லேபிள்கள்

திங்கள், 25 பிப்ரவரி, 2013

குழந்தைகளில் இருமல் மருந்துகள் தேவையா? எப்போது?


குழந்தைகள் என்றால் அழுவது சகசம். அதே போல  குழந்தைகளுக்கு அடிக்கடி இருமல் வருவதும் உண்டு. இருமல் என்பது நோயல்ல.

சுவாசக் குழாயில் காற்றானது தடையின்றி போய்வருவதை உறுதி செய்வதற்கு உடல் தன்னச்சையாக எடுக்கும் நடவடிக்கை எனலாம். அதாவது தடைசெய்யும் சளியை அல்லது கிருமியை அகற்றுவதற்கு உடல் எடுக்கும் பாதுகாப்புச் செயற்பாடு எனலாம்.

·                     பிறந்த ஒரு மாதம் ஆகாத குழந்தைகளைக்கு கூட இருமல் வரக்கூடும். அத்தகைய குஞ்சுக் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு பதறியடித்து வருவார்கள்.
·                     மருந்து வேணடும் என்று நட்டுப் பிடிப்பார்கள்.
·                     இருமல் என்றால் நியூமோனியா போன்ற ஆபத்தான நோயாக இருக்கலாம் என்ற பயமே அவர்கள் ஓடி வருவதற்குக் காரணம்.
பெரும்பாலும் குழந்தைகளின் இருமல் ஆபத்தானதல்ல. மருந்துகள் இன்றியே தாமாகக் குணமடைந்து விடக் கூடும்.

நீங்களாக மருந்து கொடுக்க வேண்டாம்

சிலர் மருத்துவரிடம் செல்லாமல், தாங்களாகவே பெரியவர்களுக்கு கொடுக்கும் மருந்தில் சிறிதளவு கொடுத்துப் பார்ப்பதுண்டு. அதைவிட ஆபத்து எதுவும் இருக்க முடியாது. பக்கவிளைவுகள் அதிகம் இருக்கும். அமெரிக்காவின்
 Food and Drug Administration (FDA) ஆனது 2 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுப்பதையிட்டு எச்சரித்துள்ளது. 

இந்த எச்சரிக்கையானது
1.        பெரியவர்களுக்கான இருமல் மருந்தை குழந்தைகளுக்குக் கொடுப்பதையிட்டு மட்டுமல்ல,
2.        குழந்தைகளுக்கான இருமல் மருந்துகளை குழந்தைகளுக்குக் கொடுப்பதையிட்டும் ஆகும்.
அத்தகைய பல மருந்துகளைத் தடைசெய்தும் உள்ளனர்.

குழந்தைகளுக்கான இருமல் மருந்துகளை குழந்தைகளுக்கே கொடுக்கும்போதும்  ஆபத்துக்கள் ஏற்படுவது ஏன் ?
1.        லேபலில் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட பெரும்பாலும் அதிகமாக வழங்கிவிடுகிறார்கள்.
2.        அல்லது குறைந்த நேர இடைவெளிகளில் மருந்தைக் கொடுப்பதால் மருந்தின் அளவு அதிகமாகிவிடுகிறது.
3.        இரண்டு மூன்று இருமல் மருந்துகளை மாறி மாறிக் கொடுப்பதால் மருந்தில் உள்ள சில கூறுகளின் அளவு அதிகரித்து விடும்.
எனவே குழந்தைகளுக்கு அவசரப்பட்டு இருமலுக்கென மருந்துகள் கொடுக்க வேண்டாம். ஆனால் அதற்குப் பதிலாக வீட்டில் செய்யக் கூடிய சாதாரண நடைமுறைச் சிகிச்சைகளை முயலுங்கள்.

·                     மூக்கில் உள்ள சளியை சுத்தமான வெள்ளைத் துணியினால் துடைத்து எடுப்பது,
·                     சேலைன் மூக்குத் துளிகளை உபயோகிப்பது,
·                     ஆவி பிடிப்பது

போன்ற சாதாரண வீட்டுச் சிகிச்சைகள் போதுமானதாக இருக்கும்.
மருத்துவரை நாடவேண்டியது எப்போது?

ஆனால் எல்லா இருமல்களுக்கும் அவை போதுமானவையல்ல. சில வகையான இருமல்களுக்கு மருத்துவரை நாடுவது அவசியமாகும்.
·                     மேற்கூறிய சாதாரண சிகிச்சைகள் செய்தும் இருமல் குணமாகாது அதிகரித்துச் சென்றால் மருத்துவரை நாட வேண்டும்.
·                     இருமலுடன் காச்சலும் அதிகமாக இருந்தால். சாதாரண தடிமன் காய்ச்சலுடனும் இமுமல் வரலாம் அல்லது நியுமோனியா போன்ற கடுமையான நோயுடனும் வரலாம் என்பதால் மருத்துவரைக் காண வேண்டியதாயுள்ளது.
·                     மூச்சு எடுப்பதில் குழந்தைக்குச் சிரமம் இருந்தால்.
·                     குழந்தை மிகவும் சோர்வுற்று இருந்தால், அல்லது சினமுற்று தொடர்ந்து அழுதால்.
·                     பால் குடிப்பது குறைந்தால், அல்லது உணவு உட்கொள்ள மறுத்தால்.
·                     இருமல் கடுமையாக இல்லாவிடினும், நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்தால் மருத்துவரைக் காண வேண்டும். ஆஸ்த்மா, சயரோகம், அல்ர்ஜி ஆகியவற்றால் ஏற்படும் இருமல்கள் நீண்ட நாட்கள் தொடரலாம்.

சில விசேட இருமல்கள்

சில இருமல்கள் ஆபத்தானவை. சில உடனடி ஆபத்து இல்லாவி;டாலும் அவசியம் மருத்துவரை நாட வேண்டிவையாகும். இவற்றில் பலவற்றை, இருமல்களின் ஒலியிலிருந்தே பகுத்தறிந்து கண்டறிய முடியும்.
இருமலின் ஒலி வேறுபாடுகள்

குரைப்பு இருமல்

குரல் அடைத்து சத்தம் சிரமப்பட்டு வெளியே வருவது போன்ற இருமல் சற்று ஆபத்தானது. மூச்சுத் திணறுவது போலவும் இருக்கும்.
 Stridor முச்சுக் குழாயின் மேற்பகுதியில் குரல் வளையுள்ளது. இது வைரஸ் கிருமித் தொற்றால் சுருங்குவதால் இவ்வாறான இருமல் ஏற்படுகிறது. முகக்pயமாக 3 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் ஏற்படும். ஆதற்குக் காரணம் அந்த வயதில் அவர்களது சுவாசப் பாதை இயல்பாகவே ஒடுக்கமாக இருப்பதேயாகும்.

ஏங்கிருந்து வந்தததெனத் தெரியாதவாறு திடீரென ஏற்பட்டால் மருத்துவரைக் காண்பது அவசியம்.

குக்கல் இருமல் (Whooping Cough)
குக்கல் இருமல் தனித்துவமானது. ஆனால் இப்பாழுது காண்பது அரிதாகிவிட்டது. காரணம் குழந்தைகளுக்கு அவர்களின் 2ம், 4ம், 6ம் மாதங்களில் போடப்படும் தடுப்பூசியில் pநசவரளளளை  பக்றீரியாவிற்கு எதிரான மருந்து இருப்பதுததான்.
குக்கல் இருமலின் போது குழந்தையானது ஒரு இருமலுக்கும் அடுத்த இருமல்களுக்கும் இடையே மூச்சு விடமுடியாதபடி தொடர்ந்து இருமும். அவ்வாறு தொடர்ந்து இருமி மூச்சடைத்து கண்கள் பிதுங்குவது போல வருவதைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கும்.

அதன் இறுதியில் நீண்ட கூகூகூகூ என்ற ஒலி எழும்பும். இதை வைத்தே நோயைக் கண்டுபிடித்துவிடலாம். ஒருவர் இருமும்போது வெளியேறும் சளியின் நுண்துளிகள் ஊடாக மற்றவர்களுக்கு விரைவில் பரவக் கூடியது. ஆயினும் எல்லாக் குழந்தைகளுக்கும் ஒழுங்காகத் தடுப்பூசிகள் போடப்படுவதால் அதிகம் காணப்படுவதில்லை.
இழுப்பு இருமல் (Wheeze)

·                     இந்நோயாளர்களின் சுவாச ஒலியை ஆஸ்த்மாவின் கீதம் எனலாம். மூச்சை உள்ளெடுப்பதில் சிரமம் இருக்காது.
·                     ஆனால் வெளியே விடுவது சிரமமாகவும் இசையொலி போலவும் இருக்கும்.
·                     மோசமான நிலை எனில் வெளிப்படையாகக் கேட்கும்.
·                     இல்லையேல் ஸ்டெதஸ்கோப் ஊடாகக் கேட்கும்.
·                     நிறையச் சளி உள்ளே இருப்பது போலவும் ஆனால் இருமியபோதும் அது வெளியே வராது உள்ளே 'கொள கொள' எனக் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

ஆஸ்த்மாவில் மட்டுமின்றி சில வைரஸ் தொற்று நோய்களிலும் இந்த இசை ஒலி இருமல் ஏற்படலாம்.
இருமலின் காலநேர வேறுபாடுகள்

இருமல் ஒலிகள் சில நோய்களைக் குறிப்பதைப் போலவே, இருமல் எந் நேரத்தில் வருகிறது அல்லது அதிகரிக்கிறது என்ற காலநேரமும் அந்த இருமல் எதனால் ஏற்படுகிறது எனச் சுட்ட உதவக் கூடும்.

இரவு இருமல்

பகல் முழவதும் உற்சாகமாக ஓடியாடித் திரியும் சில குழந்தைகள் இரவில் கடுமையாக இருமிக் கொண்டிருக்கும். இது பெற்றோரின் தூக்கத்தையும் நிம்மதியையும் குலைக்கும்.
·                     சாதாரண தடிமனின் போது அல்லது சைனஸ் தொல்லையின்போது அவற்றிலிருந்து சளியானது தொண்டைப் பகுதியில் இறங்குவதால் இவ்வாறு இருமல் வருகிறது.
·                     ஆஸ்த்மா தொல்லை உள்ளவர்களுக்கும் இரவில் இருமல் வருவதுண்டு. இதற்கு படுக்கையில் இருக்கும் படுக்கைத்தூசிப் பூச்சியானது காரணமாலாம்.
·                     ஆனால் முக்கிய காரணம் இரவுநேரத்தில் ஏற்படும் சுவாத்திய மாற்றமாகும். அத்தகைய சிலருக்கு அதிகாலையில் இருமல் அதிகரிப்பதும் அவ்வாறான சுவாத்திய மாற்றம்தான்.
பகல் நேர இருமல்
·                     பகல் நேரத்தில் இருமல் அதிகரிப்பது சுற்றுச் சுழலில் உள்ள தூண்டல் காரணிகள்தான்.புகை முக்கியமாக அந்த அறையில் யாராவது சிகரட் புகைப்பது

·                     சமையலறைப் புகை மற்றும் சமைக்கும்போது எழும் காரமான மணங்கள்.
·                     வாசனைத் திரவியங்கள்,          air freshener
·                     வளர்ப்புப் பிராணிகளது முடிகள்

இவை சுவாசத் தொகுதியைத் தூண்டுவதால் இருமல் ஏற்படலாம்.

இருமலுடன் வாந்தி

பல குழந்தைகளுக்கு இருமலுடன் வாந்தியும் வருவதுண்டு. இது பொதுவாகக் கடுமையான இமலுடன் ஏற்படுவதுண்டு.
·                     ஆஸ்த்மா போன்ற கடுமையான இருமலுடனும் வாந்தி வரலாம்.
·                     தடிமன், காய்ச்சல், போன்ற வைரஸ் தொற்று நோய்களுடன் வரும் இருமலுடனும் வாந்தி வரலாம்.
இத்தகைய வாந்திகள் பயப்பட வேண்டியவை அல்ல. இருந்தபோதும் வாந்தி தொடர்ந்தால் மருத்துவரை நாடவேண்டும்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

கருத்துகள் இல்லை:

உடலில் ஏற்படும்சின்ன சின்ன நோய்களை தீரக்க கூடிய சில எளிய மருத்துவக்குறிப்புகளை இங்கேபார்ப்போம்

உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும். துளசி இலைகள் போடப்பட்ட ...

Popular Posts