லேபிள்கள்

செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

சொந்தமாக வீடு ஒன்றை வாங்கும்போது கவனிக்க‍ வேண்டியவைகள்


ஒரு வீட்டை வெற்றிகரமாக வாங்க என்ன செய்ய வேண்டும் என்ப தற்கு வீடு, மனை இடைத்தரகு நிறுவனமான ரீமேக்ஸ் ஜெம்ஸ்மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநர்ஏ.வி.முரளி தந்த டிப் ஸ் இனி:


விற்பனை விருப்பம்!
விற்பதற்கு வருகிற சொத்தை பற்றி அதன் உரிமையாளர் தரு ம்  தகவல்களை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். அதன் உண்மைத்தன்மையை நேரில் சென்று உறுதிபடுத்திக் கொள் ள வேண்டும். நமக்கு தகவல் தரும் நபருக்கும், விற்பனைக்கு வரும் சொத்திற்கும் உள்ள தொடர்பை அறிவதும்  முக்கியம்.

இடைத்தரகர்!
சிறிய அளவிலான சொத்து என்றாலோ அல்லது சொத்து மதிப்புகுறைவு என்றாலோ விற்பவ ரோடு நேரடியாகவே வியாபார த்தை முடித்துக் கொள்ளலாம். சொத்தின் மதிப்பு கோடிகளில் இருக்கும் பட்சத்தில் நம் சார்பில் பேச புரோ க்கர்களை அணுகலாம். நம் சார் பாக சொத்தை வாங்கும் அதிகாரம் தருவதற்கான ஒப்பந்தத்தை அவ ரோடு செய்து கொள்ள வேண்டும்.

முரணான தகவல்!
சொத்தின் விற்பனை யாளரோடு முதற்கட்ட பேச்சில் நீங்கள் வாங்க விருக்கும் விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும். பரஸ்பரம் பேசும்போது தவறான தகவல்கள் பரிமா றிக் கொள்ளக்கூடாது. குறிப்பாக, விற்பனையாளர் தரும் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந் தால் மேற்கொண்டு பேச்சு வார்த் தையைத் தவிர்ப்பது நல்லது.

சூழ்நிலையை அறிந்து கொள்ளுத ல்!
சொத்தின் உரிமையாளரோடு பேசத் தொடங்கும்போதே  அவர் என்ன காரணத்துக்காக சொத்தை விற்க நினைக்கிறார் என்று  அறிந்து கொள்ள வேண்டும்.   அவரது   சூழ்நி லையை தெரிந்து கொண்டு அதற்கேற்ப பேச்சை தொடர வேண்டும். அவசர பணத் தேவைக்காக விற்கிறார் எனில் பேரத்துக்கு இணங்கி வருவார். அதேபோல, அந்த சொத்தை வாங்க நீங்கள் அதிக ஆர்வத்தோடு  இருப்பதாக காட்டிக் கொள்ள கூடாது. பிடிச்சிருக்கு, ஆனா யோ சிக்கணும்என்று சொன்னால்தான் விற்பவர் விலையைக் குறைப்பார்.

விலை!
நீங்கள் வாங்கப் போகும் வீடு அல்ல து மனை உங்கள் பட்ஜெட்டுக்குள் இருக்கிறதா என்று பார்ப்பது அவசிய ம். விற்பவர் சொல்கிற விலை அந்த சொத்து மதிப்புக்கு உகந்த விலை தானா என்றும் பார்க்க வேண்டும். அரசு நிர்ணயித்திருக்கும் விலை, தற்போதைய சந்தை மதிப்பு, அந்த சொத்து சார்ந்த வசதிகள் அடிப்படையில் விலை கணக்கிட வேண்டு ம். கட்டடமாக வாங்குகிறோம் எனில் அதன் மதிப்பு,  கொடுக் கப்பட் டுள்ள வசதிகள் போன்ற வற்றின் அடிப்படையில் மதிப்பிட வேண்டு ம்.

பேரம் !சொத்தின் அசல் மதிப்புக ளோடு பாசிட்டிவ் அம்சங்களை மட்டுமே ஹைலைட்டாக எடுத்துச் சொல்வார் இடத்தை விற்பவர். அதை வாங்குபவரான நீங்கள் நெகட்டிவ் விஷயங்களை குறிப்பிட்டு பேரம் பேசவேண்டும்.பேருந்து, ரயில் வசதிகள், ஏரியா, கட்டடம் என்றால் சுவிட்ச் போர்டு, தண்ணீ ர் குழாய் வரை கணக்கி லெடுத்து பேச வேண்டும்.

அனுமதிகள்!
எல்லா வகை பேச்சுகளும் கூடி வருகிற போது சம்பந்தப் பட்ட சொத்தின் தாய் பத்திரங்கள், பட்டா, வருவாய் ரசீதுகள், கட்டட அனுமதிகள் குடிநீர், மின் இணைப்பு வசதி விவரங் கள், சொத்தின் மீது உள்ள வில்லங்கம் போன்றவற்றை அறிந்து கொள்ள வேண்டும்.  இந்த ஆவணங்க ளை ஒரு வழக்கறிஞரிடம் காட்டி எந்த வில்லங்கமும் இல்லை என ஒப்புதல் பெற வேண்டும்.

சாதக, பாதகம்!
ஒரு குறிப்பிட்ட சொத்தை வாங்கி யே தீர வேண்டும் என முன் கூட்டி யே முடிவு செய்யக் கூடாது. இதே பட்ஜெட்டில் இதைவிடவும் சிறந்த தாக வீடு அல்லது மனை கிடைக்கு மா என்று தேட வேண்டும். சொத்தின் பாதகமான அம்சங்களையும் யோசிக்க வேண்டும்.

ஆதாரங்கள்!
எல்லா பேச்சுக்களும் ஆதாரப் பூர்வ மாக இருக்க வேண்டும். விலை பேசு வது, பேரம் பேசுவது, செட்டில்மென்ட் விவரங்கள் போன்றவை கடிதம் அல் லது இ-மெயில் வழியாக மேற்கொள் வது டீலிங்கை சிறப்பாக முடிப்பதற்கு உதவும்.
அட்வான்ஸ் கொடுப்பதற்கு முன் இந்த வேலைகளை குறை இல்லாமல் செய் தால்தான், உங்கள் சொந்தமாக வீடு ஒன்றை வெற்றிகரமாகச் வாங்க முடி யும்.

கருத்துகள் இல்லை:

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா - 1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்பட...

Popular Posts