லேபிள்கள்

சனி, 6 ஜூலை, 2019

உப்பில் இருப்பது அசுர குணம்.! தேனில் இருப்பது தேவர் குணம்.!


சித்த மருத்துவம்
உப்பின் தன்மை என்ன ?
சித்தர்கள் உப்பை பற்றி என்ன சொல்லி உள்ளார்கள் ?
இறந்தவைகளை பாதுகாக்க பயன் படுவது உப்பு
உப்பு மனிதன் குருதியில் கலந்தவுடன் மிருக குணம் வந்து விடும்.இது இறை நிலைக்கு எதிர் மறையான பலனை உடையது இறைவனுக்கு படைக்கும் எந்த உணவிலும் உப்பை சேர்க்க மாட்டார்கள்.
இனிப்பு இல்லாமல் செய்ய மாட்டார்கள் ..
ஒரு உடல் இறந்த பின்பும் பதபடுத்த வேண்டும் என்றல் உப்பை கலந்து வைத்தால் அவை அப்படியே இருக்கும்.
உப்பு மனிதர்களுக்கு நிறைய நோய்களை கொடுக்கும் .
சித்த வைத்திய முறையில் உப்பை சேர்க்காமல் உணவு உண்ண பத்தியம் உண்டு ,கை தேர்ந்த வைத்தியர்கள் இதை அறிவார்கள்.
தேன்….
தேன் இனிப்பு சுவை உடையது என்று எல்லோருக்கும் தெரியும். சித்தர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா ?.
தேன் தன்னுடன் சேரும் பொருளை கெடுக்காது.தானும் கெடாது.தேன் நாக்கில் மட்டும் இனிப்பை தரும்.ஆனால் தொண்டை வழியே உள்ளே சென்றவுடன் இது கசப்பாக மாறி விடும் தன்மை உடையது . இதனால்தான் தேனை கொண்டு மருந்தை கலந்து தந்தார்கள். மேலும் தேன் உயிர் சக்திகளை தரும் பொருளை அப்படியே வைத்து இருக்கும்.
ஒரு நெல்லி கனியை தேனில் ஊறப் போட்டு அதை 50 வருட காலம் கழித்து எடுத்து சாப்பிட்டால் அதன் உயிர் சக்தி வலிமையோடு அப்படியே இருக்கும் .
இதனால் சித்த மருத்துவத்தில் தேனில் கலந்த லேகியம் தருவார்கள்.
மனிதன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ:-
1.மாதம் 2 முறையாவது 3 வேளையும் உப்பு இல்லாமல் உண்ண பழகி கொள்ள வேண்டும்.
2.40 வயதை தாண்டியவர்கள் அடிக்கடி தேன் சேர்த்து உண்ண வேண்டும்.
தேன் சர்க்கரை நோய்களை தூண்டாது .
3.தேனுடன் பால் கலந்து சாப்பிட சுண்ணாம்பு சக்தி நிறைய கிடைக்கும்.
நோய்கள் உப்பின் தேக்கத்தால் வருகிறது .
உப்பு அதிகமாக உள்ள மிருக உடல்கள் (அசைவ உணவுகள் )
இவைகளை நாம் தின்று (உப்பினால் ) வரும் நோய்களை குணப்படுத்த
உப்பை வைத்து தயாரித்த மருந்துகள் தருகிறது இன்றைய மருத்துவம்(Alopathy ).
இனிப்பை வைத்து வைத்யம் செய்வது Homeopathi .
உப்பும் ,தேனும் தன்னுடன் எது சேர்த்தாலும் கெடுக்காது.
நல்ல தேனை எறும்பு தீண்டாது.
உப்பையும் எறும்பு தீண்டாது.
கருவாடு ,உறுகாய்,போன்றவைகள் உதாரணம்.
நாம் சமயத்தில் தேவ அசுர சண்டை என்பது தேனுக்கும், உப்பிற்கும் நடக்கும் சண்டையே .
தேவ அமிர்தம் என்பது தேன்.
தேன் தேவ குணம் உடையது.
உப்பு அசுர குணம் உடையது.
தேன் தேவர்கள் போல் நம்மை இறைவனிடத்தில் அழைத்து செல்லும்.
உப்பு பூலோகத்தில் இருக்க வைக்கும்.
இவைகள் உடல் சார்ந்த விவரம்.
ஆகவே உப்பை குறைத்தும் ,சுத்த தேனை சேர்த்தும் சாப்பிட்டு பழகி கொள்வோம்.
உப்பை தரும் கடலையும்,
தேனீக்களை விரட்டும் இயற்கை அழிப்பையும் செய்வது மட்டுமே நவீன மனிதனின மெகா வருமானம் ஆகி விட்டது.
உணர்ந்தால் மனிதன்
"என் மக்கள்"
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

குழந்தைகளின் உடல் பருமன் குறித்து கவலைப்படும் பெற்றோரா?

குழந்தை பருவத்தில் உடல் எடை பிரச்சனையை எதிர் கொள்வோரின் எண்ணிக்கை உலகளவில் வெகுவாக அதிகரித்து...

Popular Posts