லேபிள்கள்

புதன், 3 ஏப்ரல், 2024

Fish oil மாத்திரை விட்டமின் டி குறைபாட்டை போக்க உதவுமா? நன்மைகள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.


மீன் மாத்திரையை மருத்துவர்கள் பல பிரச்னைகளுக்காக பரிந்துரைப்பார்கள்.

ஆனால் அது எதற்காக , ஏன் என யோசித்தது உண்டா..? இதற்கான விடைதான் இந்தக் கட்டுரை.

மீன் மாத்திரையானது பண்ணா மீன் ( Cod fish ) எனப்படும் ஒரு வகையான மீனின் கல்லீரலில் இருந்து எடுக்கப்படுகிறது. எனவே இதை Cod Liver Oil என்றும் அழைப்பார்கள். இதில் வைட்டமின் A, வைட்டமின் D மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமாக இருக்கிறது.

வைட்டமின் D சத்துக் குறைபாடு பலருக்கும் உண்டு என்பதால் இந்த மாத்திரை பலருக்கும் பரிந்துரைக்கப்படும். இந்த வைட்டமின் D யானது உணவில் உள்ள மற்ற ஊட்டச்சத்துகளை உறிஞ்சி உறுப்புகளுக்கு அனுப்ப உதவுகிறது.

குறிப்பாக கால்சியம் சத்து, நோய் எதிர்ப்பு சக்தி, செல்களின் வளர்ச்சி ஆகிவற்றை பிரதானமாக அளிக்கிறது. எனவேதான் வைட்டமின் D நிறைந்த மீன் எண்ணெய் மாத்திரை அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது.

வைட்டமின் A கண்களுக்கு நல்லது. கண் பார்வையை கூர்மையாக்க உதவுகிறது.

Omega 3 fatty acid என்பது கெட்டக் கொழுப்புகளை சேர விடாமல் குறைக்க உதவுகிறது. இதனால் உடல் எடையும் குறையும்.

இவை தவிற வைரஸை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. பாக்டீரியாக்களின் வளர்ச்சியையும் தடுத்து அடியோடு அழிக்க உதவுகிறது.

எனவேதான் மருத்துவர்கள் மீன் மாத்திரையை அதிகம் பரிந்துரைக்கின்றனர். எனினும், இதை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தாமாக வாங்கி உண்பது ஆபத்தை விளைவிக்கும்.



--

கருத்துகள் இல்லை:

பெண்கள் மூக்குத்தி அணிவதற்கு பின்னால் உள்ள சுவாரஸ்யமான தகவல்கள்.

அன்றும் இன்றும் காரணம் தெரியாமல் அணிந்த மூக்குத்தியின் பெருமை பற்றி தெரியுமா ? மூக்குத்தி...

Popular Posts