லேபிள்கள்

செவ்வாய், 16 நவம்பர், 2021

பிள்ளைகளுக்காகப் பெற்றோர்கள் கேட்கவேண்டிய பிரார்த்தனைகள்

1) குழந்தையை எதிர்பார்த்து கணவன் மனைவி கூடும் போது ஓத வேண்டிய துஆ.

'உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் உறவு கொள்ளச் செல்லும்போது

بِسْمِ اللهِ اَللّٰهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ
وَجَنِّبِ الشَّيْطَانَ مَارَزَقْتَنَا

'அல்லாஹ்வின் திருநாமத்தைக் கொண்டு உறவு கொள்ளப் போகிறேன். இறைவா! எங்களைவிட்டும் ஷைத்தானைத் தூரமாக்கி விடுவாயாக ! (இந்த உறவு மூலம்) நீ எங்களுக்கு அளிக்கப் போகும் (குழந்தைப்) பேற்றிலும் ஷைத்தானை அப்புறப்படுத்தி விடுவாயாக.' என்ற பிரார்த்தனையுடன் உறவு கொண்டு அதன் மூலம் அவ்விருவருக்கும் குழந்தை வழங்கப்படுமானால் அக்குழந்தைக்கு ஷைத்தான் எந்தத் தீங்கும் விளைவிப்பதில்லை' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள்.

ஸஹீஹ் புகாரி : 141.

ஸயீத் இப்னு முஸய்யப் (ரஹ்) அறிவித்தார்.

'(புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும்போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தான் தீண்டுவதால் அக்குழந்தை உடனே கூக்குரலெழுப்பும். (ஆனால்,) மர்யமையும் அவரின் புதல்வரையும் தவிர!' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என அபூ ஹுரைரா (ரலி) கூறினார்கள். பிறகு அபூ ஹுரைரா (ரலி), 'நீங்கள் விரும்பினால், 'இந்தக் குழந்தையையும் இதன் வழித்தோன்றல்களையும் சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து பாதுகாக்குமாறு உன்னிடம் நான் வேண்டுகிறேன் (என இம்ரானின் துணைவியார் இறைவனை வேண்டினார்)' எனும் (திருக்குர்ஆன் 03:36 வது) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 4548.

فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ اِنِّىْ وَضَعْتُهَاۤ اُنْثٰى وَاللّٰهُ اَعْلَمُ بِمَا وَضَعَتْ وَ لَيْسَ الذَّكَرُ كَالْاُنْثٰى‌‌ وَاِنِّىْ سَمَّيْتُهَا مَرْيَمَ وَاِنِّىْۤ اُعِيْذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطٰنِ الرَّجِيْمِ‏

(பின், தான் எதிர்பார்த்ததற்கு ) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்: "என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கிறேன்" எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள்; அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான்; ஆண், பெண்ணைப் போலல்ல (மேலும் அந்தத்தாய் சொன்னாள்:) "அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்; இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்.
(
அல்குர்ஆன் : 3:36)

ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போது ஷைத்தானின் தீண்டுதலினால் தான் அழுகின்றது. ஷைத்தானின் தீண்டுதலை விட்டும் எம் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் கட்டாயம் கணவன், மனைவி உடலுறவின் போது இப்பிரார்த்தனையை ஓத வேண்டும். மர்யம் (அலை) அவர்களின் தாயார் ஷைத்தானின் தீங்கை விட்டும் மர்யம் (அலை) அவர்களையும் அவர்களின் சந்ததியினரையும் பாதுகாக்குமாறு பாதுகாப்புத் தேடியமையால் ஷைத்தானால் அவர்களைத் தீண்ட முடியவில்லை.

2) குழந்தையை எதிர்பார்த்திருக்கும் காலத்தில் நபி இப்ராஹீம் (அலை) மற்றும் நபி ஸகரிய்யா (அலை) ஆகியோர் கேட்ட துஆ.

رَبِّ هَبْ لِىْ مِنَ الصّٰلِحِيْنَ‏

"என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக"
(
அல்குர்ஆன் : 37:100)

رَبِّ هَبْ لِىْ مِنْ لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً‌ ‌ اِنَّكَ سَمِيْعُ الدُّعَآءِ‏

"இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்."
(
அல்குர்ஆன் : 3:38)

அல்லாஹ் தான் நாடியோருக்கு இலகுவாக சிறுவயதினிலேயே குழந்தைப் பாக்கியத்தை வழங்குகிறான். அல்லாஹ் தான் நாடியோரை மலடாக ஆக்கி விடுகிறான். இன்னும் சிலருக்கு அல்லாஹ் வயோதிப வயதினில் குழந்தைப் பாக்கியத்தை வழங்குகிறான். அப்படி வயோதிப வயதில் குழந்தைப் பாக்கியாத்தைப் பெற்ற இறைத்தூதர்கள் தான் இவர்கள் இருவரும். அவர்கள் வெறுமனே குழந்தைப்பாக்கியத்தை மட்டும் கேட்காமல் ஸாலிஹான குழந்தையை அல்லாஹ்விடம் வேண்டினார்கள். அல்லாஹ் இப்ராஹீம் நபி அவர்களுக்கு இஸ்மாஈல் (அலை) அவர்களையும் இஸ்ஹாக் (அலை) அவர்களையும் குழந்தையாக வழங்கினான். அவர்களின் சந்ததியினரில் பல நபிமார்களையும் சிறந்த மக்களையும் அல்லாஹ் வெளிப்படுத்தினான். நபி ஸகரிய்யா (அலை) அவர்களுக்கு யஹ்யா (அலை) அவர்களை அல்லாஹ் குழந்தையாக வழங்கினான்.

3) குடும்பத்தின் கண்குளிர்ச்சிக்காக ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய துஆ .

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَٰجِنَا وَذُرِّيَّٰتِنَا قُرَّةَ أَعْيُنٍۢ وَٱجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا.

25:74. " ""எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும் எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக – (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!

திருமணம் என்ற நிகழ்வு ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இருவரினதும் வாழ்கையில் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது. அந்த பந்தத்தில் கிடைக்கும் ஆனந்தம் நிலைக்க வேண்டுமெனில் எமது மனைவியிலும் எமது சந்ததியினரிலும் எமக்குக் கண்குளிர்ச்சி இருப்பது அவசியமாகும். அர்ரஹ்மானின் அடியார்கள் தனது வாழ்கைத் துணையிலும், குழந்தைகளிளும் கண்குளிர்ச்சியை வேண்டியும். தமது சந்ததியினரை முன்மாதிரி மிக்கவர்களாக ஆக்குமாறும் இந்த முறையில் பிரார்த்தனை செய்வார்கள் என அல்லாஹ் சொல்கிறான்.

4) இப்ராஹீம் (அலை) அவர்கள் பிள்ளைகளுக்காக கேட்ட துஆக்கள்.

رَبِّ ٱجْعَلْنِى مُقِيمَ ٱلصَّلَوٰةِ وَمِن ذُرِّيَّتِى ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ

"என் இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!" 14 40

رَبَّنَا وَٱجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَآ أُمَّةًۭ مُّسْلِمَةًۭ لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَآ ۖ إِنَّكَ أَنتَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ

2:128."எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக ஆக்குவாயாக, எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை ஆக்கி வைப்பாயாக, நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக, எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக, நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்."

وَاِذْ قَالَ اِبْرٰهِيْمُ رَبِّ اجْعَلْ هٰذَا الْبَلَدَ اٰمِنًا وَّاجْنُبْنِىْ وَبَنِىَّ اَنْ نَّـعْبُدَ الْاَصْنَامَ‏

நினைவு கூறுங்கள்! "என் இறைவனே! இந்த ஊரை (மக்காவை சமாதானமுள்ளதாய்) அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக! என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!" என்று இப்ராஹீம் கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவு கூறும்).
(
அல்குர்ஆன் : 14:35)

رَبَّنَاۤ اِنِّىْۤ اَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتِىْ بِوَادٍ غَيْرِ ذِىْ زَرْعٍ عِنْدَ بَيْتِكَ الْمُحَرَّمِۙ رَبَّنَا لِيُقِيْمُوْا الصَّلٰوةَ فَاجْعَلْ اَ فْـٮِٕدَةً مِّنَ النَّاسِ تَهْوِىْۤ اِلَيْهِمْ وَارْزُقْهُمْ مِّنَ الثَّمَرٰتِ لَعَلَّهُمْ يَشْكُرُوْنَ‏

"எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததிகலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே! – தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தாட்டுவதற்காகக் குடியேற்றியிருகின்றேன்; எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக!"
(
அல்குர்ஆன் : 14:37)

இப்ராஹீம் (அலை ) அவர்கள் தனது சந்ததியினருக்காகக் கேட்ட பிரார்த்தனைகளில் மிகச்சிறந்த முன்மாதிரி எமக்குள்ளது. பொதுவாக நாம் அனைவரும் பிள்ளைகளுக்காகப் பிரார்த்தனை செய்தால் அவர்களின் ஆரோக்கியத்தை வேண்டியும், அவர்கள் உலகில் தலைநிமிர்ந்து வாழவும் தான் பிரார்த்தனை செய்வோம். ஆனால் இப்ராஹீம் (அலை) அவர்களோ பாலைவனத்தில் தனது குடும்பத்தை விட்டுவிட்டு அவர்களின் வாழ்கைக்கான உலக வளங்களுக்காக மட்டும் பிரார்த்திக்காமல், தான் ஒரு நபியாக இருந்தும், தனது பிள்ளைகள் நபியாக இருந்தும், தனது சந்ததியினரை இணைவைப்பிலிருந்து பாதுகாக்கும் படியும். தொழுகையை நிலைநாட்டுவோராகவும் , முற்றிலும் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் கூட்டத்தாரை தனது சந்ததியிலிருந்து வெளிப்படுத்துமாறும் பிரார்த்தனை செய்தார்கள். நாமும் இப்பிரார்த்தனைகளை எமது சந்ததியினருக்காக் கட்டாயம் கேட்க வேண்டும்.

5)இப்ராஹீம் (அலை) அவர்கள் தங்கள் மகன்களான நபி இஸ்மாஈல் (அலை), மற்றும் இஸ்ஹாக் (அலை) அவர்களுக்காகவும், நபி அவர்கள் ஹஸன் (ரழி) மற்றும் ஹுஸைன் (ரழி) ஆகியோருக்காவும் ஓதிய பிரார்த்தனைகள்.

عن ابن عباس رضي اللّه عنهما قال
"
كان رسولُ اللَّه صلى اللّه عليه وسلم يعوّذ الحسن والحسين

  1. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள்
    நபி (ஸல்) அவர்கள், ஹஸன் (ரலி) மற்றும் ஹுஸைன் (ரலி) ஆகியோருக்காக (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் தேடி வந்தார்கள்.

أُعِيذُكُما بِكَلِماتِ اللَّهِ التَّامَّةِ

அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டும்

مِنْ كُلِّ شَيْطانٍ وَهامَّةِ،

ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும், நச்சுப் பிராணியிடமிருந்தும்

وَمِنْ كُلّ عَيْنٍ لامَّة

தீய எண்ணத்துடன் தீண்டும் (பொறாமைக்) கண்ணிலிருந்தும் அவனிடம் பாதுகாப்புக் தேடுகிறேன்'

ويقول: إنَّ أباكُما كان يُعَوِّذُ بِها إسْماعِيلَ وَإسْحاقَ" صلى اللّه عليهم أجمعين وسلم

எனும் இச்சொற்களின் மூலம் உங்கள் இருவரின் தந்தை(யான இப்ராஹீம்(அலை) அவர்கள் தம் மகன்களான) இஸ்மாயீல் (அலை) மற்றும் இஸ்ஹாக்(அலை) ஆகியோருக்காகப் பாதுகாப்புக் கோரி வந்தார்கள்என்று கூறுவார்கள்.
(
ஸஹீஹ் புகாரி)

6) பெற்றோர் பிள்ளைகள் விடயத்தில் திருப்தி கொள்ள வேண்டும்.

இன்று ஒரு சில பிள்ளைகள் மார்கப் பற்றின்மையால் மிக மோசமான நடத்தையுடையோராக மாறி தொழுகையைப் பேணாதவர்களாகவும். பெற்றோரை மதிக்காதவர்களாகவும் , போதைக்கு அடிமையானவர்களாகவும் இருப்பதால் அவர்களைப் பெற்றவர்களே அப்பிள்ளைகளை ஏன் பெற்றெடுத்தோம்.? இவன் பிறக்காமல் இருந்தாலே நான் மானம், மரியாதையுடன் வாழ்ந்திருப்பேன் என்று பேசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே எமது பிள்ளைகளின் நேர்வழிக்காக அதிகம் நாம் பிரார்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். நாம் அல்ஹம்துலில்லாஹ் எனத் திருப்தி கொள்ளும் விதமாக எமது பிள்ளைகள் வளர வேண்டும். நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது பிள்ளைகள் விடயத்தில் கூறிய வார்த்தையை அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ وَهَبَ لِىْ عَلَى الْـكِبَرِ اِسْمٰعِيْلَ وَاِسْحٰقَاِنَّ رَبِّىْ لَسَمِيْعُ الدُّعَآءِ‏

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது; அவனே (என்னுடைய) முதுமையில் இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் (புதல்வர்களாக) எனக்கு அளித்தான்; நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையைக் கேட்பவன். (என இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறினார்கள்)
(
அல்குர்ஆன் : 14:39)

யா அல்லாஹ் எங்களையும் எங்களின் சந்ததியினரையும் ஜன்னதுல் பிர்தௌஸின் வாரிசுகளாக ஆக்கியருள்வாயாக..!

நட்புடன்:
அல் ஹாபில் இன்திகாப் உமரீ
அட்டுலுகம
இலங்கை

http://www.islamkalvi.com/?p=125157


--

கருத்துகள் இல்லை:

ஹேண்ட் பேக்கால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்... பெண்களே கவனம்!

தற்போதுள்ள வாழ்க்கை முறையில் பெண்கள் எங்கு சென்றாலும் கைப்பையை தங்களுடன் எடுத்து செல்கின்றனர். பல்வேறு வகைகளில் தயார் செய்யப்படும் கைப...

Popular Posts