லேபிள்கள்

சனி, 23 செப்டம்பர், 2017

வுளுவுடன் பள்ளிக்கு செல்லல்

வுளுவுடன் பள்ளிக்கு செல்லல்

இறையத்தை வளர்த்துக் கொள்வது எப்படி 2,
மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்

நாம் அன்றாடம் செய்யும் அமல்கள் மூலம் எவ்வாறு நமது உள்ளத்தில் எப்படி இறையச்சத்தை வளர்த்துக் கொள்வது? என்பதை விளக்கப் படுத்தும் முகமாக ஒவ்வொரு மாதமும் ஓரிரு ஹதீஸ்களை முன் வைத்து அதற்கான வழி காட்டலை வழங்கி வருகிறோம்.அந்த வரிசையில் நாம் தொழுகைக்கு பள்ளிக்கு செல்லும் போது வுளுவுடன் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பது பற்றிய ஹதீஸை விளக்க உள்ளேன்.
பாங்கு சத்தம் கேட்டவுடன், வுளு செய்து கொண்டு பள்ளிக்கு போக வேண்டும். அப்படி போகும் போது, பள்ளியை நோக்கி அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு நன்மை பதியப் படும், ஒரு பாவம் அழிக்கப் படும்.
பின்வரும் ஹதீஸை கவனியுங்கள்.


" உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: யார் தொழுகைக்காக முழுமையான முறையில் அங்கத் தூய்மை (உளூ) செய்து, கடமையான தொழுகைக்காக நடந்துசென்று, மக்களுடன் தொழுகிறாரோ அல்லது கூட்டுத் தொழுகையில் கலந்து கொள்கிறாரோ அல்லது பள்ளிவாசலில் தொழுகிறாரோ அவருக்கு அவருடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிடுகின்றான். (முஸ்லிம் 393)

இந்த ஹதீஸின் படி தொழுகைக்காக பள்ளிக்கு செல்லு்ம் போது வுளுவுடன் செல்ல வேண்டும். அப்படி செல்லும் போது எனது பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன. நன்மைகள் எழுதப் படுகின்றன. என்ற சிந்தனையோடு செல்ல வேண்டும். இப்படி நினைத்துக் கொண்டு செல்லும் போது உள்ளத்தில் இறையச்சத்தை பெற்றுக் கொள்ள முடியும்.
பொதுவாக வீட்டில் இருந்தாலும் சரி, அல்லது தொழில் புரியக் கூடிய இடத்தில் இருந்தாலும் சரி, எல்லா சந்தர்ப்பங்களிலும் வுளுவுடன் இருக்க கூடிய நிலையை அமைத்துக் கொள்ள வேணடும். அதன் மூலமும் உள்ளத்தில் இறையச்சம் வளருவதை உணர முடியும்.
மேலும் வுளு செய்யும் போது அவரவர் செய்த பாவங்கள் தண்ணீரோடு, தண்ணீராக வெளியேறுகின்றன் என்பதை பின் வரும் ஹதீஸ் தெளிவுப் படுத்துவதை கவனிக்கலாம்.
"ஒரு அடியான் வுளு செய்யும் போது முகத்தை கழுவினால் கண்களால் பார்க்கப் பட்ட பாவங்கள் தண்ணீரின் இறுதி சொட்டுடன் வெளியேறுகின்றன. கையை கழுவினால் கையினால் செய்த பாவங்கள் தண்ணீரின் இறுதி சொட்டுடன் வெளியேறுகின்றன. காலை கழுவினால் பாவத்திற்காக நடந்த பாவங்கள் தண்ணீரின் இறுதி சொட்டுடன் வெளியேறுகின்றன. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
நாம் வுளு செய்யும் போது அதாவது முகத்தை கழுவும் போது கண்ணால் செய்த பாவங்கள் இப்போது வெளியேறுகின்றன என்றும், கைகளை கழுவும் போது கைகளால் செய்த பாவங்கள் வெளியேறுகின்றன என்றும், காலை கழுவும் போது பாவத்திற்காக நடந்த பாவங்கள் வெளியேறுகின்றன என்றும்
நினைத்துக் கொண்டு வுளு செய்தால் அந்த நேரத்தில் இறையச்சத்தின் அதிகரிப்பை பெற்றுக் கொள்ள முடியும்.
வுளுவின் துஆ

வுளு செய்த பின் வுளுவுடைய து ஆவை ஓதினால் அவருக்காக சுவர்கத்துடைய வாசல்கள் திறக்கப் படுகின்றன. என்பதை பின்வரும் ஹதீஸ் உறுதிப் படுத்துவதை காணலாம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.உங்களில் ஒருவர் முழுமையான முறையில் அங்கத் தூய்மை செய்துவிட்டு, அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன.அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்துகொள்ளலாம். (முஸ்லிம் 397)
நீங்கள் வுளு செய்து முடித்து இந்த து ஆவை ஓதியவுடன் எனக்காக சுவர்கத்துடை எட்டு வாசல்கள் திறக்கப் படுகின்றன,
இப்போது நான் சுவர்கத்திற்குள் நுழைகின்றேன் என்ற உணர்வை அமைத்துக் கொள்ள வேணடு்ம்.
உதாரணத்திற்கு சுப்ஹூ தொழுகைக்கு வுளு செய்து, இந்த துஆவை ஓதிய பின் நான் இப்போது பாபு ஸதக்கா வழியாக சுவர்கத்திற்கு செல்கிறேன் என்றும், ளுஹர் தொழுகைக்கு வுளு செய்து, இந்த து ஆவை ஓதிய பின் நான் பாபுஸ் ஸலாத் வழியாக சுவர்கத்திற்குள் செல்கிறேன் என்றும், அஸரு தொழுகைக்கு வுளு செய்து, இந்த துஆவை ஓதிய பின் பாபுல் ஜிஹாத் வழியாக சுவர்கத்திற்கு செல்கிறேன் என்றும், மஃரிப் தொழுகைக்கு வுளு செய்து, இந்த து ஆவை ஓதிய பின் பாபுர் ரய்யான் வழியாக
சுவர்கத்திற்குள் செல்கிறேன் என்ற உணர்வை அந்த இடத்தில் கொண்டு வர வேண்டும் அப்போது உள்ளத்தில் இறையச்சத்தின் அதிகரிப்பை கண்டு கொள்ள முடியும்.

மேலும் சுவர்கத்தின் வாசலுடைய பெயகளும் மறக்காது.
இப்படி ஒவ்வொரு நாளும் நடைமுறைப் படுத்தி வந்தால் அமல்களில் ஆர்வமும், இறையச்சத்தின் அதிகரிப்பையும் பெற்றுக் கொள்ள முடியும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

மஞ்சள் கலந்த பாலைக் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்.

வெறும் பாலைக் குடிக்காதே. அதுல ஒரு துளி மஞ்சள் பொடி கலந்து குடி ' என்பார்கள் நம் வீட...

Popular Posts