லேபிள்கள்

செவ்வாய், 2 ஜூன், 2015

ரமழானும் குடும்பமும்

ரமழானும் குடும்பமும்

  
கேள்வி:
நான் ஒரு குடும்பத் தலைவன்; ரமழான் மாதம் வந்து விட்டது; சிறப்புக்குரிய இம்மாதத்தில், எனது குடும்பத்தவர்களை பராமரித்து, நன்னெறியில் பயிற்றிவிப்பது எப்படி?
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கேயுரியது. நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ் ஸலவாத்தும் ஸலாமும் சொல்வானாக.
ரமழான் மாதத்தை அடைந்து கொண்டு, அதில் நின்று வணங்கும் சந்தர்ப்பம் ஒரு மனிதனுக்குக் கிடைப்பது அல்லாஹ்வின் பேரருளாகும். அம்மாதத்தில் நன்மைகளுக்குப் பன்மடங்கான கூலிகள் வழங்கப்படுகின்றன. மனிதனுடைய அந்தஸ்துக்கள் உயர்த்தப்படுகின்றன. அம்மாதத்தில், அல்லாஹ் அதிகமானோருக்கு நரக விடுதலை வழங்குகின்றான். ஆகவே, ஈருலக நற்பயன்களையும் அடைந்து கொள்ளும் வகையில் இம்மாதத்தைப் பயன்படுத்திக் கொள்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.
அந்த ரமழானில் கிடைக்கின்ற ஒவ்வொரு வினாடியையும் இபாதத்துக்களில் கழிக்க வேண்டும். அம்மாதத்தை அடைந்து கொள்ளுமுன்னர் இறையடி சேர்ந்து விட்டதன் காரணமாக அல்லது நோய்வாய்ப்பட்டு விட்டதன் காரணமாக, அல்லது வழிகேட்டில் சிக்கித் தடுமாறிக் கொண்டிருப்பதன் காரணமாக அந்த ரமழானைப் பயன்படுத்திக் கொள்கின்ற வாய்ப்புப் பலருக்குத் தவறியிருக்கும் போது நமக்குக் கிடைத்திருப்பது இறைவன் நமக்குச் செய்த பேரருள் ஆகும்.
1. பிள்ளைகள் நோன்பு நோற்கின்றனரா? என்பதைக் கண்காணித்து, அதில் அலட்சியம் காட்டும் பிள்ளைகளை அதன்பால் ஆர்வமூட்டல்.
2. நோன்பு என்பது உண்ணுவதையும், பருகுவதையும் விட்டுவிடுவது மாத்திரமல்ல. மாறாக, இறைபக்தியை ஏற்படுத்திக் கொள்வதற்கும், பாவ மன்னிப்புப் பெறவும் தகுந்த வழியாகும். அவ்வாறே நோன்பு குற்றச் செயல்களுக்குப் பரிகாரமும் ஆகும் என நோன்பின் யதார்த்த நிலையைப் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும்.
அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறுவதாவது: ஒருமுறை ரஸூல் (ஸல்) அவர்கள் மிம்பர் படிகளில் ஏறும்போது ஆமீன்! ஆமீன்!! ஆமீன்!!!  என்று கூறினார்கள். (வழமைக்கு மாறாக) இன்று ஏன் இவ்வாறு செய்தீர்கள்? என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கவர், (கீழ்வருமாறு) பதில் கூறினார். ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து கீழ்வரும் மூன்று விடயங்களைக் கூறினார்கள்.
¨ 'யார் ரமழான் மாதத்தை அடைந்துகொண்டு, பாவங்களுக்கு மன்னிப்புப் பெற்றுக் கொள்ளவில்லையோ அவர் நாசமாகட்டும்' என்றார். அதற்கு நான் 'ஆமீன்' என்றேன்.
¨ பின்னர், 'யார் பெற்றோர் இருவரையும், அல்லது அவ்விருவரில் ஒருவரை அடைந்துகொண்டு, அவர்களுக்குப் பணிவிடை செய்வதன் மூலம் சுவர்க்கத்தை அடைந்து கொள்ளவில்லையோ அவரும் நாசமாகட்டும்' என்றார். அதற்கு நான் 'ஆமீன்' என்றேன்.
அவ்வாறே ரமழானில் பெற்றோர் தமது பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. ஆகவே, அவர்களைச் சிறந்த முறையில் பராமரித்து நன்நெறிப்படுத்தல், நல்லறங்களின்பால் அவர்களுக்கு ஆர்வமூட்டல், அவற்றில் ஈடுபடப் பயிற்றுவித்தல் போன்றன அவற்றில் அடங்கும். ஏனெனில், பிள்ளைகள் தமது பெற்றோரிடம் பெறுகின்ற பயிற்சியின் அடிப்படையிலேயே வளர்கின்றனர்.
அதிலும் குறிப்பாக ஆண் பிள்ளைகள், தமது தகப்பனிடம் காணப்படுகின்ற பழக்க வழக்கங்களின் அடிப்படையிலேயே வளர்கின்றனர். பரக்கத்துக்கள் நிறைந்த அந்த நாட்களில், பெற்றோர் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் சரிவர நிறைவேற்ற முயற்சி செய்வது கடமையாகும். இதனால், பெற்றோருக்குக் கீழ்வருமாறு உபதேசம் செய்கிறோம்: அவையாவன:
பதில்:
3. வலது கையால் சாப்பிடுதல், தனக்கு முன்னால் இருப்பதைச் சாப்பிடுதல் போன்ற உண்ணும் ஒழுங்குகளை அவர்களுக்குக் கற்றுக்  கொடுக்க வேண்டும். அவ்வாறே உணவை வீண்விரயம் செய்யக் கூடாது. அளவுக்கு அதிகம் சாப்பிடுவதால் உடம்புக்குத் தீய விளைவுகள் போன்றவற்றைத் தெளிவுபடுத்த வேண்டும்.
¨ 'உங்களுடைய பெயர் சொல்லக்கேட்டு, உங்கள் மீது யார் ஸலவாத்துச் சொல்லவில்லையோ அவரும் அழிந்து நாசமாகட்டும்' என்றார். அதற்கும் 'ஆமீன்' என்றேன்.
நூல்கள்: திர்மிதீ: 3545, அஹ்மத்: 7444, இப்னு குஸைமா 1888, இப்னு ஹிப்பான்: 908
4. மஃரிபுத் தொழுகை ஜமாஅத்துடன் தவறிவிடும் அளவுக்கு நீண்டநேரம் (இஃப்தார்) நோன்பு திறப்பதைத் தடுத்தல்.
5. வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்ள உணவுக்கு வழியின்றித் தடுமாறும் ஏழை எளியவர்களுடைய நிலையையும், முஹாஜிர்களுடையவும், முஜாஹித்களுடையவும் நிலைமைகளையும் பிள்ளைகளுக்கு ஞாபகமூட்டல்.
6. 'இஃப்தார்' போன்ற நிகழ்ச்சிகள் உறவினர்களை ஒன்று சேர்ப்பதற்கும், அவர்களைச் சேர்ந்து நடப்பதற்கும் சிறந்த சந்தர்ப்பமாகும். இந்தப் பழக்கம் இன்னும் பல நாடுகளில் காணப்படுகின்றன. பிளவுபட்டிருப்போரை ஒற்றுமைப்படுத்தவும், விடுபட்டுள்ள உறவுகளைச் சேர்த்துக் கொள்வதற்கும் 'இஃப்தார்' போன்ற நிகழ்ச்சிகள் நல்ல சந்தர்ப்பமாகும் என்பதைப் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தல்.
7. உணவு தயார்செய்தல், அதனைப் பகிர்தல், அவற்றை எடுத்தல், திரும்பவும் பயன்படுத்தக் கூடிய உணவுகளைப் பாதுகாத்தல் போன்றவற்றைச் செய்வதற்குத் தாயாருக்கு உதவி செய்தல்.
8. நோன்பில் இரவுத் தொழுகையின் முக்கியத்துவம், அதற்காக நேரகாலத்துடன் தயாராகுதல், உற்சாகத்துடன் நின்று தொழக்கூடிய அளவுக்கு மாத்திரம் உணவு உட்கொள்ளல், முடிந்தவரை பள்ளிவாசலுக்குச்   சென்று  தொழுகையை நிறைவேற்ற முயற்சி எடுத்தல் போன்றவற்றைப் பிள்ளைகளுக்கு உணர்த்தல்.
9. ஸஹர் செய்வது 'பரகத்' (அபிவிருத்தி) ஆகும். அதன்மூலம் ஒரு மனிதன் நோன்புவைக்கச் சக்தி பெறுகின்றான் என்பதைச் சொல்லிக் கொடுத்தல்.
10. (ஏற்கனவே) வித்ருத் தொழுகையை நிறைவேற்றாதவர்கள் 'வித்ரு'த் தொழுது கொள்ளவும், இரவின் கடைசிப் பகுதியில் வித்ருத் தொழுகையை அமைத்துக் கொள்ளவும் தமது தேவைகளுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொள்ளவும் போதிய நேரம் வைத்து கண்விழித்தல்.
11. தொழுகை கடமையானவர்கள் அனைவரும் ஜமாஅத்துடன் ஸுபஹ் தொழுகையை நிறைவேற்றுதல். இன்று அதிகமானவர்கள் கடைசி நேரத்தில் கண்விழித்து, ஸஹர் மாத்திரம் செய்துவிட்டு, ஸுபஹ் தொழாமல் திரும்பவும் தூங்கிவிடுவதைக் காண்கிறோம்.
12. ரமழானின் கடைசிப் 10 நாட்களிலும், இரவுப் பகுதியை வணக்கத்தில் கழிப்பதும், அதற்காக தமது மனைவிமார்களை எழுப்பித் தயார்படுத்திவிடுவதும் நபி வழியாகும். இந்த நபி வழியைத் தழுவி, பாக்கியம் நிறைந்த இந்த ரமழான் மாதத்தை இறைவனுக்குப் பொருத்தமான வழிகளில் கழிப்பது கடமையாகும். ஆகவே, தனது மனைவி, பிள்ளைகள் போன்றோரை அல்லாஹ்வின் நெருக்கத்தைத் தேடித்தரும் வணக்கவழிபாடுகளில் கழிக்கத் தயார்படுத்திவிடுவது ஒவ்வொரு கணவன் மீதும் கடமையாகும்.
13. ரபீஃ பின் முஅவ்வித் (ரழி) அவர்கள் கூறுவதாவது: ஆசூரா (முஹர்ரம் மாதம் 10 ஆம்) நாள் காலையில், அன்ஸாரித் தோழர்கள் இருந்த கிராமங்களுக்கு ஒரு அழைப்பாளரை அனுப்பி  வைத்தார். அவர், 'இன்றைய தினம் நோன்பு வைக்காதவர்கள் அப்படியே இந்த நாளைப் பூர்த்தியாக்கட்டும், நோன்பு வைத்தவர்கள், தமது நோன்புகளைப் பூரணப்படுத்தட்டும்' என்று கூறினார்.
ரபீஃ (ரழி) அவர்கள் கூறுவதாவது:
அதன் பின்னர், ஆசூரா நாளில் தொடர்ந்து நோன்பு வைப்போம். எமது சிறார்களையும் நோன்பு வைக்கச் செய்வோம். இன்னும் அவர்களையும் பள்ளிவாசல்களுக்கு அழைத்துச் செல்வோம். அவர்கள் விளையாடுவதற்காக கம்பளியால் பாவைகளையும் செய்து வைப்போம். பசியால் அவர்கள் உணவு கேட்டு அழுதால், மஃரிப் வரை, பாவைகளை அவர்களுக்கு விளையாடக் கொடுப்போம்.
நூல்கள்: புகாரி: 1859, முஸ்லிம்: 1136
ஹதீஸ் தரும் படிப்பினைகள்
இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் கூறுவதாவது:
¨ சிறுவர்களை வணக்க வழிபாடுகளில் ஈடுபடப் பழக்குதல்.
¨
இபாதத்துக்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்துதல். (அவர்கள், மார்க்கக் கடமைகளை நிறைவேற்றக் கடமைப்படாதவர்களாயினும் கூட.)
காழீ இயாழ் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது:
நோன்பு வைக்க சிறுவர்கள் எப்போது சக்திபெறுகின்றனரோ, அப்போது அவர்கள் மீது நோன்பு கடமையாகும் என்று இமாம் உர்வா (ரஹ்) கூறுவர். இவருடைய இக்கருத்தப் பிழையானதாகும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் கூறுவதாவது: '3 பேர்களைவிட்டும் பேனா உயர்த்தப்பட்டு விட்டன. அவர்களில்…' ஒரு சிறுவன். அவன் பருவ வயதை அடையும் வரை'
நூல்: அல் மின்ஹாஜ்: 8/14
14. பெற்றோருக்கு வசதியிருந்தால், பிள்ளைகளையும் அழைத்துச் சென்று ரமழான் மாதத்தில் உம்ராச் செய்ய வேண்டும். ஏனெனில், ரமழான் மாதத்தில் நிறைவேற்றுகின்ற உம்ராவுக்கு, ஒரு ஹஜ் செய்த சிறப்புக் கிடைக்கின்றது. ஜன நெருக்கடியைத் தவிர்த்துக் கொள்வதற்காக, ரமழான் மாதத்தின் ஆரம்பத்தில் உம்ராவை நிறைவேற்றுவதே பொருத்தமானதாகும்.
15. அளவுக்கதிகமான உணவுப் பொருட்களைச் செய்யுமாறு கணவன், மனைவியை நிர்ப்பந்திக்கலாகாது. ரமழான் மாதத்தில் இஃப்தார் செய்வதற்காக வகை வகையான உணவுகளைத் தயார் செய்வதில் ஈடுபடுவது இன்று அதிகமான குடும்பங்களின் பழக்கமாகிவிட்டது. இது ஒருவகையான வீண்விரயமாகும். இதனால், ரமழான் மாத்த்தின் உண்மையான ஈமானிய இன்பமும், அதனுடைய நோக்கமான இறையச்சத்தை அடைந்து கொள்வதும் தவறிவிடுகின்றது.
16. ரமழான் அல்குர்ஆனின் மாதமாகும். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மஜ்லிஸ் ஏற்பாடு செய்து அதில், அல்குர்ஆனை மனைவியும். பிள்ளைகளும் ஓத, தகப்பன் திருத்திக் கொடுக்க வேண்டும். அவ்வாறே சில அல்குர்ஆன் வசனங்களுடைய விளக்கங்களையும் அவர்களுக்குப் போதிக்க வேண்டும். அவ்வாறே, நோன்பின் சட்டங்கள், சிறப்புக்கள் தொடர்பான ஒரு நூலை எடுத்து, நாள்தோறும் 1 பாடத்தையாவது வாசிக்க வேண்டும். இன்று ரமழான் மாத 30 நாட்களுக்கும் என்றே 30 பாடங்கள் அடங்கிய சில நூற்கள் உள்ளன.
17. அண்டை வீட்டார், ஏழைகள் போன்றோரின் தேவைகளை அறிந்து அவர்களுக்காக செலவு செய்யத் தூண்டுதல்.
நபி (ஸல்) அவர்கள் மனிதர்களில் பெரும் கொடைவள்ளலாய்த் திகழ்ந்தார்கள். (சாதாரண நாட்களை விட) ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களை ரமழான் மாதத்தில் சந்திக்கும்போது, நபி (ஸல்) அவர்கள் மிக அதிகமாக வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமழான் மாதத்தில் ஒவ்வொரு இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து குர்ஆனை நினைவுபடுத்துவார்கள். இருவருமாகத் திருக்குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். தொடர்ந்துவீசும் காற்றை விட வேகமாக நபி (ஸல்) அவர்கள் நல்ல காரியங்களில் மிக அதிகமாக வாரி வழங்குவார்கள்.
நூல்கள்: புகாரி: 6, முஸ்லிம்: 2308
18. எந்த நன்மையுமின்றி, கண்விழித்துக் கொண்டு வீணாக நேரத்தைக் கழிப்பதிலிருந்து பெற்றோர், பிள்ளைகளைத் தடுத்துவிடவேண்டும். சில இடங்களில் பிள்ளைகள், ரமழானின் இரவு காலங்களில் தடுக்கப்பட்டவைகளைச் செய்வதிலேயே கழிக்கின்றனர்.
மனித ஷைத்தான்கள் ரமழான் மாத இரவிலும், பகலிலும், நோன்பாளிகளுக்கு தீங்கிழைத்துக் கொண்டும், அநியாயங்களைச் செய்துகொண்டும் திரிகின்றனர். இதனைத் தடுத்து நிறுத்துவது பெற்றோர் மீதுள்ள கடமையாகும்.
19. மறுமையில், அல்லாஹ்வின் சுவனத்தில் குடும்பங்கள் ஒன்றுசேர்கின்றன. அல்லாஹ்வுடைய அர்ஷின் நிழலின் கீழ் ஒன்றுதிரளக் கிடைப்பது பெரும் பேறாகும். இந்த உலகில் ரமழான் மாதத்தில் நிறைவேற்றப்படுகின்ற மஜ்லிஸ்கள், கல்வி கற்கவும், இரவு வணக்கத்தில் ஈடுபடவும், தொழுகைக்காகவும் நடைபெறுகின்ற ஒன்றுகூடல்கள் யாவும், மறுமையில் அர்ஷின் நிழலில் ஒன்றுசேரும் நற்பேற்றை ஈட்டித் தருவனவாகும்.
அனைத்து விடயங்களிலும் உதவி செய்யவும், நேர்வழி காட்டவும் அல்லாஹ் போதுமானவன்.


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

பகலில் தூங்குவதால் ஏற்படும் விளைவுகள்.

தூங்குவதால் உடலுக்கு ஓய்வு கிடைத்து சோர்வு நீங்குகிறது. சிலருக்கு படுத்தவுடன் தூக் கம் கண்களை...

Popular Posts