லேபிள்கள்

சனி, 19 ஜூன், 2021

நவீனக்கொள்கைக் குழப்பங்களிலிருந்து எமது ஈமானைப் பாதுகாத்துக் கொள்வோம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ..

அன்பார்ந்த சகோதரர்களே..!
அல்லாஹ்வால் இறுதித் தூதராக இந்த பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்ட முஹம்மதுர் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தமது தூதுத்துவத்தை சரிவர நிறைவேற்றி எம்மை நேரான வெண்மையான பாதையில் விட்டுச் சென்றார்கள். அதன் இரவு கூட பகலைப் போன்றதாகும் . நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வபாத்திற்க்குப் பின்னர் நபித்தோழர்களின் காலத்திலேயே இஸ்லாத்தின் பெயரால் பல வழிகேடுகள் தோற்றம் பெற ஆரம்பித்து விட்டன. இது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னறிவுப்புச் செய்த செய்திகள் ஏறாளமானது.

அவ்வாறு தோற்றம் பெற்ற வழிகேடர்கள் அனைவரும் தாங்கள் தான் சத்தியவான்கள் என்பதை நிருவுவதற்குத் தங்களின் கொள்கைக்குச் சான்றாக அல் குர்ஆன் வசங்களையும் ஹதீஸ்களையும் மனோ இச்சைப்படி வளைத்து அதை சிறந்த விளக்கமாக முன்வைத்தார்கள். அது அன்றுடன் முற்றுப்பெற வில்லை. இன்றும் இஸ்லாத்தின் பெயரால் நவீனக் கொள்கைகளைத் தோற்றுவிக்கக் கூடியவர்கள் அல் குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் தவறாக சித்தரித்து தங்களின் நவீன சிந்தனைகளை ஆய்வாகச் சமூகத்துக்கு முன்வைக்கின்றார்காள். இது கியாம நாள்வரை தொடரக்கூடிய ஒன்றாகும்.

எனவே நேரான பாதையை நாம் எப்படி அடையாளம் காண்பது? என்ற அறிவு எம்மிடமிருப்பது அவசியமாகும். இல்லையெனில் வழிகேடுகளை ஆதரிக்கும் நிலை எம்மிலும் ஏற்பட்டு விடலாம். அல்லாஹ் எம் அனைவருக்கும் நேரான பாதையை காட்டுவானாக.

நேரான பாதை என்பது நேற்று இன்று உருவான புதுப்பாதை கிடையாது 1400 ஆண்டுகளுக்கு முன்னர் நபிகளாரும் நபித்தோழர்களும் எந்தக் கொள்கையில் இருந்தார்களோ அதுவே நேரான பாதையாகும். (அல் குர்ஆன் , அல் ஹதீஸ் ). அந்த நேரான பாதையைத்தான் சிறந்த மூன்று நூற்றாண்டில் வாழ்ந்து மரணித்த நல்லறிஞர்களும் வாழ்க்கை நெறியாகக் கொண்டார்கள். எனவே அதே வழியில் மறுமைவரை அவர்களைப் பின்தொடர்வோர் அஹ்லுஸ் ஸுன்னவைச் சார்ந்தோர்களாவார்கள்.

அஹ்லுஸ் ஸுன்னாக் கொள்கைசார்ந்த அறிஞர்கள் (ஸலபுகள்) எப்படி அல்குர்ஆன் ஹதீஸை விளங்கினார்களோ அவ்வாறு புரிவது தான் எம்மை நேரான பாதையில் நிலைக்கச் செய்யும் காரியமாகும். இதற்கு மாற்றமாக அல்குர்ஆன், ஹதீஸை யாரெல்லாம் மனோ இச்சைப்படி விளங்க முற்படுகின்றார்களோ அத்தகையோர் பல வழிகேடுகளைத் தோற்றுவிப்பார்கள்.

இன்று தமிழுலகில் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு இணையத்தினூடாக மெல்ல வளர்ந்து வரும் வழிகெட்ட கொள்கையாக சுப்பர் முஸ்லிம் (Super muslim) என்ற பெயரில் இயங்குவோரால் முன்வைக்கப்படும் கொள்கையை அடையாளப்படுத்தலாம். இவர்களை ஆதரிக்கும் சிறு ரசிகர்கூட்டம் இன்று உருவாகியுள்ளது.

இவர்கள் கிஃலாபத்தை நபித்துவத்தின் பிரதான நோக்கமாக சித்தரிக்கக்கூடிய, அகீதாவில் வழிதவறிச் சென்று கொண்டுள்ள அமைப்புக்களின் கருத்துக்களைத் திருடி நவீன கால ஆய்வாக தாம் இணையத்தின் வாயிலாகத் திருடிய அந்த சிந்தனைகளைத் தமது ஆய்வைப்போல் இளைஞர்களைக் கவரும் விதத்தில் முன்வைத்து வருகின்றார்கள்.

குழப்பங்கள் நிறைந்து காணப்படும் இன்றைய காலகட்டத்தில் மக்கள் எதிர்பாக்கும் தலைப்புக்களை தெரிவு செய்து அந்த தலைப்புக்களில் அஹ்லுஸ் ஸுன்னாக் கொள்கையின் நிலைப்பாட்டுக்கு மாற்றாமான கருத்துக்களைக் குர்ஆன், ஹதீஸிலிருந்து பெறப்பட்ட துள்ளியமான ஆய்வாக முன்வைப்பதே இவர்களின் தந்திரமாகும்.

ஈமானுக்கு வேட்டு வைக்க இவர்கள் தேர்ந்தெடுத்துள்ள தலைப்புக்கள்:

1)அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஹ் என்போர் பற்றி தவறான விளக்கம் (?)

2)2050ற்குள் தஜ்ஜாலின் வருகை( ?)

3)யஹ்ஜுஜ் மஹ்ஜுஜ் வெளிப்பட்டுவிட்டார்கள்.(?)

4)அடிமை தன் எஜமானியை பெற்றெடுப்பாள் என்பது டெஸ்ட் டியூப் பேபி முறை.(?)

5)நபிமார்களின் தஃவா கிலாபத்தை இலக்காக கொண்டது (?)

6)ஷைத்தானின் கொம்பு என்பது ஸஊதியின் எழுச்சி.(.?)

7)கியாமநாள் பற்றிய முன்னறிவிப்புகளை நிதர்சனத்தை வைத்தே அனுக வேண்டும்(..?)

8)மார்கத்தை ஆய்வு செய்ய மௌலவியாக தேவையில்லை (?)

9)சூரியன் மேற்கில் உதித்துவிட்டது தௌபாக்கள் இனி ஏற்கப்படாது(?)

10)அதிசயப்பிராணி என்பது இஸ்ரேலின் ஆட்சி(.?)

11)நபி (ஸல்) அவர்கள் வந்தது கிலாபத்தை நிலைநாட்ட..(?)

12) முற்படுத்த வேண்டியது அகீதா இல்லை ஆட்சியே..(?)

13)ஸஊதியை ஸலபுகள் கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்கள்..(?)
(மற்றும் பல வழிகேடுகள்… )

மேற் கூறப்பட்ட தலைப்புக்களில் குர்ஆன், ஹதீஸை தவறாகச் சித்தரித்து முற்று முழுதாக அஹ்லுஸ் ஸுன்னாக் கொள்கைக்கு மாற்றமான கருத்துக்களை மக்கள் மத்தியில் முன்வைத்துக் கொண்டிருக்கிறது இந்த சுப்பர் முஸ்லிம் எனும் வழிகெடுக்கும் குளுமார்கத்தை சரிவரப் படிக்காத இளைஞர்கள் பலர் இவர்களின் ஷைத்தானிய வழியில் சிக்கும் பேராபத்தான நிலை இன்று உருவாகியுள்ளது என்பதை இவர்களின் யூடீயூப் செனலின் Subscribersஸைப் பார்போர் அறிந்து கொள்ள முடியும்.

எனவே இந்த நவீன வழிகேட்டைக் கண்டு கொள்ளாவிட்டால் இரத்தம் கொதிக்கும் நம் இளைஞர்களுக்கும் ,சமூகத்துக்கும் நாம் செய்யும் மிகப்பெரிய தீங்காகவே மாறிவிடும். சில வழிகேடுகள் வளர எமது புறக்கணிப்புக்களும் காரணமாக இருந்துள்ளமை நாம் மறுக்க முடியாத கடந்தகால வரலாற்றுண்மையாகும்.

அல்லாஹ்வின் உதவியால் இந்த நவீன வழிகேட்டை முளையிலேயே கிள்ளி எறிந்து இது போன்று இன்னுமுள்ள வழிகேடுகளை நோக்கி மக்களை அழைக்கும் அழைப்பாளர்களிடமிருந்து முஸ்லிம் சாமூகத்தைக் காக்க வேண்டும் என்ற தூய எண்ணத்தில் இஹ்லாஸுடன் இப்பணிக்காகச் செயற்பட திறமைமிக்க உலமாக்கள் ஒன்றிணைந்துள்ளார்கள்இன்ஷா அல்லாஹ் ஸபீலுல் முஃமினீன் என்ற பெயரிலுள்ள எமது முகநூல் பேஜ் மற்றும் யூடியூப் செனல் , வாட்ஸப் குளுமம் போன்ற இன்னுமுள்ள இணையதளங்களினூடாகவும் அஹ்லுஸ்ஸுன்னாவுக்கு மாற்றமான கொள்கைச் செயற்பாடுகளைக் கொண்ட பிரிவினருக்குறிய மறுப்புக்களைத் தொடர்ந்தும் எதிர்பாருங்கள்.

رَبَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ اِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةًاِنَّكَ اَنْتَ الْوَهَّابُ‏
"எங்கள் எஜமானே.! எங்களை நீ நேர்வழியில் செலுத்திய பின்பு எங்கள் இதயங்களை நேர்வழியிலிருந்து பிறழச் செய்திடாதே! மேலும், எங்களுக்கு உன் அருளிலிருந்து கொடை வழங்குவாயாக! திண்ணமாக, நீயே உண்மையில் தாராளமாக வழங்குபவனாய் இருக்கின்றாய்.
(அல்குர்ஆன் : 3:8)

எமது Face book மற்றும் YouTube தளத்தின்

லின்க்:

https://www.youtube.com/channel/UCgxokWl1qJWEGV0_YXRpOuA

https://www.facebook.com/Sabeelulmumineenofficial/

SABEELUL MU'MINEEN

👆follow this In Sha Allah

http://www.islamkalvi.com/?p=124142


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

குழந்தைகளின் உடல் பருமன் குறித்து கவலைப்படும் பெற்றோரா?

குழந்தை பருவத்தில் உடல் எடை பிரச்சனையை எதிர் கொள்வோரின் எண்ணிக்கை உலகளவில் வெகுவாக அதிகரித்து...

Popular Posts