லேபிள்கள்

சனி, 15 செப்டம்பர், 2012

தேனும்,பட்டையும்(Honey+Cinnamaon Powder) உண்பதால் கிடைக்கும் பலன்கள்


பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவத்தில் தேனும் பட்டையும் மிகவும் முக்கியம் வாய்ந்த பொருட்களாக இருந்து வந்துள்ளன.
வரலாற்றை பின்நோக்கி பார்த்தால் உலகில் உள்ள பல நாடுகளில் இந்த இரண்டு பொருட்களையும் மருத்துவத்தில் அதிக அளவு உபயோகித்து வந்ததை அறியலாம். பண்டைய மருத்துவ முறைகளான யுனானி மற்றும் ஆயுர்வேதத்தில் இந்த இரண்டுப் பொருட்களையும் உபயோகித்ததை பழயகால ஒலைச் சுவடிகளை பார்த்தால் தெரியவரும்….. இதன் சிறப்பு தன்மையென்றால் இதனால் எந்த ஒவொரு சைடு எஃபெக்டும் இல்லையென்பதுதான்
1. ( ARTHRITIS ) ஆர்த்தரிடிஸ் எனும் முட்டி வலிகள் :
ஒரு பகுதி தேனுக்கு இரண்டு பகுதி வார்ம் வாட்டர் எடுத்து அதில் ஒரு சிறிய டீஸ்புன் அளவு பட்டை பொடியை கலந்து பேஸ்ட்டாக்கி வலியுள்ள பகுதியில் மெதுவாக தேய்த்து வந்தால் இரண்டு நிமிடங்களில் குறையத் தொடங்கும். அல்லது ஆர்த்தரிடிஸ் நோயாளிகள் தினமும் காலையில் ஒரு கப் ஹாட் வாட்டர் எடுத்து அதில் 2 ஸ்பூன் தேன், ஒரு சிறிய டீஸ்பூன் பட்டைப் பொடியை (cinnamon powder) கலந்து தினமும் காலையில் குடித்துவர நாள்பட்ட ஆர்த்தரிடிஸும் குறையத் தொடங்கும். சமிப காலத்தில் Copenhagen University யில் நடந்த ஆராய்ச்சியில் டாக்டர்கள் நோயாளிகளுக்கு தினசரி காலை உணவிற்கு முன்பு ஒரு டேபிள் ஸ்பூன் தேன், அரை டீஸ்பூன் பட்டை பொடியை கலந்து 200 நோயளிகளுக்கு கொடுத்து வந்ததில் ஒரு வாரத்திற்குள் 73 நோயளிகளுக்கு மொத்தவலியும் குறைந்ததெனவும் ஒரு மாதத்திற்குள் அனைத்து நோயளிகளும் குணமடைந்தனர் என்றும் வலியினால் சிறிதும் நடக்க முடியாமல் இருந்தவர்களும் நடக்கத் தொடங்கினர் என்றும் அறிவித்துள்ளனர்.
2. ( HAIR LOSS ) முடி உதிர்தல் :
முடி உதிர்வர்களும், வழுக்கை தலையுள்ளவர்களும் சிறிதளவு ஹாட் ஆலிவ் ஆயில், ஒரு டேபிள் ஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் பட்டை பவுடர் மூன்றையும் கலந்து பேஸ்டாக கலந்து குளிப்பதற்கு 15 நிமிடத்திற்கு முன்பு தேய்த்து அதன் பிறகு வார்ம் வாட்டரில் தலையை கழுவி வரவும். உங்களுக்கு பலன் தெரியவரும்.
3. ( BLADDER INFECTIONS ) மூத்திரப்பை தொற்று வியாதிகள் :
இரண்டு டேபிள் ஸ்பூன் பட்டை பவுடர். ஒரு டீஸ்பூன் தேனை ஒரு க்ளாஸ் வார்ம் வாட்டரில் கலந்து குடித்தால் பையில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும்
4. ( CHOLESTEROL ) : கொலஸ்டிரால் :
இரண்டு டேபிள் ஸ்பூன் தேன், மூன்று டீஸ்பூன் பட்டை பவுடரை 16 அவுன்ஸ் டீத் தண்ணிரில் கலந்து கொலஸ்டிரா நோயாளிகளுக்கு கொடுத்தால் இரண்டு மணி நேரத்தில் இரத்தத்திலுள்ள கொலஸ்டிரா 10 % குறைந்து விடும். தினசரி மூன்று முறை கொடுத்தால் நாள்பட்ட கொலஸ்டிராவும் குணமாகிவிடும்.
5.( CURE COLD) ஜலதோஷம்:
யாரு மிகவும் ஜலதோஷத்தால் அவதிப்படுகிறார்களோ அவர்கள் ஒரு டேபிள் ஸ்பூன் வார்ம் தேன், 1/4 டீஸ்பூன் பட்டை பவுடர் கலந்து மூன்று நாட்கள் தொடர்ந்து உட்க்கொண்டு வந்தால் ஜலதோஷம். இருமல், சைனஸ் குணமாகிவிடும்.
6 .( INFERTILITY ) குழந்தையின்மை :
நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து ஆயுர்வேதம், யூனானி மருத்துவத்தில் ஆண்மையை பலப்படுத்த( விந்து) தேனை ஒரு மருந்தாக பயன்படுத்தி வந்துள்ளனர். இரண்டு டேபிள் ஸ்பூன் தேனை தூங்குவதற்கு முன்பு தினசரி எடுத்து கொள்ளுமாறு அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். அது போல சீனா, ஜப்பான் மற்றும் அநேக ஆசிய நாடுகளில் கருத்தரிக்காத பெண்களுக்கும், கர்ப்பபை பலவினமான பெண்களுக்கும் தேனும் பட்டை பவுடரையும் பழ மருத்துவர்கள் கொடுத்துவந்துள்ளனர். கருத்தரிக்காத பெண்கள் சிறிதளவு பட்டை பவுடரையும், அரை டீஸ்பூன் தேனையும் ஒரே அடியாக சாப்பிடாமல் வாயில் கம் களுக்கு அடியில் வைத்து சிறிது சிறிதாக உமிழ் நீரோடு கலந்து முழுங்கி வர வேண்டும். இதை ஒவ்வொரு நாளும் பல முறை அடிக்கடி செய்து வந்தால் பலன் கிடைக்கும்.
7.( STOMACH UPSET) வயிற்றுக்கோளாறு :
தேனுடன் பட்டை பவுடரை கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி குணமாகும். அது போல சரிசம அளவு இரண்டையும் கலந்து சாப்பிட்டு வந்தால் கேஸ் ப்ராபளமும் குணமாகும்.
8. ( IMMUNE SYSTEM ) நோய் எதிர்ப்பு தன்மை :
தினசரி தேனையும் பட்டை பவுடரையும் உண்டுவந்தால் நோய் எதிர்ப்பு தன்மை கூடி உடம்பை பாக்டீரியா மற்றும் வைரள் அட்டாக்கிலிருந்து காப்பாற்றும். இதில் அதிக் அளவு டிஃபரெண்ட் டைப் வைட்டமின் மற்றும் அயர்னும் இருப்பதாக ஆராய்ச்சியில் கண்டு பிடித்துள்ளனர்.
9. ( LONGEVITY) நீண்ட வாழ்வு :
நீண்ட கால வாழ்வுக்கு நம் மூதையர்கள் தேனும் பட்டை பவுடரும் கலந்த தேனீர் அருந்தி வந்தனர். 4 ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் பட்டை பவுடர் மற்றும் 3 கப் சூடான நீருடன் கலந்து தேனீர் தாயரித்து குறைந்தது தினசரி மூன்று வேளை 1/4 கப்பாவது அருந்த வேண்டும். இது உங்கள் தோலை புதுப் பொலிவுடன் வைத்து கொள்வதோடு மட்டுமல்லாமல் முதுமையடைவதை தடுக்கும்.
10.( WEIGHT LOSS) உடல் எடை குறைய :
தினசரி தேனையும் பட்டை பவுடரையும் கொதித்த தண்ணிரில் கலந்து அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும்.அதிக வெயிட் போட்டவர்கள் இதை கடைப்பிடித்து வந்தால் உடல் எடை குறையும். இதை ரெகுலராக குடித்து வந்தால் உடம்பில் கொழுப்பு சேராமல் தடுக்கும்.
முயற்சி செய்து பார்க்கவும். சைடு எஃபெக்ட் ஏதும் கிடையாது. இது நான் இன்டெர் நெட்டில் பல மெடிகல் சைட்டுகளில் இருந்து படித்த தொகுப்பாகும்.
 நன்றி: மதுரைத்தமிழன் அவர்கள்-உண்மைகள்

www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

தரமான செங்கல்லைகண்டறிவது எப்படி? செங்கல் கட்டுமானத்தில் என்னசெய்யலாம்? என்ன செய்யக் கூடாது?

இன்று ஹாலோபிளாக் , கான்கிரீட் கல் , ஏஏசி கல் , போன்ற பல தரப்பட்ட கற்கள் வந்து விட்டாலும் , நம...

Popular Posts