''பாட்டி... மீசை வளர்றது பத்தி சொல்றேன்னீங்களே!'
'ஆம்பளை மாதிரி டிரெஸ் மட்டும் போட்டுப்பீங்களாம். மீசை மட்டும் ஆம்பளை மாதிரி வளர்ந்தா அசிங்கமா இருக்காம். அதையும் முறுக்கிண்டு போக வேண்டியதுதானே...' என்று ஷைலுவை பாட்டி கலாய்க்க...
'வைத்தியத்தை சொல்லச்சொன்னா, இப்படி வம்புக்கு இழுக்கிறியே பாட்டி?'
'சும்மா... கிண்டல் பண்ணேம்மா! கோரைக்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள் இரண்டும் ஒரு பங்குன்னா, அம்மான் பச்சரிசி அரைப் பங்கு சேர்த்து அரைச்சு பேஸ்ட் ஆக்கிக்கணும். தேவையில்லாத இடத்துல வளர்ற முடி மேல் பூசிக் கழுவிட்டு வந்தால், முடி வலுவிழந்து போய் உதிர்ந்திடும். அதே சமயம் முதல்ல கொஞ்சமா, ஒரு இடத்துல இந்தப் பேஸ்ட்டைப் பூசி பார்த்து, அரிப்பு, தடிப்பு வருதானு செக் பண்ணிக்கணும். ஒரு சிலருக்கு அம்மான் பச்சரிசி அலர்ஜியைத் தந்திடும்.'
'அப்ப, இதுதான் மூலிகை 'திரெடிங்'னு சொல்லு.'
'மீசை தாடி இருக்குன்னா, உடனே அதை நீக்குறதுக்கு முயற்சி பண்றதைவிட, அது வர்றதுக்கான காரணத்தை முதல்ல தெரிஞ்சுக்கணும். ஹார்மோன் பிரச்னையாக்கூட இருக்கலாம். தேவை இல்லாத இடத்துல முடி வளர்ற பெரும்பாலான பெண்களுக்கு பி.சி.ஓ.டி என்ற சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருக்கும். இதைத் தவிர்க்க நிறைய நார்ச்சத்துள்ள காய்கறி, கீரைகள் எடுத்துக்கணும். இனிப்பு உணவுகளைத் தவிர்த்திடணும். தினமும் காலையில் எழுந்ததும், சோற்றுக் கற்றாழையில் இருக்கும் ஜெல் பகுதியை, ஒரு ஸ்பூன் எடுத்து நல்லா பிசுபிசுப்பு போகக் கழுவி வைச்சு, தொடர்ந்து 45 நாள் சாப்பிடணும். பப்பாளி, சோயா, பனீர் கட்டி, தொலி உளுந்து, எள்ளு சேர்ந்த உணவுகளை தினமும் எடுத்துக்கணும்.
'ஆமாம் பாட்டி... சிலருக்கு பீரியட்ஸ் ஒழுங்கா வர மாட்டேங்குது. சிலருக்கோ வந்தா நிற்க மாட்டாம, ரொம்ப சிரமப்படுறாங்க.'
'மாதவிடாய் பிரச்னைக்கு ஒரு ஈஸியான கைவைத்தியம் சொல்றேன் கேளு. சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், கருஞ்சீரகம் இவை எல்லாமும் தனித்தனியா 30 கிராம் அளவுக்கு எடுத்துக்கணும். இதுகூட, 20 கிராம் இந்துப்பு, கடுக்காய் சேர்த்து பொடிச்சு வைச்சுக்கணும். தினமும் காலையும் மாலையும்னு நேரத்துக்கு அரை டீஸ்பூன் தேனில் குழைச்சு சாப்பிட்டு வந்தா, மாதவிடாய் சீராயிடும். சின்ன வெங்காயம், வெள்ளைப்பூண்டு நிறைய சேர்த்துக்கணும். பூண்டு, வெங்காயம் ரெண்டும்தான் நம் உடம்போட ஹார்மோன் சுரப்பிகளைச் சீராக்கும் சூப்பர் மூலிகை உணவு!''
''நிறைய கேர்ள்ஸ், தைராய்டுனு மாத்திரை சாப்பிட்டுக்கிட்டே இருக்காங்க... அவங்க என்ன செய்யணும்?''
''பெண்களுக்கு, தைராய்டு சுரப்பு குறைவா இருந்தாலும், மாதவிடாய் சரியா வராது. எடையும் கூடிப்போயிடும். அவங்க உணவுல கடுகுக் குடும்பத்தைச் சேர்ந்த காய்கறிகளைச் சாப்பிடவே கூடாது. அதாவது, முட்டைகோஸ், சிகப்பு முள்ளங்கி, காலிஃப்ளவர் இதையெல்லாம் தொடவே கூடாது. தைராய்டு கோளத்தைப் பெரிசாக்கிடும்.
புற்றுநோயையே தடுக்கும் ஒரு உணவாக இருக்கும் புரொகோலி கூட, தைராய்டு உள்ளவங்களுக்கு ஆகாது. தைராய்டு குறைவு இருந்தா, தினமும் பிராணாயாமம், விபரீதகரணி, ஹலாசனம், சர்வாங்காசனம்னு சில யோக ஆசனங்களையும், மூச்சுப்பயிற்சியையும் சேர்த்து செய்யணும். ''பாட்டி மாதவிடாய் தள்ளிட்டே போறதுக்கு, ஓவலேஷன் தள்ளுவதும் சில நேரங்களில் நடக்காமலும் இருப்பதும்தான் காரணம்னு படிச்சேன். அதுக்கு என்ன சாப்பிடலாம்?''
''துத்தநாகச்சத்து (க்ஷ்வீஸீநீ) குறைபாடு இருந்தால்கூட ஓவலேஷன் தள்ளிப்போய், மாதவிடாயும் தள்ளிட்டே போகுமாம். அதனால், துத்தநாகச்சத்து நிறைஞ்ச முளைகட்டிய பயறு, பட்டாணி வகைகளை உணவில் சேர்த்துக்கணும். வைட்டமின் பி6 வாழைப்பழம் மூலமாவும், வைட்டமின் டி முட்டை மூலமாவும், வைட்டமின் ஈ பாதாம் மூலமாவும் ஈஸியாக் கிடைச்சிடுது. ஒமேகா சத்தையும், செலினியம் சத்தையும் மீன்கள் தந்திடும். இதையெல்லாம் உணவுல சேர்த்துக்கலாம்.
சித்த மருத்துவத்துல, 'விஷ்ணுகிரந்தி'னு ஒரு மூலிகைப் பொடி இருக்கு. அந்த மூலிகை கருமுட்டை வளர்ச்சிக்குப் பயன்படுதாம். திருமணமாகி, கருத்தரிக்கத் தாமதமான பெண்கள் மருத்துவர் ஆலோசனையோட, இந்த மூலிகையைச் சாப்பிடலாம்!''
''அட! சூப்பர். புரொலாக்டின் ஹார்மோன் அதிகரிச்சு, அதனால சிலசமயம் கருத்தரிக்கத் தாமதமாகும்னு சொல்றாங்களே... அது பத்தி உனக்குத் தெரியுமா பாட்டி?''
''தெரியுமே... ஆனா, அப்புறமா சொல்றேன்டி கண்ணு. பேசிப் பேசி... தொண்டை வறண்டுபோச்சு!''
''இரு... இரு... உனக்கு ஜில்லுனு கிர்ணி ஜூஸ் போட்டுக் கொண்டுவர்றேன்'' என்று ஓடினாள் ஷைலுhttp://pettagum.blogspot.in/2014/05/8.html
--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக