லேபிள்கள்

சனி, 13 நவம்பர், 2021

இஸ்லாத்தின் பார்வையில் முஸ்லிமல்லாத பிரபலங்களின் இறப்பு

மரணித்தவரின் குடும்பத்துக்கு அனுதாபம் சொல்வதையோ மரணித்தவரின் உடலை அடக்கம் செய்ய எம்மைக் கடந்து கொண்டு செல்லும் போது அதற்காக எழுந்து நிற்பதையோ இஸ்லாம் தடை செய்ய வில்லை. இவைகளை இஸ்லாமிய வரம்புக்குள் நின்று செய்ய வேண்டும்.

சினிமாத்துறையில் தன் குரல் வளத்தால் பல மொழிகளிலும் பாடல்களைப்பாடித் தனக்கென ரசிகர்களைக் கொண்ட SPB அவர்கள் நேற்றைய தினம் மரணித்து விட்ட செய்தி சமூக ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக மாறியுள்ள இன்நிலையில் எமது இஸ்லாமிய சமூகத்துக்கு இஸ்லாத்தின் அடிப்படைகள் பற்றி நினைவூட்டுவது பொருத்தம் என நினைக்கிறேன்.

SPB யின் மரணச் செய்தியைக் கேட்டு கவலைப்பட்டவர்களாக நம்ம அப்துல்லாஹ்வும் , அப்துர் ரஹ்மானும் பதிவு செய்த இரங்கள் செய்திகள் என்னைக் கண்ணீர் சிந்த வைத்தது.

"ஒருவர் பாலு சேர் மரணிக்க வில்லை காற்றோடு கலந்து நம் காதுகளில் பேசுவார் என்கிறார்..?"

"மற்றொருவர் SPBயின் பாடல்கள் இறைவன் இருப்பதை உண்மைப் படுத்தியதாக எழுதியுள்ளார்.?*"

"இன்னுமொருவர் SPB பாலசுப்ரமணியம் முஸ்லிம்களால் தான் இஸ்லாத்தை ஏற்க வில்லை. எனவே அவரின் பாவங்களை மன்னித்து விடு..?" என பதிவிட்டுள்ளார்.

"மற்றும் பலர் RIP (rest in peace ) என பதிவிட்டுள்ளார்கள்"

என்மதிப்புக்குரிய இஸ்லாமிய தோழனே..! நீ இருக்கக் கூடிய இந்த மார்க்கம் சில வேலை உன் பெற்றோர் வழியாக உனக்குக் கிடைத்திருப்பதால் அதன் தனித்துவம் பற்றி நீ படித்தறிந்திருக்க வாய்பில்லை.

இப்பூமிக்கு அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை சிறு வயது முதல் அவருக்கு நபித்துவம் கிடைக்கப்பெற்றதன் பின்பும் கூட பராமரித்துப் பாதுகாத்து வந்தவர் நாபிகளாரின் சிரிய தந்தை அபூ தாலிப் அவர்களாவார்கள். இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்ய நபிகளார் (ஸல்) அவர்களுக்கு பக்கபலமாக இருந்தவர் என்று கூட இவரைச் சொல்லலாம்.

முஸய்யப்(ரலி) அறிவித்தார்.

அபூ தாலிபுக்கு மரணம் நெருங்கியபோது நபி(ஸல்) அவர்கள் அவரிடம் வந்தார்கள். அங்கு அபூ ஜஹ்ல் இப்னு ஹிஷாம், அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யா ஆகிய இருவரும் இருப்பதைக் கண்டார்கள்.

நபி(ஸல்) அவர்கள் அபூ தாலிபிடம், 'என்னுடைய பெரிய தந்தையே! லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற வாசகத்தைச் சொல்லிவிடுங்கள்! அதன் மூலம் நான் அல்லாஹ்விடம் உங்களுக்காகச் சாட்சி கூறுவேன்' எனக் கூறினார்கள்.

அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவும், 'அபூ தாலிபே அப்துல் முத்தலிபின் மார்க்கத்தைப் புறக்கணிக்கப் போகிறீரா?' எனக் கேட்டனர்.

இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் ஒருபுறமும் அவ்விருவரும் மறுபுறமாக அவரை வற்புறுத்திக் கொண்டிருக்கும்போது அபூ தாலிப் கடைசியாக, 'நான் அப்துல் முத்தலிப் மார்க்கத்திலேயே (மரணிக்கிறேன்)' என்று கூறியதோடு லாஇலாஹ இல்லல்லாஹ் எனக் கூறவும் மறுத்துவிட்டார்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் தடுக்கப்படும்வரை உங்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவேன்' என்று கூறியதும்.

مَا كَانَ لِلنَّبِىِّ وَالَّذِيْنَ اٰمَنُوْاۤ اَنْ يَّسْتَغْفِرُوْا لِلْمُشْرِكِيْنَ وَ لَوْ كَانُوْۤا اُولِىْ قُرْبٰى مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ اَنَّهُمْ اَصْحٰبُ الْجَحِيْمِ‏

முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும், நிச்சயமாக அவர்கள் நரகவாதிகள் என்று தெளிவாக்கப்பட்ட பின் அவர்களுக்காக மன்னிப்புக்கோருவது நபிக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதல்ல.
(
அல்குர்ஆன் : 9:113)
என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான்.

ஸஹீஹ் புகாரி : 1360.

وَمَا كَانَ اسْتِغْفَارُ اِبْرٰهِيْمَ لِاَبِيْهِ اِلَّا عَنْ مَّوْعِدَةٍ وَّعَدَهَاۤ اِيَّاهُفَلَمَّا تَبَيَّنَ لَهٗۤ اَنَّهٗ عَدُوٌّ لِّلّٰهِ تَبَرَّاَ مِنْهُاِنَّ اِبْرٰهِيْمَ لَاَوَّاهٌ حَلِيْمٌ‏

இப்ராஹீம் (நபி) தம் தந்தைக்காக மன்னிப்புக் கோரியதெல்லாம், அவர் தம் தந்தைக்குச் செய்திருந்த ஒரு வாக்குறுதிக்காகவேயன்றி வேறில்லை; மெய்யாகவே, அவர் (தந்தை) அல்லாஹ்வுக்கு விரோதி என்பது தெளிவாகியதும் அதிலிருந்து அவர் விலகிக் கொண்டார்நிச்சயமாக இப்ராஹீம் பொறுமையுடையவராகவும் இரக்கமுள்ளவராகவும் இருந்தார்.
(
அல்குர்ஆன் : 9:114)

இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் உற்ற நண்பர் என்றிருந்தும் அல்லாஹ் இணைவைப்பிலிருந்த அவரின் தந்தைக்கு அவர் செய்த பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்ள வில்லை. இப்ராஹீம் நபியின் வழிமுறையைப் பின்பற்றச் சொன்ன அல்லாஹ் இந்த விடயத்தில் மாத்திரம் இப்ராஹீம் (அலை) அவர்களை பின்பற்ற வேண்டாம் என்கிறான்.

அன்புத் தோழர்களே.! SPB எந்த மதத்தைச் சேர்ந்தவர்..? அவர் இஸ்லாத்துக்காக ஆற்றிய சேவை தான் என்ன..? இஸ்லாத்தின் பார்வையில் SPB செய்த வேலை சாதனைக்குரியதா..? அல்லாஹ் பலருக்கும் பல விதமான திறமைகளை வழங்கியுள்ளான். அதன் நோக்கம் அதை இஸ்லாத்துக்காகப் பயன்படுத்த வேண்டும். இறைவனின் வரம்புகளை மீறாதவராக வாழ வேண்டும் என்பதுவாகும்.

SPB க்கு அல்லாஹ் வழங்கியிருந்த குரல் வளத்தை அவர் அல்லாஹ் விரும்பும் வழியில் தான் பயன்படுத்தினாரா..? அவரின் குரலை நீங்கள் ரசித்துக் கேட்க அவர் அல் குர்ஆனைத் தான் ஓதி விட்டுச் சென்றாரா..? இல்லையே தோழர்களே..? எத்தனை இணைவைப்பான கருத்துக்களைக் கொண்ட பாடல்களைத் தன் குரலால் பாடியுள்ளார்..?

SPBக்கு Rip டைப் பண்ணும் தோழர்களே.! கப்ரில் அமைதியாக உறங்கும் ஜனாஸா யாருடையது..? அவரிடம் இருக்க வேண்டிய பண்புகள் என்ன.? சிந்திக்க மாட்டீர்களா..?

SPB பாடல்களின் மூலம் காதலென்ற பெயரில் உருவாகும் ஆண், பெண் தப்பான நடத்தைக்கும், சமூகத்தை சீரழிக்கும் சினிமாவுக்கும், நட்சத்திர ஹோட்டல்களில் விபச்சாரிகளுடன் ஆடிப்பாடிப் போதையில் மிதக்கவுமே அவர் தன் குரலால் தொண்டு செய்துள்ளார். இஸ்லாம் தடை செய்துள்ள இசையை வாழ்நால் முழுவதும் அனுபவித்தும் அதற்கான சேவைகளைச் செய்தும் வந்தவர் எப்படி உங்கள் நேசத்துக்குரியவராக மாறலாம்..?

நீங்கள் யாரை நேசிப்பீர்களோ அவர்களுடன் தான் மறுமையில் இருப்பீர்கள்.

அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் மறுமை நாளைப் பற்றி, 'மறுமை நாள் எப்போது வரும்?' என்று கேட்டார்.

நபி(ஸல்) அவர்கள், 'அதற்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்திருக்கிறாய்?' என்று (திரும்பக்) கேட்டார்கள்.

அம்மனிதர், 'எதுவுமில்லை; நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்பதைத் தவிர' என்று பதிலளித்தார்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீ நேசித்தவர்களுடன் தான் (மறுமையில்) நீ இருப்பாய்' என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள், 'நீ நேசித்தவர்களுடன் நீ இருப்பாய்' என்று சொன்னதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்ற வேறு எதனாலும் நாங்கள் மகிழ்ச்சியடைந்ததில்லை.

நான் நபி (ஸல்) அவர்களையும் அபூ பக்ர் (ரலி) அவர்களையும் உமர் (ரலி) அவர்களையும் நேசிக்கிறேன். மேலும், அவர்களை நேசித்த காரணத்தால் (மறுமையில்) அவர்களுடன் தான் இருப்பேன் என்று நம்புகிறேன்; அவர்களின் நற்செயல்களைப் போன்று நான் நற்செயல் புரியாவிட்டாலும் சரியே!

ஸஹீஹ் புகாரி : 3688.

இசைப் பிரியர்களே..!
இது உங்களுக்கான எச்சரிக்கை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தினர் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தினர் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிக்காகச்) செல்வான். அப்போது அவர்கள் நாளை எங்களிடம் வா என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்து விடுவான். (எஞ்சிய) மற்றவர்களை குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றி விடுவான்.

அறிவிப்பவர் : அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி)

நூல் : புகாரி 5590

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

(வரும் நாளில்) எனது உம்மத்தவர்கள் மது அருந்துவார்கள். ஆதன் உண்மையான பெயரைக் காட்டிலும் அதை வேறு ஒரு பெயரால் அழைப்பார்கள். இசைக் கருவிகளை இசைத்தும், பெண் பாடகர்கள் கொண்டு பாட்டும் பாடுவதுமான கேளிக்கைகளை தமக்கு ஏற்படுத்திக் கொள்வார்கள். ஆல்லாஹ் அவர்களின் காலடியில் பூமியைப் பிளந்து (அதில் அவர்களை புகச் செய்து விடுவான். மற்றவர்கள் குரங்குகாளகவும், பன்றிகளாகவும் மாற்றி விடுவான். (இப்னு மாஜாகிதாபுல் ஃபிதன்)

ஒரு இடையனின் குழலோசை இப்னு உமர் (ரலி) அவர்களின் காதில் விழுந்தது. அப்போது அவர்கள் தமது இரு காதுகளிலும் விரலை வைத்துக் கொண்டு அந்தப் பாதையை விட்டுவிட்டு வாகனத்தைத் திருப்பினார்கள். உனக்குக் கேட்கிறதா? என்று வினவினார்கள். அதற்கு நான் ஆம் என்றேன். அவர்கள் (சிறிது தூரம்) சென்ற பிறகு எனக்குக் கேட்கவில்லை என்று நான் கூறினேன். கைகளை (காதிலிருந்து) எடுத்து விட்டு மறுபடியும் அதே பாதைக்கு வாகனத்தைத் திருப்பினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு இடையனின் குழலோசையைக் கேட்ட போது அவர்கள் இதைப் போன்று செய்வதை நான் பார்த்தேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : நாஃபிஃ (ரஹ்)

நூல் : அஹ்மத்

அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்

இசையால் ஒரு மனிதனுக்கு மன அமைதி கிடைத்திருக்கும் என்றிருந்தால் யூசுப் இஸ்லாம், யுவன் ஷன்கர் ராஜா போன்றோர் மற்றும் பல பொப் பாடகர்கள் இஸ்லாத்துக்கு வந்திருக்கத் தேவையே இல்லை. அவர்கள் மன அமைதியைத் தேடியே இஸ்லாத்தில் நுழைந்தார்கள். அவர்கள் தேடிய மன அமைதி இறைவனை நினைவுகூர்வதில் தான் உள்ளது என்று அல்லாஹ் சொல்லும் போது இல்லை இசையுடன் கூடிய பாடலில் தான் மன நிம்மதி உள்ளது என்று கூறும் இவர்களின் கூற்று மிகவும் ஆபத்தானதாகும்.

_நட்புடன்:
அல் ஹாபிழ் இன்திகாப் உமரீ
இலங்கை

http://www.islamkalvi.com/?p=125160


--

கருத்துகள் இல்லை:

விஷ ஜந்துக்கள் கடித்தால் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து தெரிந்து கொள்ளலாம்

விஷ ஜந்துக்கள் கடித்து மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து கீழே காணலாம். கண்ணாடி விரிய...

Popular Posts