லேபிள்கள்

வெள்ளி, 19 செப்டம்பர், 2025

தக்காளியின் தீமைகள்!

நமது தினசரி உணவில் முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது தக்காளி. தக்காளியை சமையலுக்கு மட்டுமல்ல, சாலட் வடிவில் அப்படியே பச்சையாகவும் பயன் படுத்துகிறோம்.

ஆனால் தக்காளியை உட்கொள்வது சில நேரங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதுமட்டுமல்ல, சிலர் தக்காளி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கான காரணங்களை மருத்துவர்கள் விளக்கமாக கூறுகின்றனர்.

அனைத்து சீசனிலும் எளிதில் கிடைக்கும் தக்காளியில், ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம், வைட்டமின் சி, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஆன்டி-ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ள தக்காளி, நோய்களை எதிர்த்து உடலை வலுப்படுத்துகிறது.

தக்காளியை தொடர்ந்து உட்கொள்வது கண்களுக்கும் நன்மை பயக்கும். ஆரோக்கியத்திற்காக தக்காளியை தினமும் சாப்பிட்டாலும், அதை தவறான முறையில் உட்கொள்வதும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதே சமயம், சில நோயாளிகள், தக்காளி சாப்பிட்டால் அவர்களுக்கு எதிர்மறையான பலன்கள் ஏற்படும்.

எந்தெந்த நபர்கள் தக்காளியை சாப்பிடக்கூடாது என்பது தெரியுமா?

இவர்கள் தக்காளி சாப்பிடக்கூடாது

சிறுநீரக கல் பிரச்சனை: சிறுநீரக நோய் இருந்தால், தக்காளியை சாப்பிடவே கூடாது. அது ஆரோக்கியம் தொடர்பான சிக்கல்களை அதிகரிக்கும். தக்காளியை அதிகமாக உட்கொள்வது சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிப்பதாக பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. தக்காளியில் கால்சியம் ஆக்சைடு இருப்பதால் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயம் உள்ளது.

கால்சியம் ஆக்சைடு காரணமாக, 90% பேருக்கு சிறுநீரக கற்கள் பிரச்சனை ஏற்படுகிறது. எனவே, சிறுநீரகக் கற்களின் அறிகுறிகள் தென்பட்டால் தக்காளியை உட்கொள்வதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.

மூட்டு வலி

உங்கள் மூட்டுகளில் வலி இருந்தால், தக்காளி தீங்கு விளைவிக்கும். மூட்டு வலி உள்ளவர்கள் தக்காளியை சாப்பிடக்கூடாது, ஏனெனில் அது உங்கள் பிரச்சனையை அதிகரிக்கும். இதன் காரணமாக வீக்கம் அதிகரிப்பதோடு, மூட்டு வலி அதிகரிக்கும். அதுமட்டுமல்ல, மூட்டு வலிக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் அது பலனளிக்காது.

வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கு பிரச்சனை இருந்தால், தக்காளி சாப்பிடாமல் இருப்பது நல்லது. வயிற்றுப்போக்கு அல்லது மலம் நீராக போகும்போது, தக்காளியை உட்கொள்வது பிரச்சனையை மேலும் அதிகரிக்கும். தக்காளியில் இருக்கும் சால்மோனெல்லா என்ற பாக்டீரியா, வயிற்றுப்போக்கு பிரச்சனையை அதிகரிக்கிறது. எனவே, வயிற்றுப்போக்கு இருக்கும்போது தக்காளியை சாப்பிடக்கூடாது.

செரிமான பிரச்சனை

சில நேரங்களில் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளையும் தக்காளி ஏற்படுத்துகிறது. அமிலத்தன்மை உள்ளதால் தக்காளியை அதிகம் சாப்பிட்டால் அசிடிட்டி பிரச்சனை வரலாம். இதனால், நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.

தக்காளியை அதிகமாக உட்கொண்டால், உங்களுக்கு வயிற்று வலி மற்றும் வாயு பிரச்சனையும் ஏற்படலாம். தொடர்ந்து வாயு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தக்காளி சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.


--

கருத்துகள் இல்லை:

வாந்தியை நிறுத்த எளிய வீட்டுக் குறிப்புகள்.

நெல்பொறி (அ) சீரகம் மென்று தின்றால் அடங்கா வாந்தி அமைதியாய் நிற்கும். வாந்தியை நிறுத்த நல்ல உணவு நெல் பொரி. இதைத் தனியே பொடித்துத் ...

Popular Posts