லேபிள்கள்

செவ்வாய், 9 செப்டம்பர், 2025

வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க அசத்தலான வழிகள்.

ஒருவரது வயிற்றில்    புழுக்கள் இருப்பது ஒரு பொதுவான பிரச்சனை தான்.

தற்போதைய மோசமான வாழ்க்கை முறை, கெட்டுப் போன உணவை உண்பது, சாப்பிடுவதற்கு முன் கைகளை சுத்தம் செய்யாமல் இருப்பது மற்றும் அசுத்தமான நீரைக் குடிப்பது போன்றவற்றால் வயிற்றில் புழு க்கள் உருவாகின்றன.

இதனால் அடிக்கடி வயிற்றில் திடீர் வலி, பசியின்மை, வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க கூடும்.

எனவே இவற்றை எளிய முறையில் போக்க ஒரு சில எளிய வழிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.

1/2 டீஸ்பூன் நாட்டுச் சர்க்கரையுடன், 1/2 டீஸ்பூன் செலரி பவுடர் சேர்த்து கலந்து, அதை ஒரு நாளைக்கு 3 முறை சாப்பிட வேண்டும். விருப்பமுள்ளவர்கள், இத்துடன் ஒரு சிட்டிகை ப்ளாக் சால்ட, 1/2 டீஸ்பூன் ஓமம் சேர்த்து கலந்து உட்கொண்டு வெதுவெதுப்பான நீரைக் குடியுங்கள். இப்படி இரவு தூங்கும் முன் செய்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்துவிடும்.

வேப்பிலையை அரைத்து, அத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து, வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்துவிடும்.

கேரட்டை தினமும் 2 வேளை சாப்பிட்டு வந்தால், அது வயிற்றில் உள்ள புழுக்களை மலத்தின் வழியாக எளிதில் வெளியேற்ற உதவும்.

பப்பாளியின் விதைகளை அரைத்து, அதை பாலுடன் சேர்த்து கலந்து குடித்து வர, வயிற்றில் உள்ள புழுக்கள் அழியும். இல்லாவிட்டால், பாப்பாளியின் இலைகளை சுடுநீரில் போட்டு கொதிக்க விட்டு, அதை வடிகட்டி குடித்து வருவதன் மூலமும் வயிற்றுப் புழுக்களை அழிக்கலாம்.

ஓம விதைகளை அரைத்து பேஸ்ட் செய்து, சிறிது வெல்லத்தை சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டி குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம்.

பூண்டை அரைத்து, அதில் கல் உப்பு சேர்த்து கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை உட்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பூண்டு பால் கூட குடிக்கலாம். இவ்வாறு செய்தால், குழந்தைகள் மட்டுமின்றி, பெரியோர்களின் வயிற்றில் உள்ள புழுக்களும் அழிந்துவிடும்.

தினமும் துளசியை வாயில் போட்டு மென்று அதன் சாற்றினை விழுங்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு வேளை துளசி இலைகளை சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

மாதுளையின் தோலை உலர்த்தி பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அந்த பொடியை ஒரு நாளைக்கு 2 வேளை நீரில் கலந்து குடித்து வர, சில நாட்களில் புழுக்கள் அழிந்து வெளியேறிவிடும்.

பாகற்காயை அரைத்து சாறு எடுத்து, தேன் கலந்து, ஒரு நாளைக்கு 2 வேளை குடித்து வருவதன் மூலம் வயிற்றுப் புழுக்களை அழிக்கலாம் இல்லாவிட்டால் பாகற்காயின் விதைகளை உலர்த்தி அரைத்து பொடி செய்து, தேன் கலந்து சாப்பிடலாம்.

ஒரு கப் சுடுநீரில் 1-2 கிராம்பு சேர்த்து 20 நிமிடம் ஊற வைத்து, பின் அந்நீரை குடிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை குடித்து வந்தால், புழு பிரச்சனை இல்லாமல் வாழலாம்.



--

சனி, 6 செப்டம்பர், 2025

வாட்டி எடுக்கும் முதுகு வலியைப் போக்கும் வழிகள்.

நாம் முதுகு வலியை சாதாரணமாக எண்ணி புறக்கணிக்க கூடாது, அதற்க்கு தகுந்த சிகிச்சையை வீட்டிலேயே (back pain home remedies) செய்து பார்க்கலாம், அவ்வாறு செய்தும் வலி குறையவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகி ட்ரீட்மெண்ட் எடுப்பது அவசியம்.

உங்கள் முதுகு வலியை தணிக்க பல்வேறு வகையான இயற்கை வைத்தியங்கள் உள்ளன, இது மருந்து உட்கொள்வதைக் குறைத்து அல்லது உங்கள் மருத்துவ சிகிச்சைக்கு கூடுதல் பலனை அளிக்க உதவும்.

முதுகு வலி உள்ளவர்கள் அடிக்கடி கொள்ளு ரசம் செய்து அருந்தலாம், இதனால் முதுகு வலி குணமாகும். அதேபோல் தினமும் உறங்குவதற்கு முன் ஒரு கிளாஸ் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், நாட்டு சர்க்கரை மற்றும் சிறிதளவு ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக காய்ச்சி பின் பருகிவரலாம். இதனால் முதுகு வலி நீங்கும்

1. உட்காரும் விதம்

அலுவகத்திலோ வீட்டில் டிவி பார்க்கும் போதோ உட்காரும் நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும். உட்காரும் போது நேராகவும், குனியாமல் நிமிர்ந்து அமர்ந்தாலும், வேலை பளுவால் நீங்கள் சற்று சாய்ந்து செளகரியமாக உட்கார நேர்ந்திடும். இந்த சூழ்நிலைகளில் சில நிமிடங்கள் என்பது, சில மணி நேரங்களாக மாற்றி உங்களை சோம்பல் அடைய செய்யும். இதனை மனதில் கொண்டு அவ்வப்போது நீங்கள் அமர்ந்திருக்கும் நிலையை மாற்றி கொண்டு நேராக உட்கார பழகி கொள்ள வேண்டும்.

வேலையின் நடுவே அவ்வப்போது கழுத்தை நேரகவும், வலது இடது புறமாகவும் திருப்பி கண்களை மூடி ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம்.

2. உடற்பயிற்சி

கீழ் முதுகு வலியால் அவதிப்படுவோர் மூட்டு வலிகள் இல்லாத பட்சத்தில் தரையில் மண்டியிட்டு அவ்வப்போது உட்காரலாம். இப்படி உட்கார்ந்த நிலையில், உங்கள் உள்ளங்கயை தரையில் வைத்து நேராக அமர்ந்து உங்கள் முதுகு தண்டை உயர்த்துங்கள்.

3. வைட்டமின்கள்

கால்ஷியம் எலும்பின் வலிமைக்கு முக்கியமானதாகும். உணவில் உள்ள கால்ஷியத்தை உடல் தக்கவைத்து கொள்ள வைட்டமின் டி அத்தியாவசியம். வைட்டமின் டி இல்லாமல் நீங்கள் எடுத்துகொள்ளும் கால்சியம் நிறைந்த உணவுகளை உடல் ஏற்று கொள்ளாது. இது தவிற வைட்டமின் ஏ, வைட்டமின், சி, கே ஆகியவை எலும்பு தேய்மானத்தை தடுக்க கூடிய ஆற்றல் பெற்றதாகும்.

4. உணவு முறை

நாம் சாப்பிடும் உணவுகளில் பூண்டு, இஞ்சி, மஞ்சள் போன்ற அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை சேர்க்க கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து இல்லாத இறைச்சி வகைகள், மீன், பழங்கள், பச்சை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளுங்கள்.

5. தாதுக்கள்

எலும்பின் வளர்ச்சி மற்றும் வலிமையை மேம்படுத்த கால்ஷியம், மெக்னிஷியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். வைட்டமின்களுடன், தாதுக்களும் நமது உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும்.

6. சூடான குளியல்

முதுகு வலி அதிகமாக இருக்கும் நேரங்களில் சூடான குளியல் மேற்கொள்வது நல்லது. இது முதுவலியை கட்டுபடுத்துவதோடு உடலுக்கு உற்சாகத்தையும் வழங்கும்.

முதுகு வலி நீங்க

7. கடுகு எண்ணெய்

எலும்புகளை வலுவாக்க கடுகு எண்ணெயை உடலில் தேய்த்து சிறிது நேரம் வெயிலில் நடக்க வேண்டும். கடுகு எண்ணெய் எலும்பின் வளர்ச்சிக்கு உகந்ததாகும்.



--

புதன், 3 செப்டம்பர், 2025

வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தினால் கிடைக்கும் நன்மைகள்.

உடலில் 80 சதவீதம் தண்ணீர் நிறைந்துள்ளது. எனவே தான் இவ்வுலகில் உணவு இல்லாவிட்டாலும் வாழ முடியும், ஆனால் தண்ணீரின்றி வாழ முடியாது.

மேலும் தண்ணீர் உடலில் போதிய அளவில் இருந்தால், உடல் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். பலர் தண்ணீரை அதிகம் குடிக்காமல் இருக்கின்றனர். இதற்காக அவர்களுக்கு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகளைப் பற்றி நன்கு தெரியவில்லை என்று அர்த்தம் இல்லை. அதிகமான வேலைப் பளுவினால், தண்ணீர் குடிப்பதற்கு கூட நேரமில்லை என்று தான் சொல்ல வேண்டும். உண்மையில் தண்ணீர் குடிப்பதால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை தடுக்கலாம். அதனால் தான் மருத்துவர்கள் கூட தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். மேலும் மனித உடலுக்கு ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் போதுமானதாக இருக்கலாம். ஆனால் அது நிச்சயம் போதாது. ஏனெனில் நாம் வெளியே வேலைக்கு செல்வது, பயணம் மேற்கொள்வது போன்றவற்றை செய்வதால், 8 டம்ளர் தண்ணீர் என்பது குறைவு தான். ஆகவே குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்

நாம் காலையில் எழும்போது டீ அல்லது காபி மட்டுமே குடிக்கிறோம். அதிலும் பெட் காபி குடிப்போர் பலர். ஆனால் டீ மற்றும் காபிக்கு பதிலாக வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள். ஏனெனில் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் கிடைக்கும் நன்மைகளில் முதலாவதாக நமது குடல் சுத்தமாகும். அதற்கு தண்ணீர் குடித்தவுடன், சிறிது நேரத்திலேயே மலம் கழிக்கக்கூடும். இப்படி தினமும் தவறாமல் மலம் கழித்தாலேயே, உடலில் உள்ள நச்சு கழிவுகள் முற்றிலும் வெளியேறி விடும்.

தண்ணீர் குடிப்பதின் நன்மைகள்

தண்ணீரானது உடலின் மூலைமுடுக்குகளில் தேங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றி விடும்.

மேலும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும். வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், இரத்த சிவப்பணுக்கள் வளர்ச்சி அதிகரித்து, இரத்தமானது அதிகப்படியான ஆக்ஸிஜனை உள்ளிழுக்கும் இதனால் உடலானது சோர்வாகாமல் அதிக புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பவர்கள் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தாண்ணீர் குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து தலைவலி குறையும். மேலும் அல்சர் போன்ற வயிற்று பிரச்சனை ஏற்படாமல் தடுக்கலாம்.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்களுடன், தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்து வெளியேறி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும். மேலும் உடலின் மெட்டபாலிசம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது நோய்களை எதிர்த்து போராட உதவும். எந்த நோயும் அவ்வளவு எளிதில் நம்மை அண்டாது.

தினமும் தண்ணீரைக் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் குடல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாது. ஏனெனில் குடலானது சுத்தமாக இல்லாவிட்டால் வயிற்று உபாதைகளை ஏற்படுத்தும் மேலும் முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும். இப்படி பருக்கள் வந்தால் சருமமானது தனது அழகை இழந்து விடும். தண்ணீரை குடித்து வந்தால் குடலியக்கமானது சீராக நடைபெற்று, முகம் பருக்களின்றி பொலிவுடன் காணப்படும்.



--

வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க அசத்தலான வழிகள்.

ஒருவரது வயிற்றில்     புழுக்கள் இருப்பது ஒரு பொதுவான பிரச்சனை தான். தற்போதைய மோசமான வாழ்க்கை முறை , கெட்டுப் போன உணவை உண்பது , சாப...

Popular Posts