லேபிள்கள்

சனி, 17 டிசம்பர், 2016

ஆண்கள் அழகாக...

ரமேஷ், ஆண்களுக்கான அழகுக்கலை நிபுணர்
ஆண்களின் சருமத்துக்கு என அழகுசாதனப் பொருட்கள் கடைகளில் வந்துவிட்டன. ஆண்கள் தங்கள் சருமத்துக்குச் செய்ய வேண்டிய அழகுக் குறிப்புகள் என்ன? அழகு சாதனப் பொருட்களை எப்படித் தேர்வு செய்வது?
ஆண்கள் பொதுவாகத் தலையில் எண்ணெய் தேய்ப்பது கிடையாது. பொடுகு அதிகரிக்க, இதுவும் ஒரு காரணம். சூடான உடலைக்கொண்டவர்கள், தலைக்கு நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் பயன்படுத்தலாம். குளிர்ச்சியான உடல்வாகு கொண்டவர்கள், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் பயன்படுத்தலாம்.

இரவு படுக்கைக்குச் செல்லும் முன்னர், தலைக்கு எண்ணெய் தேய்த்துவிட்டு, காலையில் தலைக்குக் குளிக்கலாம். பொடுகுப் பிரச்னை உள்ளவர்கள், தலையில் எண்ணெய் வைக்கக் கூடாது.

மன அழுத்தம், தலைக்கு எண்ணெய் தேய்க்காதது, சரிவிகித உணவு உண்ணாமை, தூக்கமின்மை போன்ற காரணங்களால், இளம் வயதிலேயே முடி கொட்ட ஆரம்பிக்கும். வைட்டமின் சி அதிகம் உள்ள பழங்கள் மற்றும் பாதாம் பருப்பு ஆகியவற்றைச் சாப்பிட்டுவந்தால், நன்றாக முடி வளரும்.
ஹேர் ஸ்டரெயிட்டனிங், ஹேர் கலரிங் போன்றவை செயற்கையான அழகு மட்டுமே. இதனால் பக்க விளைவுகள் ஏற்படலாம். ஊட்டச்சத்து நிறைந்த உணவு உட்கொண்டு, முறையாகத் தூங்கி எழுந்தாலே, நன்றாக முடி வளரும்.

ஆண்கள் சந்திக்கும் மிக முக்கியமான
  பிரச்னை, முகப்பருக்கள். பருக்களை உடைப்பது, கிள்ளுவது, அதன் மீது எண்ணெயைத் தடவுவது கூடாது. கொழுப்புச் சத்து மிகுந்த  பொருட்களை உட்கொள்வதை அறவே தவிர்த்தால் போதும். பருக்கள் சில நாட்களில் மறைந்துவிடும்.

நகங்களை ஒழுங்காக வெட்டாமல் இருப்பதாலும் நகம் கடிப்பதாலும் நகத்தில் சேரும் அழுக்குகள், சாப்பிடும்போது உடலுக்குள் செல்கிறது. சிலருக்கு கியூட்டிகில்ஸ் (Cuticles) எனப்படும் வெள்ளை நிற சிறிய அளவிலான சதை நகத்தின் ஓரத்தில் வளரும். இவற்றைக் கண்டிப்பாகக் கடிக்கக் கூடாது. 15 நாட்களுக்கு ஒருமுறை நகங்க ளைச் சீராக வெட்ட வேண்டும்.

தலையில் எண்ணெய் வைக்காதது, ஒழுங்காகத் தண்ணீர் குடிக்காதது போன்ற காரணங்களால் சிலருக்குக் குதிகால் வெடிப்பு ஏற்படலாம். எனவே நன்றாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். வாரம் ஒருமுறை வாளியில் சுடு தண்ணீர் நிரப்பி, அதில் எலுமிச்சைச்சாறு மற்றும் கல் உப்பு சேர்த்து, பாதங்களை 15 நிமிடங்கள் ஊறவைத்து எடுத்தால், வெடிப்பு குறையும்.  அலுவலகம் செல்பவர்கள் தரமான ஷூ பயன்படுத்த வேண்டும். அடிக்கடி ஷூ மாற்றக் கூடாது. இறுக்கமான ஷூ அணியக் கூடாது.

காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கடுமையான வெயில் இருக்கும். அந்த நேரத்தில் பைக் ஓட்டுபவர்கள் முகத்துக்கும் கைகளுக்கும் சன் ஸ்க்ரீன் லோஷன் தடவிக்கொள்ள வேண்டும். எண்ணெய் சருமம்கொண்டவர்கள் சன் ஸ்க்ரீன் பயன்படுத்தக் கூடாது. ஸ்லிப்பர் போடுபவர்கள், பாதங்களிலும் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும்.

மாய்ஸ்சரைஸர் பயன்படுத்தினால், சருமத்தின் கடினத்தன்மை மறைந்து, மென்மையாக மாறும். எண்ணெய் சருமம் உள்ளவர்கள் மாய்ஸ்சரைஸர் பயன்படுத்த வேண்டாம்.

பேஷியல் செய்வதால், முகத்தில் உள்ள அழுக்குகள் படிப்படியாக நீக்கப்பட்டு, கரும்புள்ளிகள் நீக்கப்படும். நீராவி பிடிப்பதால் முகம் புத்துணர்ச்சி அடைவதோடு பிரகாசமாகவும் இருக்கும். முகத்தைச் சுத்தப்படுத்தவே ஃபேஷியல்.

அதிகளவு தண்ணீர் குடிப்பது உதடு வறண்டு போகாமல் பாதுகாக்கும். பொதுவாகவே, தண்ணீர் அதிகம் எடுத்துக்கொள்வது சருமத்தைப் பொலிவாக்கும். பழங்கள் அதிகம் சாப்பிடுவது, உதட்டை அழகாக்கும். இரவு நேரத்தில் உதட்டில் வெண்ணை தடவிவிட்டுப் படுக்கலாம். பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை உதட்டுக்குத் தடவுதவன் மூலம், உதடு கருமையாகமல் தடுக்க முடியும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

உடலில் ஏற்படும்சின்ன சின்ன நோய்களை தீரக்க கூடிய சில எளிய மருத்துவக்குறிப்புகளை இங்கேபார்ப்போம்

உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும். துளசி இலைகள் போடப்பட்ட ...

Popular Posts