நெல்பொறி (அ) சீரகம் மென்று தின்றால் அடங்கா வாந்தி அமைதியாய் நிற்கும். வாந்தியை நிறுத்த நல்ல உணவு நெல் பொரி.
இதைத் தனியே பொடித்துத் தூளாக்கி மோர் அல்லது தண்ணீர் விட்டுக் கரைத்துச் சாப்பிடலாம்.
நெல் பொரியைக் கஞ்சி காய்ச்சும்போது ஒரு கொதி வந்ததுமே இறக்கிவிடலாம். கொதிக்கும்போது, அதில் ஒரு ஏலக்காயையும், நான்கைந்து கிராம்பையும் போட்டு கஞ்சியாக்கினால் இந்தக் கஞ்சியே வாந்தியை நிறுத்திவிடும் மருந்தாகும்.
கஞ்சியை வடிகட்டி ½ – 1 ஸ்பூன் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு போட்டுச் சாப்பிடலாம். அடிக்கடி வாந்தி எடுத்தால் ஸ்பூன் ஸ்பூனாக இந்த பொரிக் கஞ்சியைச் சாப்பிடலாம்.
பித்த வாந்தியில் வாய்க் கசப்பும், வாந்தியாகும் தண்ணீரில் மஞ்சள், பச்சை நிறம் காணப்பட்டால், இந்த நெல் பொரிக் கஞ்சியில் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு, ஆரஞ்சு பழச்சாறு, மாதுளம் பழச்சாறு போன்றவை சேர்த்துச் சாப்பிடலாம்.
உமட்டல், விக்கல், நாவறட்சி இவற்றைப் போக்கும். வாந்தியினால் ஏற்படும் உடல் நீரின் குறைவை, சிறிது உப்புச் சேர்த்து இந்தக் கஞ்சியைக் குடிப்பதன் மூலம், அதன் உபாதைகளைத் தடுக்கலாம்.
உமட்டலைக் குறைக்க எலுமிச்சம் பழத்தின் தோலைக் கசக்கி முகர்ந்தால் உமட்டல் குறையும். தேனில் ஊறப்போட்ட ஆப்பிள், நாட்பட்ட வாந்தியை நிறுத்தச் சிறந்தது. ஐஸ், வாந்தியை இரைப்பையின் பரபரப்பையும் குழப்பத்தையும் குளிர்ச்சியால் மறக்கச் செய்வதன் மூலம் குறைத்துவிடும். வாந்தியை நிறுத்தும்.
மயிலிறகின் சந்திர வட்டக் கண்கள் உள்ள பகுதியை நெய்த்திரி அல்லது சிற்றாமணக்கு எண்ணெய் திரியிட்ட விளக்கில் சாம்பலாக்கி, திப்பிலியின் சூர்ணமும் 1 -2 அரிசி எடை அளவில் வகைக்குச் சேர்த்து தேனில் குழைத்துக் கொடுத்தால், இரைப்பையின் குமுறலை அடக்கி, வாந்தியை நிறுத்திவிடும். விக்கல், பெருமூச்சு, மூச்சுத் திணறல் போன்றவற்றையும் குணப்படுத்தும்.
வாந்தியை நிறுத்த துளசி சாறு, கல்கண்டு சேர்த்து சாப்பிட வாந்தி நிற்கும்.
அரசம் பட்டையை நெருப்பில் சிவக்க வைத்துத் தண்ணீரில் துவைத்தெடுத்த நீரைத் தெளிய வைத்துச் சாப்பிட்டால், வாந்தி, விக்கல், நாவறட்சி குணமாகும்.
இந்துப்பு, சீரகம் சம அளவு, சிறு துண்டுகளாக்கிய எலுமிச்சம் பழத்துடன் பொடித்துச் சேர்த்து அனலில் வாட்டி சுவைத்துச் சாப்பிட, வாந்தி நிற்கும். வசம்பு சுட்ட கரி, ஏலக்காய் சுட்ட கரி, பலாச் சக்கை சுட்ட கரி 4 -6 அரிசி அளவு எடுத்து சிறிது தேனுடன் சாப்பிடலாம்.
பருத்தி விதைத்தூள், ஏல அரிசி, திப்பிலி, நெல்பொரி சம அளவு பொடித்து, அதே அளவு சர்க்கரை சேர்த்து ¼ – ½ டீ ஸ்பூன் சாப்பிட இனம் தெரியாத வாந்தி கூட நிற்கும்.
வயிற்றுக் குழப்பத்துடன் வாந்தியிருந்தால் கடுகை அரைத்து மேல் வயிற்றில் பூசி 10 -15 நிமிடங்கள் கழித்து அலம்பிவிட உடன் வாந்தி நிற்கும்.
பித்த வாந்தியை நிறுத்த: வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். எலுமிச்சைப் பழத்தை துண்டுகளாக்கி, உப்பு சேர்த்து, மென்று சாப்பிடவும்.
கர்ப்பமாக இருக்கும் போது, பெண்களுக்கு வாந்தியை தடுக்கும் இயற்கை வைத்தியங்கள்
உலர் எலுமிச்சை: எலுமிச்சையை துண்டுகளாக நறுக்கி, அதனை குறைவான தீயில் சிறிது நேரம் வறுத்து, பின் அதனை சூரிய வெப்பத்தில் காய வைத்து, பின் அதனை அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் எலுமிச்சையை துண்டுகளாக்கி, வெயிலில் 3-4 நாட்கள் காய வைத்து, கொடி செய்து கொள்ளலாம். பின், அந்த பொடியை வாந்தி வரும் மாதிரி இருக்கும் போது, சூடான நீரில் போட்டு, குடிக்க வேண்டும். இந்த செயலை மயக்கம் வருவது போது இருந்தாலும், குடிக்கலாம்.
இஞ்சி: இஞ்சியின் சிறிய துண்டை சாப்பிட்டாலும், வாந்தி வருவது போன்ற உணர்வு இருந்தாலும் தடுக்கலாம். வேண்டுமெனில் இஞ்சி டீ போட்டு குடித்தாலும், அதனை சரிசெய்யலாம். எனவே கர்ப்பிணிகள் வெளியே செல்லும் போது சிறு துண்டு இஞ்சியை கொண்டு செல்வது நல்லது.
எலுமிச்சை ஜூஸ்: இது ஒரு சிறந்த மற்றும் பிரபலமான ஒரு மருந்து. அதிலும் கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படும் வாந்தியை கட்டுப்படுத்த, ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் சிறப்பானதாக இருக்கும். குறிப்பாக வெதுவெதுப்பான நீரில் ஜூஸ் போட்டு குடிப்பது நல்ல பலனைத் தரும்.
ஓமம்: வாந்தி வந்தாலோ அல்லது வருவது போன்ற உணர்வு இருந்தாலோ, அப்போது சிறிது ஓமத்தை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால், வாந்தி வருவதை தடுக்கலாம். அதுமட்டுமின்றி, இவ்வாறு செய்தால், மயக்க உணர்வும் போய்விடும்.
மூலிகை டீ: ஒரு கப் மூலிகை டீ சாப்பிட்டாலும், கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வாந்தியை தடுக்கலாம். தற்போது நிறைய மூலிகை டீ உள்ளது. ஏன் இஞ்சியிலிருந்து, சீமைச்சாமந்தி டீ வரை எது வேண்டுமானாலும் குடிக்கலாம். இதனால் மயக்கம், குமட்டல், வாந்தி போன்றவற்றை குணப்படுத்தலாம்.
--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக