லேபிள்கள்

செவ்வாய், 9 நவம்பர், 2021

அல்லாஹ்வின் கேள்வி கணக்கை அஞ்சுவோம்


எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி

தலைமைத்துவத்திற்கு தெரிவு செய்யப்படுவது,

பொறுப்புக்களை சுமந்தல், சுமத்தப்படுதல்

தலைமை வகிப்பது,

மக்களை நிர்வாகம், அல்லது முகாமைத்துவம் செய்வது போன்ற பதவிகள் கிலாஃபத், இமாமத், விலாயத், இமாரத் போன்ற இஸ்லாமிய நீதி நிர்வாகத் துறையோடு ஒட்டிய சொற்பிரயோகங்களாகும்.

ஆகவே அதனை தோட்டத்திற்கு வெண்டைக்காய் பறிக்கப் போவதாக எண்ணிக் கொள்ள வேண்டாம்.

அது, இறைத் தூதர்கள் அஞ்சி, அழுத மிகவும் பொறுப்பு வாய்ந்த பணியாகும்.

கலீஃபாக்கள் தமது ஆட்சியில் மனிதர்கள் மாத்திரமல்ல, ஆடு, மாடு, ஒட்டகைகள் போன்ற கால்நடைகளோ பறவைகளோ பசித்திருப்பதால் அல்லாஹ் தன்னை தண்டித்து விடக் கூடாது என அஞ்சிய பதவியாகும்.

நாட்டில் உள்ள அருங்காட்சியத்தை, பூங்காக்களை நண்பர்களோடு சேர்ந்து ஜாலியாக பார்க்கப் போவது போலல்ல பாராளுமன்ற அங்கத்துவம் என்பதும், பிற பதவிகளும்.

👉மரணத்தின் பின்னால் அல்லாஹ் தண்டிக்கக் கூடாதே என்ற அச்ச உணர்வு மேலோங்கி அவற்றால் நாம் நிர்வகிக்கப்பட வேண்டிய உயர்ந்த ஆன்மீக நெறியாகும்.

👉அமானிதம்,

👉பொறுப்புணர்வு,

👉ஏழைகளையும் செல்வந்தரையும் குடும்ப அங்கத்தவர்களையும், சமமாக நடத்தும் நீதி, நேர்மை.

👉கடமை உணர்வு,

👉இஸ்லாத்திற்கு நற்பெயரைக் தேடித் தரும் பண்பாட்டு முறை,

👉பல்லின சமூகத்திற்கும் முன்மாதிரி போன்ற பல பண்புகள் இதற்கான அணிகலன்களாகத் தேவைப்படுகின்றன.

சமூகத்தின் பொறுப்புக்களைச் சுமப்பது எவ்வளவு பாரிய விஷயம் என்பதை நபிகள் (ஸல்) அவர்களின் பின் வரும் போதனை மூலம் உணர்ந்து கொள்ளலாம்.

நபியின் தோழர்களில் ஒருவரான அபூ தர் அல்கிஃபாரி (ரழி) அவர்கள், இறைத்தூரே என்னை எங்காவது நியமிக்கமாட்டீர்களா? எனக் கேட்டார்கள். அதற்கு அவரது தோள்புஜத்தில் அடித்த இறைத் தூதர் அவர்கள் .

يا أَبا ذَرٍّ، إنَّكَ ضَعِيفٌ، وإنَّها أَمانَةُ، وإنَّها يَومَ القِيامَةِ خِزْيٌ وَنَدامَةٌ، إلّا مَن أَخَذَها بحَقِّها، وَأَدّى الذي عليه فِيها. [صحيح مسلم]

அபூதரே! நீ பலவீனமானவன், நிச்சயமாக அது மிகப் பெரும் அமானிதம். மறுமை நாளில் அது பாரிய கேவலமும், கைசேதமுமாகும்.
(
இருந்தும்) அதன் உரிமைகளைச் சரியாகப் பேணி யார் நடந்தாரோ அவரைத் தவிர எனக் கூறினார்கள். ( முஸ்லிம்) .

மக்களின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதா? அல்லாஹ் நம்மைப் பாதுகாக்க வேண்டும்.

அரசு கேள்வி கேட்டதோ! இல்லையோ! அர்ஷின் இரட்சகனாகிய அல்லாஹ் நிச்சயமாக நம்மைக் கேள்வி கேட்டே தீருவான்.

இதில் இருந்து மனித குலத்தில் சிறந்தவர்களான இறைத் தூதர்களே விதிவிலக்கப்படமாட்டார்கள் என்றால் யா அல்லாஹ்! நாம் எம்மாத்திரம்.

இறைத் தூதரின் இறுதி ஹஜ்ஜின் போது அரஃபா மைதானத்தில் இருந்த கூடி இருந்த நபி (ஸல்) அவர்கள், நபித் தோழர்கள் சமூகத்திற்கு பலவிதமான அறிவுரைகளை கூறினார்கள்.

இறுதியாக தான் இவ்வாறான கூட்டம் ஒன்றில் எதிர்காலத்தில் கலந்து கொள்வது பற்றி சந்திப்பது சந்தேகம் வெளியிட்டதோடு தன்னை சுய பரிசோதனைக்கு உட்படுத்தியவர்களாக:

وَأَنْتُمْ تُسْأَلُونَ عَنِّي، فَما أَنْتُمْ قَائِلُونَ؟ قالوا: نَشْهَدُ أنَّكَ قدْ بَلَّغْتَ وَأَدَّيْتَ وَنَصَحْتَ، فَقالَ: بإصْبَعِهِ السَّبَّابَةِ، يَرْفَعُهَا إلى السَّمَاءِ وَيَنْكُتُهَا إلى النَّاسِ اللَّهُمَّ، اشْهَدْ، اللَّهُمَّ، اشْهَدْ ثَلَاثَ مَرَّاتٍ [صحيح مسلم]

நீங்கள் என்னைப் பற்றி மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள்.
(
தோழர்களே! அல்லாஹ்விடம்) என்ன பதில் கூறுவீர்கள் எனக் கேட்க, அவர்கள், "நிச்சயமாக நீங்கள் சிறப்பாக உபதேசித்து, திறமையாக களப் பணிசெய்து, அனைத்தும் கற்றுத் தந்தீர்கள் என நாம் சாட்சியம் கூறுவோம்" என ஒட்டு மொத்த நபித்தோழர்களும் கூறியதை அல்லாஹ்வை சாட்சியாக்கியவர்களாக தனது ஆட்காட்டி விரலை வானின் பக்கமாக நீட்டி, "யா அல்லாஹ் இதற்கு நீ சாட்சியாளனாக இருந்து கொள்" என மூன்று தடவைகள் கூறினார்கள். (நூல்- முஸ்லிம்)

என் அன்பு உறவுகளே!

👉நீங்கள்
பள்ளிவாயில் தலைவரா ?

👉ஒரு கட்சியின் தலைவரா?

👉பாராளுமன்ற உறுப்பினரா?

👉கல்லூரி அதிபரா?

👉நிறுவனத்தின்/ / சமூக சேவை அமைப்பின் தலைவரா ?

👉ஆசிரியரா?

👉குடும்பத்தலைவரா?

👉கல்வியளாரா?

👉ஆலிம், ஹாபிஸ், மௌலவியா?

👉இஸ்லாமிய அழைப்பாளரா?

👉முஸ்லிம், முஸ்லிம் அல்லாத மக்கள் நம்மோடு இணைந்து நமது பொறுப்பின் கீழ்வாழ்கின்றனரா?

🤲மக்களோடு மக்களாக சேர்ந்து நீதியாக நடக்க முடியாதா?

🤲பொறுப்புக்களை சுமக்க தகுதி போதாதா?

🤲இப்போதே பதவியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும்.

பொறுப்புக்கள் சிறிது பெரிது எதுவானாலும் சரி,
எதுவானாலும் நிலுவையில் உள்ள நமக்குரிய கேள்விகளோடு சேர்த்தே அல்லாஹ் மறுமையில் நிச்சயமாக நமது பொறுப்புக்கள், கடமைகள் பற்றி கேள்வி கேட்பதை மறுக்கவோ, மறக்கவோ கூடாது.

அநீதிகளில் அல்லாஹ் மன்னிக்காத அநீதியாக அடியார்களுக்கு செய்கின்ற அநீதியும் முதலிடம் பெறுகின்றது.

أكثر ما يدخل الموحًدين النار مظالم العباد ( الإمام المناوي/ فيض القدير)

அல்லாஹ்வை ஒருமைப்படுத்தியவர்கள் நரகம் போவதற்குக் காரணமாக அமைவது அடியார்களுக்கு (அவர்கள்) இழைத்த அநீதிகளாகும். (இமாம்- மனாவி ரஹி. ஃபைழுல் கதீர்).

நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள்.உங்கள் பொறுப்பைப் பற்றி (மறுமை நாளில்) விசாரிக்கப்படுவீர்கள், வீட்டில் அதன் தலைவன் அவனது பொறுப்பு பற்றியும், சமூகத்தின் தலைவன் அவனது பொறுப்பு பற்றியும் விசாரிக்கப்படுவர் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.( நூல்கள்- புகாரி, முஸ்லிம்).

பொறுப்புக்கள் பொறுப்பான பணியாகும். சிறப்பாக நடந்தால் அதன் கூலி மட்டில் அடங்காது.
மறுமை நாளன்று அல்லாஹ்வின் விசேடமான நிழல் பெறும் பாக்கியமாகும். ஆனால் மீறினால் அதனாலேயே சுவனம் ஹராமாக்கப்படும்.

ما مِن عَبْدٍ يَسْتَرْعِيهِ اللَّهُ رَعِيَّةً، يَمُوتُ يَومَ يَمُوتُ وَهو غاشٌّ لِرَعِيَّتِهِ، إِلّا حَرَّمَ اللَّهُ عليه الجَنَّةَ.[صحيح مسلم]

எந்த ஒரு அடியானுக்கு அல்லாஹ் பொறுப்பை வழங்கி, அவன் தனது பொறுப்பில் மோசடி செய்த நிலையில் மரணிப்பான் எனில் அவன் மீது அல்லாஹ் சுவனத்து வாடையை ஹராமாக்கி விடுகின்றான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள்.(நூல்- முஸ்லிம்)

ஒரு முஸ்லிம் தினமும் நினைவு கூறவேண்டிய இறைத் தூதரின் விலை மதிக்க முடியாத மேலுள்ள எச்சரிக்கை பற்றி நினைவில் கொண்டு நடந்தால் இம்மை மறுமை வாழ்வு அனைத்தும் சீராகும். "இன்ஷா அல்லாஹ்".

யா அல்லாஹ் துருவித் துருவி, விசாரிக்கும் பயங்கரமான உனது விசாரணையில் இருந்து எம்மையும் எமது குடும்பம் மற்றும் முஸ்லிம் சமூகம் அனைவரையும் பாதுகாப்பாயாக!

எம்.ஜே.எம்.

ரிஸ்வான் மதனி

http://www.islamkalvi.com/?p=124938

--

கருத்துகள் இல்லை:

விஷ ஜந்துக்கள் கடித்தால் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து தெரிந்து கொள்ளலாம்

விஷ ஜந்துக்கள் கடித்து மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து கீழே காணலாம். கண்ணாடி விரிய...

Popular Posts