லேபிள்கள்

வியாழன், 21 மார்ச், 2013

வினிகரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என பார்க்கலாம்

உங்கள் வீட்டுக் கிச்சனில்எவர்சில்வர் காஸ் அடுப்புக்கள், கண்ணாடி பொருட்கள் மற்றும் டைல்ஸ்கள் ஆகியவற்றை
வினிகர் மூலம் சுத்தம் செய்தால் அனைத்துமே பளிச் பளிச் என்றுதான் இருக்கும். 
பித்தளைச் சாமான்கள் பளிச்சிட சிறிது வினிகரை உருளைக்கிழங்கு வேகவைத்த தண்ணீருடன் கலந்து அந்தப்பொருட்களின் மேல் அழுத்தித் தேய்க்கவும், ஆனால் எந்தப் பொருளை சுத்தப்படுத்த வினிகரைப் போட்டாலும் அதிக நேரம் ஊறவைக்காது உடனே கழுவி விடுங்கள்.

குளியலறையில் உள்ள மார்பிள் தரையை சுத்தமாக்க ஒரு கப் வினிகரை ஒரு கப் சுடுநீரில் கலந்து கறைகளின் மீது தடவி, சிறிது நேரம் கழித்து சோப்புக் கரைசலைப் பல்துலக்கும் தூரிகையில் நனைத்து தரையைத் தேய்த்தால் மார்பிள் பளபளக்கும்.

எலக்ட்ரிக் கொஃபி மேக்கர் நீண்ட நாட்கள் ஆனதும், உட்புறம் உப்பு படிந்து விடும். இதனால் அடைப்பு ஏற்பட்டு, டிகாஷன் இறங்குவது தாமதமாகும், இதற்கு வினிகர் சிறிது எடுத்து நீருடன் கலந்து ஊற்றி வழக்கம்போல் ஓன் செய்ய வேண்டும், (கொஃபி பவுடன் போடக்கூடாது) வெந்நீர் மட்டும் டிகாஷன் வருவது போல வரும்.இதுபோல இரண்டு அல்லது மூன்று முறை சுத்தம் செய்தால், பின்பு டிகாஷன் ஸ்பீட் ஆக வரும்.

கண்ணாடிப் பாத்திரங்கள், கண்ணாடி டம்ளர்கள், கார் கண்னாடி இவற்றை வினிகர் கலந்த நீரினால் சுத்தமாகக் கழுவினால் பளபளக்கும்.

பல்செட் வைத்திருப்பவர்கள், அதை இரவில் வினிகர் கலந்த நீரில் போட்டு வைத்தால் வாடை இல்லாமல் இருக்கும்.

டைனிங் டேபிளில் சில சமயம் ஒரு துர்வாடை அடிக்கும். வினிகரை நல்ல மிருதுவான துணி அல்லது பஞ்சு கொண்டு துடைத்தால் வாடை போய் புதுசு போல பளபளக்கும்.

உங்கள் சருமம் உலர்ந்த சருமமாக இருந்தாலோ, அல்லது வெடிப்புள்ள சருமமாக இருந்தாலோ வினிகரை தடவினால் குணமாகும்.

ஷம்பூ போட்டு தலைகுளித்தபின் சிறிதளவு வினிகர் கலந்த நீரினால் அலசினால் முடிபட்டுப் போலாகும்.

வினிகர் கலந்த நீரில் பாதம் மூழ்கும்வரை அரைமணி நேரம் ஊறவைத்து பின்பு நன்றாக கழுவினால், கால்விரல் நகங்களில் உள்ள அழுக்குகள் போய், நகங்கள் சொத்தையாக இருந்தாலும் சில நாட்களில் சரியாகிவிடும்.

அரைகப் வினிகர் எடுத்து, குளிக்கும் நீரில் (Warm
 Water) கலந்து குளித்தால் சருமம் மிருதுவாகும்.

பொடுகுத் தொல்லை இருந்தால் ஒரு டேபிள் ஸ்பூன் வினிகரை தலையில் தடவி,சில நிமிடங்கள் கழித்து நன்கு அலசிக் குளித்தால் பொடுகு போய்விடும்.

Apple
 Cider Vinegar என்ற வினிகரை எலுமிச்சை ஜூஸ் அல்லது தேனில் விட்டுத் தண்ணீர் கலந்து குடித்துவரை உடல் எடை குறையும்.

ஒரு தே.கரண்டி வெள்ளை வினிகர், 3 தே.கரண்டி பன்னீர் ஆகியவற்றை ஒரு கப் தண்ணீரில் கலக்கவும். மிகச் சிறந்த சமச்சீரான PH சரும டோனர் தயார். முகத்தில் இதைத் த்ளித்துக் கொண்டால், புத்துணர்வைப் பெறலாம். வேக வைத்த உருளைக்கிழங்கு, துளி உப்பு, துளி கிளிசரின், 2 துளி வினிகர் ஆகியவற்றை கலந்து முகத்தில் பூசினால் மாசு மருவற்ற சருமத்தைப் பெறலாம்.
 


கறைபோக்கும் வினிகர்.
 வெற்றிலைக் கறை துணியில் பட்டால், அந்த இடத்தில் வினிகர் ஊற்றி தேய்த்து கழுவினால் போய்விடும்.

அலுமினிய குக்கரின் உட்புறம் கறுப்பாக இருந்தால் சிறிது வினிகரைப் பூசி 15நிமிடம் வைத்திருக்கவும். பின்னர் சிறிது நீர் ஊற்றிக் கொதிக்க விட்டால் குக்கரின் கறை நீங்கிப் பளிச்சிடும்.

வாஷ்பேஷனில் தண்ணர் உப்பு படிந்து கறையாக இருந்தால் வினிகருடன் சாக்பௌடர் கலந்து பூசி சிறிது நேரம் வைத்திருந்து பின் தேய்த்துக் கழுவவும்.
 
கொழுப்பைக் குறைக்கும் வினிகர்! வெள்ளரியையும் தக்காளியையும் மெல்லியதாக வட்டவட்டமாக வெட்டிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தையும் மெல்லியதாக அரிந்து கொள்ளவும். இக் கலவையில் சிறிது உப்பு போடவும். மல்லி இலைகளை மேலே தூவி விடவும். பின்பு சிறிது வினிகரையும் ஒலிவ் எண்ணெயும் கலக்கவும். பின்பு பரிமாறவும். வேண்டுமானால் சிறிது மிளகு சீரக கலவையையும் இத்துடன் சேர்க்கலாம். வினிகர் கலந்து இந்த சாலுட்டின் ருசி அருமையாக இருக்கும்.
வினிகர் சோப்பதால் உடம்பிலுள்ள கொழும்பு குறைக்கிறது. தவிர Anti inflammation வராமல் தடுக்கிறது. எதுவாயினும் அளவோடு சேர்ப்பது நல்லது. எங்கள் வீட்டில் இதை அடிக்கடி சாப்பிட்டு வருகிறோம்.
சுத்தப்படுத்தும் வினிகர்! குழந்தைகளின், ஃபீடிங் போத்தலை தினசரி கழுவும்போது துளி வினிகர் விட்டுக் கழுவினால் சுத்தமாகிவிடும்
பிளாஸ்க்கில், சொட்டு வினிகர் விட்டால் போதும் துர்வாடையற்ற பிளாஸ்க் பயன்படுத்த ரெடி.
ஸ்கூலுக்கம், அலுவலகத்துக்கும் கொடுத்தனுப்பும் டிபன் பாக்ஸ்களையும் இப்படி கழுவலாம்!
ஃப்ரிட்ஜில் காய்கறிகளின் வாடை, பால் வாடை, மாவு வீச்சம் என கவலையாக இருக்கும். எனவே வாரம் ஒரு முறை ஒரு ஸ்பூன் வினிகர் ஒரு மக் தண்ணீரில் ஃபிரிட் துடையுங்கள்.
உல்லன் துணிகள் பளிச்சிட கையால் பின்னிய உல்லன் துணிகளைத் துவைக்கும் போது 2 டேபிள் ஸ்பூன் வினிகரைத் தண்ணிரில் கலந்தால் துணிகள் பளிச் .. பளிச்தான்.
வெள்ளையுனிஃபார்ம் பளிச்சிட.. குழந்தைகளின் வெள்ளைனிஃபார்ம் துணிகளை வாரத்திற்கு ஒருமுறை நீலம் போடுவதற்கு முன் ஒரு பக்கெட் நீரில் இரண்டு ஸ்பூன் வினிகர் கலந்து அதில் துணிகளை முக்கி எடுத்து விட்டுப் பிறகு நீலம் போட்டு அலசுங்கள். துணிகள் தும்பைப் பூவைப் போல் வெண்மையாக இருக்கும்.
ப்ரஷர் குக்கரில் துரு பிடித்து கெட்டியாகி விட்ட ஸ்க்ரூவின் மேல், இரண்டு சொட்டு வினிகர் விட்டு, சற்று நேரம் கழித்துத் திருகினால் சுலபமாலக எடுக்க வரும்.
பித்தளை தட்டு, பாத்திரங்கள் பச்சையாக நிறம் மாறிவிட்டால், வினிகருடன் உப்ப சோத்து, சற்று ஊற வைத்து அழுத்தித் தேய்த்தால் பளிச்தான்.
பூச்சித் தொல்லை வராமல் இருக்க சமையலறையில் உள்ள அலமாரியில் பூச்சிகள் தொல்லை ஏற்படாமலிருக்கு, வினிகர் கலந்த நீரால் துடைக்க வேண்டும் வாரமிருமுறை!
வெண்கரு பிரியாமல் இருக்க …. அவித்த முட்டை தயாரிக்கும் போது முட்டை வேக வைக்கும் தண்ணரீல் சில துளிகள் வினிகர் சோப்பதால் வெண்கரு பிரியாமல் இருக்கும்
பட்டாணி நிறம் மாறமால் இருக்க  பச்சைப்பட்டாணி வேகவைக்கும் போது, அதன் உண்மையான பச்சை நிறம்போகமலிருக்க, நான்கு துளி வினிகர் ஊற்றி வேக வைத்தால் பச்சை நிறத்தை பாதுகாக்கலாம்.
முட்டை நாற்றம் வராமல் இருக்க .. தரையில் முட்டை விழுந்து உடைந்தால் துர்நாற்றம் வீதம் அதைப் போக்க சிட்டிகை அளவு உப்பு, வினிகர் இரண்டும் கலந்து துடைத்துவிட்டால், துரநாற்றம் மறையும்.
மீன் வாடை வராமல் இருக்க  மீன் கழுவும் போது, சிறிதளவு, உப்பு, வினிகர் இரண்டும் சேர்த்து கழுவினால் அந்த மீனின் கெட்ட வாடை நீங்கி விடும். மீனை உடனேயே சமைக்கவில்லை என்றாலும் வினிகர் ஊற்றி நன்றாக மூடி ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் மீன் இரண்டு நாட்கள் கெடாமலிருக்கும்.
கீரை, காய்கறியை ஃபிரெஷ் ஆக்கணுமா? கீரையோ, காயோ வாடியிருக்கிறதா? அது மூழ்குமளவு நீர் ஊற்றி ஒரு பாத்திரத்தில் வைத்து ஒரு ஸ்பூன் அளவு (அல்லது காய்களின் அளவுக்கேற்ப) வினிகர் ஊற்றி வைத்து விடுங்கள். பதினைந்து நிமிடத்தில் காய், கீரை எதாக இருந்தாலும் சோர்வு நீங்கி மலர்ந்த முகத்தோடு புதியது போல் காட்சி தரும்.
இறைச்சி ஸ்மூத் ஆக இறைச்சி வகைளை சமைக்கும் போது வினிகர் சிறிது கலந்து ஊறவைத்து பின் சமைத்தால் இறைச்சி மெத்தென்று பஞ்சு போல் வேகும்
பனீர் செய்ய.. பனீர் செய்ய எலுமிச்சை சாறு இல்லாவிட்டால் கொதிக்கும் பாலில் கொஞ்சம் வினிகர் சேர்த்துக் கிளறி பனீர் பரிந்ததும் வழக்கம் போல வடிக்கட்டிக் கொள்ளவும்.
வினிகரில் நனைத்துப் பிழிந்த துணியில் சீஸ் கட்டியை சுற்றி ஃபிரிட்ஜில் வைத்தால் ஃப்ரெஷ் ஆக இருக்கும்.


--
*more articles click*
www.sahabudeen.com



கருத்துகள் இல்லை:

விஷ ஜந்துக்கள் கடித்தால் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து தெரிந்து கொள்ளலாம்

விஷ ஜந்துக்கள் கடித்து மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து கீழே காணலாம். கண்ணாடி விரிய...

Popular Posts