லேபிள்கள்

வியாழன், 7 பிப்ரவரி, 2013

விரல் துண்டானால் என்ன செய்வது?


சாலை விபத்துகள், தொழிற்சாலை விபத்துகள், கூரிய ஆயுதங்க ளால் தாக்குதல் ஆகியவற்றின் போது உடல் உறுப்புகள் நசுங்கி விடலாம் அல்லது துண்டிக்கப் படலாம். இவ்வாறு பாதிக்கப் பட்ட உறுப்புகள் முழுவதுமாக வோ அல்லது பகுதியாகவோ துண்டிக்கப்படுவது ண்டு.

இப்போதுள்ள நவீன மருத்துவ முறைகளில், துண்டிக்கப்பட்ட உடல் உறுப்புகளைத் திறம்பட மீண்டும் அதே இடத்தில் பொருத்த முடியும்.

நீங்கள் செய்ய வேண்டியது  முதலுதவி என்ன?
பொதுவாக, விரல், கை, கால் போன்றவைதான் இது மாதிரியான விபத்துகளில் பாதிப்புக்குள்ளாகும். அப்போது, பாதிக்கப்பட்டுள்ள நபருக்கு ரத்தமிழப்பு அதிகமாக இருக்கும். ஆகவே, ரத்த மிழப்பைநிறுத்துவதுதான் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டு ம்.

என்ன செயலாம்?
சுத்தமான துணியால் அல்ல து பஞ்சு கொண்டு அடிபட்ட பகுதியை அழுத்திப் பிடிக்க வேண்டும். இதன் மூலம் ரத்த ம் நிற்கவில்லை என்றால், அப்பகுதியின்மீது அழுத்தமாகத் துணி க்கட்டுப் போட வேண்டும்.
கட்டுப்போட பாண்டேஜ் கிடைத்தால் இன்னும் நல்லது. பாண்டேஜ்கட்டு அதிக அழுத்தம் தரும் என் பதால், ரத்தம் வெளியேறுவது உடன டியாக நிற்கும்.
இந்த நேரடி அழுத்தத்தில் ரத்தம் வெளியேறுவது நிற்கவில்லை என்றால், மறைமுக அழுத்தம் தர வேண்டும். அதாவது, பாதிப் படைந்துள்ள பகுதிக்கு எந்த ரத் தக்குழாயிலிருந்து ரத்தம் வரு கிறதோ, அதை அழுத்திப் பிடிக் கவேண்டும்.
எடுத்துக்காட்டாக, கை அல்லது விரல் வெட்டுப்பட்டிருந்தால், அக் குளுக்கு அடுத்த மேற்கையில் ஒரு துண்டு கொண்டு அழுத்தமாகக் கட்டுப்போட வேண்டும். கால் அல்லது பாதங்கள் வெட்டுப்பட்டிருந்தால், தொடையில் கட்டுப்போட வேண்டும்.
காயத்தில் கல், மண், கண்ணாடி என்று ஏதேனும் அந்நியப் பொரு ள்கள் இருந்தால், அகற்றிவிட வேண்டும்.
பாதிக்கப்பட்டுள்ள நபரைப்படுக் க வைத்து முதலுதவிகள் செய்ய வேண்டும். இல்லையென்றால், மயக்கம் வந்துவிடும்.
பாதிக்கப்பட்டுள்ள நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வத ற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு 108 ஆம்புலன்ஸ் உதவும்.
துண்டிக்கப்பட்ட உடல் பகுதியைத் தேடிக் கண்டுபிடிக்க முடிந்தால், அதைக் காயமுற்ற நபருடன் அனுப்பி வையுங்கள்.
அதைத் தேடிக் கண்டுபிடிக்கத் தாமதம் ஆகுமென்றால், நேரத் தை வீணாக்காமல், காயமுற் ற நபரை மட்டும் உடனே மருத் துவமனைக்கு அனுப்பி விட்டு, துண்டிக்கப்பட்ட பகுதி கிடைத் ததும், அதைத் தனியாகக் கொ ண்டு செல்லலாம்.

இதுதான் மிகவும் முக்கியம்!
முறையாகப் பாதுகாக்கப்பட்ட தசையில்லாத விரல் போன்ற உறுப்பு களை விபத்துக்குள்ளான 6 மணி நேரத்துக்குள்ளும், தசையுடன் கூ டிய முன்னங்கை போன்ற உறுப்புகளை 2 மணி நேரத்துக்குள்ளும் உடலில் இணைக்கப்பட வேண்டும். அதற்கு ஏற்றாற்போல், துண்டிக் கப்பட்ட பகுதிகளை மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல வேண் டும்.

துண்டிக்கப்பட்ட பகுதியை எப்படிப் பாதுகாப்பாகக் கொண்டு செல்வது?
துண்டிக்கப்பட்ட உறுப்பில் தூசு, மண், கல் போன்றவை இருந்தால், சுத்தமான தண்ணீரில் மென்மையா கக் கழுவுங்கள்.
பின்பு, நன்கு உலர்ந்த பஞ்சு அல்லது சுத்தமான துணிகொண்டு அதை மூ டுங்கள்.
இதை ஒரு சுத்தமான பாலித்தீன் பையில் வையுங்கள்.
மூடி உள்ள ஒரு பாத்திரத்தில் சில ஐஸ் கட்டிகள் எடுத்துக் கொள்ளு ங்கள். அதில் இந்த பாலித்தீன் பையை வையுங்கள்.
இப்போது அந்தப் பாத்திரத்தை மூடி, உடனடியாக மருத்துவனைக்கு எடுத்துச் செல்லுங்கள்.
இந்த முதலுதவியின் நோக்கம் என்னவென்றால், துண்டிக்கப்ப ட்ட பகுதி குளிர்ச்சியாக இருக்க வேண்டும்; ரத்தம் ஓட்டம் தடை யில்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான்.

என்ன செய்யக்கூடாது?
துண்டிக்கப்பட்ட பகுதியைச் சுத் தம் செய்யும்போது அழுக்கை எடுப்பதற்காக அழுத்தமாகத் தேய்க்க க்கூடாது.
துண்டிக்கப்பட்ட உடல்பகுதியை ஐஸ் கட்டிகள் கொண்டு மூடக் கூடாது.
அதுபோல், துண்டிக்கப்பட்ட உட ல்பகுதியை ஐஸ் கட்டிகள்மீது நேரடியாகவும் வைக்கக்கூடா து.
அப்படி வைத்தால், ஐஸ் கட்டியி ன் அதீதக் குளிர்ச்சியால் துண்டி க்கப்பட்ட பகுதி சேதமடைந்து விடும். பிறகு, அதை உடலில் பொருத்த முடியாது.

துண்டிக்கப்பட்ட பகுதி தொங்கிக்கொண்டிருந்தால் என்ன செய்வது?
தொற்று நீக்கப்பட்ட துணி, சுத்தமான துணி, ஈரமான பஞ்சு, சலைனி ல் ஊறவைத்த பஞ்சு இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி காயத்தைச் சுத்தப்படுத்துங்கள்.
இப்போது, துண்டாகித் தொங்கும் உடல் பகுதியை அந்த இடத்தில் மீண்டும் எடுத்து வையுங்கள்.
கனமான துணியால் அல்லது பாண்டேஜ் கொண்டு அந்த உட ற்பகுதியைச்சுற்றி அழுத்தமாக க் கட்டுங்கள்.
எலும்பு முறிவும் இருக்குமானா ல், அடிபட்ட பகுதிக்கு மேலும் கீழும் அடிஸ்கேல், சிறிய மரப்ப லகை, கனத்த நோட்டு போன்ற வற்றால் அணை கொடுத்துக் கட்டி, அந்த நபரை மருத்துவமனைக்கு அழைத் துச் செல்லுங்கள்.
பாதிக்கப்பட்டுள்ள நபருக்கு மயக்கம் வராமலிருக்க தண்ணீர், குளு க்கோஸ், பால், மோர், காபி, தேநீர், டொரினோ, இளநீர் போன்ற திரவ பானங்களில் ஒன்றைத் தர வேண்டியதும் முக்கியம்.
துண்டிக்கப்பட்ட உடல் பகுதி யை உடலில் மீண்டும் பொருத்த எல்லா மருத்துவமனைகளிலு ம் வசதி இருக்காது. நுண் நாள ம் அறுவை மருத்துவர்’ (Micro Vascular Surgeon) உள்ள மருத் துவமனைகளில் மட்டுமே இது இயலும்.
ஆகவே, உங்கள் ஊரில் இந்த மருத்துவர் எங்கு இருக்கிறார் என்று முதலிலேயே தெரிந்து வைத் துக் கொண்டு, நேரடியாக அங்கு செல்வதே நல்லது. எனென்றால், இந்தச் சிகிச்சையைப் பொறுத்த மட்டில் எவ்வளவு விரைவில் துண் டிக்கப்பட்ட உடல்பகுதி மருத்துவ மனைக்குக் கொண்டு வரப்படுகிற தோ, அந்த அளவுக்கு சிகிச்சை வெற்றி பெறும்.

கருத்துகள் இல்லை:

சமையலறைக் குறிப்புகள்.

சர்க்கரை டப்பாவில் எறும்பு மொய்க்காமல் இருக்க நமது சமையலறையில் ' சர்க்கரை ' முக்க...

Popular Posts