லேபிள்கள்

செவ்வாய், 9 ஏப்ரல், 2024

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுவது ஏன்?

வெயில் காலத்தில் தான் உடல்சூடு அதிகமாகும் என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில் குளிர்காலத்தில் தான் சூடு அதிகரிக்கும்.

அதனால் சிறுநீர் கழிக்கும்போது நீர்க்கடுப்பு ஏற்படும். வலி எரிச்சல் உண்டாகும். அதை வீட்டிலேயே சின்ன சின்ன விஷயங்களின் மூலமாக சரிசெய்து கொள்ள முடியும். அது எப்படி என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

UTI என்பது சிறுநீரக பகுதிகளில் பாதிப்பு ஏற்படும் ஒரு நோயாகும். சிறுநீரகம், சிறுநீர் வடிகுழாய், சிறுநீர்ப்பை, சிறுநீரக குழாய், போன்ற பகுதிகளில் பாக்டீரியாக்கள் நுண்மம் தாக்குவதால் சிறுநீர் பாதை தொற்று ஏற்படுகிறது.

சிறுநீர் பாதை நோய் தொற்றுக்கு காரணம்

சிறுநீர் பாதை நோய் தொற்றுக்கு முக்கிய காரணம் நாம் அனைவரின் உடலிலும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் மற்றும் தீமை செய்யும் பாக்டீரியாக்கள் இரண்டும் உள்ளன. நாம் ஆரோக்கியமாக இருக்கும் போது பாக்டீரியாக்களின் சமநிலை பேணப்படுகிறது. நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது தீங்கு செய்யும் பாக்டீரியாக்கள் நோய்த்தொற்றை ஏற்படுத்துகின்றன. மற்றுமொரு காரணம் நீரிழப்பு நாம் வெப்பப் பிரதேசத்தில் வாழ்ந்து வருகிறோம் நமது உடலில் நீர் இழப்பை சரி செய்ய அதற்கேற்றார் போல் தண்ணீர் குடிக்க வேண்டும் போதிய அளவு நீர் குடிக்க வில்லை என்றால் நீர் இழப்பு ஏற்பட்டு சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றை ஏற்படுத்தும். சிறுநீர்ப்பையில் சிறுநீர் வெகு நேரம் அடக்கி வைத்தலும் நோய் தொற்றுக்கு காரணமாகும். வேலைக்கு செல்வோர், வெளியில் செல்வோர், கழிவறையை பயன்படுத்தாமல் சிறுநீரை அடக்கி வைத்திருந்தாலும் பாதிப்பு ஏற்படும்.

திருமணமான புதிதில் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுவது

ஏன் ? (Honeymoon Cystitis)

திருமணமான புதிதில் ஏராளமான பெண்கள் இந்த பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். நமது ஒவ்வொருவரின் உடலும் வித்தியாசமானது. நமது ஒவ்வொருவரின் உடலிலும் உடலுக்கு ஏற்றார்போல் பாக்டீரியாக்கள் உள்ளன. திருமணமான புதிதில் உடலுறவின்போது ஆணின் உடலில் உள்ள பாக்டீரியாக்களால் பெண்களுக்கு அலர்ஜி ஏற்பட்டு சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படும். இதனால் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படலாம். இதைப்போன்று பெண்ணின் பாக்டீரியாக்களால் ஆணுக்கு பாதிப்பு ஏற்படலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி பாக்டீரியா நோய்த் தொற்று எதிர்ப்பு மாத்திரைகளை (antibacterial tablet) எடுத்துக் கொள்வதன் மூலம் இதை எளிதில் குணமாக்கலாம்.

சிறுநீர் பாதை நோய் தொற்றுக்கான அறிகுறிகள்

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் மற்றும் வலி ஏற்படுவது ஏன் ?

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் மற்றும் வலி ஏற்படுதல். அடிக்கடி சிறுநீர் கழித்தல் அதாவது ஒரு மணி நேரத்தில் மூன்றில் இருந்து நான்கு முறை சிறுநீர் கழிப்பது. கவனிக்காமல் இருந்தால் நாளடைவில் அதிக காய்ச்சல், அடிவயிற்றில் வலி, சிறுநீர் கழிக்கும்போது நாற்றம் மற்றும் சிறுநீருடன் ரத்தம் வெளியேறலாம்.

சிறுநீர் பாதை நோய் தொற்று தடுப்பது எப்படி ?

சிறுநீர் பாதை நோய் தொற்று எளிதில் வராமல் தடுக்கலாம். தினமும் இரண்டரை லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதன் மூலம் பலவிதமான பிரச்சினைகளில் இருந்து உடலை பாதுகாக்கலாம். மது அருந்தும் பழக்கத்தை கைவிடுதல், காபி, டீ, குளிர்பானங்களுக்கு பதிலாக இயற்கையில் கிடைக்கும் இளநீர், மோர், பழச்சாறு போன்றவற்றை பருகவேண்டும். நாலு மணி நேரத்திற்கு ஒரு முறை அல்லது தோன்றும்போது சிறுநீரை அடக்காமல் சிறுநீர் கழிக்க வேண்டும். இதனால் சிறுநீரக செயலிழப்பு போன்ற பாதிப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். பருத்தியில் ஆன உள்ளாடைகள் அணிவது, உடலுறவிற்கு பிறகு சிறுநீர் கழிப்பது போன்றவை சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் மற்றும் சிறுநீர் பாதை நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பைத் தரும்



--

கருத்துகள் இல்லை:

பெண்கள் மூக்குத்தி அணிவதற்கு பின்னால் உள்ள சுவாரஸ்யமான தகவல்கள்.

அன்றும் இன்றும் காரணம் தெரியாமல் அணிந்த மூக்குத்தியின் பெருமை பற்றி தெரியுமா ? மூக்குத்தி...

Popular Posts