லேபிள்கள்

திங்கள், 29 ஜூலை, 2019

வாழ்க்கையின் ரகசியம் என்ன?..


ஒரு பொன்மாலைப் பொழுதில் இயற்கை எழில் கொஞ்சும் பூங்கா ஒன்றில் நான்கு தத்துவ ஞானிகள் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மெல்லிய பூங்காற்று வீசவே கொடி ஒன்று அசைந்து ஆடியது. அதைக் கண்டு ரசித்த ஒரு ஞானி, " இந்தப் பூங்கொடி அசைவது எவ்வளவு அழகாக இருக்கிறது!" என்றார். உடனே அடுத்தவர், "பூங்கொடியா அசைகிறது? காற்றல்லவா அசைகிறது?" என்றார். அதற்கு மூன்றாமவர், "அதுவும் இல்லை, மனம்தான் அசைகிறது" என்றார். நான்காவது ஞானியோ நிதானமாகச் சொன்னார். "எதுவுமே அசையவில்லை!"
தத்துவ ஞானிகளுக்கு இடையே நடைபெறும் இந்தச் சின்னஞ்சிறு உரையாடல் காட்சி தத்துவக் கருத்தோட்டங்களை புலப்படுத்தி நிற்கிறது.
'ஒவ்வொரு கணமும் இனிமை!'
ஜென் குரு ஒருவர் எப்போதும் அமைதியாகவும் நிறைவாகவும் வாழ்ந்து கொண்டிருந்தவர். சீடர்கள் சிலர் அவரைக் கேட்டார்கள், "உங்களுடைய நிம்மதியான வாழ்க்கையின் ரகசியம் என்ன?"
குருநாதர் சிரித்துக் கொண்டே சொன்னார் "பெரிதாக ஒன்றுமில்லை.
மிக எளிமையான விஷயங்கள் தான்"
1.காலை எழுந்தவுடன் முதல் வேலையாக, நறுமணம் உள்ள ஓர் இடத்தில் அமர்ந்து தியானம் செய்யுங்கள்.
2.வயிறு முட்டச் சாப்பிடாதீர்கள். வயிற்றில் கொஞ்சம் இடம் காலியாக இருக்கட்டும்.
3. கண்ட நேரத்தில் துாங்க வேண்டாம்.தினமும் ஒரே நேரத்துக்கு தூங்கச் செல்லுங்கள்.
4.பெரும் கூட்டத்திலும் தனிமையைப் பழகுங்கள். தனிமையில் கூட்டத்துக்கு நடுவே இருக்கிற உணர்வை அனுபவிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
5.நன்றாக, தெளிவாகப் பேசுங்கள். அதன்படி நடந்தும் காட்டுங்கள். வார்த்தை ஒன்று, வாழ்க்கை வேறு என இருக்காதீர்கள்.
6.ஒவ்வொரு வாய்ப்பையும், ஒரு முறைக்குப் பலமுறை நன்கு சிந்தித்த பிறகே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
7.முடிந்து போன விஷயங்களை எண்ணி வருந்தாதீர்கள்.
8.போர் வீரர்களைப் போல் தைரியம் பழகுங்கள். அதே சமயம், சிறு குழந்தைகளைப் போல் வாழ்க்கையை நேசியுங்கள்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா - 1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்பட...

Popular Posts