கணினியால் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் உறுப்பு கண்கள்தான்.

அடிக்கடி computer Screen Blink ஆவதால்தான் கண்களுக்குப் பிரச்னையே உண்டாகிறது. தொடர்ந்து இவ்வாறான ஒளிகளை கண்கள் சந்திப்பதால் உடலில் உள்ள உயிர்த்துடிப்பை இயக்குகிற காற்று சிரமத்திற்கு ஆட்படுகிறது. அடிக்கடி ஒளிரும் கணினித் திரையால் உடலில் உள்ள உணர்ச்சி மண்டலம், புலன் உணர்வு மற்றும் மூளை போன்ற நரம்பு தொடர்பான இத்தியாதிகள் கூடுதல் பணிச்சுமைக்கு ஆட்படுத்தப்படுகின்றன.

உடலில் உள்ள பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்று அதிக சிரமத்திற்கு உள்ளாவதால்தான் மனதும் சோர்வடைந்து மன இறுக்கம் ஏற்படுகிறது. தொடர்ந்து இவ்வாறு மூளைக்கு வேலை கொடுப்பதால் அதிக உடல்சோர்வும், மனச்சோர்வும் ஏற்படுகிறது.

மனச்சோர்வு, உடல் சோர்வு, கண்கள் சோர்வடைவதை எப்படி தடுப்பது?
அமெரிக்க மருத்துவரான ஜூடித் மாரிசன் இதற்கென சில வழிமுறைகளை நமக்கு கற்றுக்கொடுக்கிறார். பெண் மருத்துவரான இவர் ஆயுர்வேத முறைப்படி நல்லெண்ணையை முகம் முழுவதுமாக பூசி மசாஜ் செய்யச்சொல்கிறார்.

பிறகு முழங்கையில் தொடங்கி விரல் நுனிகள் வரை நல்லெண்ணையை (Sesame oil)தடவி நன்றாக மசாஜ் செய்யச் சொல்கிறார்.

சில நேரம் கணினியின் இயக்கத்தை நிறுத்திவிட்டோ, அல்லது எழுந்து வெளியில் சென்று ஒரு ஐந்து நிமிடமாவது அலவலாவச் சொல்கிறார். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது இப்படி ஐந்து நிமிடம் ஓய்வு எடுத்தால் உடலும், மூளையும் ஒரு சீரான நிலைக்கு மீண்டும் திரும்பும்.

அவ்வப்போது உங்கள் கைவிரல்களை நீட்டி மடக்கலாம். நீங்கள் உங்கள் கை விரல்கள், மற்றும் கைகளை இலேசாக அழுத்தி மசாஜ் செய்துகொள்ளலாம். இதனால் நரம்புகளில் இரத்த ஓட்டம் சீராகும்.

கணினி இருக்கையில் உட்கார்ந்தவாறே கூட உங்கள் கண்களுக்கு நீங்கள் ஓய்வளிக்கலாம் (You can rest your eyes) . உள்ளங்கை கொண்டு உங்கள் கண்களை மூடிக்கொண்டு. நான்கு புறமும் கண்களை சுழற்றுவதன் மூலம், ஒரு நேர்க்கோட்டுப் பார்வையில் வேலை செய்த உங்கள் கண்களும், கண் தசை நார்களும் இயல்பு நிலைக்கு திரும்ப வைக்கலாம். இயல்பு நிலைக்கு கண் தசைநார்கள்(Eye ligaments) திரும்புவதால் கண்களுக்கு ஏற்படும் சோர்வு, அயற்சி நீங்கும்.

கணினி முன்பு நீண்ட நேரம் அமர்ந்து பணி செய்யும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள், அக்கவுண்டன்ட், முழுநேர பதிவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், மற்றும் மாணவர்கள் (Data entry operators, accountant, full-time bloggers, software engineers, and students) ஆகியோர்கள் இந்த முறையைப் பயன்படுத்தி நல்ல பலனைப் பெறலாம். இரவில் இந்த நல்லெண்ணை மசாஜ் செய்துகொள்ளலாம்.

பகலில் கைவிரல்கள், தோள்பட்டை, பின்னங்கழுத்து, முதுகுத் தண்டு (Fingers, shoulder, hind neck, spinal cord) ஆகியவற்றை நீங்களே பிடித்துவிட்டுக்கொள்வதன் மூலம் இலேசாக நீவிக்கொள்வதன் மூலம் முதுகு வலி, கழுத்து வலி, முழங்கை வலி (Back pain, neck pain, elbow pain) ஆகிய வலிகளிலிருந்து நீங்கள் தற்காத்துக்கொள்ள முடியும். அடிக்கடி கண்களுக்கு பயிற்சி அளித்துக்கொள்வதன் மூலம் கண்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்.


--
*more articles click*
www.sahabudeen.com



திங்கள், 1 ஏப்ரல், 2013

டேப்ளட் பிசி வாங்க போறீங்களா? கொஞ்சம் யோசிச்சு முடிவெடுங்க..!!!



வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் வெளிவரும் தொழில்நுட்ப சாதனங்கள் பல. பலரும் அதைப் பயன்படுத்திப் பார்க்கவே விரும்புகிறோம். டேப்ளட் பிசி வாங்கும் முன் நாம் அடிப்படையாகத் தெரிந்துகொள்ள வேண்டியவை இருக்கின்றன. அவற்றை இங்கு பார்ப்போம்.

டேப்ளட் பிசிக்களை பலரும் விரும்ப காரணம்:
(Top reasons to like a tablet)
குறிப்பாகச் சொல்வதானால் மாணவர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். கல்வித் தொடர்புடைய சாதனங்களாகவும் அவைகள் பயன்படுவதும் ஒரு முக்கிய காரணம். 


அதுபோன்றதொரு பயனுள்ள தொழில்நுட்பச் சாதனம்தான் டேப்ளட் பிசி.. பிசினஸ் செய்பவர்கள் முதல், மாணவர்கள் வரை அனைவருமே இதை வாங்க முனைகின்றனர். உங்களுக்கும் இதுபோன்றதொரு எண்ணம் வந்திருக்கலாம். டேப்ளட் பிசி(Tablet Pc) வாங்குவதற்கு முன்பு ஒரு சில விடயங்களை யோசித்து, பிறகு வாங்குங்கள்..!

குறைந்த விலையில் கிடைக்கும் ஆகாஷ் டேப்ளட்டிற்கு பிறகு பல்வேறு நிறுவனங்களின் டேப்ளட் பிசிக்கள் இப்போது இந்தியாவில் கிடைக்கிறது. இதன் விலை ரூபாய் 4000 த்திலிருந்து ஆரம்பிக்கிறது.

டேபிளட் பிசிக்களின் வகைகள்:
(Kinds of Tablet PC)
டேப்ளட் பிசியில் இரண்டு வகை உண்டு. போன்பேசும் வசதியுடன் கூடிய டேப்ளட் பிசி. மற்றொன்று போன் பேசும் வசதியற்ற டேப்ளட் பிசி. நீங்கள் வாங்கும் டேப்ளட் பிசியில் SIM card slot உடன் உள்ள டேப்ளட் பிசியாக இருந்தால் அதில் போன் பேசிக்கொள்ள முடியும். தற்போது நம் நாட்டில் கிடைக்கும் டேப்ளட் பிசிக்கள் 7" கொண்டவையாகவே கிடைக்கிறது. டேபிளட் பிசிக்கள் அனைத்துமே டச் ஸ்கிரீன் கொண்டவைதான். அதில் இரண்டு வகை உண்டு. ஒன்று resistive touch screen, மற்றொன்று capacitive touch screen. 


முதல் வகை touch screen-ல் டேப்ளட் பிசியுடன் கொடுக்கப்பட்டிருக்கிற சிறு குச்சியைப் போன்ற பென்சிலில் தொட்டு இயக்குவது. இரண்டாம் வகை capacitive touch screen -ல் மென்மையான தொடுதலில் இயங்குபவை. இவ்வாறான டேப்ளட் பிசிக்கள் சற்று விலை அதிகம்.


Tablet PC க்கள் Android இயங்குதளங்களைக் கொண்டே இயங்குகிறது. இந்த ஆன்ட்ராய்ட் இயங்குதளங்களில் சில வகை android operating systems பதிப்புகள் உள்ளது. அதாவது கணினியில் விண்டோஸ் xp, விண்டோஸ் 7, விண்டோஸ் 99, இருப்பதைப் போன்று ஆண்ட்ராய்டிலும் Android 2.2., android gingerbread, android 3.1, android 4 என ஒரு சில பதிப்புகள் கிடைக்கின்றன. நம் நாட்டில் கிடைக்கக்கூடிய மலிவு விலை ஆன்ட்ராய் இயங்குதளங்கள் android 2.2, android 2.3 ஆகியவைகளே.. இந்த இயங்குதளங்களைக்கொண்ட டேப்ளட் பிசிகளில் video Call செய்ய முடியாது.

அவ்வாறு பேச வேண்டுமானால் இதற்கென உள்ள டான்கோ(TANGO)என்ற மென்பொருளைப் பயன்படுத்தி வீடீயோ சாட் செய்யலாம். Tango மென்பொருளை டவுன்லோட் செய்ய இணைப்பைக்கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். இந்த இயங்குதளங்கள் இயங்கும் டேப்ளட் பிசிகளில் Gtalk-ல் chat செய்ய முடியும். ஆனால் பேசுவதற்கு முடியாது. skype பயன்படுத்துபவர்கள் இதன்மூலம் பேசலாம்.

SIM Slot
உடன் கூடிய டேப்ளட் பிசிக்களில் போன் பேச முடியும். Bluetooth வசதியுடன் கூடிய டேப்ளட் என்றால் கூடுதல் பயன் பெறலாம். இந்த வசதியுடைய டேப்ளட் பிசியுடன் ஹெட்செட்டை இணைத்து பேசிக்கொள்ளலாம். இதனால் மற்றவர்கள் நாம் பேசுவதை கேட்பது தவிர்க்க முடியும் blue tooth வசதி இல்லாத டேப்ளட் பிசிக்களில் பேசலாம். ஆனால் speaker மூலமே கேட்க முடியும். இதனால் அருகில் உள்ளவர்களும் நம்முடைய பேச்சை கேட்க முடியும். இதைத் தவிர்க்க Blue tooth வசதியுடன் டேப்ளட் பிசிக்களை தேர்ந்தெடுத்து வாங்குவது நலம். கொஞ்சம் கூடுதல் பணம் போட்டால் இந்த வசதியுடனை டேப்ளட் பிசிக்களை வாங்கிவிடலாம்.

Tablet Pc -External Keyboard:

டேப்ளட் பிசிக்களுக்காகவே மினி கீபோர்ட்கள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. இந்த மினி கீபோர்ட்களை டேப்ளட் பிசியுடன் இணைத்து பயன்படுத்தலாம். Tablet Pc உடன் Keyboard இணைக்க USB Port அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும். 



யு.எஸ்.பி ஹோஸ்ட் மோட் எனேபிள் செய்து கணினியுடன் இணைத்தும் பயன்படுத்தலாம். இதன் மூலம் கணினியிலிருந்து டேப்ளட் பிசிக்கும், டேப்ளட் பிசிலிருந்து கணிக்கும் தகவல்களை பரிமாற்றம் செய்துகொள்ளலாம். சாதாரணமாக மினி யு.எஸ்.பி போர்ட் மட்டுமே டேப்ளட் பிசியில் இணைக்கப்படிருக்கும். நாம் வழக்கமாக பயனப்டுத்தும் pen-drive, மற்ற USB பொருட்களை இதில் பயன்படுத்த முடியாது. 
தோல் உறை பாதுகாப்புடன் கூடிய டேப்ளட் பிசி மினி கீபோர்ட் உடன்
2G வசதி கொண்ட டேப்ளட் பிசிக்கள் விலை குறைவாக கிடைக்கும். 3G வசதியுடன் வெளிவரும் டேப்ளட் பிசிக்கள் சற்று விலை அதிகம். சாதாரணமாக டேப்ளட் பிசிக்களின் எடை 350 கிராம் முதல் 450 கிராம் வரை இருக்கும். இந்த டேப்ளட் பிசிக்கல் அனைத்துவித வீடியோ பார்மட்களையும் ஆதரிக்காது. எனினும் அதற்குரிய மென்பொருள்களை தரவிறக்கம் செய்து பயன்டுத்துவதன்மூலம் அனைத்து வகை வீடியோக்களையும் Support செய்யுமாறு அமைத்துக்கொள்ளலாம்.

டேப்ளட் பிசிக்களில் உள்ள மற்ற வசதிகள்:
(Features of Tablet Pc)
GPS, Bluetooth, 2-G, GPRS, WiFi, branded camera
போன்றவை டேப்ளட் பிசியில் உள்ள மற்ற வசதிகள்.

இதில் பல்வேறு பட்ட கேம்ஸ்களும் விளையாடலாம். இதற்கு உங்கள் டேப்ளட் பிசியில் இருக்கும் மெமரி அளவு முக்கியம்.

இதில் Internal Memory, External memory, Rom, RAM என நான்கு வகை மெமரிகள் இருக்கும். Internal Memory என்பது டேப்ளட் பிசியினுள்ளேயே Inbuilt ஆக இருக்கும். மெமரி கார்ட்டைப் போன்றது இது. இந்த மெமரியில் நமக்கு வேண்டியதை நாம் பதிந்துவைக்கலாம். 8GB அதற்கு மேலும் சப்போர்ட் செய்யும் டேப்ளட் பிசிக்களும் இப்போது சந்தையில் கிடைக்கின்றன.

External memory
என்பது நாம் கையில் எடுத்துச்செல்ல்கூடிய வகையில் இருக்கிற மெமரி கார்ட் ஆகும். 32GB வரை சப்போர்ட் செய்யும் திறனுடையது டேப்ளட் பிசிக்கள். இப்போது அதிகளவு மெமரி சப்போர்ட் செய்யும் டேப்ளட் பிசிக்களும் கிடைக்கின்றன. இத்தகைய மெமரிகார்ட்களில் நமக்கு வேண்டிய டேட்டாக்களை பதிந்து பயன்படுத்த முடியும்.

சாதாரண கணினியைப் போன்றே இதிலும் RAM ன் பணி டேப்ளட் பிசிக்களின் வேகத்தை நிர்ணயிக்கும் பொருளாக பயன்படுகிறது. இது தற்போது 512MB, 1GB, 2GB, 4GB என்ற அளவுகளில் கிடைக்கிறது.

ROM -
என்பது Read only memory என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இதில்தான் நாம் நிறுவும் மென்பொருள்கள் பதியப்படும். குறிப்பாக tablet Pc system softwares அனைத்தும் இதில்தான் பதியப்படும்.

Tablet Pc-
க்களில் தமிழ்:
(Tamil in Tablet PC)
இதில் தமிழையும் பயன்படுத்த முடியும். குறிப்பாக Opera Mini Browser மூலம் இணையத்தில்லுள்ள தமிழ்த் தளங்களை படிக்க முடியும். ஆண்ட்ராய்ட் லேட்டஸ்ட் வெர்சனில் இது இன்னும் சுலபமாக்கப்பட்டிருக்கிறது. தற்போது புதிய டேப்ளட் பிசிக்கள் எண்ணற்ற வசதிகளுடன் சந்தையில் கிடைக்கிறது.

புதிதாக டேப்ளட் பிசி வாங்க நினைப்பவர்களுக்கு இந்த தகவல்கள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

ஆண்ட்ராய்ட் இயங்குதளங்களையும், Google Play Application களையும் ஆதரிக்கும்  Tablet PC மற்றும் Phone களைத் தயாரிக்கும் பிரபல நிறுவனங்கள். கீழே கொடுத்திருக்கிறேன். ஒவ்வொரு நிறுவனத்திலும் பல்வேறுபட்ட மாடங்களில் உங்களுக்கான Tablet PC, மற்றும் Phone நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

Update:

Google Play
யில் உள்ள ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை சப்போர்ட் செய்யும் Tablet PC மற்றும் Phone களை உற்பத்தி செய்யும் பிரபல நிறுவனங்கள்:

Acer, Anydata, Archos, Asus, Compal, Coolpad, Dell, Enspert, Foxconn, Fujitsu, Funai Electric, Gigabyte, Hisense, Hon Hai Precision Industry Co., HTC, Huawei, INQ Mobile, Intel, iriver, Kobo, KT Tech, Kyocera Corporation, Lenovo, LG, Logitech, Micromax, Motorola, NEC, OpenPeak, Panasonic Corporation, Panasonic Mobile Communications, Pantech, Pegatron, Philips Electronics, Positivo, Quanta Corporation, Samsung, SHARP, SK Telesys, Sony, Sony Ericsson, mitomo Electric Networks, TCT Mobile Limited (Alcatel), Teleepoch, Toshiba, Vizio, ZTE,


--
*more articles click*
www.sahabudeen.com



மழைக்காலத்தில்ஏற்படும் வாய்ப்புண்... வீட்டு மருத்துவத்தின் மூலம் தீர்வு.

வாய்ப்புண் ஏற்பட்டுவிட்டால் , ஒருவருக்கு பெரும் தொந்தரவு. அதில் இருந்து எப்படியாவது மீண்டுவிட...

Popular Posts